Share

Showing posts with label ராஜேஷ் கன்னா. Show all posts
Showing posts with label ராஜேஷ் கன்னா. Show all posts

Oct 22, 2017

சோழா ஷெரட்டான் சலூன்


சோழா ஷெரட்டான் ஹோட்டல் பகுதியெல்லாம் அப்போது இவ்வளவு பிசியாக இருக்காது. இன்று சோழாவின் சுற்றுப்புறம் பார்க்கக்கிடைக்கும் போதே மூச்சு திணறுகிறது. மெட்ராஸ் முகமே சென்னையாக மாறி விட்டதே.
முடிவெட்டுவதற்கு எப்போதும் மாதாமாதம் சோழா தான் போவது என்று ஒரு காலம் எனக்கு இருந்திருக்கிறது.

சோழாவில் நுழைவதற்கு முன் பார்த்த காட்சி இன்னும் மறக்கவில்லை. காம்பவுண்டின் முனையில் ரிக்ஷா ஒன்று. ரிக்ஷாக்காரர் கையில் முரசொலி. கருணாநிதியின் கார் கோபாலபுரத்திலிருந்து திரும்புகிறது. நான் கருணாநிதியின் காரைப் பார்க்கிறேன். கருணாநிதி அமர்ந்திருக்க மு.க.தமிழ் காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். ரிக்ஷாக்காரர் கருணாநிதி காரில் வருவதை கவனித்து விடுகிறார். நானும் அந்தக்காட்சியை கவனிப்பதை பார்த்து விட்டு என்னிடம் சொல்கிறார் : ’தலைவர் போறாரு.’
கொஞ்சம் நிறுத்தி பின் என்னிடம் ரகசியம் ஒன்றை உரக்கச் சொல்வது போல ஒரு கையை உயர்த்தி சொல்கிறார் “ வருவாரு”
பின் மீண்டும் சிலேடையை உடைத்து “ கோட்டைக்கு வருவாரு.”
மீண்டும் கருணாநிதி ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை. இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர் முதல்வராக ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம் அது.

இன்று முதுமை நோய் மூடியுள்ள நிலையில் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் செல்வது ‘செய்தி’யாகிறது. அன்றும் கூட 
அவர் முரசொலி அலுவலகத்துக்கு தான் சென்று கொண்டிருந்திருப்பார்.



சோழாவில் சலூன் பார்பர் சொல்வார் : 'இப்ப தான் வைஜயந்திமாலா அவர் பையனுக்கு முடி வெட்ட வந்திருந்தார்.'
சோழாவில் அந்த பில் முதலில் நீட்டுவார். மெனு போல நிறைய அழகு சம்பந்தமாக வரிசை கட்டி ஏதேதோ இருக்கும். நான் ஹேர்கட் மட்டும் டிக் செய்வேன். ஷேவிங், ஃபேஷியல் என்று டிக் செய்தால் அவ்வளவு தான். பில் எகிறி விடும்.
ஹேர் கட் செய்யும்போதே பார்பர் நிறைய பேசுவார்.
ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன், மாதத்தில் பத்து நாட்களாவது சென்னை ஷூட்டிங். சோழாவில் தான் தங்குவார்கள்.
ராஜேஷ் கன்னா ஷூட்டிங் இல்லாத நேரத்தில் பெரும்பாலும் பாரில் குடித்துக்கொண்டிருப்பார்.
Introvert. யாரிடமும் பேசக்கூட மாட்டார்.
யாருக்கும் டிப்ஸ் தரமாட்டார். முடி வெட்டிக்கொண்ட போதும் டிப்ஸ் தந்ததேயில்லை.
அமிதாப் எல்லோருக்கும் அப்போதே நூறு ரூபாய் டிப்ஸ் தருவார். ரொம்ப கலகலப்பாக இருப்பார். அவர் குளித்தவுடன் ஹேர் செட்டிங்க்காக அறைக்கு அழைப்பார். அதற்கே கூட பார்பருக்கு நூறு ரூபாய் தருவார்.
எனக்கு முடிவெட்டியதும் பார்பருக்கு நான் ஐந்து ரூபாய் டிப்ஸ் கொடுப்பேன். ராஜேஷ் கன்னா அளவுக்கு என்னை அவர் நினைக்கத் தேவையில்லை.

Nov 4, 2014

ராஜேஷ் கன்னா



அந்த  Havell’s fans - 
"Fans for ever" விளம்பரம்  
நினைவிருக்கிறதா!
ராஜேஷ்  கன்னா ! விசிறிகள் ! Poetic  comparison! பின்னனியில் 'Ye shaam mastaanee' பாடல் ஹம்மிங் !
"My fans will always remain with me."
The only commercial Rajesh Khanna appeared!

ராஜேஷ் கன்னாவின் விசிறிகளுக்கு  அவர்   Demigod! அப்படி ஒரு  Craze !

எனக்கு அந்தக்கால 'ஆங்க்ரி யங் மேன்' அமிதாப்பை அவ்வளவாகப் பிடிக்காது. ராஜேஷ் கன்னாவை மிகவும் பிடிக்கும்.சிறந்த நடிகர்!  Individual choice!

     
 ராஜேஷ்கன்னாவுக்கான  கிஷோர் குமார் பாடல்கள் !


“Roop Tera Mastana  Pyar Mera diwana “

“Kora Kaagaz Tha  Yeh Mann Mera “

“zindegi ek safar “

“Yeh shaam Mastaanee “

“Ye Kyaa huaa,Kaise huaa ,Kab huaa Kyo huaa”

ஆராதனா,கட்டி பதங், சச்சா ஜூட்டா, துஷ்மன், ஆன் மிலா சாஜ்னா, அமர் பிரேம்.....
ராஜேஷின்   கதாநாயகிகள்.
ஷர்மிளா தாகூர், மும்தாஜ், ஆஷா பரேக்.

ரகசிய கல்யாணம் ஒன்று இந்தியாவை கலக்கியது - ராஜேஷ் கன்னா
தன் நீண்ட நாள் காதலி அஞ்சு மஹேந்துருவை கை விட்டு,
டிம்ப்ள் கபாடியாவை திடீரென்று திருமணம் செய்தது தான்.

'ராஜேஷ் கன்னாவுக்கு  தான் ஜவஹர்லால் நேருன்னு
நினைப்பு '-ஹேமா மாலினியின் ரொம்பப் பழைய கமென்ட் !
....

விஜயா வாகினியில் "பந்திஷ் " பட ஷூட்டிங்.
Bandish

ராஜேஷ் கன்னா- ஹேமா மாலினி நடித்துக்கொண்டிருந்தார்கள். இருவரையுமே அந்த ஷூட்டிங்கில் தான் நான் பார்த்தேன்.ராமா நாயுடு படம்.

ஹேமாமாலினியிடம் ஷாட்டில் வசனம் பேசியதை தவிர
 ப்ரேக்கில் ராஜேஷ் கன்னா ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை!

...................................................

ராஜேஷ் கன்னா அந்திம காலத்தில் டிம்பிள் இல்லாமல் தான் வாழ்ந்தார். அனிதா அத்வானி என்ற பெண்ணுடன் சேர்ந்திருந்தார்.
 

உடல் நலம் குன்றியிருந்தபோது அவர் சொந்தக்குரலில் பதிவு செய்த "good bye, so long, farewell, adieu" விஷயம் படிக்கக் கிடைத்தபோது நெஞ்சை நெகிழ்த்தியது: " கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டு, அந்த நினைவுகளில் வாழும் பழக்கம் எனக்குக் கிடையாது. எப்போதும் எதிர்காலத்தையே பார்க்கவேண்டும். கடந்து போன சம்பவங்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில் எந்தப் பயனுமே இல்லை. ஆனால் அந்நியமான சூழலில் நமக்கு நன்கு தெரிந்த முகங்களைப் பார்க்கின்ற போது நமக்கு அந்தக் கால நினைவுகள் வரத்தான் செய்கின்றன. என் கலையுலக வாழ்வு  நாடகத்தில் ஆரம்பித்தது. அங்கிருந்து தான் திரையுலகுக்கு வந்தேன். எனக்கு குரு என்று யாருமே இருந்ததில்லை. தயாரிப்பாளர்கள் நடத்திய
ஒரு திறமைப் போட்டி மூலம் தான் நான் திரைத்துறைக்கு வந்தேன்......"


கன்னா இறந்த பின் டிம்ப்ள் குடும்பத்தினர் தன் மீது வன்முறையைப் பிரயோகம் செய்ததாகவும்,அவரை வீட்டை விட்டே துரத்தி விட்டதாகவும்  அனிதா அத்வானி ஒரு வழக்கு தொடுத்தார்....

ராஜேஷ் கன்னாவின் அந்த மும்பை 'ஆசிர்வாத்' பங்களா விற்கப்பட்டு விட்ட செய்தி சமீபத்தில் பத்திரிக்கையில் பார்க்கக்கிடைத்தது.
90 கோடியாமே!

....................................................................