Share

Mar 23, 2017

Ken Loach’s ‘I Daniel Blake’


கேன்ஸ் விருது வாங்கிய மிக வயதான இயக்குனர் கென் லோச். சென்ற வருடம் அக்டோபர் மாதம் இந்தப்படம் ரிலீஸ் ஆனது.
Ken loach is running Eighty right now.
தள்ளாமை இவரது திரை இயக்க வேலைகளில் தலையிடமுடியவே இல்லை.

பிரிட்டிஷ் படம். System என்பது நடைமுறைப்படுத்தப்படுவதில் இதயமற்ற சட்டங்கள் ஏழைகளை மிக மோசமாக நடத்துவதை காட்சிப் படுத்துகிறார் கென் லோச். Utter relevance of the emotional power and political punch.
Director Ken Loach's biggest success!

ஏழையாய் இருப்பதில் வறுமையைக்காட்டிலும் எதிர்கொள்ளும் அவமானங்கள் தான் சோகம். தச்சு வேலை செய்யும் 59 வயது இதய நோயாளி டேனியல்.

டேவ் ஜான்ஸ் என்ற ஒரு நடிகர் முதியவர் டேனியலாக வாழ்ந்திருக்கிறார். நடிகை ஹேலி ஸ்கொயர் இரண்டு குழந்தைகளின் Single Mother. கேட்டி.

Good people, honest people on the street.
வறுமை வாழ் நாளில் விடாது ஒருவனை விரட்டுகிறது என்றாலே அவன் நேர்மையாளன் தான்.

Employment and Support allowance வேண்டி போராடும் டேனியலை ‘அமைப்பு’ அலைக்கழிக்கிறது. அப்பீல் செய்கிறார். யதார்த்தம் என்ன?
It could be weeks before his appeal comes through. He might not win.
டேனியலுக்கு dyslexia எனப்படும் Reading disorder இருக்கிறது. Computer illiteracyயும் கூட.


இவ்வளவு துயரத்திலும் கேட்டிக்கும் அவளுடைய இரண்டு குழந்தைகளுக்கும் அன்பு, கனிவு, பரிவு, தேறுதல் இவற்றை பொழிகின்ற டேனியல்.


பொருள்கள் வாங்கும் திராணியும், வசதியுமற்ற ஏழைகளுக்கான Food Bank. அந்த காட்சியில் அங்கு வேலை செய்யும் பெண்ணே வருகிறார். கேட்டிக்கு உணவுப்பொருள்களை கொடுத்துதவும் காட்சியில் வரும் அந்தப் பெண்ணுக்கு இது திரைப்படத்தில் வரும் காட்சி என்பது தெரியாமல் இருந்திருக்கிறது! ஷூட்டிங் என்பது தெரியாது.இயல்பாய் தன் வேலையைப் பார்ப்பதாகத் தான் நினைத்திருந்திருக்கிறார்!

கேட்டியின் மகள், மகன்- இரண்டு குழந்தைகள் நடிப்பும் நயம்.
மகளுக்கு புதிய ஷூ வாங்குவதற்காக கேட்டி sex worker ஆகும்
துர்பாக்கியம். இதை அறிந்து உடைந்து போகும் டேனியல்.

"I, Daniel Blake, demand my appeal date before I starve" - கட்டிட சுவரில் எழுதியவுடன் பாதசாரிகள் வாழ்த்து சொல்லி உற்சாகப்படுத்துகிறார்கள்.

 டேனியலை போலவே பாதிக்கப்பட்ட இன்னொரு மனிதர் அவரை கையைப் பிடித்து உயர்த்தி பாராட்டுகிற காட்சி கவித்துவமானது.

மேலைய நாடுகளில் சாவது கூட ரொம்ப காஸ்ட்லியான விஷயம்.
மனிதன் தன் மரணத்திற்குப் பின்னான செலவுகளுக்கு ரொம்ப மெனக்கிட வேண்டும்.
ஏழைகளுக்கு Pauper’s funeral சலுகை இங்கிலாந்தில் உண்டு. டேனியலுக்கு இந்த Pauper’s funeral தான். ஆனாலும் படம் பார்ப்பவர்களின் விம்மல் காதில் விழுகிறது.

கடைசி காட்சியில் டேனியலின் மரண இரங்கலில் கேட்டி கண்ணீர் வடிய தேம்புகிறாள். “ He gave us things that money cannot buy.”
என்ன ஒரு கெட்டியான, திடமான வரிகள்!
ஆனால் “Through money, We get thousands!” என்பது தானே இன்றைய லோகாயுத லௌகீகம்!
......................................................................................

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_19.html

http://rprajanayahem.blogspot.in/…/a-man-called-ove-2015-mo…

1 comment:

  1. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ஒரு சிறிய நகரத்தில் (Mid west) நடந்தது. ஒரு வக்கீல் தன்னுடைய முன்னாள் காதலியைக் கூலிக்கொலை செய்ய ஆள் அமர்த்த சதி செய்ததாகக் கைது செய்யப்பட்டார். கொலை செய்ய ஒத்துக் கொண்ட ஆள் ஒரு புற்று நோயாளி. 6 மாதமே வாழக் கெடு விதிக்கப்பட்டவர். தன்னுடைய இறுதிச் சடங்கிற்கு செலவு செய்யவே கூலிக் கொலைக்கு ஒத்துக் கொண்டதாக வாக்கு மூலம் .

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.