Share

May 27, 2016

வெள்ளச்சாமியும் மாரியப்பனும்


மதுரை பரமேஸ்வரி தியேட்டருக்குப் பின்னால் இருந்த B-6 போலீஸ் ஸ்டேசனில் அப்போது வெள்ளச்சாமி என்று

ஒரு சப்- இன்ஸ்பெக்டர் இருந்தார்.

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, கரிமேடு, முரட்டம்பத்திரி, அழகரடி, புட்டுத்தோப்பு, கோமஸ் பாளையம், மேலப்பொன்னகரம், அரசரடி, ஆரப்பாளையம் பகுதியில் கேட்டுப்பார்த்தால் அந்தக்காலத்து ஆட்கள் இப்போதும் சொல்வார்கள். சரியான டெர்ரர்!

ரோட்டில் கூட்டமாக நிற்கவே முடியாது. ”வெள்ளச்சாமி ரெய்டுடா! டேய் வெள்ளச்சாமிடா!” சல்லிகள் பதறியடித்துக்கொண்டு ஓடுவார்கள். சல்லிகள் என்று இல்லை காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் எப்போதும் பதறிக்கொண்டே தான் இருப்பார்கள்.
சைக்கிளில் வருவார் வெள்ளச்சாமி. பின்னால் கான்ஸ்டபிள்களும் சைக்கிளில் வருவார்கள்.

அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் நான் நண்பர்களோடு பேசிக்கொண்டு நின்றிருந்தேன். எதிர் பாராமல் மேலப்பொன்னகரம் இரண்டாவது தெருவிலிருந்து ’சள்’ளென்று சைக்கிளில் வெள்ளச்சாமி போலீஸ் புடை சூழ வந்து
விட்டார். ”அப்படியே நில்லுங்கடா டே, ஓடாதே, ஓடுனா வீட்டுக்கு வந்து தூக்குவேன்.”
ஓட அவகாசமே இல்லை.
ஒரு பத்து பேர் சிக்கிக்கொண்டோம்.
என்னைப்பார்த்துத்தான் வெள்ளச்சாமி பேசினார். “ ஏன்டா இப்படி கும்பலா நிக்கிறீங்க?
படிக்கிற வயசில என்னடா சலம்பல். உங்க அக்கா தங்கச்சிங்க தான ரோட்டில போறாங்க.. அவங்களுக்குத் தான கஷ்டம்”
ஒரு சின்ன லெக்சர் கொடுத்தார்.
என்னைப்பார்த்தே எஸ்.ஐ. பேசியதால் நான் தான் மிரண்டு கொண்டே பதில் சொல்ல வேண்டியிருந்தது - “ சாரி சார்.. இனிமே இப்படி நிக்கவே மாட்டோம் சார்”

அவர் மன்னிக்கவில்லை. “ அப்படியே ஸ்டேசனுக்கு மரியாதயா நடங்கடா..” ஏற்கனவே பிடிபட்டு பலியாடாய் வந்து கொண்டிருந்த சிலருடன் நாங்களும் சேர்ந்து நடக்க வேண்டியதாகி விட்டது. சுற்றிலும் ஜனங்கள், கடையில் உள்ளவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவமானமான அவமானம்…
மெய்யப்பன் 1 வது தெரு வரும் போது தெருவுக்குள் நான் ஓடி தப்பித்து விட்டேன்.

ஸ்டேஷனில் என்னைக்காணாமல் மற்றவர்களிடம் வெள்ளச்சாமி
“ எங்கடா அவன்? அவன்… லாங்க் ஹேர் ஸ்டைல்!
அவன் தான்டா..அந்த கண்ணாடிக்காரன் எங்கடா?”
”ஓடிட்டான் சார்!”
”அவன் அட்ரஸக்குடுங்கடா..”
”அவனோட அப்பா கஸ்டம்ஸ் ஆபிசர் சார்”
”யாரா இருந்தா என்னடா? யோவ் அவன் பேரு அட்ரஸ் வாங்கி வாரண்ட் அனுப்பு”
எல்லோரையும் கேஸ் எதுவும் போடாமல் வெள்ளச்சாமி திருப்பி அனுப்பிவிட்டார்.
அவனுங்க வந்து “ தோழரே! உனக்கு வாரண்ட் அனுப்பச்சொல்லிட்டாருய்யா வெள்ளச்சாமி” என்று என்னிடம் சொல்றாங்கே.. நான் அரண்டே போனேன்.

காலேஜில வகுப்பில கூட நிம்மதியே இல்லை. ஒரு வாரம் செத்துத்தான் பொழச்சேன். தெனமும் வீட்டுக்கு வந்தவுன்ன
“ உன்ன பெத்த வயத்தில பெரண்டைய தான் அள்ளி வச்சி கட்டணும்”னு எங்க அம்மா கூப்பாடு போட்டு வாரண்டைக் காட்டினால் என்ன செய்ய? அல்லது வாரண்ட் இல்லாட்டியும் பி- 6 ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி கான்ஸ்டபிள் வந்து சொல்லி விட்டால்?

ரெண்டு மாசமா எனக்கு வாரண்டும் வரல. போலீஸும் வரல.
கொஞ்சம் பயம் தெளிஞ்சிருந்திருச்சி.

முதல் அத்தியாயம் இத்துடன் முடிந்தது.
இனி இரண்டாவது அத்தியாயம் இருக்குதே!


சொந்த ஊர் செய்துங்க நல்லூரில் இருந்து எங்கள் கருங்குளம் வயலில் விவசாய வேலை பார்த்துக்கொண்டிருந்த மாரியப்பன் மதுரைக்கு வந்திருந்தான்.
மாரியப்பனின் விசுவாசம் அலாதியானது. என் பெரியப்பா மகன் பெயர் பாலு. என் பெயர் துரை. அவன் தன் மகனுக்கு
பால் துரை என்று பெயரிட்டான். பெரிய முதலாளி மகன் பெயரும் சின்ன முதலாளி மகன் பெயரும் இணைத்து சேர்த்து
தன் மகனுக்கு பெயரிட்டிருப்பதை செய்துங்க நல்லூரில் எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக்கொள்வான்.


அவனுக்கு வேண்டியது வாங்கித்தர விரும்பி அவனை அழைத்துக்கொண்டு தெருவில் ஏ.ஏ. ரோட்டை நோக்கி நடந்தேன்.
”மொதலாளி! முன்னால சின்னவரு (என் அப்பா) நாகப்பட்டினத்துல இருந்தப்ப கூட அங்க வந்திருக்கேன். அப்ப நீங்க சின்னப்பையன்! கடல்ல கப்பல் எல்லாம் பாத்தேனே!” என்று சந்தோஷமாக சொல்லிக்கொண்டே வந்தான்.
மொதலாளி, மொதலாளி என்று வார்த்தைக்கு ஒரு மொதலாளி போட்டுத்தான் பேசுவான்.

”உனக்கு என்னடா வேணும்!” – நான்.
பெட்டிக்கடையில் வெத்தலை பாக்கு புகையிலை வாங்கித்தரச்சொன்னான். ஒரு கூல்டிரிங்ஸ் வாங்கிக்கொள்ளச்சொன்னேன்.
“குண்டு போட்ட சோடா கலர் தான் வேணும். காளி மார்க் கலர்லாம் ஒத்துக்காது” என்று சங்கடப்பட்டான்.
”தொரை! தோழரெ! தாழன் யாரு?”
பாண்டி விசாரித்தான். இன்னும் சிலர் ஆர்வத்துடன் என்னை சூழ்ந்து கொண்டார்கள்.
”எங்க வயல்ல வேல பார்க்கிற மாரியப்பன்!”

இவ்வளவு தான்..இவ்வளவில் எஸ்.ஐ வெள்ளச்சாமி அதே மேலப்பொன்னகரம் ரெண்டாவது தெருவிலிருந்து அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் போலீஸ்காரர்கள் புடை சூழ ’சள்’ளென்று நுழைந்தார்.
”அப்படியே நில்லுங்கடா! எவனும் ஓடக்கூடாது!”

அடச்சே….. விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ?

உயிரை வெறுத்து நான் தலை தெறிக்க என் தெருவுக்குள் மின்னல் வேகத்தில் ஓட ஆரம்பித்தேன். பறக்க ஆரம்பித்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆடிக்காத்தில அம்மியே பறக்குதே! அப்பளத்தின் கதி.........! மாரியப்பன் அரண்டு மிரண்டு போய் தவித்து தக்காளி வித்து…. நிலைமையின் தீவிரம் உறைத்து.. சுதாரித்து..என்னைத் தொடர்ந்து கூப்பாடு போட்டுக்கொண்டே ஓடோடி வருகிறான்.
“ அய்யோ நான் செத்தேன்.. காப்பாத்துங்க மொதலாளி! என்னை விட்டுப்போட்டு ஓடுதியளே!மொதலாளி! மொதலாளி! அய்யய்யோ மொதலாளி! அய்யோ மொதலாளி!அய்யோ அய்யய்யோ!“


துள்ளி வரும் சூறைக்காற்று… துடிக்குதொரு தென்னந்தோப்பு… இல்லை ஒரு ’பாதுகாப்பு’….. ?


வீட்டுக்கு வந்து தான் நின்றேன் நான்.
மாரியப்பன் ஓடி..ஓடோடி,ஓடோடி வந்து சேர்ந்து இறைக்க, இறைக்க சொன்னான்: ”போலீஸ்னா எனக்கு ரொம்ப பயம் மொதலாளி! அடி பிச்சிப்போடுவானுங்க மொதலாளி! போலீஸ்னா எனக்கு ரொம்பப் பயம் பாத்துக்கிடுங்க! இந்தப்போலீஸ்காரப்பயலுவள எனக்கு வல்லுசா பிடிக்கவும் செய்யாது பாத்துக்கிடுங்க........”

……………………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2016/03/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/2015/02/blog-post_7.html

May 26, 2016

மாலியும் மாலியின் அப்பாவும்“ மாலியோட புல்லாங்குழல் கேட்டீங்களா?”

நாகேஷ் ஜோக்!- “ கேட்டுப் பாத்தேன். தரமாட்டேன்னுட்டார். இப்பல்லாம் யாருக்கும் தர்ரதில்லயாம்!”


புல்லாங்குழல் மாலி. Child Prodigy.

மாலியோட காத்து யாருக்கும் வராது என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு.
இவருடைய Eccentricity பற்றி பல கதைகளும் கூட சொல்லப்படுவதுண்டு.


மாலி கச்சேரி கேட்க சதஸ் நிரம்பி வழிகிறது.
மாலி புல்லாங்குழல் எடுக்கிறார். கீழே வைக்கிறார். புல்லாங்குழலை எடுக்கிறார். கீழே வைக்கிறார். புல்லாங்குழலை எடுக்கிறார். வாயருகே கொண்டு போகிறார். கீழே வைத்து விடுகிறார். புல்லாங்குழல் எடுக்கிறார். துளைகளைப் பார்க்கிறார். புல்லாங்குழலை வருடுகிறார். மீண்டும் கீழே வைத்து விடுகிறார். ஆடியன்ஸை மதிக்கவேயில்லை. மீண்டும்..மீண்டும்..மீண்டும்..மீண்டும்..மீண்டும்..
ஒரு மணி நேரம் இப்படி செய்து விட்டு பின்னர் மாலியின் புல்லாங்குழல் இசைக்க ஆரம்பிக்கிறது. தேவ கானம்.
ஓவியன் எட்கர் டிகா சொன்னான் : “Art is vice. You don’t marry it legitimately.You rape it.”
 "த்ரிவிக்ரமாவதாரத்திலே, பகவானோட தலை எங்கிருக்கின்னு தெரிஞ்சிக்க முடியலியாம் சிவப் பிரம்மாதிகளாலே.இவன் போய்எட்டிப் பிடுவான் போலிருக்கே!

அமிர்தத்தாலே காது, உடம்பு, மனசு, ஆத்மா எல்லாத்தையும் நனைச்சுப் பிடறான்."   தி.ஜானகிராமன் ’மோகமுள்’ளில் சொல்வது இப்படி ஒரு தருணத்தைத்தானே!
ஒரு பெரியவர் சொன்னார்: “அன்று பலரும் கண்ணீர் விட்டு அழுது இசையில் கரைந்ததை பார்த்தேன். நானும் தான் அழுதேன்.”

மாலியின் ரஞ்சனி ராகம் தானம் பல்லவி, சிந்துபைரவி ராகம் தானம் பல்லவியெல்லாம் காதுக்குள்ளேயே இன்னும்.. இன்னமும் இனிக்கிறதே!
தியாகராஜ கேதார் கௌள கீர்த்தனை ”துளசி வில்வ” – கண்ணை இன்றும் ஜலத்தால் நிறைக்கிறது.
அந்த கதன குதூகல “ ரகுவம்ச சுதா”….
மாலியை கேட்டுக்கொண்டே செத்து விட்டால் சுகம். வேறென்ன வேண்டும்?

மாலியின் கச்சேரி ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது அவருடைய தந்தை அந்த சபாவுக்குள் நுழைகிறார். மாலி புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தி விட்டார். மூட் அவுட். சரியான கோபம். “ அவரை போக சொல்லுங்கள். அவர் போனால் தான் வாசிப்பேன்.”
மாலியின் அப்பாவை அங்கிருந்தவர்கள் வெளியே அனுப்பி வைத்தாக வேண்டிய நிர்ப்பந்தம். அவர் வெளியேறிய பின்னர் தான் புல்லாங்குழல் மீண்டும் இசைத்திருக்கிறது.

வீணை எஸ். பாலசந்தருக்கும் கூட அவருடைய அப்பாவிடம் இப்படி விரோத மன நிலை இருந்திருக்கிறதாம்.

கலைக் கோவில் படத்தில் இப்படி ஒரு காட்சி உண்டு.
வீணை வாசிக்கும் முத்துராமன் அரங்கத்தை விட்டு எஸ்.வி.சுப்பையாவை வெளியேற்றச் சொல்வார்.
ஸ்ரீதர் இந்த மாலி சமாச்சாரம் பற்றி கேள்விப்பட்டு தான் அப்படி ஒரு காட்சி அமைத்திருப்பாரோ என்னவோ?
................................

 ( மாலியின் சீடர் சங்கீத கலாநிதி புல்லாங்குழல் ரமணி அவர்களுடன் R.P.ராஜநாயஹம்)

.................................


http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html


http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post_18.html

May 23, 2016

Lorca's "Play without a Title"
லோர்க்கா ஒரு ஸ்பானிஷ் கவிஞன், நாடகாசிரியர், இயக்குனர்.  கவனம் பெறாத ஓவியன்.

 (Lorca's two portraits by Salvador Dali )


மிக பிரபலமான ஓவியன் சால்வடார் டாலியின் நெருக்கமான பரிச்சயம் பெற்ற லோர்க்கா.லோர்க்கா எழுதிய பரிட்சார்த்த நாடகம்
“ தலைப்பில்லாத நாடகம்” நாடகத்தின் தலைப்பே “Play without title” நாடகத்தில் ஆடியன்ஸிலுள்ள ஸ்பெக்டேட்டர்ஸ் அதாவது பார்வையாளர்கள், வசனத்தை எடுத்துக்கொடுக்கிற ப்ராம்ப்டர் எல்லாம் கதாபாத்திரங்களாக வருவார்கள். ’நாடக மேடை’க்கும் ’அரங்கு’க்கும்இடையிலான பாரம்பரிய எல்லைக்கோட்டை லோர்க்கா இதில் அகற்றி விட்டார்!
லோர்க்கா இதை மூன்று அங்கங்கள் கொண்ட நாடகமாக எழுதத்திட்டமிட்டு இருந்தார். நாடகத்தின் தலைப்பு! –
“The dream of life” இதை முழுமையாக எழுதவில்லை. நாடகம் incomplete ஆக ஒரு அங்கம் தான் எழுத முடிந்தது. நாடகம் 1935 வாக்கில் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். ஆனால் 1978ல் தான் அச்சு வடிவம் பெற்ற புத்தகமானது.

Lorca’s play is showing you a tiny corner of reality.Lorca is shouting the simplest truths that you do not wish to hear. The play analyses issues of class and idealogical division, of intolerence and hatred.
 நடிகர்கள் பார்வையாளர்களாக, பார்வையாளர்களோ நடிகர்களாக!

Why must we always go to theater to see what is happening and not what is happening to us. The spectator's mind is at ease because he knows that the play is not going to be focussing on him, but how beautiful it would be if they summoned him to the boards and made him to speak!

ஷேக்ஸ்பியரை தொடாமல் முடியுமா?
Play without title நாடகத்தில் ஷேக்ஸ்பியரின் ’மிட்சம்மர் நைட்’ஸ் ட்ரீம்’ பற்றி லோர்க்கா சொல்வது: ”இந்த மிட்சம்மர் நைட்’ஸ் ட்ரீம் நாடகம் மகிழ்ச்சி சம்பந்தப்பட்டதல்ல. இந்த நாடகத்தின் ஒவ்வொரு அம்சமும் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், காதலென்பது, எத்தகைய காதல் என்றாலும் ஒரு தற்செயல் நிகழ்வு, ஒரு விபத்து தான். அது நம்மை சார்ந்த விஷயமேயல்ல. The plot of the play is somber !
மக்கள் ஒதெல்லோ பார்க்கும்போது அழமுடிகிறது. ’டேமிங் ஆஃப் த ஷ்ரூ’ பார்த்து விட்டு சிரிக்க முடிகிறதெல்லாம் சரி. ஆனால் மிட்சம்மர் நைட்’ஸ் ட்ரீம் பார்க்கும்போதும் அந்த நாடகத்தின் தன்மை புரியாமல் சிரிப்பது அபத்தம்!”
ஸ்பானிய ஃப்ராங்கோவின் தேசீயவாத சக்திகளால் 1936ல் லோர்க்கா கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார். அவர் உடல் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
38 வயது தான் அப்போது.

Federico Garcia Lorca met the violent fate he had foreseen when he wrote: 
"Then I realized I had been murdered
They looked for me in cafes, cemetaries and churches
But they did not find me
They never found me?
No, they never found me!"நம்முடைய மகாகவி பாரதியை விடவும் இளைய வயதில் மறைந்திருக்கிறார் லோர்க்கா.
குறைப்பட்ட நிலையில் ”வாழ்க்கையின் கனவு” நாடகம் இன்று
“ தலைப்பில்லாத நாடகம்” என்ற தலைப்பில் அறியப்படுகின்றது!

Perhaps life is Just that….a dream and a fear ...
ஓரு கனவு ... ஓரு பயம்...ஒருவேளை இது தான் வாழ்க்கையோ - ஜோசப் கான்ராட் தான் இப்படி கவலைப்பட்டான் ..

......................................................................

Although Garcia Lorca's drawings dont receive attention, he was also a talented artist.

Lorca's drawings

 

................................................................................

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/…/edward-albees-zoo-story.…

https://www.facebook.com/rprajanayahem/posts/1781202672093191?pnref=story

http://rprajanayahem.blogspot.in/2009/08/blog-post_22.html

https://www.facebook.com/rprajanayahem/posts/1781202672093191

.........................................................................

May 20, 2016

"இறுக்கி பிடிச்சிக்க இவன!"


சென்ற வருடம் செப்டம்பர் 13ந்தேதி.

திருப்பூரிலிருந்து நானும் என் மனைவியும் கோவை எக்ஸ்பிரஸில் வந்து பெரம்பூரில் இறங்கி எதிரே அடையாறு ஆனந்தபவன் வந்த போது -அங்கே திறந்த லிஃப்ட் -அதிலிருந்து வெளிப்பட்டார் S.P.முத்துராமன்!
சென்னையில் முதல் தரிசனம்!


இருபது வருடங்களுக்கு முன் அவரை சந்தித்து ஒரு இரண்டு மணி நேரம் உரையாடியிருக்கிறேன்.

அதற்கும் முன் திரையுலகில் நானும் குப்பை கொட்டிக்கொண்டிருந்த போது எஸ்.பி.எம் மிக பிஸியாக! அன்று இரண்டு வருடங்களில் எடிட்டிங், ஷூட்டிங் செட் என்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் எப்போதும் நான் பார்த்திருக்கிற பிரபல இயக்குனர்.
பிழைப்பு தேடி சென்னை வந்திருக்கிற நான் யார் என்பதை அறிந்தவுடன் சொல்கிறார். “ சினிமா பக்கம் எட்டிக்கூட பார்க்காதே.. உனக்கு சினிமா வேண்டாம். இப்ப சினிஃபீல்ட் முன்ன இருந்த மாதிரி கூட இல்ல.. சினிமா ஆசைய மறந்துட்ட இல்ல? சினிமா வேண்டாம்..”

இருபது வருடங்களுக்கு முன் என்னை ஸ்ரீவில்லிபுத்தூரில் சந்தித்த போது கூட இதையே தான் அவர் சொன்னார்.

இப்போது பெரம்பூர் அடையாறு பவனில் என் மனைவியைப்பார்த்து சொன்னார்.” இவன நல்லா பிடிச்சிக்க. சினிமா பக்கம் போக விட்டுடாதே. இறுக்கி பிடிச்சிக்க இவன! விட்டுடாதே.கைய இறுக்கிப்பிடிச்சுக்க.”

.....................................................................


http://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post.html

May 17, 2016

'அதிசயம்’ என்பதன் இயல்பே அது ‘ரொம்ப அபூர்வம்’


இரண்டு கோடி பேருக்கு மேல் இளைஞர்கள் இந்த மாநில வாக்காளர்களாக உள்ளார்கள். அதாவது 18 வயது முதல் 40 வயதிற்குள்.
அப்படியானால் கூட இரட்டை இலைக்கு தான் அதிக வாக்குகள் கிடைக்க நேரும் எனில் தமிழகம் ஒரு விசித்திர மண் தான்.
ஆளுங்கட்சி பணபலத்தால் வென்றது என்று பணத்தை இறைத்த திமுகவும் சொல்லும்.
மக்கள் நலக்கூட்டணி கூட மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லி வைத்தாற்போல கோரஸாக ’அதிமுகவும் திமுகவும் பணத்தை கொட்டினார்கள்’ என்பதையே தோல்விக்கு சாக்காக சொல்லப்போகிறார்கள். ஏதோ தங்களுக்கு இருக்கும் பெரும் மக்கள் செல்வாக்கு பணத்தால் கலைக்கப்பட்டு விட்டதாக புலம்பித்தீர்ப்பார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி பெரிய அய்யா, சின்ன அய்யா இருவருமே பண நாயக வெற்றியையே சாக்காக சொல்லிக்கொள்வார்கள்.

காங்கிரஸ் கட்சி எப்போதும் போல திமுகவிற்கு எத்தனை சீட்கள் கிடைக்கிறதோ அவை அத்தனையுமே தங்கள் கட்சி செல்வாக்கால் தான் என்று இறும்பூதெய்தி விடுவர் என்று சொல்லவும் வேண்டுமோ?
அதிமுக, திமுக இரு கட்சியையுமே தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்புக்கு அனுமதிப்பது மாபெரும் தவறு,பெரிய முட்டாள்தனம். அந்த வகையில் தான் எதிர்கட்சிகள் ஓரணியில் இந்த முறை திமுகவின் பின் திரண்டு அதிமுகவை எதிர்த்திருக்கவேண்டும். ஆனால் அப்படி நடக்காததால் அதிமுக தொடர்ந்து இரண்டாம் முறை ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்து விட்டார்கள்.
Miracles never cease in this world! அப்படி ஆட்சி மாற்றம் திமுக மூலம் ஒரு வேளை அதிசயமாக நடக்க நேர்ந்தால் தமிழக மக்கள் புத்திசாலிகள் என்று சொல்லலாம். இரண்டு கோடி இளைய வாக்காளர்களுக்கு க்ரெடிட் கொடுக்கலாம். ஆனால் ‘அதிசயம்’ என்பதன் இயல்பே அது ‘ரொம்ப அபூர்வம்’ வகைக்கு சம்பந்தப்பட்டதாயிற்றே!


R.K.Laxman's Cartoon


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

http://rprajanayahem.blogspot.in/2016/05/2016.html

http://rprajanayahem.blogspot.in/…/rknarayans-misguided-nov…

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-17.html

May 16, 2016

Banksy's satirical Street art!

                           

                                                          Banksy - English graffiti artist.

                                     His satirical Street art!
                                             The image of death
                                                             

                                   Flying Balloons Girl

There is always hope
the girl with umbrella

Cancelled dreams!

Girl falling


Maid


Crucified Jesus


Hitchcock's Birds


Both are distracted Beyond their affair

Removal

.................................................
May 14, 2016

Supporting actors

துணை கதாபாத்திரங்கள் எப்போதும் ஒரு திரைப்படத்தில் அதன் தரத்தை விஷேச அளவில் உயர்த்தி விடுபவர்கள்.

தமிழில் அந்தக்காலத்தில் எஸ்.வி.ரெங்காராவ், எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, நாகேஷ்……

இந்தக்கால மலையாளப்படம் ’உஸ்தாத் ஓட்டல்’ தாத்தா! திலகனின் பங்கு எவ்வளவு மேலானது. மயிலிறகால் வருடுவது போல அவர் பேசும் அழகு. திலகன் இடத்தை இனி வேறெந்த கலைஞன் நிரப்ப இயலும்?

The importance of Supporting actors.. Supporting actors aren’t just those familiar faces who can steal a film.They show a way for movies to portray real life.

பழைய ஹாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகன் கதாநாயகிக்கான முக்கியத்துவத்தை மீறி நகைச்சுவை குணச்சித்திர நடிகர்கள் தூக்கலாக அசத்திய விஷயம் பற்றி..

.ஹென்றி ட்ராவர்ஸ் குணச்சித்திர-நகைச்சுவை நடிகராக It’s a wonderful life ( 1946 ) படத்தில் கடைசி 40 நிமிடங்களில் பிரமாதமாக கலக்கியிருப்பார்.

“Each man's life touches so many other lives. When he isn't around he leaves an awful hole”
“You've really had a wonderful life. Don't you see what a mistake it would be to throw it away?”
க்ளாரன்ஸ் என்ற ஏஞ்சல் பாத்திரத்தை ஹென்றி ட்ராவர்ஸ் செய்திருக்கும் நேர்த்தி! ஜேம்ஸ் ஸ்டீவார்ட், டோன்னா ரீட் நடித்த இந்த படம் எப்பேர்ப்பட்ட துயர நிலையில் இருப்பவருக்கும் மருந்து.


ஹிட்ச்காக்கின் Suspicion (1941) கேரி க்ரான்ட் கதாநாயகன். கேத்தரின் ஹெப்பர்ன் கதாநாயகி. 

கேரி க்ரான்ட் நண்பராக வரும்   நைஜல் ப்ரூஸ் ((Nigel Bruce) நடிப்பு தான் எத்தனை சிறப்பானது. எத்தகைய கலகலப்பான பாத்திரம். மிகுந்த உரிமையுடன் “Tickle her chin” தன் நண்பனிடம் வெள்ளந்தியாக அவர் சொல்வது ரொம்ப நுட்பமான பரிமாணம்.
Bonnie and Clyde (1967) வாரன் பீட்டி, ஃபேயி டனவே தான் ஜோடி. 

மைக்கல் பொல்லார்ட் என்ற நடிகரின் நகைச்சுவை நடிப்பு.Funny face என்பதற்கு சரியான உதாரணம்.
 “We rob banks” என்று சொல்லும் பான்னி, க்ளைட் இருவரிடமும் கொஞ்சமும் அதிர்ச்சியடையாமல் “நான் மைனர் ஜெயிலில் இருந்தவன்” என்று சொல்லி விட்டு உடனே பார்ட்னராக காரில் ஏறி விடும் சி.டபிள்யு. மோஸ் பின்னால் பான்னி-க்ளைட் பற்றி பத்திரிக்கைகள் பரபரப்பாக எழுதும் போது சலிப்புடன் என் பெயர் பிரபலமாகவில்லையே என்ற ஏக்கத்துடன் சொல்வது:“How come the newpapars always refering to me as ’unidentified suspect’?”
………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2016/…/brief-encounter.html
...............

May 12, 2016

Creative with strategyThe only people who care about advertising are the people who work in advertising என்று சொல்லப்படுவதுண்டு.ஆனால் அப்படியெல்லாம் பொதுமைப்படுத்தி விட முடியாது.


ஒரு விளம்பரம் இன்று எப்படியெல்லாம் பலர் வாய்க்கு மெல்ல அவலாகியிருக்கிறது.
வழக்கமான பாணியிலிருந்து வித்தியாசமாகி விட்டதால் இந்த அளவுக்கு ரீச். இது தானே விளம்பர வெற்றி.
In advertising, not to be different is virtually suicidal. Creative with strategy is called advertisement.

காதில் விழுந்த உரையாடல் ஒன்று.

”சரவணா ஸ்டோர் விளம்பரம் அடிக்கடி பார்ப்பதால் அடிக்கடி கனவு வருகிறது.”

”அதில் என்ன இருக்கிறது. விளம்பரங்கள் பல பார்க்கிற நிர்ப்பந்தம் எல்லோருக்கும் இருக்கவே செய்கிறது. அதிலும் நடிகைகள் கனவில் வருவது ஒன்றும் அபூர்வமான விஷயமல்ல. தமன்னாவும், ஹன்சிகாவும் இப்படி உன் கனவில் வருகிறார்கள் என்றால் சந்தோசமான விஷயம் தானே!”

“ தமன்னாவும் ஹன்சிகாவும் வந்தால் பரவாயில்லை. இது nightmare! அந்த சரவணா ஸ்டோர் முதலாளி தான் கனவில் வந்து வித விதமாக போஸ் கொடுத்து .. முடியல... அதில் குளோஸ் அப் வேறு...”
...........................................

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-40.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-22.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-30.html

May 8, 2016

Carry your childhood with you

                    Myself and my wife when we were children.      Our sons when they were children. Kirti and Ashwath

..................................................................

"The soul is healed by being with children."
— Fyodor Dostoyevsky


Vikas Vidyalaya children! I was their spoken English teacher!     Children see magic because they look for it!


                      I miss you a lot, my children!

Nilu Patel we too mis u sir

Janani Prabhat
Janani Prabhat FYODOR WORDS REALLY touching OUR HEART.Lovely.
Amam Gulgulia
Amam Gulgulia we miss u too sir
Cham Chu
Cham Chu Thank u sir..... We'll ever follow ur principles. Thanks for ur every effort to take us to the next step... We are very much thankful for that sir.
Harini Anandan
Harini Anandan Cham Chu... u r correct....v all mis u a lot sir.....
R.p. Rajanayahem
Harini Anandan
Harini Anandan Sirrrrrr....cnt believe...do u hav dis tilll sir!!!???..............................................................

http://rprajanayahem.blogspot.in/…/raise-child-you-have-got…


http://rprajanayahem.blogspot.in/…/what-piece-of-work-is-ma…