Share

Showing posts with label பெங்களூர் இரவிச்சந்திரன். Show all posts
Showing posts with label பெங்களூர் இரவிச்சந்திரன். Show all posts

Oct 10, 2008

பெங்களூர் இரவிச்சந்திரன்

பிரதாப் போத்தன் நடிக்க வந்த புதிதில் குமுதம் அரசு கேள்வி பதில்

கேள்வி :பிரதாப் போத்தன் ?

அரசு பதில் : பத்து கமல் ஹாசனுக்கு சமம் .


கமல் ஹாசன் அப்போது எப்படி புண் பட்டிருப்பார் .

இது போல தான் இந்த எழுத்தாளர் பற்றியும் -
பெங்களூர் இரவிச்சந்திரன் !
சிலர் அப்போது சொன்னார்கள் . சுஜாதாவையே இவர் மிஞ்சி விடுவார் .
நம்புங்கள் .
என்னிடமே ஒருவர் இப்படி சொன்னார் . சுஜாதாவை இமிடேட் செய்த எழுத்தை பற்றி !! ' இவருடைய எழுத்து நடை சுஜாதாவை விட விறுவிறுப்பானது'



அந்த அளவுக்கு இவரது எழுத்து நடை ! விறுவிறுப்பு மிக்க எழுத்து !

சுஜாதாவின் நண்பர் என அறியப்பட்டார் . அவருடைய 'இந்திய பாஸ்போர்ட் ' சிறுகதை தொகுப்பை "இந்த புத்தகம் மட்டுமல்ல .இனி நான் எழுதி எத்தனை புத்தகங்கள் வந்தாலும் அத்தனையும் சுஜாதாவுக்கே சமர்ப்பணம் " என்று எழுதி ரொம்ப உணர்ச்சி வசப்பட்டவர். சுஜாதா தான்
அதற்கு முன்னுரை . ரொம்ப சுவாரசியமான எழுத்து .
" பெண்கள் மிகவும் ஜாக்கிரதையானவர்கள் . தன்னுடைய காதலன் யார் என்பதை தன் கணவனிடம் கூட சொல்ல மாட்டார்கள் ."

சுஜாதா தன் நண்பர் என இரவிச்சந்திரனை பெருமையுடன் எழுத்தில் அடிக்கடி குறிப்பிடுவார் .
இரவிச்ச்சந்திரன் தன்னை " கவிஞர் புவியரசின் மாணவர் "என பெருமையுடன் குறிப்பிட்டு கொள்வார் .
அடுத்து "சிந்துவெளி நாகரீகம்" என சிறுகதை தொகுப்பு . அடுத்து" இந்திரா காந்தியின் இரண்டாவது முகம் " சிறுகதை தொகுப்பை பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு சமர்ப்பணம் செய்து விட்டார் . அப்புறம் ' இனி ஒரு சதி செய்வோம் ' என ஒரு தொகுப்பு .
இவர் கையெழுத்து மிக அழகாக இருக்கும் .
சுஜாதா இவரால் ரொம்ப பட்ட பிறகு ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டார்
" என்னுடைய அனுபவத்தில் கையெழுத்து அழகாய் உள்ள அயோக்கியனை பார்த்திருக்கிறேன்"
பண மோசடி இவரது பலவீனம் . ஏமாற்றி யாரிடமும் பெரும் தொகையை பறித்து விடுவார் .
இவருடைய இந்திய பாஸ்போர்ட் , சுயம்வரம் , பார்சல் போன்ற கதைகள் அதிசயிக்க தக்க தரமானவை .

ஒரு கட்டத்தில் இவரை எல்லோரும் புரிந்து கொண்டார்கள் .எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் .
என்ன ஆனார் என யாருக்கும் தெரியவில்லை .
சுஜாதா பலரிடமும் இவர் என்ன ஆனார் தெரியுமா என விசாரித்துகொண்டிருந்தார் .
இவரை அறிந்த எல்லோருமே பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விசாரித்துகொன்டார்கள் .
"இரவிச்சந்திரனை பற்றி ஏதாவது தெரியுமா ?" " எங்கே இருக்கிறார் தெரியுமா "

பதிலே கிடைக்கவில்லை .


இப்போது சுரேஷ் கண்ணன் இவரை பற்றி "தற்கொலை செய்துகொண்டார் என கேள்விப்பட்டதாக இங்கே முந்திய பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளார் .