வேடிக்க 40
Unhap
I have no hope for what may not be done"
- Shakespeare
Hamlet
- அப்பா இறந்த போது
வேலையில்லாமல் வறுமை, சிறுமையில் இருந்த ராஜநாயஹம். உடனடி நிவாரண உதவி தேவையான துர்பாக்கிய நிலை.
நீண்ட காலமாக தன் மகனிடம் மனஸ்தாபத்தால் பேச்சு வார்த்தையோ உறவோ இல்லாமல் இருந்த அம்மா விசித்திரமாக, ஏக்கத்துடன் சொன்னாள் :
" நான் போறதுக்குள்ள உனக்கு ஏதாவது குடுத்துட்டு போக மாட்டேனாப்பா"
எதுவுமே தர முடியாமல் தான் மறு வருடம் இறந்தாள்.
இந்து டாக்கீஸில் ராஜநாயஹம் கட்டுரை பிரசுரமானதை பார்த்து விட்டு அவராகவே
96 வயது பிரபலம் ஆசுவாசமாக சொன்ன வார்த்தைகள்
" எப்ப எங்க சொல்லணுமோ அங்க சொல்ல வேண்டிய நேரத்தில நிச்சயம் சொல்லுவேன்"
பிரபல பத்திரிகைகளுக்கு ராஜநாயஹத்தை சிபாரிசு செய்வாராம்.
மூன்று வருடத்தில் அகால மரணமடைந்து விட்டார்.
அடடா, தள்ளாதவர்
இன்னும் நெடுங்காலம் பூலோகத்தில் இருந்திருந்தால் ஆனந்த விகடனில்
R.P. ராஜநாயஹம் தொடர் எழுத சிபாரிசு செய்திருப்பாராயிருந்திருக்கும்.
ஓஹோன்னானாம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.