Share

Jan 27, 2021

பசி தான் ஸ்வாமி. பசிக்கு நைவேத்யம்

 "இல்லாததுகள் வயித்தில ரண்டு சாதம் விழணும்.                                 பசி தான் ஸ்வாமி. 

 அதுக்கு நைவேத்யம் பண்ணினாப் போதும். 


ஸ்வாமி ஞாபகம் வரணுமோல்லியோ.

 பசி ரூபத்தில தானே இருக்கான் அவன்" 


- தி. ஜானகிராமன் 


எம். ஜி.ஆர் இப்படி அன்ன தாதா என்று பெயர் பெற்றார். ராமாவரம் தோட்டத்துக்குப் போனாலே சாப்பாடு நிச்சயம். 


1960, 70களில் அவசர பொருளுதவி கேட்க துணை நடிகர்கள் 

எம். ஜி.ஆரைப் பார்க்க போவார்கள். 


நடிகர் கே. கே. சௌந்தர் சொன்னார் : 'அப்ப எம்ஜியார் ஊர்ல இல்லன்னா ஜெய்சங்கர தேடிப் போவோம்.' 


ஜெய்சங்கர் பலருக்கு பலவாறு உதவியவர். 


விஜய்காந்த் பெரிய அளவில் பலருக்கு உதவியவர். 

எம். ஜி.ஆருக்கு பிறகு தமிழ் திரையுலகம் கண்ட 

அன்னதாதா. 


விஜய்காந்த் ஆஃபிஸில் கறி சாப்பாடு எவ்வளவு பேர் போனாலும் கிடைக்கும். 

வேலையில்லாத திரைக்கலைஞர்கள் நிறைய பேர் பசியாற்றிய வள்ளல். 

இதெல்லாம் அரசியலுக்கு வருமுன்னரே. 


ஏதோ வெளிநாடு போயிருந்த போது இவரைப் பார்க்க பல தமிழர்கள் தேடி வந்திருக்கிறார்கள். 

இரு நூறு பேர் இருப்பார்களாம். 

அவ்வளவு பேருக்கும் உடனே உணவு அளித்து பெரிய தொகையை செலவழித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. 


கொடுக்கிற மனசு இயல்பான குணம்.

... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.