Share

May 30, 2025

Somethings are never meant to End

இன்று செய்திகளில் 
சல்மா 
திலகபாமா 
2005ல்

Pathivukal.com   2005

Some things are never meant to end!
- R.P.Rajanayahem -         
               
 
 

First I would like to express my thanks for your remark and appreciation that I am a person of caliber.

 I never wrote about 'taboos,inhibition and ethics' to Thilaga bama alone. 
But to the entire philestines and cultural police who are against Salma, Malathi Mythri, Sukirtha Rani Kutti Revathi, Uma Maheswari and the male poets Kalapriya and Prem Ramesh and Sankara Rama Subramanian.

 Many people are against Salma and Malathi Mythri and Kalachuvadu such as academic people(tamil professors and vidvans), some literary magazines,commercial writers, cine people(!) and marxists , dravida movements, Tamil cultural movements, thani tamil anbarkal, R.S.S., Islamic Fundamendalists, Christians and many others. 

Why do you raise this Thilaga Bama alone as a redeemer.
 I don’t have any personal vendatta against Thilaga Bama at all. I consider the above persons are affected with grandeur delusion . 

When Thilaga Bama takes this very personally she is definitely affected with paranoid delusion also. She thinks too much of herself. This is more than obvious in her prologue to Vaigai Selvi’s statement. 

Don’t compare Salma, Mythri and Kalapriya with cene lyrics writers. 
Hyperion to a satyr? 

These hypocrites are the same sanadhanis who criticized Bharathi as the uncivilized barbarian, and had critisized Ku.Pa.Ra., T.Janakiraman, and G.Nagarajan as porno writers. 

These philistines are ever living , and I criticize them as psychos and not Thilaga Bama alone. 

After Ambai, ( not a poet of course) we consider Malathi Mythiri, Salma , Uma Maheswari , Sukirtha Rani, and Kutti Revathi are trying to liberalize and write the real voice and conscience and problems of women hood.
( I admit I have strong differences with ambai and the above poets, that’s a different thing)

 I have nothing to speak with those , who believe in god as my god died young. I have no faith in god at present.

 I never mentioned in my write-up that this is a rejoinder to Bama’s  ‘ezhuthu vanmurai’. 

What Thilaga Bama wrote has nothing new and nothing roman in it. 
She is blowing the trumpet of the conservatives.more over I sent my write – up to many others also as usual. 

There are psudo literarians and male chauvanists to disturb the women writers but
 I declare Ii have never done any disgrace by making obscene telephone calls to women poets and I never harassed sexually any woman at all in my deeds and in my writings. 
Stop threatening and black mailing us by asking ‘ could the author or supporter dare to……. allow his wife….’ this is the atrocity and this is the gibberish act. This word is spoken by the street loafers. 

A lady with a dignity should never write in this awkward manner.you cannot intimidate us at all in this clumsy way.

 I am not a poet, not a story writer , or a novelist but a reader .My writings are against hypocrites only. Nothing is immoral except hypocrisy. 

Regards, 
R.P.Rajanayahem 

Pathivukal. Com 2005

May 29, 2025

ராஜேஷ் மரணம்

75 வயதில் ராஜேஷ் மரணம்.

"சினிமா எனும் பூதம்" படித்து விட்டு 
ராஜேஷ் பாராட்டி பேசினார்.

ராஜேஷ் கருத்து "ராஜநாயஹம் எழுத்து unbiased"

நூலில் ஆங்காங்கே
R.P.ராஜநாயஹத்தின் ஆங்கில வரிகள் பிரயோகம் குறித்து சிலாகித்து பேசினார்.

ராஜேஷின் நெருக்கமான உறவினர்கள் எனக்கு அறிமுகம் உண்டு. 
" என்னை சந்திக்க வேண்டும் என்று இவ்வளவு வருடங்களாக உங்களுக்கு ஏன் தோன்றவில்லை?" என்ற அவருடைய சீரியஸான கேள்விக்கு ராஜநாயஹம் சொல்ல பதிலில்லை.
தன் ராமாவரம் வீட்டிற்கு வரச்சொல்லி ரொம்ப வலியுறுத்தினார்.

ராஜநாயஹம் நூல்கள்'சினிமா எனும் பூதம் பாகம் 2', 
'தழல் வீரம்'  'காரணச்செறிவு' 
அன்பளிப்பாக அனுப்பி வைத்தேன்.

சென்ற வருடம் ராஜேஷ் பற்றி 
முரசு டிவி 'சினிமா எனும் பூதம்' தொலைக்காட்சி தொடரில் பேசினேன்.
நிகழ்ச்சியை பார்த்தார்.

.....

ராஜேஷ் திரையுலகில்
 பாக்யராஜ் அவர்களுக்கு தான் நன்றிக்கடன் பட்டவர்.
கன்னி பருவத்திலே படத்தின் வெற்றிக்கு பாக்யராஜின் பங்கு வசனம், வில்லன் வில்லன் என்று. 
அவருடைய 'அந்த ஏழு நாட்கள்' மூலம் ராஜேஷ் நல்ல ரவுண்டு வந்தார்.

பாக்யராஜ் பலரின் திரையுலக வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். 
அது பெரிய லிஸ்ட். 

ராஜேஷின் முன்னேற்றத்திற்கு 
சொந்த அத்தை மகன் இயக்குநர் மகேந்திரன் உதவவில்லை. 
'மெட்டி' ராஜேஷுக்கு நடித்ததில் பிடிக்காதது என்று கூறியது நினைவில் 
நிற்கிறது.

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் என்னுடன் படித்த அசோக் ராஜேஷின் சித்தப்பா மகன். அப்போதே அத்தை மகன் தங்க பதக்கம் மகேந்திரன்  என்பதை அடிக்கடி சொல்வதுண்டு.
ராஜேஷின் இன்னொரு சித்தப்பா மகன் ஜேமி. 
ராஜேஷ் ஷூட்டிங்கில் ப்ரேக் போது சீட்டு விளையாடத் தெரியாது என்று சொன்ன போது கே.ஆர். விஜயா " நிஜமாவா? ஆச்சரியமா இருக்கே, உண்மையாவா?" என்பதை மௌனமாக, வார்த்தையாக இல்லாமல் முக பாவனைகளால் எப்படி கேட்டார் என்பதை பல முறை செய்து காட்டியதை ரசித்த அனுபவம்.
ஜேமி " எத்தனை அழகு கொட்டி கிடக்குது" கச்சேரியில் பிரமாதமாக பாடுவது
 கண் கொள்ளா காட்சி.

'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனதை தட்டிப்பறிக்குது
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனதை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது'

இதையெல்லாம் மொபைலில் பேசிய ராஜேஷிடம் சொன்னேன்.

உடனடி ஆதங்கம் " இந்த நாற்பது வருடத்தில ராஜேஷை  சந்திக்கணும்னு ராஜநாயஹத்துக்கு தோணவேயில்லியா?"

ராஜேஷ் நடத்திய ரெஸ்டாரண்ட்டில் நிர்வாகியாக பணி புரிந்தார்.
ஜேமி இறந்து விட்டார். தம்பி டேவிட்டும் தான். ஜேமியின் தங்கை ஹெலன் பெங்களூரில் இருக்கிறார் என்பதையெல்லாம் ராஜேஷ் தெரிவித்தார்.

'சினிமா எனும் பூதம்' தொலைக்காட்சி தொடரில் ராஜேஷ் பற்றி பேச இருந்த போது சில முறை செல் பேசினேன்.

ராஜநாயஹம் புத்தகங்களுடன்  சின்னதா புத்தர் மர பொம்மை இருப்பதை பார்த்து விட்டு  "எனக்கு அன்பளிப்பா வர்றதெல்லாம் இப்படி புத்தரா தான் இருக்கு"

......

May 25, 2025

யார் நீ?

Sabata (1969 Spaghetti Western movie) 

Last scene last dialogues 

"Who the hell are you"


Lee Van Cleef's reply : 
"Didn't I ever mention it?"


Ace 2025 Tamil movie 

Last scene dialogue

Yogi Babu " யாருய்யா நீ?

Vijay Sethupathy just smiles 

.....

Sep 24, 2009
யார் நீ?
R.P.ராஜநாயஹம் 

"மனித நாகரீகம் மற்றும் மொழி தோன்றிய பின் மனிதனின் நீண்ட வரலாற்றில் சட்டென்று விடை தர முடியாததோர் அசாத்தியமான கேள்வி இந்த " யார் நீ? " எந்த விடையும் பூரணமாக இருக்கமுடியாது ."

- அசோகமித்திரன் 'விழாமாலைப்போதில்'

கரு இல்லாத முட்டையில்லே
குரு இல்லாத வித்தையில்லே
என்றாலும் நீ யார் ? கேள்வி தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது . நதி மூலம் ,ரிஷி மூலம் கண்டுபிடிக்க தவிப்பு தொடர்கிறது .
நான் யாராய் இருந்தால் உனக்கென்ன ?

Question: Who the hell are you?
My reply : Didn't I ever mention it?!

அடையாளம் , அறிமுகம் , Resume, Bio-data இவற்றிற்கு எதிரான துவேசம் எப்படியெல்லாம் வெளிப்படும் ?ஆத்மாநாம் இந்த துவேசத்தை கவிதையாக்கியது இப்படித்தான் !
"நான் யாராய் இருந்தால் என்ன ?
நீங்கள் யாராய் இருந்தால் என்ன ?
அனாவசிய கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள்."

Even Eminence requires a luxurious,deluxe frame to make it presentable.

 பெரிய பிரமைகள் தேவையே இல்லை. 
.....

May 20, 2025

வேடிக்க - 41


வேடிக்க - 41


மே 19ம் தேதி பாக்யராஜ் சார் அழைத்ததால் அவர் வீட்டிற்கு சென்ற போது சந்திக்க வாய்த்த ஜோன் ஃபெர்ணான்டோ. தூத்துக்குடி பூர்வீகம்.
அப்பா சென்னையில் இண்டியன் ஓவர்சீஸ் பேங்க்கில் பணியாற்றி ஆறு வருடங்கள் முன்பு ஓய்வு பெற்றிருக்கிறார். அம்மா டீச்சர் வேலை பார்த்தவர்.

ஜோன் ஃபெர்ணான்டோ 
டி.வி. சீரியல்களில் 
எடிட்டர் அசோக் மேத்தாவிடம் அசிஸ்டென்ட். 

தூத்துக்குடி ஃபெர்ணான்டோ என்றாலே சந்திரபாபு ஞாபகம் வரும். சாதாரணமாக தூத்துக்குடிக்காரர்கள் யாரை சந்திக்க நேரும் போதும்  சந்திரபாபு பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். 
தூத்துக்குடி ஃபெர்ணான்டோ என்றால் உணர்ச்சி வசப்பட்டு, கண்கலங்குவதைக்கூட பார்த்ததுண்டு.

ஜோன் ஃபெர்ணான்டோ வயது 35.

"சந்திரபாபு தெரியுமா? தூத்துக்குடி  ஃபெர்ணான்டோ தான்."என்று சொன்னபோது 
ஜோன் தெளிவான பதில் 
" தெரியாது சார் "


May 17, 2025

பாடுவது சுகம்

பாடுவது சுகம் 
- R.P. ராஜநாயஹம் 

 'வளர் பிறை'யில் சௌந்தர்ராஜன் பாடிய பாடலை  பள்ளி, கல்லூரி படிக்கும் போதே பாடுவேன். 
Favourite பாடல்களில் இதுவும் உண்டு.

'பூஜ்ஜியத்துக்குள்ளே 
ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்'

'பச்சை மாமலை போல் மேனி,
பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா'

'மலர்களிலே பல நிறம் கண்டேன், 
திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்'

'கோபியர் கொஞ்சும் ரமணா,
கோபாலகிருஷ்ணா'

 ' அம்பலத்து நடராஜா, உன் பலத்தை காட்டுதற்கு என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனய்யா?'

' பாஞ்சாலி உன்னிடத்தில்
சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்
கீதை கேட்டான் '

இப்போதும்  தான் இருபது வருடங்களாக கடவுள் நம்பிக்கை கிடையாது என்றாலும் இப்படி பாடல்களை பாடுவேன்.

பத்து வருடங்களுக்கு முன்பு பள்ளியில் communicative trainer (2013 to 2015)ஆக இருக்கும் போது வெள்ளிக்கிழமை பிரார்த்தனை கூட்டத்தில் பாடிய போது ஆசிரியர்களும் குழந்தைகளும் பாராட்டியதுண்டு. 

நெகிழ்ந்து அழுத குழந்தைகள் நிறைய்ய 

பள்ளியில் கூட்டிப் பெருக்கும் பெண்களும் கூட ' நீங்க பாடும் போது கண் கலங்கி விட்டது, அழுகை வருகிறது' என்பார்கள்.

CBSE பள்ளியில் ரம்ஜான் கொண்டாடிய போது 'கூன் பிறையை போற்றிடுவோம், குர் ஆனை ஓதிடுவோம்' (மு.க. முத்து பாடல்) பாடினேன். நான்காவது படிக்கும் முஸ்லிம் குழந்தை தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.

Morning prayerல் ' பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம், தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மெளனம், மெளனம் ' பாடும் போது உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கி குரல் தளுதளுத்தது.
பல குழந்தைகள் கண்களில் கண்ணீர்.

பாடம் நடத்த மூன்றாம் வகுப்பு போன போது பெண் குழந்தையொன்று " Sir, when you sang about mother, I controlled my tears. I went to the rest room and cried"

2002ல் திருச்சியில் இருந்த போது பள்ளி நண்பன் ஒருவனை பார்க்க போயிருந்தேன். அங்கே ஒருவர் வந்தார். அவரிடம்  அறிமுகம் செய்யப்பட்ட போது அவர் முக மலர்ந்து " நீ சின்னப் பையனாக Saint Joseph's ல்  'அன்பு என்பது தெய்வமானது ' பாடியதை  மறக்க முடியுமா?" என்றார்.
சிறுவனாக Saint Joseph's ல் ஏழாம் வகுப்பு படித்த போது
அவர்  அங்கே பத்தாம் வகுப்பு படித்தவராம். 

கூத்து பட்டறையில் மாஸ்டராக நான்கு வருடங்கள் இருந்த போதும் பாடியிருக்கிறேன்.

ஆடிய காலும் பாடிய வாயும் எப்போதும் நிறுத்தாது.

.....

மீள்பதிவு 

https://www.facebook.com/share/p/WJiQraRnAJv7E9yz/?mibextid=oFDknk

https://www.facebook.com/share/p/186xyFpJui/

May 13, 2025

வேடிக்க - 40 Unhap

வேடிக்க 40
Unhap 


I have no hope for what may not be done" 
- Shakespeare 
Hamlet

- அப்பா இறந்த போது 
வேலையில்லாமல் வறுமை, சிறுமையில் இருந்த ராஜநாயஹம். உடனடி நிவாரண உதவி தேவையான துர்பாக்கிய நிலை.

நீண்ட காலமாக தன் மகனிடம் மனஸ்தாபத்தால் பேச்சு வார்த்தையோ உறவோ இல்லாமல் இருந்த அம்மா விசித்திரமாக, ஏக்கத்துடன் சொன்னாள் : 
" நான் போறதுக்குள்ள உனக்கு ஏதாவது குடுத்துட்டு போக மாட்டேனாப்பா"
எதுவுமே தர முடியாமல் தான் மறு வருடம் இறந்தாள்.

இந்து டாக்கீஸில் ராஜநாயஹம் கட்டுரை பிரசுரமானதை பார்த்து விட்டு அவராகவே 
96 வயது பிரபலம் ஆசுவாசமாக சொன்ன வார்த்தைகள் 
" எப்ப எங்க சொல்லணுமோ அங்க சொல்ல வேண்டிய நேரத்தில நிச்சயம் சொல்லுவேன்"
பிரபல பத்திரிகைகளுக்கு ராஜநாயஹத்தை சிபாரிசு செய்வாராம்.
மூன்று வருடத்தில் அகால மரணமடைந்து விட்டார்.
அடடா, தள்ளாதவர் 
இன்னும் நெடுங்காலம் பூலோகத்தில் இருந்திருந்தால் ஆனந்த விகடனில்
 R.P. ராஜநாயஹம் தொடர் எழுத சிபாரிசு செய்திருப்பாராயிருந்திருக்கும். 
ஓஹோன்னானாம்.

May 8, 2025

வேடிக்க 39 - The Old man and the Shooting

ஜூனியர் மோஸ்ட் அசிஸ்டென்ட் டைரக்டர் ராஜநாயஹம்.

அந்த வயதான பெரியவர் வந்தார்.
" காம்ரேட், இந்த காட்சியில் நான் நிற்கும் போது என்னுடைய இந்த புத்தகங்களை தயவுசெய்து நீங்கள் பார்த்துக்கொள்ள முடியுமா?"

முழுமனதோடு கைகளில் வாங்கிக்கொண்டேன்.

அவுட் டோர் ஷூட்டிங். வயல் காட்டில் நாற்று நடும் பெண்களிடம் கதாநாயகி விதண்டாவாதம் செய்வதாக காட்சி.
பெரியவரும் அங்கே கூட்டத்தோடு நிற்க வேண்டும்.
அவர் கமல் ஹே ராமில் ஒரே காட்சியில் தலை காட்டியிருந்தார் என்பது நினைவில் மின்னியது.
எப்போதும் ஷூட்டிங் பார்க்க கூட்டம். சரியான முன்பகல் ஏறு வெயில்.

முதல் ஷாட் முடிந்தவுடன் சீனியர் அசிஸ்டெண்ட்கள் அந்த பெரியவரை கூப்பிட்டு சத்தம் போட்டு " அசிஸ்டெண்ட் டைரக்டரிடம் எப்படி நீ புத்தகங்களை கொடுக்கலாம்."

" ராஜநாயஹம், என்னங்க இந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சொன்னா நீங்க சரின்னு அந்தாளு புத்தகத்த வாங்கி எடுபிடி மாதிரி கையில வச்சிக்கிறீங்க. நம்ம ஸ்டேட்டஸ் ரொம்ப முக்கியம். அத ஞாபகம் வச்சிக்கங்க "
 கௌரவ பங்கமாம்.

" In a false quarrel, there is no true valour"
- Shakespeare 
'Much ado about nothing' 

பெரியவரிடம் " யோவ் மன்னிப்பு கேளுய்யா "

பெரியவர் நா தளுதளுக்க " என்னய மன்னிச்சிக்கங்க காம்ரேட். தெரியாம இப்படி பண்ணிட்டேன்." புத்தகங்களை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.

......

பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் 
திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப்பில் 
Oldman and the Sea ( Ernest Hemingway) பற்றி உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது அந்த பெரியவர் அங்கு கூட்டத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து உடனே " காம்ரேட், நலம் தானே? " என கேட்ட போது அவர் குழம்பிப்போய் பார்த்தார்.
அவருக்கு அடையாளம் தெரியவில்லை.
வயல் காட்டு ஷூட்டிங்கில் நடந்ததை அங்கு வந்திருந்தவர்கள் கேட்கும்படியாக பழைய சம்பவத்தை சொன்ன போது பெரியவர் 
முக மலர்ந்து வாய் மலர்ந்தார் 
" காம்ரேட் நீங்களா?"

...........

https://www.facebook.com/share/r/18fLP6TYuP/

172nd 173rd Episodes done

172nd 173rd Episodes done

R.P.ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம்
முரசு டிவியில் 

11. 05. 2025 ஞாயிற்றுக்கிழமை 

18. 05. 2025. ஞாயிற்றுக்கிழமை

காலையில் எட்டரை மணிக்கு 

1.  T.R. சுந்தரம் 
மாடர்ன் தியேட்டர்ஸ் 

2.  A.L. சீனிவாசன்
சாரதா ஸ்டுடியோ 

......

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

172nd 173rd Episodes done

172nd 173rd Episodes done

R.P.ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம்
முரசு டிவியில் 

11. 05. 2025 ஞாயிற்றுக்கிழமை 

18. 05. 2025. ஞாயிற்றுக்கிழமை

காலையில் எட்டரை மணிக்கு 

1.  T.R. சுந்தரம் 
மாடர்ன் தியேட்டர்ஸ் 

2.  A.L. சீனிவாசன்
சாரதா ஸ்டுடியோ 

......

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

May 5, 2025

மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி

மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதி 
விக்டோரியா கௌரி
R.P. ராஜநாயஹம் பற்றி:

"I enjoyed the entire meeting with full spirit.Everything is governed by intelligence not by chance என்று சொல்லிவிட்டு தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றபோது ஆச்சரியமாக இருந்தது.பின்னர் இது குறித்து உங்களிடம் கேட்ட போது ..ஆமா...ஆனாலும் ஆயாசமா இருக்கும் போதெல்லாம் இப்பவும் ஆண்டாளே ..முருகா என்று தான் வாயில் வர்றது..அதென்னவோ தெரியல கடவுள் நம்பிக்கை வரவேயில்லைமா... ஆனா அசோகமித்திரன் BJP காரர் தெரியுமா என்று நீங்கள் சொன்ன போது
 "I found a child in you as well sir".
It was an awesome meeting sir.Thank you"

2019ல் மதுரை சோமு நூற்றாண்டு விழாவின் போது

May 4, 2025

Frederick Arthur Bridgman Paintings

Frederick Arthur Bridgman paintings


1. An Afternoon in Algeria

2. Street Scene in Algeria

3. Funeral Procession of a Mummy on the Nile, 1877.

வேடிக்க 38

https://www.facebook.com/100006104256328/posts/pfbid0myVa1Uadm17zsAq6Ejv7VfwaqPgBf9a9s4mNGsUzFvt2iCHgb5RKy3bMBBGFFS3hl/?app=fbl

இந்த மூணு படமும் "வேடிக்க" பாத்தாச்சு