Share

Mar 12, 2017

அன்ன லட்சுமி


பிரியாணிக்கு பெயர் போன கடையின் அதிபர். தமிழகத்தின் முக்கிய பெரு நகரமொன்றில் இந்த பிரியாணி கடை ரொம்ப ஃபேமஸ்.

இவர் கடை சாத்தி விட்டு வீட்டுக்கு வந்த பின் வாசலில் ஒரு ஈசி சேரில் உட்கார்ந்து கொள்வார். கடையில் அன்று மிஞ்சிய மட்டன் பிரியாணியை பொட்டலங்களாக கொண்டு வந்திருப்பார். பொட்டலங்களை பிரித்து அந்த தெருவில் உள்ள நாய்களுக்கு பிரியாணியை வீசுவார். அவரை சுற்றி வாலைக்குலைத்து வரும் நாய்கள் நின்று அந்த பிரியாணியை ரசித்து, குளைத்து, சாப்பிடுவதை அந்த நள்ளிரவில் விழித்திருப்பவர்கள் காண முடியும்.

வாழ்ந்து அனுபவித்த மனிதர். பேரன் பேத்தியெல்லாம் பார்த்து விட்டவர்.

ஒரு நாள் வீட்டில் இவருக்கு நல்ல பசி. தன் அறையிலிருந்தவாறே மனைவியை அழைத்திருக்கிறார். உடனே சாப்பிட கொண்டு வரும்படி சொல்லியிருக்கிறார். அவருடைய வயிற்றுப்பசி தர்ம பத்தினிக்கு அவ்வளவு முக்கியமாக படவில்லை. ”இருமய்யா… அவசரப்பட்டால் எப்படி?” என்கிற மாதிரி விட்டேத்தியாக அலட்சியமாக பதில் வந்திருக்கிறது.

இவர் பொறுத்துப் பார்த்திருக்கிறார். சாப்பிட எதுவும் வரவில்லை. கடும் பசியில் கோபமும், அவமானமும் தலைக்கேறி விட்டது. ஆத்திரத்தை அடக்க முடியாமல் ஸ்டூலில் ஏறி விட்டத்தில் கயிறைப் போட்டு இறுக்கி, மெதுவாக கழுத்தில் மாட்டிப்பார்த்திருக்கிறார். அறையின் கதவைக் கூடத் திறந்து தான் வைத்திருந்தாராம்.

பயமுறுத்துவது தான் திட்டமாயிருந்திருக்கும். அதற்குள் பதார்த்தங்களுடன் மனைவி வந்து விட மாட்டாளா?
எப்படியாவது யாராவது பார்த்து விட்டால் போதும். நடக்கவில்லை.

மெதுவாக கழுத்தில் மாட்டிய நிலையில் சில நிமிடங்கள் பொறுத்தும் பசிக்கு எந்த விமோசனமும், நிவாரணமும் இல்லை.

ஸ்டூலை சத்தம் வரும்படி உதைத்து தள்ளியிருக்கிறார். அந்த சத்தமே வீடு பூரா கேட்கும்படியானது தான். யாராவது ஓடிவந்து பார்த்திருக்கும்படியான தீர்மானமான கவன ஈர்ப்பு. யாரும் வரவில்லையே.
தூக்கில் தொங்கி பிராணனை விட்டு விட்டார்.

When you are destined to be hanged, you will never be drowned.

……………………….

2 comments:

  1. It begins with a simple narration of informations. Then a poetic scene of the dogs eating the left overs. Now the tone gets sarcastic. And it remains so till the end. Whats the title? Ah, Annalakshmi! The title then speaks of that which is not explicitly told in the narration. The final punch is your trademark quotation.

    ReplyDelete
  2. மிகப் பரிதாபம்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.