Share

Jun 28, 2026

Ashokamitran rejoinder to Outlook polemic

Ashokamitran rejoinder to Outlook polemic
Through R.P. Rajanayahem 

"யார் என்ன அவதூறு செய்தாலும் இனி rejoinder தராதீர்கள். விளக்கம் சொல்ல வேண்டாம்"

R.P. ராஜநாயஹம் 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை' படித்து விட்டு இப்படி என்னிடம் சொன்னார். 

விதி வசத்தால் அவரே Outlook பேட்டிக்கு பின் என் மூலமாக விளக்கம் கொடுத்தார்.

“My concern is always with the not so brilliant , not so successful people.”
R.P.ராஜநாயஹம்

Feb 24, 2009

அசோகமித்திரன் தன் படைப்புகளில் வாழ்வில் வெற்றி பெறாத மனிதர்கள் பற்றி தான் எப்போதும் எழுதியவர் . அவுட் லுக் பத்திரிகையில் அவர் கொடுத்த பேட்டி பிரசுரமான போது பலத்த சர்ச்சை ஏற்பட்டது . பொதுவாக அசோகமித்திரன் அவர் பற்றிய எந்த சர்ச்சைக்கும் பதில் அளிப்பவர் அல்ல . குமுதம் , குமுதம் தீராநதி , உள்பட அவருடைய அவுட் லுக் பேட்டி க்காக கடுமையாக அவர் விமர்சிக்கப்பட்டார். 

இது விஷயமாக அவர் பதில் அவுட் லுக், குமுதம் துவங்கி இன்னும் இலக்கிய பத்திரிக்கையிலிருந்து எத்தனையோ பிரமுகர்களுக்கு விளக்கத்தை அனுப்பியிருக்கலாம் . அவர்கள் அதை பெருமையாக பிரசுரித்திருப்பார்கள் .

ஒருவர் தனக்கு தான் அசோகமித்திரன் பதில் எழுத இருக்கிறார் என்றே பகீரங்கமாக கூட எழுதினார். 
அவர் யாருக்கு விளக்கம் எழுதினார். எனக்கு தான் கடிதமாக எழுதினார் .

அந்த கடிதம் உலகெங்கும் உள்ளவர்களால் ராயர் க்ளப் வலைத்தளத்தில் விவாதிக்கப்பட்ட போது, (இணையத்தில் விவாதிக்கும்போது கூட R P ராஜநாயஹம் பெயருக்கு எழுதப்பட்ட கடிதம் என்பதை குறிப்பிட விரும்பாமல் அசூயையுடன் மறைத்து விவாதித்த பிரமுகர் உண்டு ) இங்கே உள்ள எழுத்தாள பிரமுகர்களும் மூச்சே விடவில்லை, அவுட் லுக், குமுதம்,காலச்சுவடு ,உயிர்மை என எல்லோரும் அந்த கடிதத்தை புறக்கணித்தனர்.
' இந்த கடிதம் R P ராஜநாயஹம் பெயருக்கு ஏன் எழுதப்பட்டது ? 'என்ற கோபம் தான் காரணம்.

கனடாவில் பதிவுகள் .com இல் பிரசுரமான கடிதத்தை இங்கே தமிழக பத்திரிகைகள், எழுத்தாளார்கள் மூச் விடவில்லை.
 
' எனக்குதான் அசோகமித்திரன் பதில் எழுத இருக்கிறார்.' என்று மார் தட்டி சொன்ன  பிரமுகரிடம்
 ' அசோகமித்திரன் விளக்கம் பற்றி ரொம்ப எதிர்பார்த்த நீங்கள் கூட இந்த கடிதம் பற்றி ஏன் பேசவில்லை ' என  நேரிலேயே கேட்டேன்.
அசோகமித்திரன் தனக்கு பதில் எழுதியிருந்தால் தான் அது பற்றி எழுதி இருக்க முடியும் என அலட்சியமாக பதில் சொன்னார். எனக்கு பதில் எழுதி விட்டார் என்பது தான் எல்லோருக்கும் கோபம்.

 இன்னொரு எழுத்தாளர் அசோகமித்திரனிடம் ' என்ன இவர் நீங்க தனிப்பட்ட முறையில் எழுதின கடிதத்தை இப்படி பகீரங்கமாக்குகிறார் " என்று மூட்டி விட முயற்சித்திருக்கிறார் . அசோகமித்திரன் தான் இதை கைப்பட எனக்கு எழுதி என்னை டைப் செய்து பதிவுகள் .com இல் பிரசுரிக்க சொன்னவர் என்பதை அந்த பொறாமைக்காரர் அறியவில்லை .

அந்த கடிதம் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது .
அந்த கடிதம் பற்றி இங்கே குறிப்பிட காரணம் உண்டு .

அசோகமித்திரன் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடும்  வார்த்தை 
"My concerns have always been about the not-so-brilliant, not-so-successful people of all sections of people. "
இந்த வார்த்தைகளில் தான் அசோகமித்திரனின் ஒட்டுமொத்த இலக்கிய வெற்றி அடங்கியுள்ளது .

' R P ராஜநாயஹம் - அசோகமித்திரனின் சீடன்' என்ற முத்திரை உண்டு 

 

அசோகமித்திரன் எனக்கு எழுதிய அந்த கடிதம் கீழே:
NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE !
- ASHOKAMITRAN -
ASHOKAMITRAN (J. THIYAGARAJAN)
FLAT -7, 1A, 9TH CROSS AVENUE,
DANDEESWARAM, VELACHERY,
CHENNAI-600 042. 

Date: 31.05.2005

DEAR R.P.RAJANAYAHEM,

Your kind letter.

I am extremely pained at the reactions of some friends to my ‘article’ in the Delhi Magazine. I am a computer illiterate and I have no way of knowing what appeared in the internet magazine. But both pieces are the result of a ten-minute telephone conversation with the correspondent. Nothing was put on paper, neither the questions nor the answers. In the printed article, there are quite a few terms i do not use at all. Also the tone is not mine. Since the questions were focussed on Tamil Brahmins, naturally the answers related to them. 
My concerns have always been about the not-so-brilliant, not-so-successful people of all sections of people. Not just Brahmins.
In India, with a lot of construction work going on, it is a good period for tradesmen, plumbers, carpenters, electricians, masons, etc. But how much of what they earn goes to the well-being of their families, the education of their children? This applies to brahmins also, especially cooks. Much of their hard-earned money goes for gambling and having a merry time.

All that appears in a periodical, Tamil or English, need not be cent percent authentic and true, especially when not a word is written by the interviewee. It is very difficult to convey the tone of the answers. As a general rule, no magazine publishes an originally written article unless the editor determines the theme. The correspondents execute the theme by interviews. In my case, it was a telephone interview and so prone to distortion and errors. And i had no control over what finally appeared in print.

This makes it all the more important for a reader to exercise her or his own judgement, not merely go by what is published.

Yours Sincerely,

ASHOKAMITRAN 

.......................................................

ASHOKAMITRAN'S LETTER WRITTEN TO R.P.RAJANAYAHEM -
A REJOINDER TO OUTLOOK POLEMICS

When Ashokamitran wrote me a letter and wanted me to type it and arrange to publish it in pathivukal.com, I thought of giving a resounding,booming TITLE to that historical letter and chose a sentence from the letter itself because "NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE!" sounds a decree and verdict in it and this line has an assertive forceful claim and while pronouncing, it becomes an articulate, expressive declaration.

Now when I find this TITLE has become popular in Raayar Kaapiklub I feel great.

But this letter also raised a row among the libertarian writers(!) around Tamil nadu. Why should Ashokamitran write this letter to R.P.RAJANAYAHEM ?
That's the question !

JEALOUSY, RESENTMENT, DISTRUST, SUSPICION, HATRED

Heated discussions going on and now
ASHOKAMITRAN'S LETTER TO R.P.RAJANAYAHEM IS AT ODDS !
So this letter is being rejcted and ignored.

"How many ages hence
Shall this our'LOFTY SCENE'be acted over
In States unborn and accents yet unknown!"
- Shakespeare in Julius Caesar

....................................................

....................................................................

Jun 25, 2026

விஜய் அப்பா வேடிக்க - 61

விஜய் அப்பா 

வேடிக்க - 61

Obsessed Religious Addiction -
Scrupulosity

இதெல்லாம் ரொம்ப முன்னால நடந்த விஷயம்.
விஜய் சினிமா கரியர் உச்சம் தொட்ட உடனே S.A. சந்திரசேகர் ரொம்ப நெருங்கிய உறவினர் S.N. சுரேந்தரிடம் பெருமிதமாக 
" நாங்க க்ரிஸ்டியன் ஜெயிச்சிட்டோம். நீங்க இந்து தோத்திட்டீங்க"
Pompous declaration.

இப்படி இந்த விபரீத ஒப்பீட்டினால் அதிர்ந்து நிலை குலைந்து போன சுரேந்தர் கோபமாக கடுமை காட்டி" ஒத வாங்கப் போற. ஒதப்பேன்"

அத்தோடு சந்திரசேகர், அவர் மனைவி, மகன் மூவரும் அவரோடு உறவை அப்போது முழுவதுமாக முறித்துக் கொண்டார்கள்.
கடும் பகை.
2016ம் ஆண்டு சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் அப்போது சரவணபவன் ஓட்டல் கிளை அப்போது இருந்தது.
அங்கு சுரேந்தரை சந்தித்த போது அவர் சொன்ன தகவல்.

மீள் 

https://www.facebook.com/share/p/19JFwnxjFR/

https://www.facebook.com/share/p/1Ft1RLpaLt/

https://www.facebook.com/share/p/18sFiqEW1K/

https://www.facebook.com/100006104256328/posts/3047408935472552/?app=fbl

Jun 23, 2026

Gilding the Lily


Gilding the refined Gold and painting the Lily 

Thus the bad bigins and worse remains behind

Jun 22, 2026

Versatile R.P. Rajanayahem

Late. Mohan Hariharan :

R.p. Rajanayahem is a many sided personality! 
Director, Writer, Teacher, Scholar and
 Lover of many things including Carnatic music ! 

Wish him all success ! 💐💐

....

Mohan Hariharan - younger brother of 
Dr. Hari Srinivasan (எழுத்தாளர் சார்வாகன்)

R. P. ராஜநாயஹம் பற்றி
 கூத்துப்பட்டறை அதிபர் ஓவியர் மு. நடேஷ் 

"  உங்கள் முக்கியத்துவத்தை 
கூத்துப்பட்டறை நடிகர்கள் உணர்ந்து, 
உங்களிடம் கற்று 
உயர்ந்து இருக்க வேண்டும்.                               
 தவற விட்டு விட்டார்கள். "

https://www.facebook.com/share/p/1CrmLtFsW9/


யவனிகா ஸ்ரீராம் :

"காலத்தின்  மேஜிக் சிலேட்டை கையில் வைத்திருக்கிறீர்கள் ராஜநாயஹம் சார்"


Jun 18, 2026

Stamina

Stamina 

perseverance, grit, and sustained energy

இரவில் படுக்கையில் படுத்து அவராகவே தூங்குகிறார் 

விடிந்தவுடன் அவரே விழித்துக்கொண்டு படுக்கையில் இருந்து எழுகிறார்
 
அவரே தான் தன் பற்களை விளக்கிக்கொண்டு ட்டூ டாய்லெட் தனியாகவே தானாகவே கழிக்கிறார். 
Self standing. ஆசனவாய் கழுவுகிறார்.
யார் உதவியும் இன்றி குளிக்கிறார்.

 ஜட்டி பனியன் போடுவதோடு சட்டையும் தானே அணிந்து கொண்டு 
கோட் பேண்ட் கூட அவரே, அவரே.
காலை உணவு தட்டுல சாப்பிட்டு ( லஞ்ச் தான் டிஃபன் பாக்ஸில்)அவரே கை கழுவி டவல் எடுத்து கைகளை துடைத்துக் கொள்கிறார்.
 காரில் அவரே ஏறி உட்கார்ந்து கொள்வதோடு இறங்குவதும் கொஞ்சம் கூட அலுக்காமல் சலிக்காமல் செய்கிறார்.

எவ்வளவு வேல!

Doing everything wisely and slowly.

Joy's soul lies in the doing.

"Perseverance, keeps honour bright: to have done, is to hang quite out of fashion, like a rusty nail in monumental mockery."

- Shakespeare

பொய்யற்ற ஆன்மாவொன்றின் சாட்சியம்

R.P. ராஜநாயஹம் ஸார்,
 பேருக்கேற்ற ராஜகுணம் உங்களுக்கு. 
இந்த மனசு எத்தனை பேருக்கு வாய்க்கும்..? 
உங்கள் மனம் கசந்து நொந்த தருணம் ஒன்றைப் பதிந்து பகிரும் போது கூட ஒரேயொரு கூர்சொல்லைக் கூடப் பயன்படுத்தாத உங்கள் மயிலிறகு மனதை வியக்கிறேன். 
உங்கள் எழுத்து எப்போதும் பொய்யற்ற ஆன்மாவொன்றின் சாட்சியமாகவே இலக்கிய வெளியில் காலம் கடந்து நிலைத்துலவும்.

- ஆத்மார்த்தி

Aathmaarthi Rs

https://www.facebook.com/share/p/18FL4okATK/

Image 
2004 R.P. ராஜநாயஹம்


Jun 12, 2026

முதல் மரியாதையும் கிராவும்

கி.ராவின் கோபல்ல கிராமத்தில் இருந்து பாரதிராஜா 'முதல் மரியாதை'யில் பயன்படுத்தி படத்தின் ஆரம்பத்தில் நன்றி சொல்லியிருந்தார்.
அவர் அதற்காக கொடுத்தனுப்பிய தொகை பற்றி கிராவுக்கு பெரும் அதிருப்தி.
இடைச்செவலுக்கு தொகை கொண்டு வந்தவரிடம் வெளிப்படையாக கேட்டிருக்கிறார் 
" இவ்வளவு தான் பாரதிராஜா கொடுத்தாரா?"

சில இதழ்களே வந்த சிறு பத்திரிக்கையில்
இதை எழுதினார். அழகிரிசாமி சினிமாக்காரர்களிடம் மோசம் போக நேர்ந்த நிகழ்வு பற்றியும் குறிப்பிட்டார்.

புதுவையில் அடிக்கடி தன்னுடைய ஏமாற்றம் குறித்து நேரில் சொல்லியிருக்கிறார்.
இதை சொல்லும் போதெல்லாம் அழகிரிசாமி மோசம் போன கதையையும் தவறாமல் சொல்வார்.
அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

Jun 11, 2026

வேடிக்க - 65

வேடிக்க - 65


இளையராஜா: ஆளே போயாச்சி இனிமே என்ன?

பாரதிராஜா குடும்பத்தாரிடம் கங்கை அமரன்: கடைசில யாருமே இல்லாம ஓடிப்போயிட்டீங்கள்ள?அவர இப்படி தனியா விட்டுட்டு எல்லாரும் ஓடிப்போயிட்டீங்கள்ள?

The worst thing in life is to end up with people that make you feel all alone.
Late autumn when branches are bare.

நடிகர் சுதாகர் இரங்கல் செய்தி வீடியோவில் பாரதிராஜா பெயரை குழறலாக உச்சரிப்பது 
'எனக்கு வாய்ப்பு கொடுத்த "பாக்யராஜா" பாக்யராஜா"  என்பது போல விசித்திரமாக கேட்கிறது. Life's Twilight 

Karthik  tribute  staring and checking very keenly 

மல்லிகைப்பூ பார்த்திபன் funny exhibitor

Jun 6, 2026

False pride and Arrogance

False pride and Arrogance 

தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு முன்னரே 
(தி.மு.க. தயவால் M.P. ஆகி விட்ட)சுதீஷ் 
அக்காவுக்கு Deputy CM பதவி ஸ்டாலின் கொடுக்க வேண்டும் என்று கேட்டதை பார்க்க முடிந்தது. 
திமுக ஜெயித்தால் உதயநிதி ஸ்டாலின் தான் துணை முதல்வர் ஆவார்.

பிரேமலதாவுக்கு தர வேண்டுமாம்.

புதிய அரசில்
இந்தம்மாவே " நான் துணை முதல்வர் பதவி கேட்டா விஜய் மாட்டேன்னா சொல்வார்?"

Let none
presume to wear an undeserved dignity
- Shakespeare 

Arrogance,  Unwarranted pride, and failing to recognize own blind spots.

இந்த பிரேமலதா ஆபத்தானவர். கரூர் மரணங்களுக்கு தி.மு.க. மீது பழி போட்டவர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போதே முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பற்றி  அவர் முன்னிலையில் அபத்தமாக உளறியவர்.
அனுகூல சத்ரு.

'என்னய தூக்கி மனையில வை'
Premalatha has a lean and hungry look; She thinks too much: such woman is dangerous.
Expecting undeseved importance.

Jun 5, 2026

Scarecrow Annamalai

Scarecrow Annamalai 

A scarecrow satirizes fake leadership.


கொஞ்சமும் சரியில்லாத ஆள புதுக்கொடி. புது கட்சி.

அரசியலால் யாசகமாக குடும்பச் செலவுக்கு மாதம் பத்து லட்சம் 
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாட்ச் 

அரசியலில் 
சம்பாதித்த ஆயிரம் கோடி சொத்து


'இருபதாயிரம் புத்தகங்கள்' போல இன்னொரு பெரும் பொய்-  'மதவாதத்திற்கு எதிரான புதுக்கட்சி' 

பாரதீய ஜனதா கொள்கையை எதிர்க்கப்போகிற அரசியலா?
 காதுல பூ 

அதே குட்டயில நல்லா ஊறுன மட்ட 

According to CM இங்கே ரெண்டே பேருக்குள்ள தான் போட்டி 

முதல்வரோட அல்லு சில்லு லிஸ்ட்ல சேரப்போற புது கட்சி. 

த.வெ.க. கூட்டணில சேருமா? 
இல்ல தனிச்சி நின்னு சீமான் கட்சி போல தேயுமா?

யாரு கண்டா?
 தி.மு.க. கூட்டணி கட்சியாக கூட வாய்ப்பு இருக்கு. இல்லன்னு சொல்ல முடியுமா?

தாய் பா.ஜ.க.வோட பயணிக்கப்போகும் சேய்க்கட்சியா? இல்ல கொஞ்ச நஞ்ச தமிழக பா.ஜ.க. கூடாரத்த அண்ணாமலை காலி பண்ணுற வேலையா? 
பாஜகவை விட்டு வெளியேற காரணம் என்ன?

தமிழர்கள் பாக்யசாலிகள்.

"The abuse of greatness is when it disjoins remorse from power."
— Shakespeare in 'Julius Caesar'

 "satire on scarecrow" https://share.google/IGF9yfe9BUgihc6Vv

Jun 3, 2026

வேடிக்க - 64 கட்டு விரியன்

வேடிக்க - 64

"With thy sharp teeth this knot intrinsicate / Of life at once untie."
Shakespeare in Antony and Cleopatra.

ரேஸ் கோர்ஸில் இரவு walking போய் விட்டு திரும்பி வந்து Gate திறந்து உள்ளே நுழைந்து உள்ளே நுழைந்து நடக்கும் போது காலடியில் கட்டு விரியன் குட்டி. 

'விதி முடிஞ்சவன தான் கட்டு விரியன் கடிக்கும்' - சொலவட.

விறு விறு விறு என்று நெளிந்து நெளிந்து நகர்ந்த விரியன் பாம்பு குட்டி. குட்டி தானா இல்ல பெரிசா?

காரை உள்ளே கொண்டு வந்த அஷ்வத் உடனே இறங்கி இருவரும் கிரிக்கெட் பேட்டால் அடித்தோம்.
We have scorched the snake and killed it.
Poor venomous fool.

சென்ற ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி மக்ஷபகலில் இந்த வீட்டிற்குள்ளே காணப்பட்ட நல்ல பாம்பு குட்டியை ஃபயர் சர்வீஸுக்கு தகவல் கொடுத்து ஐந்து பேர் வந்து பிடித்துக்கொண்டு சென்றார்கள்.

இந்த வருடம் இப்போது ஜூன் 1ம் தேதி இரவு 10.30 மணிக்கு கட்டுவிரியன்.

https://www.facebook.com/share/v/19qVhB68U2/


Jun 1, 2026

ஊள அழுக, பவ்யம் பாவ்லா

2017 மீள்பதிவு 

ஊள அழுக, பவ்யம் பாவ்லா
- R.P. ராஜநாயஹம் 

2017ல்
”கலைஞர் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். பார்வையில் ஆயிரம் விளக்கங்கள்”            - -வைகோ

மூதறிஞர் கலைஞர் சிரிப்பின் 
ஒரே அர்த்தம், 
பார்வையின் ஒரே விளக்கம் :
“ஒன் ஊள அழுக, 
பவ்யம் பாவ்லாவெல்லாம்
 ஆயிரம் தடவ பாத்திட்டேன். 
நான் பயப்படவே மாட்டேன். 
தைரியமா இருப்பேன்.”

துரை வைகோ 
2024 பாராளுமன்ற தேர்தல் திருச்சி மேடையில் 
வைகோவின் ( தி.மு.க. வுக்கு எதிரான) அரசியல் வாழ்வு பற்றி 
 மிக மிகை செயற்கை ஊள அழுகை 
வீடியோ கிடைத்தால் பார்க்க முடியும்.

ஊள அழுகை வம்சம் 

"This was the most unkindest cut of all; For when the noble Caesar saw him stab, Ingratitude, more strong than traitors' arms, Quite vanquished him: then burst his mighty heart."

- Shakespeare

தளவாய்

நாட்டு நடப்பு 

N.S. ராஜா சுப்பிரமணி

தேச ராணுவ "தளவாய்"