Share

Jan 10, 2021

எஸ். எஸ். ஆர் சந்தித்த உயிராபத்துகள்


எஸ். எஸ். ஆர் நடிகராக மட்டுமின்றி

 அரசியல் வாதியாகவும் இருந்தவர்.

 நாடகநடிகராக இருந்த போதே 

அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தார். 


' நான் டவுசர் போட்டிருக்கும் போதே அண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டு மேடையேறியவன் '

என்று பெருமையாக சொன்னவர். 


அண்ணாவின் ஐம்பத்தொன்றாவது பிறந்த நாளில் ஐம்பது பவுன் தங்கத்தோடு ஐம்பத்தொன்றாக தன் உயிர் காணிக்கை என்று எழுதிக் கொடுத்தார். 


எம். ஜி.ஆருக்கு முன்னரே எம். எல். ஏ  ஆனவர். 


அரசியல் வாழ்க்கை அவருக்கு உயிராபத்தை கொடுத்திருக்கிறது. 


அன்பகத்தில் அவர் மீதான தாக்குதல் எல்லோரும் அறிந்ததே. 


அதற்கும் சில வருடங்களுக்கு முன்பு 

எஸ். எஸ். ஆர் வீட்டிற்குள் நுழைந்து 

சிலர் தாக்குதல் நடத்திய போது 

ஒரு பத்திரிகையில் 

அவர் பேட்டி வெளியாகியிருந்தது. 


அவர் முத்து மண்டபம் படத்தில் நடிகராக தலையில் கட்டு போட்டிருக்கும் படத்தை போட்டு அன்று திரைப்படத்தில், இன்று நிஜத்தில் தாக்கப்பட்ட நிலையில் என்று 

தாக்கப்பட்டு தலையில் கட்டோடு 

உள்ள படத்தையும் போட்டிருந்தார்கள். 


எஸ். எஸ். ஆரின் அந்தப் பேட்டி விசேஷமானது. 

அதற்கு முன் தான் சந்தித்த ஆறு உயிராபத்துகள்

பற்றி சொல்லியிருந்தார். 


அதில் மூன்று நிகழ்வுகள் - 


அவர் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தந்தையின் சகோதரி அந்த கருவைக் கலைக்க முயன்று மருந்து கொடுத்திருக்கிறார். அதையும் மீறி கரு வளர்ந்து ராஜேந்திரன் பிறந்து விட்டார். 


அவர் நாடக கம்பெனியில் பதின் பருவத்தில் ஜானகிராமன் என்ற மற்றொரு பதின்பருவ நடிகன் ராஜேந்திரன் மீது மிகுந்த பகை, துவேஷத்துடன் இருந்திருக்கிறான். 


ஆற்றில் குளிக்கப் போன இடத்தில் இவரை அவன் பார்த்து விட்டு நீரில் அமுக்கி கொல்ல முயன்றிருக்கிறான். வாழ்வா, சாவா போராட்டத்தில் இவர் அவனை நீரில் அமுக்கியிருக்கிறார். ஜானகிராமன் செத்து விட்டான் என்று கிளம்பி நாடக கொட்டகைக்கு வந்திருக்கிறார். கொலை செய்து விட்டோமே என்ற நடுக்கத்துடன் மேடையேறினால், ஆடியன்ஸில் ஒரு போலீஸ் ஆஃபிசர். இவருக்கு பதற்றம். அந்த சீன் முடிந்தவுடன் இவர் பார்க்கிறார். 

ஜானகிராமன் இவரை கோபத்துடன் முறைத்துப்பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறான். 


அடுத்து இவர் தேனியில் 1962 தேர்தலில் 

தி. மு. க வேட்பாளராகப் போட்டியிட்ட போது

 ஒருவன் அரிவாளால் இவர் கழுத்தில் வெட்டப் பாய்ந்திருக்கிறான். அண்ணாவின் முரட்டுப்பிள்ளை மதுரை முத்து சட்டென்று மின்னல் வேகத்தில் தன்னுடைய மேல் துண்டால் அரிவாளைத் தடுத்து இவரை காப்பாற்றியிருக்கிறார்.


.... 


https://m.facebook.com/story.php?story_fbid=2914989692047811&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2906250719588375&id=100006104256328

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.