Share

Jan 30, 2024

கூத்துப்பட்டறை அதிபர் மு. நடேஷ்


தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் பக்கமா  டாக்ஸியில்  தாண்டி போக வேண்டியிருந்த போது 
ஒரு Associate memory 


மு. நடேஷ் சொன்ன விஷயம். 

கே.சி. மணவேந்த்ர நாத் பற்றியது 
கிறிஸ்டியன் காலேஜ்ல ஒரு நாடகம். 
கே. சி. நடிக்கும் போது நாய் ஒன்று நுழைந்து அவனை பார்க்கிறது. 
உடனே கலைஞன் கே. சி. அந்த நாயிடம் பேசுகிறான். அதனிடம் டயலாக்.
 அது ஏதோ புரிந்து விட்டது போல கவனமாக கேட்டு விட்டு அந்த இடத்தை விட்டு போய் விடுகிறது.நாடகம் தொடர்ந்து நடக்கிறது. 

நடேஷ் : சாதாரண விஜயங்கள்ள, வார்த்தைகள்ள மாட்டிக்கிட்டு இருக்கிறே. அதிலிருந்து வெளியே வந்தா தான் அனுபவம் கெடைக்கும்.

ஆசைய கையால பிடிக்க முடியுமா? 

Dynamic meditation. 

Inception படத்துல மனைவி போயிட்டா. ரொம்ப அறிவானவ. அவள மெமரிக்குள்ள போய் பாக்குறான். Dynamic meditation. 

போதை -
உயிரோட இருக்கிறதே ஒரு போதை. 
போதை-
ஒரு விஷயத்துக்குள்ள போய் அதுக்குள்ள இருக்கிறது தான் போதை. 
Body - mind ரெண்டும் சேர்ந்து தான் வேலை செய்யுது

நடேஷ் பேசியதெல்லாம் இப்பவும் கேட்கிறது. 
சற்றும் அயர்ச்சி தராத, ஒவ்வொரு தடவையும் புதியதாக இருக்கும் நடேஷ் வார்த்தைகள். 

பயிற்சி மாணவர்களுக்கு நடேஷ் சொன்னது:
“பேச்ச சினிமாவும் சீரியலும் ஒழிச்சி கட்டியிருக்கு. கதையம்சம் விவரணையா கொண்டு வா. Sub Text ஆ படி. 
அப்ப வந்துடும் பேச்சு. Do it freely. 
சொல்லின் உள்ளர்த்தம் 
தொனியிலே ஏறனும். 

வெள்ளையும் கருப்பும் நெறமில்ல. இந்த ரெண்டு நெறத்தில எழுதிய வரிகளுக்கு உயிர் உண்டு.”

டாக்ஸி ஆலந்தூர் வருகிறது. 
அப்போது  ந. முத்துசாமி நினைவு வருகிறது. 
அன்று ஆலந்தூரில இருந்த காலை 
தினமும் குஞ்சலி மாமி 
ஆஃபிஸ் போன பின்
 இளைஞன் முத்துசாமி 
எழுதிக்கொண்டே தான் இருப்பார். 

'எமக்கு தொழில் எழுத்து, இமைப்பொழுதும் சோராதிருத்தல்'

...


Jan 29, 2024

சமஸ் அருஞ்சொல்லில் R.P. ராஜநாயஹம்


சமஸ் :

வெற்றிகொண்டான் பேச்சைப் பற்றிய சின்ன, சிறந்த சித்திரங்களில் ஒன்று 
R.P. ராஜநாயஹம் எழுதிய இந்தக் கட்டுரை. விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். 

அப்படியே தொனியைக் கொண்டுவரும் எழுத்து. 

திறன்மிக்க பேச்சாளர்கள் தங்கள் உரையை ஒரு சினிமா போன்றே  திட்டமிடுகிறார்கள்! 👇

https://www.arunchol.com/r-p-rajanayahem-on-vetrikondan


திருஞானம் திரு :

"R.P. ராஜநாயஹம் எழுத்து, நாம் வழக்கமாக வகைப்படுத்தும் கட்டுரை,சிறுகதை, நிகழ்வு குறிப்புகள்,குறுங்கதை என்ற எந்த விதமான கட்டமைக்கப்பட்ட  வகைகளுக்கும் அடங்காத ஒன்று. 
அவர் தொடும் எழுத்தும்,
அதன் எல்லைகளும், 
அவரின் எழுத்தை தொடர்ந்து வசிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். 

சமஸ் தெளிவான அறிமுக குறிப்புடன் தான், சமீபத்தில் வந்த புத்தகத்தின் சிறு பகுதியை இங்கு பதிந்திருக்கிறார். 

இங்கு அதை பதிவதால் சமஸின் பத்திரிக்கை தர்மமே கேள்விக்குள்ளானதைப் போல பதறும் தூய்மை தோழர்கள் அந்த புத்தகத்தைக் கூட வேண்டாம், இணைப்பில் உள்ள கட்டுரைத் துளிகளையாவது 
வாசிக்க வேண்டும்.
 அது ஒரு காலத்தின் வரலாற்றை பகடி நிறைந்த மொழியில் பதிவு செய்கிறது. வெ.கொ பேசியது தவறா?, சரியா? என்று எங்குமே சார்பெடுக்கவில்லை.
 அந்த பேச்சின் பின்புலத்தில் தொக்கி நிற்கும் உண்மையைப் பேசுகிறது. 

உண்மையை அதன் ஆடையற்ற/ அலங்காரமற்ற நிலையில் அறிமுகப்படுத்துவதாலேயே
 R.P. ராஜநாயஹம்  எழுத்து தனித்துவமான எழுத்தாக நிற்கின்றது. தோழர்கள் பயப்படும்படியாக ஒன்றும் நடந்துவிடாது."

ஹஸன் அலி: 
"வெற்றி கொண்டான் பேச்சு குறித்த பதிவு மிகவும் அருமையான சிறப்பான ஒன்று ❤️. ராஜநாயஹம் அவர்களின் எழுத்தில் கூட்டல் குறைத்தல் என்பது கிடையாது. நிகழ்வின் தருணங்களை அப்படியே எழுத்தாகத் தருவதில் அவர் தேர்ந்தவர்❤️"


ஷார்ல் பாதலேர்

ஷார்ல் பாதலேர்

நிறைய விபச்சாரிகளிடம் ஷார்ல் பாதலேர் உறவுகொண்டான் . சாரா என்ற செக்ஸ் தொழிலாளி தான் அவனுக்கு வாழ்க்கை துணை. கொனோரியா, சிபிலிஸ் வியாதிகள் அவனுக்கு கிடைத்தன. 
சிபிலிஸ் வியாதி முற்றி 
தன் அம்மா மடியில் உயிர் விட்டான்.

ஷார்ல் பாதலேர் நாற்பத்தி ஆறு வயது வரை வாழ்ந்தவன். ஆடைகளை நேர்த்தியாக உடுத்துவதில் பாதலேர் ரசிகன். நிறைய செலவாளி. அதனால் கடனாளி.

ரைம்போ சொல்வான் ' பாதலேர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞன்'

அவனுடைய 'துன்ப மலர்கள் ' கவிதைத்தொகுதியில் ஆறு பகுதியை சென்சார் செய்தார்கள்.
அவற்றை தேடிப் பிடித்து  படித்தேன்.

பிரஞ்சு கவிதையுலகின் மிகப்பெரிய சாதனையாளன்.

ரைம்போ, பாதலேர் இருவரையும்  ஆங்கிலத்திலேயே படித்தேன். இருவர் பற்றி மட்டும் ஒரு நோட் புக் தனியாக குறிப்பெடுத்தேன் அந்த காலத்தில்.

 அவன் கவிதை வரிகள் சில 
Get Drunk
One should always get drunk.
You must get drunk without cease.

இந்த கவிதை படித்த போதே பாதலேர் எழுதியவை Dark poetry வகை தான் என தெரிந்தது.
Jeane Duval என்ற பெண்ணோடு தான் ரொம்ப நாள் வாழ்ந்திருக்கிறான். அவளுக்குத் தான் கீழ் கண்ட கவிதைகளை எழுதியிருப்பானோ?

Hymn to Beauty

‘Who cares if you come from Paradise or Hell’

‘Come from Satan, come from God
- who cares!’

அவளை வரைய ஆசைப்பட்டிருக்கிறான் .

‘The desire to paint
I am burning to paint her’

‘She is Lovely, more than Lovely:
I would compare her to a black sun,’

‘But it is the moon, rather, to which
She is more readily likened.’

கஞ்சா, குடி என்றே வாழ்ந்திருக்கிறான். 
அவன் அம்மா பாதலேர் இறந்த பின் அவன் கடன்களை தீர்த்திருக்கிறாள்.
46 வயதில் தன் மகன் இறந்த போது தன்னை எப்படி தேற்றிகொள்ளமுடிந்தது.
“I see that my son, for all his faults, has his place in Literature.”

பெரும்பாலான அவன் எழுத்து அவன் மறைவிற்கு பிறகே பிரசுரிக்கப்பட்டது.

பாதேலேருக்கு அமெரிக்க எழுத்தாளர் எட்கர் ஆலன் போ மீது, ரிச்சர்ட் வாக்னர் இசை மீது மிகுந்த மரியாதையும் ஆர்வமும் இருந்தது.
அவன் எந்த அளவுக்கு செலவாளி என்றால் அவனுடைய வசதிக்கு மேல் வாங்க புத்தகம், ஓவியம், புராதண பொருட்கள் இப்படி வாங்கி சேர்க்க ஆசைப்பட்டவன்.
கல்யாணம் என்பது பற்றி அவன் சொன்னான்.
“Unable to suppress love, the church wanted atleast to disinfect it and created Marriage.”
தன்னை பற்றி அவன் சொன்னது
“I have no convictions, because I have no ambitions. However I have some convictions, in a nobler sense, which cannot be understood by the men of my time.”….

2008 post

Jan 28, 2024

Singapore Elangovan Godse


Singapore Elangovan ‘Godse’

சிங்கப்பூர் இளங்கோவன். 
நாடக இயக்கத்தில் முதுகலை பட்டம் இங்கிலாந்தில் பெற்றவர். கவிஞரும் கூட. ’விழிச்சன்னல்களின் பின்னால் இருந்து’, ’மௌன வதம்’ கவிதைத்தொகுப்புகள்.

இவருடைய நாடகங்கள் சர்ச்சைக்குரியவை. பல நாடகங்கள் சிங்கப்பூர் அரசால் தடை செய்யப்பட்டவை. அவருக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்திருக்கிறது.

இவருடைய ”GODSE” ஆங்கில நாடகம் 2015ம் ஆண்டு படிக்க ந.முத்துசாமி கொடுத்தார். டவுன் லோட் செய்யப்பட்டு ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட பிரதி.
படித்து விட்டு அதை கூத்துப்பட்டறை முழுநேர நடிகர்களுக்கு வாசித்துச்சொல்லி விளக்கும்படி என்னை பணித்தார்.அந்த கடமையை நவம்பர் 23,24,25 தேதிகளில் அப்போது நிறைவேற்றினேன். முத்துசாமியும் முழு நிகழ்விலும் கலந்து கொண்டு உடனிருந்தார்.

சிங்கப்பூர் இளங்கோவனின் கோட்சே நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு கூத்துப்பட்டறையால் மேடையேற்றப்பட வேண்டும் என்று முத்துசாமி சார் விரும்பினார். நடக்கவில்லை.
நாடகம் மிகவும் வீரியம் வாய்ந்ததாய் இருந்தது.
இரண்டே கதாபாத்திரங்கள். கோட்சே, காந்தியார். இருவருமே உண்மையையே தேடியவர்கள்.

மரணத்திற்கு பின் இருவரும் திரிசங்கு சொர்க்கத்தில் சந்திக்கிறார்கள்.
காந்தியை சுட்ட துப்பாக்கி ஒரு குண்டு மீதமான நிலையில் அவர்கள் முன்.
திரிசங்கு சொர்க்கத்தில் இருந்து விடுபட அவர்கள் இருவருமே ரஷ்யன் ரௌலட் கேம் விளையாடும்படியான நிர்ப்பந்தம்.

நாடகத்தில் கோட்சே தான் பெரும்பாலும் protagonist. காந்தியாருடன் தர்க்கம் செய்யும் கோட்சே.

Godse’s Memoryscape. சரித்திர தகவல்களை புரட்டிப்போடும் வசனங்கள்.
எம்.ஓ.மத்தாய், குஷ்வந்த் சிங் போன்றோர் மவுண்ட்பேட்டன் மனைவிக்கும், நேருவுக்கும் இருந்த Extra- marital relationship பற்றி எழுதியிருக்கிறார்கள்.
இன்று இந்த விஷயம் எல்லோரும் கண் விரிய பேசுகிற cliché.

இளங்கோவன் இந்த கோட்சே நாடகத்தில் நேருவுக்கும் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்குமிடையிலேயே கூட ஹோமோசெக்சுவல் உறவு இருந்ததாக எழுதியிருக்கிறார்.

காந்தி முதிய வயதில் ஆத்ம சோதனையாக இளம்பெண்களுடன் படுத்துறங்கின விஷயம் மிகவும் விவாதிக்கப்பட்ட விஷயம்.
காந்தி கேட்கிறார். ’நான் இளம்பெண்களோடு படுத்தேன். இப்படி ஆம்பளையோடு படுத்திருக்கிறார்களே.’

According to Justice Gopal Das Khosla, one of Godse’s judges, who did play a role in convicting him:
 “… the audience was visibly and audibly moved. There was a deep silence when he ceased speaking. Many women were in tears and men were coughing and searching for their handkerchiefs. I have, however, no doubt that had the audience on that day been constituted into a jury and entrusted with the task of deciding Godse’s appeal, they would have brought in a verdict of ‘not guilty’ by an overwhelming majority.”

ஒரு விஷயம் கவனிக்கலாம்.
Godse என்ற அவருடைய பெயரின் துவக்கத்திலேயே கடவுள் துருத்திக்கொண்டிருக்கிறார். அவரை Godsend என நம்புகிற காவி அரசியலும் இன்று எட்டுக்கண்ணும் விட்டெரிகிறது.

.....

மீள்

Jan 27, 2024

"யப்பா பைரவா"

"யப்பா பைரவா"
- R.P. ராஜநாயஹம்
 

‘நவக்கிரகம்’  கே.பாலச்சந்தர் படம். அதில் மேஜர் சுந்தர்ராஜன் தன் தம்பியின் நண்பன் நாகேஷிடம்
“உன் பே..ப்பே..பேர் என்ன?” என்பார்.

நாகேஷ் : “ பா.. ப்பா.. பாலு “
’’என்ன கிண்டலா பண்றே?’’ என்று சுந்தர்ராஜன் கோபமாகி நாகேஷ் கன்னத்தில் அறைந்து விடுவார்.

வி.கோபால கிருஷ்ணன்: “ அண்ணே.. உங்கள போல இவனுக்கும் திக்குவாய் தான்”

மேஜர்: “ அடடே....   மன்னிச்சுக்கப்பா.. நீ என்ன imitate பண்றேன்னு உன்னை தெரியாம அடிச்சிட்டேன்..
நாகேஷ் : பெரியவங்கள imitate பண்ணலாம். ஆனா  counterfeit பண்ணக்கூடாது.

கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா மூலமாக எனக்கு அறிமுகமான  நண்பர் இளையராஜா. இவரது  மூத்த சகோதரர் செந்தில் நாதன். இருவருமே திருப்பூரில் தனித்தனியே பிசினஸ் செய்பவர்கள். இருவருமே நல்ல வாசகர்கள்.சேலம் ஓமலூரைச் சேர்ந்தவர்கள்.

இரண்டு வருடம் முன் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் காரணமாக தொடர்ந்த சிக்கலால் சமீபத்தில் செந்தில் நாதனுக்கு ஒரு பெரிய ஆபரேசன். அவர்கள் வீட்டுக்கு போயிருந்த போது செந்தில் நாதன் சொன்ன விஷயம் இது.

சில வருடங்களுக்கு முன் திருப்பூரில் ஓமலூர் சகோதரர்கள் அங்கேரிப்பாளையத்தில் ஒரு அபார்ட்மெண்டில் குடியிருந்த போது அதே அபார்ட்மெண்டில் புலி சரவணன் – டெய்சி தம்பதியர் குடியிருந்திருக்கிறார்கள். புலி சரவணனுக்கு டையிங் பிசினஸ். Week-end சமயத்தில் செந்தில் நாதனும் புலி சரவணனும் அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் ரிலாக்ஸ்டாக மதுவருந்திக் கொண்டிருந்த போது புலி சரவணன்
” நாளைக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரப்போகிறேன்.” என்று சொல்லியவர் மறு நாள் ஒரு 20 வயது மதிக்கத்தக்க பையன் ஒருவனை அழைத்து வந்து “ இவர் தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்! சாட்சாத் எஸ்.ராமகிருஷ்ணன்! “ என்று சொல்லியிருக்கிறார். 
செந்திலுக்கு புல்லரித்து செடியரித்து மரம் அரித்து விட்டது!
அப்போது தான் ஆனந்த விகடனில் ராமகிருஷ்ணன் முதல் தொடர் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அந்தத் தொடர் முடிய மூன்று வாரங்கள் தான் இருந்தது. இவ்வளவு சின்ன பையனாக எஸ்.ராமகிருஷ்ணன் இருப்பார் என்று செந்தில் கற்பனை கூட செய்திருக்கவில்லை எனும்போது பரவசமாகி விட்டார்! பால் பருவத்தில் எவ்வளவு அதி அற்புதமாக எழுதுகிறார்.

எஸ்.ரா இப்போது திருப்பூரில் புலி சரவணனிடம் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. நான்காயிரம் சம்பளம். அந்தப் பையன் தான் ஆனந்த விகடனுக்கு நான்கு வாரம் முன்னதாகவே எப்போதும் எழுதி அனுப்பி விடுவதாகவும் பத்திரிக்கையிலிருந்து வாரம் ரூபாய் பத்தாயிரம் தனக்கு தருவார்கள் என்றும் சொல்லியிருக்கிறான். 

புலி சரவணன் புத்தகமோ, பத்திரிக்கையோ பார்ப்பவரல்ல.  பிரபல விகடனில் ’தன் பால் பருவத்தில்’ எழுதும் மிக இளம் எழுத்தாளர் தன்னுடைய கம்பெனியில் வேலை செய்கிறார் என்பதைப்பற்றி தெரிய வந்தவுடன் தன் நண்பர் செந்தில் நாதன்( வாசகர் என்பதால்) பூரிப்புடன் அறிமுகம் செய்திருக்கிறார்!

உடனே, உடனே செந்தில் நாதன் தன் ஃப்ளாட்டுக்கு அழைத்துச் சென்று தன் புத்தக கலெக்சனைக் காட்டியிருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பு நாவல் இளம் எழுத்தாளர் படிக்கவில்லை என்றதும் மனமுவந்து அதை இவர் பரிசளித்திருக்கிறார். 

செந்தில் நாதன் ரொம்ப வெள்ளை உள்ளத்துடன் புலி சரவணனிடம் 
எஸ்.ரா வின் பெருமைகளை எடுத்துச் சொல்லி அவரை இன்னும் கௌரவமாக நடத்தச் சொல்லியிருக்கிறார். உடனே பால் மனம் கொண்ட புலி சரவணன் இந்த பையனின் சம்பளத்தை ஆறாயிரமாக உயர்த்தி விட்டார். வேலை இனி இந்த எஸ்.ரா வுக்கு கம்பெனிக்கு வரவேண்டிய செக், பணம் கலக்சன் மட்டும் பார்த்தால் போதும் என்று சலுகை.
பழம் நழுவி பாலில்!

செந்தில் நாதன் இந்தப் பையன் முதலாளி புலி சரவணனைப் பார்க்க வீட்டிற்கு வந்தால் உடனே எழுந்து நின்று விடுவார். ஞானப்பால் குடித்த ஞானசம்பந்தனாயிற்றே. 

புலியிடம் செந்தில் “ மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது. இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய எழுத்தாளன் பாருங்கள். பால் பருவ சாதனையாளன். ஐய்யோ.புலி,உங்களிடம் வேலை செய்வது உங்களுக்கு எவ்வளவு பெருமை! ” என்று மலைத்து மாய்ந்து….......

அந்தப்பையன் அடுத்த வாரம் “ நான்  விகடனில் ட்ரையினில் மானபங்கப்படுத்தப் பட்டு ரேப் செய்யப்பட்ட வட நாட்டுப் பெண் பற்றி எழுதியதைப் படித்து விட்டீர்களா? “ என்று கேட்டிருக்கிறான்.

“ ஒரு குறிப்பிட்ட வகை சிலந்தி பற்றி நான் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அந்த சிலந்தி  ஒரு மனிதனை கடித்தால் குறிப்பிட்ட சில வியாதிகள் குணமாகின்ற என் கண்டு பிடிப்பைப் பற்றி டிஸ்கஸ் செய்வதற்காக என்னை அமெரிக்காவில்’ நாசா’ விலிருந்து அழைத்திருக்கிறார்கள்!” என்று அவன் ஒரு நாள் முதலாளி வீட்டுக்கு வந்த போது அவர் முன்னிலையிலேயே தன்னைப் பார்த்தவுடன் மரியாதையுடன் எழுந்து நின்ற செந்தில் நாதனிடம் கேஷுவலாக சொல்லி விட்டான்.

ஆ! ஆ! ஆ! எஸ். ரா எழுத்தாளர் என்பது தெரிந்ததே. அவர் சின்ன பையன் என்பதும் தெரிந்ததே. எளிமையாக நம் நண்பர் புலியிடம் வேலை பார்க்கிறார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அவர் இன்று ’நாசா’ போற்றும், 
 ( கோவை ஜி.டி.நாயுடு பாணியில் சுயம்புவான, மம்சாபுரம் ராமர்பிள்ளை போல பரபரப்பான ) விஞ்ஞானியும் கூட என்பது தான் தெரியாததே!!!

மூன்றே வாரத்தில் எஸ்.ரா வின் தொடர் ஆனந்த விகடனில் முடிவுக்கு வந்த போது எஸ்.ராமகிருஷ்ணனின் புகைப்படம் அதில் அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்த செந்தில் நாதனுக்கு அதிர்ச்சி. 
புலி சரவணனிடம் வேலை பார்த்த ஆளுக்கு பதிலாக வேறொரு யாரோ ஒருவருடைய படம் வெளியிடப்பட்டிருந்தது.. சில நிமிடங்கள் குழப்பம். செந்தில் மூளையில் பனி மூட்டம். பனி விலகியதுமே அச்சில் வந்திருந்த அந்த யாரோ ஒருவர் தான்  உண்மையான எஸ். ராமகிருஷ்ணன் என்பது உறைத்தது! 

உடனே அந்த ஆனந்த விகடனுடன் புலியின் ஃபேக்டரிக்கு புயலாய் கிளம்பிப்போனால் பால் பருவ எழுத்தாளரை அங்கே வேலை பார்ப்பவர்கள் கும்மிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

கலக்ஸனில் செக்குகளை மட்டும் ஒப்படைத்த அந்த எழுத்தாளன் கேஷ் எல்லாவற்றையும் அமுக்கிய விஷயம் வெளி வந்து விட்டதால் மண்டகப்படி. 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி விட்டார் செந்தில் நாதன். ஆனந்த விகடனை த் தூக்கிப்போட்டு விட்டார். எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றி விட்டாரேயம்மா.....

யப்பா பைரவா! நீ யாரு பெத்த பிள்ளயோ!

புலி சரவணன் 
இந்த கையாடல் தெரிய வந்தபோது எழுத்தாளர் இப்படி அயோக்கியத்தனம் செய்து விட்டாரே என்ற அதிர்ச்சியில் இருந்தவருக்கு கையாடல் செய்தவர் எழுத்தாளரே அல்ல, எஸ்.ராமகிருஷ்ணனும் அல்ல என்று தெரிந்த போது பேரதிர்ச்சி. இப்போது முதலாளியே அந்த ஃப்ராடை அடிக்க ஆரம்பித்து விட்டார். உடனே வேலை பார்ப்பவர்களின் தர்ம அடி பலமாகி விட்டது.

முதலாளியின் மனைவி திருமதி டெய்சி தான் அக்கவுண்ட் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அவர் தான் கையாடலை அறிய வந்தவர். 

வலி பொறுக்க முடியாமல் அந்த ஃப்ராடுப் பயல் “ மேடம். நானும் ஒரு கிறிஸ்டியன் தான். மேடம். அடிக்க வேண்டாம் என்று சொல்லுங்க மேடம்!” என்று கெஞ்சியிருக்கிறான்.

மூன்று வாரத்தில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் கையாடல் செய்த அந்த ஃப்ராடிடம் இருந்து ஒரு பைசா கூட ரிகவர் செய்ய முடியவில்லையா?
அவன் யார்? எந்த ஊர்?

அவனுக்கு புலி கொடுத்திருந்த பைக்கை மட்டும் ரிகவர் செய்து விட்டு விரட்டியிருக்கிறார்கள்.

( தி இந்து தமிழில் வெளிவந்த 
R.P. ராஜநாயஹம் கட்டுரை)

.....


எஸ்.ரா நெடுங்குருதி
'நெடுங்குருதி' நாவலை நான் தான் திருப்பூரில் அறிமுகம் செய்து பேசினேன்.

 எஸ். ராமகிருஷ்ணனை சென்னையில் இருந்து இந்த நாவல் பற்றிய கருத்தரங்கத்திற்கு அழைத்து
 அந்த நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்தேன்.  நண்பர் சரவணன் மாணிக்கவாசகத்தை அதற்கான செலவை ஏற்றுக்கொள்ள சொல்லி கேட்டேன். சந்தோசமாக முன்வந்தார். இப்படி  யாரிடமும் எதுவும் கேட்டதே இல்லை. இப்படி  சாதாரணமாக யாரையும் கேட்டதில்லை. அதற்கு முன்னும் பின்னும். 
எப்படியோ இந்த நாவல் பற்றி அப்படி நான் ஒரு நிகழ்வு நடத்த நினைத்தேன்.

நாவல் அத்தியாயம் மொத்தம் 99. பெரிய நாவல் 469 பக்கங்கள் கொண்டது.
கோடை காலம்,காற்றடி காலம், மழைக்காலம், பனிக்காலம் என நான்கு பாகங்கள்.

நாகு, ரத்னாவதி, வேணி, திருமா, வசந்தா, ஜெயக்கொடி, 
வடுவார்பட்டி குறவர்கள் லட்சுமணன், ஈரத்துணி கள்ளன் சீனி, லயோனல், ஜெசிந்தா, துந்தனா வாசிக்கும் பரதேசிகள், வேல்சிதுரை, 
சிங்கி கிழவன், பண்டார மகள், தேவானை ஜெயராணி, மல்லிகா, சேது,வசந்தா, சங்கு,கிட்நா, நாகுவின் தாத்தா, நாகுவின் அய்யா, அம்மா, அம்மாவோட மயினி, பக்கிர்,
 பக்கிரின் மனைவி, ஆதி லட்சுமி, மரக்கடை வியாபாரி அஷ்ரப், ரத்னாவதியின் அத்தை என்று நிறைய கதாபாத்திரங்கள்.

"மழை நீண்ட உரையாடலை ப்போல நகரோடு பேசி ஓய்ந்தது. மழை வெறித்த பிறகு தெருவில் இறங்கிப்போகின்றவர்களின் பேச்சு கூட நனைந்திருந்தது." எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து நடை.
பானை சோற்றில் இருந்து ஒரு சோறு இங்கே வைக்கிறேன் : "சிங்கிகிழவன் ஒரு திருடன். செத்துப்போன சிங்கியுடன் ஆடு புலி ஆடுபவன். சிங்கி கிழவன் குழந்தைகள் கழுத்தில் அணிந்த நகைகளை கழட்ட மாட்டான். குழந்தைகள் ஏங்கிபோய் விடுவார்கள் என விட்டு ப்போய் விடுவான்."

நெடுங்குருதி கருத்தரங்கம் பற்றி
 R.P.ராஜநாயஹம் உரை பற்றி உயிர்மையில் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். கோவையில் இருந்து கூட வாசகர்கள் வந்திருந்தார்கள்.

ஆரம்பமாக நாவலை அறிமுகப்படுத்தினேன். தொடர்ந்து எஸ்.ராமகிருஷ்ணன் தன் படைப்பை பற்றி பேசிய பின் மீண்டும் நாவல் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினேன். வாசகர்கள் கேள்வி பதில் என நிகழ்வு விரிந்தது.

2004 ல் நடந்த நிகழ்ச்சி. 
 இரண்டரை ஆண்டுகள் கழித்து கோவை நண்பர் கவிஞர் தென் பாண்டியன் சொன்னார். " நீங்கள் பேசிய விஷயங்கள் தான் பின்னர் நான் நெடுங்குருதி நாவல் படிக்கும்போது அதனை புரிந்து கொள்ள மிகவும் உதவியாய் இருந்தது. இன்றும் நெடுங்குருதி பற்றிய உங்கள் உரையை என்னால் மறக்க முடியவில்லை."

திருப்பூரில் முகம் தெரியாத சிலர் என்னுடைய 'நெடுங்குருதி ' பேச்சு பற்றி இது போல அடிக்கடி குறிப்பிட்டார்கள்.
அந்த உரை மட்டுமல்ல.
திருச்சியில் நான்காண்டுகள் தமிழ் இலக்கிய கழகத்தில் மணிக்கணக்கில் நான் பேசியதைக்கூட நான் எழுத்தில் கொண்டு வர முயற்சித்ததில்லை.

ஹெமிங்க்வேயின் கிழவனும் கடலும் நாவல் பற்றி ராஜநாயஹம் நிகழ்த்திய உரை குறித்து 
திருப்பூரில் கவிஞர் காயாதவன் சிலாகித்து அடிக்கடி குறிப்பிடுவார்.

திருச்சியில் ஒரு பேராசிரியர் உரை நிகழ்த்தும் முன் சொல்வார்
"R P ராஜநாயஹம் போல என்னால் பேசமுடியாது.மணிக்கணக்கில் பேசினாலும் சுவாரசியம் குறையாமல் பேசுவார். கேட்பவர்கள் ரசிக்கும்படியாக பேசுவார் "
நான் குறிக்கிட்டு சொல்வேன்
 “ I feel flattered”
உடனே அவர் " flattery கிடையாது. 
இது தான் fact. எல்லோருக்கும் தெரிந்த உண்மை " என்பார்.

என் நண்பர் திருச்சி பேராசிரியர் காசியப்பன் சொல்வார் " உங்கள் ஆற்றல் எல்லாம் காற்றில் வீணாகிறது எழுதாமலே."

Jan 26, 2024

Carnal Thoughts

1. Renowned Artist Muralidharan Krishnamoorthy 
On R. P. Rajanayahem's Popular write ups 
'CARNAL THOUGHTS' :

   "பொதுவாகவே எனக்கு 
' sence of Humour '
   உள்ள நபர்களை  பிடிக்கும்.....
    R.P.ராஜநாயஹம் 
'Extraordinary  sence of Humour' 
      உள்ள ஓருவர்..உதாரணம்....
அவரது 
    Carnal Thoughts posts....😃😃😃♥️."

2. "R.P.ராஜநாயஹம் ஓர் அற்புதன். 
அவரை நான் காதலிக்கிறேன். இளவயதில் அந்த Carnal Thoughts படிக்காத நாளே இல்லை!"

- UmamaheshVaran Lao Tsu

Jan 24, 2024

ஆழ்ந்த வாசிப்பு, யாரும் வாழ்ந்திடாத வாழ்க்கை அனுபவம்


கவிஞர் கலாப்ரியா:
” R.P. ராஜநாயஹம் பலதுறைகளிலும் ஆழமான வாசிப்பும், யாரும் வாழ்ந்திராத வாழ்க்கை அனுபவமும் உடையவர்.
அவர் கொண்டாடப்பட வேண்டிய கலைஞர்"

Jan 20, 2024

கிளர்ந்தெழும் தாபம், அதி மதுர மதுர

கிளர்ந்தெழும் தாபம்,
 அதி மதுர மதுர

இரு நூல்களும்
2008 துவங்கி 2019 வரை
பதினொரு வருடங்களாக
R.P.ராஜநாயஹம் எழுதியவை

2024 ம் ஆண்டில் அசோக் சாய் ரமணாவின்
ஜெய்ரிகி வெளியீடாக வருகின்றன புத்தகங்கள்


Jan 12, 2024

கிளர்ந்தெழும் தாபம் அதிமதுர மதுரR.P. ராஜநாயஹம்
அடுத்த இரண்டு நூல்கள் 

அதி மதுர மதுர

கிளர்ந்தெழும் தாபம்

ஜெய்ரிகி வெளியீடு


R.P. ராஜநாயஹம் "சினிமா எனும் பூதம்"111, 112


111, 112th Episodes 

முரசு டிவியில்
வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை எட்டரை மணிக்கு

R.P. ராஜநாயஹம்

"சினிமா எனும் பூதம்" தொலைக்காட்சி தொடர்

'சொல் ஏர் உழவர்' கவிஞர் A.மருதகாசி 

 நடிகருமான சந்தக் கவிஞர் K.D. சந்தானம்

வள்ளுவரின் 'சொல் ஏர் உழவர்' vocabulary.
மருத காசியை எப்போதும் நினைவு படுத்துகிறது.

K.D. சந்தானத்தின் நினைவு கொள்ளத்தக்க சந்தப்பாடல்களும் துணை நடிகராக கண்ணியமான நடிப்பும்.

....

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

Jan 10, 2024

விஜய்காந்த் வீரமுத்து


பழனியில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸில் வீட்டம்மாவுடன்  போய்க்கொண்டிருந்தேன். கீர்த்தி இரண்டு வயது குழந்தை. 

வடமதுரையில் ஏறிய சிறுவன் (15வயது)எங்களோடு வந்து உட்கார்ந்தான். 
பத்தாம் வகுப்பு படிக்கிறான். வீரமுத்து.
வீட்டம்மாவிடம் ரகசியமாக 'இவனப் பாத்தா ரஜினி ரசிகன் மாதிரி தெரியுது' என்று பையன் காதில் விழும்படியா சொன்னேன்.
வீரமுத்து சட்டென்று தலையை ஆட்டி மறுத்து " நான் விஜய் காந்த் ரசிகன்"
" ஓஹோ நம்ம ஆளா. நானும் விஜய் காந்த் ரசிகன் தான். திருச்சியில எங்க ஏரியாவில்  நான் தான் விஜய் காந்த் ரசிகர் மன்ற தலைவர். நீயும் நம்மாள் தானா. சூப்பர்"

வீரமுத்துக்கு வாயெல்லாம் பல்லு. கண்ணுல பல்ப்.

"கூலிக்காரன் சூப்பர் படம்யா" அப்ப சில நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆகியிருந்த விஜய் காந்த் படம். 

" திண்டுக்கல்ல அத்த வீட்டுக்கு போறேன். போனவுடனே இன்னக்கே கூலிக்காரன் பாத்துடுவேன்"

"நான் திருச்சியில ரெண்டு வாட்டி பாத்துட்டேன். பழனியில நேத்து மூனாவது வாட்டி கூலிக்காரன் பாத்தேன். இப்ப திருச்சி போனதும் நாளக்கி நாலாவது வாட்டி பார்ப்பேன். ஆஹா சூப்பர் படம்யா "

வீரமுத்து ஆர்வமா"கத என்ன"

" கத கேக்காத. அப்றம் சஸ்பென்ஸ் ஒடஞ்சிடும். சொல்ல மாட்டேன் " 

வீரமுத்து உற்சாகமாக ஒன்பதாம் க்ளாஸ் படிக்கும் போது பாத்த"கரிமேடு கருவாயன்" படக்கதய விரிவா சொல்ல ஆரம்பிச்சிட்டான். அவன் சொல்ல சொல்ல நான் தலைய ஆட்டி
' இந்த சீன் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.' 'இந்த சீன்ல கை தட்னேன்.'
 'என்னா சூப்பர் சீன் ' ஆகாகாரம் செய்தேன்.

" வீரமுத்து நீ விஜய் காந்தும் எம்ஜியாரும் நடிச்ச படம் பாத்ருக்கியா?"

'தெரியாது' - தலையாட்டினான்.

குழம்பி கேட்டான் "படத்து பேரு?"

" பட்டிக்காட்டு பொன்னையாவை காத்த கரிமேடு கருவாயன்"

'இன்னொருக்க சொல்லுங்க' கேட்டு படத்தோட பேரெ எப்டியாவது மனப்பாடம் செய்ய முயற்சி செய்தான்.

இந்த படம் பாத்தப்றம் தான் விஜய் காந்து ரசிகரானேன்.
படத்தோட கத க்ளைமாக்ஸ் உடனே சொன்னேன்.
எம்ஜியார கொள்ளக்கூட்டக்காரங்கெ பிடிச்சிட்டு போயிடுவாங்கே. தூண்ல கட்டிப் போட்டு எம்.ஜியார கொல்ல பாப்பாங்கே. விஜயகாந்து கரெக்டா அங்க போயி ஓட்ட பிரிச்சி குதிச்சி அவிங்கள அடி வெளுத்து எம்.ஜி.ஆர காப்பாத்திடுவாரு. 
சூப்பர் படம்யா. வீரமுத்து ஏய்யா அந்த படத்த பாக்காம விட்ட." 

" நான் பார்த்ததில்லயே. எனக்கு இந்த படம் தெரியவே தெரியாதே"
 வீரமுத்து தவித்து தக்காளி வித்தான்.

திண்டுக்கல்லில் இறங்கிய
வீரமுத்துக்கு 'தேடல்' உறுதி. 
கயிறு போட்டு விட்டாச்சி.

Jan 7, 2024

கூத்துப்பட்டறையில் R.P. ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை

கூத்துப்பட்டறையில் நடந்த
R.P. ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை

ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை நிகழ்ந்தேறிக்கொண்டிருந்தது
 சாமி கொடுத்த வரம். 
நடேஷ் சாமி கொடுத்த வரம்.

2018 ஏப்ரல் துவங்கி மேடையில் நடந்து கொண்டிருந்த ராஜநாயஹம் கூத்து 

 பெரும் தடைகளையும் இந்த வரம் மீறியதால் 2018 டிசம்பர் 15லும் 30ம் தேதியிலும் கூத்துப்பட்டறையில் ராஜநாயஹம் பெர்ஃபாமன்ஸ் நடந்தது. 

டிசம்பர் 23ம் தேதியும்  நடந்தது.

15ம் தேதி நிகழ்ச்சி நடந்த பின் இளைஞன் ஒருவன் ராஜநாயஹம் காலில் விழுந்து பரவசப்பட்டான்.
 
30ம் தேதி உற்சாக அப்ளாஸிற்கிடையே பூவண்ணன் கமெண்ட். “சினிமாவில் கூட இப்படி நான் சிரிச்சதில்லை சார்.”

ஒரு இருபது வயது பெண் ‘ என்ன சொல்றதுன்னே தெரியல சார். கூத்துப்பட்டறையில் இப்படியெல்லாம் நடக்குமா? ரொம்ப பிரமாதம் சார்”
என்று பிரமிப்பு நீங்காத நிலையில் ரோட்டில் ராஜநாயஹத்தைப்பார்த்து சொன்னாள்.

2019 ஜனவரி ஆறாம்தேதியில் கொத்தனாரின் கொத்து வேலை நடந்ததால் தியேட்டரும், வாசல் முன் பகுதியும் கயிறு கட்டப்பட்ட நிலை. 

தியேட்டரில்  மிஞ்சிய சிறு இடத்தில் கழைக்கூத்தாடி போல ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை நடந்தது. 

தெரு கோணல், மேடை கோணல் என்பதான அதிருப்தியெல்லாம் கிடையாதென்பதால் சவாலாகத்தான்  நிகழ்ச்சியை நிகழ்த்திக்காண்பித்தேன்.

ந.முத்துசாமி சார் கூட
அந்தக்கால கூத்துப்பட்டறை நிகழ்வுகளை மிகுந்த சிரமத்துடன் தான்
 ஈடேற்ற முடிந்திருக்கிறது.

 க்ரீம்ஸ் ரோடு லலித்கலா அகாதெமியில் அப்போது செக்ரட்டரி ராஜாராம் கூத்துப்பட்டறைக்கு இடம் கொடுத்திருக்கிறார். 

ஆனால் அங்கேயும் பூசாரியாக ஒருவர். சிற்பியும் ஓவியருமான சி.தட்சிணாமூர்த்தி முகம் சுளித்திருக்கிறார். 

அவருக்கு கூத்துப்பட்டறை ந.முத்துசாமிக்கான இந்த சலுகை அசூயை ஏற்படுத்தியிருக்கிறது. ”இவங்களுக்கு ஏன் இங்கே இடம் கொடுக்கிறீங்க?” என்று சொல்லி தடுத்து நிறுத்தி விட்டாராம்.

 முத்துசாமி மனத்தை இந்த பூசாரித்தனம் ரொம்ப புண்படுத்தியிருக்கிறது. இந்த அவமானத்தை என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

நடேஷ் கோபப்பட்டு சொன்ன ஒன்று. போஸ் கிருஷ்ணமாச்சாரி Indian Art ஐ ஒழிச்சான். 
போஸ் கிருஷ்ணமாச்சாரியை அச்சுதன் கூடலூரும் திட்டுவார். 
டெல்லிக்கு போன கேரளா ஓவியர்களெல்லாரும் கோடீஸ்வரர்கள். ஆனால் தமிழ் ஓவியன் கார் துடைச்சான். அதாவது pauper.

......

Koothuppattarai Boss M. Natesh 

on Actor R. P. Rajanayahem 

"By 1990 I was 11 years old in theatre. 

Kind of knew all techniques to train

 an actor’s body-voice; 

but not the mind. 

I thought that a person with trained skills 

in all that I know can go on stage, 

pick up his/her life’s problems and deliver a solo show of good theatre.

 No text by-hearting, no rehearsals. IT NEVER HAPPENED.

 IN 2018  Rajanayahem comes on stage and does exactly that 28years later!!!!!!!!!!!!!... 

I acknowledged the same day after the show

 in front of the audience. 

An intelligent, evocative, transformative actor changing roles like a chameleon. 

R. P. Rajanayahem is a Transformative Actor "

இரண்டு புத்தகங்கள் விலை 600 ரூபாய்

What a piece of work is a MAN

 

R. P. ராஜநாயஹம் யார்? 

அறிஞர் அண்ணாவின் வகுப்பு தோழர் மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்

கி. ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் நடையைக் கட்ட வேண்டியது தான்.

புதுவை பல்கலை முன்னாள் துணைவேந்தர்
டாக்டர். கி. வேங்கடசுப்ரமணியம்: அன்புமிக்க அறிஞர் ராஜநாயஹத்திற்கு! அறிந்தவர் அறிஞர்.
 நீங்கள் நன்கு அறிந்தவர்.
 எனவே இப்பட்டத்தைப் பெற தகுதியானவர். சரி துணைவேந்தரைத் தவிர வேறு யார் பட்டம் கொடுக்க முடியும் ?

சாரு நிவேதிதா : ராஜநாயஹம்
 உலக இலக்கியத்தின் வாசகர். 
எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம் தான் கேட்பது வழக்கம். 
ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் அறிந்தவர். 
அறிவினால் வியக்க வைத்தவர். 
எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர் , இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் வீழ்ந்தாலும் லியர்மன்னன் மன்னன் தானே என்று எழுதினேன். சங்கீதத்திலும் கரை கடந்தவர் ராஜநாயஹம்.

யமுனா ராஜேந்திரன் : நண்பர்களை முத்தமிட்டு இறுக அணைத்துக் கொள்ளும்போது
 நம் உடலில் தொற்றும் ஆனந்தமும் 
ஈரமும் பரவசமும் போன்றது 
R. P. ராஜநாயஹம்  எழுத்துக்கள். 
கொஞ்சமாய் வார்த்தைகள். 
நூறு சொற்களுக்குள் நான்கைந்து அனுபவங்கள். அவரது பதிவுகளின் கடைசி வாக்கியங்களில் 
அழகையும் ஆச்சர்யத்தையும் 
அதீதமான அடக்கத்தையும் 
விலக்கத்தையும் அவர் ஒளித்து வைத்திருப்பார். 
ராஜநாயஹம்  எழுத்தாளர்களின் எழுத்தாளர்.

.....


Jan 6, 2024

R.P. ராஜநாயஹம் எழுத்து பற்றி கதிரேசன் சுப்ரமணியம்

Kathiresan Subramaniyam 

கதிரேசன் சுப்ரமணியம்:

"கிட்டதட்ட 25 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் நிருபராகவும் உதவி ஆசிரியராகவும் பயணித்து வந்த நான், ஏழாம் வகுப்பிலேயே துறையூர் கிளை நூலகத்தில் ராணி புத்தகமும் கோகுலம் புத்தகமும் வாசிக்கத் தொடங்கியவன்.

 எங்கள் ஊர் நூலகத்தில் இருக்கும் அத்தனை சிறுவர் சிறுகதைகளையும் இந்திரஜால காமிக்ஸ் முத்து காமிக்ஸ் என காமிக்ஸ் வகையறாக்களையும் அணில், முயல், அன்னம் என்று வெளிவந்த சிற்றிதழ்கள் தொடங்கி, அனைத்தையுமே பத்தாம் வகுப்புக்குள் வாசித்து முடித்தவன். இதில என்ன பிற்றிக்கொள்ள இருக்கிறது என்கிறீர்களா?
சும்மா ஒரு தகவலுக்காகத்தான்.

நான் எஸ்.எஸ்.எல்.சி படிக்க துவங்கிய போது,  புதுமைப்பித்தன் கதைகள்,`ஜெயகாந்தன் சிறுகதைகள்’ தொடங்கி `சில நேரங்களில் சில மனிதர்கள்’ `பாரிசுக்கு போ’ சிவசங்கரியின் `ஒரு சிங்கம் முயலாகிறது’ சுஜாதாவின் `வசந்த கால குற்றங்கள்’ பாலகுமாரனின் `மெர்குரி பூக்கள்’ கவிஞர் கண்ணதாசனின் `அர்த்தமுள்ள  இந்து மதம் தொடங்கி மேற்கூறிய எழுத்தாளர்களின் படைப்பாளிகளின் படைப்புகளை எல்லாம் ஓரளவுக்கு வாசித்தவன்.  அப்புறம் நா.காமராசன் தொடங்கி  வானமாமலை ஆய்வு வரை புதுக்கவிதை மேய்ச்சல்.

சிறுகதை எழுதும் முயற்சி, கவிதை எழுதும் முயற்சி திரைக்கதை எழுதும் முயற்சி என பல வேலைகளை செய்து பார்த்தவன் அதன் பின்னர் பத்திரிகை துறைக்கு வந்து வார இதழ்கள் பலவற்றில் பணிபுரிந்தேன்.

இப்படிப்பட்ட நிலையிலே 70 களில் படிக்க தொடங்கியவன் 2020க்கு பிறகு வாசிப்பு மனநிலை என்னவோ என்னை விட்டு விலகிச் செல்லத் தொடங்கியது. ஏனென்றால், இப்போதெல்லாம் எழுத்தாளர் என்று தனியாக ஒரு ஜாதி இல்லை. எழுதுபவனும் வாசிப்பவனும் ஒரே ஜாதியாக போய்விட்டார்கள்.

 வாசக மனநிலை மிகவும் குறைவாகவே இருக்கிறது அதற்குரிய காரணங்கள் வாட்ஸ் அப், யூடியூப் என்று சோசியல் மீடியாக்களின் அதீத வளர்ச்சியும் அசுர வளர்ச்சியும் காரணம்.

 இதன் விளைவு எழுதுவது, படிப்பது என்பதில் இருந்த ஆர்வம் போய், `கேட்பது பேசுவது’ என்பதில் எனக்கு மிகுதியான ஆர்வம் வந்துவிட்டது.

 நீயா நானா தொடங்கி தமிழா தமிழா என பல டாக் ஸோக்களை கேட்பது வழக்கம். பல மனிதர்களின் வரலாறுகள் அரசியல் வாக்குவாதங்கள் பெரிய மனிதர்களின் பேட்டிகள் இவற்றை கேட்கும் போது ஒரு பேரார்வம் எனக்குள் கடந்த மூன்று ஆண்டுகளாக எழத் தொடங்கிவிட்டது.

 கிட்டதட்ட ஒரு நாளில் பல மணி நேரங்கள் youtube வழியாக, அனேக விஷயங்களைக் கேட்கின்றேன் என் பள்ளி நாட்களில் எனக்கு ஓவிய ஆசிரியராக இருந்த சேதுராமன் அவர்கள் மிக அழகாக ஒன்றைச் சொல்லுவார். நாம் ஆட்டை சாப்பிடுகின்றோம். ஆட்டை நரி சாப்பிடுகிறது. நரிக்குறவர்கள் நரியை சாப்பிடுகிறார்கள். ஆக இரண்டு சத்தும் அவர்களுக்குக் கிடைக்கும். எது புத்திசாலித்தனம்? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்று வேடிக்கையாகச் சொல்வார்.

அதைப்போல பத்து நூல்களை வாசிப்பதில் கிடைக்கக்கூடிய ஒரு அனுபவம், 
நம் R.P. ராஜநாயஹம் அவர்கள் எழுதக்கூடிய ஒற்றை நூலில் 
எனக்கு கிடைக்கிறது.

 அதனால், எனக்கு இப்போது மீண்டும் வாசிப்பு பழக்கம் வந்திருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் நம் ராஜநாயஹம் அவர்களுடைய எழுத்தும், எழுத்து நடையும் விஷயங்களைச் சொல்லுகின்ற பாங்கும் திடுதிப்பென வெளிப்படும் ஆங்கில பொன்மொழி பிரயோகங்களும் தான் என்றாலும், பாயசத்தில் கிடைக்கும் முந்திரி, திராட்சை போல் பெரிதும் மகிழச் செய்கின்றன.

 இவ்வளவு ருசியான ஒரு எழுத்துநடையை என்னால் வேறு எவரிடமும் பார்க்க முடியவில்லை. எத்தனை முறை திருப்பதி லட்டை சாப்பிட்டோமென்றாலும் அதன் சுவையோ மணமோ இனிப்பு குறைவதில்லை.

 அப்படித்தான் R.P.ராஜநாயஹம் அவர்களின் எழுத்துக்களும் இருக்கின்றன.
 இன்னும் சொல்லப்போனால், அவரது எழுத்துக்கள் ஒரு பெரிய ராஜபோதை போல் ராஜ நாகத்தின் விஷத்தைப் போல் மனதுக்குள் அப்படியே ஒட்டிக் கொள்கின்றது.

 எனக்கு மிகுந்த கிறுகிறுப்பை ஏற்படுத்துகின்றது. அவர் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும். வாசிப்பு உலகம் இன்னும் விரிவாக்கம் பெற வேண்டும். வெகுஜன பத்திரிகைகள் ஏனோ அவரைப் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருப்பது எனக்கு மிகுந்த வருத்தமாகவே இருக்கின்றது. ஆனாலும், தன் முயற்சியில் சற்று மனம் தளராத விக்ரமாதித்தனாய் அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்."

Jan 4, 2024

R.P. ராஜநாயஹம் அனுபவ அடுக்குகள்


மணி ஜி:
"300 வருஷத்து வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ரெண்டே பேரு .         
ஒருவர் R.P.ராஜநாயஹம்,                        இன்னொருவர் ராஜூ முருகன் ...

ராஜநாயஹம் ஆன்மாவிலிருந்து எழுதுபவர். உண்மையை மட்டுமே எழுதுவார்.."

Sivakumar Viswanathan :

"I am going to write a novel titled  'One Hundred Years of Multitude' where Mr RPR will be the protagonist.

ஒரே வாழ்க்கைக்குள் எத்தனை எத்தனை அனுபவ அடுக்குகள்.

 காஃப்கா, செகாவ், மார்க் ட்வைன் போன்றவர்களை,  ஏன் கஸான்ட்ஸாகிஸை கூட சேர்த்துக்கொள்ளலாம்.
 அவர்கள் எல்லோருடைய  கதைமாந்தர்களும் 
யார் யாரோவாக வெவ்வேறு பாத்திரங்களாக 
உங்கள் வாழ்க்கையில் வந்து போயிருக்கிறார்கள். 

They have played out their roles on your life's screen, while you were a spectator and a venerable actor too. 
You are just incredible Mr.RPR "

ட்விட்டர்காரன் : நண்பர் ஒருவர்
 ’யார் ராஜநாயஹம்’னு கேட்டார். 
 நான் இப்படி சொன்னேன். 
“ நூறு பேரின் வாழ்வியலை
 வாழ்ந்து கொண்டிருக்கும் ஒத்த உசிரு”ன்னேன்.

..................................