Share

Apr 28, 2017

பெண்மை வாழ்கவென்று


‘சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள ஆண் தன் திருமண வாழ்க்கை பற்றி பெருமிதமாக “successful married life” என்று தான் சொல்வான். பெண் அல்லவோ சொல்ல வேண்டும் இந்த வார்த்தையை.
ஆணுக்கு மனைவி அமையத்தான் செய்கிறாள். பெண்ணுக்குத்தான் கணவன் அமைவதில்லை’
- இன்று கூத்துப்பட்டறை மாணவி ஒருவர் இப்படி சொன்னார். 


ஆஸ்கார் ஒயில்ட் இதை ஒட்டியே தான் சொன்னான்.
” There is nothing in the world like the devotion of a married woman. It is a thing no married man knows any thing about.”

பிரஞ்சு கவிஞன் பால்சாக்: “ In a husband there is only a man. In a married woman, there is a man, a father, mother and a woman.”

மெஸோக் : அனைத்து நாகரீக மறுமலர்ச்சி யையும் தாண்டி இயற்கையால் படைக்கப்பட்ட முந்தைய நிலை மாறாமல் கலப்படமின்றி அப்படியே தான் இருக்கிறாள் பெண் . Woman is faithful as long as she loves, but you demand that she be faithful without love and give herself without enjoyment. Who is cruel then, woman or man?
........


அம்மாபேட்டை கணேசன் : ‘அடுக்குல இருக்கறது அரிசியோ, ஆரியமோ உள்ளத கொண்டு பக்குவமா சாதங்கறி வெச்சி பசியாத்தறாங்களே பொண்டுங்க, அவிங்களுக்கு தெரியாத வித்தையா?!’





A man is a man until he can, but a woman is a woman till she dies.


 ( ராஜா ரவி வர்மா ஓவியம். இரவில் தமயந்தியை காட்டில் கை விட்டு நழுவும் நளன். )

.........................

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_7763.html

http://rprajanayahem.blogspot.in/2017/01/blog-post_8.html

http://rprajanayahem.blogspot.in/2012/05/mrs-dalloway.html

 

 

Apr 27, 2017

முத்துப்பேட்டை சோமு


நாகப்பட்டினத்தில் என் தந்தை, பெரியப்பா இருவருமே கஸ்டம்ஸ் அதிகாரிகளாக வெவ்வேறு காலகட்டங்களில் இருந்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டராய் இருந்த போதும் சூப்ரிண்ட் ஆக இருந்த போதும் நாகை கஸ்டம்ஸில் இருந்தவர்கள்.

இன்ஸ்பெக்டராக இவர்கள் இருந்த காலத்தில் எஸ்.எஸ்.ரஜூலா கப்பல், சூப்ரண்ட் ஆக இருக்கும்போது எம்.வி.சிதம்பரம் கப்பல்.

கப்பல் நாகை துறைமுகம் வரும்போது பேக்கேஜ்காக திருச்சியில் இருந்து கூட சுங்கத்துறை அதிகாரிகள் வருவார்கள்.

முத்துப்பேட்டை சோமு என்பவர் எங்கள் வீட்டுக்கு வருவார். என் பெரியப்பா நாகையில் இருக்கும்போது அவர் வீட்டுக்கும் வருவார்.
வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி.

என் அப்பா, பெரியப்பா இருவருக்குமே நல்ல நட்பில் இருந்தார்.
அவருடைய மகள் ஹேமாமாலினி அந்தக்காலங்களில் பாரதிராஜா படங்களில் கதா நாயகிக்கு டப்பிங் பேசிக்கொண்டிருக்கிற விஷயத்தை எங்களிடம் சொல்வார். என் பெரியப்பா “ எங்க தொரய சினிமாவில சேர்த்து விடுங்க” என்பார். தொரை என்பது என்னைத்தான்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் அப்பா, பெரியப்பா இருவரும் கஸ்டம்ஸ் யூனிஃபார்மில் இருக்கும்போது ஒரு நாள் முத்துப்பேட்டை சோமு “ அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் தனித் தனியா பார்த்தால் பயப்பட மாட்டேன். ஆனா ரெண்டு பேரும் சேர்ந்திருக்கும் போது பாக்க பயமா இருக்கு. அதனால வால சுருட்டிக்கிட்டு இருக்கேன்.”
வேடிக்கையாக இப்படி என் அப்பா, பெரியப்பா இருவரிடமும் பேசுவார்.

அவர் மகன் இப்போது பெயர் சொல்லும் நடிகர்.
எம்.எஸ்.பாஸ்கர்.

இன்று அவருடைய பேட்டி ஆனந்த விகடனில் பார்த்தேன்.

அவருக்கு ஒரு போன் செய்து இந்த பழைய விஷயங்களை சொன்னேன். எம்.எஸ்.பாஸ்கர் கேட்டுக்கொண்டார். அவரோடு அறிமுகமோ பரிச்சயமோ எதுவும் கிடையாது.
……………………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2017/02/blog-post_7.html

http://rprajanayahem.blogspot.in/2012/06/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/2016/12/blog-post_2.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_6071.html

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html


Apr 22, 2017

சுப்புடு தட்டிப்பாத்த கொட்டாங்குச்சி


சுப்புடுக்கு நூற்றாண்டு?

தன் 80வது வயதில் சொன்னார். “ இன்னும் ஒரு நாற்பது வருடங்கள் தான் நான் உயிரோடு இருப்பேன்.”
90 வயதில் இறந்தார்.



சுப்புடுவின் கறாரான சங்கீத விமர்சனங்கள். அவருடைய ஹ்யூமர்.
பாலமுரளி, வீணை பாலச்சந்தர் ஆகியோரையெல்லாம் கிண்டி கிழங்கு எடுத்தவர்.


வித்வான்களிடம் சுப்புடுவின் கடுமையான கண்டிப்பான வார்த்தைகள்.

 "ரொம்ப சபாக்களில் காரியதரிசிகள் அரங்குக்கு வெளியே தான் நிற்பார்கள் . 'உள்ளே நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் பொறுப்பு இல்லை' என்பது போல."
” வயலின் கன்யாகுமரி இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்குகிற பேர்வழி. விட்டால் கதரி கோபால் நாத்தின் மடியிலேயே உட்கார்ந்து விடுவார்.”
 



சங்கீத பாடகர்கள் சினிமாவில் பாடக்கூடாது என்பது பற்றி நிறைய எழுதியவர். 1940களில் இருந்த சினிமாப்பாடல் கர்நாடக சங்கீதத்தோடு ஒன்றியது. அதைக்காரணம் காட்டி சுப்புலட்சுமி சினிமாவில் பாடவில்லையா? ஜி.என்.பி பாடவில்லையா? என்று சப்பை கட்டு கட்டி, 1990களில் கூட சினிமா பாட்டு பாடலாமா? என்று கறாராக கேட்டார்.சினிமா பாடல்கள் பாடிவிட்டு சங்கீதமும் பாடமுடியாது என்பது சுப்புடு சித்தாந்தம்.சினிமாவில் பாடுவதை கொடிய வியாதியாக சித்தரித்தார்.

ஆனால் உறுத்தும் ஒரு விஷயம். 1983ல் திடீரென்று டி.ராஜேந்தர் பாடிய சினிமாப்பாடல் ஒன்று பற்றி புல்லரித்தார். செடியரித்து மரம் அரித்துப்போனார். தும்பிக்கய ஊனி, நாலு காலையும் தூக்கி, சங்கு சக்கரமா சுத்தி, ’பேஷ், பலே’ என்று ’ஆஹா’காரம் செய்தார்.


இத்தனைக்கும் 1980களில் தரமான எத்தனையோ இளையராஜா பாடல்கள் நூற்றுக்கணக்கில் இருந்தன.
1960களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி.மஹாதேவன் பாடல்கள்? சௌந்தர்ராஜன்,சுசிலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள்?

ஆனால் சுப்புடு நெகிழ்ந்து போன அந்தப்பாடல் எது தெரியுமா? டி.ராஜேந்தர் இசையமைத்துப்பாடிய
”தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி, தாளம் வந்தது பாட்டவச்சி. “
தங்கைக்கோர் கீதம் படத்தில் இந்தப் பாடலை கேட்டு விட்டு கண்ணீர் விட்டு அழுததாக சுப்புடு சொன்ன அபத்தம் இங்கு நடந்திருக்கிறது.
அதற்குப் பிறகும் கடைசி வரை கர்னாடக சங்கீத பாடகர்கள் சினிமாவில் பாடிய போது முகம் சுளித்துக்கொண்டே தான் இருந்தார்.

Once in a while, A consistency comes forward that is both sublime and foolish!
........................................
http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_27.html

http://rprajanayahem.blogspot.in/2016/05/blog-post_26.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_27.html

http://rprajanayahem.blogspot.in/2016/07/vv.html

http://rprajanayahem.blogspot.in/2015/03/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_12.html

Apr 19, 2017

Che sara, sara ’கே சரா,சரா’


ஹிட்ச்காக்கின் படம் The Man who knew too much. இதில் டோரிஸ் டே பாடிய பாடல் que sera sera ( Spanish Language)
 கிறிஸ்டோபர் மார்லோவ் Che sara sara ( Italian Language)



படிக்கிற காலத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும்  நான் எப்போதும் பாடியிருக்கிறேன்.

இந்தப் பாடலை நான் ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராய் இருந்த போது கொஞ்சம் மாற்றி பாடுவேன்.
திருப்பூர் விகாஸ் வித்யாலயா பள்ளி குழந்தைகள், கிட்ஸ் க்ளப் மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. ஸ்கூல் குழந்தைகள் அனைவருக்கும் நான் பாடி இந்த ’கே சரா,சரா’ பாடல் ரொம்ப பிரபலம்.


திருப்பூரில் இருந்து இப்போது கூட மாணவ மாணவியர் என் பாடல்களை நினைவில் வைத்திருப்பதாக என்னிடம் கூறுகிறார்கள்.

சென்னையிலும் கூத்துப்பட்டறையிலும் கே சரா, சரா பிரபலமாகி விட்டது.
Che sara, sara என்ற இந்த வார்த்தை கிறிஸ்டோபர் மார்லோவின் டாக்டர் ஃபாஸ்டஸில் வரும் வார்த்தை.
Che sara, sara is a latin world which means What ever will be will be. என்ன நடக்குமோ அது தான் நடக்கும்.

 நான் மார்லோவின் வரிகளை ஆரம்ப வரிகளாக கொள்கிறேன்.
டோரிஸ் டே வரி சரணங்களை மாற்றி பாடுகிறேன்.
என்னுடைய வெர்சன் இது.

When I was just a child
I asked my mama what will I be?
Will I be a doctor? Will I be an actor?
This what she said to me
Che sara, sara
Whatever will be will be
Future is not ours to see
Che sara, sara


When I just entered school
I asked my teacher
What will I be?
Will I be a major
Will I be a Colonel
This what she said to me
Che sara, sara
Whatever will be will be
Future is not ours to see
Che sara, sara Che sara sara


When I just entered teens
I asked my sweet heart
What will I be?
Will I be a rainbow day after day
This what she said to me
Che sara, sara
What ever will be will be
Future is not ours to see
Che sara, sara
Che sara, sara, Che sara, sara

’ஆரவல்லி’ படத்தில் எஸ்.ஜி.ஈஸ்வர்,
மைனாவதி ( பண்டரி பாய் தங்கை) இருவரும் பாடுவதாக வரும் பாடல்

”சின்னப்பெண் ஆன போதிலே என் அன்னையிடம் நான் ஒரு நாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? அம்மா நீ சொல் என்றேன்.
வெண்ணிலா, நிலா என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காண் நிலா.”

Che sara மெட்டிலேயே அமைந்த பாடல்.

நான் பாடும் மற்ற பாடல்கள்


1.Do re me, Do re me fa so la ti

2.There's a sad sort of clanging from the clock

3.Rain drops keep falling on my head

4.The green grass grows all around

5. Congratulations and celebrations

6. Five little ducks went out one day

7. Feelings, feelings They are a part of me
Feelings, Feelings Hey, I just want to be me.

8. Everybody, Do what you are doing

9.Buddy, you are a boy, make a big noise

10. We shall overcome, we shall overcome


............................................

https://www.youtube.com/watch?v=acyQqteM99Y

Apr 18, 2017

புனஷ்காரம்! அனுஷ்டானம்!


இரண்டாவது மாடியில் குடியிருக்கிறோம். இதுவரை வாழ்நாளில் பார்க்காத கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு. கடந்த இரண்டு வாரமாக அடிப்படை விஷயங்களுக்கே,பாத்திரங்கள் கழுவ, துணி துவைக்கக் கூட படும் துயரம் சொல்லி முடியாது. சொல்லொணாத் துயரம்.
குடும்பமே பொறியில் அகப்பட்ட எலியின் நிலை.

ஈவு இரக்கமற்ற வீட்டு சொந்தக்கார அம்மணி.
வீடு காலி செய்வது என்ன அவ்வளவு சுலபமான விஷயமா?

காலையில் குளிப்பதற்காக கூத்துப்பட்டறைக்கு போகவேண்டியிருந்தது.

ஸ்ரீ ஐயப்பா நகர் மெயின் ரோட்டில் கொய்யாப்பழம், சப்போட்டாப்பழம் ஒரு தள்ளு வண்டியில் வைத்து பழக்காரர் ஒருவர் கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்.
அரைக்கிலோ கொய்யாப்பழம், அரைக்கிலோ சப்போட்டாப்பழம் வாங்கினேன்.

ஐம்பது ரூபாயை கொடுத்தேன். முதல் போணி. தள்ளுவண்டிக்காரர் ரொம்ப பக்திமான். ஐம்பது ரூபாயை வானத்தில் உயர்த்தி ஒரு முறை சுற்றினார். மீண்டும் ஐம்பது ரூபாயை கண்களில் ஒற்றினார். பின் மீண்டும் வானத்தைப் பார்த்து உரக்க கூவினார்: “ முருகா! முதல் போணி.”
பழங்களை என் கையில் அவர் கொடுக்கும் போதும் “ முருகா!” என்றார்.

 இந்த வியாபாரியை குஷிப்படுத்த உடனே,உடனே முடிவு செய்தேன்.

பழங்களை கையில் வாங்கியவுடன் நான் கண்மூடி வானத்தைப்பார்த்து
“ ஆண்டாளே! பெருமாளே!” என்று கூவினேன்.
பின் பழங்களை கையில் வைத்து இன்னொரு கையையும் இணைத்து கும்பிட்டு நல்ல சத்தமாக ஒரு கூப்பாடு – “ ஆண்டாளே! பெருமாளே! இன்னைக்கு இவருக்கு அமோகமா வியாபாரம் நடக்கணும். ஆண்டாளே! ரங்கமன்னாரே!”

பக்கத்தில் நடந்து கொண்டிருந்தவர்கள் ஆண்கள்,பெண்கள், பள்ளிக்கூட குழந்தைகள் கூட நின்று எங்கள் வியாபார பரிமாற்றத்தை, கூட்டுப் பிரார்த்தனையை கவனித்தார்கள். அடுத்த தள்ளுவண்டி வியாபாரிகள் கூட.
“ இதுல இவ்வளவு விஷயமா இருக்கு! ”


............

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_23.html
 

Apr 14, 2017

சித்திரை வேப்பம்பூ பச்சடி


’சித்திரை ஒன்னாம் தேதி. தமிழ் வருஷப்பிறப்பு. வேப்பம்பூ பச்சடி செய்யனுமே. வேப்பம்பூ வேணும்’ மிக சிரமமான உடல் நிலையிலும் குஞ்சலி மாமிக்கு தவிப்பு.
ந.முத்துசாமியிடமும் மாமியிடமும் சொன்னேன். “நான் அதை கொண்டு வரப்பார்க்கிறேன்.”
வேப்பமரத்தை கண்டு பிடித்தாலும் கிளை எட்டும் நிலையில் இல்லை. சின்மயா நகர் பஸ் ஸ்டாப் அருகில் பிஸியான மெயின் ரோட்டில் மூன்று மரங்களை பார்க்க முடிந்தது. வேப்பம்பூக்கள் நிறைய தான். நிறைய கொத்து கொத்தாக உயரத்தில்.
ஒரு மரத்தில் கொஞ்சம் முயற்சி செய்தால் பறித்து விடலாம். அதை ஒட்டிய ஒரு கடையில் பிளாஸ்டிக் சேர் வெளியில் இருந்தது. அந்தக் கடைக்காரரிடம் “ ஒரு கொத்து வேப்பம்பூ சித்திரை வருஷப்பெறப்புக்கு தேவைப்படுகிறது. இந்த சேரில் ஏறிப்பறிக்க முடியும். தரமுடியுமா?”
கடைக்காரர் “ தாராளமா எடுத்துக்கங்க. ஆனா இதுல ஏறினாலும் பறிக்கமுடியாதுன்னு நினைக்கிறேன். உயரத்தில கிளை இருக்கு”
நான் சேரைப்போட்டு ஏறினேன். சேர் நிலையாக இல்லாமல் ஆடியது. கால்கள் நடுங்கியது.
Vertigo, High Anxiety பிரச்னை எனக்கு உண்டு.
நிச்சயமா சேர் சாய்ந்து விழுந்து விடுவேன் என்று தெரிந்தது. ரொம்ப உயரத்திற்கு போகவேண்டிய அவசியம் இல்லாமலே சாதாரணமாகவே ஒரு ஸ்டூல் மேல் ஏறினாலே எனக்கு 'வெர்டிகோ ஃபோபியா'  சர்வ நிச்சயம்.
வேப்பம் பூ கிளையை எட்டவே முடியவில்லை.


பக்கத்தில் ஒரு பையன் நின்று கொண்டிருந்தான். அவனை இந்த வேப்பம்பூ விஷயத்திற்கு உதவ வேண்டினேன். அவன் மெல்ல சேரில் ஏறி கிளையை எட்ட வசதியாய் இருந்த ஒரு இலைக்கொத்தை பறித்து விட்டான். விஷயம் இன்னும் சிக்கலாய் விட்டது. அந்த இலைக் கொத்தை இழுத்தால் வேப்பம்பூ உள்ள இலைக்கொத்து கைக்கெட்டும் என்ற நிலை இப்போது எட்டாமல் போய் விட்டது.
ஒரு உயரமான ஆட்டோக்காரர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் இந்த வேப்பம்பூ விஷயத்தில் உதவ இணையச்சொன்னேன். அவர் சேரில் தவித்து தக்காளி வித்துக்கொண்டிருந்த பையனிடம் “ அந்த இலைய இழுடா” என்றார். அவன் அதை இழுத்தவுடன் இவர் உடனே கிளை கீழே இறங்கும்படியாக தாவி இழுத்து வேப்பம்பூ உள்ள இலைக்கொத்தை காம்போடு பறித்து என்னிடம் கொடுத்து விட்டார்.
கடைக்காரர், ஆட்டோக்காரர், பையன் மூவருக்கும் நனி நன்றி நவின்றேன்.

கூத்துப்பட்டறை வந்தேன். வேப்பம்பூ கொண்டு வந்த என்னை பார்த்தவுடன் முத்துசாமி சார் முகமலர்ந்து உற்சாகமாக குரல் கொடுத்தார்.“ குஞ்சலி இங்க பாரு. ராஜநாயஹம் கொண்டு வந்துட்டார் பாரு!”
குஞ்சலி மாமிக்கு மிகுந்த ஆசுவாசம்.






……………………………………….

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html

https://www.facebook.com/rprajanayahem/posts/1482726581940803?pnref=story


Apr 13, 2017

Events


1989ல் தி.ஜானகிராமனுக்கு இரண்டாம் முறையாக நினைவு மதிப்பீட்டு மடல் நான் வெளியிட்ட போது புதுவை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் டாக்டர் கி.வேங்கட சுப்ரமணியன் உடனே ஜானகிராமன் கருத்தரங்கம் ஏற்பாடு செய்தார்.க.ப.அறவாணன் தமிழ் துறை தலைவர்.

 18.11.1989

அன்று என்னை மேடையேற்றி அறிமுகம் செய்தார்
அ. அறிவு நம்பி.
என்னுடைய “ தி.ஜானகிராமன் - ஓர் அறிமுகம்” கட்டுரையை வாசித்தேன்.

தொடர்ந்த விவாதத்தில் ‘ தனித்தமிழ் ‘ குறித்த என் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.
அ.அறிவு நம்பியுடன் எனக்கு குறிப்பிடும் அளவில் பரிச்சயமோ, தொடர்போ, தொடர்ந்த நட்போ கிடையாது.
கூத்து பற்றிய ஆய்வுகள் செய்தவர்.
புதுவை பல்கலைக் கழகத்தில் இருந்து ஓய்வு பெற இரண்டே மாதங்கள் இருந்த நிலையில் பேராசிரியர் அ.அறிவு நம்பி திடீரென்று மறைந்து விட்டார்.
Death is here, Death is there, Death is busy everywhere.
- Shelley






கி.ரா., இந்திரா பார்த்தசாரதியுடன்

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_3967.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_03.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_30.html

http://rprajanayahem.blogspot.in/2017/01/blog-post_19.html


..............................................

R.P.Rajanayahem as a guest in 'Trichy Rotary clubs' on 16th August,2016







.......................................................





With Ramco mace engineers and managers on 05.04.2017






..............................................



With Kara ( A Canadian Lady) in Koothuppattarai
on 11th April,2017.

Kara is an efficient trainer in Clownish activities.




.........................................................................

Koothuppattaai workshop
R.P.Rajanayahem, Celine with trainees
27.04.2017






Apr 12, 2017

NIT Trichy - Tamil mandram festival


With NIT students in Trichy.
National Institute of technology
Tamil mandram festival
01.04.2017

I was the Judge for the Koothu competition.









..........................................................

http://rprajanayahem.blogspot.in/…/a-guest-in-trichy-rotary…

Apr 11, 2017

Individual Choice


'என்னுடைய பிராமண நேசம் உறுதியானது '
ஆதவனின் ' அன்னை வடிவமடா ' சிறுகதை படித்து பாருங்கள்.
ஒரு இனமே கொடூரமானது என்று பாசிசம் பேசுகிற மனிதர்களுடன் நான் என்றும் உடன்படவே மாட்டேன்.
யூத இனத்தின் மீது ஹிட்லர் காட்டிய கொடிய வெறுப்பை தான் ' பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாப்பானை முதலில் அடி ' என்று திராவிட சித்தாந்திகள் முன் வைத்தீர்கள்.
தலித்களுக்கு அவமானம், புறக்கணிப்பு, கொடுமை எல்லாவற்றையும் கடந்த நூறு வருடங்களில் நிகழ்த்தி காட்டியது பிற்படுத்த வகுப்பை சார்ந்த ஜாதி இந்துக்கள் தான்.இந்த ஜாதி இந்துக்கள் தான் அனைத்து திராவிட கட்சிகளிலும் முக்கிய பங்கு வகித்தார்கள்.


பாரதி துவங்கி குபரா, பிச்சமூர்த்தி, மௌனி, க நா சு, சிட்டி, சி சு செல்லப்பா,
லா ச ரா, தி .ஜானகி ராமன், கரிச்சான் குஞ்சு,சுந்தர ராமசாமி, நகுலன்,
ந.முத்துசாமி, அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் போன்ற பிராமணர்கள் தான் எனக்கு புனிதர்கள் .
Great writers are the Saints for the godless!


ஒரு முறை திருச்சியில் 'ந .பிச்சமூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும் ' நூல் பற்றி கருத்தரங்கம். நான் தான் சுந்தர ராம சாமி எழுதிய இந்த புத்தகம் பற்றி பேசுவதாக ஏற்பாடு.

ஒரு பேராசிரியன் என் உரை ஆரம்பிக்கு முன்
' ந.பிச்சமூர்த்தி நாலாந்தரமான எழுத்தாளர். புதுமைப்பித்தன் தான் பெரிய எழுத்தாளர்.ந பிச்சமூர்த்திபற்றியெல்லாம் சுந்தர ராமசாமி ஒரு புத்தகம் எழுத வேண்டுமா ?' என்று ஊளை இட்டான்.

இந்த பேச்சில் உள்ள அராஜகம் வெளிப்படையானது. புதுமைப்பித்தன் எழுத்து எனக்கும் மிகவும் மரியாதைக்குரிய விஷயம். ஆனால் பிச்ச மூர்த்தி என்ற கலைஞனை காரணமே சொல்லாமல் நிர்த்தாட்சண்யமாக பண்டிதன் ஒருவன் பேட்டை ரௌடி போல தூக்கி வீசியதற்கு சரியான பதிலடி கொடுக்காவிட்டால் அவனுக்கு குளிர் விட்டு துளிர் விட்டு போகும்.


நான் ஆரம்பித்தேன் " வெங்கட் சாமிநாதன் சொல்வார் -' நான் மதிக்கும் ஒன்றிரெண்டு எழுத்தாளர்களில் ந பிச்ச மூர்த்தி முதலாமவர் . '
இந்த வாக்கியம் மிகவும் சிலாக்கியமானது. மீண்டும் அவரது வார்த்தைகளை அசை போடுங்கள்.

க நா சு எப்போதும் மணிக்கொடி எழுத்தாளர்களில் சிறுகதை சாதனையாளர்களாக புதுமைப்பித்தன்,மௌனி, கு .ப .ரா, ந .பிச்சமூர்த்தி நால்வரையும் குறிப்பிடுவார்.

 சுபமங்களா பேட்டியில் கேள்வி " உங்களை கவர்ந்த, பிரமிக்க வைத்த எழுத்தாளர் யார்?”
லா.ச .ராமாமிர்தம் பதில் " அந்த காலத்தில் ஒருத்தர் இருந்தார். ந. பிச்சமூர்த்தி. ரொம்ப விரும்பி படிச்சேன்.ஆரம்ப காலத்திலிருந்து இன்னும் அந்த பிரமிப்பு நீங்கவே இல்லை! "

நான் சொல்கிறேன் . 'கபோதி' ,' காவல் ' 'அடகு 'போன்ற பிச்ச மூர்த்தி யின் கதைகள் புதுமை பித்தனின் எந்த கதைக்கும் சவாலானவை. தனிப்பட்ட முறையில் எனக்கு ந பிச்ச மூர்த்தியின் மீது புதுமைபித்தனை விட அபிமானம்,மரியாதை உண்டு " என்றேன்.
சில நேரம் அசிங்கமான உளறல்களுக்கு இப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.


இப்படி நான் சொன்னவுடன் அந்த 'தமிழ் பேராசிறியவன்' கொந்தளித்து எழுந்து 'என்னை அவமானப்படுத்துவதற்காக இவர் திட்டம் போட்டு இந்த கூட்டத்திற்கு வந்திருக்கிறார். ' என மீண்டும் மீண்டும் சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்கு ன்னு ஆட ஆரம்பித்தான்.

நான் பேசியதில் பிச்சமூர்த்தியை தூக்கி பிடித்ததில் இவனுக்கு என்ன அவமானம். அது தான் பண்டித திமிர். முறையாக தரவுகளை வைக்க போகிறேன் என்பதை புரிந்து கொண்டவுடன் அவனுடைய பாண்டித்யத்துக்கு அவமானம்!

Individual Choice என்று ஒன்று எனக்கு இருக்கிறதல்லவா? அவன் நிர்த்தாட்சண்யமாக சுந்தர ராமசாமியை அவமானப்படுத்தி ந.பிச்சமூர்த்தியை தூக்கி ஒட்டு மொத்தமாக கடாசும்போது ஒரு கலைஞனை நான் தூக்கி பிடிக்க எனக்கு உரிமை இல்லையா? அதுவும் நான் வசமாக வெங்கட் சாமிநாதனை,
க நா சு , லாசரா ஆகியோரை துணைக்கு கூப்பிடவும் அவன் திகைத்து போய் அசிங்கமாக ஆட ஆரம்பித்தான்.

இவனுக்கு கரண்ட் ஷாக் கொடுக்க வேண்டாமா?அதனால்
"உட்கார்ரா சும்பக்கூதி .. " என்று நாலாந்தரமாக நான் இறங்கி ஒரு சத்தம் பலமாக கொடுத்தேன்.

சிலை மாதிரி அசையாமல் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டான்.இது தான் அவனுக்கு உண்மையான அவமானம் என உணர்ந்து அழாத குறையாக உறைந்து போய் உட்கார்ந்து விட்டான்.பூர்ண பௌர்ணமி திடீரென்று அமாவசையானது போல!

இலக்கிய கூட்டம் உடனே ..அந்த நிமிடத்தில் இனிது நிறைவடைந்தது!

................................

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_29.html

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/…/sasthi-brata-my-god-died…

http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post_2432.html



 

Apr 6, 2017

Hard hearts and troubling life


ஷேக்ஸ்பியரின் கிங்லியர் வசனம் “ Is there any cause in nature that makes these hard hearts.”

தி.ஜானகிராமன் கேட்பார் : ”இந்த மனிதர்கள் தங்களின் நெஞ்சின் ஈரத்தை எந்த கைக்குட்டையால் துடைத்துக்கொள்கிறார்கள். நரகத்தில் நெய்த கைக்குட்டையாலா?”

விபரீத முடிச்சுகளாகி கழுத்தை இறுக்கும் ரத்த உறவுகள்.

குடும்பம் ஒரு பாற்கடல். அமிர்தமும் அதிலே தான். ஆலகால விஷமும் அதிலே தான் என்பார் லா.ச.ரா.
ஒரு பழைய பட பாடல் ஒன்று. அனுபவக்கவிஞன் கண்ணதாசன்!
’நானும் குடிச்சிருக்கேன், குடிப்பாரைப் பார்த்திருக்கேன்.
நல்ல புத்தி வருவதில்லை குடியிலே, ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே.’

 சமூக அந்தஸ்துள்ள நல்லவராக அறியப்படுபவர்  கூட எப்படியெல்லாம் Hypocrite ஆக இருக்கிறார். A Fascist in Family.

பெரிய குடும்பங்கள் பலவற்றில் காணவும்,கேட்கவும் நேரும் பதற்றம் தரும் நிகழ்வுகள் நெஞ்சை ரணமாக்குகிறது.

Lamentation heard in the air. செல்பேசியில் வருகிறது காயப்பட்ட தோழனின் விம்மல்.

ஸோர்பா தி கிரீக் ரொம்ப விஷேசமான மூவி. ஸோர்பாவாக வரும் ஆண்டனி குயின் : life is trouble, Only death is not. To be alive is to undo your belt and look for trouble.
…………………..

http://rprajanayahem.blogspot.in/2016/10/zorba-greek.html


http://rprajanayahem.blogspot.in/2013/05/blog-post.html


https://www.facebook.com/rprajanayahem/posts/1482726581940803?pnref=story


.......................


 

ஒரே ரகம்


பி.ஜே.பிக்காரா எப்பவுமே தேசபக்திக்கு wholesale dealer நாம தான்னு ஒரு மெதப்புல இருக்கா.
மதத்தைப் போலவே தேசபக்தியும் பிஜேபிக்கு ஒரு Obsession. மூளையில் போய் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அதனால் தான் “ஏ பாவிகளே! விரியன் பாம்புக்குட்டிகளே! வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே” என்ற பெந்தகோஸ்த் அசூயையுடன் மற்றவர்களை “ Anti – Indian” ஆக பாவிக்க முடிகிறது. Bloody Indians!

Obsession is the single most wasteful human activity, because with an obsession you keep coming back and back and back to the same question and never get an answer.
- Norman Mailer

தி.ஜானகிராமன் “மறதிக்கு” கதையில் “யோக க்ஷேம் வஹாமயகம்” சம்ஸ்கிருத ஸ்லோகத்தை குறிப்பிட்டிருப்பார். ‘யோக க்ஷேமங்களை நானே சுமக்கிறேன்’ - அருளும் பரந்தாமன்
‘எடுப்பாரும் புடிப்பாரும் இருந்தா புள்ள எளச்சாப்ல தான் இருக்கும்.’
தாங்குவார் இருந்தா தளர்ச்சிக்கேடு ரொம்ப உண்டு.
இது தான் மதம் மனிதனை ஆக்கிரமிக்க ஊடுறுவும் போது நிகழும் சிக்கல். அதுவே அரசியலாகி விட்டால் கடினமான தடைகள்.

கி.வீரமணியும் ஹெச்.ராஜாவும் ஒரே ரகம் தான். ஒரே முகம்.
Both are cut from the same cloth. They are two peas from the same pod.
...............................