Share

Showing posts with label நீதியரசர் அரங்க.மகாதேவன். Show all posts
Showing posts with label நீதியரசர் அரங்க.மகாதேவன். Show all posts

Jun 5, 2020

க. நா.சு கலை நுட்பங்கள்

கநாசு தவிர அவருடைய சமகாலத்தவர்களான மணிகொடி எழுத்தாளர்களுக்கு சினிமா நாட்டம் இருந்தது. 

கநாசு வுக்கு சில கோட்பாடுகள்இருந்தன. கலையென்றால் ஒரு தேவதையை தான் ஆராதனை பண்ணனும். நான் எழுத்தையும் ஆராதனை பண்ணுவேன். இன்னொரு கலையையும் ஆராதனை பண்ணுவேன் என்று சொல்லக்கூடாது என்று நினைப்பவர் க நா சு. 

Jealous Mistress. 
ஒரு கலை இன்னொரு கலைக்கு சக்களத்தி. 

அவருடைய நாவல்கள் சர்மாவின் உயில், பொய்த் தேவு, ஒரு நாள், வாழ்ந்தவர்கள் கெட்டால், அசுர கணம் எல்லாம் மகத்தான படைப்புகள். 
தி. ஜானகிராமனுக்கு முன்பு பிரதியின்பம் என்பதை க. நா. சு தான் காட்டியவர்.
 அவருடைய உரைநடை விஷேச தரமானதாக இருக்கிறதை இப்போது படித்தாலும்
 உணர முடியும். 

த‌ற்போதைய எழுத்தாளர் ஒருவரின் நாவலை படித்த போது போதும் போதும் என்று ஆகி விட்டது. 

உடனே க. நா. சு நாவல்களை மறு வாசிப்பு செய்தேன். அப்போது தான் செரிமான பிரச்சினை சரியாகியது. 

க.நா.சுவின் விமர்சன நூல் 'கலை நுட்பங்கள்' அவருடைய புகைப்படத்துடன் வெளி வந்தது. 
அதை பார்க்க க. நா.சு உயிருடன் இல்லை. 
அந்த நூலை மகாதேவனுக்கு 
சமர்ப்பணம் செய்திருந்தார். 
மகாதேவன் இன்றைய உயர் நீதிமன்ற நீதியரசர். 

க.நா.சுவுக்கு மா. அரங்கநாதனின் மகன் மகாதேவன் மீது மிகுந்த அன்பும் வாஞ்சையும் இருந்திருக்கிறது. 

க. நா.சு மட்டுமல்ல. முன்றில் அலுவலகத்திற்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் மகாதேவனிடம் தான் அதிகமாக பேசுவார்கள் என்று அவருடைய அப்பா மா. அரங்கநாதன் எழுதியிருக்கிறார். 

பிரமிளின் ஆத்மார்த்தமான நண்பராக மகாதேவன் இருந்தார் என்பது அறிந்த விஷயம். போஷகராக அவரை பேணியவர். 
பிரமிள் இவரிடம் மட்டும் தான்
 சண்டை போட்டதில்லை. 

கநாசு எதையும் தொழ மறுத்தவர். 
புனிதம் என புல்லரிப்பு எதுவும் 
அவருக்கு கிடையாது.

 நடராஜர் சிலை பற்றி அவர் சொன்ன 
ஒரு கமெண்ட். 
' ஒற்றை காலை அவர் தூக்கி நிற்பதற்கு 
கொசு கடி கூட காரணமாயிருக்கலாம் .'

நான் இங்கே குறிப்பிட வந்த இன்னொரு விஷயம் 
சுந்தர ராமசாமி ' கநாசு நினைவோடை '
 நூலில் செய்துள்ள தகவல் பிழை பற்றி. 

கநாசு வின் தகப்பனார் தஞ்சை மாவட்டத்தில் 
ஒரு சாதாரண சப் போஸ்ட் மாஸ்டர் தான். 

ஆனால் சுராவின் முதுமை மறதி காரணமாக 
' கநாசு' வின் தகப்பனார் தென் ஆப்பிரிக்காவிலே 'போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ' பதவி வகித்தவர் என்று ரொம்ப விசித்திரமாக, படு அபத்தமாக குறிப்பிட்டுள்ளார். 

தபால் துறை யில் போஸ்ட் மாஸ்டர் 
என்பது பொதுவான வார்த்தை. 

பிரான்ச் போஸ்ட் மாஸ்டர், சப் போஸ்ட் மாஸ்டர், ஹெட் போஸ்ட் மாஸ்டர் என்று பல பிரிவு தபால் துறையின் உள்வட்டத்தில் உண்டு. 

ஒரு மாவட்டத்துக்கு அந்த காலத்தில் 
ஒரு ஹெட் போஸ்ட் மாஸ்டர் தான். 

பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் Extra department எனப்படும் கீழ்நிலை ஊழியர். 
அதாவது தபால்துறையின் உள் ஊழியர்களான Postman , Class 4 இவர்களுக்கும் கீழ்.

ஜனங்கள் எல்லோரையுமே போஸ்ட் மாஸ்டர் 
என்று தான் நினைப்பார்கள். 

' போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ' என்பது தபால் துறை யில் மாநிலத்திலேயே உயர் அதிகாரி. 

நான் இந்த நினைவோடையை படித்தவுடன்
 சுந்தர ராமசாமிக்கே தொலைபேசியில் தெரிவித்தேன். அதிர்ந்து விட்டார். 

அவருக்கு தான் எழுதியுள்ளபடி தான் ஞாபகமாம்.

 காலச்சுவடு கண்ணனுக்கும் சுட்டி காட்டினேன். அதோடு திருப்பூர் காமாட்சி கல்யாண மண்டபத்தில் 2005ல் நடந்த  காலச்சுவடு நிகழ்வில் கனிமொழி கருணாநிதி 
கவிதை வாசிக்க வந்திருந்தார். 
அந்த இலக்கிய கூட்டத்தில் நான் தான் 
அதிக நேரம் பேசினேன். 
அந்த கூட்டத்தில் பகீரங்கமாக 'இந்த தவறை அடுத்த பதிப்பில் திருத்த வேண்டும்'என நான் பேசினேன்.

Apr 28, 2020

இசைப்பேரறிஞர் மதுரை சோமுவின் விழா - 2019


மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்திற்கு நான் 1983ம் ஆண்டு மதுரை சோமு கச்சேரி கேட்பதற்காக போயிருக்கிறேன்.
அதன் பிறகு 36 வருடங்களுக்குப்பிறகு
சென்ற 2019 ஏப்ரல் 28ம் தேதி மதுரை சோமு நூற்றாண்டு விழாவில்
தொடக்கவுரை நிகழ்த்துவதற்காக.

சிலிர்ப்பு ஏற்பட்டது.
Everything is governed by an intelligence and not by chance.

சோமு கச்சேரியின் போது ஜெயகாந்தன் முதல் வரிசையில். அதே வரிசையில் ஒரு இரண்டு சீட் தள்ளி தான் நானும் A.K.ரவியும் அமர்ந்திருந்தோம்.
சோமு பாடும் போதே பாடலில் ஒரு வரியாக 'எங்கள் ஜெயகாந்தா' என்று முன் வரிசை எழுத்தாளரை பார்த்து பாடினார். ஜெயகாந்தன் அதற்கு தலை வணங்கி சோமுவை அப்போது நமஸ்கரித்தார். மறக்க முடியாத காட்சி.
சோமு பாடும் போது ரொம்ப அற்புதமான அனுபவமாய் எப்போதும் இருக்கும். ஒரு கீர்த்தனையின் போது பக்கவாட்டில் ஒரு சில வினாடிகள் படுத்து விட்டார்.
”என்ன கவி பாடினாலும்” பாடினார்.
நாட்டக்குறிஞ்சி 'மாணிக்க மூக்குத்தி அலங்காரி'யும்.
சோமு கச்சேரி காட்சியின்பம். குருநாதா என்பார். முருகா என்பார். வயலின் வாசிப்பவரை பார்த்து பாராட்டாக “ஐயோ” என்பார். எதிரே உட்கார்ந்திருப்பவரோடு பேசுவார். சமிக்ஞை செய்வார். குழந்தைமையும் கள்ளமின்மையும் கொண்ட ஜீவன்.
The child in him was battling with the man in him.
நாடகக்கலையையும் இசைப்பாட்டில் இணைத்தவர்.
 Undoubtedly, Madurai Somu was a theatre personality.
2019 சோமு நூற்றாண்டு விழாவில்
நீதியரசர் அரங்க மஹாதேவனின் சந்திப்பு
இனிய நிகழ்வு.

என்னை சந்தித்தவுடன் நான் முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
விழா முடிந்தவுடன் என்னிடம் “உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ். நீங்கள் எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது” என்று நீதியரசர் சொன்ன போது என்ன பதிலும் சொல்ல முடியாமல்
அசந்து போய் விட்டேன்.
அவருடைய தந்தை ம.அரங்கநாதனின் ”வீடு பேறு” சிறுகதை தொகுப்பு எத்தகைய கனமான ஒன்று. ”பொருளின் பொருள் கவிதை” என்ற மற்றொரு நூலும்.
அரங்கநாதன் நடத்திய ”முன்றில்” பத்திரிக்கையின் சந்தாதாரர் நான்.
(மா.அரங்கநாதன் மொத்த படைப்புகள்
இப்போது நற்றிணை பதிப்பக வெளியீடு.)
க.நா.சு முன்றில் பத்திரிக்கையில் அப்போது எழுதிய கட்டுரையொன்றில் “ஊரெல்லாம் விபச்சாரிகள் என்று தி.ஜானகிராமன் மாதிரி கதையெழுதி விடுகிறார்கள்” என்ற ஒரு வரியால் துடித்துப்போய் நான் அந்த வயதின் ஆவேசத்தை காட்டி
ஒரு கடிதம் 1988 டிசம்பர் 1ம்தேதி அவருக்கு எழுதி அதை ஜெராக்ஸ் செய்து முன்றில் உட்பட 200 பேருக்கு போஸ்ட் செய்தேன்.
டிசம்பர் 16ம் தேதி க.நா.சு மறைந்தார் என்பதெல்லாம் மறக்க முடியுமா?
முன்றில் பத்திரிக்கையின் முழுப்பொறுப்பும் அன்று அரங்கநாதனின் மகன் மகாதேவன் தான் சுமந்தார்.
பிழை திருத்தம் துவங்கி தபாலில் பத்திரிக்கை பிரதிகளை சேர்ப்பது வரை பார்த்து பார்த்து பத்திரிக்கையை நடத்தியவர் தான் இன்றைய உயர் நீதி மன்ற நீதிபதி மஹாதேவன்.
இன்னொரு விஷயம். பிரமிளின் நெருங்கிய நண்பர்.
விழாவில் நீதியரசர் மஹாதேவனின் பேச்சு மிகவும் பிரமிக்கும்படி அமைந்தது.
தெளிந்த நீரோடை போல அப்படி ஒரு அருமையான பிரசங்கம்.
மதுரை சோமுவிற்கு முழுமையான அஞ்சலி.
என்னிடம் மொபைலில் பேசும்போது சொன்னார் ”சார் என்று கூட வேண்டாம். மஹாதேவன் என்றே சொல்லலாம்.
” A great man is always willing to be little.
வழக்கறிஞர் பா.அசோக் என்னிடம் காட்டிய அன்பு பற்றி நான் விவரிக்கவே கூடாது. ஸ்தம்பித்துப்போய் அவரிடம் என்ன பேசுவது என்று திகைத்து நிற்கிறேன்.

எனக்கு ஒரு மகன் தான் அசோக்.
என்னை ரொம்ப நேர்த்தியாக சபைக்கு அறிமுகப்படுத்திய அழகு. 
“ குடத்தில் இட்ட எரிமலை ராஜநாயஹம்”

அசோக் அவர்களின் சித்தப்பா பி.வரதராஜன் விழாவை பிரமாதமாக நடத்தினார்.
இந்த விழாவின் மூலமாக அறிமுகமான வழக்கறிஞர் விக்டோரியா கௌரி    அவர்களைப் பற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும்.
இன்னொருவர் ஜி.நாகராஜனின் நண்பர்
எழுத்தாளர் டெய்லர் கர்ணன்.

Jun 3, 2019

1988ல் ராஜநாயஹம் ’முன்றில்’ இதழுக்கு சந்தாதாரர்


நேற்று ஞாயிறு இந்து தமிழ் (02.06.2019) பத்திரிக்கையில் மா.அரங்கநாதன் பற்றிய கட்டுரையில் “அரங்கநாதன் 1990ல் ’முன்றில்’ இதழ் துவங்கினார்’’ என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகவல் பிழை.

நான் 1988லேயே ’முன்றில்’ இதழின் சந்தாதாரர்.






ஓவியம் :  லண்டன் சௌந்தர் வரைந்துள்ள ராஜநாயஹத்தின் சித்திரப்படம்

புகைப்படங்கள்
1. மா.அரங்கநாதன்
2. அரங்கநாதனின் புதல்வர் உயர் நீதிமன்ற நீதியரசர் மஹாதேவனுடன் R.P.ராஜநாயஹம்
3. மதுரையில் நடந்த சோமு நூற்றாண்டு விழா போஸ்டர்

May 2, 2019

இசைப்பேரறிஞர் மதுரை சோமுவின் விழா


மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்திற்கு நான் 1983ம் ஆண்டு மதுரை சோமு கச்சேரி கேட்பதற்காக போயிருக்கிறேன். அதன் பிறகு 36 வருடங்களுக்குப்பிறகு இப்போது ஏப்ரல் 28ம் தேதி மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் தொடக்கவுரை நிகழ்த்துவதற்காக. எனக்கு சிலிர்ப்பு ஏற்பட்டது. Everything is governed by an intelligence and not by chance. 

சோமு கச்சேரியின் போது ஜெயகாந்தன் முதல் வரிசையில். அதே வரிசையில் ஒரு இரண்டு சீட் தள்ளி தான் நானும் A.K.ரவியும் அமர்ந்திருந்தோம்.
 சோமு பாடும் போதே பாடலில் ஒரு வரியாக 'எங்கள் ஜெயகாந்தா' என்று முன் வரிசை எழுத்தாளரை பார்த்து பாடினார். ஜெயகாந்தன் அதற்கு தலை வணங்கி சோமுவை அப்போது நமஸ்கரித்தார். மறக்க முடியாத காட்சி.
சோமு பாடும் போது ரொம்ப அற்புதமான அனுபவமாய் எப்போதும் இருக்கும். ஒரு கீர்த்தனையின் போது பக்கவாட்டில் ஒரு சில வினாடிகள் படுத்து விட்டார்.
”என்ன கவி பாடினாலும்” பாடினார்.
நாட்டக்குறிஞ்சி 'மாணிக்க மூக்குத்தி அலங்காரி'யும்.

சோமு கச்சேரி காட்சியின்பம். குருநாதா என்பார். முருகா என்பார். வயலின் வாசிப்பவரை பார்த்து பாராட்டாக “ஐயோ” என்பார். எதிரே உட்கார்ந்திருப்பவரோடு பேசுவார். சமிக்ஞை செய்வார். குழந்தைமையும் கள்ளமின்மையும் கொண்ட ஜீவன். 
The child in him was battling with the man in him.
நாடகக்கலையையும் இசைப்பாட்டில் இணைத்தவர். Undoubtedly, Madurai Somu was a theatre personality.


நூற்றாண்டு விழாவில் நீதியரசர் அரங்க மஹாதேவனின் சந்திப்பு இனிய நிகழ்வு. என்னை சந்தித்தவுடன் நான் முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
விழா முடிந்தவுடன் என்னிடம் “உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ். நீங்கள் எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது” என்று நீதியரசர் சொன்ன போது என்ன பதிலும் சொல்ல முடியாமல் அசந்து போய் விட்டேன்.

அவருடைய தந்தை ம.அரங்கநாதனின் ”வீடு பேறு” சிறுகதை தொகுப்பு எத்தகைய கனமான ஒன்று. ”பொருளின் பொருள் கவிதை” என்ற மற்றொரு நூலும்.
அரங்கநாதன் நடத்திய ”முன்றில்” பத்திரிக்கையின் சந்தாதாரர் நான். க.நா.சு முன்றில் பத்திரிக்கையில் அப்போது எழுதிய கட்டுரையொன்றில் “ஊரெல்லாம் விபச்சாரிகள் என்று தி.ஜானகிராமன் மாதிரி கதையெழுதி விடுகிறார்கள்” என்ற ஒரு வரியால் துடித்துப்போய் நான் அந்த வயதின் ஆவேசத்தை காட்டி ஒரு கடிதம் 1988 டிசம்பர் 1ம்தேதி அவருக்கு எழுதி அதை ஜெராக்ஸ் செய்து முன்றில் உட்பட 200 பேருக்கு போஸ்ட் செய்தேன். டிசம்பர் 16ம் தேதி க.நா.சு மறைந்தார் என்பதெல்லாம் மறக்க முடியுமா?

முன்றில் பத்திரிக்கையின் முழுப்பொறுப்பும் அன்று அரங்கநாதனின் மகன் தான் சுமந்தார். பிழை திருத்தம் துவங்கி தபாலில் பத்திரிக்கை பிரதிகளை சேர்ப்பது வரை பார்த்து பார்த்து பத்திரிக்கையை நடத்தியவர் தான் இன்றைய உயர் நீதி மன்ற நீதிபதி மஹாதேவன்.
இன்னொரு விஷயம். பிரமிளின் நெருங்கிய நண்பர்.
விழாவில் நீதியரசர் மஹாதேவனின் பேச்சு மிகவும் பிரமிக்கும்படி அமைந்தது. தெளிந்த நீரோடை போல அப்படி ஒரு அருமையான பிரசங்கம். மதுரை சோமுவிற்கு முழுமையான அஞ்சலி.

என்னிடம் மொபைலில் பேசும்போது சொன்னார் ”சார் என்று கூட வேண்டாம். மஹாதேவன் என்றே சொல்லலாம்.” A great man is always willing to be little.


வழக்கறிஞர் பா.அசோக் என்னிடம் காட்டிய அன்பு பற்றி நான் விவரிக்கவே கூடாது. ஸ்தம்பித்துப்போய் அவரிடம் என்ன பேசுவது என்று திகைத்து நிற்கிறேன்.
எனக்கு ஒரு மகன் தான் அசோக். என்னை ரொம்ப நேர்த்தியாக சபைக்கு அறிமுகப்படுத்திய அழகு. “ குடத்தில் இட்ட எரிமலை ராஜநாயஹம்” 

அசோக் அவர்களின் சித்தப்பா பி.வரதராஜன் விழாவை பிரமாதமாக நடத்தினார்.



Apr 27, 2019

மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் R.P.ராஜநாயஹம்


மதுரையில் நாளை ஏப்ரல் 28ம் தேதி, மாலை 5 மணிக்கு சேம்பர் ஆஃப் காமெர்ஸில் நடக்கவுள்ள
சங்கீத மேதை மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் 

உயர்நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்களுடன் 
நானும் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
அன்பு இளவல் மதுரை பிரபல வழக்கறிஞர் பா.அசோக் அவர்கள் வரவேற்புரை.

பா.அசோக் அழைப்பின் பேரில் தான் நான் இந்த நல்ல நிகழ்வில் கலந்து கொள்ளும் பெரும்பேறு பெற்றேன். அவருடைய சித்தப்பா பி.வரதராசன் அவர்களுடன் அசோக் இணைந்து நடத்தும் விழா.
’வீடு பேறு’அரங்கநாதனின் புதல்வர் தான் நீதியரசர்.