Share

Jan 16, 2021

எல்லாந்தெரிஞ்ச ரெண்டு ஏகாம்பரங்கள்



1990 ல் ந. ஜயபாஸ்கரன் தினமணியில் செப்டம்பர் மாதம் எழுதிய கட்டுரையில் 

 இரண்டு தமிழ் பேராசிரியர்களின் 

படு அபத்தமான மதிப்பீட்டுக் குறிப்புகளை

 சுட்டிக் காட்டியிருந்தார். 


ஜானகிராமன் மீது மிகுந்த அபிமானம் 

கொண்டிருந்த ந. ஜயபாஸ்கரன். 


ஜானகிராமனுக்கு இப்படியும் ஒரு இழுக்கு நேர்ந்த விஷயத்தை 'தி. ஜானகிராமனின் இரண்டாவது மரணம்' என்று தலைப்பிட்டு 

கவிஞர் ந. ஜயபாஸ்கரன் 

எழுதிய போது தான் தெரிய வந்தது. 


தி. ஜா.வின் அம்மா வந்தாள் நாவல் பற்றி 

டாக்டர் சு. திருநாவுக்கரசு சொல்லியிருப்பதைப் பாருங்கள். 


"  'அம்மா வந்தாள் எனும் 

புதினத்தின் தலைவன் அப்பு. 


வேத சாஸ்திர வல்லுநன். 

அவன் பல பெண்களை விரும்புகிறான். 


அவன் அடி மனத்தில் தாயைப் பற்றிய 

எண்ணமே இருந்து வருகிறது. 


ஒரு நாள் தாயையும் பெண்டாள்கிறான். 


பிறகு தன் செயலுக்கு நாணி, வெறுப்புற்றுத் திருந்திய மனிதனாக மாறி விடுகிறான். "


இப்படி சு. திருநாவுக்கரசு 'திறனாய்வு அணுகுமுறைகள் : உளவியல் அணுகுமுறை' நூலில் (பக். 119 - 120) உளறியிருக்கிறார். 


இன்னொரு பேராசிரியர் டாக்டர் தா. ஏ. ஞானவேல் 

என்பவர் எழுதிய நூலில் (பக். 196 - 197) 

'உயிர்த் தேன்' அனுசுயா பற்றி 


" அனுசுயா என்பவள் பல ஆடவரோடு உறவு கொள்வதையே மையமாக வைத்து 'உயிர்த் தேன்'  என்ற புதினம் புனையப்பட்டுள்ளது. 


தான் பல ஆடவரோடு உடலுறவு கொள்வதை அவள் பெருமையாகவும் பேசிக்கொள்கிறாள். 


பல ஆடவரோடு உறவு கொள்வதே அன்பு என்று அவள் கருதுகிறாள். 


அன்பு என்ற சொல்லின் புனிதமான பொருளையே அவள் சிதைத்துக் கூறுகிறாள். 


பல ஆடவரோடு உறவு கொள்ளும் உரிமை ஒரு பெண்ணுக்கு வேண்டும் என்பதை இப்புதினம் உணர்த்துவது போல் தோன்றுகிறது.


 இது போன்ற  புதினங்கள் மக்கள் உள்ளத்தை எளிதில் உணர்ச்சி வயமாக்கிக் கவர்வதற்கே எழுதப்படுகின்றன எனலாம். 


இவற்றை எங்கனம் உயர் தர இலக்கியமாகக்

கொள்ள முடியும்? "


மேற் கண்ட சு. திருநாவுக்கரசு, தா. ஏ. ஞானவேல் என்ற இரண்டு பேராசிரியர்களும் Hypocrites. 


யப்பா பைரவாக்களே, நீங்க யாரு பெத்த பிள்ளைகளோ? 


 இரண்டு நாவல்களை படிக்காமல், மனசாட்சியில்லாமல் 

எழுதியிருக்கிறார்கள் என்பதை 

அம்மா வந்தாளையும் உயிர்த் தேனையும் 

படித்த வாசகர்கள் அறியமுடியும். 


இந்த கூற்றுகள் தகவல் பிழை, மதிப்பீட்டு வழுவும் கொண்டவை. அடிப்படை ஆய்வியல் நெறி கூட  காப்பாற்றப்படவில்லை.


https://m.facebook.com/story.php?story_fbid=2961403914073055&id=100006104256328


..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.