Share

Nov 30, 2023

105, 106 Episodes

105 and 106 Episodes 

28.11.2023
செவ்வாய் கிழமை
காலை 

கலைஞர் டிவியில் ஷூட்டிங்

R.P. ராஜநாயஹம்
சினிமா எனும் பூதம் தொடர்

105, 106 வது நிகழ்ச்சிகள் படப்பிடிப்பு 

நடிகர்கள் 

V. நாகய்யா

V. கோபாலகிருஷ்ணன்

......

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

Yet Another Copy Cat


Yet Another Copy Cat

2008லிருந்து 2023 வரை 200 பேர்
 R.P. ராஜநாயஹம் பதிவுகளை 
ஈயடிச்சான் காப்பியடித்து இறும்பூதெய்தியிருக்கிறார்கள்.

இப்போது அண்ணாதுரை துரைசாமி 201வது Copy Cat. 

https://m.facebook.com/story.php?story_fbid=3182360588574336&id=100004012778271&mibextid=Nif5oz

மேற்கண்ட அண்ணாதுரை துரைசாமி பதிவு 
R.P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' நூலில் இருந்து ஈயடிச்சான் காப்பி.
Copy cat.

https://m.facebook.com/story.php?story_fbid=3441648239381951&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3166153370264774&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3166296983583746&id=100006104256328&mibextid=Nif5oz

Nov 25, 2023

Vyashni Toyland - Pookkutti Travels

பூக்குட்டி
 இன்றைய சின்னஞ்சிறு புது உலகம்
Viyashini in Toyland❣❣


ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக புதுப்புது விளையாட்டு கண்டு பிடித்து விளையாடுவாள். தாத்தாவுக்கு விளையாட்டில் என்ன பங்கு என்பதையும், தாத்தா என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அவளே தீர்மானித்து அதிகாரமாக instructions கொடுப்பாள். அவள் சொன்னபடி கேட்க வேண்டும்.


Pookkutti travels.

Nov 24, 2023

காலமென்னும் நதியினிலே புஷ்பவல்லி1940களில் நட்சத்திர நடிகை பேரழகி புஷ்பவல்லி 

பின்னர் 1950களின் ஆரம்பத்தில் 
ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவி.

சாவித்திரியை ஜெமினி கணேசன் வீட்டுக்கு கூட்டிவந்த போது விளையாட்டாக புஷ்பவல்லி 
" சாவித்திரியையும் கட்டிக்கங்க " என்று சொன்னபோது வானத்திலிருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் "ததாஸ்து " என்று சொல்லிவிட்டார்கள். 
விஷயம் சீரியஸ் ஆகி சாவித்திரி ஜெமினியுடன் இணைந்த போது அதை கடுமையாக எதிர்த்தவர் புஷ்வல்லி தான். 
வாகினி ஸ்டுடியோவில் சாவித்திரி மீது காரை ஏற்ற முயற்சிக்கிற அளவில் கடுமையான கோபம். 

சாவித்திரி பிணைப்பு அதிகமானவுடன் புஷ்பவல்லி குடும்பத்தை விட்டு ஜெமினி ஒதுங்கினார். 
ஒதுங்குதல் என்பதை விட புஷ்வல்லிக்கும் ஜெமினிக்கும் கடும்பகை அப்போது ஏற்பட்டு விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

ஜெமினி கணேசனை விட்டு பிரிந்த பின் புஷ்பவல்லிக்கு ஒரு மியூசிக் டைரக்டருடன் வாழும்படியான நிர்ப்பந்த சூழல் ஏற்பட்டிருக்கிறது. அந்த மியூசிக் டைரக்டருக்கும் புஷ்பவல்லிக்கும் தனலட்சுமி, ஷேசு என்று இரண்டு புத்ரங்கள்.
அந்த தெலுங்கு மியூசிக் டைரக்டர் பெயர் பிரகாஷ் ராவ் என்று கேள்வி.
காலக் கண்ணாடி காட்டிய காட்சி -
1964ல் கே.எஸ். ஜி 'கை கொடுத்த தெய்வம்'  படத்தில் 
சிவாஜிக்கு அம்மாவாக புஷ்பவல்லி.
Junior artiste.

ஜெமினியின் மூன்றாவது மனைவி சாவித்திரி கதாநாயகி.
சாவித்திரிக்கு பின்னால் அமர்ந்திருப்பவர் புஷ்பவல்லி.

கை கொடுத்த தெய்வம் சிவாஜிக்கு பெற்றோராக R. பாலசுப்பிரமணியமும் புஷ்பவல்லியும்.
(எழுத்தாளர் அனுராதா ரமணனின் தாத்தா R.பாலசுப்ரமணியம்)
 காட்சியில் புஷ்பவல்லிக்கு க்ளோஸ் அப் ஷாட் கிடையாது.

1970களில் பிரபல இந்தி நடிகையாக கொடி கட்டிய ரேகாவின் தாய் 

Nov 22, 2023

T.G. லிங்கப்பா 'சினிமா எனும் பூதம்' முரசு டிவியில்


26.11. 2023 ஞாயிற்றுக்கிழமை 
முரசு டிவியில்
காலை எட்டரை மணிக்கு 

R.P. ராஜநாயஹம்

'சினிமா எனும் பூதம'
 தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சியில்

"இசையமைப்பாளர் T.G. லிங்கப்பா"

'அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ'

'காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம் தானோ'

' என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா'

' கோட்டையிலே ஒரு ஆலமரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா'

' தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே'

'ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்'

தழல் வீரம் காரணச்செறிவு

Humbled.


 பிரமை, பிரமிப்பு எதுவுமே இல்லாத நிலை.
பெருமை என்பது முறம்.
புடைத்து எடுத்தா எதுவும் கிடையாது.

நகைச்சுவை நடிகர் சார்லி 
சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் ’செல்’ பேசினார்.

R.P. ராஜநாயஹம் புத்தகம்  படித்து விட்டு பரவசமாய் சொன்னார் : ”ராஜநாயஹம், நீங்கள் மிக,மிக,மிகப்பெரிய ஜீனியஸ்.
உங்களுக்கு மிக,மிக,மிகப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.”

உடனே மனதில் ஏக்கமும் வேதனை
யும் :
“ மிக,மிக,மிகப் பிரகாசமான நிகழ் காலம் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும்”

I will survive anything, 
even praise.
இது மாதிரி நிறைய கேட்டிருக்கிறேன். இதற்கெல்லாம் அர்த்தமே கிடையாது.

Applause – Enjoy it; but never quite believe it.

கொசுவை விட சாதாரணமானவன்.
செத்தா எழவு கொண்டாடாம
 ஒடனே எரிச்சுடனும். 
சாம்பலை வைத்து சடங்கெதுவும் கூடாது.

" நான் என்பதே வன்முறை.
இதில் நான் இன்னார் என்பது
எவ்வளவு பெரிய வன்முறை"
- கவிஞர் தேவதேவன் 


Nov 20, 2023

Happening now


கமல் ஹாசன் சார், மஹாத்மா காந்தி சார்

மக்கள் நீதி மய்யம் மாணவரணி அமைப்பாளர் சங்கர் ரவி பேட்டி நியூஸ் 7 டிவியில் 
"கமல்ஹாசன் சார், மஹாத்மா காந்தி சார்                              எல்லாம் 'ஜாதி மதம் பாக்காம மக்கள பாக்கணும்'னு சொல்றவங்க"

கவனம் கவனம் 

The road to hell is paved with good intentions.

Hell is full of good wishes and desires.

-  Bernard of Clairvaux

Nov 19, 2023

காரணச்செறிவு நூலுக்கு சரவணன் மாணிக்கவாசகம் முன்னுரை


R.P.ராஜநாயஹம் நூல் 'காரணச்செறிவு'

சரவணன் மாணிக்கவாசகம் முன்னுரை :

"அசைவறு மதி கேட்டேன்

நல்ல கவிதைகள் அடையாளம் கண்டுபிடிக்கப்படாமல் போவதன் காரணம், கும்பலில் தொலைந்து போவது.  சமீபகாலத்தில் சிறுகதைகளும், நாவல்களும் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் சராசரிக்கு மேலிருப்பதைக் கண்டுபிடித்தல் எளிது. எது எப்படியாயினும் இந்த மூன்றையும் எழுதுபவர்கள், எழுத்தின் தரம் பார்க்கப்படாமலேயே கவிஞர், எழுத்தாளர் என்று பெயரிடப்படுகிறார்கள். 
 
R.P. ராஜநாயஹம்  முப்பது வருடங்களுக்கு மேலாக  எழுதிக் கொண்டிருக்கிறார். 

 இலக்கியம், தத்துவம், அரசியல், கலை, சினிமா போன்று, இவர் எழுதாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம்.  எழுத்திலும் தனக்கென தனித்துவ மொழியில்,  நினைவுகளின் அழகியலைக் கொண்டு வருபவர். முக்கிய எழுத்தாளர்கள் என்று யார் பட்டியல் கொண்டு வந்தாலும் அதில் ராஜநாயஹத்தின் பெயர் இல்லாதிருப்பது ஒரு முரண். இவ்வளவிற்கும் பல எழுத்தாளர்கள், ராஜநாயஹத்தின் எழுத்தைப் பலமுறை பாராட்டியிருக்கிறார்கள். உள்ளடக்கத்தை மட்டும் வைத்து, தரம் நிர்ணயிக்கும் வாசகர்கள் கணிசமான அளவு சேரும்பொழுது, ராஜநாயஹத்தின் இலக்கியஇடம் வேறாக இருக்கும்.

Jump-cut method இவர் எழுத்துகளில் அதிகம் காணப்படுவது. உதாரணத்திற்கு எழுத்து-புரிதல் என்ற கட்டுரையை எடுத்துக் கொண்டால், ஹெகல்-கான்ட்- கான்ராட்- Mann- பார்த்- பூக்கோ- தெரிதா என்று கடந்து ழாக் லக்கானில் நிறைவுறுகிறது.  இவ்வளவிற்கும் இது பத்து வரிகளில் அடங்கும் கட்டுரை.  அநேகமாக இவரது எல்லாக் கட்டுரைகளிலுமே நினைவுகளின் தாவல் இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது.

நகைச்சுவை இவரது எழுத்துகளில் எப்போதும் விரவிக் கிடப்பது.  'கெட்ட வார்த்த ஏசு சாமி' போல வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை, எவனோ சிரிச்சுக்கிட்டே செத்திருக்கிறான் என்ற நாகேஷின் புன்னகைக்க வைக்கும் நகைச்சுவை,  அசோகமித்ரனின் 'என்ன ஒரு உழைப்பு' என்ற நுட்பமான நகைச்சுவை  என்று எல்லாவிதமானவையும் இவரது எழுத்துகளில் தோரணமாகி இருக்கும்.

Quotes இவரது எழுத்துகளை அலங்கரிக்க அங்கங்கே கலந்து இருக்கும். எமிலியின்
'Proud people breed sad sorrows' ஆக இருக்கட்டும், பூமித்தோலில் அழகுத்தேமல் என்ற பிரமிளின் கவிதை வரிகளாகட்டும், 
Life is a walking shadow என்ற ஷேக்ஸ்பியரின்
மேற்கோள்கள், 'வானவில் கனவுகள் நிறமிழந்து விட்டது தெரிகிறது' என்ற சுஜாதாவின் வரிகள் என்று ஏராளமான Quotes இவர் எழுத்தினிடையே வந்து கொண்டே இருக்கும்.

தத்துவார்த்தத்தையும், இலக்கியத்தையும் இவரிடமிருந்து பிரிக்கவே இயலாது.  Profanityஐ நகைச்சுவையின் அழுத்தத்தைக்கூட்ட உபயோகிப்பது இவரது வழக்கம்.  காரணச்செறிவு என்ற இந்த நூல் இவரது கலவையான எழுத்துகளின் சோற்றின் பதமாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாமும் இருக்கின்றன இந்த நூலில். எல்லாவற்றிற்கும் மேல் ராஜநாயஹம் தெளிவாகத் தெரிகிறார்."

....

R.P. ராஜநாயஹம் 'தழல் வீரம்' சமர்ப்பணம்

'தழல் வீரம்' நூல் சமர்ப்பணம்

மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் 

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  அவர்களுக்கும்

மேலும்

கூத்துப்பட்டறை ந. முத்துசாமி

சாரு நிவேதிதா 

ஆகியோருக்கும்

Nov 17, 2023

உண்மைக்காக 'ஒத்த' எழுத்தாளராம்


திருமணமாகி விவாகரத்து வரை என்றாகி இதனால் ஆண் அனுபவிக்கும் வியாகுலம், மனைவி காரணமான தொடர் துயரம், குழந்தையைப் பார்க்க முடியாமல் தவிப்பது எல்லாம் அவ்வை சண்முகி துவங்கி இப்போது விஜய் டிவி சீரியல் வரை அரைத்த மாவு.

மனைவியால் இன்றைய கணவன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் ஏற்படும் பிரச்சினைகள், கணவன் குடும்பத்தை வரதட்சணை கேஸ் போட்டு நோகடிப்பது உட்பட பல விஷயங்கள் பற்றி பல வருடங்களுக்கு முன் எத்தனையோ முறை திருச்சி தமிழ் இலக்கியக் கழகம், திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப் இலக்கியக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன்.

அந்தக் காலத்தில் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றிய
அழகிய நாயகி அம்மாளின் 'கவலை' 
எம்.எஸ். சௌந்தரம் ' சங்கீத நினைவுகள் ' ஆகிய இரண்டு நூல்கள் பற்றி ஒப்பிட்டு திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் நான் இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே, 2000 ஆண்டில் பேசிய போது, எதிர்மறையாக தற்காலத்தில் மனைவிகளால் சொல்லொணா கொடூர துயர் அனுபவிக்கும் கணவர்கள் பற்றியும் விரிவாக பேசியிருக்கிறேன்.
Male chauvinist ராஜநாயஹம் என சிலர் அங்கே pointed their finger on me.


2009ல் பெண்ணியமும் குசும்பனும் என பகடி எழுதியிருக்கிறேன்.

அந்தக் காலத்தில் மாமியார் கொடுமை.
இந்தக்காலத்தில் மருமகள் கொடுமை.
'மருமகள் தான் இப்ப மாமியார்'.
இதை மிகச்சிறிய பதிவாக சில மாதங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறேன். அதை விரித்துப் பார்த்தால் பெரிய கட்டுரை.

இப்போது பிரபல எழுத்தாளர் இது பற்றி பேசிய வீடியோ  பற்றி 
'இது வரை யாரும் தொடாத, பேசத்துணியாத விஷயத்தை பேசியிருப்பதாக' குலையடிக்கப்பட்டிருக்கிறது.
உண்மைக்காக நிற்கும்
'ஒத்த' எழுத்தாளராம்.

ஓஹோன்னானாம்.

Nov 16, 2023

R.P. ராஜநாயஹம் புதிய நூல் 'தழல் வீரம்' குறித்து சுரேஷ் கண்ணன்எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்:
Suresh Kannan 

ஃபேஸ்புக்கில் நான் விரும்பி வாசிக்கும் பதிவுகளில் ஒன்று R. P  ராஜநாயஹம் அவர்களுடையது. 

மிகவும் அபூர்வமான, அரிய விஷயங்களை, தகவல்களை தனது பிரத்யேகமான சுவாரசியமான நடையில் எழுதுவார். பொருத்தமான ஆங்கில மேற்கோள்கள் வறுத்த முந்திரி போல் இடையில் வந்து சுவையைக் கூட்டும். 

அவரது பிளாக்கிலும் முன்பு நிறைய கட்டுரைகளை வாசித்துள்ளேன். குறிப்பாக அவர் எழுதுவதில் சினிமா தொடர்பான பதிவுகள் எனக்கு ரொம்பவும் விருப்பமானவை. 
அட்டகாசமான தகவல்களால் நிரம்பிய கட்டுரைகள். அவற்றைக் காப்பியடித்தே பேர் வாங்கியவர் பலர். 

'உங்களது பதிவுகள் தொகுப்பாக வருவது அவசியம்' என்று முன்பு அவரது பதிவில் எப்பவோ கமெண்ட் போட்டிருந்தேன்.

அது இப்போது சாத்தியமாகியிருக்கிறது. 

*

ஆம், நண்பரும் பதிப்பாளருமான அசோக்,                                                                    R. P  ராஜநாயஹம் அவர்களின் பதிவுகளைத் தொகுத்து 'தழல் வீரம்' என்கிற தலைப்பில் நூலாக கொண்டு வந்திருக்கிறார். 

இது நீங்கள் நிச்சயம் வாங்க வேண்டிய பொக்கிஷமாக இருக்கும். எனவே பதிப்பாளரை உடனே தொடர்பு கொண்டு உங்கள் பிரதிக்கு முந்துங்கள்.

*

Nov 15, 2023

R.P. ராஜநாயஹம் புதிய நூல் 'தழல் வீரம்' குறித்து வேர்கள் மு. ராமலிங்கம்

Ramalingam Muthukumarasamy 
'வேர்கள்' மு.ராமலிங்கம் :

 தமிழின் ஆகச் சிறந்த பத்தி எழுத்தாளர் 
R. P  ராஜநாயஹத்தின் "தழல் வீரம்" கட்டுரைத் தொகுப்பு "ஜெய்ரிகி" பதிப்பகத்தில் இருந்து இன்று கிடைத்தது. 
பல கட்டுரைகளை முன்னரே வாசித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வகையை சார்ந்தவை. 

அவரின் நினைவாற்றலும் ரசிக மனமும் பிரமிக்க வைக்கிறது.
 அந்த காலத்தில் ரசிகமணி என டிகேசியை கூறுவார்கள்; ஆனால் தலைமுறை இடைவெளியோ என்னவோ எனது ரசனையில் அவர் எழுத்துக்கள் அவ்வளவாக கவனத்தை ஈர்க்கவில்லை. எனது ரசனையின் அடிப்படையில்
 " ரசிகமணி" என்றால் அது ராஜநாயஹம்தான். 

தேர்ந்த வாசகர் கைகளில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம். வாங்கி படியுங்கள்; 

தொடர்ந்து அருமையான புத்தகங்களை வெளியிட்டு வரும் ஜெய்ரிகி பதிப்பகத்தை ஆதரியுங்கள் 

பக்கங்கள்: 272
விலை ரூ 300
தொடர்புக்கு:8643842772

Nov 14, 2023

நண்பர் பட்டாபி

39 வருடங்களுக்குப் பின் இன்று (14.11.2023) 
அருமை நண்பர் பட்டாபியை நேரில் சந்தித்தேன்.

Nov 13, 2023

தங்கவேலு - சந்தானம் முகச்சாயல்

சந்தானம் நகைச்சுவை கவனிக்க ரசமாக இருக்கும்.

சந்தானத்துக்கு கொஞ்சம்
தங்கவேலு resemblance இருக்கு.


'சாயல்'  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தோன்றும். இருவர் ஒத்த தோற்றம் பற்றி ஒருவர் சொல்வதை இன்னொருவர் மறுக்க நேரும்.
ஒத்த சாயல் உள்ளதாக கருதப்படும் இருவருமே கூட சம்பந்தமில்லை என மறுக்கலாம்.

பிடித்த சிரிப்பு நடிகர்களாக தங்கவேலுவையும் கவுண்டமணியையும் 
சந்தானம் குறிப்பிட்டதுண்டு.

ரம்பையின் காதல் படத்தில் தங்கவேலு பார்க்க சந்தானம் முகச்சாயல் தெரிகிறது.


Nov 10, 2023

அமேசானில் R.P. ராஜநாயஹம் தழல் வீரம்


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0mTbPU92jo5SAoDJ5rDcZvw5pn5Hj3wFc3AnB9TRi1GHrwAjARW2AfyTjs6EAyH3Hl&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0mTbPU92jo5SAoDJ5rDcZvw5pn5Hj3wFc3AnB9TRi1GHrwAjARW2AfyTjs6EAyH3Hl&id=100006104256328&mibextid=Nif5oz

R.P.Rajanayahem's Purity

Student Visvas speaks about his 
Spoken English teacher R.P.Rajanayahem

R.P. Rajanayahem's purity

"இவர் கிட்ட பேசும் போது இவரோட Purityய feel பண்ணலாம். நான் பாத்ததில One of the purest persons."


https://fb.watch/odi30B1kfO/?mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=2914985668714880&id=100006104256328&mibextid=Nif5oz

Nov 8, 2023

இங்க்ளீஷ் கொண்டயன்

கரூரில் அப்பா சென்ட்ரல் எக்ஸைஸ் ஆஃபிசராக இருந்த போது நான்கு வருடம் பால்ய கால பள்ளி பருவம். திருச்சியில் செயின்ட் ஜோசப்ஸ்சில் படித்தாலும் விடுமுறை நாட்களெல்லாம் கரூரில் தான்.

பக்கத்து வீட்டில் உடல் வளர்ச்சி குன்றிய 'கொண்ட' என்று அனைவரும் புகல்ந்த இருபது வயது தாழன் வேலைக்கு இருந்தான். கொண்டயன்.

கரூர் லைட் ஹவுஸ் தியேட்டரில் இங்க்ளீஷ் படம் காலைக்காட்சி பார்க்க வாரா வாரம் ஆஜராகி விடுவான்.
 'The square peg', 
Hell and the high water, 
Jack of the diamonds
சிறுவனாக அவனோடு 'அண்ணே'ன்னு ஒட்டிக் கிட்டு போவேன். 
போகிற வழியிலே பெட்டிக்கடை பார்த்ததும்
 'தொர, ஹிண்டு இங்க்ளீஷ் பேப்பர் வாங்க காசு கொடு'

பேப்பரை வாங்கி கையில் வைத்துக் கொண்டு தியேட்டர் வந்ததும் வாசலில் பேப்பரை விரித்து வாசிப்பதான பாவனை.

டிக்கெட் எடுத்து உள்ளே படம் ஆரம்பிக்கும் வரை ஹிண்டு பேப்பரை விரித்து பக்கம் பக்கமாக மேய்ந்து கொண்டிருப்பான். பக்கத்துல ஒக்கார்ற ஆட்கள் சரியான கொத்தனுங்க. 'படம் புரியலைன்னா எடவேளையில கேளு. படம் ஓடுறப்ப எங்கிட்ட கேட்டு தொந்தரவு பண்ணக்கூடாது' படம் பார்க்க வந்தவனுக பத்து பதினஞ்சு பேருட்ட எழுந்து போய் இவனே வாலண்ட்டியரா சொல்வான்.

எடைவேளெயில கொண்டையன சுத்தி கும்பல். நடுவுல நின்னு படத்தப் பத்தி 'புதுக்கத' மனோதர்மப்படி சொல்வான்.
மீண்டும் தியேட்டர்ல நொழஞ்சதும் சுற்றியுள்ளவர்களிடம் திரும்ப விரல் நீட்டி எச்சரிக்கை 
' படம் பாக்கும்போது புரியலைன்னா தொந்தரவு பண்ணக்கூடாது'

படம் முடிஞ்சவுடனே அவனை சுற்றி கூட்டம்.
மீதி படத்த பத்தியும் இவனே கத விடுவான்.  வாசலில் நின்னு ஹிண்டு பேப்பர பொரட்டுவான்.

விடுமுறை முடிந்து திருச்சி ஸ்கூலுக்கு போகிற போது ட்ரெய்னில் சில தடவை கொண்டையன் வந்திருக்கிறான். கையில் ஹிண்டு பேப்பரை பக்கம் பக்கமாக விரித்து உற்று உற்று பார்த்துக் கொண்டே.. ரயில் ஜன்னல்ல வேடிக்கை பார்க்க மாட்டான். யாராவது பேப்பர் கேட்டால் பெருமையா கொடுப்பான். படித்து விட்டு திரும்ப கொடுத்தால் அடுத்த விநாடியே பேப்பரை தொடர்ந்து பக்கம் பக்கமாக உற்றுப் பார்க்க ஆரம்பித்து விடுவான்.

கரூரில் எப்போதும் பல நேரங்களில் பலரிடமும் இங்க்ளீஷ் பேசியது பற்றி தமிழ்ல சொல்லிக் கொண்டே இருப்பான்.

'தொர, ஜவஹர் பஜார்ல வந்துகிட்டிருக்கேன், பெரியார் லாட்ஜ் கிட்ட ஒங்க அப்பா மாதிரி ஆஃபிசர் 
ஜீப்ப நிறுத்தி எங்கிட்ட ' காய்கறி மார்க்கெட் ஏதோ டாக்கி டாக்கி தேட்டர் பக்கம் இருக்காமே. இங்கருந்து எப்படி போகனும்?' னு இங்க்ளீஷ் ல கேட்டாரு. நானும் இங்க்ளீஷ்லயே அவருக்கு
வழி சொன்னேன்'
'தொர, நேத்து திண்ணப்பா தேட்டர்ல படம் பாக்றப்ப காலேஜ் படிக்கிற பசங்க கத்தி கூப்பாடு போட்டுட்டே இருந்தாங்க. நான் இங்க்ளீஷ் ல சொன்னேன்
' ஏன்டா இப்படி படம் பாக்க விடாம கத்றீங்க. ஒழுங்கா அமைதியா ஒக்காறனும் ' 
அவனுங்க ஒடனே இங்க்ளீஷ் ல சொன்னாங்க 
' நாங்க அப்டித்தான்டா சத்தமா கத்திக்கிட்டே தான் படம் பாப்போம். அதக் கேக்க நீ யார்றா? போடா'
நான் இங்க்ளீஷ்ல 'டேய் எனக்கு கோபம் வந்தா நடக்றதே வேற'

காலேஜ் பசங்க இங்க்ளீஷ் ல ' மெரட்ற வேலயெல்லாம் எங்க கிட்ட வச்சிக்காத. வேற ஆளப்பாரு' ன்னானுங்க. பயங்கர கோபமாகி நான் இங்க்ளீஷ்ல அவங்கள திட்டிக்கிட்டே அடி வெளுத்து பந்தாடிட்டேன். படம் பாக்காம தேட்டர விட்டு ஓடியேப் போயிட்டானுங்க.. தொர, எங்கிட்ட எவனுமே வாலாட்ட முடியாது.'

'தொர, வெள்ளக்காரன் குஷியாயிட்டான்னா VERY GOOD தான் சொல்வான். கோபமாயிட்டான்னா பூட்ஸ் காலால ஒதப்பான். வெள்ளக்காரன்ட்ட நான் வேல பாத்திருக்கேன்.'

'கொண்ட'  அடிக்கடி கலைஞரையும்
 எம்.ஆர். ராதாவையும் mimicry செய்வான்.
ஆனால் வித்தியாசம் இராமல் இருவருக்குமே கட்டைத்தொண்டையில் ஒரே மாதிரி தான்.
'அடியே காந்தா' வசனத்திற்கும்
'நடிகரென்பார் நாடக மேதையென்பார்' என்பதற்கும் ஒரே பாணி குரல் தான்.

'நடிகர் என்பார் நாடக மேதை என்பார் தத்துவ ஞானி என்பார் ' தோரணையாக புன்னகை காட்டி அவன் திரும்ப திரும்ப சொல்லும் போது
 சலிப்பு தாங்காது
அதே தொணியில் 
குரல் கொடுப்பேன் 
"கொண்டையென்பார்"

Nov 7, 2023

நடிகர் ராஜேஷ் கருத்து "ராஜநாயஹம் எழுத்து Unbiased "

நடிகர் ராஜேஷ்  
செல் பேசினார்.

சினிமா எனும் பூதம் முதல் பாகம் படித்துக் கொண்டிருக்கிறார். 


ராஜேஷ் கருத்து "ராஜநாயஹம் எழுத்து unbiased"

நூலில் ஆங்காங்கே
R.P.ராஜநாயஹத்தின் ஆங்கில வரிகள் பிரயோகம் குறித்து சிலாகித்து பேசினார்.

இப்போது ராஜேஷ் film institute chairman.

கன்னிப்பருவத்திலே துவங்கி அச்சமில்லை அச்சமில்லை, சிறை படங்களெல்லாம் நினைவில்.

அந்த ஏழு நாட்கள், மகாநதி, 
மக்கள் என் பக்கம்,  தர்மதுரை 
படங்களில் supporting actor.


Nov 5, 2023

பெரும் நஷ்டம்


உள்ளூர் அதிமுககாரன் ஒருவன். 
எம்.எல்.ஏ சீட்டுக்கும், கட்சியில் பெரிய பதவிக்காகவும் ஏங்கிக்கொண்டிருந்த திருவாழத்தான். 
ஜெயலலிதாவை நேரில் சந்திக்க பகீரத பிரயத்தனம் செய்தான்.

அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஒரு மந்திரியின் நண்பனான உள்ளூர் வக்கீல் மூலம் கிடைக்க மந்திரியை குளிப்பாட்டினான்.

கட்சித்தலைவரை வெறுங்கையுடன் போய் பார்க்க முடியுமா? அந்த நேரத்தில் நினைத்தே பார்க்கமுடியாத பெருந்தொகைக்கு தங்கம்,வெள்ளி ஜாமான்கள் உட்பட வாங்கிக்கொண்டான்.

தௌமிய பட்டரை ஸ்லோகங்கள் சொல்லி மகிழ்விக்க தன் கூடவே அழைத்துச் சென்றான். இரண்டு நிமிட நேரம் தான் ஒதுக்கப்பட்ட நேரம். தௌமிய பட்டர் சுறுசுறுப்பானவன். 
அதற்குள் ஸ்லோகம் எல்லாம் தௌமியன் சொல்லி முடித்தவுடன், 
உடனே,உடனே “இவங்கள வெளிய அனுப்பி கதவ சாத்து” என்ற அளவேயான மரியாதையை ஏற்றுக்கொண்டு 
அதிமுக திருவாழத்தான் ஊர் வந்து தன் கடையில் (வீட்டிலும் தான்) பெரிய போட்டோ ஃப்ரேம் செய்து மாட்டிக்கொண்டான்.

கங்கு பட்டர் வந்து “ஓய் பிரமாதங்காணும். தௌமியன் சொன்னான். அம்மா பரவசத்தில கை கூப்பி கண்ண மூடி திறக்கவேயில்லையாமே.”

கண்ண திறக்கறதுக்குள்ள தான் கழுத்த பிடிச்சி வெளிய தள்ளிட்டாங்களே.

கங்கு பட்டர் “ என்ன ஓய், இப்பல்லாம் உங்காத்துல மட்டன், சிக்கன் சமைச்சா சாப்பிடக் கூப்பிடவே மாட்டேன்றீர். நாக்கு துறு துறுன்னு மாமிச பட்சணம் சாப்பிட துடிக்கிறது ஓய். நான் போய் புரோட்டா கடையில ஒக்கார முடியுமா? எள்ளி நகையாடிடுவாளே ஓய். வர்ற ஞாயித்துக்கிழமை வரட்டுமா”

போயஸ்கார்டன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த வக்கீலே அந்த உள்ளூர் அரசியல்வாதியைப்பற்றி “இவன மாதிரி கால் (1/4) முட்டாப்பயல பாக்கவே முடியாது. அம்மாவ கௌரவப்படுத்துறானாம். பரப்பெடுத்த பய. இவ்வளவு செலவு செய்யணுமா?” என்று கமெண்ட் அடித்தான்.

பெருந்தொகை செலவழித்து விட்டதால் கட்சி மரியாதை இன்னேரம் கிடைச்சிருக்கணுமே என்று அந்த உள்ளூர் அதிமுக கார திருவாழத்தான், 
சபாஷ் மீனா பட காமெடி மாதிரி இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே என்று நாக்க தொங்கப்போட்டு தவிச்சி தக்காளி வித்து ஒன்னும் நடக்கவில்லை. விழலுக்கிறைத்த நீர்.

எம்.எல்.ஏ வாகவும் சீட்டு கிடைக்கவில்லை.
 கட்சி பெரிய பதவியும் கிடைக்கவேயில்லை.
போயஸ் கார்டன் விசிட் பெரும் நஷ்டம்.

ஊர அடிச்சி ஒலையில போட்டு, கடன் தொல்லை தாங்க முடியாமல் கடையை மூடி விட்டு 
தலை மறைவான திருவாழத்தானுக்கு 
சதுர கிரி சுந்தர மஹாலிங்கம் கோவிலுக்கு போய் உண்ட கட்டி மட்டும் சாப்பிட நிறைய கிடைத்தது. 

கங்குவும் தௌமியனும் பெரிய வைஷ்ணவ கோவிலில் பிசியான பட்டர்கள்.

அயக்ரீவர் சன்னதிக்கு போனால், கல்விக்கான துடியான தெய்வம் இது தான். ’குழந்தைகள் படிப்புக்கு பிரார்த்திச்சிக்கோங்க.’ என்று தௌமியன் கேன்வாஸ் செய்வான். தட்டில வசூல் கொட்டனுமே.

 சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு போனா கங்கு பட்டர் “சீர்த்த முலை பற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள்” என்று தட்டை நீட்டுவான்.

கங்குவும் தௌமியனும் ஓய்ந்த நேரத்தில் 
புது பிசினஸ் பற்றி ஆலோசனையில். கூடவே ராகவய்யங்கார்.

தௌமியன் : நான் எப்பவும் அதிகாலையில எந்திரிச்சிடுவன். குயில் கூவுறச்ச. தெரியுமோல்லியோ. அதி காலை குயில் கூவுற சத்தம் ஏழேழு லோகத்திலும் கேக்கும்.

பிரமாதமான டவர் இருக்கும்போல என்று ராகவன் நினைத்துக்கொண்டிருக்கும் போதே

கங்கு : ’டேய் தௌமி, ராகவனோட ஒன்னரை செண்டு எடம் பரந்தாமன் புரத்தில இருக்கோல்லியோ. 
அந்த இடத்தில ஒரு சின்னக்கோவில கட்டணும்னு சொல்லிண்டே இருக்கான்.’

தௌமியன் : ’சின்னதா சிலாக்கியமா ஒரு சுவர், இப்போதைக்கு மேல கூரை போட்டுண்டுடலாம். 
நல்ல விக்ரஹம் பிரதிஷ்டை பண்ணிடலாம்.
 டேய் ராகவா, அந்த எடத்த மட்டும் என் பேருல எழுதிக்கொடுத்துடு. 
கோவில நான் பாத்துண்டறேன். 
கங்குவுக்கு பார்ட் டைம்.’

தௌமியன் தோல் இருக்க சொள முழுங்கி. போரெல்லாம் பொரி பொறுக்கி.

ராகவன் துண்ட காணோம், துணியக்காணோம் என்று தலை தெறிக்க ஓடியே போய் விட்டான்.

கங்கு: ’காரியத்த கெடுத்துட்டியேடா தௌமி, 
நாம பட்டர்னாலே நம்ம கோவில் தானேடா. 
வெண்ண தெரண்டு வரும் போது தாழிய ஒடச்சிட்டியடா..
பிரம்ம ஹத்தி, தன்னுடைமை வெறிய இப்படி வெளிப்படயா சொல்லலாமாடா மட்டி.
பெரும் நஷ்டம்.’

........

மீள்

Nov 3, 2023

"தழல் வீரம்" R.P.ராஜநாயஹம் புதிய நூல்

புதிய நூல்

"தழல் வீரம்"

R.P. ராஜநாயஹம்

ஜெய்ரிகி வெளியீடு