Share

Nov 20, 2021

தஞ்சை ராமமூர்த்தி

1983வாக்கில் மதுரை ரீகல் தியேட்டரில் இலங்கை தமிழர்கள் ஆதரவு கூட்டம் ஒன்று.
பழ.நெடுமாறன், இலங்கை தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி, நிலக்கோட்டை பொன்னம்மாள், இவர்களுடன் தஞ்சை ராமமூர்த்தி கலந்து கொண்ட கூட்டம்.
அமிர்தலிங்கத்தின் மனைவி அன்று அந்த கூட்டத்தில் புலிகள் ஆதரவு பாடல் கூட மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு பாடினார்.
 காசி ஆனந்தன் பாடலாக இருக்கும். அப்போது அவருக்கு புலிகள் தான் தன் கணவரை சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்பதெல்லாம் 
எப்படி தெரியும்?

பொன்னம்மாள் நெடுமாறனை தம்பி, தம்பி என்று உருகினார்.
அந்த கூட்டத்தில் தஞ்சை ராமமூர்த்தி தனித்த பெரும் ஆளுமையாக தெரிந்தார்.மிக அழகாக, தெளிவாக பேசினார். 
தஞ்சை ராமமூர்த்தி ஹேர்ஸ்டைல்          என் தகப்பனார் போல நேர் உச்சியில் வகிடெடுத்து சீவியிருந்தார்.
அப்பா போலவே நல்ல சிவப்பு. 

மேடைப் பேச்சில் கண்ணியம், நிதானம் வித்தியாசமான விஷயம். ஏனென்றால் ஆவேசமான அரசியல் சூழலில், கொந்தளிப்பான பார்வையாளர்களிடம்
 அமெரிக்கையாக, மென்மையாக பேசி அவரால் கைதட்டல் வாங்க முடிந்தது. 

அவர் அரசியல் காமராஜரின் தொண்டராக ஆரம்பித்து காமராஜர் பார்க்க இந்திரா காங்கிரஸில் இணைந்து பின்னர் காமராஜர் மரணத்திற்குப் பின்னர் இந்திரா காங்கிரஸில் மூப்பணாருடன் ஒத்துப்போக முடியாமல் வெளியேறி,
இலங்கை பிரச்சினையில் பழ.நெடுமாறனோடு, பின் வி.பி.சிங் ஜனதா தளம், கடைசி காலத்தில் வைகோவை சிலாகித்துக்கொண்டு ..

நல்ல செயல் திறன் கொண்ட வழக்கறிஞர். தன் பரபரப்பான அரசியல் செயல்பாடுகளுக்கு சம்பந்தமேயில்லாமல் இலக்கிய ஆர்வலராக, எழுத்தாளராக "வள்ளலார்" எனும் நூலாசிரியராக.

காங்கிரஸில் தான் திண்டிவனம், வாழப்பாடி என்று ராமமூர்த்திகள் பரிமளித்தார்கள். 
தஞ்சை ராமமூர்த்தி மங்கிப்போன நிலை.

சிதைந்த அரசியல்வாதியாக மறைந்திருக்கிற பேராள்மை.

அரசியலில் தோற்றுப்போன கண்ணியமான நேர்மையாளர்களில் ஒருவர்.

Consistency is the hallmark of mediocrity.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.