Share

Jan 22, 2010

என் கண்ணின் பாவையன்றோ

1944வது ஆண்டில் வில்லியம் பர்ரோஸ் வாழ்வில் ஒரு திருப்பமாக வந்தவள் ஜோன் வோல்மர் . அப்போதே அவளுக்கு ஜூலி ஆடம்ஸ் என்ற ஒரு பெண் குழந்தை உண்டு . மூன்றே ஆண்டில் பர்ரோஸ் மூலம் ஜோன் ஒரு ஆண்குழந்தைக்கு தாயானாள். வில் பர்ரோஸ் jr !

எப்போதும் ஜோனிடம் ஒரு விளையாட்டு விளையாடுவது பர்ரோஸின் வழக்கம் . அந்த விளையாட்டு விளையாடும்போது நல்ல போதையில் இருப்பதும் வழக்கம் தான். ஜோன் தலையில் ஆப்பிளை வைத்து பர்ரோஸ் குறி பார்த்து ஆப்பிளை சுடுவது. "வில்லியம் டெல் கேம்"

1951வது ஆண்டில் அப்படி அந்த விளையாட்டை விளையாடிய ஒரு நாள் வில்லியம் பர்ரோஸ் குறி பார்த்து ஜோன் வோல்மரின் இரு கண்ணுக்கு நடுவே சுட்டு விட்டான்.கண்களில் இருந்து வழிந்தது குருதி. ஜோன் வோல்மரின் மரணம் நிகழ்த்தப்பட்டது இவ்விதமே.

எட்டு வருடம் கழிந்த பின் வில்லியம் பர்ரோஸ் எழுதிய நாவல் 'Naked Lunch' .
ஹென்றி மில்லர் உணர்ச்சிப்பூர்வமாக ' அமெரிக்காவின் என் காலத்து ஒரே எழுத்தாளன் வில்லியம் பர்ரோஸ் தான்!' என்று சொல்லும்படியானது.
வில்லியம் பர்ரோஸ் சொன்னான் :"I would have never become a writer but for Joan's Death."

'Naked Lunch' நாவலைப் பொறுத்தவரை Authorial Intension is to Reveal the Facts.
"The title means exactly what the words say: naked lunch, a frozen moment when everyone sees what is on the end of every fork.

The Naked Lunch of human life is portrayed as Cannibalism, Oral-Anal Sex and Orgasm - Death.

கனடா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கூட்டுத்தயாரிப்பாக 1991 ல் டேவிட் க்ரோனன்பெர்க் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது'Naked Lunch'. நாவலின் முக்கியப் பாத்திரம் வில்லியம் லீ யாக (பர்ரோஸ் தான் !)பீட்டர் வெல்லர் என்ற நடிகர் நடித்திருக்கிறார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படம் Jawsல் ஹீரோவாக நடித்த ராய் சீடர்(Roy Scheider.இரண்டு வருடம் முன் இறந்து விட்டார் ) கூட Naked Lunch படத்தில் நடித்திருக்கிறார்.


மானிட இயல்பு என்பதிலிருந்து எவருமே தப்பிக்கவே முடியாது.

1997ல் மறைந்த பர்ரோஸ் தன் கடைசி காலத்தை பூனைகளுடனும்,கைத்துப்பாக்கி, ரைபிள் இவற்றுடன் கழித்தான்.

Jan 18, 2010

The Birds( 1963 movie)


                                                           (Banksy street art)
ஹிட்ச்காக் ஒரு டி வி விளம்பரம் பார்க்கிறார். அதில் டிப்பி ஹெட்ரன் என்ற அந்த மாடல் தெருவில் நடந்து போகிறார். அந்த மெலிந்த அழகான பெண்ணைப் பார்த்து ஒருவன் விசில் அடிக்கிறான். அந்தப் பெண்ணும் தன் கழுத்தைத் திருப்பி அந்த விசிலடிக்கும் மனிதனைப் பார்த்து ரசித்து சிரிக்கிறாள். இந்த டிப்பி ஹெட்ரனை ‘The Birds’ படத்தில் கதாநாயகியாக அறிமுகப் படுத்தும் ஹிட்ச்காக் தான் டிவி விளம்பரத்தில் பார்த்த காட்சியையே அப்படியே தன் படத்தில் வைக்கிறார்.
படத்தின் ஆரம்பக் காட்சியில் கதாநாயகி பறவைக்கடைக்குள் நுழைய வரும்போது தன்னைப் பார்த்து விசிலடிக்கும் சிறுவனை ரசித்து சிரிப்பது !

ஹிட்ச்காக் பறவைக்கடையின் உள்ளிருந்து இரண்டு நாய்களுடன் வெளியேறிச் செல்வார். Director's Cameo appearance! அந்த இரண்டு நாய்களும் அப்போது அவர் வளர்த்து வந்த சொந்த நாய்கள்.

Gulls, sparrows, crows!
Birds are not aggressive creatures.


ஆனால் ஏன் இப்படி நடக்கிறது?The Birds start a war against humanity.
கதாநாயகன் ராட் டைலரிடம் அவனுடைய தங்கை கேட்கிறாள்-“ Why do they try to kill the people?”
ராட் டைலர் களைப்புடன் சொல்கிறான் -“I wish I could say.”படத்தில் இதற்கு எந்த விடையும் இல்லை தான்.
Birds attacking people for no evident reason.ஆனால் ஹிட்ச்காக் பறவைகளை வில்லன்களாக்கி அட்டகாசம் செய்திருக்கிறார்.

"It could be the most terrifying motion picture I have ever made!"

பறவைகளின் யுத்தம் என்பது தவிர ஒரு அருமையான கதை நீரோடையாக தெளிவாக நகர்கிறது.
கதாபாத்திரங்கள் எளிமையானவை.
நாயகி மெலனி டேநியல்ஸ்-நாயகன் மிட்ச் பிரென்னர் காதல்,
மிட்ச் மீது இன்னும் கூட காதலுடன் பழகும் டீச்சர் ஆன்னி ஹேய்வோர்த்,
கதாநாயகனின் ஒரு சின்னத்தங்கை கேத்தி.
கதைநாயகனின் தாய் லிடியாவின் மகன் மீதான Possessiveness.லிடியா கழுத்துப் புருஷனை இழந்த விதவை என்பதனால் வவுத்துப் புருஷன் மீது தானே முழுப் பிடிப்பும் இருக்கும்!மகனை தன்னிடம் இருந்து பிரித்துவிட வரும் பெண் மீது கொள்ளும் கிலேசம்,பயம் எளிய மனோதத்துவம் தானே!

 
 Alfred Hitchcock during the shooting of his movie 'The Birds'