Share

Jun 9, 2025

இந்திராணி



இந்திராணி ஒருத்தி மட்டும்.
தேவேந்திரன் மாறிக்கொண்டே இருப்பார்கள்.
தக் லைஃப்பில் இதை புரிந்து ரசிக்க முடிந்தது.
நல்லா தான இருக்கு.


ராபர்ட்டோ கலாஸ்ஸோ  'க'நாவலில் 
பரகீயமானது - 
முறையற்றது, சோரமானது தான் உயர்வானது என்பார்.

வலது கண்ணில் இந்திரன் இருக்கிறான்.

இடது கண்ணில் இந்திராணி. 
இதயம் தான் பள்ளியறை.

உறங்கும்போது இந்திரனுக்கும் இந்திராணிக்கும் கலவி நடக்கிறது. இந்த காதற்கலவியை தொந்திரவு செய்யக்கூடாது. அதனால் தான் உறங்குபவர்களைச் சட்டென்று எழுப்பவே கூடாது. அவ்வாறு எழுப்பப் பட்டவரின் வாய் ’பிசுபிசு’வென இருப்பதும் அந்த இந்திர,இந்திராணியின் இந்திரியங்கள் பெய்யப்பட்டதால் தான். இருவரின் திரவங்கள் உறங்குபவரின் வாயில் ஒன்று கலப்பதால் தான்.

இந்திரன் பற்றி ஒரு சுவாரசியமான செய்தி.
எல்லோரும் யோனித்துவாரத்தின் வழி தான் பிறந்தாக வேண்டும். ஆனால் இந்திரன் மட்டும் யோனியிலிருந்து பிறக்க மறுத்து விட்டானாம்.அது அசிங்கமான வழியென்று சொன்னான். அரிதாக அவன் தன் தாயின் பக்கவாட்டிலிருந்து,விலாவிலிருந்து சமாளித்துப் பிறந்து விட்டானாம்.

இதை ராஜநாயஹம் "கிளர்ந்தெழும் தாபம்" நூலில் குறிப்பிட்டதுண்டு.

"கண்டதெல்லாம் கடிய விலையானால்
இந்திராணி பட்டு இருந்த விலையாகும்"
என்ற சொலவடையை தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்தியதுண்டு.

சரீர சம்பந்தம் இல்லாவிட்டாலும் பல கதாநாயகர்களுடன் நடிக்கும் நடிகைகள் குறியீடாக இந்திராணி தான்.

நடிகையர் திலகம் சாவித்திரி கட்டுரையில் 
அவரது 'வெற்றிகரமான கதாநாயகி' பிம்பம் பற்றி 
ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' நூலில் 
"தெலுங்கு தமிழ் திரையுலகங்களில் கதாநாயக தேவேந்திரர்களின் இந்திராணியாக சாவித்திரி எட்டுக்கண்ணும் விட்டெரிய வலம் வந்தார்."

......


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.