Share

Showing posts with label R. P. Rajanayahem. Show all posts
Showing posts with label R. P. Rajanayahem. Show all posts

Jun 3, 2021

R. P. ராஜநாயஹம் பற்றி T. சௌந்தர்

 R.P.ராஜநாயஹம் பற்றி T. சௌந்தர் 

TSounthar Sounthar


கலை ஈடுபாடு ,பரந்தவாசிப்பு மட்டுமல்ல அரிய தகவல்கள் நிறைந்த சுவாரஸ்யமான ,ரசனைமிகுந்த, பல்துறை அனுபவ எழுத்துக்கு சொந்தக்காரர்.


புகைநுழையாத இடத்திலெல்லாம் புகுந்து வருவது போல ஆச்சர்ய அனுபவம் மிகும் எழுத்து.


அவர் வழி தனி வழி.


சில வருடங்களாக இவரது பதிவுகளை எப்போதும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வருகிறேன். தோழர் யமுனா ராஜேந்திரன் தனது பதிவொன்றில்  "ராஜநாயஹம்   எழுத்தாளர்களின்  எழுத்தாளர் " என்று கூறியிருப்பது மிக உண்மை.


இன்று எனது முகநூல் நண்பராக இருப்பது

 பெரு மகிழ்ச்சி.


.. 

May 21, 2021

ராஜநாயஹம் பதிவுகள் தொடர்ந்து திருடப்படுகின்றன

 மீண்டும் ஈயடிச்சான் காப்பி 


என்னுடைய எம். ஜி.ஆர் பற்றிய பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்து Mahesakumar Tavarayan என்கிற நபர் தன் முகநூல் பக்கத்தில் போட்டுக்கொண்டுள்ளதாக Murugan RD தகவல் தருகிறார். 

இதை தட்டிக் கேட்ட Murugan RD க்கு மகேசகுமார் தவராயன் திமிரான பதில் 

"தெரியும். இப்ப அதுக்கென்ன". 


Mahesakumar Tavarayan முகநூல் பக்கத்தில் என்னால் நுழைய முடியவில்லை. 


இந்த மகேசகுமார் தவராயனை கண்டிக்க வேண்டும். நான் எழுதிய 'என்னத்த கன்னையா' பதிவைக்கூட இந்த நபர் திருடியிருக்கிறார்.


'Tamil Images (yester year) தமிழ்' என்ற குரூப்பில் ராஜநாயஹம் பதிவுகளை மகேசகுமார் தவராயன் காப்பி பேஸ்ட் செய்வதாக தெரிகிறது


சௌந்தரம் ஸ்ரீநிவாசன் சில மாதங்களுக்கு முன்பு 

சரோஜா தேவி பதிவை காப்பியடித்து Muktha films குழுவில் போட்டுக்கொண்ட போது 

நல்ல நண்பர்கள் பலர் 'ராஜநாயஹம் பதிவு' என சுட்டிக் காட்டியவுடன் அங்கே பதிவு நீக்கப்பட்டதை அறிவீர்கள். 


கீழே  உள்ள என் லிங்க் களை தயவு செய்து பாருங்கள்.


https://m.facebook.com/story.php?story_fbid=2964218407124939&id=100006104256328


http://rprajanayahem.blogspot.com/2021/02/blog-post_14.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2016/11/blog-post_18.html


http://rprajanayahem.blogspot.com/2012/08/blog-post_12.html


http://rprajanayahem.blogspot.com/2012/07/blog-post_07.html

May 13, 2021

ராஜநாயஹம் பற்றி திருஞானம்

 Thirugnanam Thiru 


நண்பர் திருஞானம் பதிவு - 13.05.2018 


"R.p. Rajanayahem எனும் அசுரன்.


ராஜநாயஹம் என்ற பெயரை கலை இலக்கியம் என்ற‌ ஒற்றைத் தளத்தில் அடக்கி விட முடியாது. பன்முக ஆளுமை. எழுத்தும் அப்படித்தான்.


 வாழ்வின் நேரடி பட்டறிவு அனுபவங்கள்.                      கடுமையான நெருக்கடிகள். 

ஆனால் வாழ்க்கையின் மீது 

   குறைகள் இல்லையென்கிறார். 


கல்லூரி காலத்தில் மரத்தடி மகாராஜாக்களின் நாயகன். மனதிற்கு உகந்ததல்ல 

என்றே காரணம் சொல்லி 

மத்திய அரசு வேலையை விட்டு  வெளியேறியவர். 

ஆனால் அவர் தொடாத துறைகளே இல்லை எனலாம். 

கலை இலக்கிய அத்தனைக் கூறுகளிலும் 

கால் பதித்திருக்கிறார். 

பாடகர்.

பேச்சாளர்.

எழுத்தாளர்.

நாடக இயக்குனர்.

சினிமா, பாடகர், பயிற்சியாளர்.....

அவர் எழுத்து வகை 

கட்டுரையிலிருந்து மாறுபட்ட ஒரு கூறு முறை...

வித்தியாசமானது...

 பொதிகை டி.வி அவரின் நேர்காணலை ஒளிபரப்பியது.

நல்ல அனுபவம் நேர்காணல்.

பாருங்கள் நண்பர்களே...

உங்களுக்கும் பிடிக்கும்."


https://m.youtube.com/watch?v=4w69gJg5ojc&t=417s


Feb 23, 2021

R. P. ராஜநாயஹம் "மணல் கோடுகளாய்" - யாவரும் வெளியீடு

 யாவரும் வெளியீடு -158,சென்னை புத்தகக்காட்சி சிறப்பு வெளியீடு -15


எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் அவர்களின் "மணல் கோடுகளாய்..." கட்டுரைகள் தொகுப்பு வெளியாகியுள்ளது.


திருச்செந்தூர் கோவிலுக்கு மறுநாள் மாலை ஆச்சி என்னைகூட்டிக்கொண்டு  போனாள். “முருகா! முருகா!” என்று அதீத 

பரவசத்துடன் சன்னதம் வந்தது போல சாமி கும்பிட்டாள். எனக்கு பயமாகக்கூட இருந்தது. வேண்டுதல்களை எல்லாம் எல்லோருக்கும் 

கேட்கும்படியாக வாய்விட்டே சொன்னாள். 


தனக்கு பிடிக்காத உறவினர் ஒருவருக்கு தண்டனை வேண்டினாள் “பவுண்டு 

வீட்டுக்காரன ஜெயிலுக்கு அனுப்பு முருகா! எப்பவும் எசளி பண்ணிக்கிட்டே இருக்கான். 

அவன் நல்லவனே இல்ல பாத்துக்க” 

.. 


என்றாள்.  (நூலிலிருந்து...)


R.P. ராஜநாயஹம், தான்கடந்து வந்த மிகக் 

கடுமையானபாதையை தமது நீண்ட பயணத்தின் அனுபவத்திலிருந்து 

திரும்பிப்பார்க்கையில் மணல் கோடுகளாய் நீள்கிறது... இரத்தமும் சதையுமான மனிதர்களும், நாம் வியக்கும் 

ஆளுமைகளும் Juxtaposition செய்யப்பட்டு ஒரு கண்காட்சி போன்ற நினைவுச் சுவடுகளை சிறிய கேன்வாஸில் வரைந்து 

வைத்துள்ளார்.


நூலின் விலை Rs.190/- 


நூலினைப் பெற:


Be4Books

#24, Shop No.B, First Floor, S.G.P Naidu Complex, Velachery main road, Velachery, Chennai -600 042.

Conduct & watsup No.90424 61472

www.be4books.com 


வங்கி கணக்கு எண்:


A/c No.34804520231

Yaavarum Publishers 

SBI Bank, Chinamaya Nagar Branch

Ifsc code:SBIN0007990. or


GPAY 9841643380

Watsup :9042461472


அட்டை மற்றும் நூல் வடிவமைப்பு: Gopu Rasuvel



Jan 24, 2021

'சினிமா எனும் பூதம்' பற்றி விநாயக முருகன்

 "சினிமா எனும் பூதம் வெறும் சினிமா நூல் அல்ல. 

அதுவும் வாழ்ந்துகெட்டவர்களை பற்றி சொல்லும் இடங்களில் ராஜநாயஹத்தின் எழுத்து சற்று கூடுதலாக மிளிருகிறது." 


- விநாயக முருகன் 


R. P. ராஜநாயஹம் சினிமா எனும் பூதம் பற்றி 

விநாயக முருகன் பதிவு கீழே :


"பொதுவாக நான் சினிமா சார்ந்த அதுவும் தமிழ்சினிமா சார்ந்த நூல்களை படிப்பதில்லை. அவை பெரும்பாலும் கிசுகிசுக்களாகவோ  யார் யாரை வைத்திருந்தாங்க என்று வாரமலர் ரகமாகவோ இருக்கும்.  ஒருசில விதிவிலக்குகள் தவிர்த்து. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அண்மையில் சித்ரா லட்சுமணனின் சில நேர்காணல்கள் யுடியூப்பில் பார்த்தேன். அருமையாக இருந்தது. புத்தகம் என்றால் நான் விரும்பி படித்தது சந்திரபாபு நினைவலைகள். சிறுவயதில் நூலகத்தில் பிலிம்நியூஸ்  வாசிக்கும்போதுதான் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்ற பெயர் அறிமுகமானது. ஆனால் அவரது எழுத்தில் ஏதோ ஒரு போதாமை இருப்பதாக தோன்றும். என்னவென்று தெரியாது. வெகுநாட்கள் கழித்துதான் அது புரிந்தது. அவர் வெறுமனே தகவல் திரட்டியாகத்தான் இருந்தார் என்று. ஆனால் அதுவும் முக்கியமான பணிதான். இப்போது விக்கிபீடியா வந்துவிட்டது. அது இல்லாத காலத்தில் மிகப்பெரிய பணியைத்தான் அவர் செய்துள்ளார். அதனால்தான் பிலிம் நியூஸ் ஆனந்தனை  சினிமாவில் தகவல் களஞ்சியம் என்று அழைத்தார்கள். தமிழ்சினிமாவை தவிர்த்து தமிழ்சமூகத்தின் வாழ்க்கையை புரிந்துக்கொள்ளமுடியாது. உதாரணமாக நம் சிறுவயது நினைவுகளை அசைபோடும்போது எங்கோ கேட்ட இளையராஜா பாடல்களோ, சிறுவயதில் பார்த்த ரஜினி, கமல் திரைப்படங்களோ , நண்பர்களோடு தியேட்டருக்கு சென்றதோ ஒரு மூலையில் தோன்றும். ஒவ்வொருவருக்கும் அந்தஅந்த காலக்கட்ட இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் என்று நினைவுக்கு வருவார்கள். சினிமா இல்லாமல் தமிழன் இல்லை. ஆனாலும் இவ்வளவுபெரிய தமிழ்சினிமா பற்றி குறிப்பிடத்தக்க எத்தனை நூல்கள் வெளிவந்துள்ளன என்று பார்த்தால் குறைவே.

 அந்தப்புத்தகங்களும் ஒன்று திரைக்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் பற்றி இருக்கும். இல்லாவிட்டால் வெறும் தகவல் களஞ்சியமாக                     இருக்கும். 


அண்மையில்தான் R. P. ராஜநாயஹம் எழுதிய  'சினிமா எனும் பூதம்' என்ற நூலை படித்தேன். 


மு.க.முத்து பற்றி அவர் எழுதிய ஒரு குறிப்பை படித்துவிட்டுதான் அவரை முகநூலில்  தொடர ஆரம்பித்தேன்.


  தொடர் அனுபவப்பதிவுகள்   பார்த்துவிட்டு 

பிறகு சாருநிவேதிதா கட்டுரை பார்த்துவிட்டு 'சினிமா எனும் பூதம்'  நூலை வாங்கிப்  படித்தேன்.


 இது வெறும் சினிமா நூல் அல்ல. அதுவும் வாழ்ந்துகெட்டவர்களை பற்றி  சொல்லும் இடங்களில் ராஜநாயஹத்தின் எழுத்து 

சற்று கூடுதலாக மிளிருகிறது."



https://m.facebook.com/story.php?story_fbid=3598639693504964&id=100000769078139


Jan 23, 2021

ராஜநாயஹம் பற்றிய தரிசனம்

 Murugan RD :


R. P. ராஜநாயஹம் எழுத்துக்களையும், எழுத்து நடையையும் 

என்சைக்ளோபீடியா, நடமாடும் நூலகம் அப்படி இப்படின்னு எதனுடனும் ஒப்பிடவே முடியாது,,, கூடாது,,,


எழுத்தாளர்ங்கிற அடைமொழி கூட ராஜநாயஹத்தின் தனித்துவமான எழுத்து திறமைக்கு முன் கால்தூசி.. தயவு செஞ்சு உங்களை எழுத்தாளர்னு யாரும் அழைத்தால் மறுத்துடுங்க. ஏன்னா இங்க பொது வாசகர்களுக்கு எழுத்தாளர்கள் மீதிருக்கும் அலர்ஜி  அப்படிப்பட்டது,


உங்க பிளாக் தற்செயலாக பார்க்க நேரிட்ட போது தொடர்ந்து ஒரு வாரம் விடாமல் அசராமல் படித்தேன், ஆச்சர்யத்தில் பிரமிச்சி போயிட்டேன், என் நண்பர்கள் நிறைய பேருக்கும் உங்க வலைதளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். 


சாதாரண வாசர்களுக்கு ஏற்கனவே படித்த ஒரு புக்கை இன்னொரு தடவ படிக்க மனசே வராது, ஆனா உங்க பதிவுகள் பலவற்றை திடீர்னு ஞாபகப்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை படித்திருக்கிறேன், சில விஐபிகளின் குடும்பம், உறவினர்களை கோர்வையாக ஞாபகப்படுத்தி அவர்களுக்கிடையிலான உறவையும், அவர்களின் தொழிலையும், அவர்களின் வெற்றி, தோல்வியையும், அவர்களின் தற்போதைய அல்லது கடைசி காலகட்டங்களையும் எழுதியதையெல்லாம் படிக்கும் போது அழகான ஒரு சிலந்தி வலைப்பின்னலின் நுணுகத்தை பார்த்து ரசிப்பது போல இருக்கும்,,


நன்றி 

வாழ்த்துக்கள் சார்,




...

R. P. ராஜநாயஹம்

 M.M. Abdulla :

R. P. Rajanayahem is an unsung hero. 

எவ்வ்வ்வளவு எழுதினாலும் அதற்கும் மேல் அவர்!! 


Vaidheeswaran Sundaram : 

வாழ்க்கையை விரித்துப் போட்ட 

பரந்த வியப்பு நிறைந்த விதானம் 

 ராஜநாயஹத்தின் வெளிப்பாடுகள். 


Krishnamoorthy Sundara :

 R. P. ராஜநாயஹம் தமிழகத்தின் பொக்கிஷம். 

மிக ஜாக்கிரதையாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்.

Jan 15, 2021

என் பெயர் R.P. ராஜநாயஹம்

 என் பெயர் R. P. ராஜநாயஹம் 


 பொதுவாக, அப்பா பெயர் பீட்டர், பீர் முகமது, பீதாம்பரம் என்றிருந்தால் ஆங்கிலத்தில் இனிசியல்

 இருப்பது தான் நல்லது. 


தனித்தமிழ் வாதிகளுக்கு 

 இதெல்லாம் புரியாது. 


அப்பா பெயர் பீதாம்பரம் என்று பிடிவாதமாக பீ.வாசு என்று எழுத வேண்டுமா? தமிழில் பி.வாசு என்று எழுதினால் அப்பா பெயர் பிரபாகரா, பிச்சைமுத்துவா,பிள்ளையாரா? 


ஆங்கில இனிசியல் P என்பதை 

எதற்காக ’பி’ என்று ஏன் எழுத வேண்டும்.


 இங்கிலீஷ்ல இனிசியல் போடுகிற சுதந்திரம் பிறப்புரிமை.


ஒரு தனித்தமிழ் வெறியன் ‘ இங்கிலீஷ்ல இனிசியல் போடுறவனெல்லாம் இங்கிலீஷ்காரனுக்கு பொறந்தவனுங்க’ என்று அபத்தமாக ’மைக்’ல கூப்பாடு போட்டான்.


என் பெயரை என் விருப்பப் படி R.P.ராஜநாயஹம் என போட மறுத்து இனிசியலை தமிழில் தான் போடமுடியும் என்று ’தி இந்து’ தமிழ் செய்தித்தாள் பிடிவாதம் பிடித்தது.  நான் எழுதிய கட்டுரைகளில்

 என் பெயர் ஆர்.பி.ராஜநாயஹம் என்று தான்  பிரசுரிக்கப்பட்டது.


குமுதம் வாரப்பத்திரிக்கை  என் பெயரை என் விருப்பப்படி என் கட்டுரைகளில் ’R.P.ராஜநாயஹம்’ என அச்சிட்டிருந்தது.


ஆனந்த விகடன் 'அடடா, R. P. ராஜநாயஹம் என்று போட வேண்டும் என்று சொல்லியிருந்தால் நிச்சயம் அப்படி பிரசுரித்திருப்போமே' என்று சொன்னார்கள். 


கோவை ஞானி பலவருடங்களுக்கு முன்

 இந்திரா பார்த்தசாரதியின் ‘ கிருஷ்ணா, கிருஷ்ணா’ நாவலுக்கு ஒரு விமர்சனம் கேட்டார். நான் ‘லீலார்த்தம்’ தலைப்பிட்டு அனுப்பி வைத்தேன்.


கோவை ஞானி ’ராஜநாயஹம் என உங்கள் பெயரை பிரசுரிக்க மாட்டேன். ராஜநாயகம் தான். ’ஹ’ போட மாட்டேன்..’ 


 நான் ‘ ராஜநாயஹம் என்று என்னை சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், பிரமிள் ஆகியோர் கூட குறிப்பிட்டிருக்கிறார்களே’


கோவை ஞானி ‘ அவங்க எல்லாம் மனுசங்க தானா? எனக்கு சந்தேகமாயிருக்கு.

 நான் ராஜநாயகம்னு தான் அச்சிடுவேன்.’


 நான்  ‘ நீங்க என் லீலார்த்தத்தை பிரசுரிக்க வேண்டாம். கிழிச்சிப்போட்டுடுங்க’


பிறகு எம்.ஜி.சுரேஷின் பன்முகம் பத்திரிக்கையில்                           R.P. ராஜநாயஹம் ’லீலார்த்தம்’ பிரசுரமானது.

(என் ’டேட் ஆஃப் பர்த். விசாரித்த பிரமிள் ரொம்ப சீரியஸாக என் பெயரை R.P.RAJANAYAHEM என்று 37 எண் வரும்படி மாற்றிக்கொள்ளச்சொன்னார்.
’நான் 21 தேதியில் பிறந்தவன். 37ல் மாற்றிக்கொள்ளச்சொல்கிறீர்களே.’

‘ஜே.கிருஷ்ணமூர்த்தி( J.Krishnamurti) 12 தேதியில் பிறந்தவர். கருணாநிதி( M.Karunanidhi) 3ம் தேதி பிறந்தவர்.இருவருக்கும் 37ல் தான் பெயர். அதனால் 21ல் பிறந்த உங்களுக்கும் 37 கைகொடுக்கும். 3 வரிசையில் பிறந்தவர்களுக்கு 37 அதிர்ஷ்ட எண்’ பிரமிள் ஆணித்தரமாக  சொன்னார்.
சம்பிரதாயமாக சொல்லவில்லை.கிளம்பும் வரை R.P.Rajanayahem என்று பெயர் மாற்றம் குறித்து வலியுறுத்தியவர் கடைசியாகக் கூட அதையே சொன்னார்.

அன்று முதல் நான் அவர் சொன்ன பெயரில் தான் இருக்கிறேன். பிரமிள் யாருக்குத்தான் பெயர் மாற்றி வைக்கவில்லை. ஆனால் அவர் சொன்னபடி பெயரைஅப்படியே மாற்றிக் கொண்டவர்கள் என்னைப் போல் எத்தனை பேர்?) 


'தமிழ்ல ஹ, ஸ,  ஷ, ஜ என்ற எழுத்தெல்லாம் கிடையாது என்றால் நம்ம ரெண்டு கன்னத்திலேயும் நாமே 

அடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. 

இருக்கிற சிறகைப் பிய்த்து விட்டு 

தனித்தமிழ் சிறகு ஒட்ட வைப்பது அபத்தம்.'

என்று தி. ஜானகிராமன் சொல்வார். 

(தி. ஜானகிராமன் இறந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு புதுவை பல்கலைக் கழகத்தில் அவர் குறித்த கருத்தரங்கத்தில் அவர் பெயரை தி. சானகிராமன் என்று அச்சில் எழுதினார்கள்.) 

 

என் பெயரை தயவுசெய்து 

என்னுடைய விருப்பப்படி 

R. P. ராஜநாயஹம் என்று எழுதுங்கள். 


ஆங்கிலத்தில் R. P. Rajanayahem 


.....................................

Jan 13, 2021

Natesh on R. P. Rajanayahem

 Koothuppattarai Boss M. Natesh 

on Actor R. P. Rajanayahem 


"By 1990 I was 11 years old in theatre. 

Kind of knew all techniques to train

 an actor’s body-voice; 

but not the mind. 


I thought that a person with trained skills 

in all that I know can go on stage, 

pick up his/her life’s problems and deliver a solo show of good theatre.

 No text by-hearting, no rehearsals. IT NEVER HAPPENED.


 IN 2018  Rajanayahem comes on stage and does exactly that 28years later!!!!!!!!!!!!!... 

I acknowledged the same day after the show

 in front of the audience. 

An intelligent, evocative, transformative actor changing roles like a chameleon. 


R. P. Rajanayahem is a Transformative Actor "


.................................. 


......... 


..

Dec 21, 2020

R. P. ராஜநாயஹம் பற்றி பரமசிவம் எஸ்

 பரமசிவம். எஸ் எழுதிய பின்னூட்டம் 


எனது 40 வருட ஆதர்சங்களை விட

 R.P. ராஜநாயஹம் ஏன் இவ்வளவு வசீகரிக்கிறார் என்பதை யோசிக்கிறேன்.


முதலாவது...விஷய ஞானம்.இது நல்ல எழுத்தாளர்களின் பொது அம்சம் எனினும், உலக இலக்கியம், தமிழ் இலக்கியம்,சினிமா, உலக சினிமா,இசை,அரசியல், உலக மற்றும் இந்திய வரலாறு,புராணம்,இதிகாசம், அறிவியல்,இவையெல்லாம் போதாது என்று மிக முக்கியமாக ஜோதிடம் என்று எல்லாத்  தளங்களிலும் சர்வ சகஜமாக நுண்ணிய புள்ளி விவரங்களையும் தேவையான இடத்தில்  எந்த நொடியிலும் சொல்லக்கூடிய  இவரது நினைவாற்றல் வேறு யா....................ருக்குமே அமைந்திடாத ஒன்று.


        கிரிக்கெட் ரசிகர், இசை ரசிகர்,திரைப்பட ரசிகர்களுக்கு நடுவே தம் வாழ்வையே தமக்கான விருந்தாக்கிய மிகச்சிறந்த ரசிகர் ..சலிப்பும் சோர்வும் இல்லை.


எல்லாம் தெரிந்த அகம்பாவம் இல்லை. 

எதுவுமே தெரியாதது போல பாவனை செய்து செயற்கையான அடக்கத்தை முகமூடி ஆக்கி அதையே தனது பிரபல்யத்திற்கான முக்கிய காரணி ஆக்கும் புத்திசாலித்தனமும் இல்லை.


அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரண்மனை உத்தியோகம் என்று இருக்கும் காலத்தில்..அரசு வேலைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யச் காத்திருப்போர் மத்தியில்  மிக நல்ல வேலையை மிகச் சாதாரணமாகக் கைகழுவியவர்...


பொருளாதார ரீதியான சமூக அந்தஸ்து,புகழ்,வசதியான வாழ்க்கை போன்ற மனிதனுக்குரிய ஆசைகள் எதுவும் இல்லாத வாழ்க்கையை அதன் போக்கில் ஒவ்வொரு நொடியும் ரசிக்கும் ரசனை மிகுந்த துறவி இவர் ..


சிலரைப் பார்த்து இவர் போல வாழ்க்கை அமைந்து இருக்கக் கூடாதா என்ற எண்ணம் எப்போதாவது வந்து போகும் ..ஆனால் இவரது மனோபாவம் நமக்கு அமைந்து இருக்கக் கூடாதா என்ற ஏக்கம்  ராஜநாயஹம் சாரைப் பார்த்து ஏற்பட்டது...

இந்த எளிய ரசனை மிகுந்த வாழ்க்கை யாருக்கும் அமையாது ..இப்படி எல்லோரும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் உலகத்தில் ஆனந்த வெள்ளத்திற்குப் பஞ்சம் ஏது?


இவரது எழுத்துக்கள் எல்லாமே எவ்வகையிலும் அடங்காத புதுவித இலக்கியம் எனவே எனக்குப்படுகிறது..


மேலோட்டமாகப் பார்த்தால் பொழுது போக்குக்கான எழுத்து என்று தோன்றும் ..ஆனால் அந்த நான்கு வரிகளில் எவ்வளவு உழைப்பும் ஞாபக சக்தியும் ரசனையும் அடங்கிக் கிடக்கிறது என்பதை யோசித்தால் பிரமிப்பு மட்டுமே மிஞ்சுகிறது ..


வலிந்து வெளிப்படுத்தப்படும் ஞானம் அதற்கான மதிப்பை இழக்கிறது ..தானாக வெளிப்படும் ஞானம் அதற்கான மதிப்பைப் பெறுகிறது ..ஆனால் தேடி வந்து புரிந்து கொள்ளப்படும் ஞானம் மிக உயரிய மதிப்பைப் பெறுகிறது ..நீங்கள் எந்த இடத்திலும் உங்களை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. உங்களது ப்ளஸ் மைனஸ் இரண்டுமே இதுதான் .. 

இந்த மிக அவசரமாக எழுதப்பட்ட பதிவு..ராஜநாயஹம் சாரைப் பற்றி இன்னும் அறிந்துகொள்ள வேண்டும்.இவரது ஆளுமையை விளக்கவல்லது புத்தகமே...கட்டுரையால் இயலாது...

Paramasivam S


.. 


07.01.2021


Rajanayahem R.p. உங்களது பதிவுகள் தாமாகவே அதற்குரிய மதிப்பைப் பெற்றுவிடுகின்றன .பிரபலம் அடைந்தும் விடுகின்றன ..ஆனால் நீங்கள் பிரபலமடைய வில்லையே? நீங்கள் உங்களை எந்த இடத்திலும் வலிந்து வெளிப்படுத்திக் கொள்வதே இல்லை. இது பிரபல்யத்தையோ பணத்தையோ பெரிதாகக் கருதாத உங்களின் பெருந்தன்மை.  இதைத் தவிர. தங்களின் மேதைமை காரணமாக அமைந்த பரந்த உள்ளம் ஒரு காரணம்.


பணம் மட்டுமே தமக்கான அடையாளமாக எதேச்சையாக அமைந்து அறிவோ அல்லது அறிவின் தேடலோ அமையப் பெறாத சில பேர்  பிரபல்யத்தை அடையத் துடித்தால் என்ன ஆகும் ?இது போன்ற விஷயங்கள் தான் நடக்கும். என் எழுத்தாள நண்பரிடம் ஒருவர் கேட்டாராம். "ஒரே நாளில் நான் பிரபலமாக என்ன வழி?

       "ஏன் பிரபலமாக வேண்டும்?" என்ற எழுத்தாளரின்  எதிர்க்கேள்விக்கு பதிலே இல்லையாம்.


யோசித்துப் பார்த்தால் புகழ் ஆசைதான் காரணம்.


எங்களது கோவில்பட்டி திருநெல்வேலி தூத்துக்குடி ஏரியாவில்  தேங்காயை வைத்துச் செய்யும் சொதி என்கின்ற மிக மிகச் சுவை வாய்ந்த குழம்பு எங்கள் குடும்பங்களில் மிக மிகப் பிரபலம். நண்பர்கள் எங்கள் வீடுகளுக்கு வந்தால் இதை செய்து தரச் சொல்வார்கள். ஆனாலும் பிறரின் வீடுகளில் இதைச் செய்வதே இல்லை ..சொதிக் குழம்பு சாம்பாரைவிட மிகச் சுவை வாய்ந்தது ஆயினும் பிரபல்யம் குறைவு.தங்களைப் போல...


எனவேதான் இந்நிகழ்வுகள் ..தங்களின் பேஸ்புக் பதிவுகள் அனைத்தையும் முறைப்படி புத்தகம் ஆக்குங்கள்.சுஜாதாவின் இடம் காலியாகவே உள்ளது.சொல்லப்போனால் அவரால் தொட முடியாத உயரங்களை உங்களால் தொட முடியும் ..


பிரபலங்களோடு போட்டோ எடுத்து ஒரு போட்டோவில் உலகப்புகழ் அடையத் துடிக்கும் புகழ் வெறியர்கள் அனேகம். (அப்போது அவர்கள் முகத்தில் ஒரு இளிப்பு இருக்குமே... பார்க்க சகிக்காது.)..தங்களிடம் அது கூடக் கிடையாது.சொல்லப்போனால் ஜெமினி கணேசன் அவர்களுடனான போட்டோவில் அவர் முகத்தில்தான் ரசிகக்களை தெரியும்..குருவிமண்டையனுடனும் சரி..ஜெமினிகணேசனுடனும் சரி..அகம்பாவமோ போலியான பணிவோ இல்லாத ஒரே R.P. ராஜநாயஹம் தான்.. 


உங்களின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்யலாம் யாரும்...உங்களைப்போல் ஞாபக சக்தியும் ஞானமும் பல்துறை அறிவும் .வாழ்வை சுமை எனப் பார்க்கும் பொதுப்புத்தி அமைந்த இந்த உலகில் வாழ்வை உங்களுக்கான பரிசாக உங்களுக்கான விருந்தாகக் கொண்டாடும் உங்களைக் காப்பியடித்தல் சிரமம்..


உங்கள் படைப்புகளை முறைப்படுத்துங்கள் சார். அவை மிக மிக மிக மதிப்பு வாய்ந்தவை. ஆனந்தரங்கம் பிள்ளை தான் டைரி எழுதும்போது பின்னாளில் அது தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷமாகும் என நினைத்துப்பார்த்தா எழுதினார்?அந்தத் தகுதி தங்களின் எழுத்துக்கு உண்டு.


தத்துவம், காதல், அரசியல், வாழ்வியல்,தீவிர இலக்கியம்,அழகியல் எழுதும் எழுத்தாளர்கள் உண்டு.எந்த வகையிலும் சாராத புதிய வகை இலக்கியம் தங்களது எழுத்து.


சினிமா எனும் பூதம் என்னும் புத்தகம் ராஜநாயஹம் என்ற ஞானராட்ஷசனின் பிரம்மாண்டத்தை உணர்த்துவது.அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.

 அழகான சிலையாக இருந்தாலும் கருவறையில்இருந்தால் தான் மதிப்பு.இல்லாவிட்டால்  பைரவர்கள் காலைத் தூக்கும் பொருளாகிவிடும்.

உங்கள் உயரத்தை நீங்கள் முதலில் உணருங்கள். உங்களது எழுத்தின் தரத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.அவற்றைப் புத்தகமாக்குங்கள்.இது வருங்கால சந்ததியினருக்குத் தங்களின் கொடையாக என்றென்றும் நிலைத்திருக்கும்.





Dec 20, 2020

பொன்னாடை, மாலை, பூச்செண்டு

 R. P. ராஜநாயஹம் ஏற்கும்

 பொன்னாடை, மாலை, பூச்செண்டு 


பா. அசோக் : யாரிடமெல்லாம் என்னால் கற்றுக் கொள்ள முடிகிறதோ.. 

யாரிடம் என்னால் அய்யம் தெளிவுற முடிகிறதோ.. 

யாரிடம் நான் கெட்ட பெயர் வாங்கக் கூடாது என பயந்து நிற்பேனோ.. 

யாரிடம் என்னா எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்பை மட்டும் பெற முடிகிறதோ.. 

அவர்களை என் தந்தைக்கு ஒப்பாகவே அன்பு செய்கிறேன். 

என் ஞான தகப்பன் R. P. ராஜநாயஹம். 


கோபிநாத் :  நான் உங்கள் எழுத்துக்களுக்கு ரசிகன் என்பதும் திருப்பதி லட்டு தித்திக்கும் என்பதும் ஒன்று. 


Prof. Fazlulla Khan : I have known you always to be

  a man with cosmopolitan views. 


Ravikumar M. G. R : சிவாஜிக்கு நடிப்பு.

 உங்களுக்கு எழுத்து. 


Raja Ramasamy : எழுத்தின் சுவாரசியம் உங்களால் புது பரிமாணம் கொள்கிறது. நையாண்டியாக பேசி விடலாம். ஈசி. அதை எழுத்தில் முழுவதுமாக நிரப்புவது மிக கடினம். உங்கள் பேனா செய்கிறது. 

நினைவாற்றல் கடல் நீங்கள். 


Ekambaram : அறிவு களஞ்சியம். 

திரைப்படத் துறையில் எழுதி பட்டம் வாங்காத

 Ph. D. அவர். The ultimate in special writings. 

ஓர் அகராதியை புரட்டினால் எளிதில் ஒரு பொருள் விளங்கும். இவர் எழுத முழு பொருளும் விலாவாரியாய் புரியும்.. எழுத்தின் சர்வகலாசாலை அவர். 

ராஜநாயஹம் வாழும் கலைக்களஞ்சியம். 

பாதுகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம். 


Srivathsan : எனக்கு எப்பவுமே நீங்கள் ஓர் ஆச்சரியம். பரந்து பட்ட அறிவு என்று கேள்வி தான் பட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு நிகழ்கால உதாரணம் நீங்கள் தான் சார் 


Shan Bommiah : கவிதை நடை போங்க.. 


Baskar M : என்ன வகை மனிதர் நீங்கள்? 

ஈஸியாக மறக்க முடியவில்லை உங்கள் பதிவுகளை. பல்கலை ஆய்வரங்கம் நீங்கள். 


Mathi Mathi : சார், நீங்கள் எழுதுவதையெல்லாம் படித்து விட்டு, வெறும் தம்ஸ் அப், ஹாட்டின் மற்றும் லாஃபிங் ஸ்மைலியுடன் react பண்ணி விட்டு போய் விடுவது என்பது எனக்கு பெரும் குறையாகத் தோன்றுகிறது. 


Paramasivam S : நாற்பது வருடங்களாக என் ஆதர்சமாக இருக்கும் எழுத்தாளர்களை விட நீங்கள் என்னை வசீகரிக்கிறீர்கள்.. இவ்வளவு நாட்கள் எப்படி நீங்கள் என் கண்களுக்குத் தட்டுப்படவில்லை?  ஆச்சரியம். 


Vasudevan Kathamuthu 

வாசுதேவன் காத்தமுத்து : ராஜநாயஹம் 

ஒரு களஞ்சியம். 

அதை விட முக்கியம் அவருடைய யதார்த்த குணம். நேர்மை. 

எனக்குத் தெரிந்து சாரு நிவேதிதா தான் அவரை சரியாக கணித்தவர். 

'எல்லாவற்றையும் கொடுத்து விட்டு 

பாரதியைப் போல வாழ்பவர்'.

Dec 17, 2020

கனவில் வரும் ராஜநாயஹம்

 கனவில் வரும் ராஜநாயஹம் 


சென்ற 2019 டிசம்பர் மாதம் 

இத்தாலியிலிருக்கும் ஜெயந்தன் நடராஜா 

எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். 


"Dear Mr Rajanayahem, 


I had a dream meeting you

 in a temple in India! 


I respect your writing style 

and your knowledge! 


Thank you. 


I don't know why I had this dream! 


Kind regards, 

Jeyandan 


இந்த 2020 டிசம்பரில் 

திருப்பூரில் இருந்து கார்மேக ராஜா சுப்ரமணியம் 

என் பதிவில் எழுதியிருக்கும் கமெண்ட்

   

"நேற்று என் கனவில் வந்தீர்கள் சார். 

பேரரசனுக்கு உண்டான மிடுக்குடன் இருந்தீர்கள் "


...

May 18, 2020

Blog hits today exceeds Thirty Lakhs

rprajanayahem.blogspot.com

Hits today exceeds Thirty Lakhs

என்னுடைய BLOG hits
இன்று இப்போது

30,01210