Share

Showing posts with label ரஜினி காந்த். Show all posts
Showing posts with label ரஜினி காந்த். Show all posts

Dec 17, 2020

இவ்விருவரின் ரசிகர்கள்

 கமல் ஈகோ பார்க்காமல் ரஜினியுடன் கூட்டு சேரத்தயார்.

 ரஜினி இன்னும் respond பண்ணவில்லை. 

ஒரு வேளை இருவரும் கூட்டணி அமைத்தாலும் 

இவ்விருவரின் ரசிகர்கள் எப்படி சுமுகமாக ஏற்று இணைந்து தேர்தல் பணியாற்றுவார்களோ? 


என்னுடைய மாப்பிள்ளை ஒருவர்

 ரஜினியின் தீவிர ரசிகர். 

அவரிடம் கிண்டல் செய்ய வசதியாக 

நான் கமலின் தீவிர ரசிகர் என்கிற மாதிரி

 ஒரு முரட்டு முகமூடியை அணிந்து கொண்டு தான் சற்று மிகையான பாவனைகளுடன்

 பேசுவது வழக்கம்.


அப்போது ’மைக்கல் மதன காமராஜன்’ படம் வெளியாகியிருந்தது.


கடை வீதியில் பஸ் ஸ்டாண்ட் ஒட்டி இருந்த அவருடைய கடையில் அவரை சந்தித்த போது

 “ அத்தான், வாங்க, உள்ள வாங்க”


“ மாப்பிள்ள, எங்காளு ( கமல்) படம் ரிசல்ட் பத்தி ஏதாவது கேள்விப்பட்டீங்களா? யாராவது படம் பாத்திருப்பாங்களே” பரிட்சை  ரிசல்ட் கேட்க தவிக்கும் மாணவ சிறுவன் போல நான் கேட்டேன்.


உடனே அவர் முகம் சற்று சோகமாக மாறியது. நான் எதிர் பார்க்கிற நல்ல ரிசல்ட் கிடையாது என்று அர்த்தம்.


ஒரு பெரு மூச்சு விட்டு “ உள்ள வாங்களேன். சொல்றேன்”


நான் சற்று அவசரமாக பதற்றத்துடன் “ என்ன மாப்பிள்ள?” என்றேன்.


”சிவகாசி,ராஜபாளையம் இரண்டு ஊர்களிலும் போய் படம் பார்த்துட்டு வந்துட்டாங்கே…. உங்க ஆளு ஒர்த்தன் (ஒரு கமல் ரசிகன் என்று அர்த்தம்) இப்பத்தான் வந்து அழுதுட்டு போறான்.”

 சற்று நிறுத்தி விட்டு கடைக்கு வந்திருந்த கஸ்டமர்களை கவனிக்க ஆரம்பித்து 

காசு வாங்கிப்போட ஆரம்பித்து விட்டார்.


என்னை அவர் இடையிடையே பார்க்கும்போதெல்லாம் நான் முகத்தில் -----’சீக்கிரம் சொல்லுங்க மாப்பிள்ள’ ------- பாவனையில் தவிக்க ஆரம்பித்தேன்.


கஸ்டமர்களை அனுப்பி விட்டு திரும்பி 

“ எத்தான், நீங்களே சொல்லுங்க…

 ஒர்த்தன் பேரு மைக்கலாம். 

இன்னொருத்தன் பேரு மதனாம்.. இன்னொருத்தன் காமன்..

 நாலாவது ஆளு ராஜனாம்…

 இதெல்லாம் என்ன நல்லாவா இருக்கு? சொல்லுங்க நீங்களே சொல்லுங்க?”


பதில் இப்படி வரவேண்டும் என்பது இந்தக்கேள்வியில் உள்ள கொக்கி - “ ஆமா நல்லாவே இல்லையே ”


நான் பதிலே சொல்லாமல் நகத்தை கடித்தேன்.


அவர் எனக்கு ஆறுதல் சொல்லும் பாவனையில் பெருந்தன்மையுடன் “ எத்தான், ராமராஜன் படம், விஜயகாந்து படம் எல்லாம் ஓடும்போது 

உங்காளு படம் ஓடுனா எங்களுக்கு ( ரஜினி ரசிகர்களுக்கு) என்ன வேண்டாம்னா இருக்கு”


என் கவலையான முகத்தை அவரும் வரவழைத்துக்கொண்ட இறுக்கமான முகத்துடன் பார்த்து சொன்னார் “ உங்காளு சரியில்லை அத்தான். நான் நடு நிலையா சொல்றேன் பாத்துக்கங்க”

நடு நிலையாம். 


அவர் எதிர் பார்த்த படி நான் முகத்தை ரொம்பத்தொங்க போட்டுக்கொண்டு

 “ எனக்கு என்னன்னோ வருது மாப்பிள்ள “


ரஜினி ரசிகரான மாப்பிள்ள “ நீங்க ரஜினி ரசிகரா மாறுங்க அத்தான். என் ஃப்ரெண்ட்ஸ் எத்தன கமல் ரசிகங்க நான் சொல்லி ரஜினி ரசிகரா மாறிட்டாங்கெ தெரியுமா”

“ மாப்பிள்ள, நான் அனுமார் மாதிரி மாப்பிள்ள. மறந்தும் புறம் தொழ மாட்டேன். மாட்டவே மாட்டேன்.”


”புரியலத்தான்…”


”நான் எப்பவும் கமல் ரசிகன் தான். 

மாறவே மாட்டேன்.”


“ ச்சே, உங்களயெல்லாம் திருத்தவே முடியாதுத்தான்..”

என்னுடைய மாப்பிள்ளையாவே இருந்தாலும்         இந்த ரஜினி ரசிகரோட சேந்து நான்                   எப்படிங்க தேர்தல் பிரச்சார வேலை பாக்க முடியும்? 

.. 


..................


May 31, 2018

கும்பல்ல கோவிந்தா


அரசியல் நடப்புகள் பற்றி முடிந்தவரை பல்லை கடித்துக்கொண்டு இது பற்றி விரிவாக எழுதக்கூடாது என்று தவிர்ப்பவன் நான். கோரஸ் பாடக்கூடாது என்கிற உறுதி.
ரஜினி தூத்துக்குடி விவகாரம் ’தூத்தூ’ என்கிற அளவில் இறங்கியதைப்பார்த்த போது எழுதத் தான் வேண்டியிருக்கிறது. இந்த இணைய கோரஸில் நானும் இணையத்தான் வேண்டியிருக்கிறது. கும்பல்ல கோவிந்தா? என் சத்தம் யாருக்கு கேட்கப்போகிறது?
ரஜினிக்கு தர்ம அடி நானும் தான் கொடுக்க வேண்டியிருக்கோ?
துப்பாக்கி சூடு போது ரஜினி எல்லோரும் போலத் தான் கோரஸ் பாடினார்.
தூத்துக்குடி போய் அங்கே 13 குடும்பங்களுக்கு தலா 2 லட்சம், காயம்பட்டவர்களுக்கு பத்தாயிரம் கொடுத்து விட்டு அவர் பின்னர் பேசியிருப்பது பற்றி ஒரே வார்த்தை. நாராசம்.
கிட்டத்தட்ட முதல்வர் ஆகி விட்ட பிரமையில் தான் ரஜினியின் விமான நிலைய பேட்டி. தன்னை இப்போதே முதல் அமைச்சராக பாவித்துக்கொண்டு தான் இப்படி பேசியிருக்கிறார்.
அவருக்கு போலீஸை அடிப்பது பற்றி ஒரு கடுங்கோபம் இருக்கிறது. அதை முன்னர் போலவே இப்போதும் வெளிப்படுத்தியுள்ளார்.

Every hero becomes a bore atlast.
அதனால தான் ஒர்த்தன் “ நீங்க யாரு”ன்னு தூத்துக்குடியில கேட்டிருக்கான்.
சினிமாவில என்னமா வீர வசனம். கோடிக்கணக்கில சம்பளம் வாங்கிக்கிட்டு
“ நாங்க ஏழைங்க நினைச்சா…”ன்னு விரல உயர்த்துவாரு.
சினிமாவில இன்னைக்கி “காலா” வரை போராட்ட வசனம் பேசுறாரு.. நிஜமான தார்மீக கோப போராட்டங்கள் தமிழகத்தை சுடுகாடாக்கி விடுமாம். Double standard. Split personalitiy.
ஊடுறுவிய சமூக விரோதிகள் யாரென்று தெரியுமாம்.
சமூக போராளிகளை சமூக விரோதிகள் என்று சொல்வது அதிகார வர்க்கத்தின் cliché.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒரு சமூக விரோதியையாவது காட்ட முடியுமா?
’வன்முறை’க்கு எதிராக பேசுவது எவ்வளவு சுலபமான விஷயமாகி விட்டது. Rajini’s so called Non-violence itself is a cruel violence.
கொக்குக்கு ஒரு புத்தி. ஒற்றை பரிமாண வியாக்யானம்.
அதிகார வர்க்கத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறார். தன்னை அதிகார வர்க்க ’சக்தி’யாகவே கூட பாவிக்கிறார்.
பத்திரிக்கையாளர்களை விஜயகாந்த் ’த்தூ’ என்று காறித்துப்பியதற்கும், எஸ்.வி.சேகர் களங்கப்படுத்தியதற்கும், இப்போது ரஜினி பத்திரிக்கையாளர்கள் மீது காட்டியிருக்கிற துவேசம், அலட்சிய பார்வை, திமிரான கடுங்கோப உடல் மொழிக்கும் வித்தியாசமே கிடையாது.
பத்திரிக்கையாளர்கள் முதுகில் அவர் பிரம்பாலடித்தது, தூத்துக்குடியில் நூறு நாட்கள் போராடிய குடும்பங்கள் மீதும் விழுந்த அடி. ஒட்டு மொத்த தமிழ் மக்கள் முதுகிலும் விழுந்துள்ள அடி.
அவர் ரொம்ப தீர்மானமாக தெரிவித்துள்ள கருத்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஆதரவான கார்ப்பரேட் காவியம்.
’பாரதிய ஜனதாவின் ஊது குழலாக இயங்கப்போகிறேன் நான்’ என்ற திட்டவட்டம்.
உறுதியாக பாரதிய ஜனதாவின் தயவில் நான் முதல்வராகப்போகிறேன் என்ற ஆணித்தரம்.
No doubt, Rajini is ’The Apple’ of Bharathiya Janatha’s ’Eye’!

.............

தீமை செய்திடாமே சோரம் செய்திடாமே ஊரை ஆளவே முடியாதா?
செம்மைதீர் அரசியல் அநீதி!
Power mongers campaign in Fair Poetry and govern in Foul Language.
பதின்மூன்று மனித உயிர்களை காக்காய் சுடுவது போல சுட்டுக்கொன்ற அநியாயம். பாவிகளா.
இப்படி காக்காயை துச்சமாக எழுதக்கூட குற்ற உணர்வாய் இருக்கிறது.
”மனிதாபிமானத்தை விட ’சர்வ ஜீவ தயை’ மேலானது” என்பாரே தி.ஜானகிராமன்.
..........................

Mar 18, 2018

இது ரஜினி சமாச்சாரமில்ல


முதல் மனைவி முத்துக்கண்ணு. அப்படியிருந்தும் ஒரு strong affair. அதுவும் எம்.ஜி.ஆரின் கதாநாயகியோடு. ”ஏப்பா கேள்விப்பட்டனே.. மஞ்சுளாவோட சேர்க்கையா..உண்மையா” என கேட்ட சாண்டோ சின்னப்ப தேவரிடம் “என்னண்ணே! நீங்களுமா இதை நம்புறீங்க. அப்படியெல்லாம் நான் செய்வேனா? நம்ம ஜாதியென்ன? அப்படியெல்லாம் ஜாதிய தூக்கி போடுகிற ஆள் நான் இல்லண்ணே.” என்று சொன்ன விஜயகுமார்.
மஞ்சுளாவுக்கு எல்லா திரைப்பட நடிகைகளுக்குமுள்ள சிக்கல்கள் இருந்தது. கதாநாயகியாக நடித்த எங்கள் தங்கராஜா, உத்தமன் படங்களின் தயாரிப்பாளர் வி.பி.ராஜேந்திர பிரசாத்தை திருமணம் செய்யவிருப்பதாகக் சொல்லிக்கொண்டிருந்தார். அவருடன் ஊட்டியில் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த போது ரிஸப்சனிஸ்ட்டிடம் கூட அப்படி மஞ்சுளா சொல்லியிருக்கிறார்.
ஆனால் இப்படி ஸ்டேட்மெண்ட் எல்லாம் தண்ணீரில் எழுதிய எழுத்தாக மாறும். மன்மத பாணம் மாறி மாறி வெவ்வேறு விதமாக வீசப்படும் போது எப்படியெப்படியெல்லாமோ திசை மாறி விடும் காட்சிகள்.
An ever-shifting kaleidoscope ...............all patterns alter!

எம்.ஜி.ஆர் காதிற்கு விஜயகுமார் மஞ்சுளா காதல் விஷயம் தெரிய வந்த போது எது அவரை கோபப்படுத்தியதோ?
வாஹினி ஸ்டுடியோவில் மேக் அப் ரூமில் இருந்த எம்.ஜி.ஆர் உத்தரவுப்படி அந்த ஸ்டுடியோவில் நடித்துக்கொண்டிருந்த விஜயகுமார் அவரை பார்க்க பதட்டத்துடன் வருகிறார்.
மேக் அப் ரூமில் விஜயகுமார் நுழையு முன் அவருடைய தலைமுடியை பிடித்து உள்ளே எம்.ஜி.ஆரின் கை அவரை உள்ளே இழுப்பதை ஸ்டுடியோவில் இருந்த பலரும் பார்க்கிறார்கள்.
கவனிப்பு உள்ளே எப்படியிருந்திருக்கும் என்பதைப்பற்றி யூகிக்க அதிக சிரமமில்லை.
மண்டகப்படி முடிந்த பின் விஜயகுமாரிடம் சீப்பை கொடுத்து “தலை சீவிக்கொண்டு வெளியே போ” என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். விஜயகுமார் ரோஷத்துடன் சீப்பை அலட்சியப்படுத்தி விட்டு கலைந்த தலையுடனே மேக் அப் அறையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
There is no wound that time cannot heal!
”அண்ணா நீங்க நினைச்சபடி நடந்துருக்கு
புரட்சி தலைவர் கையில் நாடிருக்கு” என்ற பாடலுக்கு பின்னால் ஒரு படத்தில் அதிமுக கொடி பிடித்து விஜயகுமார் நடித்தார்.
உற்சாகமாக “கொடுக்கின்ற கை, துன்பம் துடைக்கின்ற கை, மக்கள் நம்பிக்கை கொண்டிங்கு இப்போ அரசாளுது” என்று அடித்த கையை புகழ்ந்து லாலி பாடினார்.
எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியவர்களெல்லாம் அவரை தூக்கி பிடிப்பது புதிதல்ல. அதிசயமுமல்ல.

Jan 2, 2018

அரசியல் சினிமா கதைப்பு


ரஜினியெல்லாம் எம்.ஜி.ஆர் ஆக முடியுமா?
- கேட்பவர்கள் கேட்கிறார்கள்.

ரஜினியின் ’ஆன்மீக அரசியல்’ டயலாக் நினைவு படுத்துகிற ஒரு எம்.ஜி.ஆர் சமாச்சாரம் உண்டும். உண்டும். உண்டும்.

எம்.ஜி.ஆர் செய்த கோமாளி அரசியலில் மறக்கவே முடியாதது.
கொள்கை பற்றிய நச்சரிப்பு தாங்காமல் “அண்ணாயிசம்” என்று சொன்ன விஷயம்.

........................


You must remember this.
A kiss is just a kiss, a sigh is just a sigh.
The fundamental things apply
As time goes by.
Moon light and love songs are never out of date.
( "As time goes by" song in Casablanca -1942 movie)

தற்காலத்தின் கொந்தளிப்பு மிக்க நிகழ்ச்சிகளோ, துரித தொழில் நுட்ப முன்னேற்றமோ,சுருங்கக்கூறினால் ,எதுவுமே “ நான் உன்னை காதலிக்கிறேன்” என்ற வார்த்தையின் இனிமையைக் குறைத்து விடமுடியாது.

”அர்ஜுன் ரெட்டி” தெலுங்கு படம் பார்க்காமல் தள்ளிக்கொண்டே போய்க்கொண்டிருந்தது. ஒரு வழியாக போன வாரம் பார்த்தேன். இப்படி ஒரு திருப்தி தரும் படம் பார்த்த சந்தோஷத்தில் இருக்கும் போது
’வேலைக்காரன்’ பார்க்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானேன். விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ?
தெலுங்கு படங்கள் கிண்டல் செய்யும்படியாக இருந்ததுண்டு. இப்ப கொல்ட்டிங்க ரொம்ப மெச்சூர்டா ’அர்ஜுன் ரெட்டி’ எடுக்கறாங்க.

ஆனா தமிழ் ’வேலைக்காரன்’....

காலம் மாறிடுச்சின்னு யார் சொன்னது?
தமிழ் சினிமா ட்ரெண்டு மாறிடுச்சுன்னு பொய் சொல்லக்கூடாது.

ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு முகம், மூக்கு பழைய ஜெய்சங்கர் சாயல்.

அம்மா சொன்னத கேட்டு புல்லரிக்கற, கதாநாயகிய டம்மியாக்கற,
ஊரையே திருத்தற Utopian கதாநாயகன் இன்னமும் இருக்கானே!
கவனமா எம்.ஜி.ஆர் படத்த உல்டா பண்ணுறாங்கெ..
............................................

https://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_23.html

Oct 7, 2017

பப்பள பள பள கோஷ நர்த்தனம்


இப்போது ரஜினியும், கமலும் அரசியல் ஆர்வம் காட்டுவது ஏன்? ஜெயலலிதா இருக்கும்போது இவர்கள் ஏன் விரலைக்கூட ஆட்டவில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராக கருணாநிதிக்கெதிராக அரசியல் விஜயகாந்த் தான் செய்தார், நாக்கை துருத்தி பல்லை கடித்தார் என்று சொல்வது பற்றி.. Output என்ன? டெப்பாசிட் இழந்தது தான் மிச்சம்.
எம்.ஜி.ஆர், கருணாநிதிக்கு எதிராக டி.ராஜேந்தர் அரசியல் செய்திருக்கிறார். Output என்ன?
விஜயகாந்த் சினிமாவில் மார்க்கெட் இழந்த பின் தான் அரசியலுக்கு தாவினார். அப்போது கமல், ரஜினி இருவர் தொழிலும் உச்சத்தில் பிரமாதமாய் இருந்தது. இது ஒரு எளிய உண்மை.
இப்போதும் இருவரும் மார்க்கெட்டில் தான் இருக்கிறார்கள்.
விஜயகாந்தை விட அந்தஸ்தில் கமலும் ரஜினியும் நூறு மடங்கு மேல். யோக்யதாம்சம் என்றால் கமல் தான் உச்சம்.

வீட்டில யார் நல்ல பிள்ளை என்ற கேள்விக்கு பதில்: ”கூரையில கொள்ளிக்கட்டைய வச்சி விளையாடுறானே!அவன் தான் நல்லவன்!”

இன்று கமல் இவ்வளவு நாள் அரசியல் அக்கறை இல்லாமல் இருந்தது பற்றி சற்று வருத்தமும் தெரிவிக்கிறார்.

விஜயகாந்த் ஒரு டெம்பஸ்ட் ஸ்டீபனோ என்று நான் 2010லேயே சொன்னேன். அது தான் இன்று நடந்திருக்கிறது.
"What a thrice-double ass was I to take this drunkard for a god,
and worship this dull fool.” என சலித்து விட்டு கட்சியிலிருந்த ஒவ்வொருவரும் வெளியேறி விஜயகாந்த் கட்சி காலி கூடாரமாகிவிட்டது. இப்பவும் அவர் புலம்புகிறார். ‘ங்கொப்பன் மகனே, நான் சிங்கம்டா’
ரஜினி பிரகடனம் -’யுத்தத்துக்கு தயாராகுங்கள்’
புலிக்கு பயந்தவர்கள் என் மேல் படுத்துக்கொள்ளுங்கள்.
தயக்கம் இன்னும் வெளிப்படையாக தெரிகிறது.
ரஜினி அரசியலுக்கு அவர் உடல் நிலையே முதல் எதிரி.
இன்றைய ரஜினி வைக்கோல் கன்றுகுட்டி.
ரஜினிக்கு உடல் ஆரோக்கியம் எதிரி என்றால் கமலுக்கு நாக்கு.
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளராம்.
சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்.
Every hero becomes a bore at last.
கமலிடம் ஒரு பாய்ச்சல் மின்னுகிறது. மின்னல் போல மறையுமா? நிலைத்து நிற்குமா?
ரஜினி அரசியலில் on your marks சொல்லும்போதே, முதல் அடி எடுத்து வைத்த நிலையில், கமல் தீவிர ட்விட்டர் யுத்தம், மீடியா பேட்டிகளில் “முதல்வர் ஆக தயார்” பிரகடனத்தில் ரஜினியை கவிழ்த்து விளையாடுகிறார்.
தமிழருவி மணியனின் ரஜினிகாந்த கோஷம் மங்கிடுச்சே.
ரஜினிக்கு உள்ள சினிமா கமர்சியல் வேல்யூ, ரசிக பட்டாள செல்வாக்கு கமலுக்கு கிடையாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ரஜினி தும்பிக்கய ஊனும் முன்னே கமல் ஊனி சங்கு சக்கரமா சுத்துறார். வால மரத்தில தொங்கப்போட்டு ஊஞ்சலாடுறார். விகடனில் பல பக்கத்துக்கு புயல கிளப்புறார்.

டேய்! டி.விக்காரங்களா! Breaking News போட்டுக்கிட்டே இருங்கடா! இப்படி ஒரு Addiction வந்திடுச்சே! பட படன்னு என்னன்னோ வருதே.. விரல்லாம் நடுங்குதே.....Breaking News புதுசா புதுசா வேணுண்டா..ஐயோ  couch potato ஆக்கிட்டீங்களேடா மக்கள...
கமல் கிட்ட ஒரு Consistancy உக்கிரமா இருக்கு.
ரஜினி “ அரசியல் வெற்றிக்கு சினிமா புகழ் மட்டும் போதாது”
சிவாஜி கணேசன் மண்ணை கவ்விய விஷயத்தை கமலுக்கு எச்சரிக்கையாக.
’நான் சொல்றது என்னன்னா’ன்னு சாருஹாசன் குழப்புவது இப்படி - ’ரஜினியும் அரசியலுக்கு வரமாட்டார். என் தம்பியும் வர மாட்டார்,வந்தாலும் முதல்வராக முடியாது’

விஜயகாந்த் அபிப்ராயம் : “ கமலும் ரஜினியும் சம்பாதிச்ச பணத்தை அரசியல்ல செலவு பண்ண விரும்ப மாட்டாங்க”

ஓ! Spend  பண்ணி  Loss பண்ண மாட்டாங்களாமா?

ஸ்டாலின், எடப்பாடி, ஓ.பி.எஸ், ( பன்னீருக்கு கூட செல்வாக்கு இருப்பதாக பத்திரிக்கைகள் கணிப்பு வெளியிட்டு கொண்டிருந்தன) சசிகலா, தினகரன் இன்ன பிற தமிழக அரசியல் தலைவர்களை விட கமல் தகுதி, யோக்கியதை குறைந்தவரல்ல.
முதல்வராக தயாராகும் கமல். ஓ.பி.எஸ், எடப்பாடியெல்லாம் உட்கார்ந்த சீட்டில கமல் உட்காரக்கூடாதா? கமலுக்கென்ன, தங்காத்து!
பரோலில் வெளி வந்த சின்னம்மா சசிகலாவுக்கு என்ன ஒரு குதூகல வரவேற்பு.
எடப்பாடியயும் கும்பிடுறாங்கெ.. தினகரனயும் சசிகலாவயும் தூக்குறாங்கெ.. தீபா பின்னாலயும் அதிமுக தொண்டர்கள் பிரகாசம் காட்டுறாங்கெ… கட்சி எத்தன பிரிவா உடஞ்சாலும் கூட்டம் காட்டுறாங்கெ…. பப்பள,பள.பளபள ஜிகினா அரசியல்.
தமிழிசை, ஹெச்.ராஜா, திருநா, திருமா, சீமா..,  கிச்சாமி... ஜெ.தீபா...

நல்ல பல அரசியல் விதூஷகர்கள் அவ்வப்போது தங்கள் விஷேச விசித்திர வித்தைகள் மூலம் தமிழர்களை மகிழ்விக்கிறார்கள். 
எதெதெற்கோ உன்னத அர்த்தம், புளகாங்கிதம்.
அற்பம், சாதாரணம்,மலிவானது எல்லாவற்றிற்கும் கொடி கட்டுகிற செம்மறி ஆடுகள். கோஷங்களின் நர்த்தனம்.

இப்படி புல்லரிப்பு,செடியரிப்பு, மரமரிப்பு இல்லாத ஒருவர் தில்லையம்பல நடன நடராஜனை பார்த்த பார்வை
’கொசு கடித்ததால் நடராஜர் காலை தூக்கியிருப்பார்.’
- க.நா.சுப்ரமணியம்

..............................................................................





May 21, 2017

நடப்பு





’ரஜினி அரசியல்’ அற்புத விளக்கா?  
வைக்கோல் கன்றுக்குட்டி!

ரஜினியே கூட வைக்கோல் கன்றுக்குட்டி தான்.
……………………………………………………………….


விகடன் தடம் இந்த மாத இதழில்இன்னும் சில சொற்கள்”.
கேள்விகள் கேட்கப்படும். அதற்கு ஒவ்வொரு இதழிலும் பழுத்த எழுத்தாளர் ஒருவர் பதில் சொல்லும் பகுதி.
சிற்பியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி
அசோகமித்திரன்?
பதில்இருபது வருடங்களாக இறந்து கொண்டிருந்தவர்.’


விசித்திரமாக இப்படி கூடவா ட்ரிப்யூட்?

வானம்பாடி தானே சிற்பி.
.......


எனக்கு என்னவோ ஆரம்பத்துல இருந்தே கவிதைகள் மேல ஈடுபாடு இல்லைஎன்று எப்போதும் அசோகமித்திரன் சொல்லிக்கொண்டிருந்தவர்.
ஞானக்கூத்தன், ஆத்மா நாம் கவிதைகளையாவது கொஞ்சம் பாராட்டியிருந்திருப்பார்.
சிற்பி ஒரு கவிஞர் என்பது நிச்சயம் தெரிந்திருந்திருக்கும்!
...............................................

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_28.html

http://rprajanayahem.blogspot.in/…/ashokamitrans-letter-to-…

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_27.html

http://rprajanayahem.blogspot.in/2013/03/blog-post_27.html

http://rprajanayahem.blogspot.in/…/hollow-eye-and-wrinkled-…

Mar 28, 2017

பொல்லாச் சிறகை விரித்து


கதையல்ல 1

சினிமாவில ஹீரோ ஆக ஆசைப்பட்டு, ஹீரோ ஆக மட்டும் ஆசைப்பட்டுக்கொண்டு, கோடம்பாக்கம் மேல கண்ணு வச்சு அலையும் அரைவேக்காடு ஒருவனின்
படு சீரியஸான அங்கலாய்ப்பு
“ரஜினியே எல்லா ஸ்டைலையும் பண்ணிட்டாரு. இனிமே நான் என்ன ஸ்டைல் பண்ணறதுன்னு தெரியலயே..”
...............................
கதையல்ல 2

சென்ற வருடம் திடீரென்று வதந்தி ஒன்று ரொம்ப வேகமா பரவுச்சு.
”ரஜினி செத்துட்டாராம் மச்சான்.” என்று ஹீரோ ஆக ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கும் ஒரு நடிகன் பதற்றத்துடன் சொன்னான்.
சினிமா ஹீரோ ஆக ஆசைப்பட்டுக்கொண்டு, ஆசைப்பட்டுக்கொண்டு மட்டுமே இருக்கும் மற்றொரு கத்துக்குட்டி உற்சாகமாக சொன்னான் “ ஏன் மச்சான் கவலைப்படுற. ஒரு காம்பட்டிசன் கொறஞ்சுதுன்னு சந்தோஷப்படணும்டா.”

.................................................

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_6760.html

https://www.facebook.com/rprajanayahem/posts/1942446982635425?pnref=story

http://rprajanayahem.blogspot.in/2017/03/walking-shadow.html


Aug 4, 2008

EVERY HERO BECOMES A BORE ATLAST!

ஹோகனேக்கல் - வீரக்கனல்

AN IMMENSE DIFFERENCE ------குசேலன் -சரணாகதி - பெங்களூர் வசூல்

SLIP OF TONGUE --------------- " இனிமே வார்த்தையை விடும்போது கவனமா இருப்பேன் . வாழ்க்கையில் புது பாடம் கத்துக்கிட்டேன் "
-ரஜினி காந்த்

EVERY HERO BECOMES A BORE ATLAST!
ஆனால் எப்போதுமே ரஜினிகாந்த் தத்துவ காமெடியன் என்பது தெரிந்ததே.
சத்யராஜ் ,சரத்குமார்,விஜயகாந்த் போன்ற ஏனைய "தமிழ்" காமெடியன்களின் வாய்க்கு மெல்லுவதற்கு அவல் கொஞ்ச நாளைக்கு .