ராமாவரம் தோட்டத்தில்
எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும் போது காத்திருந்த பிரபலங்கள் பற்றி பட்டியல் போட்டு முடியாது.
முதல் தடவை முதல்வராக இருக்கும் போதே 'இவரா?இவர் கூடவா? என்று புருவத்தை உயர்த்தி வியக்குமளவு.
அசந்தர்ப்ப நிர்ப்பந்தங்கள்.
ராஜநாயஹம் மாமனார் S.M.T. சந்திரன் சொல்வார் : மாப்ள, எம். ஜி. ஆர பாக்கனும்னு சிவாஜி கணேசன் மணிக்கணக்கில
காத்துக்கெடக்கறத பாத்திருக்கேன்.
கலைஞரின் 'மந்திரி குமாரி'யில் ராஜாவாக நடித்த எஸ்.எஸ். சிவசூரியன். இவருக்கு ராஜநாயஹத்தின் மாமனார் நல்ல நண்பர்.
எம்ஜிஆரை பார்க்க சென்னை வரும் போதெல்லாம் அதிமுகவிலிருந்த
சிவ சூரியனை கட்டாயம் சந்திரன் சந்திப்பார்.
சிவசூரியன் பற்றி இன்னொரு ஞாபகம்.
எஸ்.எஸ். ராஜேந்திரன் தம்பி பாஸ்கர் பெரிய குளத்தில் சொன்ன விஷயம்.
"நடிகர் எஸ். எஸ். சிவசூரியன் மகன்கள்ள ஒருத்தர் ஆக்ஸிடெண்ட்ல எறந்துட்டார் தம்பி. மதுரைக்கு வந்திருந்த எங்கண்ணன் இத கேள்விப்பட்டதுனால அப்செட் ஆகி, பெரியகுளம் வராமலே சென்னைக்கு ஒடனே போயிட்டாரு. ரொம்ப நல்ல மனுஷன் சிவசூரியன். இப்படி கஷ்டம். நெறய்ய பிள்ளைங்க அவருக்கு."
அஞ்சாறு வருஷங்கழிச்சி 1986ல திருச்சி எக்ஸிபிசன்ல நடந்த நாடகத்தில் நடிக்கிற சிவசூரியனை பார்த்தது நினைவில் இருக்கிறது.
அறிவாலயம் நிர்வாக பொறுப்பில் இருக்கும் பூச்சி முருகனின் தகப்பனார்
எஸ்.எஸ் சிவசூரியன்.
நடிகர் சங்கத்திலும் கலக்கியவர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.