Murugan RD :
R. P. ராஜநாயஹம் எழுத்துக்களையும், எழுத்து நடையையும்
என்சைக்ளோபீடியா, நடமாடும் நூலகம் அப்படி இப்படின்னு எதனுடனும் ஒப்பிடவே முடியாது,,, கூடாது,,,
எழுத்தாளர்ங்கிற அடைமொழி கூட ராஜநாயஹத்தின் தனித்துவமான எழுத்து திறமைக்கு முன் கால்தூசி.. தயவு செஞ்சு உங்களை எழுத்தாளர்னு யாரும் அழைத்தால் மறுத்துடுங்க. ஏன்னா இங்க பொது வாசகர்களுக்கு எழுத்தாளர்கள் மீதிருக்கும் அலர்ஜி அப்படிப்பட்டது,
உங்க பிளாக் தற்செயலாக பார்க்க நேரிட்ட போது தொடர்ந்து ஒரு வாரம் விடாமல் அசராமல் படித்தேன், ஆச்சர்யத்தில் பிரமிச்சி போயிட்டேன், என் நண்பர்கள் நிறைய பேருக்கும் உங்க வலைதளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
சாதாரண வாசர்களுக்கு ஏற்கனவே படித்த ஒரு புக்கை இன்னொரு தடவ படிக்க மனசே வராது, ஆனா உங்க பதிவுகள் பலவற்றை திடீர்னு ஞாபகப்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை படித்திருக்கிறேன், சில விஐபிகளின் குடும்பம், உறவினர்களை கோர்வையாக ஞாபகப்படுத்தி அவர்களுக்கிடையிலான உறவையும், அவர்களின் தொழிலையும், அவர்களின் வெற்றி, தோல்வியையும், அவர்களின் தற்போதைய அல்லது கடைசி காலகட்டங்களையும் எழுதியதையெல்லாம் படிக்கும் போது அழகான ஒரு சிலந்தி வலைப்பின்னலின் நுணுகத்தை பார்த்து ரசிப்பது போல இருக்கும்,,
நன்றி
வாழ்த்துக்கள் சார்,
...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.