Share

Dec 31, 2016

ரங்கராஜ் பாண்டே


1999ல் மார்ச் 27ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்க்டன் லைப்ரரியில் நான் அசோகமித்திரனை அறிமுகப்படுத்தி பேசினேன்.

என்னிடம் இருந்த அசோகமித்திரனின் அத்தனை நூல்களும் அன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அசோகமித்திரன் அவற்றை ஒரு பார்வை பார்த்து விட்டு புருவத்தை உயர்த்தி “அட ராமச்சந்திரா! நான் இவ்வளவு புத்தகங்கள் எழுதியிருக்கிறேனா!”
நிகழ்ச்சி முடிந்த பின் மேடையில் அசோகமித்திரனை பலரும் சந்தித்து அளவளாவிய போது ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் அசோகமித்திரனிடம் “ பாலகுமாரனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்க நான் உடனே சொன்னேன். “Balakumaaran – Poor man’s Janakiraman!”
உடனே “ ஏன்? அப்படி சொல்றீங்க?” - மென்மையாக கேட்ட அந்த இளைஞன் ரங்கராஜ் பாண்டே!

நான் “அப்படித்தான் சொல்லனும்.”
அசோகமித்திரனுக்கு பதில் சொல்வதைத் தவிர்த்து விட்ட ஆசுவாசம். மென்மையாக இருவரையும் பார்த்து சிரித்தார்......................................................

http://rprajanayahem.blogspot.in/2016/12/blog-post_9.html

Dec 25, 2016

ஒரு நிகழ்வு - ஒரு கனவு


நாகார்ஜுனனின் தந்தை மறைந்து விட்டார் (Dr G R Gopalakrishnan (1927-2016)என்ற தகவலை ஈமெயில் மூலம் சில நாட்களுக்கு முன் எனக்கு தெரிவித்திருந்தார்.

 சென்ற நவம்பர் 26ந்தேதி இந்த துயர நிகழ்வு. தன் தகப்பனார் மீது கொண்ட பேரன்பு மெயிலில் வியாபித்து இருந்தது.
”Dr GRG was deeply committed to his work as a doctor and can be termed a "medical socialist”, had been at the hospital since 20 November when he was admitted for emergency stomach surgery. The obstruction which was causing him immense pain was operated on, but he could not survive post-operative complications arising out of a lung infection. At 89, his lungs were weak and he had to be put on a mild ventilator. We managed to avoid a full ventilator existence for him. The significant thing was he was fully conscious till two hours to the end and was able to write notes for all of us as he could not speak much.”
செல்லாத நோட்டு அறிவிப்பு எப்படியெல்லாம் எல்லோரையும் சித்திரவதை, படாத பாடு படுத்திவிடுகிறது. நாகார்ஜுனனும் இந்த வேதனைக்கு விதி விலக்கல்லவே.
”Thanks to the present cruel set of rulers at Delhi who want to bulldoze the hugely-differentiated populace of India to transition to a cashless utopia in a matter of weeks, all families facing illness, hospitalization, death, marriage, unexpected travel and what not are being put to extreme difficulty to deal with needs of cash currency. We were no exception to that.”
…………………………………….

ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதை தொகுப்பு “ ஞாபக சீதா”
’இந்த புதிய தொகுப்புக்கு “ஒளியேறிய வார்த்தைகள்” என்ற தலைப்பை முன்னர் உத்தேசித்திருந்தேன். ஒரு அதிகாலையில் வந்த கனவில் “ஞாபக சீதே” என்று கூப்பிடும் குரல் கேட்டு எழுந்தேன். அது தான் “ஞாபக சீதா” என்றாகியுள்ளது.’
'இலைகளின் நுனியில்
பாம்பின் வாலில்
நூலென ஆடும் கூர்மை
ஞாபக சீதா
உன் அழகு
உன் அகங்காரம்
அந்தரத்தில் வானில்
ஆடும் வாலின் நுனி
ஊசிக் கூர்மை'

.......................

சீதை பற்றி தி.ஜா 'கடைசி மணி 'கதையில் சொல்கிற விஷயம்  திரிசடை கண்ட 'கவித்துவமான கனவு'.

" சீதை வெள்ளை யானை மீது ஏறி நின்று சந்திரனைத் தொட்ட மாதிரி
திரிசடை கனவு கண்டாளாம் ''
....................................................................................

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html

.............................

Dec 23, 2016

சுகன் பாரீஸ்


R.P.Rajanayahem : புதுமைப்பித்தனின் ‘புதிய நந்தன்’, ந.பிச்சமூர்த்தியின் ‘அடகு’,கு.ப.ராவின் ‘பண்ணைச்செங்கான்’,’வாழ்க்கைக் காட்சி’ போன்ற கதைகள் தலித்களைப் பற்றிய நேர்மையான அக்கறையுடன் எழுதப்பட்டவை.தி.ஜா.வின் ‘எருமைப் பொங்கல்’ தலித் குறியீட்டுக் கதையாகவே தெரிகிறது,
தலித் ஒரு அனுபவம்.ஒரு தலித்தால் தான் தலித்களைப் பற்றி எழுத முடியும் என்று சொல்லப்படுகிறது.அரசாங்க அமைப்பின் மிக உச்ச பதவியில் அமர்ந்துகொண்டு சகல சுக,சௌகரியங்கள்,சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு,பன்னிவிட்டைப் பொறுக்குவதைப் பற்றி எழுதுவது தலித் இலக்கியம் ஆகும்போது,எந்தப் பாதுகாப்புமில்லாமல்,சகல சவால்களோடு வறுமையின் பிடியில் சிக்கிய நிலையில் கு.ப.ரா.’வாழ்க்கைக் காட்சி’எழுதியதும் ந.பிச்சமூர்த்தி ‘அடகு’ எழுதியதும் ஏன் தலித் இலக்கியமாகாது.


Sugan Paris : எருமைப்பொங்கல் குறித்து பல இடங்களில் எழுதியிருக்கிறேன் , நிராகரிக்கப்பட்ட கண்டுகொள்ளாமல் கவனமாகத் தவிர்க்கப்படும் மதிப்பீடுகள் குறித்து நண்பர்கள் பலருக்கும் எருமைப்பொங்கலை நான் பரிந்துரைப்பதுண்டு.
நீங்கள் கவனப்படுத்திய ஆளுமைகள் மற்றும் அவர்களது குறிப்பான பிரதிகள் தலித் இலக்கியத்திற்கு எதிரீடாக இல்லாமல் சமாந்தரமாக முக்கிய கவனம் கொள்ளத்தக்கன,ஆனால் அவை தலித் இலக்கியமல்ல.
அன்றியும் தாங்கள் குறிப்பிட்ட பிரதிகள் அத்தனையும் சேர்த்தாலும் டானியலின் முருங்கையிலைக் கஞ்சிக்கு நிகர்கொள்ளாது என என்னால் வாதிடமுடியும் . இலக்கியப்பிரதிகளை ஒன்றுக்கொன்று நிகர் வைத்துப்பேசும் ஆரம்ப கால சாதக பயில் நிலைகளை நான் எப்போதோ கடந்துவிட்டேன் .
அடிநிலையினரின் நிலையினை குறிப்பாக தலித் பாடுகளை குறித்த அவர்களின் படைப்புகளாலேயே நீங்கள் குறிப்பிடும் படைப்பாளிகள் இன்னும் கவனத்தில் வாழ்கிறார்கள் ,இருக்கிறார்கள் .


Gopalakrishnan ER •:உண்மை.இதில் பாரதியும் சேர வேண்டும்.
.................................................................................

Dec 22, 2016

A stranger’s kindness


ஸ்ரீவில்லிபுத்தூரில் அப்போது என் மனைவியின் தாலி செயின் அறுந்து வீட்டில் கீழே விழுந்து விட்டது. அதை சரி செய்ய ஒரு நகைக்கடையில் கொடுத்து இருந்தேன். 
அதை மீண்டும் அந்த நகைக்கடையிலிருந்து வாங்கிக்கொண்டு டூவீலரில் வந்து கொண்டிருந்தேன். தாலி செயினை கவனமில்லாமல் ஒரு சின்ன கேஷ் பேக்கில் வைத்து அதை ஃப்ரண்ட் பாரிலேயே தொங்க விட்டு வந்து கொண்டிருந்தேன். திடீரென்று “ சார்! சார்! “ கூப்பிடுகிற சத்தம் காதில் விழுந்தாலும் யாரோ யாரையோ கூப்பிடுகிறான் என நினைத்து வண்டியை நிறுத்தாமல் போய்க்கொண்டிருந்தேன். 

“ சார்! ஒங்க பேக் கீழ விழுந்திருச்சி சார்!” என்று நல்ல சத்தமாக கத்தும் சத்தத்திற்கு டூவீலரை நிறுத்தி திரும்பிப் பார்த்தேன். என்னுடைய கேஷ் பேக் தான் கீழே விழுந்திருக்கிறது..ஐயய்யோ.. உடனே இறங்கி அதை ஓடிப்போய் கையில் எடுத்துக்கொண்ட பின் எனக்கு இதை கவனப்படுத்திய நல்ல மனிதருக்கு நன்றி சொல்ல திரும்பிப்பார்க்கிறேன். அவர் சைக்கிளை நிறுத்தாமலேயே சென்று விட்டார். அவர் முகத்தைக்கூட சரியாக பார்க்கவில்லை.

தெய்வம் மனுஷ்ய ரூபனே.
The kindness of a stranger.
I can never repay his help, but an act of kindness is never wasted.
…………………………………………….

Dec 21, 2016

சி.மணி ஒரு மேதை


ந.முத்துசாமி மிகவும் மதித்துப்போற்றும் படைப்பாளிகள் மௌனி, சி.மணி ஆகிய இருவர் தான். ஒரு தற்செயல் ஒற்றுமை மௌனியின் இயற்பெயர் கூட மணி!

இலக்கிய உலகில் முத்துசாமியின் உற்ற நண்பர் கவிஞர் சி.மணி தான்.
இளமைக் காலத்தில் பார்த்து பழகியவுடன் சி.மணி உலக அளவில் பிரபலமாகி நிச்சயம் நோபல் பரிசு வாங்குவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாக இன்றும் கூறுவார். அவருக்கு தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவேயில்லையே. 

சி.மணி ஒரு கவிதையில் அடக்கமாக எழுதினார்- ’நானொரு மினி மேதை.’
“ A great man is always willing to be little.” மணி ஒரு முழுமையான மகத்தான மேதை. 

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இண்டர் மீடியட் படிக்க சேர்ந்த போது மாணவ நண்பர் தாமோதரன் புருவத்தை உயர்த்தி சொல்லியிருக்கிறார்.”மூன்று பைத்தியங்கள் இங்கே வந்திருக்கின்றன.”
அந்த மூவர் சி.மணி, வி.து.சீனிவாசன், வெங்கடேசன்.
அன்று துவங்கிய நட்பு முத்துசாமி வாழ்நாளில் மறக்கமுடியாதபடி ஆகியிருக்கிறது.

சி.சு.செல்லப்பாவுக்கு சி.மணியின் நெடுங்கவிதைகள் பிடிக்கவேயில்லை.
க.நா.சு அப்போது சி.மணியின் கவிதைகளைப் பார்த்து உதட்டைப்பிதுக்கி விட்டார்.
உன்னத கவிஞன் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறான்.
1969ல் ”நடை” பத்திரிக்கை முதல் இதழில் சி.மணி சிறிய கவிதைகள் வே.மாலி என்ற புனைபெயரில் எழுதினார். ந.முத்துசாமியின் “காலம் காலமாக” நாடகம், ஞானக்கூத்தனின் ஐந்து கவிதைகள் பிரசுரமாகியது.
நடை இதழ்களில் வே.மாலியாக சி.மணி கவிதை எழுதிய போது ஒரு வேடிக்கை. சி.மணியின் கவிதைகளை அலட்சியப்படுத்திய க.நா.சு வுக்கு வே.மாலியின் கவிதைகள் மிகவும் பிடித்துப்போய் விட்டது. “ யார்யா இந்த வே.மாலி. யார் இவன்? ரொம்ப நன்னா எழுதுறானே!” என்று விசாரித்திருக்கிறார்.
வெங்கட் சாமினாதன் அப்போது நண்பர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார்: ”சி.மணி தான் வே.மாலி என்கிற விஷயம் க.நா.சுவுக்குத் தெரிந்து விடக்கூடாது. தெரிந்தால் மாலியின் கவிதைகள் விஷயத்தில் பல்டி அடித்து விடுவார்!”

நான் 1983ம் ஆண்டு மார்ச் 27ந்தேதி க்ரியாவில் சி.மணியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று அங்கு அவருடன் எஸ்.வி.ராஜதுரையையும், க்ரியா ராமகிருஷ்ணனையும் சந்தித்தேன். புதையல் போல அங்கே இருந்த பழைய ’நடை’, ’கசடதபற’ ’பிரக்ஞை’ இதழ்களை வாங்கினேன். சி.மணியின் “ வரும் போகும்” கவிதைத் தொகுப்பு வாங்கிய போது சி.மணி அதில் கைழுத்திட்டு தந்தார்.
சி.மணி இன்று இல்லை. ஆனால் அவருடைய முக்கிய மொழிபெயர்ப்பு ஒன்று பற்றி சொல்ல வேண்டும்.
சுய மேம்பாடு பற்றிய தத்துவ விளக்கங்களை “ Fourth way” என விவரித்து குர்ஜீஃப்  (George Gurdjief) அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
 ”இந்த நான்காம் வழி”யை தன் பிரசங்கங்களிலும், எழுத்திலும் குர்ஜீஃப் சீடர் உஸ்பென்ஸ்கி ( P.D.Ouspensky) மேலெடுத்துச் சென்றார்

உஸ்பென்ஸ்கி மறைந்து பத்தாண்டுக்குப் பின் அவருடைய மாணவர்கள் 1957ம் ஆண்டு புத்தகமாக பிரசுரித்தார்கள்.
இந்த “Fourth Way” நூலை பிரமாதமாக மொழிபெயர்த்திருக்கிறார் சி.மணி.
சேலத்தில் அவருடைய மனைவியிடம் இந்த மொழி பெயர்ப்பு இருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் ராயல்டி தொகை எதிர்பார்க்கிறார்.
இது உடனே தமிழில் புத்தகமாக வெளி வரவேண்டிய முக்கிய நூல். அந்த நூல் வெளியிடப்படுவது சி.மணிக்கு மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.
சி.மணியின் உயிர்த்தெழுதலாக அந்த மொழிபெயர்ப்பு அமையும்.

.............................

Dec 18, 2016

Hacksaw Ridge


இரண்டாம் உலகப்போர்.

டெஸ்மாண்ட் டாஸ் எனும் ஒரு இளைஞன் ஆயுதத்தை எடுக்காமல் 75 படுகாயமுற்ற பட்டாளத்தாரை முதலுதவி செய்து, அதிக பிரயாசையுடன் காப்பாற்றியிருக்கிறான். 

‘While everybody is taking life I’m going to be saving it.’
இந்த உண்மைக்கதையை Hacksaw Ridge படமாக ஹாலிவுட் நடிகர் மெல் ஜிப்சன் இயக்கியிருக்கிறார்.
ஸ்பைடர்மேன் புகழ் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் தான் டெஸ்மாண்ட் டாஸ்! 

'I’m sorry, sergeant, I can’t touch a gun.'
Sergeant Howell to the soldiers : Private Doss does not believe in violence. Do not look to him to save you on the battlefield.
Captain Glover: You don’t kill?
Desmond T. Doss: No, sir.
Captain Glover: You know, quite a bit of killing does occur in war.
ஜப்பானியர்களுக்கெதிரான Battle of Okinawa.
எவ்வளவு ரத்தம்! எவ்வளவு பிய்ந்த சதை. புல்லட்டால் சிதைக்கப்பட்ட எண்ணற்ற (இளம்)பிணங்களின் குவியல்.

1998 ல் வந்த Saving Private Ryon ஐ மிஞ்சும் ரத்தக்களரி காட்சிகள் இந்த 2016ம் ஆண்டின் Hacksaw Ridge!
…………………………
photos.
1.Real Hero Desmond Doss receiving the Medal of Honor from President Harry Truman on October 12, 1945
2. 'reel' hero Andrew Garfield................

Dec 15, 2016

’மா பசி’ ம.பொ.சி


1950களில் ம.பொ.சியின் தமிழரசு கழகம், அண்ணாத்துரையின் தி.மு.க இரண்டு கட்சிக்குமே தங்கள் பொது எதிரியாக அறியப்படும் காங்கிரஸை விட பரஸ்பரம் ஒரு துவேசம் இருந்திருக்கிறது. 

1946ல் தமிழரசு கழகத்தை ஆரம்பித்த ம.பொ.சி 1954 வரை காங்கிரஸில் இருந்தவர் தான்.

தமிழரசு கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டுமே தமிழர் நலன் சார்ந்தே இயங்கியவை. இரண்டுமே சிறந்த மனிதர்களாக அடையாளம் கொண்டவர்களினால் சூழப்பட்டிருந்தன.
சிலம்புச்செல்வர் என்று ம.பொ.சிக்கு பேராசிரியர் ரா.பி.சேது பிள்ளை பட்டம் சூட்டினார்.
அறிஞர் என்று அண்ணாத்துரை கட்சிக்காரர்களால் கௌரவப் படுத்தப்பட்டார்கள்.
தமிழரசுக்கழகத்தில் கா.மு.ஷெரிப், கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா. கிருஷ்ணமூர்த்தி போன்ற திரை ஆளுமைகள் (கவிஞர்கள்) மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
கவிஞர் கண்ணதாசன் தி.மு.கவில் சிக்கிக்கொண்டார்.
ஏ.பி. நாகராஜன் தமிழரசு கழக ஆதரவாளர்.

1951ல் முதல் தி.மு.க மாநாட்டிலேயே புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மேடையேறி விட்டார்.

நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் சம்பத், மேதை மதியழகன்.

என்.வி நடராசனுக்கு எதுவும் பட்டம் இருந்ததாகத்தெரியவில்லை.

சிந்தனைச் சிற்பி சிற்றரசு.

ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரல்லாதவராயிருந்தாலும் இன்னொருவர்- (தக்ஷ்ணாமூர்த்தி!)- கலைஞர் மு. கருணாநிதி என்று அறியப்பட்டார்.

பேருக்கு ஆசிரியராய் இருந்த Tutor -
’பேராசிரியர்’ அன்பழகன்.
குட்டிப்பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி.
இப்படி கலர் கதாநாயகன்களால் தி.மு.க ஜொலித்தது.
தமிழரசுக்கழகத்தில் ஜிகினாத்தலைவர்கள் யாரும் இல்லை போலும்.
முக்கிய வேற்றுமை தமிழரசு கழகம் கடவுள் நம்பிக்கை கொண்ட இயக்கம்.
தி.மு.க தலைவர் அப்போதெல்லாம் ‘ஒருவனே தேவன்’ பிரகடனம் செய்திருக்கவில்லை. திருப்பதிக்கு சென்ற சிவாஜிகணேசன் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டு “ தம்பி! எங்கிருந்தாலும் வாழ்க!” என்று ஆசீர்வதிக்கப்பட்டார்.
மாணவர்களிடையே அன்று தி.மு.க., தமிழரசு கழகம் இரண்டின் ஈடுபாடு பாதிப்பு இருந்திருக்கிறது.

மாயவரம் முனிசிபல் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த ந.முத்துசாமி தி.மு.க. 

அவருடைய வகுப்புத்தோழர் கவிஞர் ஞானக்கூத்தன் தமிழரசு கழகம். 

இந்த அரசியல் சிறுவர்களான முத்துசாமியையும் ஞானக்கூத்தனையும் பிரித்திருக்கிறது. இருவரும் அந்த சின்ன வயதில் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால் நட்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.

முத்துசாமி அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இண்டர்மீடியட் படிக்கும் போது (1955- 1957) சிதம்பரத்தில் ஒரு தி.மு.க மீட்டிங்.
அண்ணாத்துரையுடன் தம்பித்தலைவர்களும் மேடையில்!
தம்பித்தலைவர்கள்!
ம.பொ.சிக்கு எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்ற ’மாபசி’! – இப்படித்தான் அன்று கிண்டலாக குறிப்பிடும் வழக்கம்.
மதராஸ் மனதே என தெலுங்கர்கள் சொன்ன போது அதை எதிர்த்து சென்னை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார்.
திருவேங்கடத்தை தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் தான் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும்
செங்கோட்டை( நெல்லை)யும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

சிதம்பரம் தி.மு.க மேடையில் பேசிய தம்பித்தலைவர்கள் அனைவரும் ம.பொ.சியை கடுமையாக விமர்சித்து திட்டி பேசியிருந்திருக்கிறார்கள். கடைசியில் அண்ணா எழுந்திருக்கிறார். அவருடைய மேலான நல்ல விஷயங்கள் பற்றியெல்லாம் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு தம்பித்தலைவர்களைப்பார்த்து கேட்டிருக்கிறார்: ”இப்படிப்பட்ட நல்லவரை நீங்கள் தாக்குவது என்ன நியாயம்?”

உடனே அந்த மேடையிலேயே அத்தனை தம்பித்தலைவர்களும் தங்கள் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ’அண்ணா! மன்னித்துக்கொள்ளுங்கள். ம.பொ.சியின் அருமை புரியாமல் பேசி விட்டோம்.’
ந.முத்துசாமி கல்லூரி மாணவராயிருந்த போது சிதம்பரத்தில் நடந்த இந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்வு இன்றும் பசுமரத்தாணி போல அவர் மனதில் நிறைந்திருக்கிறது.
1967ல் காங்கிரசை தமிழகத்தில் எதிர்ப்பதில் தி.மு.கவுடன் ராஜாஜியின் சுதந்திரா கட்சி கூட்டு சேர்ந்த போது ம.பொ.சியின் தமிழரசு கழகமும் இணைந்து நின்றது.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியின் ரசிகராக மாறினார். 
எம்.ஜி.ஆர் ஆட்சியில் எம்.ஜி.ஆர் அபிமானியாகி ம.பொ.சி தமிழக மேல் சபை தலைவராக இருந்தார்.
……………………………………..

பொய்த்திரள்


குருவி மண்டையன் தீவிர திமுக தொண்டன்.கருணாநிதியின் அத்யந்த பக்தன். புதிதாய் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர் திருப்பரங்குன்றத்திற்கு முதல் முறையாக வந்தபோது ”நெருக்கியடித்துக்கொண்டு ’பொன்மனச்செம்மல் வாழ்க!மக்கள் திலகம் வாழ்க’ என்று கூப்பாடுபோட்டுக்கொண்டே எம்.ஜி.ஆரை நெருங்கி தொப்பியை தட்டி விடப்பார்த்தேன்.முடியவில்லை.குனிந்து அவர் குண்டியில் நல்லா நறுக்குன்னு கிள்ளி விட்டேன்..” என்று பெருமையாக சொல்பவன். 

மேடைகளில் எம்.ஜி.ஆரைக் குறிப்பிடும்போது ம.கோ.ரா என்றுபெயரை மொழிபெயர்த்து –மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் -“ம.கோ.ரா பாமர மக்களை எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்?’” என்று சவால் விடுபவன்.

பிராமண துவேசம் குருவி மண்டையனுக்கு அதிகம். எதிரே யாராவது பிராமணரைப் பார்த்தால் சைக்கிளை மேலே ஏற்றி விட்டு ’ப்ரேக் பிடிக்கல சாமி’ என்று சொல்வான்.
தேம்பாவணி ஒட்டிய 3வது தெருவிலிருந்து நான் வெளியே வருகிறேன்.ஒரு பிராமண வாலிபன் குடுமி வைத்துக்கொண்டு என்னிடம் ’கோச்சடைக்கு பஸ் இப்ப இருக்றதா?’ என்றான். எனக்கு அவனைப் பார்க்க அம்மாவந்தாள் அப்பு ஞாபகம் வந்தது.அதே நேரம்”வீ..வீ..” என்று குருவிமண்டையனின் விசில் சத்தம். திரும்பிப்பார்க்கிறேன்.ஐந்தாவது தெருவிலிருந்து சைக்கிளில் வெளி வந்த குருவிமண்டையன் “துரை!அவனை நிறுத்தி வை.விட்டுடாத..” என்று சைகை செய்கிறான்.
அதே நேரம் அந்த ஸ்டாப்பில் ஒரு பஸ் வந்து நின்றது. நான் பதற்றத்துடன் அந்த பிராமண இளைஞனை “ இதில உடனே ஏறு” என்றேன். அவன் “இல்லை…இது கோச்சடை போகுமா” என்று இழுக்கும்போதே “முதல்ல ஏறு சாமி.அரசரடி போய் கோச்சடை மாறிக்க..சீக்கிரம் ஏறு” என்று வலுக்கட்டாயமாக நகர ஆரம்பித்த பஸ்சில் ஏற்றி விட்டேன்.
வேகமாக சைக்கிளில் வந்த குருவி மண்டையன் என்னை வெறுப்புடன் பார்த்து “ ச்சீ தமிழ் இன துரோகி..ஆரிய அடிவருடி.. ஒரு ரம்மியமான மாலைப்பொழுதை கெடுத்து விட்டாயே..” என்று பொருமினான்.”பாப்பானையும் பாம்பையும் கண்டா உடனே அடிக்கனும்ப்பா” என்றான் அந்த கறுப்புச்சட்டைக்காரன்.

1977 தேர்தலில் திமுகவிற்கு ஓட்டு கேட்க புது நுட்பமான யுக்தி கையாண்டான்.
ஹார்வி நகர்,சோமசுந்தரம் காலனி போன்ற இடங்களில் இரவு நேரம் கொலாப்புட்டன்,ஆட்டுமூக்கன்,ஒத்தகாதன்,தொல்லை ஆகியோருடன் சைக்கிளில் நுழைந்து “ டேய் ஆரியப்புண்ட மகன்களா.” என்று ஒரு சவுண்டு. உடனே வீட்டு விளக்குகள் அணைக்கப்படும்.கதவுகள் சாத்தப்படும்.அந்த வீடுகளில் உள்ள அத்தனை காதுகள் மட்டும் தீட்டப்படும்.
”ஒழுங்கா எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப்போட்டுடங்கடா. தி.மு.கவுக்கு ஓட்டுப்போட்டீங்கன்னா ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டீங்கடா. டே ஆரிய நாய்களா.. ஒழுங்குமயிரா அண்ணாதிமுகவுக்கு ஓட்டுப்போடலீன்னா அழிஞ்சே போவீங்கடா.ங்கொம்மால ஓக்க.. எம்.ஜி.ஆர் வாழ்க! கோத்தா புண்டையில ஓக்க..அண்ணாதிமுக வாழ்க!”

Dec 14, 2016

1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் நாகூர் ஹனிஃபா“இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை” பாடல் அறியாதவர் கிடையாது.
‘எல்லோரும் கொண்டாடுவோம்,அல்லாவின் பேரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி’ பாவமன்னிப்பு பாடலில் சௌந்தர்ராஜனுடன் சேர்ந்து ‘கறுப்பில்ல வெளுப்பும் இல்லே
கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவும் இல்லை
கடவுளில் பேதமில்லை’ பாடிய ஹனிஃபா

‘அழைக்கின்றார்,அழைக்கின்றார்,அழைக்கின்றார் அண்ணா!’
'ஓடி வருகிறான் உதய சூரியன்!'
‘கல்லக்குடி கொண்ட கருணா நிதி வாழ்கவே!’
‘எங்கள் வீட்டுப்பிள்ளை,ஏழைகளின் தோழன், தங்க குணம் கொண்ட கலை மன்னன், மக்கள் திலகம் எங்கள் எம்ஜியார் அண்ணன்!’
எம்.ஜி.ஆர் அதிமுக ஆரம்பித்து பின், 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது நாகூர் ஹனிஃபா தி.மு.க பிரச்சாரத்தில் பாடிய சவால் பாடல்
“நன்றி கெட்ட கிழவனுக்கும் நாணயமில்லா குள்ளனுக்கும்
நாங்கள் ஒன்று சொல்லுகிறோம்.
வந்து பாரும், திண்டுக்கலில் நின்று பாரும்!
நன்றி கெட்ட மோகனுக்கும் நாணயமில்லா சுப்பனுக்கும்
நாங்கள் ஒன்று சொல்லுகிறோம்
வந்து பாரும், திண்டுக்கலில் நின்று பாரும்!”
இந்த பாடலில் குறிப்பிடப்படுபவர்கள்
கிழவன் = எம்ஜியார்

குள்ளன் = மதியழகன் ( எம்.ஜி.ஆர் பிரிந்த போது சட்டமன்ற சபாநாயகர்)

மோகன் = மோகன் குமாரமங்கலம்
( அப்போது மத்திய அமைச்சர் )

சுப்பன் = சி.சுப்பிரமணியம் 
( அப்போது மத்திய அமைச்சர் )

இந்த தேர்தலில் நான்கு முனைப்போட்டி. வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் மீது கூட மூன்றாமிடம் பெற்ற ஆளும் கட்சி தி.மு.க.விற்கு கோபமில்லை. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு,க. மீதும் நான்காமிடத்தில் படுதோல்வியடைந்த இந்திரா காங்கிரஸ் மீதும் தான் கடும் வெறுப்பு.

...............................கண்ணுசாமி மேடை பேச்சு

வருடம் 1975 ஆகஸ்ட் மாதம்.
 திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில்(1973) எம்ஜியார் கட்சி மகத்தான வெற்றி பெற்று இரண்டு வருடத்திற்கு மேல் ஆகி விட்ட பின்னால்!

மதுரை கம்மாக்கரை கண்ணுசாமி தேவர் திமுக வின் கம்மாக்கரை அவைத்தலைவர். மேடையில் கண்ணுசாமி தேவர் பேசுகிற அழகு பிரத்யேகமானது. நல்ல போதையில் தான் மீட்டிங் மேடையில் ஏறுவார். பொன்னாடையை ஒச்சு தான் வந்து போர்த்துவான். ஒச்சு, பொன்னாடை இரண்டுமே இவர் ஏற்பாடு தான்.

எடுத்த எடுப்பிலே எம்ஜியாரை வம்புக்கிழுப்பார்.
" நீ என்னா சண்டை போடுறே. நம்பியாரும் அசோகனும் சொத்தைப்பயலுக.
 நீ ஆம்பிளையின்னா ஒண்டிக்கு ஒண்டி இந்த கண்ணுசாமி கூட வா. ஒங்காத்தா கிட்ட குடிச்ச சினைப்பால கக்க வைக்கலே நான் ஒன் கெண்ட காலு மசுரு ன்னு வச்சிக்க.எங்க முக முத்து நடிக்க வரவும் மார்கெட் போயிடுமேன்னு பயந்துபோய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்க வெண்ணை ..நீயெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்னா நான் ஐக்கிய நாட்டு காரியதரிசிடா டே .. கலைஞர் கிட்ட மோதினா காணாம போயிருவ.

டே நிக்சன் !நிக்சன் ! ஒன்னை நான் பாராட்டுறேன். நீ வாட்டர் கேட் பண்ணே . ஆனா உடனே பீல் பண்ணி ராஜினாமா பண்ணே. ஒன்னை நான் பாராட்டுரண்டா.

ஆனா ..... ( இந்த இடத்தில் நாக்கை கடிக்கிறார் ) இந்திரா காந்தி .. நீ மொத்தம் ஒவ்வலே .... மரியாதியா திருந்திடு ... நடக்கிறது எங்க ஆட்சி ..எமர்ஜென்சிகேல்லாம் கண்ணுசாமி பயப்பட மாட்டான்.மரியாதையா திருந்து ..இல்லன்னா மதுரை பக்கம் வந்துகிடாதே ..வீணா அழிஞ்சுபோவே. கலைஞரை பகைச்சேன்னு வச்சுக்க உனக்கு கண்ணுசாமி தான் எமன்.

டே எதிர்க்கட்சி காவாளிகளா... ( கண்ணுசாமி தேவர் தம்பி சின்ன சாமி தேவர், தங்கச்சி மாப்பிள்ளை கருத்தகண்ணு இருவரும் அண்ணா திமுக ) நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு முழச்ச காளான் எல்லாம் நெஞ்ச நிமித்துராங்கடா !அழிஞ்சே போவீங்கடா ..மரியாதையா கலைஞர் கால்லே வந்து விளுந்துடுங்கடா ... அது தான் பொழைக்கிற வழி.

டே தங்கபல்லு தங்காத்த்து உனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு.. (இது தனிப்பட்ட பகை -கொடுக்கல் வாங்கல் விவகாரம் .கண்ணுசாமி கடன் வாங்கியிருக்கிறார்.தங்காத்த்து திருப்பி கேட்கிறார். அதற்காக மேடையில் சவால் ) சும்மா நடக்கும் போதே எனக்கு வேட்டிக்கு வெளியே நீட்டிகிட்டுதாண்டா இருக்கும்! டே... எனக்கெல்லாம் எந்திரிச்சிடுச்சின்னு வச்சிக்க, அப்புறம் மடக்கறதுக்கு இந்தியாவிலேயே ஆளு இல்லடா டே .. .....

யாருடா அவன் ...நான் பேசும்போது அடிச்சி பார்க்கிறவன் .. அவனை தூக்குங்கடா ..... அந்த மண்டை மூக்கனை தாண்டா .. 
டே ஒத்த காதா ( இவனுக்கு ஒரு காது கிடையாது ) அவனை தூக்குடாங்கரேன் ...காதோட சேர்த்து அப்பி தூக்குடாங்கரேன்.. என்னடா.... அவன் முழியே அப்படி தானா ..அந்த முழியை தாண்டா நோண்டணும். பேசும்போது அடிச்சி பார்க்கிராண்டாங்கிரேன் ...."

.......................................Dec 10, 2016

லக்ஷ்மி மணிவண்ணனும் பவா செல்லத்துரையும்


முக்கிய இலக்கிய ஆளுமைகளில் பலரை நான் நேரில் சந்தித்ததேயில்லை.
எவ்வளவோ வருடங்கள் கழித்துத் தான் சில மாதங்கள் முன் விக்ரமாதித்யனையும், போன மாதம் கலாப்ரியாவையும் இப்போது எதேச்சையாக சந்திக்க முடிந்திருக்கிறது.
‘அம்ருதா’ இலக்கியப்பத்திரிக்கையில் லக்ஷ்மி மணிவண்ணனின் பத்தி ”தீவிரம் வேடிக்கை வேறுபாடு”

”சக மனிதன் கொள்ள வேண்டிய கற்பனைக்கு நம்மிடம் ஒன்றுமே இல்லையெனில் அப்படியொரு வாழ்க்கை வாழ அவசியமா என்ன?”
இந்த வரிகளைப் படித்த போது தோன்றியது - என்னைப் பற்றிய Gossip கூட இருந்து விட்டுத்தான் போகட்டுமே!
இந்த மாத அம்ருதாவில் லக்ஷ்மி மணிவண்ணன் சபரிமலை ஐயப்ப பக்தி பற்றி, காங்கிரஸ் , மோடி, (“ இரண்டு காங்கிரஸ் காட்சிகள், கட்சிகள் இந்தியாவில் எதற்கு?”) படிகம் 7 கவிதை இதழ், புறக்கணிக்கப்பட்ட கவிகள், எழுத்தாளர்களுக்காக நாகர்கோவிலில் உறைவிடம் ஏற்படுத்தும் முயற்சி (”நிழற் தாங்கல்” – கவித்துவமான பெயர்!)
“ நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருப்பினும் கூட கவிதை உங்கள் ஆளுமையில் ஒட்டவில்லையெனில் அவ்விடம் வெற்றிடமே. அதனை வேறு எதனைக்கொண்டும் ஈடுகட்டவே இயலாது…எவ்வளவு பெரிய சொருபமாக இருந்தாலும் கவிதையற்ற சொருபம் குறைபாடுடையதே. அதற்காக கவிதை பழகுங்கள்” – லக்ஷ்மி மணிவண்ணன்.
அம்ருதாவில் ஒரு அழகான மொழிபெயர்ப்பு தொடராக வருகிறது. ஹிட்ச்காக்கை 1962ல் த்ருஃபோ நேர்காணல்.
.....................................................


’அந்தி மழை’ மாத பத்திரிக்கையில் பவா செல்லத்துரையின் பத்தி கவனத்துக்குரியது.
”ஜோக்கர்” திரைப்படத்தில் பவா செல்லத்துரையை பார்த்திருக்கிறேன். ஓ! இவர் தானா!
பவா ஒரு இலக்கிய இயக்கம்.
கடந்த முப்பது வருட நிகழ்வுகள் காரணமாக என் மனதில் இப்படித்தான் அவர் பற்றி ஒரு பிம்பம்.
கோணங்கி என்னிடம் பவா பற்றி பேசியதுண்டு. கோணங்கி பற்றி இவர் எழுதியதை படித்தேன்.
தமிழின் நல்ல சிறுகதைகளை சொல்லும் அவருடைய நிகழ்ச்சி.
பவாவின் குடும்பமே தீவிர இலக்கிய செயல்பாட்டில் இருக்கிறது. நல்ல மலையாளக்கதைகள் மொழிபெயர்ப்பு பணி.
விகடனில் மலையாள எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானம் சிறுகதை ’பிரியாணி’ கிடைத்தது.

பவாவின் பத்தி “ மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்”
’காத்திருத்தல்’ இந்த மாத அந்திமழையில்.
ஓவியர் பாலு சார், சீனுவிடம் காணப்படுவது கள்ளமின்மை. குழந்தைமை. இதை பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் என்று தான் உலகம் எள்ளி நகையாடும்.

Dec 9, 2016

ஷம்மி


ஷம்மி என்ற செல்லப்பெயரால் அறியப்படும் எம்.சண்முகம் அவர்கள் 19 வருடம் சன் டிவியில் பிரபலமாக இருந்தவர். அவர் செய்தி வாசிக்கும் நேர்த்தி பற்றி இன்று கூட சிலாகிப்பவர்கள் உண்டு.
இப்போது நியூஸ் 7 சேனலில் தலைமைப் பதவியில் இருக்கிறார்.

மதுரை வெள்ளச்சாமி நாடார் கல்லூரியின் முன்னாள் மாணவர்.

முகப்பொலிவுடன் கூடிய சண்முகத்தின் கணீர் குரல். கணீர் குரலில் ‘கனிவு’ இருப்பது அவருடைய தனித்துவ விஷேசம். Powerful voice with compassion!
பரந்த அளவில் இலக்கிய அறிவு.
நியூஸ் 7 சேனலில் ந.முத்துசாமியின் ’பேசும் தலைமை’ நிகழ்ச்சிக்காக ஸ்டுடியோ போயிருந்த போது ஷம்மியை சந்திக்க வாய்த்தது.
உரையாடல் கலையில் அவருடைய சீர்மையை வார்த்தையில் விவரிக்க முடியாது.
நிறைவான உரையாடல் எப்போதும் சாத்தியப்படுவதில்லை. அன்று ஷம்மியுடன் பேசியதை எந்நாளிலும் மறக்கவே முடியாது. திருப்பாவை, த்ரூஃபோ!
திருப்பாவை மூன்றாவது பாடல்’என்னை இழந்த நலம்’ வரிகள் பற்றிய பிரமிப்பு, த்ரூஃபோவின் ’Woman next door’ திரைப்படம், சாக்லேட் மூலப்பொருள் தயாரிப்பில் குழந்தைத்தொழிலாளிகளின் நெஞ்சை உறையச்செய்யும் சோகம் பற்றிய டாகுமெண்ட்ரி….. நவீன தமிழ் இலக்கியப்பரிச்சயம்.
ஏதோ அருவியின் அருகில் இருக்கும்போது ஏற்படும் சுகானுபவமாக ஷம்மியுடன் இருந்த தருணம்.

அவரை சந்திக்க அந்த கண்ணாடி அறைக்கு வெளியே இருந்து அவரைப் பார்த்து புன்னகை செய்த போது ‘உங்களை எதிர்பார்த்திருந்தேன்’ என்ற தோரணையில் உடன் தலையசைத்து அழைத்து ஏதோ பல வருடங்கள் பழகிய நட்பு போல் மிக சகஜமாக பேச ஆரம்பித்தது… தடைப்பட்ட ஒரு உரையாடலை, விட்ட இடத்தில் இருந்து தொடர்வது போன்ற அனுபவமாக அந்த முதல் சந்திப்பு எனக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

………………………………………………………………………………