Share

Feb 28, 2016

உம்பர்ட்டோ ஈகோஇத்தாலியில் அலெஸ்ஸாண்டிரியாவில் பிறந்த உம்பர்ட்டோ ஈக்கோ தத்துவ ஞானி. மூன்று யுத்தங்களில் பங்கேற்றவர். பிப்ரவரி 19ம் தேதி இறந்திருக்கிறார்.

டான் பிரவுன் எழுதிய பிரபலமான டா வின்சி கோட் நாவல் பற்றி தான் எல்லோரும் அறிவர். டாம் ஹேங்க்ஸ் நடித்து படமாய் வந்து பலரும் எதிர்த்து, எல்லோரும் பார்த்து ரசிக்கப்பட்ட படமானது.
ஆனால் அதை படித்தவர்கள் , படம் பார்த்தவர்கள் அறியாத நாவல் ' பூக்கோவின் பெண்டுலம் '
உம்பெர்ட்டோ ஈகோ எழுதிய நாவல் ' பூக்கோவின் பெண்டுலம் '
டாவின்சி கோட் எழுதிய டான் பிரவுன் பற்றி ஈகோ சொல்வார் :“Don Brown is one of my creature.”
பூக்கோவின் பெண்டுலம் பற்றி சொல்ல ஈகோ வின் மேற்கண்ட ஒரு வரியே போதும்.
பூக்கோவின் பெண்டுலம் வாசிக்க சுலபமானது அல்லாமல் கடினமானது என்பதில் இரு கருத்து இல்லை. டா வின்சி கோட் மாதிரி விறு விறு என்று வாசித்து தள்ளமுடியாது தான். ஈகோவின் 'பூக்கோவின் பெண்டுலம் ' நாவலை வாசிக்க ஒரு திறன் தேவை. ஆனால் அந்த விஷேச வாசிப்புக்கான சன்மானம் மிகவும் மகத்தானது .
Foucault’s Pendulam – the thinking person’s Da Vinci Code !

ஈகோ வின் பிரபலமான மற்றொரு நாவல் பிரதியின்பம் என்பதற்கு உதாரணமான The Name of the Rose. மர்ம நாவல்கள் அத்தனையையும் மிஞ்சிய திகில் நாவலான இதை வாசிப்பதே 'சுகம்'. ஆனா 'பூக்கோவின் பெண்டுலம் 'வாசிப்பது ஒரு 'தவம்.'

The Name of the Rose திரைப்படமாக 'ஷான் கானரி' நடித்து முப்பது வருடம் முன் வந்தது.

ஷான் கானெரி நடித்த ஜேம்ஸ் பாண்டு படங்களை விட மிக தரமான த்ரில்லர்.


உம்பர்டோ ஈகோவால் The Name of the Rose நாவலும் எழுதி Foucault’s Pendulam நாவலையும் எழுத முடிந்திருக்கிறது !

Hell is heaven seen from the other side" - இந்த வார்த்தைகள் உம்பர்ட்டோ ஈக்கோ 'Name of the Rose' நாவலில் எழுதியது.
'Christ never laughed' என்ற விஷயம் குறித்து அந்த நாவலில் வரும் வில்லியம் என்ற பாதிரி சொல்வது “Laughter is proper to man,it is a sign of his rationality."
Men are animals but rational,and the property of man is the capacity for laughing.
Library - The place of Forbidden Knowledge!-ஈடன் தோட்டத்து ஆப்பிள் விலக்கப்பட்ட கனி!


”எல்லா கவிஞர்களுமே மோசமான கவிதைகள் தான் எழுதுகிறார்கள். கெட்ட கவிஞர்கள் தங்கள் கவிதைகளை புத்தகமாக போட்டு விடுகிறார்கள். ஆனால் நல்ல கவிஞர்கள் தங்கள் கவிதைகளை நெருப்பு வைத்து கொளுத்தி விடுகிறார்கள்!” என்று நேம் ஆஃப் த ரோஸ் நாவலில் சொல்கிற ஈகோவின் நகைச்சுவை உணர்வு!

எனக்கு பிடிக்காத வேலை மொழிபெயர்ப்பு. அதனால் ஈகோவின் இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. – ‘Translation is the art of failure’

 ……………………………………..

published in minnambalam.com on 23rd Feb,2016

https://minnambalam.com/k/1456185650
 

Feb 26, 2016

மு. நடேஷ் ஓவியங்கள்  நடேஷ் ஓவியர், நாடக இயக்குனர், நாடக ஒளியமைப்பாளர், நடிகர், கூத்துப்பட்டறையின் தலை சிறந்த ஆசிரியர். அப்பாவுடன் சேர்ந்து கூத்துப்பட்டறையை உருவாக்குவதில் பெரும்பங்காற்றிய கலைஞர்.அறிவுஜீவி. மொத்தத்தில் ஒரு பன்முக ஆளுமை!


 பத்மஸ்ரீ  ந.முத்துசாமியின் மூத்த மகன் மு. நடேஷ் அவர்களின் ஓவியங்கள்.


http://rprajanayahem.blogspot.in/…/painting-silent-poetry.h…

http://rprajanayahem.blogspot.in/…/amrita-sher-gils-self-po…

http://rprajanayahem.blogspot.in/2012/09/art-is-vice.html
.................................................................................................................................


http://rprajanayahem.blogspot.in/…/not-every-friendship-is-…

Feb 21, 2016

Not every friendship is meant to last a lifetime


’வால்மீகத்தில் ஒரு சுலோகம் இருப்பதாகச் சொல்வார்கள், நட்பு கொண்டாடுவது லேசு – அதைப் பரிபாலனம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை’ என்று கி.ரா எங்கோ, எப்போதோ எழுதியிருந்தார்.

”புது சினேகம் என்பது சரியாக வேகாத சோறு போல” என்பார் தி.ஜானகிராமன்.

”நாய் கிட்ட கொஞ்சம் பழக ஆரம்பிச்சா மூஞ்சிய நக்குமாம்” – இது ’என் தங்கை’ படத்தில் வேலைக்காரியாக நடிக்கும் எம்.என்.ராஜம் பேசும் டயலாக். எம்.ஜி.ஆர், ஈ.வி.சரோஜா, நரசிம்ம பாரதி நடித்த படம் ’என் தங்கை’.

கூடா நட்பு என்பது கிடக்கட்டும்.
நல்ல நட்பு எல்லாம், நல்லவர்கள் நட்பு எல்லாம் கூட எப்படி எப்படியோ சிதைந்து போய் விடுகிறது.கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் (’கசடதபற’ பத்திரிக்கைக் காலம்) ஞானக்கூத்தன் அறையில் ந.முத்துசாமி, அசோகமித்திரன், எஸ்.வைத்தீஸ்வரன் ஆகிய ஜாம்பவான்கள், இன்னும் பலரும் கூடி பேசுவது வழக்கம்.
ஞானக்கூத்தனும் ந.முத்துசாமியும் மாயவரத்திலேயே வகுப்புத் தோழர்கள். அசோகமித்திரனின் ’தண்ணீர்’ நாவலுக்கு முத்துசாமி சார் முன்னுரை எழுதியிருக்கிறார்.

வெங்கட் சாமிநாதன் “ ஜெயகாந்தன், கே.பாலசந்தர் இருவருமே பாமரத்தனத்துக்கு கௌரவமான கலைப்பூச்சு” என்று எழுதியிருந்தார்.

ஒரே ஒரு முறை ஞானக்கூத்தன் அறைக்கு வந்த ஜெயகாந்தன் சீற்றத்துடன்
 “ வெங்கட் சாமிநாதன் என்ன பெரிய சுன்னியா?” என்று கொந்தளித்து விட்டுப் போய் விட்டார். அப்போது ந.முத்துசாமி அங்கு இல்லை. மறு நாள் அங்கு வந்த முத்துசாமி “என்னய்யா? அந்தாளு இப்படி இங்க வந்து பேசிட்டுப்போயிருக்காரு. இத தட்டிக்கேக்காம விட்டிட்டீங்க?” என்று கேட்டிருக்கிறார்.
 முத்துசாமி சாரின் ஆதங்கம் - ‘ஒரு ஸ்டார் வந்தவுன்ன எல்லாரும் விழுந்துட்டாங்க.. சாஸ்டாங்க நமஸ்காரமே பண்ணிட்டாங்க!’

இதில் ஆரம்பித்த Polimics! சங்கிலியாய் தொடர்ந்த கடும் சர்ச்சையில் வெங்கட்சாமிநாதன், அசோகமித்திரன், ந.முத்துசாமிக்கு இடையிலான நல்ல நட்பு முற்றிலுமாக அன்று முறிந்து போய் விட்டது.

என்ன? ஏது என்பதெல்லாம் முத்துசாமி சாருக்கு இன்று ஞாபகம் இல்லை.சில வருடங்களுக்கு முன் வெ.சா.வின் மனைவி இறந்த விஷயத்தைக்கூட தனக்குச் சொல்லவில்லை என்று முத்துசாமி வருத்தப்பட்டார்.
செல்லப்பாவின் ’எழுத்து’பத்திரிக்கையில் வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரைகள் மூலம் தான் ’நாடகம்’ பற்றிய தெளிவு தனக்கு ஏற்பட்டதாக  இப்போதும் சொல்பவர் முத்துசாமி.

 இப்போது சமீபத்தில் சென்ற நவம்பரில் வெங்கட் சாமிநாதன் மறைந்த போது கூத்துப்பட்டறையில் டிசம்பர் மாதம் ஒரு இரங்கல் கூட்டத்திற்கு முத்துசாமி சார் ஏற்பாடு செய்திருந்தார். க்ரியா ராமகிருஷ்ணன் கலந்துகொள்வதாக இருந்தார். ஆனால் சென்னை வெள்ளத்தில் இந்த இரங்கல் கூட்டமும் அடித்துச்செல்லப்பட்டு விட்டது. கூட்டம் நடத்தமுடியாமல் போனதில் முத்துசாமி சாருக்கு மிகவும் வருத்தம்.
Not every friendship is meant to last a lifetime. What does 
last forever is the pain when that person is gone.

’அசோகமித்திரனுடன் சமாதானமாகப்போக வழியில்லையா?’ என்று ஏக்கத்துடன் முத்துசாமி சாரிடம் கேட்டேன்.
முத்துசாமி சார் பதில் ’நாங்க இப்ப என்ன சண்டையா போட்டுகிட்டிருக்கோம்? நட்பு கெட்டுப்போச்சி… பேச்சு வார்த்தை கிடையாது.. அவ்வளவு தான்.’
………………………….’நடை’ பத்திரிக்கை 1960களின் கடைசியில் சி.மணி செலவு செய்து நடத்தினார். மிக பிரமாதமான வடிவில் வெளி வந்தது. முத்துசாமி சாரின் ‘காலம் காலமாக’ நாடகம் 1969ல் நடையில் தான் பிரசுரமானது.
 எட்டு இதழ்கள் தான் வந்தது.
 நடை எட்டாவது இதழில் இதழின் வெற்றுத்தாள்களை நிரப்ப அந்த நேரத்தில் ஏதோ ஒரு content ஐ போட்டார் முத்துசாமி. வி.து.சீனிவாசன் எப்படி இந்த மாதிரி செய்யலாம் என்று பிரச்னையை கிளப்பி விட்டார்.
சி. மணி நடை பத்திரிக்கையையே நிறுத்தி விட்டார்.
சி.மணி இறக்கும் வரை முத்துசாமியுடன் நட்பு நீடித்திருக்கிறது.
.......................


27.03.1983ல் க்ரியாவில் ’நடை’ இதழ்களின் பழைய நான்கு பிரதி, ’கசடதபற’ ஒரு ஐந்து பிரதிகள் விலைக்கு கிடைத்தது. அன்று அங்கு எஸ்.வி.ராஜதுரை, சி.மணி, க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்தேன். சி.மணி தன்னுடைய ‘வரும் போகும்’ கவிதைத்தொகுப்பில் கையெழுத்திட்டு தந்தார்.

2003ல்திருச்சியில் இருந்து திருப்பூருக்கு போக நேர்ந்த போது ‘ பார்த்துப் பார்த்து சேர்த்திருந்ததெல்லாம் கழுதைப்பொதியாக சேர்ந்திருக்க, லக்கேஜை குறைக்க வீட்டின் கொல்லையில் பழைய கணையாழி, நடை, கசடதபற, ஞானரதம், ’மேலும்’ இதழ்களையெல்லாம் கொல்லைப்புறத்தில் வைத்து விட்டு திரும்பிப்பார்க்காமல் ஜாமான்கள் ஏற்றிய வேனில் குடும்பத்துடன் கிளம்பினேன். திரும்பிப்பார்த்தால் இலக்கிய இதழ்கள் எல்லாம் குழந்தைகள் போல ”எங்களை விட்டு விட்டுப்போகிறாயே” என்று கதறுவது போல காதில் கேட்குமே.
Sometimes you have to let go of what you can't live without.

சென்னைக்கு சென்ற செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் வர நேர்ந்த போது ஒரு ஆயிரம் புத்தகங்கள்,
காலம் காலமாக சேர்த்து வைத்திருந்த இரண்டு சூட்கேஸில் இருந்த நூற்றுக்கணக்கான கர்னாடக சங்கீத, இந்துஸ்தானி சங்கீத இசை கேசட்கள் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு கிளம்ப நேர்ந்து விட்டது.( " தேர்ந்த இசைத்தொகுப்புகளைச் சேகரம் பண்ணி வைத்திருப்பவர் ராஜநாயஹம்” என்று கி.ராஜநாராயணன் 'கதை சொல்லி’பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்.)

You never really know a man until you stand in his shoes and walks around in them
- a popular quote of Atticus in " To kill a mocking Bird "
( 1962 movie)


க. நா.சு சொல்வது போல “எல்லாமே ரொம்ப முக்கியம் தான். ஆனால் எதுவுமே அவ்வளவு முக்கியமில்லை.”

……………………………………………………………………

 http://rprajanayahem.blogspot.in/2009/03/blog-post_13.html

Feb 14, 2016

தோள்முனைத் தொங்கல்

சீமந்த புத்ரம் என்றால் என்ன? வளைகாப்பு சீமந்தம் பெறும் குழந்தை தான் சீமந்த புத்ரன். வளைகாப்பு என்பது தலைச்சன் குழந்தைக்குத் தான் நடக்கும். அதனால் பெற்றவர்க்கு முதல் குழந்தை சீமந்த புத்ரன் அல்லது சீமந்த புத்ரி!


 நான் ஒரு சீமந்த புத்ரன்!

......................................”மனிதன் இழுக்கும் மாமிச வண்டியில் குதிரை கிடந்து ஹை .. ஹை என்றது” - இந்த கவிதை எஸ்.வைத்தீஸ்வரன் எழுதியது. வைத்தீஸ்வரனின் தாயார் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் தங்கை.

...........................................


”வரும் போகும்” என்று நெடுங்கவிதை எழுதிய மேதை சி.மணி ஒரு தடவை ’லிக்கர்’ என்று நினைத்து டெட்டாலை எடுத்து குடித்து விட்டார்.


”பண்டிதன் எழுதுவதுதமிழ் இல்லை.அ
பண்டிதன் கணக்குப்படி;அ
பண்டிதன் எழுதுவதுதமிழ் இல்லை;இ
பண்டிதன் கணக்குப்படி. ஆ
க மொத்தம்
தமிழர் நமக்குத் தெரியவில்லை
தமிழ் எழுத.” -சி.மணி கவிதை.
”என்ன செய்வ
திந்தக் கையை
என்றேன் என்ன செய்வதென்றால்
என்றான் பெரியசாமி.கைக்கு வேலை
என்றிருந்தால் பிரச்னையில்லை;
மற்ற நேரம் நடக்கும்போதும்
நிற்கும்போதும் இந்தக் கைகள்
வெறும் தோள்முனைத் தொங்கல்; தாங்காத
உறுத்தல் வடிவம் தொல்லை என்றேன்.
கையக் காலாக்கென்றான்.” இதுவும் சி.மணியின் கவிதையே தான். தலைப்பு “ தீர்வு”

.......................................

டாக்டர் ராஜா எம்.பி.பி.எஸ் எழுதிய கீழ்கண்ட கவிதையின் ஆன்ம விடுதலை, நிறைந்த அன்பு, முழுமையான வேதனைத்துயர்.


“ எண்ணெய் ப் பற்றி எரியும் தீயால்
பிடித்தவர்களையும் பிடித்தவற்றையும்
பற்றிக்கொண்டிருக்கிறேன்
தீவிரமாய்.
விடுபடும் வேட்கையில்
நெளிகிறது ஒரு நெருப்புச்சுடர்”