பள்ளிக்கூடத்தில் "சின்ன பாக்கெட்" என்று தன்னை அழைக்கும் சிறுமிகளிடம்
ஒரு குழந்தை கேட்கிறாள் "உங்க பேர் என்ன? பெரிய பாக்கெட்டா?"
கல்லூரியில் சீனியர்களிடம் கற்றுக் கொள்ள
ஒரு விஷயம் உண்டு.
ஜூனியர் அறிவை ஒளித்து வைத்து வெள்ளந்தியாக இருக்க வேண்டும்.
கல்லூரியில் புதிதாக சேரும் ஜூனியர்களிடம்
கேட்கப் படும் கேள்விகள்
1.என்சைக்ளோப்பிடியா?
சரின்னு தலய ஆட்டி உடனே, உடனே சீனியரின் சைக்கிளைப்பிடித்துக்கொள்கிற
ஜுனியர் பாராட்டப் படுவான்.
2.சைக்ளோட்ரான்?
கல்லூரிக்குள் சைக்கிளோட்டிக்கொண்டு
வருகிற ஒருவனை சுட்டிக்காட்டி விடவேண்டும்.
சீனியர்கள் கை கொடுப்பார்கள்.
சீரியஸாக அறிவை வெளிப்படுத்தி
விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் அவ்வளவு தான்.
ராகிங் அதிகமாகி விடும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.