Share

Jul 30, 2021

ராஜநாயஹத்துக்கு ஏதாவது செய்ய முடியலயே

 மூன்று வருடங்களுக்கு முன்

சாரு நிவேதிதா  தன் ’மயானக்கொள்ளை’ நாடகத்தை கூத்துப்பட்டறையில் வாசித்துக்காட்ட வந்திருந்தார்.

நடேஷ் “ வா, மாப்ள” என்று அன்போடு வரவேற்றார்.


மயானக்கொள்ளை  ஒரு அற்புதப் படைப்பு.


நான் தான் மயானக்கொள்ளையை நடிகர்களுக்கு வாசித்துக் காண்பித்தேன். 

இப்படி வாசிப்பது Closet Drama வகை.


அத்தனை கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் நடிப்பையும் வாசிக்கும் போது கொண்டு வரவேண்டும்.

கேட்பவர்களுக்கு காட்சியாக விரியும்.


கேட்டவர்கள் அனைவரும் அதை உணர்ந்தனர்.


சாரு நிவேதிதா “ ராஜநாயஹம், ரொம்ப நல்லா வாசிச்சீங்க. சத்தியமா என்னால நிச்சயமா 

உங்கள மாதிரி வாசிச்சிருக்க முடியாது.” என்று 

ரொம்ப விசாலமான மனத்துடன் பாராட்டினார்.


சாரு சொன்னார்”உங்களுக்கு ஏதாவது செய்ய முடியலயேன்னு எனக்கு வருத்தமா இருக்கு”


 


http://rprajanayahem.blogspot.com/2019/09/blog-post_27.html?m=0

Jul 21, 2021

ராஜநாயஹம் பற்றி கார்த்திக் ஆதிநாராயணன்

 கார்த்திக் ஆதிநாராயணன் 


''சார்,


சினிமா எனும் பூதம் வாங்கி உங்களுக்கு போட்டோ எடுத்து அனுப்பியவுடன் படிக்க ஆரம்பித்து விட்டேன். 


நண்பர் ஆத்மார்த்தி முகநூல் நண்பராக இல்லாததால்,அவரது பக்கம் பின்னூட்டம் இட அனுமதிக்கவில்லை. நிஜத்தில் அவரோடு அறிமுகம் உண்டு. கண்ணே கலைமானேவில் நடிக்க அவர் வந்த போது எங்கள் இயக்குனர் அறிமுகம் செய்து வைத்தார். 


சினிமா எனும் பூதம் மூன்று வித அனுபவங்களை உள்ளடக்கியது. 


1.நீங்கள் பார்த்த சினிமா


2.நீங்கள் படித்த,கேள்விப்பட்ட சினிமா


3.நீங்கள் வாழ்ந்த சினிமா


மூன்றிலும் என்னை வியக்க வைத்தது கொட்டிக்கிடக்கும் "டீட்டெயிலிங்" மற்றும் உங்களது நியாபக சக்தி. கடந்த ஆண்டு வைகை ஆற்றை பார்த்தவாறு இருக்கும் "ஷா தியேட்டரின்" பெயர் எவ்வளவு யோசித்தும் நியாபகம் வராமல் நண்பரிடம் கேட்க வேண்டியதாயிற்று எனக்கு. தியாகராஜ பாகவதர் தொட்டு நியாபகத்தில் நிறுத்தி எழுதி இருக்கிறீர்கள். 


கமல்,ஜெய்சங்கர் இருவரும் எனக்கு அழகான கதா நாயகர்கள் முன்பு. ஆனால் உங்கள் எழுத்தை படித்த பின் ஜெய்சங்கர் காமெடியனாகிப் போனார். 


வாழ்பனுவத்தில் நீங்கள் முழுமையான versatile சார். சல்லிகள் முதல் பாக்யராஜ் சார் வரை பழகியதை சொல்கிறேன்.  


வைகை ஆற்று மணலில் உங்களுடன் சுற்றிய சல்லிகளாகட்டும், ஒரு elite அப்பாவின் elite மகன் வாழ்வாகட்டும்,சினிமா பழக்கங்கள் ஆகட்டும், உங்களது அந்த மதுரை satire உடன் நாற்பது ஆண்டுகளுக்கு பிந்தைய ஒரு நாளில் நாங்கள் படிக்க வேண்டி அத்தனை அனுபவங்களும் உங்களுக்கு நிகழ்ந்ததாகவே நான் கருதுகிறேன். 


கொரனா செய்த பெருங்கொடுமைகளில் ஒன்று உங்களோடான சந்திப்பு தள்ளிப் போய்கொண்டே இருப்பது. 


எழுத்துகளின் ஊடாக என் மதுரை காலங்களை நீங்கள் மீட்டெடுப்பது எனக்கு பெரு மகிழ்ச்சி. அதற்கு   நன்றிகள் சார்!''

Jul 20, 2021

ராஜநாயஹம் பற்றி பேராசிரியர் காசி மாரியப்பன்

பேராசிரியர் காசி மாரியப்பன் 


நண்பர் R.P.ராஜநாயஹம் நாங்களும்

 திருச்சியும் தவறவிட்ட பொக்கிஷம். 

வறுத்து உடனே அரைத்துத் தயாரித்த காப்பியை அவர் வாங்கித்தர அருந்தியது மனதில் அலையாடுகிறது. 


அந்தக்காப்பியின் புதுமைக்கும் அடர்த்திக்கும் சுவைக்கும் மேலானது ராஜநாயஹத்தின் எழுத்து.


 

 எத்தனை துன்பங்கள் எவ்வளவு இன்பங்கள் 

ஒரு மனிதருக்கு. 


அவருடன் திருச்சியில் பழகக் கிடைத்த தருணங்களைப் 

பயன்படுத்த வில்லையோ 

என்ற மனக்குறை உண்டு. 


சினிமாவும் அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. யாரை நோவது?

பா. அசோக் சொல்வது

 தமிழ் நாடு - புதுச்சேரி பார் அசோசியேஷன் 

கோ - சேர்மன்  பா. அசோக்


"ஆத்மார்த்தி சொல்வது போல,  சினிமா, தமிழர் வாழ்வில் ஒரு பகுதி என்றால், தவறேயில்லை. அதிலும் குறிப்பாக மதுரைக்காரர்களுக்கு எல்லாமே சினிமா தான்,  சிலர் பேசுவது , நடை உடை பாவனைகளிலேயே அவர் இன்னார் ரசிகர் என சொல்லிவிடலாம்,  சேதுராமன் அண்ணன் துள்ளலாக நடந்து வந்தால், அவர் வாத்தியார் படம் பார்த்துள்ளார், துரை பாவா போடும் சட்டை அனேகமாக ரஜினி பட சட்டையாக இருக்கும்... மோகன் மாமா வீட்டில் சண்டை போட்டு அதிர்ச்சி மீளாதவராக நடக்கும் போது அங்கே சிவாஜி தான் மோகன் மாமா உருவத்தில் போவார்.  அத்தனை பிடிப்பு சினிமா மேல்,  இந்த மதுரைகாரர்களுக்கு... ராஜநாயஹம் சாரை கேட்கவா வேண்டும்,  அவர் உள்ளம் அழகான வெள்ளித்திரை.  ஆனால் கேமராவுடனிருக்கும் வெள்ளித்திரை.  எத்தனை பெரிய நிகழ்வுகளென்றாலும்,  சாதரணமாக, நம் அருகில் அமர்ந்திருக்கும் நண்பரை போல செய்திகள், அருவியாய் கொட்டும். நொடிக்கொரு செய்தி,  ஒன்றை கேட்டு முடிக்கும் முன், தொடர்புள்ள அடுத்த செய்தி,  அடுத்து அடுத்து என வந்து கொண்டேயிருக்கும்... தொடாத துறையே இல்லை, சாஸ்திரிய சங்கீதமா..? இந்தா பிடி ..


ஓவியமா.. இதை பார்,  


அசோகமித்தரனா, இவர்தானே அத்தாரிட்டி, பிரமிளை கண்டு உலகம் அஞ்சிய போது,  அந்த குழந்தையை பேணியவர்,... ஊரே வியக்கும் சாருவுக்கு... சாரு இவரை கண்டு வியப்பார்...


கிரா கதைத்தவை இன்னும்கூட அதிகம்... 


எவ்வளவோ உண்டு சொல்ல...


காலம் சில வைரங்களை காலங்கடந்து தான் காட்டும்... ஆனால் அந்த வைரங்கள் காலத்தை வென்று நிற்கும்... அப்படி ஒரு வைரம் தான் என் ஞானதகப்பன், 


R.p. Rajanayahem ... வாழ்க அவர் புகழ்"

வாசுதேவன் காத்தமுத்து சொல்வது

 வாசுதேவன் காத்தமுத்து 


"எத்தனையோ எழுத்துக்களை படிக்கிறோம். எத்தனையோ எழுத்தாளர்கள் பேசுவதைக் கேட்கிறோம். 


எழுத்துக்கும் பேச்சுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.


ராஜநாயஹம் சாரை முதலில் பார்த்தது  ஒரு கலந்துரையாடலில்தான். அவர் மீது முதலில் கோபமும் பொறாமையும்தான் கொண்டேன்.  எல்லோர் கவனமும் அவர்மீதே விழும்படியான சரளமான பேச்சு; முன் தயாரிப்புகள் ஏதுமின்றி.


பிறகு அவர் எழுதிய கட்டுரை ஒன்று அச்சேறும் முன்பு படிக்கக் கிடைத்தது. 


இரண்டிற்கும் இருந்த போதுவான தொரு ஒற்றுமை.  பாசாங்குத்தன மற்று இருந்ததுதான். 


பேச்சு எழுத்து வாழ்க்கை எதிலும் பாசாங்குகளற்று வாழ்வது பெரும்பேறா? சாபமா?


நம் கண்முன்னே வெறும் நிழலாக வந்து போகும் இந்தப் பெரும் பிம்பங்கள் உண்மையில் எப்படித்தான் இருக்கின்றன?


கம்பன் எப்படி இருந்திருப்பான்?

அலெக்ஸாண்டார் எப்படி இறந்தான்?


ஹிட்லரின் காதல் கதை என்ன? 


இது போன்ற சுவாரஸ்யங்களை விரும்பாத மனிதர்கள் யாரேனும் இருக்க முடியுமா?


அப்படித்தான்.


 அனைவரையும் கட்டிப்போட்டுவிடும் சினிமா என்ற இந்தக் கலையை சாத்தியமாக்கும் பிம்பங்களுக்கென்று இருக்கும் வாழ்க்கை சினிமாவை மிஞ்சும் சுவாரஸ்ரமாக இருக்குமா? 


இதற்கான விடைகளை சுவாரஸ்யமாக பாசாங்குத்தனங்களற்று எழுத்தில் வடிக்கும் கலையை  வேறுயாரும் இவ்வளவு சிறப்பாக செய்துள்ளனரா? 


அதற்கான விடைதான் கவிஞர் ஆத்மார்த்தியின் இந்த விமர்சனம்.


கற்றாரை கற்றாரே காமுறுவர்"

..

கூத்துப்பட்டறை பாஸ் ஓவியர் மு. நடேஷ் சொல்வது

 கூத்துப்பட்டறை பாஸ் ஓவியர் மு. நடேஷ் 


 "ஆத்மார்த்தி விமர்சனத்தை படித்தேன்.. 


சினிமா ஒரு பூதம் என்று எதிர்மறை அர்த்தத்தில் வளர்க்கப்பட்ட முத்துசாமியின் மகன் நான். 😂😂 23 வயதிற்கு முன்னால் பாமர அதாவது வெகுஜன பத்திரிக்கைகள் படிப்பதில் இருந்து டுபாகூர் சினிமா பார்ப்பது வரை எல்லாவற்றிற்கும் தடை அதாவது அவருக்கு பிடிக்காதோ என்று நானே போட்டுக்கொண்ட தடை அந்த மாதிரி மனத்தை தூக்கி எறிந்து முற்றிலும் சுயமாக வளர்த்துவிட்ட மனம் அனைத்தையும் எடைபோட ஆரம்பித்தபோது அதுபோன்ற தீவிரத்தோடு இருக்கும் சமயத்தில் ராஜநாயஹம் ஒரு அற்புதமான நடிகர் என்பதை கண்டுபிடித்தேன்... 


மனிதர்களை கண்டுபிடிப்பது எனக்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய செயல் சினிமா நடிகர் பசுபதி கண்டுபிடித்தது நான்தான் எனவே ராஜநாயஹத்தை ஒன் மேன் தியேட்டர் செய்வதற்கு ஏற்பாடு செய்து கூத்துப்பட்டறையில் நாடகங்கள் போட வைத்தேன். 


அப்பொழுது எந்தவித ஏற்பாடுகளும் செய்யாமல் எந்தவித ஒத்திகையும் இல்லாமல் நேரடியாக பார்வையாளர்கள் முன்னால் வந்து நின்று தனது மனதில் இருக்கும் ஓடிக்கொண்டிருக்கும் நதியாக விளங்கும் மனதின் ஓட்டத்தை வடிவம் கொடுத்து நேரடியாக ஒரு சூப்பர்ஹிட் ஷோவை செய்து முடிப்பார். 


 அப்படிப்பட்டவர் அற்புதமாக எழுதாமல்

 வேறு என்ன செய்வார்!!!!!!!!!


ஆத்மார்த்தியின் சரியான எடை போட்டு எழுதப்பட்ட விமர்சனம் மகிழ்ச்சியை அளிக்கிறது... அவர் வாழ்க

 ராஜநாயஹம் வாழ்க 

இருவரும் பலகாலம் வாழ்க வாழ்க...." ❤️❤️❤️


..... 


2018 


M. Natesh on R. P. Rajanayahem 


By 1990 I was 11 years old in theatre. 

Kind of knew all techniques to train 

an actor’s body-voice; but not the mind. 


I thought that a person with trained skills

 in all that I know can go on stage, 

pick up his/her life’s problems 

and deliver a solo show of good theatre.

 No text by-hearting, no rehearsals.


 IT NEVER HAPPENED.


 IN 2018  R. P. Rajanayahem comes on stage

 and does exactly that 28years later!!!!!!!!!!!!!...

 I acknowledged the same day 

after the show in front of the audience. 


An intelligent, evocative, transformative actor                                  changing roles like a chameleon. 


....


https://m.facebook.com/story.php?story_fbid=3104546806425431&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3104901203056658&id=100006104256328

நேர்த்திக்கடன், அடகு

 விளாத்திகுளம் சாமிகளின் நண்பர் சங்கீத ஞானி மதுரை மாரியப்ப சுவாமி. 


இவரிடம் அநேக கீர்த்தனைகள் பயின்று 

கிட்டப்பா பாடினார்.

அற்பாயுளில் இருபத்தேழு வயதில் மறைந்த துர்பாக்யசாலி கிட்டப்பா. 

கே. பி. சுந்தராம்பாளின் கணவர். 


இந்த மதுரை மாரியப்ப சுவாமிகள் பற்றி 

ஒரு முக்கிய தகவல். 

வயிற்று வலி வேதனையால் 

சொல்லொணா துன்பத்தை

 மாரியப்ப சுவாமிகள் 

அனுபவித்து துடித்திருக்கிறார்.


கடைசியில் திருச்செந்தூர் முருகனிடம் நேர்ந்து வேண்டிக்கொண்டார். வயிற்று வலி குணமான வுடன் நேர்ச்சி கடன் செலுத்தினார்.

தன் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தினார். 

தன் சங்கீதத்தை, பாடும் திறனை 

தியாகம் செய்திருக்கிறார். 


தோடி சீத்தாராமையர் என்று ஒருவர். 

விளக்கம் தேவையில்லை.

தோடியை அடகு வைத்து 

தன் கஷ்ட காலத்தில் பணம் பெற்று 

குடும்பம் நடத்தியிருக்கிறார். 

அடகில் தோடி இருக்கும்போது 

கச்சேரியில் தன் பிரிய ராகம் பாடமாட்டார்.


 சங்கராபரணம் நரசய்யரும் இதே கதை தான். சங்கராபரணத்தை அடகு வைத்து விட்டு கச்சேரிகளில் சங்கராபரணம் பாட முடியாமல் தவித்திருக்கிறார்.


அப்படி ஒரு காலம். அப்படிப்பட்ட பிறவிகள். 

……………

கிட்டப்பா எவரனி

 எஸ். ஜி. கிட்டப்பா யாரையும் குறிப்பிட்டு 

குருவாய் சொல்ல முடியாதவர். 


"ஏக சந்த கிராஹி "என்று அந்த காலத்தில் சொல்வார்கள். 


ரொம்ப ஆச்சரியம். 


தியாகராஜரின் சுத்த சீமந்தினி ராக "ஜானகி ரமணா "கீர்த்தனையை ஒரே தரம் கேட்டு விட்டு உடனே மேடையில் பாடியவர் கிட்டப்பா.


தேவாம்ருத வர்ஷினி ராகம் மழையை வருவிக்கும் என்பது ஐதீகம். இந்த ராகத்தை நாத சிந்தாமணி என்றும் சொல்வதுண்டு. 

"எவரனி " தேவாம்ருத வர்ஷினி ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் ஒரு ரிக்கார்டிங் கம்பெனிக்காக பாடி பதிவாகியிருந்த சூழலில், அப்போது இளைஞனாயிருந்த கிட்டப்பா பாடி அதே எவரனியின் மற்றொரு பதிவைக் கேட்ட பின், கிட்டப்பாவின் பாட்டில் சொக்கிப்போய், தான் பாடிய பதிவை கேன்சல் செய்து பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார் ஹரிகேச நல்லூர். 

'கிட்டப்பா பாடியது தான் எவரனி'

 - மிகப் பெருந்தன்மையோடு பூரித்துப் போய் சொன்னாராம்.

எழுத்தாளர் சிவசங்கரியின் தாத்தா ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர். 

Normandy invasion in Saving Private Ryan and The Longest day

 "War does not determine who is right 

- only who is left."

- Bertrand Russell


ஸ்டீபன் ஸ்பீல்பர்க் எடுத்த டாம் ஹாங்க்ஸ், மேட் டாமன் நடித்த Saving private Ryan படத்தின் 

முதல் காட்சி.. 


D-Day Invasion. The largest seaborne invasion 

in history. 


The Invasion of Normandy...US Army troops wade ashore on Omaha Beach 

on the morning of 6 June 1944.


Saving private Ryan ல் முதல் காட்சியாக வருகின்ற    ,   D-Day Invasion Battle scene, 

The Longest Day படத்தின் இரண்டாவது மணி நேரத்தில் வருகிறது. 


Saving Private Ryan (1998 )


The longest day(1962)


.........................

Jul 19, 2021

சினிமா எனும் பூதம் முன் வைத்து ஆத்மார்த்தி

 ஆத்மார்த்தி 


நதியும் நிழலும் ;

R. P.ராஜநாயஹத்தின் சினிமா என்னும் பூதம் நூலை முன்வைத்து


{சினிமா என்னும் பூதம் "ஸீரோ டிகிரி எழுத்து பிரசுரம்" சனவரி 2020 விலை ரூ 375/-}


கதவை யாரோ தட்டுகிறார்கள் திறந்தால் எதிரே நிற்பது புரூஸ்லி. ஓங்கி நம் முகத்தில் ஒரு குத்து விட்டு விட்டுப் போய் விடுகிறார். 


இது கனவோ நிஜமோ "ஏன் ப்ரூஸ்லீ என்னை அடிச்சீங்க?" என்று கேட்பது தானே சரி. 

ப்ரூஸ்லீ குத்து விட்டாற் போல் தான்

 R. P. ராஜநாயஹத்தின் சினிமா என்னும் பூதம் நூலைப் படிக்கத் தொடங்கியபோது 

எனக்குத் தோன்றியது. 


சினிமாவைப் பற்றி இப்படி ஒரு நூல் சாத்தியமா என்று கேட்டிருந்தால் இதை வாசிப்பதற்கு முன் இல்லவே இல்லை என்று தான் பதில் சொல்லியிருப்பேன்.


சிறுவயதிலிருந்தே நான் ஒரு சினிமா ரசிகன். 

அது தான் என் அடையாளத் தொடக்கம் மற்றதெல்லாமும் அப்புறம் வந்து ஒட்டிக் கொண்டவை தான். சினிமாவுக்கும் சராசரி மனிதனுக்கும் இடையே தோன்ற வல்ல பந்தம் அலாதியானது. நான் மதுரைக்காரன் என்று சொல்வதில் நிலவக் கூடிய சமநிலையும் பணிவும் மதுரை என் ஊர் என்று சொல்லும் போது இல்லாமற் போகிறதல்லவா? ஏதோ மதுரை என்கிற ஒட்டுமொத்த ஊரின் சரித்திர மொத்தமும் இந்தக் கணம் வரை என் ஒருவனுக்கு தான் சொந்தமாக்கும் என்கிறாற் போல்  கேட்கிறது இல்லையா?அப்படித்தான் சினிமா, லாட்டரி, பாட்டுக் கேட்பது போன்றவற்றோடு சாமான்யன் தன்னைப் பிணைக்கையில் ஏதோ தானும் அதுவும் மட்டுமாய்த் தான் வாழ்ந்து கொண்டே இருப்பதாகவும் இருக்கப் போவதாகவும் நம்பத் தொடங்குவான். 'எனக்குப் பிடித்த சினிமா, எனக்குப் பிடித்த பாட்டு' என்று தான் வாங்குகிற ஒற்றைச் சீட்டுக்குத் தான் முதல் பரிசு விழப் போவதாக அதன் முடிவறியும் கணம் வரைக்கும் நினைக்க விரும்புவது சகஜமான எண்ணப்பாடு தான். ஒரு பாடலை முதன்முறை கேட்கும் போதே "நீ என் ஒருவனுக்காக மட்டும் தான் பிறந்திருக்கிறாய் இன்பமே" என்று எல்லையில்லா ஆனந்தத்தைத் தொடங்கிக் கொள்வான். படம் விட்டுத் திரும்பி வருகிறவன் அந்தப் படத்தின் கதை அதன் வசனங்கள் இசை காட்சிகள் பாடல்கள் இடங்கள் பின்புலப் பதாகைகள் தொடங்கி அந்தப் படப் பெயரின் எழுத்துரு வரைக்கும் என்னவெல்லாம் தன்னோடு தன் மனத்தோடு எடுத்துக் கொண்டு வாழ்க்கைக்குள் திரும்புகிறான் என்பதை யாராலும் அளந்து விட முடியாது. சினிமா என்பதன் செல்வாக்கு எல்லையற்றது.


நான் சினிமாவால் தான் வாழ்ந்தேன் என்று சொல்வதற்கு எத்தனையோ சம்பவங்களும் மனிதர்களும் உற்பத்தியாகிக் கொண்டே இருப்பது அதன் நிஜவரம். சினிமா பார்த்து விட்டுத் தான் கெட்டேன் என்று சொல்லுவதற்கும்

 குறைச்சலே இல்லை. 


நன்மை மற்றும் தீமை என நதியும் நிழலுமாய்ப் பெருகுவது அதன் இயல்பு. இந்த உலகத்தில் ஜீவித்திருக்கக் கூடிய யாவற்றின் பொதுத் தன்மையே நதியும் நிழலுமாய்ப் பெருகிக் கொண்டே இருப்பது தானே?  "என் சினிமாவும் சினிமாவின் நானும்" என்று ஒரு நூலை எழுதிப் பார்த்திருக்கிறார் R. P. ராஜநாயஹம்.


யாருக்கு யாரைப் பிடிக்கும் என்பதை எங்ஙனம் அறுதியிட முடியாதோ அப்படித் தான்

 சினிமா மீதான பித்தும். 

ஒருவனுக்கு மிக மோசமான சினிமா என்று தோன்றக் கூடியதை அவனுக்கு அடுத்த அல்லது முந்தைய சீட்டில் அமர்ந்து அதே படத்தை பார்ப்பவனுக்கு அப்படியே தான் தோன்றியாக வேண்டும் என்று யாதொரு நிர்பந்தமும் இல்லை. அற்பமும் அற்புதமும் பார்க்கிற கண்களின் வழியே தோன்றுகிற வஸ்துதான். ஒட்டுமொத்தமாக சமூகம் கொண்டாடுகிற ஒரு படத்தைக்கூட ஒருவர் அல்லது ஒரு சிலர் புறக்கணிக்க நேர்வதும் இதன் அடிப்படையில்தான் சினிமா எப்படி இயங்குகிறது என்பது ஒரு சுவாரசியமான விஷயம் சதா சர்வகாலமும் பேசிக்கொண்டே இருப்பவர்களை பேச்சின் மூலம் வாழ்பவர்களை அமைதிப்படுத்தி விட்டு தன்னை நிகழ்த்தக்கூடிய கலைச்சங்கமப் பதிவுதான் சினிமா. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கூட தியேட்டரில் படம் பார்க்கும் பொழுது பேசிக்கொண்டே பார்ப்பதை  யாரும் அனுமதிக்கமாட்டார்கள் பேசாமல் பார்க்கும் பொழுது சினிமா ஆழ்மனங்களோடு உரையாடுகிறது. இந்த சூட்சுமம் தான் மாறா பற்றுடன் மனிதர்களை ஈர்த்த வண்ணம் நூறுவருடத்தைத் தாண்டியும் ஜொலிக்கின்றது.


சினிமா குறித்த எழுத்துக்கள்  உலகின் எல்லா நிலங்களிலும் சினிமா தோன்றிய காலம் தொட்டே இருந்து வருகிறது சினிமா எனும் கலை எவ்வண்ணம் வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அப்படித் தான் அது குறித்த எழுத்துக்களும் மாற்றமடைகின்றன. உலகின் மொத்த சினிமாக்களையும் தொகுத்தால் கிடைக்கக் கூடிய சுவையைக் காட்டிலும் இதுவரையில் சினிமா குறித்து எழுப்பப் பட்டிருக்கும் சொற்களைத் தொகுத்தால் ஏற்படும் என்பது வசீகரம். சினிமாவைப் பற்றி எழுதுவது பெரும்பாலும் கறாரான விமர்சனம் அல்லது விதந்தோதும் பரிவு என்றே பெரும்பாலும் நேர்கின்றது. இந்த இரண்டையும் தாண்டிச் சினிமாவை விளம்பரம் செய்வதன் ஒரு பகுதியாக அது குறித்த பொது அபிப்ராயத்தைப் பராமரிப்பதும் மாறிப் பன்னெடுங்காலம் ஆயிற்று. பெரிதாகப் புகழ். "வலிக்காமல் அடி" என்று சினிமாவின் செல்வாக்கு அதைப் பற்றிய கருத்தாங்களை ஊடுருவி வளைக்கவே பார்த்தது. இன்னொரு காலத்தில் "நீ அடிக்கிறியா அடி அதை நான் புகழாக மாற்றிக் கொள்கிறேன்" என்று ஆரம்பித்தனர். 'நெகடிவ் பப்ளிஸிடி' என்ற சொல் கூட அறுவடைக்கான விதைப்பொருளாகவே மாறலாயிற்று.


கிசுகிசு என்ற கொசுவலையைக் கொண்டு உண்மை மற்றும் பொய் என்கிற உறங்கும் யானைகளை மூடி வைத்தார்கள். எல்லோரும் சேர்ந்து பொய் சொல்கிற இடத்தில் உண்மையின் பெயர்கூடப் பெரிய பொய் என்றாகும். 


 R. P. ராஜநாயஹம் தன் கண்களைக் கொண்டு பார்த்ததை எடுத்து மனத்திலிட்டுக் கழுவிச் சுத்திகரித்து ஏட்டிலிட்டுக் காட்டத் தொடங்கியதைத் தொகுத்துப் பார்க்கையில் அது மாய விளக்கைத் தேய்த்து விட்டது. சினிமா என்னும் பூதம் கிளம்பி வந்திருக்கிறது. இந்தப் பூதத்துக்குப் பொய் பேசத் தெரியாது என்றே தோன்றுகிறது.


இலக்கியம் கலை சினிமா அரசியல் என்று எந்தத் துறையாக இருந்தாலும் சரி, கிட்டச் சென்று உற்றுக் கேட்கும் போது பேசுகிறவர்கள் "ஆஃப் த ரெக்கார்டு" என்று ஒரு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவது சகஜம். 

ராஜநாயஹத்தைப் பொருத்தவரை "ஆஃப் த ரெக்கார்டு" என்று ஒன்று கிடையாது. 

எல்லாக் கால நேர தருணங்களிலும் ஆன் தி ரெக்கார்ட் மட்டுமே சாத்தியமாகும் நீதிமானின் சீசீடீவீ கண்களை இமைக்காமல் பார்த்தும் பதிந்தும் கொண்டிருக்கவல்ல நிஜங்களின் கூட்டுக்குரலாகத் தன் நூலை ஆக்கியிருக்கிறார்.


 இவை எல்லோருக்கும் ஒப்புமை உள்ளவையா எல்லாரும் இதனை ஏற்பார்களா இதை மறுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறதில்லையா இவருக்கு எப்படித் தெரியும் என்பன போன்ற கேள்விகளை மறுப்பதற்கில்லை. அந்தக் கேள்விகளுக்கும் இடமுண்டு என்பது தான் உண்மையே தவிர அதற்கு மாற்றாய் 

இந்த நூலை ஒட்டுமொத்தமாய் 

நிராகரிப்பதற்கு இடமில்லை.  


நாம் சந்திக்க முடியாத முந்தைய காலத்தின் நட்சத்திர வானைத் திறக்கிறார் ராஜநாயஹம்.


 மகா மனிதர்களை, தகுதி வாய்ந்த கலைஞர்களை தன் எழுத்தின் வாயிலாக தரிசிக்க முடியும் என்று நிரூபிக்கிறார் தமிழ் சினிமாவை நேசிக்கிற யாருக்கும் இந்த புத்தகத்தின் ஆய பயன் என்ன என்று கேட்டால் இந்தத் தரிசனம் தான் என்று சொல்வேன். ஒரு வகையில் பார்த்தால் இந்த எழுத்து கேரளத் தன்மையோடு இருப்பதாகப் படுகிறது. மலையாள மனோபாவம் விமர்சனங்களை அதனதன் கடுமையோடு ஏற்க முனைவது மற்ற நிலங்களைக் காட்டிலும் கூடுதலாய் நிகழ்வது. இந்தப் பூதம் கேரளத்தில் பிறந்திருந்தால் இன்னும் கொழுத்துப் பருத்திருக்கும் என்பது என் அபிப்ராயம்.

  

சினிமா எப்போதும் செல்வாக்கு மிகுந்த ஊடகமாகவே தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது சாதாரண மனிதர்கள் சினிமாவுக்குள் வந்து பெயர் வாங்கி பிறகு  நட்சத்திரமாக வாழ்ந்து தன் பிம்பத்தை சுமக்க மாட்டாமல் சுமந்து நிஜமும் புனைவும் கலந்த ஒரு வாழ்வாகவே வாழ்வது சினிமாவின் டிசைன்.


ஒரு கறாரான மனிதராக R. P. ராஜநாயஹம் தான் அறியக் கிடைத்த அத்தனை தகவல்களையும் கோர்த்து இந்த நூலில் வாசகர்களுக்கு தருகிறார்.


 எதிர்பாராத இடங்களில் தென்படுகிற நகைச்சுவை இந்த நூலின் அடுத்த பலம். பெரிதாக வாழ்ந்தவர்களின் மேல் மலர் தூவுவதைக் காட்டிலும் தடுமாறி வீழ்ந்தவர்கள் மீது மருந்து கலந்த காற்றாக வருடிச் செல்வது தான் ராஜநாயஹத்தின் மனவிருப்பமாகத் தோன்றுகிறது. 

அதனை மெய்ப்பிக்கிற பல இடங்கள் 

இந்த நூலில் இருக்கின்றன. 

இருந்து போவதும் இல்லாமற் போவதுமான வாழ்க்கையில் சினிமா என்பது கூட்டமாய்ச் சேர்ந்து ஒரு பொய்யை மெய் போல் தோற்றுவிப்பது. எப்போதும் அன்னையின் கதகதப்பான அணைத்தலுக்குள் இருக்க விரும்புகிற குழந்தையின் மனோபாவத்தைப் போன்றே சினிமாவும் எப்போதும் வெற்றிச்சூட்டின் வெதுவெதுப்பில் இருக்கவே விரும்புகிறது. 

பரிவு என்பதும் கடுமை என்பதும் கலந்தே தாங்க வேண்டிய பொறுப்புடன் எழுத முனைந்து அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார் ராஜநாயஹம்.


 நல்ல வெர்ஸஸ் கெட்ட வேண்டிய வெர்ஸஸ் வேண்டாத என்கிற பொதுநோக்குமுறையோடு இந்த நூலை அணுகத் தலைப்படுவோர்க்கு ஏமாற்றமே மிஞ்சும். சினிமா என்னும் மகாநிலத்தின் சம்பவங்களை மொத்தமாக்கிச் சாட்சியப்படுத்தியிருக்கிறார்.

  

எம்ஜி.ஆர் சிவாஜி ஜெய்சங்கர் ஜெமினிகணேசன் போன்ற வெற்றிமனிதர்களின் கதைகளின் பின் திரைக்கப்பால் பேசுவதாகட்டும்

 சாவித்ரி சந்திரபாபு போன்ற தோல்விமுகங்களின் கதையாழத்தை அலசுவதாகட்டும்

 தருணங்களை அடுக்கிச் செல்வதன் மூலமாகவே மெல்லியதோர் அதிர்வைத் தொடர்ந்து பராமரித்துச் செல்கிற ராஜநாயஹத்தின் எழுத்துநடை முக்கியமானதாகிறது. 

ஒரு ரசிகராக அவர் சினிமா மீதும் 

அதன் உப-நுட்பங்கள் மீதும் கொண்டிருக்கிற புரிதலும் ஞானமும் அபாரமானது.

 ஆங்காங்கே அவை எந்தவிதமான அலட்டலுமின்றி வெளிப்படுவது அழகு.

 நேர் சம்பவங்களாய்த் தனக்கு நிகழ்ந்தவற்றைப் பேசுவதும் பிறர் மூலமாய்த் தனக்கு அறியக் கிடைத்தவற்றைச் சொல்வதும் 

ஒரே டோனில் ஒரே தொனியில் பேசமுடிவது 

நூல் மீதான நம்பகத்தைப் பெரிதும் ஏற்படுத்திவிடுகிறது.


மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்தவர்கள்

 இருந்த இடம் தெரியாமல் போனவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் 

ஒரே ஒரு வெற்றியோடு அல்லாடி 

அவர்கள் ஒரு வெற்றி கூட கிடைக்காதவர்கள் என்று சினிமா துறையின் பல மனிதர்களை அவர்களது வாழ்க்கையின் உள்ளும் புறமுமாக நிகழ்ந்த நிகழ்த்தப்பட்ட நிகழாமல் போன சம்பவ நிரல்களைத் தொகுத்த வகையில் இந்த புத்தகம் ஒரு புனைவுக்கு சற்றும் குறைவில்லாத சுவாரசியத்தை படிப்பவர்களுக்கு நல்குகிறது


 ராஜநாயஹத்தின் எழுத்து நடை 

அபாரமான ஒன்று. 

ஒரு நிகழ்வை குறிப்பிட்ட பத்திரிகையாளர் எந்தவகையில் அறியத் தருகிறார் என்று பார்ப்பதற்காகவே அந்த பத்திரிக்கையை நாடிச் செல்வோர் பலர் உண்டு தானே 

இந்த இடம்தான் புனைவும் நிஜமும் கைகுலுக்குகிற இடம். 

இந்த இடத்தில் இருந்து

 ஒரு  ஞாபக-ஆவணத் தொகுப்பைத்       தந்திருக்கிறார் ராஜநாயஹம். 


இப்படியெல்லாம் நடந்திருக்குமா இதுதான் நடந்ததா என்பதை தாண்டிக் கசப்பும் இனிப்பும் அற்ற துவர்ப்புச் சாக்லேட்டுகளை 

ருசிக்க தந்துவிட்டு

 மாயாவி போல் மறைந்து விடுகிறார் ராஜநாயஹம். 


நூலெங்கும் தன் மன விரிதலாகவே பேசிச்செல்கிற ஆசிரியர்

 முடிந்து நிறைகிற புள்ளியில் வாசக ரசிகனின் மனச்சமன்  இருளில் கரைவது 

நூலின் ஆகச்சிறப்பு. 


வாசித்து முடிக்கிற யாருக்கும் அதற்கு முன்பிருந்த சினிமா மீதான ப்ரேமையும் பந்தமும் அப்படியே தொடருமா என்பது கேள்விக்குறியே. 


அனுபவம் எதுவாகினும் நம்மைக் கலைக்கவும் சிதைக்கவும் மாற்றியமைக்கவும் பூரண உரிமை கொண்டது தானே, அந்த வகையில் 'சினிமா என்னும் பூதம்' எனும் நூல் நமக்குள் நிகழ்த்துகிற அனுபவம் அச்சு அசலானது. 

நெடுங்கால மாற்றங்களை 

உண்டு பண்ணக் கூடியது. 


சினிமா விரும்பிகளுக்கு இந்த நூல் ஒரு பெட்டகம்.


 "ரைட்டர்ஸ் ரைட்டர்" என்ற வகைமையில் எழுத்தாளர்களின் எழுத்தாளராகவும் ராஜநாயஹத்தைச் சொல்வதற்கான சாத்தியங்களை இந்த நூல் திறந்து தருகின்றது.


 எனக்குப் பிடித்த நூல்களின் வரிசையில் 

சினிமா என்னும் பூதத்தை வைப்பேன். 

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் வரிசையில் ராஜநாயஹத்தின் பெயர் நிச்சயம் உண்டு.


இன்னும் அடுத்த காலங்களின் நிலங்களின் சினிமா பூதங்களைக் கட்டியும் அவிழ்த்தும் 

சாட்சிப் படுத்தக் கூடிய நூல்கள் பெருக வேண்டும்.

 R. P. ராஜநாயஹங்கள் எல்லா மொழிகளிலும் நிலங்களிலும் தோன்றவேண்டும். தோன்றுவார்கள்.


காணத் தானே சினிமா?


வாழ்தல் இனிது


அன்போடு

ஆத்மார்த்தி

ராஜநாயஹம் எழுத்து பற்றி ஆத்மார்த்தமாக பின்னூட்டங்கள்

 என் எழுத்து  பற்றி ஆத்மார்த்தி சினிமா எனும் பூதம்  நூலை முன்வைத்து எழுதிய விமர்சனத்திற்கு மேலோரின் பின்னூட்டங்கள் 

அசோக் பா :ஆத்மார்த்தி சொல்வது போல,  சினிமா, தமிழர் வாழ்வில் ஒரு பகுதி என்றால், தவறேயில்லை. அதிலும் குறிப்பாக மதுரைக்காரர்களுக்கு எல்லாமே சினிமா தான்,  சிலர் பேசுவது , நடை உடை பாவனைகளிலேயே அவர் இன்னார் ரசிகர் என சொல்லிவிடலாம்,  சேதுராமன் அண்ணன் துள்ளலாக நடந்து வந்தால், அவர் வாத்தியார் படம் பார்த்துள்ளார், துரை பாவா போடும் சட்டை அனேகமாக ரஜினி பட சட்டையாக இருக்கும்... மோகன் மாமா வீட்டில் சண்டை போட்டு அதிர்ச்சி மீளாதவராக நடக்கும் போது அங்கே சிவாஜி தான் மோகன் மாமா உருவத்தில் போவார்.  அத்தனை பிடிப்பு சினிமா மேல்,  இந்த மதுரைகாரர்களுக்கு... ராஜநாயஹம் சாரை கேட்கவா வேண்டும்,  அவர் உள்ளம் அழகான வெள்ளித்திரை.  ஆனால் கேமராவுடனிருக்கும் வெள்ளித்திரை.  எத்தனை பெரிய நிகழ்வுகளென்றாலும்,  சாதரணமாக, நம் அருகில் அமர்ந்திருக்கும் நண்பரை போல செய்திகள், அருவியாய் கொட்டும். நொடிக்கொரு செய்தி,  ஒன்றை கேட்டு முடிக்கும் முன், தொடர்புள்ள அடுத்த செய்தி,  அடுத்து அடுத்து என வந்து கொண்டேயிருக்கும்... தொடாத துறையே இல்லை, சாஸ்திரிய சங்கீதமா..? இந்தா பிடி ..

ஓவியமா.. இதை பார்,  

அசோகமித்தரனா, இவர்தானே அத்தாரிட்டி, பிரமிளை கண்டு உலகம் அஞ்சிய போது,  அந்த குழந்தையை பேணியவர்,... ஊரே வியக்கும் சாருவுக்கு... சாரு இவரை கண்டு வியப்பார்...

கிரா கதைத்தவை இன்னும்கூட அதிகம்... 


எவ்வளவோ உண்டு சொல்ல...


காலம் சில வைரங்களை காலங்கடந்து தான் காட்டும்... ஆனால் அந்த வைரங்கள் காலத்தை வென்று நிற்கும்... அப்படி ஒரு வைரம் தான் என் ஞானதகப்பன், 

R.p. Rajanayahem ... வாழ்க அவர் புகழ்


பேராசிரியர் காசி. மாரியப்பன் : நண்பர் R.P.ராஜநாயஹம் நாங்களும் திருச்சியும் தவறவிட்ட பொக்கிஷம். 

வறுத்து உடனே அரைத்துத் தயாரித்த காப்பியை அவர் வாங்கித்தர அருந்தியது மனதில் அலையாடுகிறது. அந்தக்காப்பியின் புதுமைக்கும் அடர்த்திக்கும் சுவைக்கும் மேலானது ராஜநாயஹத்தின் எழுத்து. 

அவர் ஒரு நாவல் எழுதவேண்டும். நடப்பு எழுத்தாளர்கள் சந்திக்காத அனுபவத்தையும் வாழ்க்கையையும் அந்நாவல் சொல்லும். எத்தனை துன்பங்கள் எவ்வளவு இன்பங்கள் ஒரு மனிதருக்கு. அவருடன் திருச்சியில் பழகக் கிடைத்த தருணங்களைப் பயன்படுத்த வில்லையோ என்ற மனக்குறை உண்டு. சினிமாவும் அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. யாரை நோவது?


Raja Hassan : R.p. Rajanayahem  அவர்களை ப்ளாக்ஸ்பாட் காலத்திலிருந்தே பின் தொடர்ந்து வருகிறேன். கட்டுரை முடிந்துவிட்டதே, என்று எண்ண வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.

 அவரது அபாரமான நினைவாற்றல், அந்தந்த காலகட்டத்தில் நடந்த பிற விஷயங்கள் என  ஒரு பூமாலை போல் தொகுத்து வழங்கிய செய்திகள் ஏராளம்..‌


நாம் வியந்து கண்ணுற்ற எத்தனை எத்தனை ஆளுமைகள் அவர்தம் பின்னணிகள்..

 நாம் அறியாதவற்றை மாய வித்தைக்காரன்  போல் காட்டும் மாயாஜால எழுத்து...


அந்நிகழ்வுக்கு பொருத்தமான ஆங்கிலப் பொன்மொழிகள் , Idioms,& Quotes... ஆஹா எத்தனை சுவையான அனுபவங்களை இந்த 'சினிமா எனும் பூதம்' நூலில் அற்புதமாக எழுதியுள்ளார்.


ஆத்மார்த்தி அவர்களின் இந்த ஆழ்ந்த விமர்சனம் ராஜநாயஹம் அவர்களின் எழுத்துக்கு என்றும் கட்டியம் கூறும்.‌‌!!

சரவணன் மாணிக்கவாசகம் :மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சிறப்பான விமர்சனத்திற்கு. எழுத்தில் வந்தது குறைவு இவரிடம் இருப்பது ஏராளம்.

Geethappriyan Karthikeyan Vasudevan : கவிஞர் ஆத்மார்த்தியின் சினிமா எனும் பூதம் புத்தக விமர்சனம் உண்மையானது,சினிமா எனும் பூதம் எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத புத்தகம், இப்புத்தகம் வாங்குபவர்கள் இரண்டு பிரதி வாங்குவது நன்று, ஒன்று யாராவது படிக்கிறேன் என வாங்கிப்போனாலும் ஒன்று நாம் படிக்க தங்கும், இப்புத்தகத்தை வாங்கிச் செல்பவர்கள் திரும்பத் தரமாட்டார்கள் என்பது கண்கூடு, காரணம் ஒவ்வொரு திரை ஆளுமையைப் பற்றிய ஆசிரியரின் தனித்துவமான பார்வை மற்றும் சொற்சிக்கனமான நடையில் எழுதிய ஆழ்ந்த தீர்க்கமான வரிகளைக் கொண்ட கட்டுரைகள் அவை, அதற்குள் எத்தனை எத்தனை cross reference, எதுவும் திணித்தலின்றி இயல்பாக பட்டறிவால்  எழுதப்பட்டவை, சென்னையின் அண்ணா நூலகம் உள்ளிட்ட பெரிய நூலகங்களில்  சினிமா எனும் பூதம் படிக்க ஆவண செய்ய வேண்டும்,இனி சினிமா பற்றி புத்தகம் எழுதுபவர்கள்  தம் சினிமா பற்றிய புத்தகத்தை மீள் பிரசுரம் செய்ய விழைபவர்கள் இந்த புத்தகத்தை படித்து விட்டு புத்தகம் வெளியிட வேண்டுமா? அது இத்தனை தரமாக வருமா?  என நன்கு யோசித்துக் கொள்ளுங்கள்.இதைச் சொல்வதில் எனக்கு தயக்கம் சிறிதும் கிடையாது, ஆட்டுப் புழுக்கை போல ஆண்டுக்கு ஆண்டு சித்திரை மாதம்  புத்தகங்கள் வெளி வருகின்றன,அதில் இத்தனை தரமாக தனித்துவமாக புத்தகம் வருவது துர்லபம். 

Saravana Kumar Ayyavu : Bruce Lee's famous quote' Be like water, Empty your mind, be formless. Shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle and it becomes the bottle. You put it in a teapot, it becomes the teapot. Now, water can flow or it can crash. Be water, my friend.'


Your writing also like water, Sir. The flow, the force. You never takes notes for writing. You go with the flow. You just alow it to come through you, you  never make hindrance to the flow, you never take stand, for or against, you write what is it, you write what exactly needed. That is your uniqueness. That's where you differ from other writer, Sir.

சிவகுமார் கணேசன் : 'பெரிதாக வாழ்ந்தவர்களின் மேல் மலர் தூவுவதைக் காட்டிலும் தடுமாறி வீழ்ந்தவர்கள் மீது மருந்து கலந்த காற்றாக வருடிச் செல்வது தான் ராஜநாயஹத்தின் மனவிருப்பமாகத் தோன்றுகிறது.' 

அதனை மெய்ப்பிக்கிற பல இடங்கள் 

இந்த நூலில் இருக்கின்றன. 

முழுவதுமாக உடன்படுகிறேன் சார்.வாசிக்கையில் என்னை வியக்கச் செய்த விஷயம் நாமறியாத,நாம் கவனத்தில் கொள்ளாத திரை மனிதர்களையெல்லாம் மிகக் கவனமாக நேர்த்தியாக அவர் பதிவு செய்திருப்பதுதான்.

Usha Sankarasubramanian : எங்கள்  எல்லோருடைய சாரபிலும் திரு.ஆத்மார்த்தி அவர்களின் பதிவு மிகவும்  அருமை. எந்த ஒரு மிகைபடுத்தலுமஂ இல்லாத உண்மையான பதிவு. நான் எப்போதுமஂ உங்கள்  ஞாபகசக்தியும் பன்முகத்திறமையும் கண்டு வியந்திருக்கிறேன்

Hats off to you sir. 

Krishnan Venkatachalam : சொல்ல வேண்டியதையெல்லாம் ஆத்மார்த்தி சொல்லிவிட்டார்.இதுக்கு மேல என்ன சொல்ல? ஆனால் ராஜநாயஹம் இதுவரை சொன்னதை விடவும் சொல்லாத விஷயங்கள் அவரிடம் ஏராளமாக உள்ளன. அவைகள் அனைத்தும் வரவேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Antony Arul Prakash : அன்போடு ஆத்மார்த்தி அவர்கள் மிகவும் பண்போடு எழுதியுள்ள இந்த பதிவு அற்புதம். RPR சாருக்கு இது ஒரு நன்றி காணிக்கை🙏🏼❤️

கோ.மகேசன் மகேஷ் : ஆம். ஆத்மார்த்தியின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே. புத்தகத்தில் இடம்பெறும் நபர்கள் மட்டுமே நமக்குத் தெரியும், அதனை ஒட்டிய நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு தெரியாத புதியவை. அப்படி அறிந்து கொள்ள முனைபவர்களுக்கு R.P. ராஜநாயஹம் சார் தான் நூலகம்.

Arun Swaminathan : 2013ல் R.P.ராஜநாயஹம் அவர்களின் எழுத்தை முதன்முதலில் படிக்க நேர்ந்தது. அன்று முதல் இன்று வரை, ஒவ்வொரு முறையும் அவருடன் உரையாடும் போது, சினிமா குறித்த அரிய தகவல்களை கொட்டி தீர்ப்பார். அவரது ஞாபக திறன் பிரம்மிப்பானது. தேதி வாரியாக சம்பவங்களை அடுக்கிக் கொண்டே செல்வார். இதையெல்லாம் தொகுத்து இவர் ஏன் எழுதாமல் இருக்கிறார் என பலமுறை யோசித்ததுண்டு. ஆனால் கேட்டதில்லை. ‘சினிமா எனும் பூதம்’ வெறும் டிரெய்லர் மட்டுமே, ராஜநாயஹம் விரைவில் முழு படத்தையும் வெளியிட விரும்புகிறேன். 

அ. வெற்றிவேல் : ஆத்மார்த்தமா மனதில் இருந்து எழுதி இருக்கார் ஆத்மார்த்தி.

Desikan Bhoovarahan : ஆத்மார்த்திக்கு நன்றி.               R.P. Rajanayahem அவர்களின் புத்தகங்கள் நிறைய வாசகர்களை சென்று அடையவேண்டும்.. 

Kumar Courtallam : மிக மிக அருமையான எழுத்துநடை உயர்திரு RP ராஜநாயஹம் ஐயாவோடது.எத்தனை முறை படித்தாலும் பிரமிப்பு குறைவதில்லை

Kaveri Ganesh : So proud. அருமையான பதிவு. 

Ayyanar Anandh :  அருமை 

Srivathsan : படித்து விட்டேன் சார். ரொம்பவே அழகாக அருமையாக விமர்சித்துள்ளார். புத்தகம் வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்த போதிலும் அவ்வப்போது நீங்கள் அதுபற்றி எழுதுவதை படிக்கவும் தவறுவதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக படிக்கும் சுவாரஸ்யம் தான். அதுவே எனக்கு ஆச்சரியம் தான். அத்தகைய எழுத்து நடை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதையே ஆத்மார்த்தி சார் தன் வரிகளில் அழகுற விரிவாக விமர்சித்துள்ளார். அனைவரின் மனதின் எதிரொலி தான் அது. நன்றிகள் ஆத்மார்த்தி சார் ❣️❣️

.. Jul 18, 2021

R. P. ராஜநாயஹம் பற்றி Murugan RD

 Murugan RD 


R. P. ராஜநாயஹம் பற்றி 


 உங்களை எழுத்தாளர் என்று யாரும் அடையாளப்படுத்தி விடக்கூடாது என்ற பதைபதைப்பு ஏற்படுகிறது. 


உங்கள் வாழ்க்கையும் எழுத்தும் தருகின்ற மகிழ்ச்சியும், பிரமிப்பும்  எழுத்தாளர்களாலேயே விவரிக்க முடியாத அளவுக்கு தனித்துவமானது.


 எந்த தலைப்பாக இருந்தாலும் அதை படிக்கின்ற எந்த வகை வாசகனும் 

ச்சே என்ன ஒரு இன்ட்ரஸ்டிங்கான எழுத்து நடை என்று ஒவ்வொரு நொடியும் மனதிற்குள் பிரமித்துக் கொண்டேதான் படிப்பார்கள். 


பாமர வாசகன், இலக்கிய வாசகன், சினிமா ரசிகன் என்று எந்த வகையான ரசிகனாக இருந்தாலும் அவர்கள் ரசிக்கதக்க., பிரமிக்க தக்க  விசயங்களும் உங்கள் எழுத்தில் உள்ளது. 

 இங்கே உள்ள எழுத்தாளர்கள் எந்த விதத்திலும் உங்கள் எழுத்துடன் ஒப்பிட்டு பார்க்க கூடாதவர்கள். 

உங்களுக்கு இணையான சுவாரஸ்யமான பல்வேறு தளங்களிலும் எழுதக் கூடிய ஒரு எழுத்தாளரை கண்டிப்பாக இங்கு யாராலும் சுட்டிகாட்ட முடியாது. உங்கள் வாழ்க்கை அனுபவமும், எழுத்தின் சுவாரஸ்யமும் எத்தனை முறை படித்தாலும் அலாதியான இன்பமே. இன்னும் விரிவாக எழுதலாம் தான்.


எந்த ஒரு (வ)கைக்குள்ளும் சிக்காத வண்ணத்துப்பூச்சி போன்ற எழுத்துதான் உங்களோடது. 

ஒப்பீடு பண்ணி விரிவா எழுதினா எழுத்தாளர்கள், அவர்களின் வாசர்கள் என்று நிறைய பேர் கடுப்பாவர்கள் என்பதால் இங்க எழுத விரும்பவில்லை. 


தமிழ எழுத்துலகம் அரசியல் போலவே வலது சாரி, இடது சாரி என்ற இரண்டு வட்டத்துக்குள் சண்ட போட்டுகிட்டிருக்கு. 

எழுத்தில் அவர்கள் திணிக்கும் அரசியலும், மேட்டிமைதனமும், எதிர் அணி மீது அவர்கள் காட்டும் வன்மும், ஆவேசமும், ஏதோ ஒரு விதமான பொதுபுத்தி, சம்பிரதாயமான நடவடிக்கைகள் இவையெல்லாம் 

உங்க எழுத்தில் என்னைக்குமே இருந்ததில்லைங்கிறது 

உங்களோட தனிப்பெரும் பெருமிதமான ஆற்றல், அதிர்ஷ்டம், இயல்பு 

எப்படி வேணாலும் வச்சிக்கலாம் சார். 


 எவருடனும் உங்களை ஒப்பீடு செய்ய முடியாது, கூடாது. 


திரு. R.P. ராஜநாயஹம் சாரை உயர்வாக எழுதுறேன்னு அவரை வேறுயாருடனும் கம்பேர் பண்ணி எழுதவேண்டாம்னு மற்றவர்களை கேட்டுக்கிறேன். நன்றி

பழம் கணக்கு

 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் 

எம். ஜி.ஆர் அமோக வெற்றி  பெற்ற போது, 

                                      

காமராஜர் வெறுத்துப்போய்

 தனிப்பட்ட பேச்சில் இப்படி சொன்னாரா? 


 “ போங்க.. நாட்ட கூத்தாடி கிட்ட கொடுங்க...

அவன் கூத்தியா கிட்ட கொடுத்துட்டு போவான்"


எம். ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி நடந்து விட்ட விஷயம்.

1996 ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டார். 

 நடந்த விஷயத்தை வைத்து அதன் பின்னர் 

காமராஜர் மேல் இப்படி இட்டுக் கட்டப்பட்ட வசனமாய் இருக்கலாம். 

காமராஜர் இப்படி சொன்னார் என்று கட்டி விட முடியும் தானே?


இப்படி நிறைய கதை நெல்லை கண்ணன் 

கட்டி விட்டதாக கூறப்படுகிறது. 

நானே இன்னொரு விஷயத்தில் நெல்லை கண்ணன் பேச்சை நம்பி எழுத நேர்ந்து விட்டது. 


தகவல் பிழை ஏற்படவே கூடாது என்பதில் 

நான் மிகவும் பிரமாணிக்கமாக இருப்பேன். But.. 

Even Homer nods. 


..

Jul 17, 2021

 படாதபாடு பட்ட பட்டோடி


பட்டோடி நவாப் பழம்பெரும் 

இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் புருஷன் 

என்பது தெரிந்ததே.

 மகன் சைப் அலி கான் இந்தி நடிகர் 

என்பதும் தெரிந்ததே.


கீழே உள்ள கதை தான் தெரியாததே.


அப்போது பட்டோடி நவாப் 

இந்திய அணிக்கு கிரிக்கெட் கேப்டனாக இருந்தார்.

இங்கிலாந்துக்கு ஒரு டெஸ்ட் மேட்ச் 

விளையாட இந்திய அணி போயிருந்தது.


 பட்டோடி க்கு ஒரு கண் செயற்கை கண். 

இரவு கழட்டி வைத்து விட்டு தான் தூங்குவார்.டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு முந்தைய நாள் இரவு ஓட்டலில் தூங்கும்போது ஏதோ சாப்பிடுவது போல கனவு கண்டு செயற்கை கண்ணை எடுத்து விழுங்கி விட்டார். 


காலையில் கண்ணை தேடினால் காணவில்லை.

 ஸ்பேர் செயற்கை கண் 

எப்போதும் கைவசம் இருக்கும். 

அதை எடுத்து பொருத்திகொண்டார்.


மேட்ச் விளையாட வேண்டிய டென்சன். 

டாய்லட் போனால் பேல முடியவில்லை.

 வெளிக்கி வெளிய வரவே இல்லை. 


அவசரமாக கிளம்பி மேட்ச் விளையாட போனார். 

அன்று ஓபனிங் பேட்ஸ்மன். 

காலையில் ஷிட் அடிக்காததால் ஒரே இர்ரிடேசன். டக். முதல் பாலில் க்ளீன் போல்ட்.

 கோல்டன் டக். வெள்ளைக்காரன்லாம்

 ' ஷேம் ஷேம் 'னு கத்துரானுங்க.


சோகமாக பவிலியன் வந்து உடனே டாய்லட் போய் முக்கினால்.. ம்ஹூம் .. புழு பூச்சி கூட ஆசனவாயிலிருந்து வெளிவரவே இல்லை. பட்டோடிக்கு புரிந்து விட்டது. சம்திங்க் ராங். 

உடனே டாக்டரை பார்க்க வேண்டும்.


லண்டன் வீதிகளில்' ஒய்ங் ஒயிங்'னு 

ஆம்புலன்ஸ் சைரன். 


ஒரு டாக்டரை பார்த்தார். 

Buttocks Specialist. 

'என்ன பட்டோடி, வெக்கமாய் இல்ல. முதல் பால். அவுட் ஆகிறீங்க ' இங்க்ளிஷில்  கேட்டார்.

பிரிட்டிஷ் இங்க்ளிஷ். 


பட்டோடி ' டாக்டர் .. வெளிக்கி போகலீங்க. 

வரவே மாட்டேங்குது.

 முக்கி முக்கி பார்த்தும் வரலே. 

அதனால் தான் டக் அடிச்சிட்டேன். 

என்னன்னு செக் பண்ணுங்க டாக்டர் .' 

இந்தியன் இங்க்ளிஷில் சொன்னார்.


டாக்டர் உடனே பட்டோடியின் 

ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்கி 

கட்டிலில் படுக்க சொல்லி

 இரண்டு கால்களையும் அகட்டி 

இரண்டு கொக்கியில் மாட்டி விட்டார். 


நல்ல பவர்புல் டார்ச்சை எடுத்து லைட் ஆன் பண்ணி பட்டோடி ஆசனவாயில் 

வெளிச்சத்தை செலுத்தினார். 


ஆசன வாய் உள்ளே பார்த்த டாக்டர் அதிர்ச்சியில் ஏதோ பேய் அறைந்து விட்டாற்போல் 

முகம் வெளிரிபோய்

 உடனே பதறி டார்ச் லைட்டை

 கீழே போட்டு விட்டார். 

டாக்டர் வியர்க்க விறுவிறுக்க 

ஈசி சேரில் உட்கார்ந்தார். 

மூச்சு இறைத்தது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினார்.


கட்டிலில் அகட்டி கால்கள் கொக்கியில் மாட்டப்பட்டு வெவ்வா போல படுத்திருந்த பட்டோடிக்கு அழுகையே வந்து விட்டது. 

' டாக்டர் சொல்லுங்க டாக்டர். 

ஏன் டாக்டர் பயந்து போயிட்டீங்க. 

நீங்களே பயந்துட்டீங்களே.

 அப்படின்னா நான் பொழைக்க மாட்டேனா டாக்டர். சொல்லுங்க டாக்டர் ' இந்தியன் இங்க்ளிஷில் கெஞ்சி கெஞ்சி கேட்டார். 


பட்டோடி விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் இங்கிலாந்து காற்றே!


வியர்க்க விறுவி்றுக்க, மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்க மிரண்டு போய் உட்கார்ந்திருந்த வெள்ளைக்கார டாக்டர் 

பிரிட்டிஷ் இங்க்ளிஷில் சொன்னார்: 

“வோத்தாலோக்க, Mother Fucker.. 

நானும் என் ஆயுசுலே 

எத்தனையோ ' சூத் ' பார்த்துருக்கேன்.

 ஒரு "சூத் " கூட என்னைய  பார்த்ததே இல்லை.."


.... 


மீள் பதிவு 27.03. 2009

Contempt, disdain, scorn

 Contempt, disdain, scorn


"குஷ்பு இட்லி" தமிழ்நாட்டு உணவு விடுதிகளில் பிரபலமாய் இருந்தது .


குஷ்பு :'தமிழ்நாட்டு உணவுகளில்

 எனக்கு பிடிக்காத ஒரே ஐட்டம் இட்லி தான். 

நான் சாப்பிட்டதே இல்லை.'


குஷ்புவின் துவேசம் இட்லி மீது.


..


அடையாளம், அறிமுகம், Resume, Bio-data இவற்றிற்கு எதிரான துவேசம் எப்படியெல்லாம் வெளிப்படும்?


ஆத்மாநாம் இந்த துவேசத்தை கவிதையாக்கியது இப்படித்தான். 


"நான் யாராய் இருந்தால் என்ன ?


நீங்கள் யாராய் இருந்தால் என்ன ?


அனாவசிய கேள்விகள்


அனாவசிய பதில்கள்


எதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள்."


ஜெயகாந்தன் தன்னைச்சுற்றி சக மனித நடவடிக்கைகளின் மீதான அருவருப்பு, 

துவேசத்தை உமிழ கவிஞர் தமிழ் ஒளியின் கவிதையை பயன்படுத்துகிறார்.


" சிக்குப் பிடித்துச் சிரங்கு, சொறி, 

கோல் பிடித்து


நக்குப் பொறுக்கிகளாய் 

நாறுகிறார் -கொக்கர(க்)


'கோ 'வென்று கூவி நிதம்

 கோழிப் பருக்கைக்கும்

'தா'வென்று தாவுகிறார் ."


இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற திருக்குறள் படித்து அதன் படி நடந்து பார்த்து

 சலித்து எரிச்சலாகி எஸ்.வைத்தீஸ்வரன்

 எழுதிய கவிதை :


"அப்படியே


மேலும் மேலும்


நன்னயங்கள் செய்து வருகிறேன்


வழக்கமாக.


எவனும்


நாணுகிற வழியாய் காணோம்!


மீண்டும் மீண்டும்


நன்மையே கிட்டட்டுமென்று


இன்னா செய்கிறான், அயராமல்


இந்நாள் மனிதன்.


வள்ளுவனே, எனக்கொரு


மாற்றுக் குறள் கொடு


இன்று என்னைப் போல் நல்லவர்கள்


தோற்றுப் போகா வகையில் "


வெங்கட் சாமிநாதன் தமிழ் கலாச்சார குழு சூழல் பற்றிய துவேசத்தை எப்படி வெளிப்படுத்துகிறார்? "தமிழ் நாட்டில் எந்த மடத்தனமான நிலைப்பாடும்,கட்சி சார்பில், 

குழு சார்பில் வைக்கப்படுமானால்

 அது செல்லுபடியாகிறது.பலம் பெறுகிறது.

அந்த மடத்தனங்கள், மடத்தனங்கள் என்று வாதிட்டால் அது பெர்சனல் தாக்குதல் ஆகிவிடுகிறது "


கொடூர மனிதத்தனங்களை கண்டு நொந்து தி.ஜானகி ராமன் காட்டும் மனித துவேசம் - 

" எந்தக் கைக்குட்டையால் நெஞ்சு ஈரத்தை

 ஒற்றி எடுத்துக் கொள்கிறார்கள் இந்த மனிதர்கள்!

 நரகத்தில் நெய்த கைக்குட்டையா?!"


'Is there any cause in nature 

That makes these hard hearts?' 


- Shakespeare in King Lear 

....

Jul 16, 2021

R. P. ராஜநாயஹம் எழுத்து


Krishnan Ramados :

 நான் திரு. ராஜநாயஹம் சாரின் பதிவுகளுக்கு சற்றொப்ப 5 - 6 ஆண்டுகளாக வாசகன் /ரசிகன். 

அவரது பதிவுகளில் அவர் அள்ளி வீசும் தகவல்களில் பலமுறை என் புருவங்கள் பொட்டுக்கு ஏறியதுண்டு. 

'ஆ' வென அதிர்வதும், 

'ஈ' யென இளிப்பதும், 

'ஐ' யென குதிப்பதும், 

'ஓ' வென வியப்பதுமாய் 

நம்மை உயிரெழுத்துக்கள் அனைத்தையும் 

அனிச்சையாக உச்சரிக்க வைக்கும் 

உயிரோட்டமான நடை அவருடையது!


S.M. Arun :  R. P. ராஜநாயஹம் அவர்களின் பதிவுகளை பல வருடங்களாக தொடர்ந்து படித்து வருகிறேன். கற்றனைத்து ஊறும் அறிவு. 

An Idealist and Inspiration. 

இவரின் நண்பராவதற்கு எனக்கு எந்தத் தகுதியுமில்லை என்றாலும் 'நண்பர்' என்ற தகுதியைக் கொடுத்த ஃபேஸ்புக்கிற்கு நன்றி. 


....

Jul 14, 2021

ஜஸ்டிஸ் அக்பர் அலி

 ஐகோர்ட் ஜஸ்டிஸ் அக்பர் அலி.

 செங்கல்பட்டு ஜட்ஜாயிருக்கும்போது

 காஞ்சி சங்கராச்சாரியாரைத் 

தூக்கி உள்ளே வைத்தவர் இவர் தான். 


முன்னாளில்

ஈகா தியேட்டருக்கு பின் பக்கம் 

ப்ரொஃபசர் சுப்ரமணியம் தெருவில் இருந்த 

மலையாளி முஸ்லிம் எஜுகேஷனல் சொசைட்டி ஹாஸ்டலில் நான் ஒருவன் தான் சினிமாக்காரன். 

மற்றவர்கள் வக்கீல்கள், டாக்டர்கள். 

இன்னும் இன்கம்டாக்ஸ்,

 டி. வி., ஏர்லைன்ஸ், பேங்க் இப்படி.. 


சினிமா அசிஸ்டெண்ட் டைரக்டரான

 என்னை "டைரக்டர்" என்று தான் கூப்பிடுவார்கள். எல்லோருக்கும் வயதில் ஜுனியர் நான் தான். 


மெஸ் சாப்பாடு அசைவம் தான். 

ஒவ்வொரு நாளும் மட்டன், சிக்கன், ஃபிஷ், பீஃப் என்று மெனு. 

இங்கே தான் நான் பீஃப் சாப்பிட பழகினேன். 


அப்போது வக்கீலாக ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்த அக்பர் அலியும் 

இன்னொரு வக்கீல் கலாமும் 

எம்.இ.எஸ் ஹாஸ்டலில்

 ட்வின்ஸ் போல சேர்ந்தே தான் இருப்பார்கள். 

தமிழர்கள் தான். 


எம். இ. எஸ் ஹாஸ்டல் வாழ்க்கை எங்களுக்கெல்லாம் 

 மறக்க முடியாத ஒன்று. 


என் ரூம் மேட்  மலையாளி அபு பக்கர்

 தலைசிறந்த மனிதாபிமானி. 


எனக்கு உடம்பு சரியில்லாமல் போன போது பக்கத்து அறையிலிருந்த டாக்டர் ஒருவர் இன்ஜெக்ஸன் போட்டு டேப்லெட்ஸ் கொடுத்தார். 


எல்லோரும் ஹாஸ்டலை விட்டுக் கிளம்பிய பின் எனக்கு போரடிக்கக்கூடாதே என்று அபுபக்கர் ‘படங்களுடன் கூடிய பிரமாதமான ஒருசெக்ஸ் புக்’ கொடுத்து விட்டு ஆபீஸ் கிளம்பினார்


.... 


அறிவாலயத்தில் 

இன்றைய 

அட்வகேட் ஜெனரல் R. சண்முகசுந்தரத்தின் 

 மகன் மனு திருமணத்தில் 

என்னைப் பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த  நண்பரிடம் உயர் நீதிமன்ற நீதியரசர் அக்பர் அலி  சொன்னார். 

 “ I meet this BOY after thirty years”


அவருக்கு இப்போதும் நான் பையனாகவே தோற்றம் தருகிறேன் என்பது சற்று வித்தியாசமாக, சந்தோஷம் தருவதாக இருந்தது. காலயந்திரத்தில் ஏறி பின்னோக்கி 

பயணம் செய்த சந்தோஷம். 


எம். இ. எஸ் ஹாஸ்டலில் எங்களோடு இருந்த மலையாள நண்பர் அபுபக்கர் அவர்களின் மகள் திருமணம் அண்ணா நகரில் நடந்தது. 

  

அங்கே என்னைப் பார்த்த போது

 நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த                             அக்பர் அலி அவர்கள் 

என்னை "டைரக்டர்" என்று தான் அழைத்தார். 


...


https://m.facebook.com/story.php?story_fbid=3048245355388910&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3093623667517745&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3093668250846620&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3074899666056812&id=100006104256328

Jul 12, 2021

Complication in miscommunication and memory loss

 இந்திரா பார்த்தசாரதியின் தன்மானம் என்ற தலைப்பில் நான் 2008 நவம்பர் 10ம் தேதி

 நான் எழுதியிருந்த பதிவை இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூலை 10ல் இங்கே வெளியிட்டிருந்தேன். 

அவருக்கு 91 வயது முடிந்து விட்டது. 

காது பெரும்பாலும் கேட்காது. 


நான் எழுதிய சம்பவம் 1990 ல் நடந்தது. 

இது சத்தியம். 


இந்திரா பார்த்தசாரதி புதுவை பல்கலைக் கழகத்தில் நாடகத்துறையில் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தார். டெல்லியில் பேராசிரியராக வேலை பார்த்து அவர் பணி ஓய்வு பெற்ற பின்னால் புதுவை பல்கலைக் கழக 

துணை வேந்தர் வேங்கட சுப்ரமணியன் மூலம் கிடைத்த வாய்ப்பு. 


1990ல் நடந்த சம்பவத்தைத் தான் நான் எழுதியிருக்கிறேன். அப்போது புதுவை பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்த பலருக்கும் தெரிந்த விஷயம். 


Memory is my fate. 

நான் இதை எழுதி விட்டேன். அவருக்கு மகுடம் சூட்டிய பதிவு. 


படித்து விட்டு கவிஞர் வைத்தீஸ்வரன் அவரிடம் சொல்லியிருக்கிறார். இ. பா என்ன புரிந்து கொண்டாரோ? 

Mis communication. 


அவர் டெல்லியில் பணி ஓய்வு பெற்ற 1987 அல்லது 1988 சமயத்தில் நடந்த சம்பவம் இல்லை இது. 

ஆனால் அவர் பணி ஓய்வு பெற்ற சமயம் வேங்கட சுப்ரமணியன் புதுவை பல்கலைக் கழகத்தில் Director of culture பதவி தருவதாக சொல்லியிருக்கிறார். 

இ. பா.  அதை மறுத்து Visiting Professor  வேலை தான் வேண்டும் என்று சொல்லி விட்டு டெல்லி போய் விட்டாராம். 

வேங்கட சுப்ரமணியன் ஒத்துக்கொண்டு அவர் கேட்டுக் கொண்ட படி நாடகத்துறையில் வேலை தந்து விட்டார். 

அப்போது தான் கே. பாலச்சந்தர், வைஜயந்தி மாலா சம்பவம் என்று நான் எழுதியிருப்பதாக 

இ. பா தவறாக புரிந்து கொண்டு அது உண்மையில்லை என்று வைத்தீஸ்வரனிடம் சொல்லியிருக்கிறார். 


நான் எழுதியுள்ள விஷயம் 1990 ல் நடந்த விஷயம். 


இதில் இன்னொரு விஷயம். 

கி. ரா என்னிடம் சொன்ன தகவல் பற்றி நான் இந்திரா பார்த்தசாரதியிடம் கேட்ட போது அப்போது அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகள் : "பிறகென்ன?  என்னை பாலச்சந்தரும் வைஜயந்தி மாலாவுமா இன்டர்வியூ செய்வது?" 

இது சத்தியம். 


இந்த சம்பவமே இந்திரா பார்த்தசாரதிக்கு மறந்து விட்டது என்றால் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அவருடைய தள்ளாமை. முதுமை. 

முதுமை பற்றி அவர் அன்று எழுதி பின் சேது மாதவன் இயக்கத்தில் வெளி வந்த நடிகர் சிவகுமார் நடித்த முதுமைத்துயரம் பற்றிய 

'மறு பக்கம்'  படம் தான் மறக்க முடியுமா? 


(1994ல் 74 வயது ஜெமினி கணேசனிடம் 'வாழ வைத்த தெய்வம் படத்தில் உங்களுக்கு அப்பா ரோல் செய்தவர் எஸ். வி. சுப்பையா' என்று நான் சொன்ன போது அவர் தலையை உலுக்கி 'எனக்கு ஞாபகம் இல்லை'  என்றார்.) 


பாலச்சந்தர், வைஜயந்தி மாலா சம்பவம் 

ஒரு வேளை நினைவில் இருந்தும் இ. பா. மறைக்கிறார், மறுக்கிறார் என்றால் 

அதில் என்ன அரசியல் இருக்கிறதோ? 


துணை வேந்தர் பித்தப்பூ நாவல் வேண்டும் என்று இ.பா. விடம் கேட்ட போது ' ராஜநாயஹத்திடம் கேளுங்கள். கையில வெண்ணெய வச்சிக்கிட்டு ஏன் நெய்க்கு அலையிறீங்க '  என்று பதில் சொல்லியிருக்கிறார். 


அவருடைய மாஸ்டர் பீஸ் நாவல் 'ஏசுவின் தோழர்கள்'  நூலுக்கு(ஆஹா, என்ன ஒரு அற்புதமான நாவல்) 'திடீரென ஒரு டிரஸ்ட் பரிசு கொடுப்பதாக இருபதாயிரம் செக் அனுப்பி வைத்தது பற்றி என்னிடம் மகிழ்ச்சியாக சொன்னவர். 


இ.பா சாகித்ய அகாதெமிக்கு தி. ஜானகிராமன் பற்றி எழுதுவதற்கு நான் தான் தி. ஜா.வின் அவ்வளவு நூல்களும் கொடுத்து உதவியவன் ராஜநாயஹம் தான். 

திருப்பிக் கொடுக்கும் போது இந்திரா மாமி 

மரப்பசு மட்டும் தொலைந்து விட்டது என்று சொன்ன போது ' அது பரவாயில்லை. என்னால் அதை விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும்.' என்றேன். 


1992ல் மாமியின் மறைவுக்குப் பின் சென்னையில் லாசரா - கிருத்திகா பாராட்டு கூட்டத்தில் இ. பா அப்போது மீண்டும் சினிமாவில் நான் ராசுக்குட்டியில் கமிட் ஆகியிருப்பதை அறிந்து சொன்னார் :

"சினிமா உங்கள விட மாட்டேங்குது " 


சரஸ்வதி சம்மான் விருது அவருக்கு கிடைத்த போது திருச்சி ஆல் இண்டியா ரேடியோவில்

 ' ராமானுஜர் ' நாடகம் பற்றி பேருரை நிகழ்த்தினேன். 


'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை '  படித்து விட்டு அவர் எனக்கு எழுதிய வார்த்தை 

"You are too honest to get along with those people, who succeed in life "


இ.பா. வின் ' கிருஷ்ணா, கிருஷ்ணா ' நாவல் பற்றி

' பன்முகம் ' பத்திரிகையில் நான் எழுதிய

' லீலார்த்தம் 'கட்டுரை பிரபலமானது. 


2005 ல் அவர் அறியாமல், அல்லது அறிந்தே தான் செய்த ஒரு Insult. 


அதன் பிறகும் தான் 2008ல் வலைத்தளத்தில் இ.பா . பற்றி  எந்த பிரதிபலனும் எதிர் பாராமல் எப்படியெல்லாம் எழுதியிருக்கிறேன். 

எவ்வளவு தூக்கிப் பிடித்திருக்கிறேன். 


Memory is my fate 


' இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்டேன் ' என்பதாக கண்ணதாசன் வரி. 


..


https://m.facebook.com/story.php?story_fbid=3098021183744660&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3098022313744547&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3098021730411272&id=100006104256328

Jul 11, 2021

திரிசடை கண்ட கவித்துவ கனவு

 பிரமிளின் மிக பிரபலமான கவிதை :

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதி செல்கிறது. 


லா ச ரா வின் உரைநடையில் தெளித்து விழும் கவிதை :

பறக்கும் கொக்கின் சிறகடியினின்று

புல்தரை மேல் உதிர்ந்து

பளீரிடும் வெள்ளை இறகு.

......


சீதையின் அக்னிப்பிரவேசம் - கதைகளிலும் ,கவிதைகளிலும், மேடைகளிலும் அதிகம் பேசப்பட்ட விஷயம்.


லா .ச .ரா . : "சீதை குளித்த நெருப்பு.

நெருப்பின் புனிதம் சீதைக்கா?

சீதையின் புனிதம் நெருப்புக்கா?"

....


" சேற்றுத்துளி தெளித்த தாமரை போல்

சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.

பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள்."


தி .ஜானகிராமன் இதை 'ஆரத்தி ' சிறுகதையில் சொல்கிறார்.


கம்பன் சொன்னதைத் தான் மேற்கோள் காட்டியிருக்கிறாரா?

 ராமாயண பாகவதரின் மகன் தி.ஜா. 

..


சீதை பற்றி தி.ஜா 'கடைசி மணி 'கதையில் சொல்கிற விஷயம் இன்னொன்று.


 திரிசடை கண்ட 'கவித்துவமான கனவு'.


" சீதை வெள்ளை யானை மீது ஏறி நின்று சந்திரனைத் தொட்ட மாதிரி

திரிசடை கனவு கண்டாளாம் ''


...........

Jul 8, 2021

நிஞ்சா

 மூன்று நிஞ்சா வீரர்கள். 


ரொம்ப கூர்மை, நுட்பம். 


ஒருவன் நிஞ்சா  வரிசை காட்டி ஹா, ஹூ சவுண்டு விட்டு பறக்கிற ஒரு கொசுவை வெட்டினான். 

கொசுவின் தலை தனியாகி, உடம்பு தனியானது. 


அடுத்த நிஞ்சா வீரன் கத்தி சுழட்டி ஹா, ஹூ கூப்பாடு போட்டு வீசினான். 

கொசுவோட ரெக்கை மட்டும் கொசுவை விட்டு துண்டுகளாக. பறக்க முடியாமல் கொசு கீழே விழுந்தது. 


மூன்றாவது வீரன் நிஞ்சா சேட்டையெல்லாம் செய்து கத்தி வீசினான். 

கொசு லேசாக ஆடி விட்டு..  மீண்டும் பறக்க ஆரம்பித்தது. 


ஏனைய நிஞ்சா ஃபைட்டர்களெல்லாம் இளக்காரமாக சிரித்தார்கள். 


மூன்றாம் நிஞ்சா தாழன் வாயில் விரல் வைத்து 'உஷ்'  என்றான். 

அப்றம் ரகசியமா ஹஸ்கி வாய்ஸில சொன்னான்:

"அந்த கொசுவுக்கு இனிமே குழந்தையே பிறக்காது. "

"படிங்க. படிச்சிட்டு எழுதுங்க"

 ஒரு கவிஞரு. 

அப்ப அவரு புதுசா வெளியிட்டுள்ள

கவித தொகுப்ப  குடுக்க பாக்க வரனும்னாரு. 

வேல பாக்கற எடத்துக்கே வரச் சொன்னேன். 


பழசா நெறய்ய கவித ஏற்கனவே போட்டவரு தான். 

இப்ப இந்த புதுச குடுக்க வர்றேன்னு

 சொல்றவர என்ன சொல்ல? 


வந்தாரு. கவித பொத்தகத்த தந்தாரு. 

ஒடனே நான் அந்த நூலுக்கான 

வெலய குடுத்தேன்.


 அவருக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. 


பணம் அவரு எதிர்பார்க்கல. சும்மா அன்பளிப்பா குடுக்க வந்தா அதுக்கு 

பணம் குடுக்குறேன்னா சந்தோஷம் தான. 


வசதியில்லேன்னாலும் எங்கிட்ட ஒரு பழக்கம். யாரயாவது பாத்தா ஒடனே ஒரு சாக்லேட் கொடுப்பேன். 

இவருக்கும் ஒரு அம்பது ரூபா சாக்லேட் குடுத்தேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். 


அவரு கெளம்ப எழுந்திரிச்சி நின்னு நாக்குல சனிய காட்டுனாரு. 

" படிங்க. படிச்சிட்டு எழுதுங்க"


எரிச்சலாகி வார்த்தய விட்டேன். 

"ஆடு புழுக்க போடற மாதிரி மொத்தமா போடுறீங்க. போட்டுக்கங்க. 

அத என்னை எதுக்கு மோந்து பாக்க சொல்றீங்க "


கவிஞரு கோவமாகி ரோஷத்தோட 

பணத்தயும் குடுக்காம, 

சாக்லேட்டையும் குடுக்காம 

போயிட்டாரு.

.. 

Jul 7, 2021

திலீப் குமார்

 திலீப் குமார் 


அசோகமித்திரனின் "மானசரோவர்” நாவலின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் Role Models மணிக்கொடி எழுத்தாளர் கி.ராமச்சந்திரனும்,

ஹிந்தி நடிகர் திலீப் குமாரும் என்பது சுவாரசியமான விஷயம்.


ஆயிரமாயிரமாண்டு இந்திய மரபுத்தொடர்ச்சியில் ‘தோழன்’ என்பதன் சாசுவதம்! ராமன் - அனுமன், கிருஷ்ணன் - அர்ச்சுனன்,துரியோதனன் - கர்ணன், பரமஹம்சர்-விவேகானந்தர் என்று எவ்வளவு varieties!தலைவன் -தொண்டன் நிலை தாண்டிய தோழமைக்கு ராமனும் அனுமனும். மாப்பிள்ளை மச்சான் உறவைப் புறந்தள்ளும் கிருஷ்ணன் - அர்ச்சுனன் நட்பு, அந்தஸ்தை துச்சமாக்கிய துரியோதனனின் சிநேகிதம், 

குரு சிஷ்ய பாவத்தை மீறிய பரமஹம்சர்-விவேகானந்தர் நட்பு. 


யூசுப்கான் பாகிஸ்தானிலிருந்து வந்தவன்.ஹிந்தி திரையுலகில் இன்றும் கூட Living Legend திலீப்குமார் என்றுபிரபலமான யூசுப்கான் பாகிஸ்தானியா?இந்தியனா? சில வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் அரசு திலீப் குமாருக்கு பெரிய விருது வழங்கி கௌரவித்தது.இங்கே சிவசேனாவின் கண்டனம்.

திலீப் குமாருக்கும் Identity Crisis உண்டு. 


ஒன்பது வருட திலீப்குமாருடனான  affair ஐ 

ஒரே நிமிடத்தில் மதுபாலா உதறி விட்டு கிஷோர் குமாரை திருமணம் செய்து

 தன் வாழ்வின் கடைசி ஒன்பது வருடங்களை முடித்தார்.

Madhubala - The beauty with tragedy and The Venus of Indian Cinema!


சாய்ரா பானு  இந்தி திரையுலகிற்கு திலீப் நடிக்க வந்த வருடத்தில் பிறந்தவர். 

22 வயது சாய்ரா பானுவைத் திருமணம் செய்து கொண்ட போது திலீப்குமாருக்கு 44 வயது.

சஞ்சீவ் குமாரோடு தான் சாய்ரா என்ற நிலையில் திடீரென திலீப் - சாய்ரா பானு திருமணம் நடந்தது. 


 சிவாஜி கணேசனிடம் உங்களுக்குப் 

பிடித்த நடிகர் யார் என்று கேட்டால்

 ‘ஹாலிவுட்டில் மார்லன் பிராண்டோ.

ஹிந்தியில் யூசுப் பாய்’ என்று தான்  பதில் வரும்.


First Khan of Bollywood. Tragedy King. 


1944 ல் நடிக்க வந்தவர் 1998 வரை

 100 படங்களை தொட்டிருக்க மாட்டார். 

படத்தை அந்த அளவுக்கு கவனமாக தேர்ந்தெடுப்பார். 

குறைவான படங்கள் தான். ஒரு எண்பது இருக்கலாம்? 

மொத்தமாக 64 படங்கள் தான் நடித்தார் என்று ஒரு தகவல் கிடைத்தது. 

Jul 6, 2021

மனித மிருக நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம்

 மனித மிருக நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம்


காலச்சுவடில் (28வது இதழ். அப்போதெல்லாம்  காலாண்டிதழ்) 

2000 ஆண்டில் பிரசுரமான 

'நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம் ' கட்டுரையில் உம்பர்டோ ஈகோ

 'நம் வாழ்க்கையை மாற்றியமைத்த கண்டுபிடிப்புகள் 

சிக்கலான எந்திரங்களை சார்ந்து உள்ளன 

என்று நாம் நம்புகிறோம். 

பீன்ஸ் இல்லாவிட்டால் 

ஐரோப்பிய மக்கள் தொகை 

சில நூற்றாண்டுகளில் 

இரண்டு மடங்கு ஆகியிருக்காது. 

உழைக்கும் மக்களால் அதிக புரோட்டினை 

உண்ண முடிந்தது. 

உடலுரம் பெற்று நீண்ட நாட்கள் வாழ்ந்து, 

அதிக குழந்தைகள் பெற்று ஒரு கண்டத்தின் மக்கள் தொகையை மறு பெருக்கம் செய்தார்கள்.' என்று ஒரு மாற்று பார்வையை முன் வைத்தார்.


கௌதம சித்தார்த்தனின்' உன்னதம் 'ஆறாவது இதழில் உம்பர்டோ ஈகோ வின் " புதியதொரு பூனையின் வரைவடிவம்" என்ற சிறுகதை மொழிபெயர்ப்பு வெளியாகியிருந்தது. 


அதில் ஒரு பூனை. 


துயரங்கள் மிகுந்த அதன் வாழ்க்கை, 

ஏற்ற தாழ்வுகள்,

ஆச்சரியமான எதிர்பாராத நிகழ்வுகள். 


அந்த பூனை தன் தாயை புனர்ந்துள்ளது.


 இன்னொரு எதிர்பாராத நிகழ்வு. 


தன் தந்தையை ஒரு முறை

 பெரிய ஒரு இறைச்சி துண்டுக்கான போராட்டத்தில் 

கொலை செய்து விட நேர்ந்துள்ளது.


ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை ' நூலில் மனித வரலாறு துவங்கும் காலத்தில் தாயை புணரும் மகன், 

தந்தையுடன் உடல் உறவு கொள்ளும் மகள்

 - இப்படி சாங்கிருத்தியாயன் புனைந்திருக்கிறார்.


Venus in Fursநாவலில் Masoch சொல்கிறார் 

" சகலவித நாகரீகங்களையும், முன்னேற்றம், உன்னத மாற்றம், வளர்ச்சிகளையும் மீறி,

இயற்கையால் படைக்கப்பட்ட 

அதே நிலையில் தான்

 பெண் இன்னமும் இருக்கிறாள் "


மனிதம் - மிருகம்


"மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்து பேசுவதை விட கேலி கூத்து கிடையாது. ஏனெனில் சிந்திக்கும் நாய்கள் நாய்குணங்களையே உயர்வாகக்கருதுகின்றன." 

இது ஜி .நாகராஜன் பொன்மொழி


.... 


மீள் 2008

Jul 5, 2021

கவி கா. மு. ஷெரீப்

 கவி கா. மு. ஷெரீப் 


'டவுன் பஸ் ' படத்தில் கண்ணப்பா -அஞ்சலிதேவி வாயசைத்து நடித்த "பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமோ? துயரம் நிலை தானா? உலகம் இது தானா?" 


எஸ்.எஸ்.ஆர் நடித்த பாடல்கள் " ஏரிக்கரை மேலே போறவளே பொன்மயிலே, என்னருமை காதலியே என்னைக்கொஞ்சம் பாரு நீயே "


" பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே, 

இதை பார்த்து அறிந்து நடக்காதவன்

 மனிதன் இல்லே " - எழுதியவர் கா.மு.ஷெரிப்.


சிவாஜி கணேசனுக்கு கா.மு.ஷெரிப் எழுதிய பாடல்கள்

"வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் -வையகம் இது தானடா "


" பாட்டும் நானே, பாவமும் நானே " கா. மு. ஷெரீப் எழுதியது தான் என்று ஜெயகாந்தன் தன்னுடைய

 'ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' நூலில் எழுதியிருக்கிறார்.


அவருக்கு முன்னரே அப்படி 

ஒரு பேச்சு இருந்திருக்கிறது. 


ஆனால் கண்ணதாசன் இதற்கு பதிலாக கண்ணதாசன் அன்று 'போயும் போயும் வயிற்றுழவுக்காரன் மலத்தையா தின்பான்' 

என்றார். 


கவிஞர் ஷெரீப்பிடம் இந்த பாடல் கண்ணதாசன் எழுதியதாக ஆகிப்போனதே என்று இது பற்றி கேட்ட போது வெள்ளந்தியாக "அதனால என்ன? பாட்டு நல்லாருக்குல்ல" என்றாராம்.


தம்பி எம். எம். அப்துல்லாவின் உறவினர் 

கவி. கா. மு. ஷெரீப். 

அவரிடம் 'பாட்டும் நானே பாவமும் நானே' தான் எழுதிய பாடல் தான் என்று கவி சொல்லியிருக்கிறார். 


சினிமாப்பாடல் எழுதியவர் தான் என்றாலும் 

இவர் ஒரு Man of principles.


யாராவது கொஞ்சம் பெரிய மனுஷன் பழக்கம் இருந்தா அதை வைத்து எப்படி

Exploit பண்ணலாம்னு தவிக்கிற உலகம் இது . மந்திரிகுமாரி படத்தினால் கருணாநிதி ,எம்ஜியார் , பாட்டெழுதிய ஷெரிப் ...எவ்வளவு காலப்பழக்கம்!


ஒரு முறை கருணாநிதி முதல்வராய் இருந்த போது கவி கா.மு. ஷெரிப்பின் மனைவி பார்க்கப்போயிருந்தார். 

B.E. படித்த தங்கள் மகனுக்கு, அப்போது வேலையில்லாததால் கோபாலபுரத்திற்கு போயிருக்கிறார்.

கருணாநிதி அன்போடு வரவேற்று உபசரித்திருக்கிறார். மகனுக்கு வேலை வேண்டும் என்று கேட்ட தாயைப் பார்த்து சொன்னாராம் :

 " நான் சிபாரிசு பன்றதை கவிஞர் விரும்பவே மாட்டார். சிபாரிசு செஞ்சா ரொம்ப வருத்தப்படுவார்.அவரிடம் ஒரு கடிதம் வாங்கிட்டு வந்தீங்கன்னா நான் சிபாரிசு பண்றேன் "


இந்த அம்மா வீட்டுக்கு வந்து கணவரிடம் நடந்ததை சொன்னாராம் ." ஏன் நீ அங்கே போனே?"ன்னு கடுமையா கோபப்பட்டிருக்கிறார் கா.மு.ஷெரிப். 


" அவர் முதல்வர் பதவி வகிக்காத போது மட்டும் தான் நானே அவரைப் பார்ப்பேன். நீ இப்படி செய்யலாமா? பையன் அவனா வேலை தேடிக்கட்டும்"என்றாராம். 


"பூவாளூர் சந்தையிலே ஒங்க பொட்டி யோட என் பொட்டி ஓரசிக்கிச்சே .. ஞாபகம் இல்லையா !"ன்னு ஈ ன்னு இளிச்சி ஈசிண்டு உறவு கொண்டாடி ஓட்டப்பார்க்கிற உலகத்திலே 

இப்படி ஒரு பைத்தியக்கார பிரகிருதி!


கா.மு.ஷெரிப்பும், மருத காசியும் இணைந்து சில திரைப் பாடல்கள் எழுதியிருக்கிறார்களாம். 

அவை எந்தெந்த பாடல்கள் என்று தெரியாமல்                        குழப்பம் இருக்கிறது.


....

மீண்டும் ராஜநாயஹத்தின் பதிவு காப்பி

 https://m.facebook.com/story.php?story_fbid=4215247238568427&id=100002495768151


R. P. ராஜநாயஹம் எழுதியுள்ள 'சினிமா எனும் பூதம்' நூலில் இடம் பெற்றுள்ள எஸ். வி. ரங்காராவ் பதிவு மீண்டும் ஈயடிச்சான் காப்பி செய்யப்பட்டுள்ளதை மேலே உள்ள லிங்க் மூலம் தெரிய வந்துள்ளது. 

நண்பர் மணி வேணுகோபால் தகவல் தெரிவித்துள்ளார். 


அனைவரும் கண்டனம் செய்ய வேண்டும். 


விகடன் தீபாவளி மலரில் வெளி வந்த என் கட்டுரை.


இப்போது சம்பந்தப்பட்ட வித்யா ஆனந்த்

 இந்த ராஜநாயஹம் பதிவு காப்பி விவகாரத்திற்கு கொடுத்துள்ள பதில் கீழே பாருங்கள் :


 " இரண்டு மூன்று குழுக்களில் இப்பதிவைப் பார்த்தேன். யாருடையது என்று தெரியாததால் நான் முதலில் பார்த்த நபரின் பெயர் போட்டு via என்று பதிந்தேன். இப்போது தங்கள் பதிவு என்பதைப் பதிவை எடிட் பண்ணிச்  சேர்த்துவிட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன்."


https://m.facebook.com/story.php?story_fbid=3061338927412886&id=100006104256328

Jul 4, 2021

ராஜநாயஹம் பற்றி

"R. P. ராஜநாயஹம்  எனக்கு சாருவின் மூலம் அறிமுகம்.

பிச்சாவரம் கார்னிவலில், மற்றும் நிறைய முறை 

சாரு இவரைப்பற்றி பேசியிருக்கிறார்.


சினிமா பற்றி இவர் கூறும் தகவல்கள் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கே தெரியாது.

இவரின் ப்ளாக்கை படிக்க அமர்ந்தால் நாள் போவதே தெரியாது.

இசை , சினிமா, இலக்கியம், அரசியல் என அபார தெளிவுள்ள மனிதர்.


முக்கியமாக இவரின் carnal thoughts.


சில நாட்களுக்கு முன் இவர் என்னையும் தன் முகநூலில் விண்னப்பித்த உடனே இணைத்துக்கொண்டார்.


நன்றி சார்.


ஒரு நாள் இந்த எளியவன் உங்களை சந்திக்க வருவேன்."

- பிரபு கங்காதரன் 

ஃபேஸ்புக்கில் 04.07. 2014

Poramboke

 Poramboke


Catamaran மாதிரி Poramboke என்கிற வார்த்தையும் ஆங்கில அகராதியில் இடம்பெற நேரலாம். 

கட்டுமரம் - Catamaran. 

புறம்போக்கு - Poramboke.


நம் தனித்தமிழ் coffeeயை கொட்டை வடிநீர் என்றே பிடிவாதமாய் சொல்லியும் தனித்தமிழ் புலவரே 'காப்பி' என்று தான் சொல்லும்படியாகி விட்டது. 


'ஹிந்து 'பத்திரிகையில் புறம்போக்கு நிலம் பற்றி Poramboke என்றே தான் குறிப்பிடுகிறார்கள்.


 உயர்ந்த நீதிபதி பி டி தினகரன் கதை  


இந்த land grabbing (197acres in Kaverirajapuram,Tiruvallur Dt.)கதையில்,

கலெக்டர்,

மேஜிஸ்ட்ரேட் துவங்கி

 வி.ஏ.ஒ வரை 

தினகரனின் அசகாயசூரத்தனம் பற்றி 

சொல்லி விட்டார்கள்.


 காவேரிராஜபுரம் கிராமத்தார் பெரும்பான்மையோருக்கு 

அவர்கள் வீடு உள்ள இடத்திற்கே

 இன்னும் பட்டா கிடைக்கவில்லை. 


இந்த பி.டி.தினகரனை நான் சிலவருடங்களுக்கு முன் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.


நான் பணி புரியும் நிறுவன முதலாளி மீது அபாண்டமான ஒரு கிரிமினல் கேஸ் போடப்பட்டது. அதை எதிர்த்து சேலத்தில் stay வாங்கியது துவங்கி உயர்நீதிமன்றத்தில் அந்த கேசை நடத்துவது வரை என் பொறுப்பில் இருந்தது.


 அப்போது மக்கள் தீர்ப்பாயம் (Lok Adalat) முன் உயர் நீதிமன்றத்தில்

08-07-2006 அன்று என் எம்.டி சார்பில் 

ஆஜர் ஆக நான் போயிருந்தேன். 


அங்கே பாஷா, ரவி ராஜ் பாண்டியன் ஆகிய நீதிபதிகளோடு வழக்குகளை பைசல் செய்ய தினகரனும் இருந்தார். 


எங்கள் எம் டி மீது கேஸ் போட்டவர் பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் கொடுத்தாலே போதும் என்றும் நான்கு வருடங்களுக்கு வட்டியும் வேண்டாம் என்றும் சொன்னார். 

கேஸ் அபாண்டமான பொய் கேஸ்! 

இதில் அந்த கேஸ் போட்ட சேட்டு தாராள மனசைக்காட்டினார்.

 தினகரன் என்னிடம் " இது லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தமாதிரி உங்கள் அதிர்ஷ்டம்.

 பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் போதும் என்கிறார். அதோடு நான்கு வருடத்திற்கு வட்டியும் வேண்டாம் என்கிறார். ஒத்துக்கொள்ளுங்கள் " என்று கறாராக வற்புறுத்தினார்.


 அங்கு வந்திருந்த ஜுனியர் அட்வகேட்டும் என்னிடம் " பெரிய நீதிபதிகளை மறுக்க வேண்டாம்.'' என்று கேனத்தனமாக மிரண்டு போய் சொன்னார். 


நான் பிறகு சீனியர் அட்வகேட் அவர்களையும் ,எங்கள் ஜி.எம் அவர்களையும் கன்சல்ட் செய்து விட்டு அவரிடம் அதற்கு மறுப்பு தெரிவித்து 'கோர்ட் பென்ச்சில் பார்த்துக்கொள்கிறோம். தவறு செய்யாத போது ஏன் இதற்கு ஒத்துக்கொள்ளவேண்டும் ' என உறுதியாக சொல்லி விட்டேன். 


மக்கள் தீர்ப்பாயம் என்றாலே கட்டப்பஞ்சாயத்து போலத்தான் என்று அன்று தெரிய வந்தது. 


வக்கீல் சம்பந்தப் படாமல் மூன்றுஉயர் நீதிமன்ற நீதிபதிகள் முன் நானே வாதாடியது எனக்கு ரொம்ப த்ரில்லான அனுபவம். 


அன்று இரவு சன் செய்திகள் வால்டாக்ஸ் ரோடு லாட்ஜில் நான் பார்த்தபோது 

தினகரன் தமிழக முதல்வர் அவர்களை சந்திப்பதை காட்டினார்கள். 


அடுத்த மாதமே (19.08.2006 ) அந்த கேசை இப்போது மறைந்த நீதிபதி எஸ்.அசோக் குமார் (கருணாநிதி நள்ளிரவு கைதில் 

போலீசை கிண்டியெடுத்த 

அதே நீதிபதி தான் )அவர்கள்

 தள்ளுபடி செய்து தீர்ப்பு செய்தார்கள்.


.... 


மீள் பதிவு 2009

Jul 2, 2021

வசதி இருக்கிறதா? பொருளாதாரம் எப்படி?

 நெய்வேலி சந்தான கோபாலன் கச்சேரியொன்று  பதினெட்டு வருடங்களுக்கு முன்.


திருச்சியில்.


 என் நண்பர் கோவிந்தராஜிடம்(அப்போது Divisional Engineer BSNL)  என்னைக்காட்டி 

சந்தான கோபாலன் சொன்னார்.

”இவர் என்னமா கச்சேரியை ரசித்தார் தெரியுமா!இந்த மாதிரி சதஸ் இருந்தால் தான் கீர்த்தனைகளும் நன்றாக பாட முடியும்”

என் பெயர் என்ன என்று கேட்டார்.

 நான் “ராஜநாயஹம்” என்றேன். 

என் பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள நான்கைந்து முறை ’ராஜநாயஹம்’ என்று கண்மூடி சொல்லிப்பார்த்தவர் சட்டென்று


’ வசதி இருக்கிறதா? (சாப்பாடு,உணவு,உறைவிடம்) பொருளாதாரம் எப்படி? அதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.அது இருந்தால் தான் சங்கீத ரசனையெல்லாம்’ என்றார்.

அவர் சொன்னது அசரிரி.

அடுத்த வருடமே நான் பஞ்சம் பிழைக்க

 திருப்பூர் வரும்படியானது.


 'விரலில் போனால் குரல் போகும்' என்று 

சங்கீத உலகில் சொல்வார்கள்.

If you concentrate on beats,melody will be lost.


 ராகங்களில் முதல் ராகம் மோகனம்.


நன்னு பாலிம்ப்ப நடசி வச்சிதிவோ நா ப்ராண நாத

என்னைக்  காப்பாற்ற வேண்டி நடந்தே வந்தாயா? 


தமிழ்த்தாய் வாழ்த்து ‘நீராடும் கடலுடுத்த’ மோகனம்.


 ’மாசிலா உண்மைக்காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே’


’பழகத்தெரிய வேணும்’


 ’துள்ளாத மனமும் துள்ளும்’


‘மலர்கள் நனைந்தன பனியாலே’


’நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது’


’அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா’


’வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’


இந்தப்பாடல்கள் எல்லாமே மோகனராகம் தான்.


சாருகேசி ராகம்


சாருகேசி என்றால் அழகிய கூந்தல் 

என்று அர்த்தம்.


இந்த ராகத்தில் தியாகபிரும்மத்தின்  'ஆடமோடி கலடே' என்ற கீர்த்தனை. 


சாருகேசி ராகத்தில் தியாகப்ரும்மம்

 இந்த ஒரே ஒரு கீர்த்தனை தான் இயற்றியிருக்கிறார்.


Tell me why this bad mood now

dear Rama, Please speak

I held your feet with devotion

and called you my friend

and my shelter, so speak.


 இந்த ராகம் திரையில்

 மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒன்று.


எம்.கே.டி பாடிய ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ சாருகேசி தான்.


சௌந்தர்ராஜன் பாடிய ‘வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே’சாருகேசி.


மதுரை வீரனில் எம்.எல்.வசந்தகுமாரி பாடி பத்மினி ஆடிய ‘ஆடல் காணீரோ 

திருவிளையாடல் காணீரோ’


குங்குமம் படத்தில் சிவாஜி -சாரதாவுக்கு ஒரு பாட்டு.' தூங்காத கண்ணொன்று ஒன்று’ 


 ஸ்ரீதரின் ‘தேனிலவு’ படத்தில்ஏ.எம்.ராஜா இசையில் ஜிக்கி பாடிய ’ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக்கண்டேன்.அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தைக் கண்டேன்’ இதே சாருகேசி.


காத்திருப்பான் கமலக்கண்ணன்’ என்று 

ஒரு பாடல் இதே ராகம். 


ரஜினியின் நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்திராவில் இந்த ராகத்தில் ஒரு மெட்டில் ஒரு பாட்டு.

 ‘ஆடல் கலையே தேவன் தந்தது’


சின்ன மாப்ளே படத்தில் சுகன்யா -பிரபு

 'கிளு கிளு' பாட்டு

 ‘காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி’ சாருகேசி ராகம்.


..

ராக சுகம்

 சஹானா பாடினாலும் கேட்டாலும்

 மனம் சாந்தமடையும்.


சாமா ராக ’சாந்தமுலேகா’ கேட்டால் சாந்தம் கிடைக்கும் என்று ’செய்தி’ கதையில் தி.ஜானகிராமன் சொல்கிறார். அது உண்மை தான்.


என் அனுபவத்தில் பிலஹரி போல சஹானா கூட கவலையைத்தீர்க்கும்.


காருக்குறிச்சி அருணாச்சலம் நாதஸ்வரத்தின்

சஹானா கேட்ட போது இந்த நிமிடத்தில் மரணம் வாய்த்திடாதா என்று எனக்கு தோண்றியதுண்டு.


கவலையில் இருக்கும் போது கதனகுதூகலம் ராகம் (ரகுவம்ச சுதா கீர்த்தனை)கேட்டால் எரிச்சலாயிருக்கும்.


சஹானா என்பதற்கு ’பெருமை காத்தல்’ என்று அர்த்தம்.

சஹானா கோபத்தை தணிக்கும் வல்லமை கொண்டது.சண்டை சச்சரவுகளையும் நீக்கும் என்று ’ராக சிகித்சா’வில் சொல்லப்பட்டுள்ளது.


தியாகப்ரும்மத்தின் ’கிரிபை’ ’வந்தனமு ரகுநந்தனா’ ஆகிய கீர்த்தனைகள் சஹானா ராகத்தில்.

’கிரிபை’ எம்.டி ராமநாதன் பாடியுள்ளதைக் கேட்கவேண்டும்.

’வந்தனமு ரகுநந்தனா’ உன்னி கிருஷ்ணன் பாட அவர் கச்சேரியில் எப்போதும் சீட்டு எழுதிக் கொடுக்கவேண்டும்.


சினிமாவில் சஹானா என்றால் உடனே நினைவுக்கு வருவது “ பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன் அந்த மலைத்தேன் இவளென மலைத்தேன்” என்ற பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்.

அவ்வை சண்முகியில் ‘ருக்கு ருக்கு ருக்கு’ சஹானா.


கருடத்வனி ராகம் திருமணத்தில் தாலி கட்டும் சமயம் பாடினால் பொன்னுமாப்பிள்ளைக்கு சீரான சுகங்கள் தருமாம். தியாகராஜ கீர்த்தனை’பரதத்ர மேருக’


  பைரவி ராகம் மரணப்படுக்கையில் இருப்பவருக்கு சுகசாந்தி தரும்.


உபசாரமு ஜேஸே வாருன்னா ரனி மரவகுரா

 உன்னை உபசரிப்பதற்கு சுற்றிலும் சிலர்(சீதை,அனுமன் மற்றும் சகோதரர்கள்) இருக்கிறார்கள் என்பதனால் என்னை மறந்து விடாதய்யா 


சங்கராபரணம் மனநோய்க்கு சிறந்த சுகமருந்து.


’ஸ்வர ராக சுதா ரஸ யுத’

சங்கராபரண ராகத்தில் 

’வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்’

பலே பாண்டியா படத்தில் கதாநாயகன் தற்கொலைக்கு முயற்சிக்கிற மன நோயாளி. இந்த ராகத்தில் தெரிந்தே தான் இசையமைப்பாளர் இந்தப்பாடலை அமைத்தாரா!


’வாடிக்கை மறந்ததும் ஏனோ’ கல்யாண பரிசு


’அன்று வந்ததும் இதே நிலா

இன்று வந்ததும் அதே நிலா’


’மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி’


’ஒரு மணியடித்தால் கண்ணே உன் ஞாபகம் டெலிபோன் குயிலே வேண்டும் தரிசனம்’


சங்கராபரண ராக மெட்டில் அமைந்த பாடல்கள் தான்.


ஆனந்த பைரவி ராகம் ரத்தக்கொதிப்புக்கு சுகம் தரும் இயல்பு கொண்டது.


தியாகய்யரின் ஆனந்த பைரவி கீர்த்தனை 

” நீகே தெலியக போ தே 

நே நேமி ஸேயுது ரா”


’உனக்கே தெரியாதென்றால் நான் என்ன தான் செய்ய முடியும்

என் நெஞ்சத்துயரம் உனக்கே தெரியவில்லை என்றால் நான் என்ன தான் செய்ய’


சினிமாவில் ஆனந்த பைரவி

‘போய் வா மகளே போய் வா’


’தென்மேற்கு பருவக்காற்று தேனி பக்கம் 

வீசும் போது '


‘கொஞ்ச நாள் பொறு தலைவா’

.... 

Jul 1, 2021

தியாகராஜ பாகவதரின் மகன் ரவீந்திரன்

 தியாகராஜ பாகவதர் இரண்டாவது மனைவி ராஜம்மா குடும்ப மகள் வழி பேரப்பிள்ளைகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உதவி செய்திருக்கிறார். 


இந்த சூளைமேடு சாய்ராம் குடும்பத்திற்கு எம்ஜியார் உயிரோடு இருந்தவரை உதவியிருக்கிறார். 


சில காலம் முன் ராஜம்மா குடும்பம் பற்றி குமுதத்தில் பேட்டியோடு செய்தி வந்திருந்தது. அப்போது சிவகுமார், பார்த்திபன் உதவி செய்த தகவலும் தெரிய வந்தது.


முதல் தாரத்துக்கு ஒரே மகன். அவர் பெயர் ரவீந்திரன். 

இவருடைய பேட்டி இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வந்திருந்தது. 

அவரை பத்திரிகை பேட்டி எடுத்த விஷயம் கூட அதிசயம். 


திருச்சியில் தியாகராஜ பாகவதரின் பிரமாண்டமான பங்களாவில் பால்யத்தில் விளையாடிய குழந்தை ரவீந்திரன். 


 ரவீந்திரன் சென்னையில் தன்னை யாரென்றே ஒரு போதும் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார். 


ஏதோ ஒரு கம்பெனியில் போர்மனாக வாழ்க்கையை ஓட்டியவர். 

வில்லிவாக்கத்தில் வீட்டை ஒட்டி அக்கம் பக்கத்தினர் யாருக்கும் இவர் பாகவதர் மகன் என்பது யாருக்கும் தெரியாது. 

வீட்டில் தியாகராஜ பாகவதர் புகைப்படம் கூட சுவரில் தொங்க விடவில்லை. 

தன் தந்தை இன்னார் என்ற பிரமை கிஞ்சித்தும் அவரிடம் இல்லாமல் இருந்திருக்கிறார். 


பேட்டி படித்து பல வருடங்கள் ஆனதால் எவ்வளவு யோசித்துப்பார்த்தும் ரவீந்திரன் குறித்து வேறு எதுவும் தெரியவில்லை. 


ராஜம்மாள் குடும்பம் போல கமலம்மாள் மகன் ரவீந்திரன் தன்னை எம் ஜி ஆர் அறியச் செய்திருப்பாரா? நடிகர்  சிவகுமார், பார்த்திபன் இவரை அறிந்திருப்பார்களா? 


இப்போது தியாகராஜ பாகவதர் மகன் 

ரவீந்திரன் உயிரோடு இருக்கிறாரா?


https://youtu.be/5yr52veB_EI


http://rprajanayahem.blogspot.com/2012/08/blog-post_16.html?m=0

.. 

பத்ரகாளி

 என் அம்மை 


அம்மாவை அழைக்கும் போது அப்பா எப்போதும் "பத்ரகாளி" என்பார். 


என் பேத்தியை "பத்ரகாளி" என்றால் 

கல, கல என்று சிரிக்கிறாள். பூர்வ ஜென்ம ஞாபகம். 


அம்மா தான் பேத்தியாக வந்திருக்கிறாள். 


My grand daughter - the most wonderful gift I have ever been given. 


When the pages of my life end,

 she will be one of the most graceful chapters .


https://m.facebook.com/story.php?story_fbid=3052778024935643&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3082657108614401&id=100006104256328

Jun 30, 2021

காசன்

 பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில்

 இன்னும் இருக்கிறார். 


கடும் வைராக்கியமான தனித்தமிழ் அன்பர். 


தி. மு.க. வில் இருக்கும் போதே இவர் 

இன்றைய முதல்வர் பெயரையே தப்பா தனித்தமிழில் எழுதியவர். 


கமல் ஹாசன் பெயரை தப்பா 'கமல் காசன்' என்று இவரால் எழுதாமல் இருக்க முடியவே முடியாதே. 


கமல் காசன். 


கமல் ஹாசனை கமல் ஹாசனாக ஒத்துக்கொள்ளாமல் கமல் ஹாசனுடன் ஒத்துப்போக சாத்தியமில்லை. 


 எழுதுனா, பேசுனா

சுதாரிப்பா பெயரை சுருக்கி

' தலைவர் கமல்' என்பதாக மட்டுமே

 மய்யத்தில் இருக்கும் வரை சமாளிக்கலாம். 


இல்ல பழ. கருப்பையா திருந்தி, மனம் திரும்பி 

 கமல் ஹாசன் பெயரை அப்படியே 

ஏற்றுக் கொள்வாரா?


..


https://m.facebook.com/story.php?story_fbid=2973322766214503&id=100006104256328


Jun 29, 2021

On the Waterfront

 On the Waterfront  (1954movie)"I could have had class. 

I could have been a contender. 

I could have been somebody, 

instead of a bum, which is what I am......"


வாழ்வின் முக்கிய தீர்மானங்கள் 

எள்ளி நகையாடப்படும் சூழல்.

 காலம் சொல்லும் திடுக்கிடும் ரகசியங்கள். கானல் நீராகிவிடும் Aim, Ambition. 

 யாரை குற்றம் சொல்வது.

வாழ்வின் திசை மாற்றிய காரணங்கள்.

"நீ தானே என் இன்றைய நிலைக்கு காரணம் ?" என்ற வினா ஒருவரை நோக்கி

 கேட்கின்ற தருணம்.

தன்னிரக்கம் .. சுய பச்சாத்தாபம் ..

வாழ்க்கையை தொலைக்க நேரும் ஒவ்வொருவரும் வேதனையுடன் இந்த வார்த்தைகளை சொல்ல நேர்கிறது. Lamentation. 


மார்லன் பிராண்டோ சொல்லும் 

இந்த வார்த்தைகள் 

On the Waterfront படத்தின் பிரபலமான வசனம்.


எலியா கசன் இயக்கிய படம்.

ஹாலிவுட் கண்ட மிக மகத்தான இயக்குநர். 


இதே மார்லன் பிராண்டோவோடு

 நடிகை விவியன் லீ யை வைத்து எலியா கசன் இயக்கிய இன்னொரு பிரபலமான படம் 

A streetcar named desire (1951 movie).


On the Waterfrontல் ராட் ஸ்டீஜர், பிராண்டோவின் சகோதரன் சார்லியாக நடித்திருப்பார்.

சகோதரர்கள் இருவரும் டாக்சியில் விவாதிக்கும் காட்சி ஹாலிவுட் படங்களில் வந்துள்ள உணர்வுப்பூர்வமான ஒரு திரைக்காட்சி!


 ரிவால்வரை மூத்த சகோதரன் தன் நெஞ்சில் திடீரென்று வைத்து மிரட்டும் போது டெர்ரியாக நடிக்கும் மார்லன் பிராண்டோ முகத்தில் வெளிப்படும் வியாகுலம். 


அப்போது தான் அந்த வார்த்தைகளை பிராண்டோ சொல்கிறார் ."You don't understand. 

I coulda had class. 

I coulda been a contender. 

I coulda been somebody, instead of a bum, 

which is what I am, let's face it. It was you, Charley. "


வில்லன் ரோல் செய்வது லீ ஜே .காப். 

 படத்தில் வில்லன் பெயர் Friendly!


பாதிரியார் பேரி யாக கார்ல் மால்டன்.


"Some people think the Crucifixion only took place on Calvary. Well, they better wise up! "


இவர் பற்றி ஒரு செய்தி.

 அறுபது வருடங்களுக்கு முன் வந்த இந்த படத்தில் நடித்துள்ள கார்ல் மால்டன் 97 வயதில் 2009ல் தான் இறந்தார்.


கொலம்பியா பிக்சர்ஸ் எடுத்த படங்களில் 

மிக சிறந்தது என்றும் ஹாலிவுட் கண்ட மகத்தான படம் என்றும் கருதப்படும் On the Waterfront இத்தனை வருடங்களிலும் புகழ் வளர்ந்து கொண்டே தான் போகிறது. அருமையை அறுபத்தேழு ஆண்டு காலம் ஆன பின்னும்

 இன்று கூட உணர முடிகிறது.


..

Jun 28, 2021

தி. ஜா. வும், பிரபஞ்சனும், ராஜநாயஹமும்

புதுவையில் நான் இருந்த போது பிரபஞ்சனுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.


தி.ஜானகிராமனுக்கு நினைவு மதிப்பீட்டு மடல் நான் வெளியிட்டிருந்தேன். புதுவை பல்கலைக்கழகத்தில் இதன் காரணமாகவே 

ஒரு தி.ஜா கருத்தரங்கம் நடந்திருந்தது.

தி.ஜா எழுதி என்னிடமிருந்த அத்தனை புத்தகங்களும் கருத்தரங்க அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.


அப்போது சென்னை வாழ்வுக்கு 

ஒரு சின்ன ப்ரேக் விட்டு புதுவையில் 

பிரபஞ்சன் இருந்தார். புதுவை பல்கலைக் கழகத்தில் நாடகத்துறையில் அவருக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் வேலை போட்டுக் கொடுத்திருந்தார்.


அன்று நாடகத்துறைக்கு தலைவர் இந்திரா பார்த்தசாரதி. கே.ஏ.குணசேகரன் நாடகத்துறையில் ஆசிரியர். 


முன்னதாக 1989 துவக்கத்தில் நக்கீரனில் 

“ தி.ஜா. ஆபாச எழுத்தாளர். இன்று தமிழில் இருக்கிற ஆபாச வக்கிரத்திற்கெல்லாம் ஜானகிராமன் தான் காரணம். ஆல் இந்தியா ரேடியோவில் உயர் பதவி வகித்தவர் என்பதால் மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர். அவருக்குபல பெண்களோடு படுக்க ஆசை. அதனால் தான் ‘மரப்பசு’ நாவல் எழுதினார்” – இப்படி கடுமையாக பிரபஞ்சன் 

சாடி எழுதியிருந்தார்.


நாடகத்துறைக்கு இ.பாவை நான் பார்க்க போயிருந்த போது ”இப்ப பிரபஞ்சன் வந்திருந்தார். ’ராஜநாயஹத்துக்கு என் மேல் கோபம் இருக்கும்’னு சொன்னாரே"ன்னு சொன்னார்.


அப்போது நான் பிரபஞ்சனை சந்தித்திருக்கவேயில்லை.

அடுத்த நாளே புதுவை நாடகத்துறையிலேயே பிரபஞ்சனை பார்த்தேன். 

அதன் காரணமாக ஒரு Instant,temporary friendship.


ஜானகிராமன் பற்றிய அவதூறு பற்றி பிரபஞ்சனிடம் நான் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவர் சொன்ன ஒரு விஷயம்.

 “ ராஜநாயஹம், எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படும் போது நான் எப்போதும் இரவில் தி.ஜாவின் மோகமுள் நாவலை எடுத்து படிக்க ஆரம்பிப்பேன். தூங்காமல் முழு இரவும் விடிய,விடிய முழு நாவலை படித்து முடித்து விடுவேன்.”

மேலும் சொன்னார்: என்னுடைய எழுத்தில் நிறைய ஜானகிராமனின் வார்த்தைகளை பயன்படுத்துவேன். உதாரணத்திற்கு “ எட்டுக்கண்ணும் விட்டெறியாப்ல”


எனக்குள் நான் மனதிற்குள் கேட்டுக்கொண்டேன் “இவ்வளவு சொல்லும் இவர் ஏன் ஜானகிராமனை அப்படி கடுமையாக நக்கீரனில் தாக்கி எழுதினார்?’’


பின்னாளில் ஒரு பத்து வருடத்தில்  தீராநதி முதல் இதழில்

 ” தமிழில் தி.ஜானகிராமனை மிஞ்ச ஆளேயில்லை” என்று பிரபஞ்சன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தி. ஜா. வுக்கு ஆராதனை செய்திருந்தார். பிராயச்சித்தம் தான். 


இது பற்றி சுந்தர ராமசாமியிடமும் 

நான் போனில் பேசியிருக்கிறேன்.

அவரும் பிரபஞ்சன் “ தி.ஜானகிராமனை மிஞ்ச யாருமே இல்லை” என்று சொல்வதை உறுதிப்படுத்தி சொன்னார்.


அதன் பிறகு பிரபஞ்சன் எப்போதும் ஜானகிராமனை தூக்கிப்பிடித்தார். 

 தி.ஜா பற்றிய பிரபஞ்சனின்  இந்த அபிப்ராய மாற்றம் 

எனக்கு  சந்தோஷத்தை தந்தது.


... 

Jun 26, 2021

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

 ரொம்ப சின்னப் பையனாய் இருக்கும் போது சங்கரன் கோவிலில் ஒரு திருமணத்திற்கு போய் இருந்தேன். திருமணங்கள் எவ்வளவோ உண்டு தான். 

இந்த திருமணம் மறக்கவே முடியாது. அதைப் பற்றிய வித விதமான நினைவுகள். 


நான் ஒரு பாட்டு பாடினேன்.

"பொல்லாத புன்சிரிப்பு, போதும் போதும் உன் சிரிப்பு, யார் வீட்டுத் தோட்டத்திலே பூத்ததிந்த ரோசாப்பூ? "

 'தொர பாடுறான்' , 'தொர பாடுறான்' என்று பெரியவர்கள், குழந்தைகள் எல்லோருமே உற்சாகமாக ரசித்தார்கள். 


என் பெரிய மாமனார், அப்போது அவர் புது மாப்பிள்ளை, காரில், (அது அவருடைய அப்பா கார். அவர் தான் சங்கரன் கோவில் திருமணத்தை 

தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

என் மனைவியின் தாத்தா. )

 என் அப்பாவும், பெரியப்பாவும் (பெரியப்பா மகள் - ராஜம்  அக்கா தான் கல்யாணப் பெண். நான் தான் மாப்பிள்ளை ஊர்வலத்தில் அத்தான் ராமகிருஷ்ணன்  கையைப் பிடித்து அழைத்து வந்தேன். ) குற்றாலம் போனோம். 


அங்கே என் அப்பாவுடன் நான்காம் வகுப்பு முதல் இன்டர்மீடியட் வரை செயின்ட் சேவியர்ஸில் ஒன்றாக படித்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை

 என் தந்தை தற்செயலாக மெயின் ஃபால்ஸில் சந்தித்தார். இருவரும் பள்ளி, கல்லூரி கால நினைவுகளில் பரவசமானார்கள். 

அப்போது எட்மண்ட் தி. மு. க. வில் உதவி சபாநாயகர். 


(பின்னால் இவர் அ.தி. மு. க வில் எம்ஜியார் அமைச்சரவையில் உணவு அமைச்சராகவும் இருந்தார். 


சுயமரியாதை மிகுந்த எட்மண்ட் அமைச்சராக இருக்கும் போது மகள் கல்யாணத்துக்கு தோட்டத்திற்கு முதல்வருக்கு பத்திரிகை வைக்கப் போன போது அவரை எம். ஜி.ஆர் நேரில் சந்திக்காமல் இன்டர்காமில் பேசி, கல்யாண பத்திரிகையை ஹாலிலேயே வைத்து விட்டு போக சொல்லியிருக்கிறார். எட்மண்ட் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.) 


சங்கரன் கோவில் திருமண வைபவம் நிறைவுற்றது. சங்கரன் கோவிலில் இருந்து திருச்சிக்கு ரயிலில் செல்லும் போது

 ரயிலில்

 ஒரு பாடகன். என்னை விட நான்கைந்து வயது மூத்தவனாயிருப்பான். ரயிலில் பாடி யாசகம் பெறுபவன். தன் கையில் இருந்த தாளக்கட்டையை தட்டிக் கொண்டு அற்புதமாக பாடினான். 

'பூ முடிப்பாள் இந்த பூங்குழலி ' 

ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை படப்பாடல். சிவாஜி, கே. ஆர். விஜயா மேக் அப் இல்லாமல் நடித்த படம் நெஞ்சிருக்கும் வரை. 

பாடலில் நடிப்பில் சிவாஜி கணேசன், குரலில் சௌந்தர் ராஜன், இசையில் விஸ்வநாதன் மூவருமே கொடி கட்டினார்கள்! 

பாடலின் சரணங்கள் எல்லாம் மாறுபட்ட வித்தியாசமான பாடல். கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் அந்த பையன் அற்புதமாக பாடிய பாங்கு. 


' நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணி திங்கள் இருபதாம் நாள் .. ' என்று கல்யாணப் பத்திரிகையே ஒரு சரணம். 


அடுத்து சரண வரிகள் முகூர்த்த நிகழ்வு 

' மாதரார் தங்கள் மகள் என்று பார்த்திருக்க, 

மாப்பிள்ளை முன் வந்து

 மணவறையில் காத்திருக்க... 

கொட்டியது மேளம்,  குவிந்தது கோடி மலர், 

கட்டினான் மாங்கல்யம்....... '


அடுத்த விச்ராந்தியான சரண வரிகள் 

' .... கண்மணி வாழ்க, கடமை முடிந்தது கல்யாணம் ஆக.... '


அந்த முழுப் பாடலையும் சொக்கிப்போய் 

கேட்கும் படி அந்த அண்ணா பாடினான். 


கண்ணுக்குள் முகமும், செவிகளில் அந்த குரலும் 

இன்றைக்கும் மறக்கவே முடியாது.

Jun 24, 2021

Lofty Scenes

 2005 post in Pathivukal.com 


LOFTY SCENES!

- R.P.RAJANAYAHEM


UNSUNG UNHONOURED UNWEPT--GIANTS TURNED INTO PIGMIES--- CELEBRITIES TURNED INTO POOR CREATURES


Eknath Solkar, a forward short leg fielder in Indian cricket 30 years back in the 1970s is no more. With his poor educational qualification, he raised himself to a level as a player in Indian cricket team. He was one of the rare cricketers who took delight in being a fielder to chase and catch cricket balls. Bishen singh Bedi says " We would not have been the same bowlers without EKNATH SOLKAR. "It's an irony that he was a day drunkard even before he was dropped from the national team. By the time he breathed his last, Solkar weighed just 45 kgs and reduced to being a merebag of bones.


When this year began, in January, the glamour qeeen of the 1970's Parveen Babi's body was found in a Mumbai Martuary with a token as an unclaimed body No.16


Giants turned into pigmies!

Celebrities turned into poor creatures!!

Time is a cruel thing, indeed.


EVERY ACTION HAS A REACTION


Vinod mehta wrote this in OUTLOOK june 20,2005.

I was appalled to read this peculiar news. let me give the message briefly.

Tony Blair,British Prime minister, a father of four grown-up kids declared in an interview " I am still SEXUALLY ACTIVE. I am a FIVE-TIMES-A-NIGHT MAN "

Miserably,One month after this interview,it was a pity to note, POMPOUS TONY BLAIR was admitted in hospital with a SEVERELY STRAINED BACK!!!


EVERY DELIBERATE, INTENTIONAL ACTION IS HAVING A REACTION.

YOU MUST REAP WHAT YOU HAVE SOWN.


WHO LOSES, WHO WINS. WHO IS IN WHO IS OUT


An ardent follower of Khomeini, AHMADINEJAD, The newly elected President of Iran had done a leading role in the occupation of the American Embassy in Tehran in the year 1979. This incident was the major cause of President Jimmy Carter's defeat by Ronald Reagan. It is obviously revealed that Reagan's employee had influenced the rebels against King Shah, not to free the embassy hostages until the election and as the protagonist of that operation, Ahmedinejad is reprehensible for the change in the American Presidential Order.

Now it is learnt, U.S is not pleased with the victory of Ahmedinejad. Was he a real King maker or not?


Who loses, who wins

Who is in and who is out.


ASHOKAMITRAN'S LETTER WRITTEN TO R.P.RAJANAYAHEM -

A REJOINDER TO OUTLOOK POLEMICS


When Ashokamitran wrote me a letter and wanted me to type it and arrange to publish it in pathivukal.com, I thought of giving a resounding,booming TITLE to that historical letter and chose a sentence from the letter itself because "NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE!" sounds a decree and verdict in it and this line has an assertive forceful claim and while pronouncing, it becomes an articulate, expressive declaration.


Now when I find this TITLE has become popular in Raayar Kaapiklub I feel great.


But this letter also raised a row among the libertarian writers(!) around Tamil nadu. 

Why should Ashokamitran write this letter to R.P.RAJANAYAHEM ?

That's the question. 


JEALOUSY, RESENTMENT, DISTRUST, SUSPICION, HATRED


Heated discussions going on and now

ASHOKAMITRAN'S LETTER TO R.P.RAJANAYAHEM IS AT ODDS !

So this letter is being rejcted and ignored.


"How many ages hence

Shall this our'LOFTY SCENE'be acted over

In States unborn and accents yet unknown!"

- Shakespeare in Julius Caesar


.. 


http://rprajanayahem.blogspot.com/2017/03/ashokamitrans-letter-to-rprajanayahem.html?m=0

Excessive Creativity

 

An Entry dt 13th August, 2005

 in R.P.Rajanayahem’s Yahoo Blog


EXCESSIVE CREATIVITY - - ...


"Eureka! Eureka!! 


Except R.P.Rajanayahem,

all other Tamil men and women are writing poems.

 Either poems or stories. 

Out here almost everybody says

'I am writing a novel' or 'I have an idea to write a novel.'  "


A comment from 'Raayarkaapiklub' Balasubramanian natarajan alias Nahupolian


" Not to worry, Mr rprajanayahem sir. 

Your 'Eureka! Eureka!' itself - is far more creative poetry than all these other Tamil men and women!Really! You have demonstrated 

how a great poem can be composed 

with just two words!"


- N.Balu


"Dear Nahupolian,

I feel extremely happy to note your greetings with open arms.

It's ironical that jokes contain more truths

 than the Bible. 

You know very well a true poem contains a truth in it and so you have transformed my joke as a poem generously. "


thanks and regards,


R. P. Rajanayahem 


( Nahupolian is no more now)

நெஞ்சமே வெந்து பெத்தடின் ஊசி

 Pethidine Injection

- R.P.ராஜநாயஹம்


இன்றைக்கு தூத்துக்குடிக்காரர்கள் யாரோடு பேசினாலும் உடன் அவர்கள் 

மிகுந்த பரவசத்துடன் 

“சந்திரபாபு எங்க ஊர்க்காரர்” என்று 

ஒரு வார்த்தை சொல்லாமல் போவதேயில்லை.


சந்திரபாபு பெத்தடின் இஞ்சக்ஸன் போதையில் மூழ்கியிருந்தவர்.

கவிஞர் கண்ணதாசனும் பெத்தடின் அடிக்ஸனில் இருந்து மீள முடியாமல் தவித்தவர்.


Addiction is a destructivie disease.

 Simply devastating.


சந்திரபாபு தன் சொந்த ஊரான தூத்துக்குடியில் ரயில்வே ஸ்டேசனில் ஏதோ தகராறில் ஈடுபட்டபோது கடுமையாக தாக்கப்பட்டார். 

He was a trouble maker.


கவனியுங்கள். அவருடைய சொந்த ஊரில்.


 அவருடைய ஃபெர்ணான்டோ சமூகத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் அதிகம். அப்படியிருந்தும் தாக்கப்பட்டார். 


சந்திரபாபு ஒரு தமிழ் திரைப்பட நடிகர் என்று தெரிந்து தான் அவரை அடித்தார்கள். 

’ஏன்டா நீ பெரிய நடிகன்னா என்னா வேண்ணாலும் செய்வியா?’ என்று 

சொல்லி சொல்லி அடித்திருக்கிறார்கள். Disgrace.


முகமெல்லாம் வீங்கிப்போய். உதட்டில் கூட காயத்தோடு வந்த சந்திரபாபுவை சென்னையில் பார்த்து விட்டுத் தான், மிகவும் அதிர்ந்து போய் கண்ணதாசன் தன் பெத்தடின் போதைப் பழக்கத்தை உடனடியாக கைவிட்டார்.


"சத்தியம் தவறும் கூட்டம்

தருமத்தை மறந்த கூட்டம்

வித்தைகள் காட்டும் கூட்டம்

வேதனை வளர்க்கும் கூட்டம்

நித்தியம் பார்த்துப் பார்த்து

நெஞ்சமே வெந்து வெந்து

பெத்தடின் ஊசி போட்டேன்

பிறிதென்னைக் காப்பவர் யார்


சந்திக்கும் மனித ரெல்லாம்

தலையையே தின்கின்றார்

வந்தித்து வாழ்த்துச் சொல்ல

வழியிலே ஒருவ ரில்லை

நிந்தித்தே பழகிப் போன

நீசரைத் தினமும் கண்டேன்

சிந்தித்தே ஊசி போட்டேன்

சிறிதென்னைக் காக்க வேண்டி"


              -  கவியரசு கண்ணதாசன்

Jun 22, 2021

ந. முத்துசாமி நாடகங்கள் பற்றி

 https://m.facebook.com/story.php?story_fbid=3084798668400245&id=100006104256328


மார்ட்டின் எஸ்லின் Theater of the Absurd என்கிற வகைமையை 1962ல் சொன்னார். 

இது பற்றிய பிரக்ஞையில்லாமலேயே 

ந. முத்துசாமி தமிழில் முதல் Absurd play 

 'காலம் காலமாக' எழுதி நடை பத்திரிகையில் 1969ல் வெளிவந்து விட்டது. 

'நாற்காலிக்காரர் ' 1970ல் கசடதபற பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. 


இதற்கு பிறகு 1971ல் தான் இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாடகம் 

' மழை ' கசடதபற இதழில் பொழிந்தது. 


இந்திரா பார்த்தசாரதியை விட ஐந்து வயது இளையவர் ந. முத்துசாமி என்றாலும் நாடகத்தைப் பொறுத்தவரை சீனியர் என்பதை தூக்கிப் பிடித்து இப்படி காட்ட வேண்டியிருக்கிறது. 


மேற்கண்ட காலம் காலமாக, நாற்காலிக்காரர் ரெண்டு நாடகம் தான் முத்துசாமி எழுதினார் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். 

யூஜின் அயனெஸ்கோ தரத்தில் இந்த நாடகங்கள் இருக்கின்றன என்று சொல்லப்பட்ட போது தான் அயனெஸ்கோவை தெரிந்து கொண்டார். 


முத்துசாமியின் பிரபலமான நாடகங்களில் இங்கிலாந்து ஒன்று. இதற்கு 'நூல் கண்டு' என்றும் பெயர் உண்டு. 

நாடகத்தின் பெயர் இங்கிலாந்து என்பதால் மொழிபெயர்ப்பு என்று நினைத்து விட வேண்டாம். 

அப்படி யாராவது சொன்னால் நம்பக்கூடாது. 

முத்துசாமி எழுதிய தமிழ் நாடகம் தான். 


நான் இந்து தியேட்டர் ஃபெஸ்டிவலில் இயக்கிய வண்டிச்சோடை,  சுவரொட்டிகள், உந்திச்சுழி, (உந்திச்சுழி நாடகத்தின் மூலம் பேராசிரியர் செ.ரவீந்திரன் ஒளியமைப்பாளராக பிள்ளையார் சுழி போட்டார்) கட்டியக்காரன், நற்றிணையப்பன், அப்பாவும் பிள்ளையும், படுகளம், காண்டவ வன தகனம், பிரஹன்னளை உள்பட இருபத்தியொரு நாடகங்கள் எழுதியிருக்கிறார். 

இந்த இருபத்தியொரு நாடகங்களுமே 

ஒவ்வொரு வகையில் விசேஷமானது. 

கே. எஸ். கருணாப்ரசாத் வெளியீடாக இன்று கிடைக்கிறது. 


கூத்துப்பட்டறை பல மொழி பெயர்ப்பு நாடகங்கள் போட்டிருக்கிறது என்பதற்காக முத்துசாமி தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் என்று தவறாக கருதி விடக் கூடாது.


வெ.ஸ்ரீராம் மொழி பெயர்த்த மீளமுடியுமா சார்த்தர் நாடகத்தில் நடேஷ், கலைராணி நடித்தார்கள். 


'The last five seconds of Mahatma Gandhi' கூட தமிழில் கூத்துப்பட்டறை நடிகர்கள் நடிப்பில் அரங்கேறியுள்ளது.

.. 

தி. ஜானகிராமன் எனும் உன்னத அதி மானிடன்

 தி. ஜானகிராமன் எனும் உன்னத அதி மானிடன் 

- R.P. ராஜநாயஹம் 


அப்போது நான் தி.ஜானகிராமனுக்காக ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன்.

புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் 

கி வேங்கட சுப்ரமணியன் என் எதிர் வீட்டில் அப்போது இருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு 

ஆள் அனுப்பி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து என்னை வைத்து உடனே தி.ஜா வுக்காக ஒரு கருத்தரங்கம் நடத்த உத்தரவிட்டார்.


க .ப .அறவாணன் அப்போது தமிழ் துறை தலைவர்.


'தி.சானகி ராமன் கருத்தரங்கம் ' என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது.என் பெயர் ஆர்பி.ராசநாயகம்! கிரா (அப்போது புதுவை பல்கலைக்கழக 

வருகை தரு பேராசிரியர் )பெயர் கி 'ராச'நாராயணன்.


விழாவுக்கு போனவுடன் இபா 'என்ன ராச நாயகம் , ராச நாராயணன்'என்று கிண்டல் செய்தார். கிரா " நான் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறேன் !"என்று பட்டிகாட்டானாக மாறி இந்திரா பார்த்த சாரதியை பார்த்து சிரித்தார். தி.ஜா படத்திலும்' தி சானகி ராமன்' என்று எழுதியிருந்தார்கள்.


பூனைக்கு யார் மணி கட்டுவது ? 

பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்று பலர் அந்த சபையில்.

நான் பேசும்போது இந்த தமிழ்  குறிப்பிடாமல் விடவில்லை. 

I broke the ice!


" தமிழில் 'ஷ் ,ஹ ஜ'போன்ற வார்த்தைகள் இல்லை என்று சொல்வதை கேட்கும்போது நம்ம கன்னத்திலேயே இரண்டு கைகளாலும் அடித்து கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. இருக்கிற சிறகை பிய்த்து விட்டு தனி தமிழ் சிறகு ஒட்டவைப்பது அபத்தம் - இப்படி தி ஜானகிராமன் சொல்வார். அவர் பெயரையே அவர் படத்திலும் அவர் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழில் அபத்தமாக ஆபாசமாக எழுதிவிட்டீர்கள் " என்று என் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தேன்.

 தனி தமிழ் அன்பர்கள்  எல்லோரும் எழுந்து விட்டார்கள். உடனே க.ப .அறவாணன் மேடைக்கு வந்து மன்றாடினார்

 ' தயவு செய்து எல்லோரும் அமருங்கள்.உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் '


தமிழ் பேராசிரியர் அறிவு நம்பி ' தயவு செய்து ராசநாயகத்திடம் சானகிராமன் பற்றி மட்டும் கேளுங்கள். தனித்தமிழ் பற்றி தயவு செய்து கேட்கவேண்டாம்.  '


விழா முடிந்த பிறகு புதுவை தமிழ் துறைக்கு பல 'கன்னட' கடிதங்கள் அது என்ன அது ஆங் .. கண்டன கடிதங்கள். 

"தமிழ் துறை நடத்திய விழாவில் ஒருவன் தமிழை பழிக்கிறான். எங்கள் கையையும் வாயையும் கட்டிப்போட்டு விட்டீர்களே "


டெல்லியில் இருந்து திஜாவின் மகன் சாகேத ராமன் எனக்கு ஒரு கடிதம் நொந்து எழுதினார்.

"சாணி உலகம்! இந்த சாணியில் 'சானகிராமன்'தான் நிற்க முடியும் "

..............


கருத்தரங்கம் நடந்த போது அந்த ஊரில் பிரமுகர், தியேட்டர்கள், கல்யாண மண்டபம் போன்றவற்றிற்கு அதிபதி ஒரு பெரியவர். 

அவர் புரவலர் ந. கோவிந்தசாமி அந்த நிகழ்ச்சிக்கு நிதி தந்திருக்கலாம்.

 விழா மலரை இந்திரா பார்த்தசாரதியிடம் இருந்து நான் பெற்ற போது பார்த்தார். ராஜநாயஹம் ஒரு இளைஞன் என்று கண்டு கொண்டார். 


விழா ஆரம்பித்த பிறகு அதன் பின்னர் வந்த திருப்பூர் கிருஷ்ணன் அந்த புரவலர் தான் ராஜநாயஹம் என்று தவறாக  நினைத்திருக்கிறார். 


அப்புறம் புரவலர் பேச எழுந்த போது தான் நான் இல்லை என்பதை புரிந்து கொண்டாராம். 


ராஜநாயஹம் என்ற பெயர் பெரியவர் என்பதாக தன்னை கருத வைத்து விட்டதாக விழா முடிந்த பிறகு திருப்பூர் கிருஷ்ணன் கூறினார். 


நான் தான் முதல் கட்டுரை வாசித்தேன். திருப்பூர் கிருஷ்ணனும் வாசித்தார். 


முன்னதாக புரவலர் பேசும் போது 'ராஜநாயஹம் போன்ற இளம் உள்ளங்களை கவர்ந்திருக்கிறார் என்றால் ஜானகிராமன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் என்பது புரிகிறது' என்றார். 


உடனே எழுதப்பட்ட ஒரு காகிதத்தில் இருந்து சிரத்தையாக வாசித்தார். 'ஜானகிராமன் பெரிய எழுத்தாளர். அவருக்கு மனைவி இரண்டு.' - pause.. 

இந்திரா பார்த்தசாரதி உடனே என்னைப் பார்த்து அதிர்ச்சியை தன் உடலை ஒரு குலுக்கு குலுக்கி வெளிப்படுத்திய காட்சி இப்போதும் மறக்க முடியாதது. 


புரவலர் தொடர்ந்தார் '.. மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' 


'அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' என்று எழுதிக்கொடுத்ததை அப்படி விபரீதமாக வாசித்திருக்கிறார். 


என்னிடம் ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு ' நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் புதுமைப்பித்தன்,

 கு. ப. ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி, க. நா. சு துவங்கி அழகிரி சாமி, லாசரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, வெங்கட்ராம், 

கி. ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன் என்று கோணங்கி வரை  படித்தவன் நான். யாரை படித்தாலும் தி. ஜானகிராமன் தான் விசுவரூபம் எடுத்து தெரிகிறார் 'என்று பயமறியா இளங்கன்றாக சொன்னேன். 

கிராவும், இ. பாவும் விழாவில் இருந்தார்கள். 


திருப்பூர் கிருஷ்ணன் கேட்ட கேள்வி கூட நினைவிருக்கிறது.' அன்பே ஆரமுதே குறைப்பட்டுப் போன நாவல் என்று எப்படி சொல்கிறீர்கள் ' என்றார். அவருக்கு பிடித்த பெண் பாத்திரம் அன்பே ஆரமுதே ருக்மணி. 

தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல்களில் அன்பே ஆரமுதே மட்டும் பாதிக்கப்பட்டது என்பது 

என் துணிபு. 


விழா முடிந்ததும் இந்திரா பார்த்தசாரதியுடன் திருப்பூர் கிருஷ்ணனும், நானும் அவர் வீட்டுக்கு சென்றோம். இந்திரா மாமியின் அன்பான உபசரனை. 


வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திருப்பூர் கிருஷ்ணன் என்னிடம் சொன்னார் :

" நீங்கள் கருத்தரங்கில் ஜானகிராமன் தான் விஸ்வரூபம் எடுத்து தெரிகிறார் என்று சொன்ன விஷயம் கி. ரா வையும் இ. பா. வையும் புண்படுத்தியிருக்கும் "


திருப்பூர் கிருஷ்ணன் 'தமிழின் தரமான எழுத்தாளர்களை விரல் மடக்கி எண்ண ஆரம்பித்தால் முதல் விரலையே ஜானகிராமனுக்காக தான் மடக்க வேண்டியிருக்கும்" என்று கணையாழியில் எழுதியிருந்ததையும் கூட முன்னதாக நான் வெளியிட்டிருந்த தி. ஜா. நினைவு மதிப்பீட்டு மடலில் சேர்த்திருந்தேன். 


நான் வெளியிட்டிருந்த அந்த நினைவு மதிப்பீட்டு மடல் பார்த்து விட்டுத் தான் துணை வேந்தர்

 இந்த கருத்தரங்கம் நடத்த ஆணையிட்டார். 


திருப்பூர் கிருஷ்ணன் சென்னை சென்ற பிறகு இந்த புகைப்படம் அனுப்பி வைத்தேன். 


அன்போடு பதில் கடிதம் எழுதினார் 

'என் மனைவி ஜானகியிடமும், குழந்தை அரவிந்தனிடமும் புகைப்படத்தில் உங்களை காட்டி 

"இவர் தான் ராஜநாயஹம் "என்று சொன்னேன்"


.. 


ஜானகிராமன் பிறந்த தினம் ஜூன் 28.

ஜூன் மாதம் 28ம் தேதி, 1921ம் ஆண்டு. 


காலச்சுவடு வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பில் பிறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகவல் பிழை. 

தி. ஜா  பிறந்த ஊர் தேவங்குடி தான்.        அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். 


அம்மாவின் சொந்த ஊரில் தானே பிரசவம் எப்போதுமே நடக்கும். அது தான். தேவங்குடி ஜானகிராமனின் அம்மாவின் ஊர். 


தஞ்சை ஜில்லா. 


அவருடைய அப்பா தஞ்சையில் குடும்பத்துடன் செட்டில் ஆகியிருக்கிறார்.


 அதனால் தி. ஜா.வின் பால்யமெல்லாம் தஞ்சையில் தான்.


 பள்ளிப்படிப்பு காலம். 


கல்லூரி படிப்பு கும்ப கோணத்தில். 


தஞ்சையில் தி. ஜா.வின் தகப்பனார் பிரவச்சனம் செய்தார். ஒரே டெக்ஸ்ட் வால்மீகி ராமாயணத்தை சம்ஸ்கிருதத்திலிருந்து வரி, வரியா விளக்கி தமிழில் ஹரி கதா செய்வது தான் பிரவச்சனம். 


ஜானகிராமன் தகப்பனாரை ராமாயண பாகவதர் என்று க.நா.சுப்ரமண்யம் குறிப்பிடுவார். 


ஜானகிராமனுக்கு அண்ணன் பெயர் ராமச்சந்திரன். 


அவர் மாயவரம் ஸ்கூலில் தமிழ் பண்டிட். 


வேத பாடசாலையில் சம்ஸ்கிருதமும் படித்தவர் இந்த தமிழ் பண்டிட். 


ஜானகிராமனின் இரு சகோதரிகளுக்கு ஒரே கணவர். அவர் பெயரும் ராமச்சந்திரன் தான். 


'கமலம்' குறுநாவல் தொகுப்பை 


"இந்த குறுநாவல்களில் ஒன்றில் ஒரு கதாபாத்திரமாக வரும் என் இரண்டு சகோதரிகளின் கணவர் ஸ்ரீ ராமச்சந்திரன் அவர்களுக்கு சமர்ப்பணம் " என்று குறிப்பிட்டிருந்தார்.


 மீனாட்சி பதிப்பகம் வெளியிட்ட போது கமலம் தொகுப்பில் இந்த சமர்ப்பணம் இருந்தது. 


இந்த அத்திம்பேர் ராமச்சந்திரன் நிலபுலன்களுடன் 


வாழ்ந்த ஊர் தான் 'கீழவிடயல் கருப்பூர்'. 


அன்றைய தஞ்சை ஜில்லாவில் வலங்கைமானுக்கு அருகில் இருக்கிற ஊர். 


முதிய வயதில் ஜானகிராமனின் பெற்றோர் இந்த மருமகன் வீட்டில் தான் செட்டில் ஆனார்கள். 


ஜானகிராமன் டெல்லியில் இருந்த காலத்தில் இந்த கீழ விடயல் கருப்பூருக்குத் தான் பெற்றோரை காண்பதற்கு


 வர வேண்டியிருந்தது. 


ஜானகிராமன் பிள்ளைகள் சாகேத ராமனுக்கு, ரமணனுக்கு, உமா சங்கரி மூவருக்கும் தாத்தா, பாட்டி ஊர் என்றால் அத்தைகள் ஊர் தான். 


ஜானகிராமன் டெல்லி போகுமுன் சென்னை மயிலாப்பூர் ராக்கியப்ப முதலித் தெருவில் குடியிருந்தார்.


இறக்கும்போது சென்னை திருவான்மியூர் வீட்டு வசதி வாரியம் வீட்டில் குடியிருந்தார்.


தி.ஜானகிராமன் இறந்த போது அவருக்கு வயது அறுபத்திரண்டு தான். இறக்க வேண்டிய வயதா?


ஆனால் ஜானகிராமன் ’வயசானா இருக்கக்கூடாது. அறுபது வயதுக்கு மேல் இருக்கக்கூடாது’ என்று அடிக்கடி சொல்வாராம்.


ஜானகிராமனுக்கு இரண்டு புத்ரர்கள் சாஹேதராமன், ரமணன்.

ஒரு புத்ரி. உமாசங்கரி. உமா சங்கரி மாமியின் கணவர் நரேந்திரநாத்.

தன் கணவர் பற்றி உமா சொல்வார்: ரொம்ப அற்புதமான மனிதர்.

உமா சங்கரியின் அண்ணன்கள் சாஹேத ராமன், ரமணன், கணவர் நரேந்திர நாத் மூவருமே ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்பட்டவர்கள். ஆனால் போய்விட்டார்கள்.


There is nothing serious in mortality.

Life is a walking shadow…

- Shakespeare in ‘Macbeth’


ஹைத்ராபாத்தில் இருக்கும் தி.ஜா மகள் உமா சங்கரிக்கு இரண்டு மகள்கள். ஒருவர் அமெரிக்காவில். இன்னொருவர் ஹைத்ராபாத்தில்.


... 


கூத்துப்பட்டறையில் பயிற்சியாளராக பல முறை              ஒரு சிறுகதை தேர்ந்தெடுத்து உரக்க வாசித்து விரிவாக பேசியிருக்கிறேன். 

தி.ஜானகிராமனின் ’தவம்’, ’பரதேசி வந்தான்’, ’தீர்மானம்’ அசோகமித்திரனின் ‘காந்தி’, ’கடன்’.

அடர்த்தியான கதைகள்.


தி.ஜானகிராமனைப்பற்றி, அசோகமித்திரனைப்பற்றி

நிறைய சொல்லியிருக்கிறேன். 


தி.ஜானகிராமனையும் அசோகமித்திரனையும் தான் எத்தனை முறை மறு வாசிப்பு செய்திருக்கிறேன். பிரமிப்பு விலகாத விசேஷமான அனுபவமாகவே ஒவ்வொரு முறையும்.

தி.ஜா ’தீர்மானம்’ கதையை வெள்ளிக்கிழமை வாசித்தேன்.

நான் கண் கலங்குவது, அழுவது எல்லாம் தனிமையில் தான்.

Sorrows find relaxation in solitude. 

Every man has his secret sorrows.

மற்றவர்கள் முன் இளகி கலங்குவதில்லை.

தீர்மானம் கதையை வாசிக்கும் போது அடக்க முடியாமல் விம்மினேன். கண்ணில் இருந்து நீர் வடிந்து விடாமல் இருக்க கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன். தொண்டை தழதழக்க மேலே வாசிக்க முடியாமல் நிறுத்தினேன்.


Charles Dickens, in his novel Great Expectation says

“We need never be ashamed of our tears.”


Shakespeare in Julius Ceasar “If you have tears, prepare to shed them now."

பத்து வயது விசாலம் எனும் சிறுமி தான் எப்பேர்ப்பட்டவள். தாயில்லா பிள்ளை. தந்தையுடன், அவருடைய சகோதரியின் பராமரிப்பில் இருப்பவள்.


 அந்த அத்தை வாழாவெட்டியா, விதவையா?


ஆறு வயதில் விசாலிக்கு பால்ய விவாகம். அப்போது கணவனுக்கு இருபத்திரெண்டு வயது என்பது அவன் இப்போது அவளை அழைத்து வரச்சொல்லி இவள் வீட்டுக்கு வந்துள்ள கணவனின் உறவினர்கள் அவன் வயது இருபத்தாறு என்று சொல்வதிலிருந்து தெரிகிறது.


வந்திருப்பவர்கள் கணவனின் அண்ணா, பெரியப்பா, சித்தப்பா ஆகியோர். கணவனுக்கு அம்மா, அப்பா கிடையாது.


பத்து வயது குழந்தையை புகுந்த வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்திருக்கிறார்கள்.


குழந்தை தன் தோழி ராதையுடன் சோலி விளையாடக் காத்திருந்தவள்.


அப்பா வீட்டில் இல்லை. நான்கு வருடங்களுக்கு விசாலியின் திருமணத்தின் போதே அப்பாவுக்கும் கணவன் வீட்டார்க்கும் மனஸ்தாபம்.

 உறவு கெட்டுப் போய் விட்டது.


அத்தை தன் சகோதரன் வரட்டுமே என்று தவித்து அங்கலாய்க்கிறாள் இப்போது.


கணவன் வீட்டாரோ பச்சை தண்ணீர் கூட இந்த வீட்டில் குடிக்கத் தயாராயில்லை. சாப்பிட வேண்டிய குழந்தை விசாலியை அழைத்துக்கொண்டு வண்டியில் கிளம்ப தயாராகிறார்கள்.


விசாலி உடனே தீர்மானிக்கிறாள். 

’அத்தை, அப்பா கிட்ட நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடு.’

கணவன் வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமாகிறாள். என்ன ஒரு தீர்மானம்.


என்னால் மேலே உரக்க வாசிக்கவே முடியவில்லை. கண்ணை நீர் மறைக்கிறது. தொண்டையில் இருந்து குரல் வரவில்லை.


ஒரு வழியாக சில நிமிடங்கள் உறைந்து விட்டு நிலை கொண்டு மீண்டும் கவனமாக வாசித்து முடிக்க முயன்றும் சிரமமாகவே இருந்தது.


என்ன ஒரு கதை. எத்தனை முறை வாசித்த கதை.

எத்தனை வருடங்கள் கழித்து வாசித்தாலும் நெஞ்சை அடைக்கும் கதை.

இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் கதை. இது இப்ப தேவையா? என்றெல்லாம் விகார மூளைகள் விவாதம் செய்யட்டும்.


தி.ஜாவின் கதைகள் அந்த கால கட்டங்களின் வரலாற்று ஆவணங்கள். உன்னத மனத்தால் மட்டுமே இப்படி காட்சிப்படுத்த முடியும்.


..


'தி.ஜானகிராமன் எனும் உன்னத அதி மானிடன்'


- எழுத்தாளர் R. P. ராஜநாயஹம் 


2021 ஜூன் மாதம் #புரவி இதழில்...


சந்தா மற்றும் விபரங்களுக்கு:


கார்த்திகேயன் - 9942633833

அருண் - 9790443979


புரவி - கலை இலக்கிய மாத இதழ் 

#வாசகசாலை