Share

May 15, 2026

ஜோஸ்யர் அரசு பதவி



ஜோஸ்யம் 
ஜோஸ்யர் அரசு பதவி புட்டுக்கிச்சா 


ஊருக்கு சொல்லுமாம் பல்லி 
கழனி பானையில் விழுமாம் துள்ளி 

The fault is not in our stars, but in ourselves, that we are underlings."
- Shakespeare 

We  are masters of our own destinies rather than victims of fate or cosmic forces.

ராஜலட்சுமி மாமி - திஜா திருமதி

தி.ஜா கட்டிய தாலி

1989ல்  ஒரு கடிதம். டெல்லியிலிருந்து சாகேத ராமன் இதை ராஜநாயஹத்திற்கு எழுதியிருந்தார்.

தி.ஜானகி ராமனின் மூத்த மகன்.

" அப்பா இறந்து ஏழு வருடமாகி விட்டது . ஆனால் இன்னும் க .நா .சு வும் இந்திரா பார்த்தசாரதி யும் எங்களிடம் துக்கம் விசாரிக்க வரவே இல்லை '' என்று ரொம்ப வருத்தப்பட்டு எழுதியிருந்தார். Irony என்னவென்றால் க.நா.சு. இறந்து (டெல்லியிலே தான் ) அப்போது ஒரு வருடம் ஓடிவிட்டது என்பது தான்.
 உடனே "சான்சேஇல்லை . க.நா.சு .இறந்துவிட்டார்''என்று சாகேத ராமனுக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தினேன்.

சாகேத ராமனின் வருத்தம் பற்றி அப்போது புதுவையிலிருந்த இந்திரா பார்த்தசாரதியிடம் கேட்டேன்." எனக்கு இந்த சம்பிரதாயங்களில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது"என்று சொல்லிவிட்டார் .

இன்னொரு சம்பிரதாய மீறல்.
திருமதி தி.ஜா தன் கணவர் இறந்த பின் தாலியை கழுத்திலிருந்து கழட்டித்தர மறுத்து விட்டாராம். 
"அவர் கொடுத்ததை நான் எதற்காக கழட்டி தரனும் . நான் மாட்டேன்" என்று பிடிவாதமாக ராஜலட்சுமி மாமி மறுத்து விட்டாராம்.  இறக்கும் வரை தன் தாலியோடு தான் இருந்தாராம்.

சாகேதராமன் இறந்த விஷயம் சிட்டி சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது.

தி.ஜானகிராமனை நேரில் 
R.P. ராஜநாயஹம் சந்தித்ததில்லை. 

தி.ஜா. நினைவு மதிப்பீட்டு மடல் ராஜநாயஹம் வெளியிட்டு அதன்காரணமாகவே புதுவை பல்கலைக்கழகத்தில் தி.ஜா. கருத்தரங்கம் நடைபெற்றது.
அந்த கருத்தரங்கம் பற்றி விரிவாக விவரங்கள் சாகேதராமனுக்கு தபாலில் அனுப்பி வைத்த போது  ராஜநாயஹத்திற்கு தன் ஆசியை ராஜலட்சுமி மாமி 
தன் மகன் சாகேதராமன் மூலமாக தெரிவித்திருந்தார்.

புகைப்படத்தில் 
ராஜலட்சுமி மாமி. திருப்பூர் கிருஷ்ணன் பதிவில் புகைப்படம் பார்த்தேன். 
தெளிவில்லாமல் இருந்ததால் Chatgptயில் Enhance செய்து தி.ஜா மகள் உமா சங்கரி அக்காவுக்கு அனுப்பினேன்.
அவரிடம் தாயின் புகைப்படம் வேறு எதுவும் இல்லை. அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி.
ராஜநாயஹம் அனுப்பிய இந்த புகைப்படத்தை பெரிதாக்கி ஃபிரேம் செய்து வீட்டில் வைக்க இருக்கிறார்.

May 12, 2026

சட்டமன்ற சபாநாயகர்


இன்றைய சட்டமன்ற சபாநாயகர் 
ஜே.சி.டி. பிரபாகரன் பற்றி முதன் முதலில் கேள்விப்பட்ட நிகழ்வை காலக்கண்ணாடி காட்டுகிறது.

அப்போதெல்லாம் வில்லிவாக்கம் பிரபாகரன்.
தமிழகத்தில் அன்றைய பெரிய தொகுதியான வில்லிவாக்கம் எம்.எல்.ஏ.

ஈகா தியேட்டருக்கு பின்புறம் இருந்த ப்ரொஃபசர் சுப்ரமணியம் தெருவில் இருந்த முஸ்லிம் எஜுகேஷனல் சொசைட்டி ஹாஸ்பிடலில் அப்போது தங்கியிருந்த போது 
வக்கீல் அக்பர் அலி இந்த பிரபாகரன் பற்றி சொன்னார். 
கல்லூரியில் எப்போதும் எம்ஜிஆர் பற்றியே தான் உரையாடும்போதெல்லாம் பேசுவாராம்.
எம்ஜிஆரின் அத்தியந்த பக்தன் பிரபாகரன். கல்லூரி திமுக மாணவர்கள் இவரை அடையாளமிட சொல்வது 
' எம்ஜிஆர் வெறியன்' .



எம்ஜிஆர் சிவாஜி இருவருக்கும் மூர்க்கமான ரசிகர்கள்.

வக்கீல் ஜாஃபர் அலி ராஜநாயஹத்தை 'டைரக்டர்' என்றே சொல்வார். 
சினிமா அசிஸ்டெண்ட் டைரக்டர் எம்.இ.எஸ் ஹாஸ்டலுக்கு டைரக்டர் தான்.

பின்னாளில் செங்கல்பட்டு ஜட்ஜாக அக்பர் அலி இருந்த போது சங்கராச்சாரியாரை சிறை வைத்தவர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி 
அக்பர் அலி. 

ஜஸ்டிஸ் அக்பர் அலி பற்றி எழுதியதுண்டு.

The Other woman - Significant Other

"The Significant Other" என்ற வார்த்தை ஆங்கில சேனலில் கேட்க நேர்ந்தது.

ராஜநாயஹம் பல வருடங்களுக்கு முன்பு எழுதிய " The Significant Other" 
'தழல் வீரம்' நூலில் இடம் பெற்றிருக்கிறது.

வி.என்.ஜானகி - ஜெயலலிதா அரசியல் போட்டியில் Power Monger ஆக ஜெயலலிதா விஸ்வரூபமெடுத்து ‘கட்சி' அவர் கைவசமாக ‘தொண்டர்கள்' காரணமான விஷயம் பற்றி பேச்சு வந்தது. அப்போது இ.பா. சொன்னார். ‘ நம்முடைய கலாச்சாரம்' அப்படி. யாராவது 'ருக்மணி கிருஷ்ணன்' என்று பெயர் வைக்கிறார்களா? ‘ராதா கிருஷ்ணன்' என்ற பெயர்தானே பிரபலம். 
இ.பா. இப்படி ராஜநாயஹத்தை கேட்டார்.

யோசித்துப் பார்க்கும்போது சுவாரசியமாக இருந்தது. ஆமாம் முன்னாள் ஜனாதிபதி முதல் இன்னாள் ஆபீஸ்பாய் வரை ராதாகிருஷ்ணன் என்ற பெயர் அமைந்தவர்கள்தான்.
The other Woman is Always Powerful.

ராதா என்ற அந்தப் பெண் கிருஷ்ணனுக்கு அத்தை முறை. இன்னொருவனின் மனைவி. கிருஷ்ணனை விட ஏழு வயது மூத்தவள். ஆனால் கிருஷ்ணனுக்கு ராதா மேல் தான் ப்ரீதியும் பிரேமையும் மிக அதிகம்.

"ஏகாதசி தோசையும் இளையகுடியா மாகையும்"
ராஜநாயஹத்திடம் கி.ரா சொன்னார். அவரே விளக்கம் சொன்னார்.
ருசி சம்பந்தப்பட்டது. முக்கியத்துவம் குறித்தது.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முடியும்போது அந்த காலத்தில் தோசை சாப்பிடுவார்கள். நல்ல பசியில் இருக்கும்போது சாப்பிடும் தோசை ருசி எப்படி இருக்கும்.

இளைய குடியா - இரண்டாவது மனைவி, அபிமான தாரம்.
மாகை - மாய்கை
அபிமான தாரம் போடும் தலையணை மந்திரம், சொக்குபொடி - இதன் சக்தி, சுவை,  முக்கியத்துவம் ..
'என்ன மாயம் போட்டா .. இவன் ஆளே மாறிட்டானே '- கிழவிகள் முனுமுனுப்பு.
...

The other woman is always powerful.

ராதாகிருஷ்ணன்னு தானே பெயர் வச்சுகிறான் . எவனாவது ருக்மிணி கிருஷ்ணன்னு பேர் வச்சிக்கிறானா?

.
ரெண்டாவது பொண்டாட்டி பேரை தான் முதல்ல சொல்ற வழக்கம் இங்கே.
முருகனோட ரெண்டு பொண்டாட்டிங்க
  " வள்ளி -தெய்வானை."

https://www.facebook.com/share/p/1CZDgPK4e5/

May 8, 2026

Something is rotten in Tamil Nadu









தமிழக அரசியல் நிலைமை பார்க்கும் போது ஜனாதிபதி ஆட்சி என்று தீர்மானிக்கப்பட்டால் 
மிக மோசமான சூழல்.

ஒரே ஒரு தொகுதியில் ஜெயித்த பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 
மறைமுக ஆட்சி என குறிப்பிடுவது அபத்தம்.

தமிழ் நாட்டில் செல்வாக்கில்லாமல்
நீசமடைந்துள்ள பா.ஜ.க.வுக்கு 
நீசபங்க ராஜயோகம்.

அண்ணாமலை, தமிழிசை, வானதி இவர்களெல்லாம் கவர்னருக்கு அறிவிக்கப்படாத அமைச்சர் பெருமக்கள்.
பொறுப்பு ஆளுநர் பொறுப்பை 
பெரும் பொறுப்பாக பகிர்ந்து ஏற்றுக்கொள்வார்கள்.
Governer is always the puppet of BJP.

இந்த அபத்தம் தான் பெருந்துயரம்.
Everything is rotten.

Something is rotten in the state of Denmark 
- Shakespeare 

பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைத்த திமுகவையே படுத்திய பாடு கண் முன்னே.

https://www.facebook.com/share/p/1FjEjn32dL/

May 7, 2026

அளந்து வைக்கப்பட்ட வால்

ஆட்டுக்கு அளந்து வைக்கப்பட்ட வால் 

ரொம்ப நெடு நெடுன்னு வளந்த ஆள் "டேய், நாங்க வந்தப்பறம் உங்களுக்கெல்லாம் இருக்குடா"

May 5, 2026

சந்திரபாபு பின்னணி பாடகராக

சந்திரபாபு பின்னணி பாடல்கள் 

'அந்தமான் கைதி' 1952ல் வந்தது. அதில் எம்ஜிஆர் சிகரெட் குடிக்கிற காட்சி இருந்தது. 
சந்திரபாபு இதில் பின்னணி குரல் பாடல் உண்டு. 
குண்டு கருப்பையாவுக்கு பின்னணி பாடகர் சந்திரபாபு.
" I love you, I love you ஆசையானேனே உன் மேலே 
Come here my dear கண்டதே இல்லை உன் போலே 
புது பொண்டாட்டியே ஆசை கண்ணாட்டியே இனி கொண்டாட்டமே லைஃப்லே"

இந்த பாடலுக்கு பாடுவதாக நடித்த நடிகர் குண்டு கருப்பையா. அங்கமுத்துவுடன் சேர்ந்து ஆடிப்பாடுவதாக காட்சி.

 குண்டு கல்யாணத்தின் அப்பா இவர்.

'நான் யார் தெரியுமா' (1967)வில் 
கே.கே. சௌந்தர் போல இவரும் கொளள்ளைக்கூட்டத்தில் ஒருவராக நடித்தார்.

சந்திரபாபு பின்னணி பாடகராக 
'பெண்' ணில் எஸ் பாலச்சந்தருக்காக
 " உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளையாகி மணமாலை சூடிட கல்யாணம், கல்யாணம் " பாடல் பாடினார் என்பதும் 
'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' யில் சிவாஜி கணேசனுக்கு " ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தாலி கட்டினால் ஜாலி லைஃப்" பின்னணி பாடினார் என்பதும் தெரிந்த விஷயம்.

சொந்தக்குரலில் பாடி நடித்த சந்திரபாபுவுக்கு பின்னணியாக 'சபாஷ் மீனா'வில் சீர்காழி கோவிந்தராஜன் 
 " அலங்காரவல்லியே அல்லியே..ஆசைக்கிளியே கோபமா?" பாடியதுண்டு.

'பறக்கும்பாவை'   
"சுகம் எதிலே இதயத்திலா?" பாடலில் ஜேசுதாஸ் பின்னணி பாடியிருக்கிறார்.
" ஆசை உண்டாக காரணம் யாரோ? அழகான பெண்களா?"

ஏவிஎம் 'அன்னை' 
நாகேஷ் சந்திரபாபு 
லைலா மஜ்னு நாடகத்தில்
 TM சௌந்தர்ராஜன் 
பின்னணி பாடகராக 
'லைலா லைலா'
மஜ்னுவாக சந்திரபாபு. 
நாகேஷ் லைலா.


May 4, 2026

Time's deformed hands


Time's deformed hand has written strange defeatures in face.
Memory holds a seat In this distracted globe..

- Shakespeare

தாய்க்கிழவியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதியும்

யார் வாழ்வு தான் சதம்?
சிறை மீண்டு ராதா மீண்டும் சோபிக்கவில்லை. 
விதிவிலக்கு கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய தசாவதாரம். ராதா இரண்யனாக சிறப்பாக நடித்தார். அவருக்கேத்த ரோல்.சௌகார் ஜானகி ஜோடி.

ஷூட்டிங் பார்க்க வந்த  M.R. ராதாவின் மகள்கள்.
தாய்க்கிழவியும் 
பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதியும்.

https://www.facebook.com/share/p/1KQsHB9xUq/

HISTORY erased

Blow, blow,  wind, you are not so unkind as man's ingratitude.

This is the most unkindest cut 

Shakespeare 

ingratitude, arrogance, and dishonesty

அற்புத தலைவருக்கு நிகழும் சிறுமை 

Ungratefulness erases HISTORY

May 3, 2026

கே.கே. சௌந்தர்

கே.கே. சௌந்தர் 
- R.P. ராஜநாயஹம் 

கொள்ளைக்கூட்டக்காரனாக நடிப்பார்.
'நான் யார் தெரியுமா' 
ஒன் தங்கச்சி எனக்கு வேணும் என்பதை 
"ஒன் தங்கச்சி..ஒன் தங்கச்சி" 
பழைய நடிகை ராதாவிடம் வழிவது.

 போலீஸ் உயர் அதிகாரியாகவும் வருவார். 'நான்' நாகேஷூக்கு சுப்பீரியர்.

'எங்க வீட்டு பிள்ளை' சினிமா டைரக்டர்.

சௌந்தர் சொல்வார் "ஏதேனும் அவசர பொருளாதார உதவி தேவைப்பட்டால் ஊரில் எம்ஜிஆர் இல்லாமல் போனால் துணை நடிகர்கள் நாங்கள் 
ஜெய்சங்கரிடம் தான் போவோம்" 


ரொம்ப பின்னாளில் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் போஸ்டரில் இடம் கிடைத்தது.

என்னத்த கன்னையா இதை நினைவு கூர்ந்து " அண்ணா ( இயக்குநர் ராமண்ணா) இப்படியெல்லாம் எனக்கு செய்யவில்லை. போஸ்டரில் போடவில்லை" என்றார். 'நான்', 'மூன்றெழுத்து' படங்களில் செய்திருக்கலாம் என்பது கன்னையா ஆதங்கம்.

இயக்குநர் பாக்யராஜ் 'ஒரு கை ஓசை'
'முந்தானை முடிச்சு' 'சின்ன வீடு' லல்லாம் சௌந்தருக்கு கவனிக்கும் படியாக ரோல் கொடுத்தார். 
ராசுக்குட்டி படத்தில் ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என பாக்யா ஆஃபிஸில் வந்து காத்திருந்தார். கிடைக்கவில்லை.
அவருகேற்ற ரோல் அதில் இல்லை.

'நான் யார் தெரியுமா' படத்து 
" ஒன் தங்கச்சி.. ஒன் தங்கச்சி" டயலாக் பேசிக்காட்டி ஞாபகப்படுத்தினேன்.
'நடிகை ராதாவிடம் பேசிய டயலாக்' என்று பக்கத்தில் இருந்த பி.வி. பாலகுருவிடம் நினைவு கூர்ந்தார்.

ஜமுனா கழுத்துல வெண்ணிற ஆடை நிர்மலா கண்ணில

ஜமுனாவுக்கு முதுமையில் கழுத்து ரொம்பவே நடுங்கும். 
"அன்புள்ள மான் விழியே" பாடலில் வைக்கோல் போரில் நடிக்கும் போது கழுத்தில் பலமாக அடி பட்டிருக்கிறது.
 டைரக்டர் (கிருஷ்ணன்) பஞ்சு பயங்கர கோபக்காரர். கழுத்தில் அடி பட்ட விஷயத்தை  பஞ்சு சாரிடம் சொல்ல பயந்து கடுமையான வலியுடன் நடித்திருக்கிறார். 
கழுத்து வலியை சரி செய்ய எவ்வளோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை.

பாலச்சந்தரின் 'பூவா தலையா' படத்தில் 
"அடி சரி தான் போடி வாயாடி சண்டைக்கு நீயா சரி ஜோடி" பாடலில் வெண்ணிற ஆடை நிர்மலா கண்ணில் அடி பட்டு பார்வையில் நிரந்தரமாக பாதிப்பு ஏற்பட்டு விட்டது.