Share

Jan 22, 2021

பெர்டோல்ட் ப்ரெக்ட் கவிதை - ஒரு ஓவியனைப்பற்றி '

 பெர்டோல்ட் ப்ரெக்ட் கவிதை. 

'ஒரு ஓவியனைப்பற்றி'


பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில். 


ப்ரெக்ட் இருபத்துநான்கு வயதில் இலக்கிய வண்ணத்தை மாற்றியவர் என அறியப்பட்டவர். 

இந்த குறிப்பிட்ட கவிதையை இருபது வயதையொட்டி எழுதியிருப்பார் போல. 


முப்பது வருடங்களுக்கு முன்பு படித்த போது                 ஓவியங்கள், ஓவியர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுத்தியது. 


ஓவியன் பெயர் நெஹர் காஸ். 

பாலைவன மணலில் ஒட்டகத்தின் மீது செல்கிறான். வாட்டர் கலரில் ஒரு பச்சைப் பேரீச்சை மரத்தைத் தீட்டுகிறான். 


கங்கையாற்றின் மீதான நிறமிழந்த வானத்தை வரைய வேண்டியிருந்த வேளையில், 

ஆகாயம் அழகாயிருக்கிற காரணத்திற்காக நெஹர் காஸ் குடித்துக்கொண்டே இருந்திருக்கிறான். 


பெரிய கான்வாஸில் வரைய வேண்டும். 

அவனுடைய கான்வாஸை ஏழு கூலியாட்கள் தூக்கி நிறுத்துகின்றனர். 


இவன் குடித்துக்கொண்டே.... 

பதினான்கு கூலியாட்கள் நெஹர் காஸை தூக்கி நிறுத்துகின்றனர். 


இரவில் கற்களின் மீது உறங்குகிறான். கடினமாய் இருப்பதற்காக கற்களை கெட்ட வார்த்தையால் திட்டுகிறான். 

தன் வசையையும் அந்த கற்களையும் கூட அழகென்று கண்டு அதை சித்திரமாக்க விரும்புகிறான். 


வயலட் நிற வானத்தை நெஹர் காஸ் வெண்மை நிறத்தில் தீட்டுகிறான். காரணம் நீல நிற வர்ணம் மிச்சமில்லை அவனிடம். 

பாவம். Running short of painting material also. 


கடலில் பழைய கப்பல் ஒன்றின் உள்பகுதியில், அவனின் மிகச் சிறந்த சித்திரத்தை, 

மூன்று வர்ணங்களை பயன்படுத்தி,

 இரண்டு பக்கவாட்டுத் துளை வெளிச்சம் 

மட்டுமே கொண்டு தீட்டிக்கொண்டிருக்கிறான். 


பிறகு கப்பல் மூழ்கியது, அவன் தப்பித்தான். 

நெஹர் காஸ் சித்திரம் பற்றி பெருமை கொண்டிருக்கிறான். 

அது விற்பனைக்காக இருக்கவில்லை.


.. 



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.