Share

Showing posts with label ராஜ்கபூர். Show all posts
Showing posts with label ராஜ்கபூர். Show all posts

Jul 27, 2014

ஆராதனா, பாபி, யாதோன் கி பாராத், ஷோலே

ராஜேஷ் கன்னாவின் மும்பை 'ஆசிர்வாத்' பங்களா விற்கப்பட்டு விட்ட செய்தி நேற்று பத்திரிக்கையில் பார்க்கக்கிடைத்தது. 90 கோடியாமே!

1970களின் முன்பகுதியில் ஒரு நான்கு இந்திப்படங்கள்  தமிழ் நாட்டில் சும்மா சக்கை போடு போட்டன. எவ்வளவு நாட்கள் என்ற புள்ளி விபரம் தேவையில்லை.


'
 


ஆராதனா, பாபி,யாதோன் கி பாராத்,ஷோலே என்ற அந்தப் படங்கள் தமிழ் நாட்டில் 'பேயாட்டம்' என்ற அளவில் ஓடியது.

ராஜேஷ் கன்னா, தர்மேந்திராவுக்கு தமிழ் நாட்டில்  இருந்த Craze சொல்லி முடியாது.

ஷாருக் கானை வைத்து மணிரத்னம் எடுத்து உயிரே, உயிரே என்றாலும் ஓடாத நிலை.

'ஆராதனா'  திருச்சி கெயிட்டி என்ற  ரொம்ப சின்ன பாடாவதி தியேட்டரில 'சும்மா லைக் பிச்சிக்கிட்டு போச்சி.' மதுரையில் மீனாட்சி தியேட்டர். வெற்றி விழா நிகழ்ச்சிக்கு ராஜேஷ் கன்னா  நேரில் வருகை தந்தார்.

ராஜ் கபூர் இயக்கிய படம் 'பாபி' அதே மீனாட்சி தியேட்டரில் தான்.

திருச்சியில் அருணா தியேட்டரில் 'பாபி' வெற்றி விழாவுக்கு ராஜ்கபூர் வந்தார் என்பார்கள்.

'ஆராதனா' கதாநாயகன் ராஜேஷ் கன்னாவும் 'பாபி' கதாநாயகி டிம்ப்ள் கபாடியாவும் காதல் திருமணம் செய்து கொண்ட போது தமிழ் நாட்டு சினிமா ரசிகர்கள் கொண்ட பரபரப்பு! படபடப்பு!

அந்த 'யாதோன் கி பாராத்' மதுரை பரமேஸ்வரி தியேட்டரில்!
 தர்மேந்திரா  சின்ன ரோல் தான். 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' ஜீனத் அமன், டாரிக், விஜய் அரோரா எல்லாம் கூட  மதுரை கரிமேடு, முரட்டம்பத்திரி,ஆரப்பாளையம், சல்லிகளுக்கு கூட நெருங்கிய சொந்தக்காரர்களாகிப்போனார்கள்.

தொடர்ந்து 'ஷோலே' -  அம்ஜத் கான், சஞ்சீவ் குமார், தர்மேந்திரா, ஹேமா மாலினி, அமிதாப் தமிழக ரசிகப்பெருமக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர் என சொல்லவும் வேண்டுமா?

அந்தக் கால கட்டங்களில் பொதுவாக இந்திப்பாடல்கள் பற்றி மிகுந்த ப்ரேமை அன்றைய 'யூத்' குலத்திடம் 'திடமாக' இருந்தது.
எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ் இசையை விட  பர்மன்( அப்பா எஸ்.டி.யும் மகன் ஆர்.டியும்) இசை, ரொம்பச் சிறப்பானதாக சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் தெரிய வந்தது! லக்ஷிமி காந்த் பியாரிலால் இரட்டையர்கள் 'பாபி' இசை!
கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் பாடல்கள்.
('பாபி' படத்தில்  பாடகர் ஷைலேந்தர் சிங் )

இந்தி படங்களில் 'வண்ணக்குளுமை' தமிழ் படங்களில் இல்லை என்ற அதிருப்தியும் இருந்தது.

ஹீரோ நடிகர்கள் இமேஜ் பார்க்காமல்  ஷோலே படங்களில் இணைந்து நடித்த விஷயம் தமிழ் ரசிகப்பெருமக்கள் கண்டறியாத விஷயம்.

எம்.ஜி.ஆர்,சிவாஜி பற்றிய ஆயாசம் அன்றைய காலேஜ் யூத்களிடம் நிச்சயமாக ஏற்பட்டுப்போனது. அதற்கு ராஜேஷ் கன்னாவின் ஸ்டைல் ரொமான்ஸ் மீது ஏற்பட்ட பிரமிப்பு தான் காரணம். தர்மேந்திராவின் அந்த அழகான சிரிப்பின் ஈர்ப்பு.
பொதுவாக இந்தி நடிகர்களின் ஸ்டைல் பற்றி தமிழக கல்லூரிப் பெண்கள் மத்தியிலும் மிகப்பெரிய கிளுகிளுப்பான கிளர்ச்சி.

தமிழ் சினிமாவில் ஒரு ஆறுதல் அந்த  1970களின் முன் பகுதியில் கே.பாலச்சந்தர் படங்கள் மட்டுமே.

'ஆராதனா' ராஜேஷ் கன்னா - ஷர்மீளா
 http://drop.ndtv.com/Movies/images/articles/big/aaradhana-rajeshk.jpg


'பாபி' ரிஷி கபூர்- டிம்ப்ள் கபாடியா
 


 'ஷோலே'தர்மேந்திரா- ஹேமா மாலினி , அமிதாப் - ஜெய பாதுரி

யூத், யூத், யூத்.

இங்கே தமிழ் புது முக கதா நாயகிகள் எம்.ஜி.ஆருடன், சிவாஜியுடன்,ஜெய் சங்கருடன், முத்துராமனுடன் தான் ஜோடி சேர்ந்தாக வேண்டிய தலை விதி!

பின்னால் இன்னொரு வேடிக்கை அப்போது.
ராஜேஷ் கன்னாவின் 'ஆராதனா' சிவாஜி நடிப்பில் சிவகாமியின் செல்வன்.


யாதோன் கி பாரத் எம்.ஜி.ஆரின் நாளை நமதே. தர்மேந்திரா, விஜய் அரோரா இருவர் ரோலையும் எம்.ஜி.ஆர் ஒருவரே செய்தார்.
 http://www.filmigeek.net/images/vlcsnap2126129.png


இந்த இரண்டு படத்தையும் தமிழ் ரசிகப்பெருமக்கள் ஏளனச்சிரிப்புடன்  தான்  'ப்ப்பூ..' என்றார்கள். ஆராதனா, யாதோன் கி பாரத் இரு படத்தையும் சலிக்காமல் ஐந்து தடவை, பத்து தடவைக்கு மேல்  பார்த்த தமிழனுக்கு சிவகாமியின் செல்வனும், நாளை நமதேவும் தமாஷ் படங்களாகத் தோன்றியதை புரிந்து கொள்ள முடியும்.

நல்ல வேளை! ஷோலே தமிழில் எடுக்கப்படவில்லை!
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால்

எம்.ஜி.ஆர் எடுத்திருந்தால் எம்.ஜி.ஆர் இரட்டை வேடம் செய்திருப்பார். தர்மேந்திரா, அமிதாப் இருவர் வேடத்தையும் நான் தான் செய்வேன் என்று பிடிவாதம் செய்திருப்பார். அப்புறம் சஞ்சீவ் குமார் ரோல் அசோகனுக்கு. அம்ஜத் கான் ரோல் நம்பியார் செய்து விளங்க வைத்திருப்பார்!

எம்.ஜி.ஆரே அந்த அமிதாப் ரோல் செய்ய நேரும்போது அந்த ரோல் சாக முடியாது. ரசிகன் ஒத்துக்கொள்ள மாட்டான். எனவே வில்லனை இரண்டு எம்.ஜி.ஆரும் சேர்ந்து கொன்று குவித்து ரசிகனின் விசில் வாங்கியிருப்பார்கள்!
சரி! சிவாஜி செய்திருந்தால் தர்மேந்திரா, சஞ்சீவ் குமார் இரண்டு பேர் கதாபாத்திரங்களையும் சிரமேற்கொண்டு  நிறைவேற்றியிருப்பார். அமிதாப் ரோல் முத்துராமனுக்கு. அம்ஜத் கான் ரோல் பாலாஜிக்கு! 





http://static.ibnlive.in.com/pix/slideshow/04-2013/the-really-biggggggg/sholay-april-17.jpghttp://trendingonindia.com/wp-content/uploads/2014/06/Chal-Dhanno-aaj-teri-Basanti-ki-izzat-ka-sawaal-hai.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcjF4HjBPeeyh19MACr7uwbAE81mqduWydTuDnZkEXv13-6nOWqopgLyNj3PsobkfI_4CGf0wGWfJoMrCM863G29GREgbsj8pOoxAzdoOPsCQjHPFPK-e2hsZdefokSuP62p3RDgDAwA/s1600/Sholay5.jpg

Mar 12, 2013

குண்டு குண்டு கபூர்கள்!



Barfi! ரன்பிர் கபூர் படம். அவனுடைய தாத்தா ராஜ்கபூர் படம் பார்த்த திருப்தி. 

கொள்ளுத் தாத்தா ப்ருத்வி ராஜ்கபூர் வம்ச பரம்பரை.
ராஜ் கபூர், ஷம்மி கபூர், சசி கபூர் மூவருமே வெகுவாக மாறுபட்ட தனித்தன்மை மிக்கவர்கள்.

ராஜ் கபூர் வெளிப்படுத்திய சாப்ளின் பாணி.

’ஓ மெஹ்பூபா! ஓ மெஹ்பூபா! ’

’ஜீ நாயகா மருநாயகா’


ஷம்மி கபூர் டான்ஸ். காஷ்மீரை Glamourize செய்த காதல் மன்னன். இன்றும் அந்த டான்ஸ் மிஞ்ச ஆள் இல்லை. What an arrogance! சமீபத்தில் ரன்பிரின்  அப்பா ரிஷி கபூர் கூட தன் சித்தப்பா ஷம்மியை யாராலும் ரீப்ளேஸ் செய்யவே முடியாது என்று சொல்லும்படி தான்.

Rishi Kapoor says " The Ultimate Romantic hero is a slot reserved for Shammi Kapoor! Just look at his style, the aura, everything about him was fantastic!"

’அந்தாஸ்’ படத்தில்  நின்று கொண்டிருக்கும் ஹேமா மாலினியின் பாதத்திலிருந்து தலை வரை ஆப்பிளை தன் வாயாலேயே உருட்டும் ஷம்மி கபூர்!..தில் வுசுஜோ சோஜா...

ரோமன் போலன்ஸ்கியின் china town படம் 1974ல் ஜாக் நிக்கல்சன் நடித்து வந்தது எல்லோருக்கும் தெரியும். முன்னமே அதே டைட்டிலில் ஷம்மி கபூர் நடித்துக்கூட 1962ல் ஒரு china town ஹிந்திப்படம் வந்தது! இரண்டுக்கும் கதையில் எந்த சம்பந்தமும் கிடையாது.

ஷம்மி கபூர் இறந்த போது ஹ்ரித்திக் ரோஷன்  Tribute: வழக்கமான RIP கிடையாது. Dance In Heaven!
For Shammi, I don’t want to say ‘Rest In Peace’ but rather ‘ Dance in Heaven!’

சசி கபூர் ரொம்ப ஒல்லியாக ’ப்யார் கா மௌசம்’ ’ஷர்மீலி’ படங்களில்!

’தும் பின் ஜவுன் கஹான்? தும் பின் ஜவுன் கஹான்? ’

’கில் தே ஹைன் குல் யஹான், கில் கேபி கர்னகோ’

‘கைஸெ கஹெ ஹம் ப்யார் நெ ஹம் கோ, க்யா க்யா கேல் திகாயே’




ரன்பிர் கபூரின் பெரியப்பா ரந்திர் கபூர். கரிஷ்மா, கரீனாவின் அப்பா.
கல் ஆஜ் அவுர் கல் படத்தில் தாத்தா ப்ருத்வி, அப்பா ராஜ், ரந்திர் மூவரும் நடித்திருக்கிறார்கள்.

’ஜவானி திவானி’ ஜெய பாதுரிக்கு ஜோடியாக ரந்திர் கபூர். என்ன பாடல்கள்! பின்னால்அபிஷேக் பச்சனுக்கும் கரிஷ்மா கபூருக்கும் ஊர் கூடி கல்யாணம்  நிச்சயமாகி கேன்சலாகிப்போகும் என்பதை அப்போது நினைத்திருக்க மாட்டார்கள்!

அந்தக் காலத்தில் ரந்திர் கபூரை Sexiest Male என்று ரேகா சொல்வார்!
எம்.ஜி.ஆர் ‘ரிக்‌ஷாக்காரன்’ இந்தியில் ரிக்‌ஷாவாலா.ரந்திர் கபூர் தான் அதில் கதாநாயகன். ’ஹாத் கி ஷஃபாய்’ வெற்றிப்படம்!ரந்திருக்கு சீக்கிரம் மார்க்கெட் போய்விட்டது.


ரிஷி கபூருக்கு ஸ்டெடி மார்க்கெட். நல்ல டான்ஸர். 
ஆனால் monotonous acting!

மேரா நாம் கபூரில் ஜூனியர் ராஜ்கபூர். பாபி ஹிட். கேல் கேல் மைன். ஹம் கிஸிசே கம் நஹின் வரை ரிஷி கபூர் ஜோர் தான். ஜாலி தான். ’கர்ஸ்’  தான் எனக்குள் ஒருவன் என்று தமிழில் கமல் நடித்தது!


ராஜ்கபூரின் மூன்றாவது மகன் ராஜீவ் கபூர் ஒரு ஃப்ளாப்.


ரன்பிர் கபூர் ’சாவரியா’ பார்த்த போதே நல்ல நடிகன் என்பது தெரிந்தது. தாஸ்தாவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் கதையைத் தழுவியது.
பர்ஃபி யில் ரன்பிர் நடிப்பு உன்னதம்.  இலியானா ஒரு கவிதை!
‘பூனை மூக்கி’ பிரியங்கா சோப்ரா பிய்த்து உதறியது மகா ஆச்சரியம்! 


கபூர் குடும்ப நடிகர்கள் எல்லோருமே ஒரு விஷயத்தில் மாறுதலில்லாதவர்கள்.
கதாநாயகன் மார்க்கெட் போனவுடனே,உடனே,உடனே  குண்டாகி ஊதிப்பெருத்து விடுவார்கள். ராஜ்கபூர், ஷம்மி கபூர், சசி கபூர் மூவருமே அளவுக்கு மேல் பெருத்து மூச்சி விடவே சிரமப்பட்டார்கள். ரந்திர் கபூரும் மார்க்கெட் போனவுடன் மஹா குண்டன். இப்போது ரிஷி கபூர்!

…………………….

http://rprajanayahem.blogspot.in/2009/08/o-mehbooba-o-mehbooba.html

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_22.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_06.html

 http://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post_28.html


Aug 25, 2009

O Mehbooba, O Mehbooba


ராஜ்கபூரின் இந்தி படம் 'சங்கம்' .இந்த படத்தில் அந்த காலத்திய மற்ற எல்லா இந்தி படங்கள் போல எல்லா பாடல்களும் ஹிட் தான். ஷங்கர் - ஜெய்கிஷன் இசை.
ஹிந்திப்பட ரசிகர்கள் ஒவ்வொருவரும் இதில் ஒவ்வொரு பாடலை பிடித்த பாடலாக சொல்வார்கள்.

எனக்கு பிடித்த பாடல்
“ O Mehbooba , O Mehbooba
Tere Dil Ke Paas Hi Hai Meri Manzil-e-mashood
Voh Kaunsi Mehfil Hai Jahan Tu Nahin Maujood “



இந்த ஒரு பாடலுக்கு " சங்கம் " படத்தில் வரும் பிற பாடல்கள் உறை போட காணாது.
https://www.youtube.com/watch?v=FHOugjKQ_KU

பாடல் முகேஷ் பாடியது. இந்த பாடலை காதால் மட்டும் கேட்பது போதாது. அவசியம் கண் கொண்டு அந்த பாடல் காட்சியோடு தான் பார்த்து ரசிக்க வேண்டும். ராஜ் கபூர் அட்டகாசம் ரொம்ப உச்சம். என்ன ஒரு
Lively Enthusiasm , spirit, activeness!

ராஜேந்திர குமாருடன் படகில் ஏறிவிடும் வைஜயந்தி மாலாவை கொஞ்சமும் மனசை விடாமல் மற்றொரு படகில் ஏறி துரத்தி, கவர்ந்து பாடும் ராஜ் கபூர். அந்த பனி மூட்டமும் அழகான ஏரியும் .. காண இரு கண் போதவே போதாது.

பெண்ணாக இருப்பதென்பது ஒரு "பிழை" யல்ல என்றாலும் கூட குறைந்த பட்சமாக அவள் ஒரு "அசாதாரண விசித்திரம். "
To be a woman, If not a defect, is at least a peculiarity.
மேற்கண்ட வார்த்தைகள் பெண்ணிய வாதியும் சார்த்தரின் இனிய தோழியுமான சிமோன் தி புவோ (Simone de Beauvoir) சொன்னதாகும்.

தான் கவர்ந்து செல்லப்படவேண்டிய விஷேச பரிசு என்றே தன்னை பற்றி பெண் நினைப்பவள். இதனை உணர்த்தக்கூடிய வைஜயந்தி மாலாவின் உணர்வும், பாவமும் இந்த பாடலை மிகவும் உன்னத நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. நான் இந்த பாடல் காட்சியை மட்டும் நூற்றுக்கணக்கான தடவை பார்த்திருக்கிறேன். சலிக்கவில்லை .
பாடல் காட்சிகளில் ஷம்மி கபூரின் Arrogance பற்றி ஹிந்திப்பட ரசிகர்கள் அறிவர். உண்மையில் அவர் அண்ணன் ராஜ் கபூர் இந்த ஒரு பாடல் காட்சியில் மட்டும் தம்பி ஷம்மியை மிஞ்சி விடுகிறார்.
பாடலை பாடும் முகேஷ் கூட தன்னுடைய எல்லையை மீறித்தான் கிஷோர் குமார் பாடுவதை போல படு குஷியோடு
Tere Dil Ke Paas Hi Hai Meri Manzil-e-maqsoodஎன பாடியுள்ளார். முகேஷ் மிகவும் அமைதியாக பாடுபவராகத்தான் பெரும்பாலும் யார் மனதிலும் தோற்றம் தருவார். ராஜ் கபூர் என்றாலே முகேஷ் நினைவில் வந்து விடுவார். அந்த அளவுக்கு ஒரு அபூர்வ காம்பினேசன்.

“ Kis Baat Pe Naaraaz Ho, Kis Baat Ka Hai ham
Kis Soch Mein Doobi Ho Tum, Ho Jaayega Sangam
O Mehbooba, O Mehbooba “

எனக்கு இந்தி தெரியாது. இந்தி பாடல்களுக்கு பெரும்பாலும் அர்த்தம் கூட தெரியாது தான். அதனால் என்ன?!

சமீபத்தில் எனக்கு ஒரு அனுபவம். தமிழில் கூட ஒரு பாடல் வரி நான் நினைத்ததற்கு மாறாக வேறு வார்த்தைகள் இருந்ததை அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன்.

'ஹல்லோ மிஸ்டர் ஜமின்தார் ' படத்தில் பி பி எஸ் பாடிய " காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு " என் Favourite. அதே படத்தில் மற்றொரு அருமையான பாடல் " இளமை கொலுவிருக்கும் ,இயற்கை மணமிருக்கும், இனிய சுவையிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலே " என்ற பாடல். இதில் ஒரு சரணத்தில் வரும் வரிகளை " இன்று தேடி வரும், நாளை ஓடி விடும், செல்வம் சேர்ந்தபடி அமைந்திடுமா ? எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா ?" என நான் சிறுவனாய் இருந்த காலத்தில் இருந்தே பாடி வந்துள்ளேன். ஆனால் சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்னார்:
" செல்வம் சேர்ந்த படி அமைந்திடுமா " என்று கவிஞர் எழுதவில்லை
  " செல்வம் சிரித்தபடி அமுதிடுமா ?" என்று தான் எழுதினார் !"

செல்வம் சிரித்தபடி அமுதிடுமா?