நினைவோ சிறகு விரிக்கும் பறவை
- R.P. ராஜநாயஹம்
ரொம்ப சின்னப் பையனாய் இருக்கும் போது சங்கரன் கோவிலில்
திருமணத்திற்கு போய் இருந்தேன். திருமணங்கள் எவ்வளவோ உண்டு தான்.
இந்த திருமணம் மறக்கவே முடியாது. அதைப் பற்றிய வித விதமான நினைவுகள்.
கல்யாணம் முடிந்த பின் மாலை பாட்டு பாடினேன்.
"பொல்லாத புன்சிரிப்பு, போதும் போதும் உன் சிரிப்பு, யார் வீட்டுத் தோட்டத்திலே பூத்ததிந்த ரோசாப்பூ? "
'தொர பாடுறான்' , 'தொர பாடுறான்' என்று பெரியவர்கள், குழந்தைகள் எல்லோருமே உற்சாகமாக ரசித்தார்கள்.
பெரிய மாமனார் எஸ்.எம். டி அங்குராஜ் - அப்போது அவர் புது மாப்பிள்ளை, காரில், (அது அவருடைய அப்பா கார். அவர் தான் சங்கரன் கோவில் திருமணத்தை
தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
என் மனைவியின் தாத்தா தங்கமுடியா பிள்ளை)
அப்பா, பெரியப்பா
(பெரியப்பா மகள் - ராஜம் அக்கா தான் கல்யாணப் பெண். நான் தான் மாப்பிள்ளை ஊர்வலத்தில் அத்தான் ராமகிருஷ்ணன் கையைப் பிடித்து அழைத்து வந்தேன்.) குற்றாலம் போனோம்.
அங்கே அப்பாவுடன் நான்காம் வகுப்பு முதல் இன்டர்மீடியட் வரை செயின்ட் சேவியர்ஸில் ஒன்றாக படித்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை
தந்தை தற்செயலாக மெயின் ஃபால்ஸில் சந்தித்தார்.
இருவரும் பள்ளி, கல்லூரி கால நினைவுகளில் பரவசமானார்கள்.
அப்போது எட்மண்ட் தி. மு. க. வில் உதவி சபாநாயகர்.
பின்னால் இவர் அ.தி. மு. க வில் எம்ஜியார் அமைச்சரவையில் உணவு அமைச்சராகவும் இருந்தார்.
சுயமரியாதை மிகுந்த எட்மண்ட் அமைச்சராக இருக்கும் போது மகள் கல்யாணத்துக்கு தோட்டத்திற்கு முதல்வருக்கு பத்திரிகை வைக்கப் போன போது
அவரை எம். ஜி.ஆர் நேரில் சந்திக்காமல் இன்டர்காமில் பேசி, கல்யாண பத்திரிகையை ஹாலிலேயே வைத்து விட்டு போக சொல்லியிருக்கிறார். எட்மண்ட் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
https://www.facebook.com/100006104256328/posts/3088026201410825/?app=fbl
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.