Share

Jul 10, 2026

வேடிக்க-66. R.P.ராஜநாயஹம் கண்கள் உடல் தானம்

வேடிக்க - 66

தானம் 
R.P. ராஜநாயஹம் கண்களையும் உடலையும்  தானம் செய்வதாக முடிவு. 

கோவை மெடிக்கல் காலேஜுக்கு மாலை போன் செய்த போது ' இது கம்யூனிகேசன் டிபார்ட்மெண்ட். நீங்க நாளை காலை இந்த நம்பருக்கு பேசுங்க. இப்ப அவுங்க போயிருப்பாங்க."

மறு நாள் காலை அந்த நம்பருக்கு போன் போட்டு விபரம் சொன்ன போது" மேனேஜர் இல்ல. வந்ததும் சொல்றேன். நான் புதுசு. என் பேரு யுவராஜ். " 
மேனேஜர் வந்ததும் மறந்துடாம இந்த நம்பருக்கு பேச சொல்லுங்க'

போனே வரவில்லை. 
மீண்டும் நீண்ட நேரத்திற்கு பின் பேசிய போது மேனேஜர் தேவி இருந்தார். " பையன் புதுசு. விஷயம் சொன்னான்" 

"இருக்கட்டும். கண் தானம், உடல் தானம் செய்ய வேண்டும்."

Broadway Mall க்கு பக்கத்தில இருக்கிற
 KMC யில இருக்கிற ராமமூர்த்தியிடம் பேச வேண்டுமாம். 

ரெண்டு நாளா முடியல.

இன்று காலை போன் போட்ட போது 
"இப்ப எங்க கிட்ட பாடி நெறய்ய இருக்கு. நீங்க ஹோப்ஸ் காலேஜ் அவினாசி ரோட்ல 
Govt Medical college ல Anatomy Department க்கு ஆதார் கார்டு எடுத்துட்டு போங்க. "

"போன் நம்பர் குடுங்க"

"திங்க கிழம தர்றேன். நான் இப்ப லீவுல மதுரயில இருக்கேன்."

This cycle of life really stinks.

Govt Medical College க்கு போன் போட்டு, 
 சித்ரா என்பவர் குருநாதனுடைய நம்பர் கொடுத்தார்.

இதுக்கு எதுக்கு திங்கட்கிழம மதுரையிலிருந்து வந்து தர்றேன்னு சொல்றீங்க சார்.

குருநாதனுக்கு மூன்று முறை போன் போட்ட பிறகு அவரே இரவு எட்டு மணிக்கு பேசினார். 

ஆதார் கார்டு எடுத்துக் கொண்டு வாரிசுதாரருடன் இங்க வரவேண்டும். 
கண்கள் தானம் இங்கே பண்ண முடியாது. பெரிய ஆஸ்பத்திரிக்கு நீங்க போகணும். இல்ல அரவிந்த் ஆஸ்பத்திரி போய் பாருங்க. விட்னஸ் ரெண்டு பேரோட வரணும்.

"அப்ப அலைய விடுறீங்க"

"தொண்ணூறு வயசுல வர்றாங்க. உங்களால முடியாதா?நீங்க ஏங்க இப்படி அலைய விடுறோம்ங்கிறீங்க. 
உடல் தானம்னா முழுசா ஒடம்ப குடுத்துடணும்."

" கண் தானம் பண்ணக்கூடாதா"

"உடல் தானம்னாலே முழு உடலையும் தான் குடுக்கணும்" 

" என்ன சொல்றீங்க?"

"கண் தானம் நீங்க பாத்துக்குங்க. உடம்பு தானம் பண்ண வாரிசுதாரரோட மெடிக்கல் காலேஜ் வாங்க"

"வர்றோம். விட்னஸ் நீங்க பாத்துக்குங்க"

" நாங்க யாராவது விட்னஸ் கையெழுத்து போட்டுக்கறோம். திங்க கிழம பதினொரு மணியில இருந்து ரெண்டு மணி வரை இருப்பேன்"

"முகத்தில அடிக்கிற மாதிரி 'தொண்ணூறு வயசு ஆளெல்லாம் வர்றாங்க. நீங்க வரமுடியாதா' ன்னு பேசலாமா" என்று கேட்ட போது 
குரு நாதன் "நான் சொல்ல வந்தது என்னன்னா'" ன்னு நெறய்ய பேச ஆரம்பித்தார். போனை கட் பண்ணுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

The way to Noble Cause is invariably paved  with difficulties

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.