Share

Jun 27, 2012

தி,ஜா பிறந்த நாள் -ஜூன் 28

” மலர் மஞ்சம்” நாவலில் தி.ஜானகிராமன்

- சமுத்திரத்தை எத்தினி நேரம் உட்கார்ந்து பாத்துக்கிட்டிருந்தாலும் அலுக்காது.சூரியோதயம், அஸ்தமனம்,தூரத்து மலை இதுங்களையும் எத்தினி  நேரமானாலும் உக்காந்து பார்த்துக்கிட்டேயிருக்கலாம். நினைவு, மனசிலே ஓட்டம், அசைவு- ஒண்ணுமேயில்லாம சூன்யமா, நிம்மதியா இருக்கும்.

- அவ்வளவு நறுக்குத் தெறிச்சாப்பல,நம்ம இஷ்டப்படி நம்ம ஜன்மம் அமைஞ்சதுன்னா அப்புறம் பிறவியெடுத்ததுக்கு என்ன தான் அழகு இருக்கு?..

-நம்மை நாமே தான் தேத்திக்க முடியும், உசத்திக்க முடியும். நமக்கு நாமே தான் காவல்,பலம் எல்லாம்

-பூஜை அலமாரிக்கு முன் குத்து விளக்குச் சொர்ணச்சுடருடன் நிச்சலமாகக் கை கூப்பிக்கொண்ட்டிருந்தது.

-நிசப்தமாயிருந்தது.கடல் அலை மட்டும் அந்த மௌனத்தின் மீது ஏறி மோதி, கலைந்து விழும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.

- திடீரென்று இழைகிற சிநேகம் எல்லாம் இப்படித் தான் திடீர் என்று அறுந்து விடும் போலிருக்கிறது.அரை மணியில் வெந்து, அரை நாளில் ஊசிப் போகிற சமையல் மாதிரி தான் விறுவிறுவென்று நெருங்குகிற நட்பு.

- கோயில் மணியோசை எழுந்து வானத்தில் தங்க மேகமாகப் போய் வடிந்து தொங்குவது போலிருந்தது.

- அந்த ஆனந்தம் நெஞ்சின் திடத்தை உடைத்துக்கொண்டு,தழதழப்பாக நெகிழ்ந்தது.

-மனசு எங்கோ போய் தொலைவில் நின்று மேய்ந்துகொண்டிருந்தது.

- நல்லதுக்கு எத்தனையோ முகம் உண்டு. ஒண்ணு தான் நல்லதுன்னு யார் சொல்லமுடியும்? அந்த மாதிரி ஏதோ சிலதுங்க தான் நல்லதுன்னு நாலு ஆசாரங்க சேந்து கத்திப்பிடுத்து. அதுகளுக்கு செல்வாக்கு இருந்துது.செலாவணி இருந்துது.மத்ததெல்லாம் கெட்டதுன்னு பேர் கட்டிப்பிடுத்து...அதுங்களுக்கு பயந்துகிட்டிருந்தா நாம இப்படியே குட்டையிலே அளுக வேண்டியது தான்.

- போய் பத்து பேருக்கு நடுவிலே ஆடனுமா என்ன ?  வீட்டுக்குள்ர சாமி கதவைத் திறந்து வச்சிட்டு தனியா ஆடினாலே போதும். சாமி கதவைக் கூடத் திறக்க வேணாம். சும்மா ஆடினாலே போதும். என்னைக் கேட்டா ஆடக்கூட வாண்டாம். ஆடறாப்பல நெனச்சிட்டிருந்தாலே போதும்.

- அவர் ஒரு அரை நிமிஷம் ராகம் பாடினாலே  தனி அழகு. என்னமோ பிழிந்து பிழிந்து இனிமை அமர்ந்து போன துளிகளாக வடித்துக் கொடுக்கிறார் போன்ற ஒரு அனுபவம். கோயில் கல்லில் நீள வாக்கான ஒரு கல்லில் சின்னச் சின்னதாக அழகு அழகாக நூறு வடிவங்களைச் செதுக்கினாற் போல ஒவ்வொன்றும் ஒரு அழகு.


- வெளியே தோட்டத்தில் நாகணவாய்கள் நாலைந்து உரக்கக் கத்திக்கொண்டிருந்தன. மர நிழலில் பதுங்கி, அதன் குளிர்ச்சியைச் சுவைத்துக் கத்தின.....
வானம் ஒரே கப்பு நீலமாக அவளை ஜன்னல் வழியே பார்த்தது.அந்த நீலத்தின் குரல் போல, கழுகு ஒன்று நீளமாகக் குழைந்து எங்கோ உயரத்தில் குரல் கொடுத்தது.

-வெயில் வெண்மஞ்சளாகத் தணிந்திருந்தது.

- தாங்கமுடியாத கொடுமையும் எல்லையில்லாத இரக்கமும் அந்தக் கேள்வியில் இருமுகக் கடவுள் மாதிரித் தலையை நீட்டிக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு பாலி திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.

-இருதயத்தில் குப்பலாக தாமரை மொட்டுக்களை வைத்து அடைத்தாற்போலிருந்தது அவளுக்கு. அந்த புஷ்பத்தின் மெல்லிய கந்தமும் மிருதுவான அடைவும் நெஞ்சத்தில் புகுந்து திணிந்து கொண்டன.

- தங்கச் சங்கிலி போட்ட அந்தக் கடிகாரம் வெல்லக்கட்டியை எறும்பு உருட்ட முயல்வது போல, காலத்தை டிக்கு டிக்டிக்கென்று அவசர அவசரமாக எண்ணிக்கொண்டிருந்தது.

- ஸ்வர்க்கத்திலே யிருந்த கங்கையை மண்ணிலே போட்டுப் புரட்டணும் என்று ஒரு தபஸ் பண்ணுகிறானே. மண்ணிலே இருக்கிறதை மேலே அனுப்ப ஆசைப்படுவார்கள். இவன் பாடம் தலை கீழாயிருக்கிறது........நம்ப தேசத்து வேதாந்தியில்லை அவன்.கருணை இருந்தது அவனுக்கு. அது தான் கங்கையாப் பொழிஞ்சு,மண்னணக் குளிரப் பண்ணித்து.....
....கங்கை பூலோகத்துக்கு வந்தாச்சு.

.........


”உயிர்த்தேன்” நாவலில் தி.ஜானகிராமன்

- மெல்லிய குளிர் காற்று, சுடாத செவ்வெயில், பச்சை இலைகள், நாலு குருவியின் இனிமை, மாசுகளனைத்தும் இருளோடு அகன்று, துடைத்துத் துப்புரவு செய்து நல்லதுகளும் படைத்தவனும் வந்து உட்காரக்கூடிய மன நிலை- இத்தனையும் சேர்ந்த இளங்காலை மாதிரி இருக்கும்.

-இந்தக் குடும்பத்தோடு குடும்பமாக ஒன்றி அவள் உழைத்துக்கொண்டிருக்கிறாள்.....இவள் ஒன்றியது- அதை எப்படிச் சொல்கிறது? தலையில் ஒரு கூடைப் பூவைக் கொட்டினாற் போலவா? வைர ஊசி ஊசியாக, ஆனால் பஞ்சின் மென்மையுடன் பனியின் தண்மையுடன் விழுகிறது போலவா?

- எதற்காக இப்படி மனத்தைக் கொட்டிக் கொட்டி அன்பாக அளந்துகொண்டிருக்கிறாள்.

- கோவில்லே கொட்றதுக்கு முன்னாலே ஊருக்கில்ல கொட்டனும்.

- கருணை எங்கே இருந்தாலும் பகவத்ச்வரூபம்.

........

மோகமுள் நாவலில் தி.ஜானகிராமன்

- தந்தி ஒலிக்க, வாய் பாட , செம்பை ஏந்தி பிட்சை ஏற்ற தியாகய்யர், தெருவிலா நடந்தார்? திக்கை நிறைத்த நாதத்தில் தானே அலைந்த அவர் செம்பை ஏந்தியது அரிசிக்கா? ஊர் ஊராக காசிக்கும்,தில்லைக்கும், தீர்த்தங்களுக்கும் தீட்சிதர் அலைந்ததெல்லாம் நாதத்தில் அலைந்தது தானே.

- “சுவாமி கிட்ட போய் மண்ணாசை,பொன்னாசை, பெண்ணாசை எல்லாம் ஒழியனும்னு கேட்கனும் போலிருக்கு. அவர் நிச்சயமாக் கேட்டதைக் கொடுத்து விடுவார்னு தெரிஞ்சிருந்தா என்னடா ஆகும்.”
  “சுவாமி கிட்டவே போகமாட்டோம்” என்று குரல் வந்தது.


..............


தி.ஜா சிறுகதைகளிலிருந்து

மனிதனுக்கு அற்பத்தனம் வர நேரம் போது ஏது?
                                          
- கோதாவரிக்குண்டு

ராமாயண சாஸ்திரிகள் கதையில் சொன்னார்: சேற்றுத் துளி தெளித்த தாமரை போல் சீதை பிரகாசமாகவும் இருந்தாள். பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள்.

- ஆரத்தி

அப்பனே! ஏழையாகத்தான் படைத்தாயே சச்சலாக, கருவலாக, நாய் பிடுங்கினாற்போல் படைக்கப்படாதோ!இப்படியா வாட்டசாட்டமாக, மீசையும் வடிவுமாக ப் படைக்கவேண்டும்! தானம் கொடுக்கிறவனுக்குக் கொஞ்சமாவது இரக்கம்,அனுதாபம் வரவேண்டாம்!அச்சாரம்கொடுத்துப் பண்ணினாற்போலப் படைத்து விட்டு, அதிர்ஷ்டத்தையும் புத்தியையும் கழித்து விட்டு, சை ! கடவுள் இவ்வளவு சராசரிக்குக் குறைவான் படைப்பாளியா?

- கோதாவரிக்குண்டு

மீனாட்சி லட்சணம் தான். சமையற்கார முத்து பெண்டாட்டி என்று யார் சொல்ல முடியும்? நூத்தம்பது வேலி பண்னண வீட்டு எஜமானி எண்ணெய் ஸ்நானத்துக்காக நகை நட்டுகளைக் கழற்றி வைத்தாற்போலிருக்கும்.

- சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்

http://rprajanayahem.blogspot.in/2008/07/blog-post_23.html


http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_08.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_3967.html


http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_2603.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post_18.html


Jun 24, 2012

Carnal Thoghts -32

Bisexuals
http://www.indianetzone.com/photos_gallery/69/2%20Portrait%20of%20Pandavas%20wedding%20Draupadi.jpg                     

மகாபாரத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம்.
நகுலனின் தனித்துவம் அவன் தான்உலகத்திலேயே மிகவும் அழகான ஆண்! ஆனால் அர்ஜுனனுக்கு தான் பல பெண்களுடன் affair. Romance விஷயத்தில் specialist அர்ஜுனன்.  நகுலனின் ரொமான்ஸ் பற்றி ஏன் தகவல் ஏதுமே இல்லை.உலகத்திலேயே அழகான மனிதன் நகுலன் எனும்போது அவனை எவ்வளவோ பெண்கள் விரும்பியிருப்பார்கள்.நகுலனின் காதல் அனுபவங்கள் பற்றி வியாசர் ஏன் எழுதவில்லை.
வேறு மாதிரியும் பார்க்கவேண்டும் போல. Handsome fellow என்பது வேறு! Casanova என்பது வேறு!
Casanova பற்றி ஒரு தியரி உண்டு.
Usually a Casanova is a Bisexual.
  Arjuna as an eunuch in Virata' kingdom

அர்ஜுனன் அரவாணியாகவும் வாழ்ந்தவன்.

 ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப்.(‘ஆரண்ய காண்டம்’ தமிழ் படத்தில் நடித்தவர் தான்!)


https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcR-JO6jLUfceMwEvRB2inJW9OSwPJo2URIVi71IkoYcbziFGVawHA 
 இவரிடம் பல வருடங்களுக்கு முன் Stardust பத்திரிக்கை நிருபர் :" Deepak Parasar says that Jackie Shroff is a Bisexual."
இதற்கு ஜாக்கி ஷ்ராஃப் சொன்ன பதில்: "Let me finish with the girls first."

ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ :
   "Homosexuality is so much in fashion it no longer makes news. பெரும்பாலான ஆண்கள் போல எனக்கும் ஹோமோ செக்சுவல் அனுபவம் ஏற்பட்டதுண்டு தான். எனக்கு அது பற்றி வெட்கமே இல்லை.”

ஹாலிவுட் ஹீரோக்கள் லாரன்ஸ் ஒலிவியர், க்ளார்க் கேபிள், கேரி க்ராண்ட்  துவங்கி
இன்றைக்கு டாம் க்ருஸ்,எடி மர்பி வரை Bisexuals.

லாரன்ஸ் ஒலிவியரின் மனைவி விவியன் லீ யும் மார்லன் பிராண்டோவும் நடித்த படம் A Street car named Desire (1951)  இந்த படத்தில் இருவரும் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று.

ஹாலிவுட் தம்பதிகள் லாரன்ஸ் ஒலிவியர்-விவியன் லீ வீட்டுக்கு பிரபல நடிகர் டேவிட் நிவன் ( The Brain பட ஹீரோ) வருகிறார். வீட்டு காம்பவுண்டில் உள்ள ஸ்விம்மிங் பூலில் ஒலிவியரும் மார்லன் பிராண்டோவும் முத்தமிட்டுக்கொண்டு பின்னிப் படர்ந்து (இடுப்புக்குக் கீழே இருபத்தெட்டு சுத்து) ஜலக்ரீடை செய்துகொண்டிருந்திருக்கிறார்கள். அதைப் பார்த்துக்கொண்டே டேவிட் நிவன் வீட்டிற்குள் சென்று விவியன் லீ யைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
டேவிட் நிவன்” ஸ்விம்மிங் பூலில் பார்த்த விஷயம் பற்றி விவியன் லீயிடம் நான் ஒன்றுமேசொல்லவில்லை. அவளுக்கும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று  தெரிந்திருந்தது. அவளும் அது பற்றி என்னிடம் பேசவில்லை. இது போன்ற விஷயங்களில் நாசூக்காக கண்டும் காணாமல் தான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.”

Brando Unzipped  என்ற நூலில் மார்லன் பிராண்டோ மற்றொரு ஆணுடன் Oral Sexல் ஈடுபட்டிருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.Brando's Fellatio.
நடிகைகள் விவியன் லீ, பெட்டி டேவிஸ் ஆகியோருடன், நடிகர்கள் கேரி க்ராண்ட்,ராக் ஹட்சன் இருவருடன் அவருடைய affair பற்றி மட்டுமல்ல, இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகளின் மனைவியரையும் பிராண்டோ seduce செய்து படுக்க வைத்ததாகவும் Brando Unzipped நூலில் எழுதப்பட்டுள்ளது. டார்வின் போர்ட்டர் எழுதிய புத்தகம்.


பிராண்டோவுடன் ஒரு பத்து வருடங்கள் வாழ்ந்த மூன்றாவது மனைவி டாரிட்டா டெர்பியா எழுதிய 'Marlon, My Love and My Torment' நூலில் இன்னொருகுற்றச்சாட்டு.பிராண்டோ பெற்ற மகள் செயன்னி  யை Sexual Abuse செய்ததாக. மார்லன் பிராண்டோ இறப்பதற்கு ஒன்பது வருடத்திற்கு முன்பே அவர் மகள் செயன்னி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாள்.

தமிழ் நடிகர்களில் எம்.ஆர்.ராதா மட்டும் ரொம்ப வெளிப்படையாக தான் ஒரு Bisexual என்பதை ஒப்புக்கொண்டவர்.
“இருபத்திரண்டு வயது வரை நான் ஆண்களைத்தான் போகம் செய்தேன்.அப்புறம் தான் பொம்பளையப் பார்த்தேன்” என்றார்.
 

எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர் மற்றும் ஒரு ‘பெரிய நடிகர்’ ( இவர் நாடகங்களில் ஸ்த்ரிபார்ட் வேசம் கட்டியவர்) இன்னும் சிலரும் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது ராதா “ அந்தக் காலத்திலே நாங்க நாடகம் போட ஊர் ஊரா கிளம்பிட்டா வருஷக்கணக்கா ஆகும். அப்பல்லாம் பொண்டாட்டிய எங்க பாத்தோம். அப்பல்லாம் எனக்கு இவன் தான் பொண்டாட்டி!” என்று அந்த பெரிய நடிகரைக் கை காட்டிச் சொன்னாராம்.
அந்த நடிகர் ரொம்ப upset ஆகி “ என்னண்ணே, இப்படிப் பேசுறீங்க” என்று கோபமாய் கேட்டபோது ராதா அழுத்தமாகச் சொன்னாராம்
“ நான் உள்ளதைத் தானே சொல்றேன்.”Jun 21, 2012

காக்கா ராதாகிருஷ்ணன்Funny face என்பதற்கு சரியான உதாரணம்.
நல்ல குள்ளமான உருவம்.
சிவாஜிகணேசனின் பால்ய நண்பன்.

ஆயிரம் படம் கண்ட மனோரமாவுக்கு முதல் படம் ‘மாலையிட்ட மங்கை’(1958)யில் முதல் ஜோடியாக நடித்தவர்.

கவிஞர் கே.டி.சந்தானம் என்னிடம் சொன்னார்.“ எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நாடகக் கம்பெனிக்கு சிவாஜியை சிறுவனாக அவருடைய அம்மா கொண்டு வந்து சேர்த்த அதே நாளில் தான் மற்றொரு சிறுவன் காக்கா ராதாகிருஷ்ணனையும் அவருடைய தாயாரும்  அழைத்துக்கொண்டு வந்தார்.”

பி.யு.சின்னப்பாவின்”மங்கையற்கரசி”(1949) படத்தின் மூலம் தான் திரையில் காக்கா அறிமுகமானார்.
காக்கா பிடித்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்பதைக் கேட்க நேர்ந்த ராதாகிருஷ்ணன் சிரத்தையுடன் நிஜமாகவே ஒரு காக்கையைப் பிடித்துக்கொண்டு வருவார்! அதனால் தான் காக்கா ராதாகிருஷ்ணன்!

காக்கா ராதாகிருஷ்ணனை நினைத்தவுடன் நினைவுக்கு வரும் படம் மனோகரா(1954) அதில் சிவாஜிக்கு step brother
ஏனோ  பால்ய நண்பனுக்கு  சிவாஜி கணேசன் தன் படங்களில் முக்கிய கதாபாத்திரம்,பெரிய வாய்ப்பே தந்ததேயில்லை.
சந்திர பாபு,தங்கவேலு,நாகேஷ் போல முதல்நிலை காமெடியனாக காக்காவால் ஆக முடியவில்லை.

நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில்  எம்.ஜி,ஆரை எதிர்த்து காக்கா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டவர்! இதனால் கூடவோ என்னவோ 1960களி்ல்,1970களில்  திரையுலகில் சரியான, நல்ல வாய்ப்பு இல்லாமல் தான் இருந்தார்.

முத்துராமன்,வாணிஸ்ரீ நடித்த  கே.எஸ்.ஜியின் ”தபால்காரன் தங்கை’(1970) யில் தியேட்டரே கலகலக்க ”காதர் பாட்சா” என்ற அவர் வசனம் பிரபலம்.
அந்தக் காலங்களில்  ஏதோ தலையை காட்டுகிற சிறிய கதாபாத்திரங்கள் தான்.

 காக்கா ராதாகிருஷ்ணன் பற்றி நாகேஷ் அன்றே குறிப்பிட்ட வார்த்தைகள் மிகையல்ல.” நேரம் மட்டும் கூடி வந்திருந்தா, இவன் என்னையும்  மிஞ்சி எங்கேயோ போயிருக்கக்கூடிய அசகாய நடிகன்!”

1992ல் ‘’தேவர்மகன்” படத்தில்  மீண்டும் சிவாஜிக்கு தம்பியாக
நடிக்க வாய்ப்பு.விசேஷமான நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் என்பதை உணர்த்தினார்.

விசித்திரமாக கடந்த 15 ஆண்டுகள் காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஓய்வு பெற வேண்டிய  முதுமையில்   திரை வாய்ப்புகள் கிடைத்தன! ”காதலுக்கு மரியாதை“ படத்தில் ஆரம்பித்து ”வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’’தாண்டியும் எத்தனை படங்கள்.

 மிக சாதாரணமான படங்கள் எதிலும், மிக சாதாரண பாத்திரத்திலும் கூட அவர் நடிப்பு சோடை போனதேயில்லை.Classic Comedian!

சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
 உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தியது.

காக்கா ராதாகிருஷ்ணன் சிவாஜியின் பிணத்திடம் பேசிய தழுதழுத்த வார்த்தைகள் ” ஏண்டா இப்படி செஞ்சே.. ஏன் இப்படி செஞ்சே..”

http://rprajanayahem.blogspot.in/2008/08/ok-young-man-i-am-leaving.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_8985.html

Jun 17, 2012

அரியது

கொக்கு குஞ்சை கண்டாருமில்ல
வாகை மரத்துப் பிஞ்சை பார்த்தாருமில்ல
குறவன் சுடுகாடு கண்டாருமில்ல


கொக்கு பார்த்திருக்கிறோம். ஆனால் யாராவது கொக்கு குஞ்சை பார்க்க முடியுமா? எப்படி எங்கே அவ்வளவு ரகசியமாக பேணி வளர்க்கிறது?

வாகை மரத்தில் காய் இருக்கும்.பிஞ்சை பார்க்கவே முடியாது.

வாகை மரம் பற்றி ஒரு நம்பிக்கை உண்டு. ’வாழுற வீட்டுக்கு வாகை மரம் சக்களத்தி’. வீட்டு காம்பவுண்ட், அல்லது வீட்டு முன் வாகை மரம் இருக்கக்கூடாது. வாகை மரத்தால் செய்யப்பட்ட கட்டில், மேஜை,நாற்காலி,ஸ்டூல்,பெஞ்ச் எதுவும் ஒரு குடும்பம் உள்ள வீட்டிற்குள் இருக்கவே கூடாதாம்.


அத்தி பூத்தாற் போல - அடிக்கடி இந்த வார்த்தை பலராலும்  சொல்லப்படும் cliche.
அத்தி பூத்தவுடன் உடனே,உடனே பிஞ்சாகி பின் காயாகிவிடு்மாம்.
 
இந்தக்காலத்தில் இப்படி இருக்க முடியாது.ஆனால் அந்தக் காலத்தில் நரிக்குறவர் இறந்து யாரும் பார்த்ததே கிடையாது. குறவனகுறத்திக்கு சாவு கிடையாது என நம்பியவர் பலர்.
குறவர்கள் ஊர் ஊராகப் போய் கூடாரம் அமைத்து தங்குவார்கள். குறவர் கூட்டத்தில் யாராவது இறந்து விட்டால் அவர்கள் அழ மாட்டார்கள். சிரமப்பட்டு அழுகையை கட்டுப் படுத்திக்கொள்வார்கள்.ஊராருக்கு தெரிந்து விடக்கூடாதே!எடுத்ததெற்கெல்லாம் ஒப்பாரி வைக்கும் தன்மை கொண்டவர்கள் குடும்ப சாவின்போது அழுகையை அடக்கிக்கொள்வார்கள் என்பது irony!கூடாரத்திற்கடியில் குழி தோண்டுவார்கள். பிணத்தை ரகசியமாக புதைப்பார்கள்.கூடாரத்தைப் பிரித்து காலி செய்து விட்டு வேறு ஊருக்கு சென்று விடுவார்கள்.
..................
எல்லோரும் யோனித்துவாரத்தின் வழி தான் பிறந்தாக வேண்டும். ஆனால் இந்திரன் மட்டும் யோனியிலிருந்து பிறக்க மறுத்து விட்டானாம்.அது அசிங்கமான வழியென்று சொன்னான். அரிதாக அவன் தன் தாயின் பக்கவாட்டிலிருந்து,விலாவிலிருந்து சமாளித்துப் பிறந்து விட்டானாம்.
இதை ராபர்ட்டோ கலாஸ்ஸோ வின் நாவலில் (காலச்சுவடுமொழி பெயர்ப்பு வெளியீடு)படித்தேன்.

 ஒபாமாவுக்கு ஹில்லாரி க்ளிண்டன் போல நிக்சனுக்கு ஹென்றி கிஸ்ஸிஞ்சர்.வயிற்று வலின்னு லீவு போட்டுவிட்டு அமெரிக்கபாணியில் ரகசியமாக சீனாவுக்கு official visit செய்தவர் ! ‘கிஸ்ஸிஞ்சருக்கு நிஜமாக வயிற்றுவலி வந்தால் அடுத்த தடவை என்ன நடந்திருக்கும்’ என்று ஆர்ட் புச்வால்ட் எழுதிய நகைச்சுவைக் கட்டுரை படித்துப் பார்த்தால் சிரித்து வயிறு புண்ணாகி விடும்! 

கிஸ்ஸிஞ்சர் சொன்னது: Power is the ultimate aphrodisiac.
அரிதான பிறவி என்றால் அது தேவ விரதன்  எனப்பட்ட பீஷ்மர் தான்,அதிகாரம், பெண்கள் இவற்றை ஒதுக்கி்ய புராண நாயகன்.

.....

குதிரைக் கொம்பு, புலிப்பால்,கருவாட்டு ரத்தம், கருங்கல் வேர், கொசுமுட்டை இவையெல்லாம் கிடைக்குமா?
புரோக்கர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. இவற்றில் எது கேட்டாலும் கிடைக்கும் என்று தான் சொல்வார்கள்.

புரோக்கர் பாணி :’ புலிப்பால் வேண்டுமா? நோ ப்ராப்ளம். இங்கே பக்கத்தில் சத்தியமங்கலம் காட்டுக்குள் போன வாரம் ஒரு புலி குட்டி போட்டிருக்கு. எங்க தெருவிலே வீரமான ஒரு கோனார் இருக்கார். அவரை  கார்லே கூட்டிட்டுப் போய் அந்த புலியோட பாலை கறந்து கொண்டு வந்து நான் தர்றேன். ரெண்டு நாள் பொறுத்துக்குங்க.’

Jun 10, 2012

பட்டப் பெயர்தமிழ் பட கதாநாயகர்கள் பலருக்கும் பல பட்டப்பெயர்கள். அதை அந்த ஹீரோக்கள் நிச்சயமாய் ரசித்திருக்கவே மாட்டார்கள். சாதாரணமாய் பாமர ஜனங்கள்,சினிமா ரசிகர்கள் அந்த நடிகர்கள் பற்றி அந்த பட்டப்பெயரால் தான் குறிப்பிடுவார்கள்.
ராசுக்குட்டி பட ஷுட்டிங் கவுண்டன் புதூர் என்ற ஊரில் நடந்த போது காலை ஏழு மணி போல ஒரு கிழவிகுடத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்தவள் என்னிடம் சுவரில் ஒட்டியிருந்த  ஒரு சினிமா போஸ்டரைக் காட்டி “இது யாரு படம். ’பேக்கு’ படமா? டவுசர் படமா?” நான் கேள்வி புரியாமல் குழம்பிய போது என் கூட இருந்த இன்னொரு சினிமாக்காரர் சட்டென்று “டவுசர் படம்மா” என்று அந்த கிழவிக்கு பதில் சொன்னார்.

 பேக்கு = கேனம்=பாக்யராஜ்.     டவுசர் = ராமராஜன்.

’மைக்’ மோகன் பேரு சொள்ளையன். ( முகத்தில் இருக்கும் சொள்ளைகள்! )

அந்த காலத்தில் எம்ஜியாரை ‘கிழவன்’ என்றும் ’பெரிசு’ என்றும் சாதாரணமாக குறிப்பிடுவது சகஜமாயிருந்தது.(திரையுலகில் எல்லோருக்கும் எம்ஜி.ஆர் ”சின்னவர்”)

சிவாஜி பட்டப்பெயர். - தொப்பையன்!

ஜெமினியை திரையில் பார்த்த்வுடன் “ டே சாம்பாரு!” என்று தரை டிக்கெட் ரசிகர்கள் கூப்பாடு போடுவார்கள்.

 ஜெய் சங்கருக்கு ரெண்டு பட்டப்பேர்!
1.“ பொந்து கண்ணன்” 2. கரடி (உடம்பு பூரா மயிர்)

கமல் ஹாசன் - ஒம்போது.

 குமுதத்தில் பிரபலங்களின் புகைப்படங்கள் போட்டு ஒரு வரி கமெண்ட் எழுதிய போது கமல் படத்தின் கீழ் “பெயரிலுமா பெண்மை?” எழுதிய காலம் உண்டு. இப்ப்டி இழிவு படுத்திய பின்’ மன்மத லீலை’ பட விமர்சனத்தில் ரொம்ப அரை மனதுடன் “ கமல ஹாசனை ஒரு லட்சிய ஹீரோ என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரசியமான ஹீரோ என்று சொல்லத்தான் வேண்டும்” என்று குமுதம் எழுதியது.
அரசு கேள்வி பதிலில்
“ ஒரு பிரதாப் போத்தன் பத்து கமல் ஹாசனுக்கு சமம் “


 எவ்வளவோ கடுமையான ஏளனங்களை, அவமானங்களை கமல் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
 பெண்மை கலந்த நடிகர் கமல் மட்டுமா? எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன் கூட பெண் தன்மை கலந்தவர்கள். அழகான ஆண்களிடம எப்போதும் கொஞ்சம் பெண்மை இருக்கும்.


ரஜினி - மெண்டல்.

மதுரை ஏர்போர்ட்டில் ஒரு சோடாகடைக்காரனை பெல்டை கழட்டி அடித்தது,
சென்னையில்“மூக்குத்தி” என்ற பத்திரிக்கை நிருபர் ஜெயமணி மேல் காரை ஏற்ற முயற்சித்தது, “புவனா ஒரு கேள்விக்குறி” படத்தில் அசிஸ்டண்ட் டைரக்டர் வெள்ளை முடி லோக நாதனுடன் கைகலப்பு ,’’ நினைத்தாலே இனிக்கும்’’ பட டப்பிங்குக்கு அந்த பட அசிஸ்டண்ட்டைரக்டர் கண்மணி சுப்பு( கண்ண தாசன் மகன்)போய்  கூப்பிட்டும் வராமல்கே. பாலச்சந்தர் போட்டோவை உடைத்தது, பாலச்சந்தர் நொந்து போய் அப்போது சொன்னது- ‘ரஜினிகாந்தை அறிமுகம் செய்தது நான் செய்த மிகப் பெரிய தவறு”
ஜர்தா பீடா, குடி,கூத்து - பெரிய trouble maker ரஜினி” - அவ்வளவு தான்! ரஜினி பீல்ட் அவுட்!  ரஜினி சேப்டர் க்ளோஸ்!
ஊர் வாயில் விழுந்த பின் ரஜினி சினிமாவில் உச்சத்தை அடைந்தது உலக அதிசயம்!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Jun 5, 2012

Carnal Thoughts - 31

http://fc08.deviantart.net/fs43/f/2009/098/c/6/Voyeurism_by_SamuraiSunshine.jpg   

Voyeurism

அறுபது வயது தாண்டிய பெண்கள் நான்கைந்து பேர்  ஓய்வாக பேசிக்கொண்டிருந்த போது சுப்பாத்தாக்கிழவி செய்த லூஸ் டாக்.

”என் மாமியா பேச்சிக் கிழவி ஈன சிறுக்கி.நான் கொஞ்ச பாடா பட்டேன்.விவஸ்தை கெட்ட முண்ட.  எனக்கு கல்யாணம் ஆனப்ப ராவுல என் புருஷன் கூட இருக்கும்போது சாவி ஓட்டயுல கண்ண  வச்சி பாத்துக்கிட்டே இருப்பா. பொறுத்துப்பொறுத்துப் பார்த்தேன். ஒரு நா அம்புட்டையும் அவுத்துப் போட்டு முண்டக்கட்டயா நின்னேன். நல்லா பாத்துக்கடின்னு”


..............................

”ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை”யில்
 R.P. ராஜநாயஹம்

தாசுவுக்கும் பேபிக்கும் ஏற்கனவே ஒரு கடுமையான மனஸ்தாபம் உண்டு. பேபி அவன் மனைவி வெரோனிக்காவை ஒருமுறை பகலில் புணர்ந்து கொண்டிருக்கும்போது தாசு ஓட்டை வழியாகப் பார்த்திருக்கிறான்.
 
Voyeurism! அப்போது வெரோனிக்கா ஐந்து வினாடிக்கொருமுறை 'இயேசுவே ரட்சியும்' என்று
( முட்டாள் தாசுவின் வார்த்தைகளில் 'பேபி ஏறியடிக்கும்போது ஒவ்வொரு 'குத்து'க்கும் வெரோனிகா ஓரு 'ஏசுவே ரட்சியும்') சொல்லிக்கொண்டிருந்தாளாம். இதை தாசு பலரிடமும் சொல்லிவிட்டான். பேபியையோ வெரோனிக்காவையோ பார்க்கும்போது 'இயேசுவே ரட்சியும்' என்று சின்னப்பையன்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். தாசுதான் ஒளிந்திருந்து பார்த்து இப்படி ஊரே சொல்லி கேவலப்படுத்திவிட்டான் என்கிற விஷயம் பேபிக்கும் தெரிந்தும் விட்டது. இப்போது தாசு கழுதையைப் புணரும் போது பேபி அதைப் பார்த்து விட்டான்.


.....................................................................

மனுஷ்ய புத்திரன் கவிதை கீழே

அந்தரங்கம்

எனக்குத் தெரியும்

ஓசைப்படாமல்
கதவு திறந்து வந்து

சுற்று முற்றும்
கவனித்துவிட்டு

பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஒரு ஜோடிக் கண்களை

........................................

கலாப்ரியாவின் ’விகார புஷ்பங்கள்’ கவிதையிலிருந்து

பொலி காளைகளைச்
செக்கு மாடாக்கு
இனி பசுக்களின்
வீதியோரக் கருவுறுதல்;
நான்கு பிள்ளைகள்
வேடிக்கைப் பார்க்க
இல்லையெனக் கவிதை எழுது.
( பாரதியிடம் தொனியைக்
கடன் வாங்கி )

.....................
இடாலோ கால்வினோ வின் "If on a winter's night a Traveller " நாவலில் ஒரு காட்சி

மியாகி சீமாட்டி என்னைப் பின்புறமாக பற்றி, என்னை பாயில் படுக்க வைத்தாள். அவள் மகள் மகிகோவை புணர்வதாக நினைத்துக்கொண்டு நான் மோகப் பெருக்கில். “மகிகோ“ என்று கத்தினேன். பாதி திறந்திருக்கும் கதவின் பின் முழந்தாளிட்டு மியாகியின் மகள் தலையை சாய்த்து பார்த்துக் கொண்டு இருந்தாள். தன் அம்மாவையும் என்னையும் கண் விரித்துப் பார்க்கிறாள் மகிகோ. நான் கத்தியதால் தான் ஓடிவந்திருக்கிறாள். தாழ்வாரம் தாண்டி
இன்னொரு உருவம். மியாகியின் கணவன் - மகிகோவின் அப்பா -  மிஸ்டர் ஒகேடா பார்த்துக்கொண்டிருந்தார்.நான் அவரை கவனித்த போது பின்னிப் படர்ந்திருக்கும் என்னையும் தன் மனைவியையும் பாராது , எங்களை ஓளிந்து பார்த்துக்கொண்டிருக்கும் தன் மகளை வெறித்து நோக்கினார். அவரது சில்லிட்ட கண்ணி்லும்,சுளித்த உதட்டிலும், மகிகோவின் பார்வையிலும்கூட பளிச்சென்று தெரிந்தது என்னவென்றால்,மியாகி சீமாட்டியின் orgasm தான்!

-

Jun 1, 2012

டணால் K.A.தங்கவேலுடணால் K.A.தங்கவேலு தமிழ் திரையுலகம் கண்ட விசேஷமான காமெடியன்.
1950களில் சரியான மார்க்கெட்டில் சந்திரபாபுவுடன்இருந்த காலம் துவங்கி,பின்னால் நாகேஷ் காலம்,சோ,பின் தேங்காய் சீனிவாசன்,சுருளி ராஜன் காலஙகளையும் தாண்டி கொஞ்சமும் சலிப்பு ஏற்படுத்தாத, பொறி சற்றும் குறையாத நடிப்பு.

கல்யாண பரிசு பைரவன் மட்டுமல்ல.அறிவாளி முத்துலட்சுட்மியுடன் பூரி சுடற காமெடி,தெய்வபிறவி “ அடியெ, நீ என்ன் சோப்பு போட்டாலும் வெள்ளையாக மாட்ட”
 “பார்த்தியா, இதெல்லாம் எடுத்தா அதெல்லாம் வரும்னு சொன்னனேக்
கேட்டியா”

வீரக்கனல் படத்தில் “ தப்பித்தவறி அடி ஒங்க மேல பட்டுறுச்சின்னு வச்சிக்க்க்கிங்ங்ங்ங்...க..” என்று கேட்கும்  தங்கவேலு

“தங்கவேலு சுவாமியாக வந்ததும் நாங்களே! வேலுத்தங்கமாக வந்ததும் நாங்களே! காதலர்ர்ர்ரா...க வந்த்தும் நாங்களே!” அடுத்தவீட்டுப்பெண்!

மிஸ்ஸியம்மா வில் பாட்டு கற்றுக் கொள்ளும் தங்கவேலு.அப்போது ஜெமினி அந்த அறைக்குள் வந்தவுடன் வெட்கப்பட்டு தவிக்கிற காட்சி!

’திருடாதே’ படத்தில் “ பிசாசு ஏன் புரோட்டா கடைக்கு வருது? ஒரு வேளை குஞ்சு பொரிச்சிரிக்குமோ?’’

’நம் நாடு’ படத்தில் “ ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்” “கொல பண்ணது கூட லேட்டுங்க. நான் அமுக்குனதுல தான் செத்தான்!’’

சந்தானம் தனக்கு பிடித்த காமெடியன்களாக தங்கவேலு வையும் கவுண்டமணியையும் அடிக்கடி குறிப்பிடுவது சந்தோசம். இந்த இருவரும் நகைச்சுவையில் மிகவும் மாறுபட்ட சிகர சாதனையாளர்கள்.
கவுண்டமணி ”மேட்டுக்குடி” படத்தில் ஜெமினி கணேசனை “டேய்” என்பதற்கும் கல்யாண பரிசில் தங்கவேலு ஜெமினியை “டேய்” என்றதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
சந்தானம் தன் நடிப்புக்கு கவுண்டமணியை பின்பற்றுவது தெரிகிறது.
தங்கவேலு எந்த படத்திலும் கல்யாண பொண்ணு மாப்பிள்ளையைப் பார்த்து “இவ என்ன யாரோடயாவது ஓடிப் போயிட்டாளா? இல்ல இவன் தான் செத்துப் போயிட்டானா?” என்று கேட்கவே மாட்டார். தொந்தரவான வில்லனைக் கூட “அட நீ நல்லாருக்க” என்பார்.

“பணம்”(1952) படத்தில் வயதானவராக நடித்த பின் தான் தங்கவேலு பிசியான நடிகரானார். அதே வருடம் தான் சிவாஜிக்கு  ’பராசக்தி’. சிவாஜி ‘பணம்’ படத்திலும் நடித்திருந்தார்.இரண்டாவது படம்!

‘பணம்’ படத்தில் நடித்ததற்காக தயாரிப்பாளர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்தகாலத்தில்தங்கவேலுவுக்கு ஒரு 5000 ரூபாய் கொடுத்தாராம். இவரும் அந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு போய் காட்ட, இவருடைய பெரியப்பா “ அடப் பாவி . அன்னமிட்ட வீட்டுல கன்னமிடலாமாடா? கலைவாணர் கிட்ட திருடுனா நீ விளங்கவே மாட்ட”ன்னு அடிச்சி இழுத்துக்கொண்டு என்.எஸ்.கே விடம் அழைத்துக்கொண்டு போனார். என்.எஸ்.கே “ அந்த பணம் தங்கவேலுவுக்கு நான் கொடுத்த சம்பளம்” என்று சொன்ன போது தான் சமாதானம் ஆனாராம்.

எம்.ஜி.ஆர் அறிமுகமான சதி லீலாவதி(1936)யில் தங்கவேலுவுக்கு ஒரு சின்ன ரோல். அதே படத்தில் என்.எஸ்.கே, டி.எஸ் பாலய்யா முதலியோரும் நடித்தார்கள். ”இன்னைக்கு ஒன்னை shoot பண்ணப் போறோம்”னு இயக்குனர் தங்கவேலுவிடம் சொன்னதும் இவர் பதறிப் பயந்து என்.எஸ்.கே விடம் போய் “அண்ணே, என்னை சுடப் போறாங்களா?” என்று அழுதாராம்.
 என்.எஸ்.கே விளக்கம் சொன்னாராம்.
 “ பைத்தியக்காரா! ஒன்னை படம் பிடிக்கப் போறாங்கடா!”


தங்கவேலுவுக்கு பின்னனி பாடல்கள் பலவற்றை பாடியவர் எஸ்.சி.கிருஷ்ணன்.
“கண்ணே நல் வாக்கு நீ கூறடி, நான் நாலு நாளில் திரும்பிடுவேன்.
என் செல்வக்களஞ்சியமே! என் சின்னக்கண்ணு மோகனமே!”சீர்காழி சில பாடல்கள்

பிரபலமான ரம்பையின் காதல்(1956) பாடல்!
“சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே” சுடுகாட்டில்... 

பி.பிஸ்ரீனிவாஸ் பாடிய  அடுத்த வீட்டுப்பெண் பாடல்கள்.

”கண்ணாலே பேசி பேசி கொல்லாதே!”

“ மாலையில் மலர்ச்சோலையில்”