Share

Mar 31, 2017

Ashokamitran's letter to R.P.Rajanayahem - A rejoinder to 'Outlook' polemics


Ashokamitran's letter to R.P.Rajanayahem
A rejoinder to 'Outlook' Polemics in 2005

NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE !
- ASHOKAMITRAN


ASHOKAMITRAN (J. THIYAGARAJAN)
FLAT -7, 1A, 9TH CROSS AVENUE,
DANDEESWARAM, VELACHERY,
CHENNAI-600 042.
Date: 31.05.2005


DEAR R.P.RAJANAYAHEM,

Your kind letter.


I am extremely pained at the reactions of some friends to my ‘article’ in the Delhi Magazine.

I am a computer illiterate and I have no way of knowing what appeared in the internet magazine. But both pieces are the result of a ten-minute telephone conversation with the correspondent. Nothing was put on paper, neither the questions nor the answers. In the printed article, there are quite a few terms I do not use at all. Also the tone is not mine.

Since the questions were focussed on Tamil Brahmins, naturally the answers related to them. My concerns have always been about the not-so-brilliant, not-so-successful people of all sections of people. Not just Brahmins.

In India, with a lot of construction work going on, it is a good period for tradesmen, plumbers, carpenters, electricians, masons, etc. But how much of what they earn goes to the well-being of their families, the education of their children? This applies to brahmins also, especially cooks. Much of their hard-earned money goes for gambling and having a merry time.

All that appears in a periodical, Tamil or English, need not be cent percent authentic and true, especially when not a word is written by the interviewee.

It is very difficult to convey the tone of the answers. As a general rule, no magazine publishes an originally written article unless the editor determines the theme. The correspondents execute the theme by interviews. In my case, it was a telephone interview and so prone to distortion and errors. And I had no control over what finally appeared in print.

This makes it all the more important for a reader to exercise her or his own judgement, not merely go by what is published.

Yours Sincerely,

ASHOKAMITRAN 

...............................................................................

http://rprajanayahem.blogspot.in/…/my-concern-is-always-wit…

http://rprajanayahem.blogspot.in/2008/06/lofty-scenes.html

http://rprajanayahem.blogspot.in/…/out-look-9-is-not-11.html

https://www.facebook.com/rprajanayahem/posts/1482726581940803?pnref=story
 

Mar 28, 2017

பொல்லாச் சிறகை விரித்து


கதையல்ல 1

சினிமாவில ஹீரோ ஆக ஆசைப்பட்டு, ஹீரோ ஆக மட்டும் ஆசைப்பட்டுக்கொண்டு, கோடம்பாக்கம் மேல கண்ணு வச்சு அலையும் அரைவேக்காடு ஒருவனின்
படு சீரியஸான அங்கலாய்ப்பு
“ரஜினியே எல்லா ஸ்டைலையும் பண்ணிட்டாரு. இனிமே நான் என்ன ஸ்டைல் பண்ணறதுன்னு தெரியலயே..”
...............................
கதையல்ல 2

சென்ற வருடம் திடீரென்று வதந்தி ஒன்று ரொம்ப வேகமா பரவுச்சு.
”ரஜினி செத்துட்டாராம் மச்சான்.” என்று ஹீரோ ஆக ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கும் ஒரு நடிகன் பதற்றத்துடன் சொன்னான்.
சினிமா ஹீரோ ஆக ஆசைப்பட்டுக்கொண்டு, ஆசைப்பட்டுக்கொண்டு மட்டுமே இருக்கும் மற்றொரு கத்துக்குட்டி உற்சாகமாக சொன்னான் “ ஏன் மச்சான் கவலைப்படுற. ஒரு காம்பட்டிசன் கொறஞ்சுதுன்னு சந்தோஷப்படணும்டா.”

.................................................

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_6760.html

https://www.facebook.com/rprajanayahem/posts/1942446982635425?pnref=story

http://rprajanayahem.blogspot.in/2017/03/walking-shadow.html


Mar 27, 2017

அசோகமித்திரன் நினைவில் ராஜநாயஹம்


1988ம் வருடம்  ரொம்ப அழகான வித்தியாசமான இன்லெண்ட் லெட்டர்களில் என் பெயர் விலாசம் அச்சிட்டு அவற்றில் தான் கடிதங்கள் எழுதுவேன்.
அசோகமித்திரன் அது குறித்துகேட்டு எழுதியிருந்தார் - ” நீங்கள் பயன்படுத்துவது போன்ற லெட்டர்ஹெட் எங்கு கிடைக்கின்றது?”
நான் உடனே கோவை ராஜவீதியில் ஒரு கடையில் அந்த இன்லண்ட் லெட்டர்கள் வாங்கி உடனே அசோகமித்திரனுக்கு அனுப்பி வைத்தேன். அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.


1990ல் எனக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட்டிலுருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. இந்த கடிதத்தின் சாரம் - “ ஒரு மூன்று ஆங்கில புத்தகங்கள். எங்கள் சந்தாதாரர் அசோகமித்திரன் அவர்களிடம் ரீடர்ஸ் டைஜஸ்ட் ஒரு கேள்வி கேட்டிருந்தோம்.’ இந்த புத்தகங்கள் வாசிக்கத் தகுதியான உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவரை நீங்கள் எங்களுக்கு சுட்டிக்காட்டுங்கள்.’
அவர் ‘R.P. ராஜநாயஹம்’ என்று உங்களை அடையாளமிட்டிருக்கிறார்”
...

ராஜநாயஹத்துக்கு எழுதிய கடிதமொன்றில் அசோகமித்திரன் :
”நீங்கள் என்னை மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.”


அசோகமித்திரன் பிறந்த வருடம் 1931. என் அப்பாவும் அதே வருடம் பிறந்தவர்.

................................................

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_17.html


http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2012/12/taste-differs.html

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_25.html

Mar 26, 2017

தி.ஜா மரணமும் அசோகமித்திரன் தகவல் பிழையும்


வரலாறு நிகழ்வுகளை சரியாக பதிகிறதா ?
சமீபத்திய மரணங்கள் பற்றியே கூட உண்மையை அறிவதில் குழப்பங்கள் நேர்கிறது .எனும்போது பல நூற்றாண்டு சம்பவங்களின் நம்பகத்தன்மை என்ன ?
தளையசிங்கம் மரணம் பற்றி ஜெயமோகன் பெரிய பொய்யை சொல்லி அதனை கேள்விக்கு நான் உள்ளாக்கி,
சுந்தர ராமசாமி களமிறங்கி,
மு.பொன்னம்பலம் சு.ரா எழுதிய தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் கட்டுரையில் தளைய சிங்கம் மரணம் பற்றி தகவல் பிழை எதுவும் இல்லை என்று ஜெமோவின் முகத்திரை கிழித்தார்.
அப்புறமும் கூட நாஞ்சநாட்டான் ஒர்த்தன் 'அய்யோயோ நான் உண்மையின் பக்கம் நின்னு வெள்ளவேட்டியிலே புல்லழுக்கு, புடுக்குலே சொறி சொரங்காயிடுச்சி' ன்னு புலம்புனான்.
சாரு நிவேதிதா வின் Mummy returns – part 3 யில் ஜெயமோகன் எனக்கு தளையசிங்கம் மரணம் பற்றி எழுதிய கடிதத்தை வெளியிட்டு முழுசா அம்மண குண்டியா நிக்கும்படி பண்ணியாச்சு.

ப்ருனோ லத்தூர் அறிவியல் உண்மைகளை விஞ்ஞான விஷயங்களையே கேள்விக்குள்ளாக்கி விட்டார். இதை விட பெரிய சாதனை என்ன இருக்கிறது!
1973 ல் நடந்த தளையசிங்கம் மரணம் பற்றி இவ்வளவு போராட வேண்டி வந்துச்சு.

1982 ல் நடந்த தி .ஜானகிராமனின் மரணம் பற்றி ஒரு விஷயத்தை நான் பேசி விடுகிறேன்.
'ஜானகிராமனை மருத்துவமனையில் ஒரு நர்ஸ் அவமானப்படுத்தி விட்டார் . சில மணி நேரத்தில் அவர் மரணம் நிகழ்ந்தது. இது ஜானகிராமனுக்கு மட்டுமல்ல சாதாரணமாக யாருக்குமே நடந்திருக்க கூடாது ' என்கிற அர்த்தத்தில் அப்போது கணையாழியில் அசோகமித்திரன் எழுதியிருந்தார்.
வாசகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி! ஜீரணிக்க மிகவும் கஷ்டமாய் இருந்தது . ஜானகிராமனுக்கு மரணமடையும்போது இப்படி ஒரு அவமானமா ?
இந்த ஜானகிராமன் பற்றிய செய்தி அசோகமித்திரனின் கட்டுரைகளில் உள்ளது.

1988 ல் சிட்டியிடம் நான் இந்த விஷயம் பற்றி பிரஸ்தாபித்த போது ' இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை ' என உறுதியாக மறுத்தார். வேதனை பட்டார் . அப்படி எந்த அவமானமும் ஜானகிரமானுக்கு நடக்கவில்லை.
எனக்கு ஆச்சரியாமாக இருந்தது .

1989 ல் மார்ச் மாதம் நான் சென்னை சென்றிருந்த போது
ஜானகிராமனை கடைசி நேரத்தில் ஆஸ்பத்திரியில் கவனித்து கொண்டிருந்த மணிக்கொடி சிட்டியின் மகன்களில் ஒருவரான சங்கரை சந்திக்க விரும்பினேன்.
இவர் தான் ஜானகிராமன் இறந்த நேரத்தில் அவர் அருகில் இருந்தவர். தூர்தர்சனில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் .
சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரம் தான் என்னை சங்கர் வீட்டுக்கு அழைத்து சென்றார்.
சங்கரிடம் கேட்டேன். ஜானகிராமனுக்கு இறப்பதற்கு முன் அவமானம் ஏதும் யாராலும் நடக்கவில்லை என்பதை சங்கர் உறுதிபட சொன்னார்.

இதில் அசோகமித்திரனுக்கு யாரோ தவறான தகவல் கொடுத்து அவர் கொஞ்சம் அவசரப்பட்டு கணையாழியில் அப்படி எழுதியிருக்கிறார் என்றே அனுமானிக்க வேண்டியிருக்கிறது .

அசோகமித்திரனிடம் அவரை புதுவையில் சந்தித்த போதும்
பின் என் முயற்சி காரணமாக அவர் ஸ்ரீவில்லி புத்தூர் வந்து பென்னிங்க்டன் நூலகம் நடத்திய விழாவில் (எழுத்தாளர் அறிமுகம் ) அசோகமித்திரனை அறிமுகப்படுத்தி நான் பேசிய பின் மறு நாள் அவரை வழியனுப்பும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திலும் அவரிடம் சொல்லிவிட்டேன்.

2008ல் என் ப்ளாக்கில் இதை எழுதியிருக்கிறேன்.
........................................................

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/3.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-34.html

Mar 24, 2017

சொற்களால் கண்ணீர் சிந்தி அழவேண்டுமா?

சரம ஸ்லோகம்.

சொற்களால் கண்ணீர் சிந்தி அழவேண்டுமா?

R.P.ராஜநாயஹம் யார்?அசோகமித்திரனின் சீடன்.


அசோகமித்திரன் : ”நாம் ஒன்றுமே இல்லை என்பது தான் பெரிய உண்மை.என்னுடைய சாம்பலைக்கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள் என்று தான் என் குடும்பத்தாருக்கே சொல்லி இருக்கிறேன்.”
.....................................................

R.P.ராஜ நாயஹம் பற்றி அசோகமித்திரன் : ”நீங்கள் என்னை மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.”

..........................................

Mar 23, 2017

Ken Loach’s ‘I Daniel Blake’


கேன்ஸ் விருது வாங்கிய மிக வயதான இயக்குனர் கென் லோச். சென்ற வருடம் அக்டோபர் மாதம் இந்தப்படம் ரிலீஸ் ஆனது.
Ken loach is running Eighty right now.
தள்ளாமை இவரது திரை இயக்க வேலைகளில் தலையிடமுடியவே இல்லை.

பிரிட்டிஷ் படம். System என்பது நடைமுறைப்படுத்தப்படுவதில் இதயமற்ற சட்டங்கள் ஏழைகளை மிக மோசமாக நடத்துவதை காட்சிப் படுத்துகிறார் கென் லோச். Utter relevance of the emotional power and political punch.
Director Ken Loach's biggest success!

ஏழையாய் இருப்பதில் வறுமையைக்காட்டிலும் எதிர்கொள்ளும் அவமானங்கள் தான் சோகம். தச்சு வேலை செய்யும் 59 வயது இதய நோயாளி டேனியல்.

டேவ் ஜான்ஸ் என்ற ஒரு நடிகர் முதியவர் டேனியலாக வாழ்ந்திருக்கிறார். நடிகை ஹேலி ஸ்கொயர் இரண்டு குழந்தைகளின் Single Mother. கேட்டி.

Good people, honest people on the street.
வறுமை வாழ் நாளில் விடாது ஒருவனை விரட்டுகிறது என்றாலே அவன் நேர்மையாளன் தான்.

Employment and Support allowance வேண்டி போராடும் டேனியலை ‘அமைப்பு’ அலைக்கழிக்கிறது. அப்பீல் செய்கிறார். யதார்த்தம் என்ன?
It could be weeks before his appeal comes through. He might not win.
டேனியலுக்கு dyslexia எனப்படும் Reading disorder இருக்கிறது. Computer illiteracyயும் கூட.


இவ்வளவு துயரத்திலும் கேட்டிக்கும் அவளுடைய இரண்டு குழந்தைகளுக்கும் அன்பு, கனிவு, பரிவு, தேறுதல் இவற்றை பொழிகின்ற டேனியல்.


பொருள்கள் வாங்கும் திராணியும், வசதியுமற்ற ஏழைகளுக்கான Food Bank. அந்த காட்சியில் அங்கு வேலை செய்யும் பெண்ணே வருகிறார். கேட்டிக்கு உணவுப்பொருள்களை கொடுத்துதவும் காட்சியில் வரும் அந்தப் பெண்ணுக்கு இது திரைப்படத்தில் வரும் காட்சி என்பது தெரியாமல் இருந்திருக்கிறது! ஷூட்டிங் என்பது தெரியாது.இயல்பாய் தன் வேலையைப் பார்ப்பதாகத் தான் நினைத்திருந்திருக்கிறார்!

கேட்டியின் மகள், மகன்- இரண்டு குழந்தைகள் நடிப்பும் நயம்.
மகளுக்கு புதிய ஷூ வாங்குவதற்காக கேட்டி sex worker ஆகும்
துர்பாக்கியம். இதை அறிந்து உடைந்து போகும் டேனியல்.

"I, Daniel Blake, demand my appeal date before I starve" - கட்டிட சுவரில் எழுதியவுடன் பாதசாரிகள் வாழ்த்து சொல்லி உற்சாகப்படுத்துகிறார்கள்.

 டேனியலை போலவே பாதிக்கப்பட்ட இன்னொரு மனிதர் அவரை கையைப் பிடித்து உயர்த்தி பாராட்டுகிற காட்சி கவித்துவமானது.

மேலைய நாடுகளில் சாவது கூட ரொம்ப காஸ்ட்லியான விஷயம்.
மனிதன் தன் மரணத்திற்குப் பின்னான செலவுகளுக்கு ரொம்ப மெனக்கிட வேண்டும்.
ஏழைகளுக்கு Pauper’s funeral சலுகை இங்கிலாந்தில் உண்டு. டேனியலுக்கு இந்த Pauper’s funeral தான். ஆனாலும் படம் பார்ப்பவர்களின் விம்மல் காதில் விழுகிறது.

கடைசி காட்சியில் டேனியலின் மரண இரங்கலில் கேட்டி கண்ணீர் வடிய தேம்புகிறாள். “ He gave us things that money cannot buy.”
என்ன ஒரு கெட்டியான, திடமான வரிகள்!
ஆனால் “Through money, We get thousands!” என்பது தானே இன்றைய லோகாயுத லௌகீகம்!
......................................................................................

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_19.html

http://rprajanayahem.blogspot.in/…/a-man-called-ove-2015-mo…

Mar 22, 2017

ரெட்ட எல



இரட்டை இலை! வசியம். ஊற்று.
அரசியல் பிழைப்போரின் மூலதனம்.
பாமர, கிராமத்து ஜனங்களின் கானல் நீர்.

ரெட்டை இலை இல்லாவிட்டால் அவ்வளவு தான். பெரும் வீழ்ச்சி என்று நகத்தை கடித்துக்கொண்டு இரண்டு அணிகளும்.

குழப்பத்தில் உள்ள பாமர ஜனங்கள், ஊசலாடும் கட்சித் தொண்டர்கள், கட்சியிலேயே பல மேல் மூடிகள், கட்சி முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள், கட்சி பேச்சாளர்கள் பலர் மதில் மேல் பூனைகள்.
இந்த மதில் மேல் பூனைகளின் கலங்கரை விளக்கம் ரெட்டை இலை.

ராமர் இருக்குமிடம் அயோத்தி - ரெட்டை இலை இருக்குமிடம் அதிமுக.
A horse, a horse! My kingdom for a horse!
- Shakespeare in 'Richard the third'
ரெட்டை இலை எங்கே கிடைக்கப்போகிறதோ அது தான் அதிமுக என்று நிம்மதிப் பெருமூச்சு விட தயாராய்........

"தமிழக அரசியல் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டுமானால் நிரந்தரமாக ரெட்டை இலை முடக்கம் தான் தீர்வு."

தாற்காலிகமாகவேனும் ரெட்டை இலை முடக்கப் பட வேண்டும். 

இன்னொன்று At any cost உறுதியாக சசிகலா கும்பலுக்கு ரெட்டை இலை கிடைக்காமல் போகவேண்டும்.
..........................................................................

http://rprajanayahem.blogspot.in/2017/01/cakewalk.html

http://rprajanayahem.blogspot.in/…/confusions-masterpiece.h…

http://rprajanayahem.blogspot.in/2017/02/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/2017/02/1972-10.html

http://rprajanayahem.blogspot.in/2017/02/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2017/03/miscellany.html

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_18.html

Mar 21, 2017

தைரிய லட்சுமி


சினிமாவில் ஜெயிக்க தீராவேட்கை நடிக்க, இயக்க முனைபவர்கள் எல்லோரையும் ஆட்டுவிக்கும். காலம் ரயில் மாதிரி. யாருக்காகவும் காத்திருக்காது. திடீரென்று பத்து வருடம் காணாமல் போயிருக்கும். வயிற்றில் புளி கரைத்தாற் போல திகில். பைத்தியம் பிடித்தாற் போல என்ன, பைத்தியமே உச்சந்தலையில் பிடித்து விடும்.


புட்டன்னா கனகல். கன்னட திரையில் இயக்குனராக பெரிய அளவில் சாதித்தவர். முதல் சினிமாஸ்கோப் படம் கன்னடத்தில் இவருடையது.

 தமிழில் இருளும் ஒளியும், சுடரும் சூறாவளியும் படங்களின் இயக்குனர். பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குனராய் இருந்தவர்.

வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் கூட உதவி இயக்குனராக பி.ஆர்.பந்துலுவிடம் வேலை பார்த்தவர் புட்டன்னா.
கன்னடப்படங்களில் உதவி இயக்குனராக இருந்த புட்டன்னா வருடங்கள் காணாமல் போன நிலையில், அதாவது சினிமாவில் குப்பை கொட்டிய நிலையில் எதிர்காலம் பற்றிய பயம் அதிகமாகி மன நிலை பலவீனமாகி தவித்திருக்கிறார்.
நடிகர் கல்யாண்குமார் வீட்டிற்கு போய் வாய் விட்டு கண்ணீர் விட்டு குமுறி அழுதிருக்கிறார்.

கல்யாண்குமார் பிரபல கன்னட நடிகர். தமிழ் ரசிகர்களுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, மணி ஓசை படங்கள் மூலம் மறக்க முடியாத ஒரு நடிகராக இவரைத் தெரியும்.

கல்யாண் குமார் தேற்றியிருக்கிறார். புட்டன்னா சமாதானமாகவில்லை. “வாழ்க்கையே பாழாயிடுச்சி சார். சினிமாவை நம்பி வீணாப் போயிட்டேன்” – கன்னடத்தில் புலம்பியிருக்கிறார்.

கல்யாண்குமார் வீட்டுக்குள் போய் அடுப்பில் இருந்த சாம்பலை கையில் எடுத்து வந்து புட்டன்னாவின் நெற்றி நிறைய பூசி விட்டு( கன்னடத்தில் தான்) சொல்லியிருக்கிறார்.
“தைரியமா போடா. நீ நிச்சயமா ஜெயிப்ப. கவலப்படாத. பெரிய டைரக்டரா வருவ.”
………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_4870.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_05.html

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_16.html



Mar 19, 2017

நலன் குமாரசாமி




சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய பிரமாதமான இரண்டு படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி எனக்கு பிடித்த இயக்குனர். மிக தற்செயலான இந்த சந்திப்பில் ஒரு அரை மணி நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
God Does not play at Dice - Albert Einstein
பிரசாத் ஸ்டுடியோவில் பைக் ஸ்டாண்டில். நிஜமாகவே ஒரு ஆச்சரியம் தான்.
A down to earth person.
முன்னதாக அவருடன் 'I Daniel Blake' படம் முதல் வரிசையில் ஒரு சீட் இடைவெளியில் உட்கார்ந்து பார்க்கும் போது கூட நான் பேசவில்லை.
அவரை சுற்றி பிரசாத் ஃபில்ம் அகாடெமி மாணவர்கள், ஆசிரியர்கள்.
படம் முடிந்தவுடன் இயல்பாய் அவரைப் பார்த்து ஒரு புன்னகையை சிந்தினேன். உடன் அங்கிருந்து கிளம்பி வெளியேறி பைக் ஸ்டாண்ட் வந்து என் ஸ்கூட்டரை எடுத்து ஸ்டார்ட் செய்து விட்டேன். அப்போது நலன் எதிரே. 

ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சந்தித்தேன். நீரோடை போல ஒரு உரையாடல்.
”சென்னைக்கு வந்து ஒன்றைரை வருடமாகிறது. உங்களுக்கு ஏன் என்னை வந்து பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை?” என்று நலன் குமாரசாமி வாத்சல்யத்துடன் கேட்ட போது நெகிழ்ந்து போனேன்.

’இன்று நேற்று நாளை’ ரவி குமார் ’சூது கவ்வும்’ படத்தில் உதவி இயக்குனர்.

என் மொபைல் ரொம்ப சாதாரணமானது என்பதால் நான் செல்ஃபி எடுத்ததேயில்லையில்லை!
நலன் தான் இந்த செல்ஃபியை அவருடைய மொபைலில் எடுத்தார்!

Everything that we call ‘Chance’ today won’t make sense anymore. We are in a world made by rules created by an ‘Intelligence’ and not by ‘Chance’.
– Michio Kaku


Mar 18, 2017

Couch Potato



ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ’ரெட்டை இலை’ வேண்டி வெள்ளை குதிரை காலை தொட்டு வணங்கிய ஓபிஎஸ்!
அதிமுக மூன்றாய் சிதறியது நன்றே. கழுதை விட்டையில முன் விட்டை வேறு, பின் விட்டை வேறா?

ஜெ. தீபா புருஷன் பேட்ரிக் மாதவன பாத்தப்ப ’வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாட்டுல மைக் பிடிக்கிறவன் மாதிரியே தான் இருந்திச்சு. திடீர்னு மைக்க திருப்பி தன் வாயில வச்சிக்கிட்டு இவனே பாட ஆரம்பிச்சுட்டானே!

எப்படா தீபாவோட டிரைவர் ராஜா புதுக்கட்சி ஆரம்பிப்பான்?


டேய்! டி.விக்காரங்களா! Breaking News போட்டுக்கிட்டே இருங்கடா! இப்படி ஒரு Addiction வந்திடுச்சே! பட படன்னு என்னன்னோ வருதே.. விரல்லாம் நடுங்குதே.....Breaking News புதுசா புதுசா வேணுண்டா..ஐயோ potato couch...ஐயோ Couch Potato  ஆக்கிட்டீங்களேடா மக்கள...

.......................................

Mar 15, 2017

சேல்ஸ்மேன்



 அஸ்கார் ஃபர்காதி இயக்கிய ஈரானிய படம் ‘சேல்ஸ்மேன்.’

ஈரானிய படங்களின் தரம் உலகளவில் உயர்த்திப்பிடிக்கப்படுகிறது. ஆஸ்கார் விருது கிடைத்த விஷயம் பெரிய ஆச்சரியமல்ல. கேன்ஸ் விருது எதற்கெல்லாம் இந்தப்படத்திற்கு கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.
கணவனும் மனைவியும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்ஸ். அதோடு கதாநாயகன் ஒரு நல்ல பள்ளியாசிரியரும் கூட.
அவர்கள் நடிக்கிற ஆர்தர் மில்லர் நாடகமும்( Death of a salesman) சேல்மேன் படத்தின் கதையும் இசைந்து இயல்பாய் நடக்கிறது.

ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் அரண்மனைக்கு வரும் நடிகர்களை டென்மார்க்கின் அந்த நேர அரசியலை உள்ளடக்கிய கதையால் இயங்கச் செய்வது நினைவுக்கு வருகிறது.

சேல்ஸ்மேன் நாயகன் ஷஹாப் ஹொசைனியும் நாயகி தாரானெ அலிதூஸ்ட்டியும் படம் துவங்கும் போதே வீடு மாற்றும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். இடிந்து விழும் குடியிருப்பிலிருந்து அவசர, அவசரமாய் தப்பிக்கிறார்கள்.

புதிதாய் ஒரு அப்பார்ட்மெண்டில் இவர்கள் குடியேறும் ஃப்ளாட்டின் முந்தைய டெனண்ட் படத்தில் காட்டப்படுவதில்லை. அந்தப் பெண் ஒரு செக்ஸ் ஒர்க்கராய் இருந்திருக்கிறாள்.

வீட்டை மாற்றுவது என்பதே எப்போதும் மிகுந்த மன உளைச்சல் தந்து விடுகிறது.
வீடு மாற்றும் நிர்ப்பந்தமும் புதிய வீட்டின் சூழலும் தான் எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

முன்னதாக குடியிருந்த அந்தப்பெண் அந்த வீட்டில் ஒரு அறையில் தன் பொருட்களை வைத்து விட்டுத் தான் வெளியேறியிருக்கிறாள். அவள் எப்போது அந்தப் பொருட்களை காலி செய்யப்போகிறாள்?அவளுக்கு இன்னும் வீடு கிடைக்கவில்லை. ஒரு வசனத்தில் இந்த சோகம் கோடிட்டு காட்டப்படுகிறது. அந்தப் பரிதாபத்திற்குரிய பெண் எங்கு தங்கியிருப்பாள்?இந்த முந்தைய டெனண்ட் ஒரு காட்சியிலும் காட்டப்படவேயில்லை!

இந்த நிலையில் பழைய செக்ஸ் வொர்க்கர் இன்னும் அங்கே தான் வசித்துக்கொண்டிருக்கிறாள் என்று நினைக்கும் அவளுடைய கஸ்டமர் – இவர் ஒரு வயதான மனிதர்- இந்த வீட்டில் நுழைந்து கதாநாயகியை பார்க்க நேரிடும் ரசாபாசம் என்ன மாதிரியான பயங்கரக் கனவாக அந்தப் பெண்ணுக்கு இருந்திருக்கும். விபரீத விளைவு. இருவருக்கும் காயங்கள். பதறியடித்துக்கொண்டு தப்பித்துத் தான் அந்தப் பெரியவர் வெளியேறியிருக்கவே முடியும். படத்தின் இந்த முக்கிய நிகழ்வும் கூட காட்சிப்படுத்தப்படவில்லை.




இந்த துயர நிகழ்வு அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி மேடை நாடகத்தில் நடிக்கும் போது கூட அவள் நிலை குலைந்து போகிறாள்.
கணவன் போலீஸில் கம்ப்ளைண்ட் செய்யாமல் குற்றவாளி விட்டுச்செல்லும் வேன், போன் இவற்றை வைத்து யார் என்று கண்டு பிடிக்க முயற்சி செய்கிறான்.

பொறியில் சிக்கும் பெரியவர் தான் Intruder என்பதை கண்டு பிடித்து ஹீரோ அவமானப்படுத்துகிறான். அவருடைய குடும்பத்தை வர வைக்கிறார். முப்பத்தைந்து வருடங்கள் அவருடன் வாழ்ந்த நோயாளியான முதிய மனைவிக்கு இவருடைய இழிவை வெளிச்சம் போட்டு காட்ட நினைக்கிறான். பாதிக்கப்பட்ட ஹீரோயின் இப்படி பழி வாங்க நினைக்கும் கணவனை கண்டிக்கிறாள்.

அந்த முதியவரோ தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார். மன்றாடுகிறார்.

“ பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே, செய்த பாவம் தீரும் முன்னே இறக்க வைக்காதே.”
- ’என்ன தான் முடிவு’ படத்தில் டி.எஸ்.பாலையா இப்படி தேம்புவார்.
..............................................

Mar 13, 2017

ஓவியர் P.கிருஷ்ணமூர்த்தி


 ஓவியர் P.கிருஷ்ணமூர்த்தி கலை இயக்குனராக ஜி.வி.அய்யரின் ஆதி சங்கராச்சாரியா, மத்வாச்சாரியா போன்ற படங்களில் பணியாற்றியவர்.

 பி.வி.காரந்த், பன்ஸி கௌல் நாடகங்களிலும் செட் ப்ராப்பர்ட்டி, ஸ்டேஜ் டிசைன் விஷயங்களை கவனித்தவர். பதினைந்து மலையாளப்படங்களின் கலை இயக்குனர். கேரள அரசின் விருது வடக்கன் வீர கதா உள்ளிட்ட படங்களுக்கு பெற்றிருக்கிறார்.

பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், பாரதிராஜாவின் நாடோடித்தென்றல், சுகாசினி இயக்கிய இந்திரா போன்ற படங்களுக்கும் கிருஷ்ண மூர்த்தி தான் கலை இயக்குனர்.

ந.முத்துசாமி நாடகங்களிலும் கூத்துப்பட்டறையின் ஆரம்ப கால செயல்பாடுகளில் கலை இயக்குனராக பணியாற்றியவர். ’காலம் காலமாக’, ’நாற்காலிக்காரர்’, ’உந்திச்சுழி’ நாடகங்கள்.

சமீபத்தில் மறு பிரசுரமான ’உந்திச்சுழி’ நாடகத்தை ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு – ’சுந்தர ராமசாமியின் கதா பாத்திரம் ஜே.ஜே’ - ந.முத்துசாமி சமர்ப்பனம் செய்திருக்கிறார்.
1980ல் இந்த நாடகம் எக்மோர் மியூசியம் தியேட்டரில் நடந்திருக்கிறது. க்ரியா ராமகிருஷ்ணனின் துணைவி விஜயலக்ஷ்மி நடித்தார்.
இந்த நாடகத்தில் முக்கியமான செட் ப்ராப்பர்ட்டி முட்டை! ஒரு பெரிய முட்டை.
ஆர்ட் டைரக்டர் கிருஷ்ண மூர்த்தி மிகுந்த பொறுப்போடு இந்த பெரிய முட்டையை கொசப்பேட்டையிலிருந்து எக்மோர் மியூசியம் தியேட்டருக்கு நடந்தே உருட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.
இன்று இதை நினைத்துப் பார்க்கும்போது மலைப்பாய் இருக்கிறது.
கள்ளமின்மையே! உன் பெயர் தான் P.கிருஷ்ணமூர்த்தி!
மியூசியத்திற்குள் முட்டையுடன் நுழைந்த பிறகு தியேட்டருக்குள் அதை கொண்டு வர எப்படியெல்லாம் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது என்பதை லலித் கலா அகாடமியில் இந்த மார்ச் மாத ஆறாம் தேதி மாலை ஞாபகமாக விவரித்தார்.

 ...............

 P.கிருஷ்ணமூர்த்தியின் ஓவியங்கள்












................................................................................



http://rprajanayahem.blogspot.in/2017/03/walking-shadow.html

http://rprajanayahem.blogspot.in/2016/02/blog-post_26.html

 http://rprajanayahem.blogspot.in/…/painting-silent-poetry.h…

http://rprajanayahem.blogspot.in/…/amrita-sher-gils-self-po…
...........................................................

Mar 12, 2017

அன்ன லட்சுமி


பிரியாணிக்கு பெயர் போன கடையின் அதிபர். தமிழகத்தின் முக்கிய பெரு நகரமொன்றில் இந்த பிரியாணி கடை ரொம்ப ஃபேமஸ்.

இவர் கடை சாத்தி விட்டு வீட்டுக்கு வந்த பின் வாசலில் ஒரு ஈசி சேரில் உட்கார்ந்து கொள்வார். கடையில் அன்று மிஞ்சிய மட்டன் பிரியாணியை பொட்டலங்களாக கொண்டு வந்திருப்பார். பொட்டலங்களை பிரித்து அந்த தெருவில் உள்ள நாய்களுக்கு பிரியாணியை வீசுவார். அவரை சுற்றி வாலைக்குலைத்து வரும் நாய்கள் நின்று அந்த பிரியாணியை ரசித்து, குளைத்து, சாப்பிடுவதை அந்த நள்ளிரவில் விழித்திருப்பவர்கள் காண முடியும்.

வாழ்ந்து அனுபவித்த மனிதர். பேரன் பேத்தியெல்லாம் பார்த்து விட்டவர்.

ஒரு நாள் வீட்டில் இவருக்கு நல்ல பசி. தன் அறையிலிருந்தவாறே மனைவியை அழைத்திருக்கிறார். உடனே சாப்பிட கொண்டு வரும்படி சொல்லியிருக்கிறார். அவருடைய வயிற்றுப்பசி தர்ம பத்தினிக்கு அவ்வளவு முக்கியமாக படவில்லை. ”இருமய்யா… அவசரப்பட்டால் எப்படி?” என்கிற மாதிரி விட்டேத்தியாக அலட்சியமாக பதில் வந்திருக்கிறது.

இவர் பொறுத்துப் பார்த்திருக்கிறார். சாப்பிட எதுவும் வரவில்லை. கடும் பசியில் கோபமும், அவமானமும் தலைக்கேறி விட்டது. ஆத்திரத்தை அடக்க முடியாமல் ஸ்டூலில் ஏறி விட்டத்தில் கயிறைப் போட்டு இறுக்கி, மெதுவாக கழுத்தில் மாட்டிப்பார்த்திருக்கிறார். அறையின் கதவைக் கூடத் திறந்து தான் வைத்திருந்தாராம்.

பயமுறுத்துவது தான் திட்டமாயிருந்திருக்கும். அதற்குள் பதார்த்தங்களுடன் மனைவி வந்து விட மாட்டாளா?
எப்படியாவது யாராவது பார்த்து விட்டால் போதும். நடக்கவில்லை.

மெதுவாக கழுத்தில் மாட்டிய நிலையில் சில நிமிடங்கள் பொறுத்தும் பசிக்கு எந்த விமோசனமும், நிவாரணமும் இல்லை.

ஸ்டூலை சத்தம் வரும்படி உதைத்து தள்ளியிருக்கிறார். அந்த சத்தமே வீடு பூரா கேட்கும்படியானது தான். யாராவது ஓடிவந்து பார்த்திருக்கும்படியான தீர்மானமான கவன ஈர்ப்பு. யாரும் வரவில்லையே.
தூக்கில் தொங்கி பிராணனை விட்டு விட்டார்.

When you are destined to be hanged, you will never be drowned.

……………………….

Mar 11, 2017

Walking shadow




ஒரு சினிமா நடிகன் சொன்னான் : ’என்னைப்பாத்தா சிவாஜி கணேசன் மாதிரியே இருக்கிறேன்னு எல்லாரும் சொல்றாங்க. சிவாஜி மகனான்னு கேட்டவங்க உண்டு. நேத்து வாஹினி ஸ்டுடியோவில கூட ஷூட்டிங்ல ஒரு நடிகை என் கிட்ட ”நீங்க அச்சு அசல் சிவாஜி சார் மாதிரியே இருக்கீங்களே”ன்னு மூக்குல விரல் வச்சிட்டாங்க!’

இன்னொரு சினிமா நடிகன் சொன்னான் : ’என்னையும் அப்படித்தான் எவ்வளவோ பேர் சொல்றாங்க.
சிவாஜி மகன் மாதிரியே நான் இருக்கிறேன்னு நேத்து கூட சஃபையர் தியேட்டர்ல ’மரோ சரித்திரா’ படம் பாக்க நான் போயிருந்தப்ப ஒருத்தர் ஆச்சரியப்பட்டாரு!’

நான் சொன்னேன் : ’என்னப்பாத்தா என்னோட அப்பா மாதிரியே இருக்கேன்னு எல்லோருமே சொல்றாங்க!’
Chip off the old block. I'm definitely a chip off the old block.
.....................................................

மௌனியின் பிரபலமான வரிகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” பற்றி நிறைய பேசி எழுதுகிறீர்கள். ’இது கவிதையா? உரை நடையா? கவிதையும் தான் உரை நடையும் தான்’ என்றெல்லாம் தவித்து தக்காளி விற்கிறீர்கள்.சரி.
அந்த வரிகள் ஷேக்ஸ்பியரின் மேக்பத் சொல்கிற “Life is but a walking shadow" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.

இதை கருத்தில் கொள்ள ஷேக்ஸ்பியரை தெரியாவிட்டாலும் இது ஷேக்ஸ்பியர் சொன்னது என்பதாவது தெரிந்திருக்க வேண்டும். அதன் பிறகு ’எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ பற்றிய புல்லரிப்பு, செடியரிப்பு, மரம் அரிப்பு எல்லாம் வரட்டும்.
..................................

எதனை நினைத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை?
1.தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் தேறாத தேமுதிகவை பிரமித்து அதன் பின் வால் பிடித்து சேவகம் செய்ய நின்றதை!

2.இன்றும் தமிழகத்தில் செல்வாக்கில்லாத பி.ஜே.பியை தங்கள் கூட்டணி மூலம் கடந்த காலங்களில் பட்டி தொட்டியெங்கும் அ.தி.மு.க, தி.மு.க கொண்டு சேர்த்தை!

ஒன்னாம் நம்பர் காமெடியன்?
சசிகலாவை ஆதரிக்காவிட்டால் தமிழ் நாட்டில் பி.ஜே.பி வளர்ந்து விடும் என்று சொல்லும் கி.வீரமணி தான் Fool, Clown.

........................................




28 பிப்ரவரி தொடங்கி 6 மார்ச் வரை லலித் கலா அகாடமியில் அல்ஃபோன்ஸோ, P.கிருஷ்ணமூர்த்தி இருவரின் ஓவிய கண்காட்சி நடந்தது.
மகத்தான் இரு கலைஞர்கள்.
முதல் நாளும், கடைசி நாளும் ந.முத்துசாமி, மு. நடேஷ் இருவருடன் போய் இருந்தேன். மறக்க முடியாத நிகழ்வுகள். எம்.டி.முத்துகுமார சுவாமியை சந்திக்கிற வாய்ப்பு லலித் கலா அகாடமியில் கிடைத்தது.

                                              அல்ஃபோன்ஸோ ஓவியம்




                                               P.கிருஷ்ண மூர்த்தி ஓவியம்
                                             
.............................................................................................................................


Mar 3, 2017

Miscellany




வேஷங்கள்!

Poor Actors strut and fret thier hour upon the stage! Tales full of sound and fury and signifying nothing!
Courtesy : Shakespeare's Macbeth






……………………………………………………….


இப்ப யாராவது மூக்குப்பொடி போடுறாங்களா?’ - .முத்துசாமி கேட்டார்.


யோசித்துப் பார்த்துஅப்படி யாரும் மூக்குப்பொடி போட்டு பார்த்ததில்லை சார், கண்ணில் தட்டுப்பட்டதில்லைஎன்றேன்.

வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பார்க்கில் வாக்கிங் போன போது பார்க் வாட்ச்மேன் - திருவாடானை சுப்பையா - செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தவர் மூக்குப்பொடி டப்பாவிலிருந்து பொடி எடுத்து உறிஞ்சுவதை பார்த்தேன்.
மடை திறந்த வெள்ளமாக உற்சாகமாக நிறைய பேசினார்.

நேருவை ப்பாத்திருக்கேன். ரோஜாப்பூ கலர்ல இருட்டில பளிச்னு தெரிஞ்சார். நேருவோட ட்ரஸ் சூப்பர்! காமராஜப் பாத்திருக்கேன். அண்ணாத்துரைய பாத்திருக்கேன்.”

அண்ணா மேடையில் பேசும்போது மற்றவர்கள் கவனித்து விடாமல் எப்படி பொடி ரகசியமாக போடுவார் என்று நடித்துக் காண்பித்தார்!
ஆள் காட்டி விரலில் ஓரத்தில் பொடி! பேசிக்கொண்டிருக்கும் போதே மூக்கில் வைத்து ஒரு இழுப்பு இழுத்து விடுவார்- செய் முறை விளக்கம்!

தமிழ் மண்ணில் திராவிட இயக்க அரசியல் தாக்கம் பற்றிய ரத்தினச் சுருக்க Sarcasm ஆக மு. நடேஷ் சொன்ன வார்த்தைகள் மீண்டும் நினைவிற்கு வந்தது.

தமிழனின் தலையெழுத்துக்கு அண்ணாத்துரையின் மூக்குப்பொடி தான் மூலம்!”



Theodore Baskaran's comment in facebook :இன்றும் விற்கப்படுகின்றது. உலகிலேயே பிரபலமான மூக்குப்பொடி அயர்லந்தில் கிடைக்கின்றது. Mc.Chrystals Snuff. சின்னஞ்சிறிய அலுமினிய டப்பாக்களில்கிடைக்கின்றது.

………………………………………………………………..............................

தண்ணி கஷ்டம் சொல்லி முடியல. புழக்கத்திற்கே நீரில்லை. வெள்ளத்தில் அனுபவித்த துயரம் ஏன் நினைவிற்கு வருகிறதோ!

……………………………………


ஜாப் அப்ளிகேஷனில்
எம்.. எம்.ஃபில் படித்த பெண் ஒருத்தி
 SEX - என்பதற்கு பதில் நன்கு யோசித்து விட்டு
எழுதினாள் - Once in a Blue Moon.


Once in a blue moon means " Not very Often" "Very rarely"

...........................................................