Share

Jun 16, 2023

கலைஞர் சமாதியில் அஞ்சலி

15.06.2023

வியாழன் இரவு 7.05 p.m.

கலைஞர் சமாதியில்
அஞ்சலி

Jun 13, 2023

R.P. ராஜநாயஹம் புதிய நூல்கள்

தழல் வீரம், காரணச்செறிவு 
இரண்டு நூல்களையும் இப்படி design செய்திருப்பவர் பொன் வாசுதேவன் அகநாழிகை.

Proof reading பார்த்ததும்
 பொன் வாசுதேவன் தான்.
Spelling mistake எழுத்தில் காணப்படவில்லையாம்.
ஒற்றுப்பிழை, சந்திப்பிழை தான் தென்பட்டிருக்கிறது.

கிளர்ந்தெழும் தாபம் & அதிமதுர 'மதுர' நூலின் முகப்பில் 
முரளிதரன் கிருஷ்ணமூர்த்தி வரைந்த 'ராஜநாயஹம் ஓவியம்' இடம்பெறுகிறது.

Jun 12, 2023

R.P. ராஜநாயஹம் "காரணச்செறிவு" நூல்



Enjoy Applause ; but never quite believe it.
பெருமை ஒரு முறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.
I will survive anything, even praise, 
I cheerfully suspect.  

Covai M Thangavel :தமிழ் நாட்டுச் சாராயம் போல 
இருப்பவர்கள் எல்லோரும் இலக்கிய கர்த்தாக்கள் என்று அலறிக் கொண்டிருக்கும் போது 
அருமையான உடலுக்கும் உள்ளத்துக்கும் உவகை தரும் ஒயின் போத்தலான நீங்கள் அமைதியாக இருப்பதுதான் வேடிக்கை. எழுத்தாளர்களின் உச்சம் நீங்கள் தான். இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன். உங்களின் அருகில் நிற்க கூட 
எந்த தமிழ் எழுத்தாளருக்கும் 
தகுதி இல்லை என்றே நினைக்கிறேன்.

பா. அசோக்  : உங்கள் பாதங்களை முத்தமிடுகிறேன்... உங்கள் பரந்த வாசிப்புக்கும் வியாபித்த அறிவுக்கும்... எளியனின் மரியாதை

Siva Kumar Kanagaraj : பல வருடங்களுக்கு முன் ஹோட்டல்களில் இலை போட்டு இட்லி வைப்பார்கள்.சாப்பிட சாப்பிட வைத்துக்கொண்டே இருப்பார்கள்.கூடவே சட்னி/கொத்ஸு/சாம்பார் இத்யாதி.எவ்வளவு சாப்பிட்டோம் என்ற கணக்கே நமக்கு தெரியாது.
உங்கள் எழுத்தை எவ்வளவு படித்தாலும் இப்படி ஒரு உணர்வுதான் வருகிறது..

ஆல்தோட்ட பூபதி : அனுபவம் எனும் குழந்தையை நீங்கள் அலு(ங்)க்காத நடையில் அழைத்து செல்கிறீர்கள்.
தமிழர்களுக்கு பிடிச்ச சினிமா, அரசியல், இசை, இந்த மூணுலையும் போட்டு தாக்குறாரு
 R.P.ராஜநாயஹம் சார்.
அனுபவம் எனும் அழகிய குழந்தையை நீங்கள் அலு(ங்)க்காத நடையில் அழைத்து செல்கிறீர்கள்!

சித்ரா சம்பத்: ராஜநாயஹம் 
’பயன் காணா மேதை’!
எனக்கு உண்மையிலேயே உங்களிடம் ஒரு நெகிழ்ச்சியும், பரிவும் இனந்தெரியா தவிப்புமுண்டு. வாராது வந்துதித்த மாமணியை தோற்போமோ என்பது போன்ற வேதனையும் உண்டு. சான்றோர்களை, அறவோர்களை போற்றாத, காப்பாற்றாத சமுதாயத்தின் ஓர் அங்கம் நான் என்ற வெட்கமும் உண்டு.

மகிழ்வரசு : கண்டிப்பா இணையத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ராஜநாயஹம். அப்பப்ப இவரை நான் quote பண்ணுவேன்.

ஏதாவது ஒரு பிடித்த கால கட்டத்திற்கு போக வேண்டுமா. R.P.ராஜநாயஹம் சட்டைக்காலரைப் பிடித்துத் தொற்றிக்கொண்டால் போதும்.

SKP Karuna : உண்மை. இணையத்தில் எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் தான். எத்தனை அனுபவம்! எத்தனை நினைவாற்றல்!
I always like your writing style especially the way you abruptly exit while the article still has the scope of extension.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: நேர்த்தியாகவும், அதே சமயம் விஷய ஞானத்துடனும் எழுதத்தெரிந்தவர் நண்பர் R.P.ராஜநாயஹம். திருப்பூரில் வீடு தேடிப் போய சந்தித்தேன்!

UmamaheshVaran Lao Tsu : ராஜநாயஹம் ஓர் அற்புதன். அவரை நான் காதலிக்கிறேன். இளவயதில் அந்த Carnal Thoughts படிக்காத நாளே இல்லை!
எனக்கு ரொம்ப புடிச்ச எழுத்தாளர் ராஜநாயஹம் தான். தலைவர் தொடாத ஏரியாவே கிடையாது.
If I can write half as versatile as thyself
 I will pat myself sir. 
Always an admirer of your writings ..

முரளிதரன் கிருஷ்ணமூர்த்தி: "பொதுவாகவே எனக்கு ' sence of Humour '
 உள்ள நபர்களை  பிடிக்கும்.....

ராஜநாயஹம் ' Extraordinary  sence of Humour 
உள்ள ஓருவர்..உதாரணம்....
அவரது  Carnal Thoughts posts....😃😃😃♥️.."

Kana Praba: என்ன எழுத்துய்யா… அசுரன் ஐயா நீங்கள்!

Selva/வினையூக்கி: The funny thing about ‘Miracles’ is that they happen! R.P.Rajanayahem is one such! You are an Information INTELLECT அமுதசுரபி!

ராஜரத்தினம் : இந்த மனுஷனுக்கு (R.P.ராஜநாயஹம்) தெரியாத ஒரு விஷயத்தை கடவுள் கூட தெரிஞ்சிக்க ஆசைப்படமாட்டார்!

லக்கி கிருஷ்ணா: துணுக்குக்கும் கட்டுரைக்கும் இடையிலான வடிவம் ராஜநாயஹத்துக்கு எப்படி சாத்தியமாகிறது என தெரியவில்லை. எழுதுவதற்கு கடினமான வடிவம் இது.
பழைய டயரியை புரட்டி வாசிப்பதைப் போன்ற சுகமான சுவாரஸ்யம் R.P.ராஜநாயஹம் எழுத்துக்களில் கிடைக்கிறது.
தோழர் ராஜநாயஹத்திற்கு ஒரு தனித்துவம் வாய்த்திருக்கிறது.
மேலும் R.P.ராஜநாயஹம் வலையின் வெற்றியே அவர் தேர்ந்தெடுக்கும் எளிமையான மொழியில் இருக்கிறது.

சுதர்சன் ஹரிபாஸ்கர் : ராஜநாயஹம் சார் அநியாய Random writer…!!
மெமண்ட்டோ படம் பாக்குற மாதிரி துண்டு துண்டா narrate பண்ணிக்கிட்டே போறாரு………யாராச்சும் எடிட்டர் வெச்சு எடிட் பண்ணி லீனியரா போட்டா தேவல….!

ட்விட்டர்காரன் : நண்பர் ஒருவர் ’யார் ராஜநாயஹம்’னு கேட்டார். நான் இப்படி சொன்னேன்.
“ நூறு பேரின் வாழ்வியலை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒத்த உசிரு”ன்னேன்.

எஸ்.என்.ராஜ்குமார் S.n. Rajkumar : உங்கள் எழுத்திற்கு நான் அடிமை. மற்றவர்களை போல எனக்கு வெளிப்படுத்த தெரியவில்லை.

Jun 7, 2023

ஊக்க முழுங்கிட்டான் சட்டி

நான்கே வயதில் நான். 
தாத்தா, ஆச்சியுடன் செய்துங்கநல்லூரில்.

'சட்டி' பாவம். ஊக்கு முழுங்கி செத்துட்டான்.
சட்டி பதினஞ்சு வயசு பய.
அப்பல்லாம் நெறய்ய பசங்க பள்ளிக்கூடம் போக வாய்ப்பேயில்லாமல் ஏதேனும் சின்னதா எடுபிடி வேலை செய்வார்கள். 

சட்டி தெருவில் உள்ள செவருல மாட்டுச்சாணிய வட்டமான வரட்டியா தட்டி ஒட்டிக்கொண்டு நிற்கும் போது பாத்த ஞாபகம் இன்னக்கிம் இருக்கு.

வரட்டி தான் அடுப்பெரிக்க, விறகு தவிர.

சட்டி பற்றி தெனம் ஏதேனும் ஊர் பேசும். துறுதுறுப்பான பையன்.
பீடி குடிக்கிறான். 
வாயில சாராய வாட.
வெத்தல பாக்கு போட்றான்.

"என்னா சேட்ட பண்ணுதான்."

ஊர் பெருசு சலிப்பு ''எங்கிட்ட வந்து போயில (புகையிலை) கேக்கான். திமிர பாத்தியளா''

வேலக்கி தேடுற நேரம் கெடக்க மாட்டங்கான், செத்த மூதி.

டூரிங் கொட்டாய்ல எம். ஜி. ஆர் பழய படம் போட்டா போயிடுவான்.

உண்மை என்னவோ..
ஊக்க முழுங்கி சட்டி செத்துட்டான்னு தான் பேச்சு. வயித்த கிழிச்சிடுச்சு..பாவம் சட்டி.

குழந்தை பருவத்தில் மனதில் பதிந்த, இன்று வரை நினைவில் நிற்கும்
துர் மரணம். சட்டி சாவு.

ஊக்கு பாத்தாலே 'தொர'க்கி வயிறு கலங்கும்.

அம்ம தாலியில எப்பவும் ரெண்டு ஊக்கு. 
பொம்பளன்னாலே தாலியில ரெண்டு ஊக்கு தொங்கும்.

பயன்பாடு மிக்க ஊக்கு.

http://rprajanayahem.blogspot.com/2023/05/blog-post.html?m=0

Jun 6, 2023

கோபாலகிருஷ்ணன் சுந்தர்ராமன் பட்டியல்

கோபாலகிருஷ்ணன் சுந்தர்ராமன் பெரும் தகுதி மிக்க உன்னத ஆளுமை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீது இவருக்குள்ள பற்று எல்லையில்லாதது. சிவாஜியின் வாரிசுகள் போலவே, அவர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல், கூடுதலாகவே கூட அவர் மீது பேரன்பு கொண்டவர். 
எந்த விஷயத்தை பற்றியும் தீர்க்கமான அறிவு உள்ளவர்.
தலை சிறந்த வாசகர்.

இரண்டு முறை
மூத்த மகன் கீர்த்திக்காக வேலை வாங்கி கொடுத்த கோபாலகிருஷ்ணன்.





அவருடைய பட்டியல் கீழே

கோபாலகிருஷ்ணன் சுந்தர்ராமன் :

"நான் படித்த வரை என்னை ஈர்த்த முகநூல்( Facebook) மற்றும் இணைய( Forum) நண்பர்கள்.  

R.P.ராஜநாயஹம்

ஸ்டான்லி ராஜன்

பிரபு ராம் 
( தேவ கோட்டை வா. மூர்த்தியின் புதல்வர்) 

முகம்மது தமீம் , சாரதா , கார்த்திக்

முரளி ஸ்ரீநிவாஸ்

நெய்வேலி வாசு தேவன்

விநோமோகன்

மணி எம்.கே.மணி

பப்பீன் லியோ ஜோஸஃப்

சந்தோஷ் ஏ.வி.காமராஜ்

பா.அசோக்

சதீஷ்

தேஷ் பிரியதர்ஷன்

ராமகிருஷ்ணன் தியாகராஜன்

தங்கம் என்கிற தோப்புமணி

காவேரி கண்ணன் எனும் பாசுமணி

சுந்தரராமன்

நடேஷ் முத்துசாமி

அஜித் ஹரி ( இப்போது இல்லை)

பரத்வாஜ் ரங்கன்

தமன் பிரகாஷ்

ஜி.என்.பாலகிருஷ்ணன்

கிருஷ்ணா ராம்குமார்

கருணாமூர்த்தி

லதா

மற்றும் நான்.( நானும் எனது நண்பனே)"

Gopalakrishnan Sundarraman

Jun 3, 2023

பெங்களூர் இரவிச்சந்திரன் எழுத்து

கனகராஜ் தான் "இந்திய பாஸ்போர்ட்" கொடுத்து படிக்க சொன்னார்.
அவருடைய அபிப்ராயப்படி சுஜாதாவை விட  இரவிச்சந்திரன் பிரமாதமான எழுத்தாளர்.

"இந்த புத்தகம் மட்டுமல்ல இனி வெளி வரும் என் எல்லா புத்தகங்களும் சுஜாதாவுக்கு தான் சமர்ப்பணம்" என்று எழுதியிருந்தார்.

இந்திய பாஸ்போர்ட்டுக்கு சுஜாதா பிரமாத முன்னுரை எழுதியிருந்தார்.
'பெண்கள் அழகாக இருக்கிறார்கள்.ஆனால் சிலாக்கியமானவர்களாக இல்லை'

முன்னதாக ஏதோ இதழில் வெளி வந்த போதே துக்ளக்கில் பாராட்டி எழுதியிருந்தார்கள் 

இரண்டாவது சிறுகதை தொகுப்பு 'சிந்து வெளி நாகரீகம்'  நானே அவரிடம் கேட்டு வாங்கிப் படித்தேன்.

இங்கே கனகராஜிடம் வாங்கி படித்த அதே பிரதியின் படம் காணலாம்.


இரவிச்சந்திரனின் கையெழுத்து அழகாக இருக்கும். அவர் அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்.

இந்த புத்தகங்கள் பிரதிகள் அப்போது கிடைத்தன. விலைக்கு வாங்கி விட்டேன்.

'இந்திராகாந்தியின் இரண்டாவது முகம்' தொகுப்பை பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுக்கு 
இரவிச்சந்திரன் சமர்ப்பணம் செய்திருந்தார்.

நான்காவது தொகுப்பு 'இனி ஒரு சதி செய்வோம்' வந்த போது அதனையும் விலைக்கு வாங்கினேன்.

1986ம் ஆண்டு கனகராஜுடன் பெங்களூரில் இரவிச்சந்திரனை பார்க்க மல்லேஸ்வரம் போயிருந்த போது இரவிச்சந்திரன் அங்கு இல்லை. இது தான் இரவிச்சந்திரன் அறை என்று கனகராஜ் காட்டினார்.

இரவிச்சந்திரனின் நூல் பிரதிகள் எதுவுமே இப்போது என்னிடம் இல்லை.
 

சாய் ரமணா வெளியிட்டிருக்கும் பெங்களூர் இரவிச்சந்திரன் நூலில் 'கோதை பிறந்த ஊர்' சிறுகதை இரவிச்சந்திரனின் 'இந்திரா காந்தி யின் இரண்டாவது முகம்' மூன்றாவது தொகுப்பில்  இடம் பெற்றிருந்தது.
சாய் ரமணா சிந்துவெளி நாகரிகம், இந்திராகாந்தியின் இரண்டாவது முகம் இரண்டு தொகுப்புகளை இப்போது நூலாக கொண்டு வந்திருக்கிறார். இந்திய பாஸ்போர்ட் கூட மறு பதிப்பாக வர இருக்கிறது.

'கோதை பிறந்த ஊர்' எழுதி அமுதசுரபிக்கு இரவிச்சந்திரன் அனுப்பியிருக்கிறார். அப்போது ஆசிரியர் விக்ரமன். அவர் இந்த கதையை தன் பெயரில் போட்டுக் கொண்டார் என்று இரவிச்சந்திரன் தன் ரசிகர் ஸ்ரீவில்லிபுத்தூர்  கனகராஜிடம் சொல்லியிருக்கிறார்.
அந்த கதையில் 'கனகராஜன் விலாஸ் ஆனந்தா பேக்கரி' என ஒரு வரி வரும்.
அது தான் இந்த கதை இவரே எழுதியதற்கான ஆதாரம்.

பின்னாளில் ஸ்ரீ வில்லிபுத்தூர் பார்க்க வந்த போது ஆண்டாளை சேவித்த  பரவச பக்தி நேர்த்தி பற்றி கனகராஜ் பல முறை பேசியதுண்டு.
ஆண்டாள் திருப்பாவை விளக்க உரையுடன் விளக்கவுரையுடன் இரவிச்சந்திரன் பரிசளித்திருக்கிறார்.
'கறவைகள் பின் சென்று கானகம்..' வரிகளை தன் கதைகளில் பயன்படுத்தியுள்ளதை பேசியுள்ளார்.


மாட வீதி சுற்றி வரும் போது மாடப்புறாக்கள் காணக்கிடைக்கவில்லை. கோதை பிறந்த ஊர் எழுதும் போது மாடவீதிகளில் மாடப்புறாக்கள் என தவறுதலாக தான் குறிப்பிட்டு விட்டதாக சொன்ன இரவிச்சந்திரன் 
"சுஜாதா 'எழுதும் போது பார்க்காமல் எதைப்பற்றியும் குறிப்பிடக்கூடாது' என்று  சொல்வார்" என  கனகராஜிடம் சொன்னாராம்.

இரவிச்சந்திரனின் ஆதாரக்கவலை பெண்கள் தான்.

"கனகராஜ், 
மூணு சித்தி, நாலு அத்தையுடன் பொறந்தவன். வெஷம்"

" கனகராஜ், 
என்னோட முதல் ரசிகர் நீங்க"

இரவிச்சந்திரனுக்கு  இறந்த குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்தது. பார்சல் செய்து மருத்துவமனையில் கொடுத்திருக்கிறார்கள்.
அது இவர் 'பார்சல்' சிறுகதையானது.
அதனை ஒரு பிரபல பத்திரிக்கைக்கு அனுப்பினார். அங்கிருந்து பிரசுரம் பற்றி பதில் இல்லாததால் இன்னொரு  பிரபலமில்லாத பத்திரிக்கைக்கு அனுப்பி அங்கே பிரசுரமான பின்னர்
பிரபல பத்திரிக்கையிலும் பிரசுரமாகி விட்டது.

இரண்டு பத்திரிக்கையிலும் கெட்ட பெயர்.

பிரபல பத்திரிக்கை ' இனி இரவிச்சந்திரனின் எழுத்தை பிரசுரிக்கவே மாட்டோம் ' எனும் பகிரங்க அறிவிப்பு செய்தது.


...

http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_7731.html?m=1

Jun 2, 2023

தழல் வீரம்



P.K. Sivakumar:

"ஜெமோவை எனக்கு 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து தெரியும். அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தபோதே, 
R.P.ராஜநாயஹம் பிரச்னையில், 
ராஜநாயஹம் தளைய சிங்கம் கதை விஷயமாகச் சொன்னதே சரி எனப் பொதுவில் (அப்போது திண்ணை.காம் உரையாடல்தளம்) சொல்லியிருக்கிறேன்.

 

ஜெமோ - எழுத்தில் அவர் குறித்து வரும் விமர்சனங்களை எதிர் கொள்வதில் காட்டும் பதட்டமும், விமர்சனம் செய்வோர் மீது கொள்ளும் சந்தேகமும், வைக்கும் குற்றச்சாட்டும் - என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாதவை."

Jun 1, 2023

உள்ளம் உருகுதய்யா

உள்ளம் உருகுதய்யா பாடல் பற்றிய சுவாரசியமான தகவல் இன்று கீதப்ரியன் 
மூலம் தெரிந்தது. இது உண்மை தானா?!
ஆச்சரியம்.
குங்குமம் பத்திரிகையில் 2020ல் 'உள்ளம் உருகுதய்யா' பாடல் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்று இப்போது தான் தெரிய வந்தது.
பெண் எழுதிய பாடல். மரகதவல்லி என்ற ஆண்டவன் பிச்சை. 
கவிஞர் வாலி இவரைப்பற்றி விரிவாக கூறியிருக்கிறார்.

பழனியில் இருந்து மதுரைக்கு ரயில் நிலையத்தில் தகப்பனாருடன் இருட்டு விலகாத அதிகாலையில் வந்து இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து ரிக் ஷாவில் ஏறிய போது முதல் முறையாக டி.எம்.எஸ் கனிவான குரலில் ஒலித்த'உள்ளம் உருகுதய்யா'
பாடலில் சொக்கிப் போனேன். 
இரண்டாம் வகுப்பு படித்த போது தான் முதன் முதலாக அன்று அதிகாலை உருக்கமான இந்த பாடலை 
 ஆறு வயதில் கேட்டேன் என்பது இன்றும் நினைவில் நிழலாடுகிறது.

மதுரையை அப்போது தான் ஆறு வயதில் முதன் முறையாக பார்க்கிறேன். 'உள்ளம் உருகுதய்யா' பாடலையும்.