Age withers everybody. Nothing serious in mortality.
Left Chennai permanently on 21st June, 2025 and Settled in Coimbatore.
2015 September, 13 to 2025 June 21
பத்து வருட சென்னை வாழ்க்கை முடிந்தது.
கலைஞர் டிவிக்கு மாதம் இருமுறை
சினிமா எனும் பூதம் தொலைக்காட்சி தொடர் ஷூட்டிங்கிற்காக
வர வேண்டியிருக்கிறது
இளைய மகனுடன் கோவையில்.
வெளியே போயிருந்த போது வேலை முடிந்து காரில் ஏறி பத்து நிமிடமாக அமர்ந்த பிறகு பார்த்தால் அஷ்வத் இன்னொரு காரில். அதில் தான் ஏறியிருக்க வேண்டும்.தவறாக வேறு காரில் அமர்ந்த விஷயம் புரிந்து இறங்கப் பார்த்தால் திறப்பதில் பிரச்சினை. ஒரு வழியாக இறங்கும் போது சென்ஸர் அலாரம்.
கார் ஓனர் வந்து விட்டார்.
" Sorry sir. எங்க கார்ல ஏறுறேன்னு நெனச்சேன்"
அவர் பெருந்தன்மையாக
" பரவால்ல சார்"
.....
ப்ளாக் டீ, ப்ளாக் காஃபி சகஜமான சூழல்.
டீ மாஸ்டரிடம் " சார், பால் போட்டு டீ கொடுங்க"
யாராயிருந்தாலும் சார் தான்.
எழுத்தாள நடிகரிடம் "சார்"
விளித்த போது " என்ன 'சார்'? நீங்கல்லாம் சார்னு யாரையும் சொல்லக்கூடாது. பேர சொல்லுங்க. சார்னா என்ன அர்த்தம்? மத்தவங்கள எதுக்கு சார் சொல்லனும். அது அநாவசியம். தேவையேயில்ல' னு இருபது நிமிஷம் லெக்சர்.
அப்போதிருந்து யாராயிருந்தாலும் சார் தான்.
கடைநிலை ஊழியர் என்று சமூகம் கருதுகிற யாராயிருந்தாலும் விளிப்பது "சார்" தான்.
டீ மாஸ்டர் " நீங்க உள்ள ஒக்காருங்க ஐயா. நான் கொண்டு வரேன்"
சேரில் உட்கார்ந்ததும் டேபிளில் வைத்தார்.
குடித்த பிறகு " சார்,
டீ ரொம்ப லைட்டா போட்டுட்டீங்களே"
டீ மாஸ்டர் "ஐயா, நான் கொடுத்தது பால். டீ இல்லீங்க "
Senility's prologue.
A decline in mental sharpness with age. Losing the sense and becoming the rock.
"When the age is in,
the wit is out"
Much Ado About Nothing
"With mirth and laughter let old wrinkles come"
Merchant of Venice