தனிப் பெரும்பான்மை ஆட்சி
Apr 22, 2026
Cinema Enum Bootham 214, 215 Episodes
214th, 215th episodes
R.P. Rajanayahem
Cinema Enum Bootham TV serial
Murasu TV
05. 05. 2026 Sunday
12. 05. 2026 Sunday
Morning
8.30 am
1. Karthik Raja
2. Srinivas
கேக்காமலே காதுல விழுந்தது
கேக்காமலே காதுல விழுந்தது
"எந்த சம்பந்தமுமில்லாதவிங்க
ஒட்டாத விஷயம் செஞ்சா சட்டயே பண்ணத்தேவயில்ல..
என்னத்த கொண்டாடி கொடமொடச்சா என்னா? எந்த திருவாலத்தானுக்கு சப்ப கொங்கானுங்க 'ஆப்பி பாப்பி பீப்பி' சாமரம் வீசுனா தான் என்ன?
போங்கடா ஜாட்டான்னு 'தூ'ன்னு துப்பிட்டு போய்ட்டே இருக்கனும்"
Apr 18, 2026
வேடிக்க - 62
மார்லன் ப்ராண்டோவோடு சிவாஜி கணேசன் ஒப்பிடப்படுவது?
மார்லன் ப்ராண்டோவுக்கு,
தான் என்ன செய்கிறோம் என்பது நன்றாகவே தெரியும்.
Apr 16, 2026
ஊட்டி வர்க்கி
ரொம்ப நாளைக்கு பிறகு பிரமாதமாக
ருசியான பலகாரம் சாப்பிட கிடைத்தது.
குன்னூர் மாடர்ன் ஸ்டோர்ஸ் மோடிஸ் Moddy's பேக்கரியில் கிடைத்த
'ஊட்டி வர்க்கி'.
இவ்வளவு காலத்தில்
வர்க்கி
ரொம்ப ரொம்ப சுவையா இப்ப தான் கிடைத்திருக்கிறது.
Ginger will be hot in the mouth too.
- Shakespeare
Pleasure is inherent. A refusal to become dull.
Lively, indulgent style.
சாப்பிட சாப்பிட இன்னும், இன்னும் என்று தான் இருக்கிறது. போதும் என்று தோன்றவேயில்லை.
என்னோடு திருச்சி செயிண்ட் ஜோசப்'ஸில் எட்டாம் வகுப்பில் படித்த குன்னூர் எஸ். சிரில் வின்சென்ட் இப்ப அங்க எப்படி இருக்கிறானோ?
ஊட்டி வர்க்கி ஃபேமஸ்
ஊட்டியில் Impala Bakery.
இம்பாலா பேக்கரி முதலாளி ஜஃப்பருல்லா பாயிடம செல் பேசினேன்.
https://www.facebook.com/100006104256328/posts/4468910899989008/?app=fbl
Apr 15, 2026
Movie Close up shot
Dialogue : "அவ உண்மையிலே 'Queen' தான்டா"
The milestones,
places,
that you pass in the harsh journey
R.P. Rajanayahem in Younger days
Apr 13, 2026
சுந்தர ராமசாமியும் R.P. ராஜநாயஹமும்
கல்லூரி தமிழில் பாடத்திட்டத்தில் தி.ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி பாடமாக வைக்கப்பட்டிருந்தது. பின்னாளில் தி.ஜாவின் பரமரசிகனாக முத்திரை குத்தப்பட்ட நான் அப்போது ‘அக்பர் சாஸ்திரி’ சிறுகதைத் தொகுப்பை புரட்டிக் கூட பார்ககவில்லை
பி.ஏ., பட்டப்படிப்பு ஆங்கில இலக்கியம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாமாண்டிலேயே ஜெயகாந்தனின் ‘ஒரு பிடிச் சோறு’ துவங்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரை அத்தனை நூல்களையும் படித்து முடித்து என் இயல்புபடி Revise செய்துவிட்டேன்.
English Fiction என்ற அளவில் James Hadleychase, Alistair Maclean, Denise Robins, Agathachristie என்று படித்துகொண்டிருந்தவன்
அப்போது தமிழில் மட்டும் ஜெயகாந்தனை முழுமையாக ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது முரண் நகையாகத் தோன்றுகிறது.
பி.ஏ. இரண்டாமாண்டு.
உடன் பிறந்த தம்பி அப்போது ‘பிரசாதம்’ என்ற புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தான். ‘சுந்தர ராமசாமி’ என்று பெயர் போட்டிருந்தது. அந்தப் புத்தகத்தை அசுவாரசியமாகப் புரட்டினேன்.
முன்னுரையை வாசித்தேன்.
‘வாழ்வின் கதி நதியின் பிரவாகம். நம்முடைய திட்டம், தத்துவம், அனுமானம், ஹேஸ்யம், ஜோஸ்யம் இத்தனைக்கும் ‘பெப்பே’ காட்டிவிட்டு ஓடுகிறது. எனக்கு என் வாழ்க்கை என்றாலே என் அனுபவம் மட்டும் தானே. ஆக, இது தான் வாழ்க்கை என்று நான் ‘பிடித்து’ வைத்துக் கோடு கீச்சுகிற போதே நான் சற்றும் எதிர்பாராத விதமாய், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணமாய் இவ்வுலகம் புதுக்கோலம் கொண்டு இயங்குகிறதே. அது தான் வாழ்க்கையா?’ என்றெல்லாம் விரிந்த அந்த முன்னுரை செயலோயச் செய்துவிட்டது.
முதல் சிறுகதை ‘பிரசாதம்’ படித்தவுடனே உற்சாகம் ஏற்பட்டது. ‘சன்னல்’ கதையைப் படித்து முடித்தபோது பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. கிணற்றுத் தவளை. நம்பிக்கை உடைந்து விட்டது.
அப்புறம் மறு நாள் தான் ‘லவ்வு’ கதையைப் படித்தேன். கிடாரி, ஒன்றும் புரியவில்லை,வாழ்வும் வசந்தமும் ஆகிய கதைகள் என்னை ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிட்டன. எல்லாக் கதைகளுமே ஸ்டாம்பு ஆல்பம், சீதை மார்க் சீயக்காய்த் தூள், மெய்+பொய்=மெய் எல்லாமே ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன. எதுவுமே சோடையில்லை.
SERENDIPITIOUS HAPPY DISCOVERY ! யார் இந்த சுந்தர ராமசாமி? ஜெயகாந்தனின் அத்தனை நூல்களிலுமிருந்து மாறுபட்ட உயர்ந்த வாசிப்பு அனுபவத்தை ஒரு சிறுகதைத் தொகுப்பிலேயே தந்து விட்ட சுந்தர ராமசாமி. ஜெயகாந்தனிடம் காணக் கிடைக்காத LITERARY CLEVERNESS வேறு தூக்கலாக இவரிடம் தெரிகிறது. இப்போது நினைக்கிறேன்.
வாசகனாக TRANSFORMATION
சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’ மூலமே கிடைத்தது.
......
மீள்பதிவு 2008
2005ல் சௌந்தர சுகன் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரையில் இருந்து.
22.02.2001ல் திருச்சி தமிழ் நாடு ஹோட்டலில் சுந்தர ராமசாமியிடம் பிரசாதம் செய்த மாயம் பற்றி சொன்ன போது இதை நீங்கள் எழுத வேண்டும் என்றார். ராஜநாயஹம் எழுத்தாளர்களுடனான அனுபவத்தை பதியச் சொன்னார்.
கடிதத்திலும் வலியுறுத்தினார்.
உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக எழுத வேண்டும் என்றார்.
சுந்தர ராமசாமி சொன்ன விஷயம் பற்றி பெரிய பிரமை எதுவும் இல்லை.
அந்த காலங்களில் இளைய வாசகர்களிடம், பலரிடம்
எப்போதுமே "எழுதுங்க" "எழுதுங்க" ன்னு சொல்வார்.
.
சுந்தர ராமசாமி "இறந்த காலம் பெற்ற உயிர்" நூலில் 'திண்ணைக்கு' கட்டுரையில் ராஜநாயஹம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த 'திண்ணைக்கு' கட்டுரை தான் சுந்தர ராமசாமி மீதான கடும் கசப்பு, கடுமையான பகைக்கான காரணமாக ஜெயமோகன் குறிப்பிட்டதுண்டு.
ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை' படித்து விட்டு உடனே சு.ரா எதிர் வினை
சுந்தர ராமசாமி : Dear R.P. Rajanayahem,
I am sorry to know that it was your turn this time to Receive Slanderous remarks.
I am being inflicted with peril and mental Agony 'For the past fifty years by this type of irresponsible remarks.
Apr 9, 2026
எத்தன சாமி வந்தாரோ எத்தன சாமி போனாரோ
கூத்தாடும் நினைவு
கூத்துப்பட்டறை ந. முத்துசாமியுடன்
R.P. ராஜநாயஹம்
எத்தன சாமி வந்தாரோ எத்தனை சாமி போனாரோ
அத்தன சாமி ஒன்னா சேந்து
முத்துசாமி
ஆனாரோ
உங்கள் கொள்கை என்ன என்ற கேள்விக்கு கடைசி வரை
'திராவிட கொள்கை'
என்ற ந.முத்துசாமி
உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் R.P. ராஜநாயஹம் பற்றி
உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
R.P. ராஜநாயஹம் பற்றி :
"ஒவ்வொருவரையும் கூகுள்செய்து கண்டறிந்து,
‘ஓ, இவரா… இவருக்குப்பின் இப்படியொரு கதையா’ என்று ஆச்சரியப்படும் வகையில் திரைத்துறையை ‘சினிமா எனும் பூதம்’ நூலில் அடக்கி நமக்குள் கடத்துகிறார்
R. P. ராஜநாயஹம்.
எண்ணிலடங்கா தகவல்களை எளிமையாக நேர்த்தியாக எப்படிச்சொல்ல முடிகிறது என மலைத்தேன்
இதில் ‘கலைந்த ஒப்பனை’ என்றொரு பகுதி. வேறொருவர் நடிக்க வேண்டியது, அவர் திடீரென இறந்ததால் அவ்வாய்ப்பு இவருக்கு வரும். நடித்துவிடுவார். அக்காட்சிகள் எடிட்டிங்கில் போய்விடும். அதைப் படிக்கும்போது ஒரு பக்கம் நகைச்சுவையாகவும், மறுபக்கம் எவ்வளவு போராட்டம் என்று வருத்தமாகவும் இருந்தது.
இதில் ‘movie connoisseur’ என்ற வார்த்தை பிரயோகம் வரும். அதாவது சினிமா வல்லுநர். உண்மையில் R. P. ராஜநாயஹம் ஒரு movie connoisseur. சினிமா குறித்து பலர் எழுதியிருந்தாலும் பலரும் மறந்த கலைஞர்களை நினைவுகூர்கிறீர்கள். வாழ்த்துகள் சார். நிறைய எழுதுங்கள்!"
...
மீள்பதிவு
Apr 8, 2026
எத்தன சாமி வந்தாரோ எத்தன சாமி போனாரோ
கூத்தாடும் நினைவு
கூத்துப்பட்டறை ந. முத்துசாமியுடன்
R.P. ராஜநாயஹம்
எத்தன சாமி வந்தாரோ எத்தனை சாமி போனாரோ
அத்தன சாமி ஒன்னா சேந்து
முத்துசாமி
ஆனாரோ
உங்கள் கொள்கை என்ன என்ற கேள்விக்கு கடைசி வரை
'திராவிட கொள்கை'
என்ற ந.முத்துசாமி
Apr 6, 2026
ஜெய்சங்கரிடம் ஃபோட்டோ வாங்கிய எம்ஜிஆர் ரசிகனான பொடியன்
ஜெய்சங்கரிடம் 'அன்புள்ள மான்விழியே' யில் இருந்த துறு துறுப்பு, Smartness ஹரநாத் ராஜாவிடம் 'அந்தால ஓ சிலக்கா'வில் கொஞ்சம் கூட இல்லை.
தமிழ் தெலுங்கு இரண்டிலுமே
ஜமுனா பூரணம் தான். Graceful .இயல்பான நளினம்.
பொடியனாக இருக்கும் போது ஜெய்சங்கருக்கு காலேஜ் ரோடு விலாசத்திற்கு கடிதம் எழுதியதுண்டு.
அவருடைய பதில் printed letter
" அன்புடையீர் வணக்கம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. என் கையொப்பமிட்ட புகைப்படம் இத்துடன் அனுப்பியிருக்கிறேன்.
அன்புடன்
ஜெய்சங்கர்
புகைப்படத்தில் கையெழுத்தும் அச்சிடப்பட்டிருந்தது.
திருச்சி செயிண்ட் ஜோசப்'ஸில்
ஜெய்சங்கரிடம் ஃபோட்டோ வாங்கினவன் என்ற பிரபலம்.
அப்போது எம்ஜிஆர் ரசிகன்.
( பெரியவனாகி வாக்குரிமை வந்த பின் எம்ஜிஆரின்அதிமுகவுக்கு வாக்களித்ததேயில்லை)
திமுக என்பதால் பாதிரியார் ஆண்டனி ராஜ் கோபமாக கேட்டார்" உன் தலைவன் கடவுளே இல்லை என்று சொல்பவர். தெரியுமாடா? அந்தோ, மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்து போனால் என்ன பயன்? "
" சின்னப்பையனா இருக்கும்போதே சினிமா நடிகருக்கு கடிதம் எழுதினாயாமே?"
பத்தாம் வகுப்பு படிக்கையில் கேட்டார்.
https://youtu.be/f-fL8CVz-HU?si=shUe9pTS7E8iXd_P
https://youtu.be/pLsSfxOEZ1g?si=w9Fa4XiNiZIrvGsN&sfnsn=wiwspwa
Apr 3, 2026
Bilal 'Bun Muska'
Bilal 'Bun Maska'
இதுவரை எத்தனை பன் மஸ்கா என்று கணக்கே எடுக்க முடியாது.
ரொம்ப பிடிக்கும்.
Chewing the food of sweet and bitter fancy.
William Shakespeare
சென்னைக்கு கலைஞர் டிவில 'சினிமா எனும் பூதம்' ஷூட்டிங் போனா break fast எப்பவுமே பிலால் பன் மஸ்கா தான்.
சுகர், பிரஸர் எதுவும் கிடையாது.
குழந்தைங்க சாப்ட்ற மாதிரி ஸ்வீட் ரசிச்சி சாப்டுறது வழக்கம்.
வித்தியாசமான விசித்திரமான விஷயம்.
காஃபி டீ சுகர் இல்லாம இருந்தா தான் பிடிக்கும்
அரவிந்தன்
கூத்துப்பட்டறை நாடகம் பார்க்க 2017ல் வந்திருந்த அரவிந்தனை கடைசியாக பார்க்க வாய்த்தது.
கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்ரமணியத்திடம் சுருக்கமாக
" ராஜநாயஹம் ரைட்டர்" என்றார்.
சென்னைக்கு 2015ல் வந்த தமிழ் இந்து பத்திரிகையில் ராஜநாயஹத்தின் சிலகட்டுரைகள் வெளியிட்டார். மேட்டிமைத்தன்மையுடன் அவர் பேச்சு.
பிரபலமான ஏப்பி நாகராஜன் ஆர்ட்டிக்கள் ஆரம்ப வரி " ஸ்த்ரீபார்ட் வேடம் போட்டவர்" பற்றி 'கட்டுரையோட ஃபார்ம் இல்லை' என்றார். சினிமா எனும் பூதத்தில் மிக பிரபலமானது.
கட்டுரை என்ற வடிவத்தை உடைத்த ராஜநாயஹம் எழுத்து..
சினிமா எனும் பூதம் எம்ஜிராமச்சந்திரன் இந்துவில் நிராகரித்து மட்டமான ஏதோ ஒன்றை பதிப்பித்தார்.
சுந்தர ராமசாமியின் பிரசாதம் தொகுப்பை சாதாரணமாக குறிப்பிட்டு அதற்கு பிறகு தான் பல்லக்கு தூக்கிகள் தொகுப்பிலிருந்து அவர் கதைகள் சிறப்பானதென்ற அர்த்தத்தில் எழுதியவர் அரவிந்தன் எனும் போது என்ன சொல்ல?
சுந்தர ராமசாமி 'பிரசாதம்' படித்து
பிரமித்து தான் நவீன தமிழ் இலக்கிய வாசகன் ஆனவன் ராஜநாயஹம் என்பதை நீங்கள் எழுத வேண்டும் என்று சுந்தர் ராமசாமி கேட்டுக் கொண்டதால் சௌந்தரசுகன் பத்திரிகையில் 2005ல் 'பிரசாதம் செய்த மாயம்' எழுதினேன்.
2004ல் திருப்பூர் காமாட்சி கல்யாண மண்டபத்தில் நடந்த காலச்சுவடு கனிமொழி கவிதை நிகழ்ச்சியில் காலச்சுவடு இதழ்கள் பற்றி ராஜநாயஹம் பேசிய போது அரவிந்தன் பதில் கொடுத்தார்.
அது தான் முதல் சந்திப்பு.
ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை பற்றி சிலாகித்து சொன்னார்.
பின்னர் நடந்த விஷயம் சம்பந்தமாக அரவிந்தன் 'நாஞ்சில் நாடனிடம் calibre இல்லைன்னு தெரியிது'
பன்முகத்தில் 2005ல் ராஜநாயஹம் மீதான பின் அரசியல் தொட்டு 'விலங்கும் நாணி கண் புதைக்கும் ' எழுதிய போது அரவிந்தன்
" உங்கள் ஞாபக சக்தி பிரமிக்க வைக்கிறது."
அன்பளிப்பாக அவருக்கு டீ சர்ட் அனுப்பிய போது நெகிழ்ந்தார்.
ஜெயமோகனிடம் நெருக்கமாக இருந்து பகையானவர்.
உரையாடல்களில் ஜெயமோகன் பேசும் போது " ஜெய் என்ன சொல்றார்னா" என்று ஆரம்பித்து நண்பராக இருந்த காலத்தில் டப்பிங் பேசியவர் அரவிந்தன்.
ஜெயமோகனிடம் தெறிக்கும் sadism பற்றி அவரிடமே அரவிந்தன் கேட்ட போது பதில்
" அது என் அப்பாவிடம் இருந்து வந்த விஷயம்"
பிரமிள் சமாதியில் பூக்களை அபிஷேகம் செய்தவர் இன்னொருவர். அதை அவர் சொல்வதை கேட்டு விட்டு
எஸ்ரா தானே கூடைப்பூக்கள் தூவியதாக எழுதியது அப்பட்டமான பொய் என்று அரவிந்தன் செல் பேச்சில் சொன்னார்.
"It is a vile thing to die,
When men are unprepared and look not for it."
- Shakespeare
Apr 1, 2026
சினிமா எனும் பூதம் 212, 213 Episodes
212, 213 Episodes
R.P. ராஜநாயஹம்
சினிமா எனும் பூதம்
1. சின்மயி ஸ்ரீபாதா
2. ஆண்ட்ரியா ஜெரமியா
05.04.2026 ஞாயிற்றுக்கிழமை
12.04.2026 ஞாயிற்றுக்கிழமை
முரசு டிவியில்
காலை எட்டரை மணிக்கு
ஒளி பரப்பு
......
R.P.ராஜநாயஹம்
'சினிமா எனும் பூதம்'
தொலைக்காட்சி தொடர்
R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு
2021 டிசம்பர் 5ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்'
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
Subscribe to:
Comments (Atom)