Share

Jul 10, 2026

வேடிக்க-66. R.P.ராஜநாயஹம் கண்கள் உடல் தானம்

வேடிக்க - 66

தானம் 
R.P. ராஜநாயஹம் கண்களையும் உடலையும்  தானம் செய்வதாக முடிவு. 

கோவை மெடிக்கல் காலேஜுக்கு மாலை போன் செய்த போது ' இது கம்யூனிகேசன் டிபார்ட்மெண்ட். நீங்க நாளை காலை இந்த நம்பருக்கு பேசுங்க. இப்ப அவுங்க போயிருப்பாங்க."

மறு நாள் காலை அந்த நம்பருக்கு போன் போட்டு விபரம் சொன்ன போது" மேனேஜர் இல்ல. வந்ததும் சொல்றேன். நான் புதுசு. என் பேரு யுவராஜ். " 
மேனேஜர் வந்ததும் மறந்துடாம இந்த நம்பருக்கு பேச சொல்லுங்க'

போனே வரவில்லை. 
மீண்டும் நீண்ட நேரத்திற்கு பின் பேசிய போது மேனேஜர் தேவி இருந்தார். " பையன் புதுசு. விஷயம் சொன்னான்" 

"இருக்கட்டும். கண் தானம், உடல் தானம் செய்ய வேண்டும்."

Broadway Mall க்கு பக்கத்தில இருக்கிற
 KMC யில இருக்கிற ராமமூர்த்தியிடம் பேச வேண்டுமாம். 

ரெண்டு நாளா முடியல.

இன்று காலை போன் போட்ட போது 
"இப்ப எங்க கிட்ட பாடி நெறய்ய இருக்கு. நீங்க ஹோப்ஸ் காலேஜ் அவினாசி ரோட்ல 
Govt Medical college ல Anatomy Department க்கு ஆதார் கார்டு எடுத்துட்டு போங்க. "

"போன் நம்பர் குடுங்க"

"திங்க கிழம தர்றேன். நான் இப்ப லீவுல மதுரயில இருக்கேன்."

This cycle of life really stinks.

Govt Medical College க்கு போன் போட்டு, 
 சித்ரா என்பவர் குருநாதனுடைய நம்பர் கொடுத்தார்.

இதுக்கு எதுக்கு திங்கட்கிழம மதுரையிலிருந்து வந்து தர்றேன்னு சொல்றீங்க சார்.

குருநாதனுக்கு மூன்று முறை போன் போட்ட பிறகு அவரே இரவு எட்டு மணிக்கு பேசினார். 

ஆதார் கார்டு எடுத்துக் கொண்டு வாரிசுதாரருடன் இங்க வரவேண்டும். 
கண்கள் தானம் இங்கே பண்ண முடியாது. பெரிய ஆஸ்பத்திரிக்கு நீங்க போகணும். இல்ல அரவிந்த் ஆஸ்பத்திரி போய் பாருங்க. விட்னஸ் ரெண்டு பேரோட வரணும்.

"அப்ப அலைய விடுறீங்க"

"தொண்ணூறு வயசுல வர்றாங்க. உங்களால முடியாதா?நீங்க ஏங்க இப்படி அலைய விடுறோம்ங்கிறீங்க. 
உடல் தானம்னா முழுசா ஒடம்ப குடுத்துடணும்."

" கண் தானம் பண்ணக்கூடாதா"

"உடல் தானம்னாலே முழு உடலையும் தான் குடுக்கணும்" 

" என்ன சொல்றீங்க?"

"கண் தானம் நீங்க பாத்துக்குங்க. உடம்பு தானம் பண்ண வாரிசுதாரரோட மெடிக்கல் காலேஜ் வாங்க"

"வர்றோம். விட்னஸ் நீங்க பாத்துக்குங்க"

" நாங்க யாராவது விட்னஸ் கையெழுத்து போட்டுக்கறோம். திங்க கிழம பதினொரு மணியில இருந்து ரெண்டு மணி வரை இருப்பேன்"

"முகத்தில அடிக்கிற மாதிரி 'தொண்ணூறு வயசு ஆளெல்லாம் வர்றாங்க. நீங்க வரமுடியாதா' ன்னு பேசலாமா" என்று கேட்ட போது 
குரு நாதன் "நான் சொல்ல வந்தது என்னன்னா'" ன்னு நெறய்ய பேச ஆரம்பித்தார். போனை கட் பண்ணுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

The way to Noble Cause is invariably paved  with difficulties

Jul 5, 2026

அவலும் உமியும்


"ரெண்ட்ட இஎம்ஐயா கட்டுங்க.
 12 மாச இஎம்ஐ 
ஃப்ரீ"

இதெல்லாம்??
ஒரு வருஷ இஎம்ஐ! 
என்ன நடக்குது.

"அவல் கொண்டு வா. உமி கொண்டு வர்ரேன்.
ஊதி ஊதி சாப்டலாம்"

Hold what you buy.Owning a home is a keystone of wealth.
Homeownership is the foundation of a Man's Dream

"I would give a thousand furlongs of sea for an acre of barren ground.” – Shakespeare

Jul 3, 2026

K. பாக்யராஜ் சினிமா எனும் பூதம் தொலைக்காட்சி தொடரில்

R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் தொலைக்காட்சி தொடரில் 

"K.பாக்யராஜ்"

05.07. 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 
எட்டரை மணிக்கு 
முரசு டிவியில்

Jul 2, 2026

ச.தமிழ் செல்வனுடன்

02.07. 2026

4.45 pm 

Vande Bharat Train 

ச. தமிழ் செல்வனுடன் 
தற்செயல் சந்திப்பு

Jul 1, 2026

சினிமா எனும் பூதம் தொடர்

222, 223 Episodes 

Shooting on 2nd July, 2026 in Kalaignar TV

1. K. பாக்யராஜ் 

2.  பாரதிராஜா 

R.P. ராஜநாயஹம்
சினிமா எனும் பூதம்

ஞாயிற்றுக்கிழமைகளில் 
முரசு டிவியில்
காலை எட்டரை மணிக்கு ஒளிபரப்பு 

.....

2021 டிசம்பர் 5ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று 'சினிமா எனும் பூதம் '
தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுக்
கொண்டிருக்கிறது.

Jun 28, 2026

Ashokamitran rejoinder to Outlook polemic

Ashokamitran rejoinder to Outlook polemic
Through R.P. Rajanayahem 

"யார் என்ன அவதூறு செய்தாலும் இனி rejoinder தராதீர்கள். விளக்கம் சொல்ல வேண்டாம்"

R.P. ராஜநாயஹம் 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை' படித்து விட்டு இப்படி என்னிடம் சொன்னார். 

விதி வசத்தால் அவரே Outlook பேட்டிக்கு பின் என் மூலமாக விளக்கம் கொடுத்தார்.

“My concern is always with the not so brilliant , not so successful people.”
R.P.ராஜநாயஹம்

Feb 24, 2009

அசோகமித்திரன் தன் படைப்புகளில் வாழ்வில் வெற்றி பெறாத மனிதர்கள் பற்றி தான் எப்போதும் எழுதியவர் . அவுட் லுக் பத்திரிகையில் அவர் கொடுத்த பேட்டி பிரசுரமான போது பலத்த சர்ச்சை ஏற்பட்டது . பொதுவாக அசோகமித்திரன் அவர் பற்றிய எந்த சர்ச்சைக்கும் பதில் அளிப்பவர் அல்ல . குமுதம் , குமுதம் தீராநதி , உள்பட அவருடைய அவுட் லுக் பேட்டி க்காக கடுமையாக அவர் விமர்சிக்கப்பட்டார். 

இது விஷயமாக அவர் பதில் அவுட் லுக், குமுதம் துவங்கி இன்னும் இலக்கிய பத்திரிக்கையிலிருந்து எத்தனையோ பிரமுகர்களுக்கு விளக்கத்தை அனுப்பியிருக்கலாம் . அவர்கள் அதை பெருமையாக பிரசுரித்திருப்பார்கள் .

ஒருவர் தனக்கு தான் அசோகமித்திரன் பதில் எழுத இருக்கிறார் என்றே பகீரங்கமாக கூட எழுதினார். 
அவர் யாருக்கு விளக்கம் எழுதினார். எனக்கு தான் கடிதமாக எழுதினார் .

அந்த கடிதம் உலகெங்கும் உள்ளவர்களால் ராயர் க்ளப் வலைத்தளத்தில் விவாதிக்கப்பட்ட போது, (இணையத்தில் விவாதிக்கும்போது கூட R P ராஜநாயஹம் பெயருக்கு எழுதப்பட்ட கடிதம் என்பதை குறிப்பிட விரும்பாமல் அசூயையுடன் மறைத்து விவாதித்த பிரமுகர் உண்டு ) இங்கே உள்ள எழுத்தாள பிரமுகர்களும் மூச்சே விடவில்லை, அவுட் லுக், குமுதம்,காலச்சுவடு ,உயிர்மை என எல்லோரும் அந்த கடிதத்தை புறக்கணித்தனர்.
' இந்த கடிதம் R P ராஜநாயஹம் பெயருக்கு ஏன் எழுதப்பட்டது ? 'என்ற கோபம் தான் காரணம்.

கனடாவில் பதிவுகள் .com இல் பிரசுரமான கடிதத்தை இங்கே தமிழக பத்திரிகைகள், எழுத்தாளார்கள் மூச் விடவில்லை.
 
' எனக்குதான் அசோகமித்திரன் பதில் எழுத இருக்கிறார்.' என்று மார் தட்டி சொன்ன  பிரமுகரிடம்
 ' அசோகமித்திரன் விளக்கம் பற்றி ரொம்ப எதிர்பார்த்த நீங்கள் கூட இந்த கடிதம் பற்றி ஏன் பேசவில்லை ' என  நேரிலேயே கேட்டேன்.
அசோகமித்திரன் தனக்கு பதில் எழுதியிருந்தால் தான் அது பற்றி எழுதி இருக்க முடியும் என அலட்சியமாக பதில் சொன்னார். எனக்கு பதில் எழுதி விட்டார் என்பது தான் எல்லோருக்கும் கோபம்.

 இன்னொரு எழுத்தாளர் அசோகமித்திரனிடம் ' என்ன இவர் நீங்க தனிப்பட்ட முறையில் எழுதின கடிதத்தை இப்படி பகீரங்கமாக்குகிறார் " என்று மூட்டி விட முயற்சித்திருக்கிறார் . அசோகமித்திரன் தான் இதை கைப்பட எனக்கு எழுதி என்னை டைப் செய்து பதிவுகள் .com இல் பிரசுரிக்க சொன்னவர் என்பதை அந்த பொறாமைக்காரர் அறியவில்லை .

அந்த கடிதம் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது .
அந்த கடிதம் பற்றி இங்கே குறிப்பிட காரணம் உண்டு .

அசோகமித்திரன் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடும்  வார்த்தை 
"My concerns have always been about the not-so-brilliant, not-so-successful people of all sections of people. "
இந்த வார்த்தைகளில் தான் அசோகமித்திரனின் ஒட்டுமொத்த இலக்கிய வெற்றி அடங்கியுள்ளது .

' R P ராஜநாயஹம் - அசோகமித்திரனின் சீடன்' என்ற முத்திரை உண்டு 

 

அசோகமித்திரன் எனக்கு எழுதிய அந்த கடிதம் கீழே:
NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE !
- ASHOKAMITRAN -
ASHOKAMITRAN (J. THIYAGARAJAN)
FLAT -7, 1A, 9TH CROSS AVENUE,
DANDEESWARAM, VELACHERY,
CHENNAI-600 042. 

Date: 31.05.2005

DEAR R.P.RAJANAYAHEM,

Your kind letter.

I am extremely pained at the reactions of some friends to my ‘article’ in the Delhi Magazine. I am a computer illiterate and I have no way of knowing what appeared in the internet magazine. But both pieces are the result of a ten-minute telephone conversation with the correspondent. Nothing was put on paper, neither the questions nor the answers. In the printed article, there are quite a few terms i do not use at all. Also the tone is not mine. Since the questions were focussed on Tamil Brahmins, naturally the answers related to them. 
My concerns have always been about the not-so-brilliant, not-so-successful people of all sections of people. Not just Brahmins.
In India, with a lot of construction work going on, it is a good period for tradesmen, plumbers, carpenters, electricians, masons, etc. But how much of what they earn goes to the well-being of their families, the education of their children? This applies to brahmins also, especially cooks. Much of their hard-earned money goes for gambling and having a merry time.

All that appears in a periodical, Tamil or English, need not be cent percent authentic and true, especially when not a word is written by the interviewee. It is very difficult to convey the tone of the answers. As a general rule, no magazine publishes an originally written article unless the editor determines the theme. The correspondents execute the theme by interviews. In my case, it was a telephone interview and so prone to distortion and errors. And i had no control over what finally appeared in print.

This makes it all the more important for a reader to exercise her or his own judgement, not merely go by what is published.

Yours Sincerely,

ASHOKAMITRAN 

.......................................................

ASHOKAMITRAN'S LETTER WRITTEN TO R.P.RAJANAYAHEM -
A REJOINDER TO OUTLOOK POLEMICS

When Ashokamitran wrote me a letter and wanted me to type it and arrange to publish it in pathivukal.com, I thought of giving a resounding,booming TITLE to that historical letter and chose a sentence from the letter itself because "NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE!" sounds a decree and verdict in it and this line has an assertive forceful claim and while pronouncing, it becomes an articulate, expressive declaration.

Now when I find this TITLE has become popular in Raayar Kaapiklub I feel great.

But this letter also raised a row among the libertarian writers(!) around Tamil nadu. Why should Ashokamitran write this letter to R.P.RAJANAYAHEM ?
That's the question !

JEALOUSY, RESENTMENT, DISTRUST, SUSPICION, HATRED

Heated discussions going on and now
ASHOKAMITRAN'S LETTER TO R.P.RAJANAYAHEM IS AT ODDS !
So this letter is being rejcted and ignored.

"How many ages hence
Shall this our'LOFTY SCENE'be acted over
In States unborn and accents yet unknown!"
- Shakespeare in Julius Caesar

....................................................

....................................................................

Jun 25, 2026

விஜய் அப்பா வேடிக்க - 61

விஜய் அப்பா 

வேடிக்க - 61

Obsessed Religious Addiction -
Scrupulosity

இதெல்லாம் ரொம்ப முன்னால நடந்த விஷயம்.
விஜய் சினிமா கரியர் உச்சம் தொட்ட உடனே S.A. சந்திரசேகர் ரொம்ப நெருங்கிய உறவினர் S.N. சுரேந்தரிடம் பெருமிதமாக 
" நாங்க க்ரிஸ்டியன் ஜெயிச்சிட்டோம். நீங்க இந்து தோத்திட்டீங்க"
Pompous declaration.

இப்படி இந்த விபரீத ஒப்பீட்டினால் அதிர்ந்து நிலை குலைந்து போன சுரேந்தர் கோபமாக கடுமை காட்டி" ஒத வாங்கப் போற. ஒதப்பேன்"

அத்தோடு சந்திரசேகர், அவர் மனைவி, மகன் மூவரும் அவரோடு உறவை அப்போது முழுவதுமாக முறித்துக் கொண்டார்கள்.
கடும் பகை.
2016ம் ஆண்டு சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் அப்போது சரவணபவன் ஓட்டல் கிளை அப்போது இருந்தது.
அங்கு சுரேந்தரை சந்தித்த போது அவர் சொன்ன தகவல்.

மீள் 

https://www.facebook.com/share/p/19JFwnxjFR/

https://www.facebook.com/share/p/1Ft1RLpaLt/

https://www.facebook.com/share/p/18sFiqEW1K/

https://www.facebook.com/100006104256328/posts/3047408935472552/?app=fbl

Jun 23, 2026

Gilding the Lily


Gilding the refined Gold and painting the Lily 

Thus the bad bigins and worse remains behind

Jun 22, 2026

Versatile R.P. Rajanayahem

Late. Mohan Hariharan :

R.p. Rajanayahem is a many sided personality! 
Director, Writer, Teacher, Scholar and
 Lover of many things including Carnatic music ! 

Wish him all success ! 💐💐

....

Mohan Hariharan - younger brother of 
Dr. Hari Srinivasan (எழுத்தாளர் சார்வாகன்)

R. P. ராஜநாயஹம் பற்றி
 கூத்துப்பட்டறை அதிபர் ஓவியர் மு. நடேஷ் 

"  உங்கள் முக்கியத்துவத்தை 
கூத்துப்பட்டறை நடிகர்கள் உணர்ந்து, 
உங்களிடம் கற்று 
உயர்ந்து இருக்க வேண்டும்.                               
 தவற விட்டு விட்டார்கள். "

https://www.facebook.com/share/p/1CrmLtFsW9/


யவனிகா ஸ்ரீராம் :

"காலத்தின்  மேஜிக் சிலேட்டை கையில் வைத்திருக்கிறீர்கள் ராஜநாயஹம் சார்"


Jun 18, 2026

Stamina

Stamina 

perseverance, grit, and sustained energy

இரவில் படுக்கையில் படுத்து அவராகவே தூங்குகிறார் 

விடிந்தவுடன் அவரே விழித்துக்கொண்டு படுக்கையில் இருந்து எழுகிறார்
 
அவரே தான் தன் பற்களை விளக்கிக்கொண்டு ட்டூ டாய்லெட் தனியாகவே தானாகவே கழிக்கிறார். 
Self standing. ஆசனவாய் கழுவுகிறார்.
யார் உதவியும் இன்றி குளிக்கிறார்.

 ஜட்டி பனியன் போடுவதோடு சட்டையும் தானே அணிந்து கொண்டு 
கோட் பேண்ட் கூட அவரே, அவரே.
காலை உணவு தட்டுல சாப்பிட்டு ( லஞ்ச் தான் டிஃபன் பாக்ஸில்)அவரே கை கழுவி டவல் எடுத்து கைகளை துடைத்துக் கொள்கிறார்.
 காரில் அவரே ஏறி உட்கார்ந்து கொள்வதோடு இறங்குவதும் கொஞ்சம் கூட அலுக்காமல் சலிக்காமல் செய்கிறார்.

எவ்வளவு வேல!

Doing everything wisely and slowly.

Joy's soul lies in the doing.

"Perseverance, keeps honour bright: to have done, is to hang quite out of fashion, like a rusty nail in monumental mockery."

- Shakespeare

பொய்யற்ற ஆன்மாவொன்றின் சாட்சியம்

R.P. ராஜநாயஹம் ஸார்,
 பேருக்கேற்ற ராஜகுணம் உங்களுக்கு. 
இந்த மனசு எத்தனை பேருக்கு வாய்க்கும்..? 
உங்கள் மனம் கசந்து நொந்த தருணம் ஒன்றைப் பதிந்து பகிரும் போது கூட ஒரேயொரு கூர்சொல்லைக் கூடப் பயன்படுத்தாத உங்கள் மயிலிறகு மனதை வியக்கிறேன். 
உங்கள் எழுத்து எப்போதும் பொய்யற்ற ஆன்மாவொன்றின் சாட்சியமாகவே இலக்கிய வெளியில் காலம் கடந்து நிலைத்துலவும்.

- ஆத்மார்த்தி

Aathmaarthi Rs

https://www.facebook.com/share/p/18FL4okATK/

Image 
2004 R.P. ராஜநாயஹம்


Jun 12, 2026

முதல் மரியாதையும் கிராவும்

கி.ராவின் கோபல்ல கிராமத்தில் இருந்து பாரதிராஜா 'முதல் மரியாதை'யில் பயன்படுத்தி படத்தின் ஆரம்பத்தில் நன்றி சொல்லியிருந்தார்.
அவர் அதற்காக கொடுத்தனுப்பிய தொகை பற்றி கிராவுக்கு பெரும் அதிருப்தி.
இடைச்செவலுக்கு தொகை கொண்டு வந்தவரிடம் வெளிப்படையாக கேட்டிருக்கிறார் 
" இவ்வளவு தான் பாரதிராஜா கொடுத்தாரா?"

சில இதழ்களே வந்த சிறு பத்திரிக்கையில்
இதை எழுதினார். அழகிரிசாமி சினிமாக்காரர்களிடம் மோசம் போக நேர்ந்த நிகழ்வு பற்றியும் குறிப்பிட்டார்.

புதுவையில் அடிக்கடி தன்னுடைய ஏமாற்றம் குறித்து நேரில் சொல்லியிருக்கிறார்.
இதை சொல்லும் போதெல்லாம் அழகிரிசாமி மோசம் போன கதையையும் தவறாமல் சொல்வார்.
அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

Jun 11, 2026

வேடிக்க - 65

வேடிக்க - 65


இளையராஜா: ஆளே போயாச்சி இனிமே என்ன?

பாரதிராஜா குடும்பத்தாரிடம் கங்கை அமரன்: கடைசில யாருமே இல்லாம ஓடிப்போயிட்டீங்கள்ள?அவர இப்படி தனியா விட்டுட்டு எல்லாரும் ஓடிப்போயிட்டீங்கள்ள?

The worst thing in life is to end up with people that make you feel all alone.
Late autumn when branches are bare.

நடிகர் சுதாகர் இரங்கல் செய்தி வீடியோவில் பாரதிராஜா பெயரை குழறலாக உச்சரிப்பது 
'எனக்கு வாய்ப்பு கொடுத்த "பாக்யராஜா" பாக்யராஜா"  என்பது போல விசித்திரமாக கேட்கிறது. Life's Twilight 

Karthik  tribute  staring and checking very keenly 

மல்லிகைப்பூ பார்த்திபன் funny exhibitor

Jun 6, 2026

False pride and Arrogance

False pride and Arrogance 

தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு முன்னரே 
(தி.மு.க. தயவால் M.P. ஆகி விட்ட)சுதீஷ் 
அக்காவுக்கு Deputy CM பதவி ஸ்டாலின் கொடுக்க வேண்டும் என்று கேட்டதை பார்க்க முடிந்தது. 
திமுக ஜெயித்தால் உதயநிதி ஸ்டாலின் தான் துணை முதல்வர் ஆவார்.

பிரேமலதாவுக்கு தர வேண்டுமாம்.

புதிய அரசில்
இந்தம்மாவே " நான் துணை முதல்வர் பதவி கேட்டா விஜய் மாட்டேன்னா சொல்வார்?"

Let none
presume to wear an undeserved dignity
- Shakespeare 

Arrogance,  Unwarranted pride, and failing to recognize own blind spots.

இந்த பிரேமலதா ஆபத்தானவர். கரூர் மரணங்களுக்கு தி.மு.க. மீது பழி போட்டவர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போதே முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பற்றி  அவர் முன்னிலையில் அபத்தமாக உளறியவர்.
அனுகூல சத்ரு.

'என்னய தூக்கி மனையில வை'
Premalatha has a lean and hungry look; She thinks too much: such woman is dangerous.
Expecting undeseved importance.

Jun 5, 2026

Scarecrow Annamalai

Scarecrow Annamalai 

A scarecrow satirizes fake leadership.


கொஞ்சமும் சரியில்லாத ஆள புதுக்கொடி. புது கட்சி.

அரசியலால் யாசகமாக குடும்பச் செலவுக்கு மாதம் பத்து லட்சம் 
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாட்ச் 

அரசியலில் 
சம்பாதித்த ஆயிரம் கோடி சொத்து


'இருபதாயிரம் புத்தகங்கள்' போல இன்னொரு பெரும் பொய்-  'மதவாதத்திற்கு எதிரான புதுக்கட்சி' 

பாரதீய ஜனதா கொள்கையை எதிர்க்கப்போகிற அரசியலா?
 காதுல பூ 

அதே குட்டயில நல்லா ஊறுன மட்ட 

According to CM இங்கே ரெண்டே பேருக்குள்ள தான் போட்டி 

முதல்வரோட அல்லு சில்லு லிஸ்ட்ல சேரப்போற புது கட்சி. 

த.வெ.க. கூட்டணில சேருமா? 
இல்ல தனிச்சி நின்னு சீமான் கட்சி போல தேயுமா?

யாரு கண்டா?
 தி.மு.க. கூட்டணி கட்சியாக கூட வாய்ப்பு இருக்கு. இல்லன்னு சொல்ல முடியுமா?

தாய் பா.ஜ.க.வோட பயணிக்கப்போகும் சேய்க்கட்சியா? இல்ல கொஞ்ச நஞ்ச தமிழக பா.ஜ.க. கூடாரத்த அண்ணாமலை காலி பண்ணுற வேலையா? 
பாஜகவை விட்டு வெளியேற காரணம் என்ன?

தமிழர்கள் பாக்யசாலிகள்.

"The abuse of greatness is when it disjoins remorse from power."
— Shakespeare in 'Julius Caesar'

 "satire on scarecrow" https://share.google/IGF9yfe9BUgihc6Vv

Jun 3, 2026

வேடிக்க - 64 கட்டு விரியன்

வேடிக்க - 64

"With thy sharp teeth this knot intrinsicate / Of life at once untie."
Shakespeare in Antony and Cleopatra.

ரேஸ் கோர்ஸில் இரவு walking போய் விட்டு திரும்பி வந்து Gate திறந்து உள்ளே நுழைந்து உள்ளே நுழைந்து நடக்கும் போது காலடியில் கட்டு விரியன் குட்டி. 

'விதி முடிஞ்சவன தான் கட்டு விரியன் கடிக்கும்' - சொலவட.

விறு விறு விறு என்று நெளிந்து நெளிந்து நகர்ந்த விரியன் பாம்பு குட்டி. குட்டி தானா இல்ல பெரிசா?

காரை உள்ளே கொண்டு வந்த அஷ்வத் உடனே இறங்கி இருவரும் கிரிக்கெட் பேட்டால் அடித்தோம்.
We have scorched the snake and killed it.
Poor venomous fool.

சென்ற ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி மக்ஷபகலில் இந்த வீட்டிற்குள்ளே காணப்பட்ட நல்ல பாம்பு குட்டியை ஃபயர் சர்வீஸுக்கு தகவல் கொடுத்து ஐந்து பேர் வந்து பிடித்துக்கொண்டு சென்றார்கள்.

இந்த வருடம் இப்போது ஜூன் 1ம் தேதி இரவு 10.30 மணிக்கு கட்டுவிரியன்.

https://www.facebook.com/share/v/19qVhB68U2/


Jun 1, 2026

ஊள அழுக, பவ்யம் பாவ்லா

2017 மீள்பதிவு 

ஊள அழுக, பவ்யம் பாவ்லா
- R.P. ராஜநாயஹம் 

2017ல்
”கலைஞர் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். பார்வையில் ஆயிரம் விளக்கங்கள்”            - -வைகோ

மூதறிஞர் கலைஞர் சிரிப்பின் 
ஒரே அர்த்தம், 
பார்வையின் ஒரே விளக்கம் :
“ஒன் ஊள அழுக, 
பவ்யம் பாவ்லாவெல்லாம்
 ஆயிரம் தடவ பாத்திட்டேன். 
நான் பயப்படவே மாட்டேன். 
தைரியமா இருப்பேன்.”

துரை வைகோ 
2024 பாராளுமன்ற தேர்தல் திருச்சி மேடையில் 
வைகோவின் ( தி.மு.க. வுக்கு எதிரான) அரசியல் வாழ்வு பற்றி 
 மிக மிகை செயற்கை ஊள அழுகை 
வீடியோ கிடைத்தால் பார்க்க முடியும்.

ஊள அழுகை வம்சம் 

"This was the most unkindest cut of all; For when the noble Caesar saw him stab, Ingratitude, more strong than traitors' arms, Quite vanquished him: then burst his mighty heart."

- Shakespeare

தளவாய்

நாட்டு நடப்பு 

N.S. ராஜா சுப்பிரமணி

தேச ராணுவ "தளவாய்"

May 29, 2026

சத்யேந்திரா


2015ல் சே.ராமானுஜம் மறைந்த போது திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் இரங்கல் கூட்டத்திற்கு 
ந.முத்துசாமி, நடேஷுடன் சென்றிருந்த போது அருகில் நடிகர் சத்யேந்திரா அமர்ந்திருந்தார். சிநேக பாவத்துடன் சிரிக்கும் சத்யேந்திரா. அங்கிருந்து கிளம்பிய போது அவரும் எங்களுடன். சாலி கிராமம் பகுதியில் இறங்கிக் கொண்டார்.

அருணாச்சலம் ரோட்டில் பார்த்த போது எதிர்ப்புறம் இருந்து ரோட்டை க்ராஸ் செய்து வந்து சொன்னார்.
 " என்னிடம் French tuition படிக்க மாணவர்கள் தேவை. யாராவது இருந்தால் சொல்லுங்கள் ராஜநாயஹம் சார்"

சத்யேந்திராவின் சிரித்த முக தீர்க்கமான பார்வை நெஞ்சை பிசையும். பாவப்பட்ட ஜீவன் என்பதற்கு மிக பொருத்தமான மனிதர். 

எங்கே எந்த கூட்டத்திலும் சத்யேந்திரா பிரசன்னம்.

ஃபேஸ்புக் ஸ்டோரியில் வித்தியாசமான முக பாவனைகள் காட்டியதை மறக்க முடியாது.

இதெல்லாம் எல்லோருக்குமா வாய்க்கும்?

முன்பு மனோரமா எப்போதும் 
 தமிழக முதல்வர்களோடு இருந்த rapport பற்றி பெருமையா சொல்லிக்கிட்டே இருப்பாரு.
விஜயோடு மனோரமா நடித்திருக்கிறார். இன்னைக்கு இருந்தா இவரையும் சேர்த்திருப்பார்.

இப்ப சிவகுமார்  நான்கு தமிழக முதல்வர்களோடு திரைப்பயணம் பற்றி பெருமையா பேசியிருக்கிறார் .இனி இத பேசிக்கிட்டே இருப்பாரு.

May 25, 2026

Cinema Enum Bootham serial 218,219 Episodes


218, 219 Episodes

R.P. Rajanayahem 
Cinema Enum Bootham serial 

27th May Shooting in 
Kalaignar TV 

1. S.P. Sailaja 

2. Sujatha Mohan

May 24, 2026

காஞ்சியிலே நேத்து.....

காஞ்சியிலே நேத்து....சொல்லட்டுமா இன்று
- R.P. ராஜநாயஹம் 

சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் தன் 80வயதில் என்னை நண்பராக ஏற்றவர்.
பழனியில் என் வீட்டுக்கு மாமியுடன்  வந்திருந்த போது இரவில் பேசிக்கொண்டிருக்கையில் பரமாச்சாரியாள் பற்றி சொன்னார். அவருடைய ஐம்பத்தைந்து வயது வரை பூஜை,புனஸ்காரங்கள்,அனுஷ்டானங்கள் இன்றி இருந்தவர். ஆல் இண்டியா ரேடியோவிற்காக பரமாச்சாரியாளை சந்தித்தவர் அன்று தொடங்கி அவருடைய அத்தியந்த பக்தராக மாறியிருக்கிறார்.என் மீது அவருக்கு உள்ள அபிமானத்தில் நானும் பரமாச்சாரியாளை சங்கர மடத்திற்கு வந்து தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். நானும் அப்போது ஆத்திகன் என்பதால், ஆன்மீகத்தேடல் தேவை என்ற பிரமையும் எனக்கு இருந்ததாலும் சம்மதித்தேன்.

செல்லும் வழியில் சிட்டி பரமாச்சாரியாள் பற்றி அவருடைய பல அனுபவங்களை சொல்லிக்கொண்டு வந்தார். வயோதிகம் காரணமாக உள்ள இயல்பான உபாதைகள் காஞ்சிக்கு செல்லும்போது தனக்கு எப்போதுமே இருந்ததில்லை என்றார். ஜெயேந்திர சரஸ்வதி பற்றி அவருக்கு கொஞ்சமும் நல்ல அபிப்ராயம் கிடையாது என்பதுடன் அவரை பிடிக்காது.ஆனால் குட்டிப்பெரியவாள் விஜயேந்திர சரஸ்வதி மேல் மிகுந்த நம்பிக்கை.பரமாச்சாரியாளின் சரியான வாரிசு இவர் தான் என்பதில் சிட்டிக்கு எந்த சந்தேகமும் இல்லை.

காஞ்சி மடத்தில் நுழைந்தவுடன் சிட்டி அங்கிருந்த அடிப்பொடி ஒருவனைத்தொட்டு “பரமாச்சாரியாள் எங்கே” என்றார். அவன் உடனே ஒதுங்கி கோபமாக “தொடாதே” என்றான்.

 என் முன்னால் சிட்டிக்கு ஏற்பட்ட இந்த அவமானம். ஆனால் மஹான்களைச் சுற்றி இப்படி அல்லக்கைகளின் அராஜகம் இருக்கத்தான் செய்யும்.

அப்போது அங்கே குட்டிப்பெரியவாளின் ஆசிரியர் வந்தார். அவர் சிட்டியின் நண்பர். அவரிடம் சிட்டி என்னை அறிமுகம் செய்தார். “இவர் ராஜநாயஹம்.தி.ஜானகிராமனின் ரசிகர்.” குட்டிப்பெரியவாளின் ஆசிரியரும் தி.ஜா வின் ரசிகர். மடத்திற்கு எதிரே உள்ள சிறு குளமருகே பெரிய பெரியவாள் பரமாச்சாரியாள் இருக்கிறார்.

அங்கே சென்றோம். சந்திரசேகரேந்திரர் இருந்தார்.கண்மூடி நிஷ்டையில்.என் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.தொண்டையில் விம்மலும்.

அவர் தியானத்தில் இருப்பதால் அவரோடு பேசமுடியாது.தேவையேயில்லை.பார்த்ததே போதும் என்ற திருப்தி நிலை தான்.

அங்கே ஒரு மணி நேரம் அமர்ந்தோம். புகைப்படம் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.எழுந்தோம்.பெரியவர் சிலை போலவே தான் இன்னமும் இருந்தார்.

மீண்டும் மடத்தில் நுழைந்தோம்.நடுப்பெரியவாள் அன்று மடத்தில் இல்லை. சிட்டி அதற்கு சந்தோஷப்படவே செய்தார்.
குட்டிப்பெரியவாளை பலர் சூழ்ந்திருந்தனர்.
அப்போது அவருக்கு 17,18 வயதிருக்கும். எல்லோரும் தெய்வ தரிசனப் பரவசத்தில் தான். சிட்டியைப் பார்த்ததும் “சிட்டி வா” என்றார். சிட்டி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

“இவர் ராஜநாயஹம் என் நண்பர். A voracious reader..”

விஜயேந்திரர் கனிவுடன் என்னைப்பார்த்து புன்னகைத்தபோது அணுக்கமும் வாத்சல்யமும் தெரிந்தது.

அங்கே ஒரு பெரியவர் சில ஸ்லோகங்களை உச்சரித்தார்.அதைக்கேட்ட விஜயேந்திரர் பரவசப்பட்டார். ஆகாகாரம் செய்தார்.

நான் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன்.

உடனே பிரக்ஞையுடன் அவர் ஆசி வழங்கும் நிலையில் நின்றார்.அவ்வப்போது தன் நெஞ்சில் கை வைத்து நின்றார். ஒரு ஏழெட்டு ஃப்ளாஷ்.

திரும்பி நடந்தார்.படியேறும்போது சத்தமாக “ராஜநாயஹம்”என்றார்.

உடனே அவர் பின் நின்ற ஆசிரியர் திரும்பி ஒடு நடையில்வந்து “ராஜநாயஹம் பெரிவா உங்களைக்கூப்பிடறார்”

அங்கிருந்த அத்தனை பிராமண குடும்பங்களும் என்னை பிரமிப்புடன் பார்த்தார்கள்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

நான் மாடிப்படியருகே சென்றேன். விஜயேந்திரர் நான்கைந்து படியேறிய நிலையில் “ ராஜநாயஹம், போட்டோஸ் அனுப்பி வையுங்கள்.” என்றார்.

லௌகீகம்!

நான் மீண்டும் கேமராவை முடுக்கினேன்.அவர் அடுத்தடுத்து சில வெவ்வேறான சாது போஸ் கொடுக்க ஆரம்பித்தார்.

“போட்டோஸ் அனுப்பி வையுங்கள்.”
எல்லா புகைப்படங்களுக்கும் பல பிரதிகள் அனுப்பி வைத்தேன்.

"மீண்டும் அம்மாவுடைய ஆட்சி"

Rip Van Winkle

If left to himself, 
he would have "WHISTLED" politics away, in perfect contentment.


சி.வி. சண்முகம் கண் முழிச்சி சொன்னார்.
"மீண்டும் அம்மாவுடைய ஆட்சி அமைய வேண்டும்"

சுதந்திர போராட்ட வீரருக்கு மந்திரி பதவி


வெள்ளையனே வெளியேறு இயக்க சுதந்திர போராட்ட வீரருக்கு 
முதல் முறையாக தமிழ் நாட்டில் 
மந்திரி பதவி.

"ஆங்கிலேயர் துப்பாக்கிக்கே பயப்படாதவர்கள் நாங்கள்" 
தமிழக காங்கிரஸ் அமைச்சர் இறுமாப்பு 

https://www.facebook.com/share/v/1CdFm4ACYc/

https://www.facebook.com/share/p/1CPrcZ8uSN/

May 22, 2026

வம்படி சோகம் - எனிக்கு இஷ்டமில்லா



வன்னியரசு மொகத்துல என்னா சோகம்..
"வம்படி சோகம்" 
வலிய  முகத்தில் ஏற்றி தருவித்துக்கொண்ட சோகத்தைப்பற்றி  மதுரை வட்டாரத்தில சொல் வழக்கு 
"வம்படி சோகம்"

May 20, 2026

சிலை


லக்ஷ்மி நாராயணா ஹோட்டல்

லக்ஷ்மி நாராயணா ஹோட்டல். வெஜிடேரியன்.  முட்டை மட்டுமே.
கோவை சிங்காநல்லூர் ரோடு வரதராஜபுரத்தில்.
பிரபலமான சின்ன உணவகம். புரோட்டா சாப்பிட்ட போது  உரிமையாளர் கண்ணனின் நெருங்கிய உறவினர் இயக்குநர் R. சுந்தர்ராஜன் என்பதை சொன்னார். 
கண்ணனின் அப்பா பெயர் R. சுந்தர்ராஜ். 
பூர்வீக வீட்டின் முன்பகுதியில் தான் கடை.
இந்த வீட்டில் கூட்டுக் குடும்பமாக இயக்குநர் சுந்தர்ராஜன் இருந்திருக்கிறார்.

ஹோட்டல் பற்றி சுவாரஸ்யமான செய்தி எளனி கடைக்காரர் சொன்னார்.
அந்த பழைய காலத்தில் மொதலாளி கல்லா பக்கத்திலேயே எண்ணெய், முட்டைகள் வைத்திருப்பார். சமையல்காரர் தேவையானதை அவ்வப்போது தான் வாங்கிக்கொள்ள வேண்டும்.

May 15, 2026

ஜோஸ்யர் அரசு பதவி



ஜோஸ்யம் 
ஜோஸ்யர் அரசு பதவி புட்டுக்கிச்சா 


ஊருக்கு சொல்லுமாம் பல்லி 
கழனி பானையில் விழுமாம் துள்ளி 

The fault is not in our stars, but in ourselves, that we are underlings."
- Shakespeare 

We  are masters of our own destinies rather than victims of fate or cosmic forces.

ராஜலட்சுமி மாமி - திஜா திருமதி

தி.ஜா கட்டிய தாலி

1989ல்  ஒரு கடிதம். டெல்லியிலிருந்து சாகேத ராமன் இதை ராஜநாயஹத்திற்கு எழுதியிருந்தார்.

தி.ஜானகி ராமனின் மூத்த மகன்.

" அப்பா இறந்து ஏழு வருடமாகி விட்டது . ஆனால் இன்னும் க .நா .சு வும் இந்திரா பார்த்தசாரதி யும் எங்களிடம் துக்கம் விசாரிக்க வரவே இல்லை '' என்று ரொம்ப வருத்தப்பட்டு எழுதியிருந்தார். Irony என்னவென்றால் க.நா.சு. இறந்து (டெல்லியிலே தான் ) அப்போது ஒரு வருடம் ஓடிவிட்டது என்பது தான்.
 உடனே "சான்சேஇல்லை . க.நா.சு .இறந்துவிட்டார்''என்று சாகேத ராமனுக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தினேன்.

சாகேத ராமனின் வருத்தம் பற்றி அப்போது புதுவையிலிருந்த இந்திரா பார்த்தசாரதியிடம் கேட்டேன்." எனக்கு இந்த சம்பிரதாயங்களில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது"என்று சொல்லிவிட்டார் .

இன்னொரு சம்பிரதாய மீறல்.
திருமதி தி.ஜா தன் கணவர் இறந்த பின் தாலியை கழுத்திலிருந்து கழட்டித்தர மறுத்து விட்டாராம். 
"அவர் கொடுத்ததை நான் எதற்காக கழட்டி தரனும் . நான் மாட்டேன்" என்று பிடிவாதமாக ராஜலட்சுமி மாமி மறுத்து விட்டாராம்.  இறக்கும் வரை தன் தாலியோடு தான் இருந்தாராம்.

சாகேதராமன் இறந்த விஷயம் சிட்டி சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது.

தி.ஜானகிராமனை நேரில் 
R.P. ராஜநாயஹம் சந்தித்ததில்லை. 

தி.ஜா. நினைவு மதிப்பீட்டு மடல் ராஜநாயஹம் வெளியிட்டு அதன்காரணமாகவே புதுவை பல்கலைக்கழகத்தில் தி.ஜா. கருத்தரங்கம் நடைபெற்றது.
அந்த கருத்தரங்கம் பற்றி விரிவாக விவரங்கள் சாகேதராமனுக்கு தபாலில் அனுப்பி வைத்த போது  ராஜநாயஹத்திற்கு தன் ஆசியை ராஜலட்சுமி மாமி 
தன் மகன் சாகேதராமன் மூலமாக தெரிவித்திருந்தார்.

புகைப்படத்தில் 
ராஜலட்சுமி மாமி. திருப்பூர் கிருஷ்ணன் பதிவில் புகைப்படம் பார்த்தேன். 
தெளிவில்லாமல் இருந்ததால் Chatgptயில் Enhance செய்து தி.ஜா மகள் உமா சங்கரி அக்காவுக்கு அனுப்பினேன்.
அவரிடம் தாயின் புகைப்படம் வேறு எதுவும் இல்லை. அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி.
ராஜநாயஹம் அனுப்பிய இந்த புகைப்படத்தை பெரிதாக்கி ஃபிரேம் செய்து வீட்டில் வைக்க இருக்கிறார்.

May 12, 2026

சட்டமன்ற சபாநாயகர்


இன்றைய சட்டமன்ற சபாநாயகர் 
ஜே.சி.டி. பிரபாகரன் பற்றி முதன் முதலில் கேள்விப்பட்ட நிகழ்வை காலக்கண்ணாடி காட்டுகிறது.

அப்போதெல்லாம் வில்லிவாக்கம் பிரபாகரன்.
தமிழகத்தில் அன்றைய பெரிய தொகுதியான வில்லிவாக்கம் எம்.எல்.ஏ.

ஈகா தியேட்டருக்கு பின்புறம் இருந்த ப்ரொஃபசர் சுப்ரமணியம் தெருவில் இருந்த முஸ்லிம் எஜுகேஷனல் சொசைட்டி ஹாஸ்பிடலில் அப்போது தங்கியிருந்த போது 
வக்கீல் அக்பர் அலி இந்த பிரபாகரன் பற்றி சொன்னார். 
கல்லூரியில் எப்போதும் எம்ஜிஆர் பற்றியே தான் உரையாடும்போதெல்லாம் பேசுவாராம்.
எம்ஜிஆரின் அத்தியந்த பக்தன் பிரபாகரன். கல்லூரி திமுக மாணவர்கள் இவரை அடையாளமிட சொல்வது 
' எம்ஜிஆர் வெறியன்' .



எம்ஜிஆர் சிவாஜி இருவருக்கும் மூர்க்கமான ரசிகர்கள்.

வக்கீல் ஜாஃபர் அலி ராஜநாயஹத்தை 'டைரக்டர்' என்றே சொல்வார். 
சினிமா அசிஸ்டெண்ட் டைரக்டர் எம்.இ.எஸ் ஹாஸ்டலுக்கு டைரக்டர் தான்.

பின்னாளில் செங்கல்பட்டு ஜட்ஜாக அக்பர் அலி இருந்த போது சங்கராச்சாரியாரை சிறை வைத்தவர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி 
அக்பர் அலி. 

ஜஸ்டிஸ் அக்பர் அலி பற்றி எழுதியதுண்டு.

The Other woman - Significant Other

"The Significant Other" என்ற வார்த்தை ஆங்கில சேனலில் கேட்க நேர்ந்தது.

ராஜநாயஹம் பல வருடங்களுக்கு முன்பு எழுதிய " The Significant Other" 
'தழல் வீரம்' நூலில் இடம் பெற்றிருக்கிறது.

வி.என்.ஜானகி - ஜெயலலிதா அரசியல் போட்டியில் Power Monger ஆக ஜெயலலிதா விஸ்வரூபமெடுத்து ‘கட்சி' அவர் கைவசமாக ‘தொண்டர்கள்' காரணமான விஷயம் பற்றி பேச்சு வந்தது. அப்போது இ.பா. சொன்னார். ‘ நம்முடைய கலாச்சாரம்' அப்படி. யாராவது 'ருக்மணி கிருஷ்ணன்' என்று பெயர் வைக்கிறார்களா? ‘ராதா கிருஷ்ணன்' என்ற பெயர்தானே பிரபலம். 
இ.பா. இப்படி ராஜநாயஹத்தை கேட்டார்.

யோசித்துப் பார்க்கும்போது சுவாரசியமாக இருந்தது. ஆமாம் முன்னாள் ஜனாதிபதி முதல் இன்னாள் ஆபீஸ்பாய் வரை ராதாகிருஷ்ணன் என்ற பெயர் அமைந்தவர்கள்தான்.
The other Woman is Always Powerful.

ராதா என்ற அந்தப் பெண் கிருஷ்ணனுக்கு அத்தை முறை. இன்னொருவனின் மனைவி. கிருஷ்ணனை விட ஏழு வயது மூத்தவள். ஆனால் கிருஷ்ணனுக்கு ராதா மேல் தான் ப்ரீதியும் பிரேமையும் மிக அதிகம்.

"ஏகாதசி தோசையும் இளையகுடியா மாகையும்"
ராஜநாயஹத்திடம் கி.ரா சொன்னார். அவரே விளக்கம் சொன்னார்.
ருசி சம்பந்தப்பட்டது. முக்கியத்துவம் குறித்தது.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முடியும்போது அந்த காலத்தில் தோசை சாப்பிடுவார்கள். நல்ல பசியில் இருக்கும்போது சாப்பிடும் தோசை ருசி எப்படி இருக்கும்.

இளைய குடியா - இரண்டாவது மனைவி, அபிமான தாரம்.
மாகை - மாய்கை
அபிமான தாரம் போடும் தலையணை மந்திரம், சொக்குபொடி - இதன் சக்தி, சுவை,  முக்கியத்துவம் ..
'என்ன மாயம் போட்டா .. இவன் ஆளே மாறிட்டானே '- கிழவிகள் முனுமுனுப்பு.
...

The other woman is always powerful.

ராதாகிருஷ்ணன்னு தானே பெயர் வச்சுகிறான் . எவனாவது ருக்மிணி கிருஷ்ணன்னு பேர் வச்சிக்கிறானா?

.
ரெண்டாவது பொண்டாட்டி பேரை தான் முதல்ல சொல்ற வழக்கம் இங்கே.
முருகனோட ரெண்டு பொண்டாட்டிங்க
  " வள்ளி -தெய்வானை."

https://www.facebook.com/share/p/1CZDgPK4e5/

May 8, 2026

Something is rotten in Tamil Nadu









தமிழக அரசியல் நிலைமை பார்க்கும் போது ஜனாதிபதி ஆட்சி என்று தீர்மானிக்கப்பட்டால் 
மிக மோசமான சூழல்.

ஒரே ஒரு தொகுதியில் ஜெயித்த பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 
மறைமுக ஆட்சி என குறிப்பிடுவது அபத்தம்.

தமிழ் நாட்டில் செல்வாக்கில்லாமல்
நீசமடைந்துள்ள பா.ஜ.க.வுக்கு 
நீசபங்க ராஜயோகம்.

அண்ணாமலை, தமிழிசை, வானதி இவர்களெல்லாம் கவர்னருக்கு அறிவிக்கப்படாத அமைச்சர் பெருமக்கள்.
பொறுப்பு ஆளுநர் பொறுப்பை 
பெரும் பொறுப்பாக பகிர்ந்து ஏற்றுக்கொள்வார்கள்.
Governer is always the puppet of BJP.

இந்த அபத்தம் தான் பெருந்துயரம்.
Everything is rotten.

Something is rotten in the state of Denmark 
- Shakespeare 

பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைத்த திமுகவையே படுத்திய பாடு கண் முன்னே.

https://www.facebook.com/share/p/1FjEjn32dL/

May 7, 2026

அளந்து வைக்கப்பட்ட வால்

ஆட்டுக்கு அளந்து வைக்கப்பட்ட வால் 

ரொம்ப நெடு நெடுன்னு வளந்த ஆள் "டேய், நாங்க வந்தப்பறம் உங்களுக்கெல்லாம் இருக்குடா"

May 5, 2026

சந்திரபாபு பின்னணி பாடகராக

சந்திரபாபு பின்னணி பாடல்கள் 

'அந்தமான் கைதி' 1952ல் வந்தது. அதில் எம்ஜிஆர் சிகரெட் குடிக்கிற காட்சி இருந்தது. 
சந்திரபாபு இதில் பின்னணி குரல் பாடல் உண்டு. 
குண்டு கருப்பையாவுக்கு பின்னணி பாடகர் சந்திரபாபு.
" I love you, I love you ஆசையானேனே உன் மேலே 
Come here my dear கண்டதே இல்லை உன் போலே 
புது பொண்டாட்டியே ஆசை கண்ணாட்டியே இனி கொண்டாட்டமே லைஃப்லே"

இந்த பாடலுக்கு பாடுவதாக நடித்த நடிகர் குண்டு கருப்பையா. அங்கமுத்துவுடன் சேர்ந்து ஆடிப்பாடுவதாக காட்சி.

 குண்டு கல்யாணத்தின் அப்பா இவர்.

'நான் யார் தெரியுமா' (1967)வில் 
கே.கே. சௌந்தர் போல இவரும் கொளள்ளைக்கூட்டத்தில் ஒருவராக நடித்தார்.

சந்திரபாபு பின்னணி பாடகராக 
'பெண்' ணில் எஸ் பாலச்சந்தருக்காக
 " உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளையாகி மணமாலை சூடிட கல்யாணம், கல்யாணம் " பாடல் பாடினார் என்பதும் 
'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' யில் சிவாஜி கணேசனுக்கு " ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தாலி கட்டினால் ஜாலி லைஃப்" பின்னணி பாடினார் என்பதும் தெரிந்த விஷயம்.

சொந்தக்குரலில் பாடி நடித்த சந்திரபாபுவுக்கு பின்னணியாக 'சபாஷ் மீனா'வில் சீர்காழி கோவிந்தராஜன் 
 " அலங்காரவல்லியே அல்லியே..ஆசைக்கிளியே கோபமா?" பாடியதுண்டு.

'பறக்கும்பாவை'   
"சுகம் எதிலே இதயத்திலா?" பாடலில் ஜேசுதாஸ் பின்னணி பாடியிருக்கிறார்.
" ஆசை உண்டாக காரணம் யாரோ? அழகான பெண்களா?"

ஏவிஎம் 'அன்னை' 
நாகேஷ் சந்திரபாபு 
லைலா மஜ்னு நாடகத்தில்
 TM சௌந்தர்ராஜன் 
பின்னணி பாடகராக 
'லைலா லைலா'
மஜ்னுவாக சந்திரபாபு. 
நாகேஷ் லைலா.


May 4, 2026

Time's deformed hands


Time's deformed hand has written strange defeatures in face.
Memory holds a seat In this distracted globe..

- Shakespeare

தாய்க்கிழவியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதியும்

யார் வாழ்வு தான் சதம்?
சிறை மீண்டு ராதா மீண்டும் சோபிக்கவில்லை. 
விதிவிலக்கு கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய தசாவதாரம். ராதா இரண்யனாக சிறப்பாக நடித்தார். அவருக்கேத்த ரோல்.சௌகார் ஜானகி ஜோடி.

ஷூட்டிங் பார்க்க வந்த  M.R. ராதாவின் மகள்கள்.
தாய்க்கிழவியும் 
பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதியும்.

https://www.facebook.com/share/p/1KQsHB9xUq/

HISTORY erased

Blow, blow,  wind, you are not so unkind as man's ingratitude.

This is the most unkindest cut 

Shakespeare 

ingratitude, arrogance, and dishonesty

அற்புத தலைவருக்கு நிகழும் சிறுமை 

Ungratefulness erases HISTORY

May 3, 2026

கே.கே. சௌந்தர்

கே.கே. சௌந்தர் 
- R.P. ராஜநாயஹம் 

கொள்ளைக்கூட்டக்காரனாக நடிப்பார்.
'நான் யார் தெரியுமா' 
ஒன் தங்கச்சி எனக்கு வேணும் என்பதை 
"ஒன் தங்கச்சி..ஒன் தங்கச்சி" 
பழைய நடிகை ராதாவிடம் வழிவது.

 போலீஸ் உயர் அதிகாரியாகவும் வருவார். 'நான்' நாகேஷூக்கு சுப்பீரியர்.

'எங்க வீட்டு பிள்ளை' சினிமா டைரக்டர்.

சௌந்தர் சொல்வார் "ஏதேனும் அவசர பொருளாதார உதவி தேவைப்பட்டால் ஊரில் எம்ஜிஆர் இல்லாமல் போனால் துணை நடிகர்கள் நாங்கள் 
ஜெய்சங்கரிடம் தான் போவோம்" 


ரொம்ப பின்னாளில் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் போஸ்டரில் இடம் கிடைத்தது.

என்னத்த கன்னையா இதை நினைவு கூர்ந்து " அண்ணா ( இயக்குநர் ராமண்ணா) இப்படியெல்லாம் எனக்கு செய்யவில்லை. போஸ்டரில் போடவில்லை" என்றார். 'நான்', 'மூன்றெழுத்து' படங்களில் செய்திருக்கலாம் என்பது கன்னையா ஆதங்கம்.

இயக்குநர் பாக்யராஜ் 'ஒரு கை ஓசை'
'முந்தானை முடிச்சு' 'சின்ன வீடு' லல்லாம் சௌந்தருக்கு கவனிக்கும் படியாக ரோல் கொடுத்தார். 
ராசுக்குட்டி படத்தில் ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என பாக்யா ஆஃபிஸில் வந்து காத்திருந்தார். கிடைக்கவில்லை.
அவருகேற்ற ரோல் அதில் இல்லை.

'நான் யார் தெரியுமா' படத்து 
" ஒன் தங்கச்சி.. ஒன் தங்கச்சி" டயலாக் பேசிக்காட்டி ஞாபகப்படுத்தினேன்.
'நடிகை ராதாவிடம் பேசிய டயலாக்' என்று பக்கத்தில் இருந்த பி.வி. பாலகுருவிடம் நினைவு கூர்ந்தார்.

ஜமுனா கழுத்துல வெண்ணிற ஆடை நிர்மலா கண்ணில

ஜமுனாவுக்கு முதுமையில் கழுத்து ரொம்பவே நடுங்கும். 
"அன்புள்ள மான் விழியே" பாடலில் வைக்கோல் போரில் நடிக்கும் போது கழுத்தில் பலமாக அடி பட்டிருக்கிறது.
 டைரக்டர் (கிருஷ்ணன்) பஞ்சு பயங்கர கோபக்காரர். கழுத்தில் அடி பட்ட விஷயத்தை  பஞ்சு சாரிடம் சொல்ல பயந்து கடுமையான வலியுடன் நடித்திருக்கிறார். 
கழுத்து வலியை சரி செய்ய எவ்வளோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை.

பாலச்சந்தரின் 'பூவா தலையா' படத்தில் 
"அடி சரி தான் போடி வாயாடி சண்டைக்கு நீயா சரி ஜோடி" பாடலில் வெண்ணிற ஆடை நிர்மலா கண்ணில் அடி பட்டு பார்வையில் நிரந்தரமாக பாதிப்பு ஏற்பட்டு விட்டது.

Apr 30, 2026

Sarcasm in R.P. Rajanayahem write ups


R.P. Rajanayahem write ups 

NunthaaKumaran Raajaa :

"You are beautifully churning sarcasm into a charming literary standard"

https://www.facebook.com/share/p/1GTF7tkzGt/

Cashew nut

"Sweetest nut hath sourest rind".

William Shakespeare

The best things in life often have difficult.

மா. அரங்கநாதன் கேள்வி 
"முந்திரிப் பருப்பு சாப்பிடாதவன் வாழ்வென்ன வாழ்வா?"

நெத்தியடிகேள்வி

Cashew nut is such a delicious dish one cannot refuse to take it, incredibly versatile and yummy.

Cashew to my crunchy heart.

Apr 29, 2026

செய்வினை ஏவல்

ரெண்டு முருக பக்தர்கள். 
ரெண்டு பேருமே திருச்செந்தூர் முருக தரிசனம் மாதா மாதம் செய்பவர்கள். ரெண்டு பேருமே பரம எதிரிகள்.

’இவன் விளங்காத பய’ என்று அவனும் 
“ வீணாப்போனவன் ” என்று இவனும் ஒருவரையொருவர் பரஸ்பரம் தூற்றிக்கொள்பவர்கள்.

ஒவ்வொரு தடவையும்  புது பொம்பளையோடு தான் திருச்செந்தூர் போவார்கள். முதல் நாளே போய் ரூம் போட்டு தங்குவார்கள். 
‘தெங்கு’வார்கள்.
மறுநாள் காலை சன்னதியில் நின்று முருகா முருகா என்று உருகுவார்கள். பக்கத்தில் நிற்கிற புது பொம்பளையும் கண்மூடி பக்தி வெள்ளத்தில் மிதப்பாள்.

  முருகக்கடவுள் “ ஏம்ப்பா… இப்படி கோவிலுக்கு என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் புதுசு புதுசா தள்ளிக்கிட்டு வர்ரீங்களேடா.. 
இது நல்லாவா இருக்கு..” ன்னு கேட்க மாட்டாரா? என இந்த இரண்டு முருகபக்தர்களை அறிந்தவர்கள் பேசிக்கொள்வார்கள்.

முருகா ஷண்முகா வேலாயுதா 
கே.ஆர். விஜயா புருஷா

மீள்

......
 

இது வேலாயுத நாயர் பற்றிய பதிவு அல்ல.
இவர்கள் இருவருமே சினிமாவில் இருந்தவர்கள் இல்லை.
இரண்டு நகைக்கடை அதிபர்கள்.
சென்னை நகைக்கடை அதிபர்கள் அல்ல.
வேறு ஊர்.

திருச்செந்தூர் சாமியை முருகா ஷண்முகா வேலாயுதா என்றதும் associate memory கே. ஆர். விஜயா பிரபலமான வீட்டுக்காரர் வேலாயுதம் ஞாபகம் இரண்டு முருக பக்தர்களுக்கும் spontaneous ஆக வருகிறது. 
R.P. ராஜநாயஹம் எழுதிய பழைய பதிவு.

இப்போது மீண்டும் போட காரணமும் விளக்க வேண்டுமா? அது எல்லோருக்கும் புரியும் என்பதால் சொல்லத்தேவையேயில்லை.
சரி அதையும் விளக்க வேண்டியது தானா?

த்ரிஷா புருஷன் ஜோசப்பின் திருச்செந்தூர் சத்ரு சம்ஹார பூஜை
 ( செய்வினை ஏவல் வைக்கிற வேலை) செய்தி கேள்விப்பட்டதும் current news க்கு relevance இருக்கிறதே என்று பரணில் இருந்து எடுத்து போடப்பட்டிருக்கிறது.

த்ரிஷா ப்ருஷா. செய்வினை ஏவல் யாருக்கும் தெரியாமல் ரகசியமா வக்கிறதுன்னு கேள்வி. இப்படி இவ்வளவு பகீரங்கமாவா?


https://www.facebook.com/share/p/1aQPUNYF6k/

Apr 22, 2026

திமுக வெற்றி உறுதி

திமுக வெற்றி உறுதி 
தனிப் பெரும்பான்மை ஆட்சி 

Cinema Enum Bootham 214, 215 Episodes


214th, 215th episodes 

R.P. Rajanayahem 
Cinema Enum Bootham TV serial 

Murasu TV 

05. 05. 2026 Sunday 
12. 05. 2026 Sunday 

Morning 
8.30 am

1. Karthik Raja 



2. Srinivas