Share

Dec 31, 2023

New Year

New year

Lines from Wordsworth and Shelley haunt me...

"Another year ! Another deadly blow!"
-Wordsworth

"Month follows month with woe,
And year wakes year to sorrow"
-Shelley

.......

Considering the legacy the previous has left, there is no great reason to feel any cheer at the beginning of this new year.

.......................................


Dec 30, 2023

டிசம்பர் மார்கழி ஜனவரி


" ஊர் புகழும் மார்கழியை 
ஏன் டிசம்பர் 
கை விட்டுப் போகிறது?" 

ஞானக்கூத்தன் கவிதை 'பிரிவு' என்ற தலைப்பில். 

மார்கழி தான் டிசம்பரை கை விட்டு ஜனவரிக்கு போகிறது. 

Something very special about December. 
Chillness and Christmas. 
இந்த டிசம்பரில் 'At Christmas I no more desire a rose ' என்றார் ஷேக்ஸ்பியர். 

It's never over though this is December. 
அடுத்த பதினொரு மாதங்கள் காட்டப்போகும் காட்சிகள். 
புதுப் பக்கங்கள் காட்டப்போகும் ஜனவரியின் சித்திரக்கனவுகள். ஜனவரியே கனவுகளின் மாதம். 
People go mad in January. Most common month for madness. 

"மாதங்களில் நான் மார்கழி" - கீதை கண்ணன். 

ஆண்டாள் " மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால், நீராடப்போதுவீர்... 
மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்" 

மார்கழி தான் டிசம்பரை தாண்டி ஜனவரியில்                                    ஆங்கில புத்தாண்டைக் காணும்
 விசேஷ அந்தஸ்து கொண்டிருக்கிறது.

- R.P. ராஜநாயஹம்

மீள் பதிவு

Dec 29, 2023

கல்லடி

கல்லடி

வீட்டம்மா செஞ்சது தகுதியும் நீதியுமானது

நல்ல ஸ்திதியில இருந்த 
அதி பிரபலமான மனுஷனுக்கு வருடக்கணக்கா ஒடம்புல ரொம்ப படுத்தியெடுத்து முடியவே முடியாம   போனதுனால 
வீட்டுல பொம்பள அவர பாக்க ஆசப்படுற 'நான் தான்  சகாவாக்கும். நான் தான் முக்கியமான ஆளாக்கும். பாத்தே ஆகனும் ' பிரபலங்கள பாக்க விடலன்னு சடச்சிக்கிட்டா.. இந்த ஆவலாதி சகிக்கல.

பாக்க ஆசப்பட்ட அந்த நூற்றுக்கணக்கான 
' நான் தான் முக்கிய சகா' பிரபலங்கள பாக்கவே விடாததிலே என்ன தப்பு?
வீட்டம்மா செஞ்சது தகுதியும் நீதியுமானது. 

விட்டுருந்தா ஒடம்பு முடியாத மனுஷனுக்கு எவ்வளவு சித்திரவதை. இவிங்க Nostalgia பேசியே கொன்னெடுத்து ..
இவரு எப்பயோ போயிருப்பாரே.

பிரேம பிரமை

 உருக்கம் - அந்த நீலச்சட்டை  மகன்.

விஜய்காந்த் சகோதரர்கள் 
ஏதேதோ பெயர்கள் செல்வராஜ்,  பால்ராஜ் என்றெல்லாம் சொல்வார்களே..
இங்கு காணக்கிடைத்தார்களா?
சகோதரிகள் தென்பட்டார்களா?

...



Mind Voice 
'இந்த கூட்டம் கூடுது ஓட்ட காணோம். அவ்வளவும் ஓட்டாயிடுச்சின்னா ஆட்சிய பிடிச்சிடலாம்.'
பிரேம பிரமை. தாளாத மாளாத சோகம்.


Dec 28, 2023

ரெம்ப்ராண்ட்டின் ஃப்ளாராவும் பாலியல் தொழிலாளியும்

ரெம்ப்ரான்ட்டின் ஃப்ளாராவும்
 பாலியல் தொழிலாளியும் 

ஓவியன் ரெம்ப்ரான்ட் மனைவி சஸ்கியா. 
மனைவியை தேவதையாக ரெம்ப்ரான்ட் வரைந்தான்.
 Roman goddess Flora. 

'ஹா, கட்டிய மனைவியை பெண் தெய்வமாக காண்பது பொதுப் புத்தியில் உள்ள விஷயம் தானே, இதிலென்ன புதுமை' என்பார்களோ? 

ரெம்ப்ரான்ட் இன்னொரு பிரபல ஓவியம் 
கெட்ட குமாரன் ஒரு பாலியல் தொழிலாளியுடன். 

பைபிள் கதையில் வருகிற Prodigal son. 

 Prodigal son in a brothel house. 

இதில் பாலியல் தொழிலாளியாக  தன் மனைவி சஸ்கியாவையே ரெம்ப்ரான்ட் வரைந்திருக்கிறான். 
அந்த கெட்ட குமாரனாக தன்னையே வரைந்து கொண்டான். 

Paintings 

1. Flora - Roman goddess 

2. Prodigal son in a brothel house

https://m.facebook.com/story.php?story_fbid=2960155907531189&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=2944452752434838&id=100006104256328

Dec 27, 2023

பச்ச கொழந்தையா இருந்தப்ப

ஆத்திமூக்கா ஜெயக்குமார்
பச்ச கொழந்தையா இருந்தப்ப..

பொம்பள நடிக



பொம்பள நடிக 
சுத்தி பதினஞ்சு பேரு நிக்க 
ரெண்டு நாளா 
'அழுது பொலம்பி'
'பொலம்பி பொலம்பி அழுது' 
நடிச்சிக்கிட்டே இருக்கு. 
சீரியல்ல சோகமா நடிச்சு நடிச்சு                                     நடிகயாவே ஆயிடுச்சு.

தும்பிக்கைய ஊனி 
நாலு காலயும் மேல தூக்கி 
சங்கு சக்கரமா சுத்தி..

கூந்தல விரிச்சிப் போட்டு, 
செலம்ப ஒடச்சி,
ஒத்த மொலய பிச்சி வீசி..



சினிமா எனும் பூதம் 109, 110


R.P. Rajanayahem 109, 110 episodes
'Cinema Enum Bootham' recording 
26.12. 2023, Tuesday 

In KalaignarTV

109 வது நிகழ்ச்சியில்
பின்னணி பாடகர், இசையமைப்பாளர்
A.M. ராஜா 

110 வது நிகழ்ச்சி
பாடலாசிரியர் வாலி

......

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

Dec 25, 2023

விடு கழுதய..

இப்டி  awkward hero.
முதல் ரெண்டு வரி கதாநாயகி பாடுனவுடன
ஹீரோ பாடுற அடுத்த ரெண்டு வரி close up கொணஸ்டை சகிக்கல.

அந்த அம்மா
 பக்கவாட்டு இடுப்புல இவர தட்னா                          இந்தாளு பதிலுக்கு 
அம்மா buttocks லயே தட்டி..

 கொறைகள முழு பாட்டுல அடுக்கிக்கிட்டே போலாம். 
கழுதய பிடிச்சி செரச்ச மாதிரி ஆயிடுமே. 
விட்டு தொலச்சா நிம்மதி.
விடு கழுதய..

What a piece of work is a Man!

Late. Mohamed Fazlulla Khan(the famous linguistic scientist)  on R.P.Rajanayahem

"I started addressing you on this platform with the thought
that I was once your senior at college.
But as I browse through your writings in Tamil, that carry appropriate quotes and references from English and other literatures, I realise that I am dealing with a well read person turned into a sublime writer, a valuable critic of life, language, religion and literature.
I can only express my awe and wonder at your intellectual and linguistic calibre.
Hats off to you.
Keep up the good work."

R.P. Rajanayahem alias 'GABIE'

"He was fondly known as Gabie among us friends. He would make us all laugh, and everyone used to enjoy his company. He was a treasure trove of information. 
 He knew to sing and dance and speak long dialogues of famous actors. 
He was cut out for the field of entertainment. 

Now I see him active on FB, a very resourceful and entertaining writer, with a unique style. Bravo Gabie."

"Gabie, 
As a colleague of yours in the 'Marathadi Maharajas' group of the American College, 
I am very proud that you have successfully swum against the current in life and have made it in your own way.
Even under our tree at college you were a stand out.
There is so much to learn from you."


Prof R. Nedumaran response and blessings to
 R.P. Rajanayahem:

Every syllable is a proven testimony to your uniqueness as a creative genius ! You always evoke a sense of awe and wonder with your uncompromising faith in your self belief and individualism!

 ' You are somebody.' Martin Luther King Jr

Proud to say I grew up with students like you! God bless you son!! 
- Nedumaran



Dec 22, 2023

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்

மாண்புமிகு அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்:

"யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். 

சிலரிடம் அண்ணாவைப் போல -  சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.

வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால்,  "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன்.

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.

மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். 

நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!"

https://m.facebook.com/story.php?story_fbid=3740729606140478&id=100006104256328&mibextid=UyTHkb

Dec 21, 2023

வெங்கட் வாசிப்பின் பாதையில் R.P. ராஜநாயஹம்


Dhivya Venkat :

"பேராசிரியர் John Christy Robert John Christy Robert  அவர்கள் பகிர்ந்தது  Vinayaga Murugan 
அவர்களின் பதிவுகளை..

விமு பகிர்ந்தது R.p. Rajanayahem 
 அவர்களின் பதிவை.

இவர்களின் படைப்புக்களை (Hard copy)புத்தத வடிவில் வாங்கி படிக்கனும்.இவர்களின் Write-up Unique ..மற்றும் ஒரு Versatile இருக்கும்."

-கே.ஆர்.வி.

Dhivya Venkat

Dec 19, 2023

Dedication and Invololvement


Dedication and Invololvement. Great

Service, thy name is Udhayanidhi Stalin

உதய தலைவர்

Dec 16, 2023

R.P. ராஜநாயஹம் - தழல் வீரம் காரணச்செறிவு


Krishnan Venkatachalam:

"ராஜநாயஹத்தை எப்போதுமே 
நான் பாராட்டுவதில்லை. பாராட்டினால் அது ஒரு செயற்கைத்தன்மையோடு இருக்குமோ என்கிற அச்சம். பாராட்டுதல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ராஜநாயஹம்


Amanullah:

"The way you approach the problem is amazing. You are almost like a saint. Ur knowledge in literature may easen all the problems. You are very optimistic and aesthetic in ur life. Otherwise none can stand. I learn lot from ur posts not only literature but also life sir."


Ramamurthi GK:

"நான் ஆங்கிலம் பயின்றவன்.
 நிறைய உச்சக்கட்ட ரசனைகளை உங்களிடம் இருந்து 
அடிக்கடி பெறுகின்றவன் சார்."

Dec 15, 2023

R.P. ராஜநாயஹம் புதிய நூல்கள் தழல் வீரம் காரணச்செறிவு

R.P. ராஜநாயஹம் புதிய நூல்கள்

1. தழல் வீரம் 

"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?"

- பாரதி



2. காரணச்செறிவு 


"இவ்விதம் நோக்கிடில் எவ்வித தோற்றமும் செவ்விதிற் பற்பல காரணச்செறிவால்"

- மணோன்மணியம் சுந்தரனார்

Dec 12, 2023

R.P. ராஜநாயஹம் சினிமா எனும் பூதம் ஷூட்டிங் கலைஞர் டிவியில்

R.P. ராஜநாயஹம்
'சினிமா எனும் பூதம்'
“All the variety, all the charm, all the beauty of life is made up of light and shadow."

- Leo Tolstoy in 'Anna Karenina'


கலைஞர் டிவியில் ஷூட்டிங்

107, 108 வது எப்பிசோட்ஸ்

இரண்டு இசையமைப்பாளர்கள்

1. இசையமைப்பாளர் R. சுதர்சனம்

2. இசையமைப்பாளர் S.M. சுப்பையா நாயுடு


Dec 11, 2023

R.P. ராஜநாயஹம் நூல்கள் பற்றி நிகழ்ச்சி தென்காசி தமுஎச


தென்காசி 
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

R.P. ராஜநாயஹம் நூல்கள் பற்றி
நிகழ்ச்சி

12.12.2023
செவ்வாய் கிழமை
மாலை 6 மணி 

Dec 10, 2023

சுமதியின் கால தானம்

வழக்கறிஞர் சுமதியின் 'கால தானம்' சிறுகதை தொகுப்பை சென்ற ஜனவரி மாதம் 
என் வீட்டில் அவரிடம் இருந்து 
பெறும் பேறு



Dec 5, 2023

மழை காணா கோடையில் ராஜநாயஹம் பதிவு


மழை காணா கோடை காலத்தில்
நான்கு வருடங்களுக்கு முன்
பெய்த பெரும் பூமழையின் போது 
R.P.ராஜநாயஹம் Smell the Rain பதிவு.


05.12. 2023
 
இன்று Selfie 
"தலப்பா கட்டி" ராஜநாயஹம் 

Smell the Rain

‘மழையின்
பெரிய புத்தகத்தை 
யார் பிரித்துப்படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது.’
- தேவதச்சன்

பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு “Rain, rain go away, come again some other day” நர்சரி ரைம் சொல்லிக்கொடுப்பது இன்றைய சூழ்நிலையில் எத்தகைய அபத்தம். Who are we to say it shouldn’t rain?
Is there any life without rain?

நான் ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக இருந்த போது வகுப்பில்
“Raindrops keep falling on my head” பாடுவேன். குழந்தைகள் எப்போதும் சந்தோஷமாக,உற்சாகமாக ஆடுவார்கள்.

திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி.
எட்டயபுரம் தலப்பா கட்டி கவிதை.
(“பாரதியார் எங்க அண்ணா தான். அம்பாள் எங்க அண்ணா கையில கவிதைய கொடுத்தா. என் கையில கரண்டிய கொடுத்தா..” 
- சமையல் கலைஞன் காமேஸ்வரன். தி.ஜாவின் கடைசி நாவல் ’நளபாகம்’)

சி.மணி கவிதை இது போல ஒன்று தான்.
”நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்று தான்.”

கறுத்து கூடிடும் மேகங்களை “ பின்னிய மேகச்சடை” என்பான்
’எட்டயபுரம் தலப்பா கட்டி’.
பின்னிய மேகச்சடை காணக்கிடைத்தும் மழையை காணோமே என்ற தவித்த நிலை நகரத்தில்.
’நெஞ்சில் பால் வார்ப்பது போல’ என்று சொல்வார்கள். அப்படி பெய்தது நேற்றைய சென்னை மழை.

சுகம்.

....

மீள் பதிவு  June 27, 2019

Dec 4, 2023

'Gift of the gab' GABIE


R.P. Rajanayahem write ups


Karthik Vee :

" You certainly have the
 'gift of the gab' RPR, 
when it comes to speaking. 
And, how nicely and aptly the name
 (your college friends use) #Gabie#
  sits here.🙂

And, your well-worded writings are undoubtedly a Reader's delight. 
 Your wit and humour never fail to amaze me.
Take time to live dear RPR, as you have so much to give the World. " 🙏🙂

...

R.P. ராஜநாயஹம் எழுத்து பற்றி
பரமசிவம் எஸ்.

"நீங்கள் எனது ஆசான்...
துயரம் என்னை நெருங்கும்போதெல்லாம்
 உங்களின் கைகளே 
என்னைக் காத்து நிற்பது போலப்  பலமுறை உணர்ந்திருக்கிறேன்..."

..

Dec 3, 2023

'தழல் வீரம்' 'காரணச்செறிவு' R.P. ராஜநாயஹம்


உன்னத உள்ளங்கள்

பா. அசோக்  : உங்கள் பாதங்களை முத்தமிடுகிறேன்... உங்கள் பரந்த வாசிப்புக்கும் வியாபித்த அறிவுக்கும்... எளியனின் மரியாதை.
குடத்திலிடப்பட்ட விளக்கல்ல நீங்கள் ... உண்மையில் குடத்திலடைபட்ட மின்னல்.. 
அதே பிரமிப்பு இன்றும் இனியும்!

Siva Kumar Kanagaraj : பல வருடங்களுக்கு முன் ஹோட்டல்களில் இலை போட்டு இட்லி வைப்பார்கள்.சாப்பிட சாப்பிட வைத்துக்கொண்டே இருப்பார்கள்.கூடவே சட்னி/கொத்ஸு/சாம்பார் இத்யாதி.எவ்வளவு சாப்பிட்டோம் என்ற கணக்கே நமக்கு தெரியாது.உங்கள் எழுத்தை எவ்வளவு படித்தாலும் இப்படி ஒரு உணர்வுதான் வருகிறது..

Umamaheshvaran Panneerselvam:  If I can write half as versatile as thyself I will pat myself sir. Always an admirer of your writings ..

Ilangovan Chanemouganandam : நான் முகநூலில் மிகவும் விரும்பிப் படிக்கும் பதிவுகள் R.p. Rajanayahem னுடையவை. A versatile personality. ஒருநாள் என்னத்த கன்னையா பற்றி எழுதுவார். திடீரென்று Cary Grant பற்றி எழுதுவார். சிலசமயம் மௌனி பற்றி பதிவார். அடுத்தநாள் Silvia Plath பற்றி அலசுவார். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி பற்றி எழுதிவிட்டு , பார்த்தால் Something is rotten in the state of Denmark (Hamlet) பற்றி கலக்குவார். impressionism -Paul Cezanne, Van Gogh, Rembrandt ...அப்பாடா.

சித்ரா சம்பத் : எனக்கு உண்மையிலேயே உங்களிடம் ஒரு நெகிழ்ச்சியும், பரிவும் இனந்தெரியா தவிப்புமுண்டு. வாராது வந்துதித்த மாமணியை தோற்போமோ என்பது போன்ற வேதனையும் உண்டு. சான்றோர்களை, அறவோர்களை போற்றாத, காப்பாற்றாத சமுதாயத்தின் ஓர் அங்கம் நான் என்ற வெட்கமும் உண்டு.

...............

Dec 1, 2023

R.P. ராஜநாயஹம் "தழல் வீரம்" பற்றி சுரேஷ் கண்ணன்


சுரேஷ் கண்ணன்:

ஜெய்ரிகி பதிப்பகம் வெளியிட்டிருக்கும், R.P..ராஜநாயஹத்தின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பான 'காரணச் செறிவு' நூல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தப் பிரதியை அனுப்பியிருந்தார், பதிப்பாளர் அசோக். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. 

*
R.P..ராஜநாயஹம் அவர்களின் முதல் கட்டுரைத் தொகுப்பான 'தழல் வீரம்' நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய எழுத்தை 'மினி ரோலர் கோஸ்டர்' பயணம் எனலாம். அப்படி தவளைப் பாய்ச்சலில் தாவித் தாவி விரைந்து பயணிக்கும் தனித்துவமான எழுத்து. கலைடாஸ்கோப் வழியே காணும் காட்சிகள் போல் எழுத்தின் தொனி சட்சட்டென்று மாறுகிறது.

அவர் உபயோகிக்கும் பிரத்யேகமான ஆங்கில வார்த்கைளுக்கு டிக்ஷனரியைத் தேட வேண்டியதாக இருக்கிறது. ஆங்கில இலக்கியம் படித்தவர் அல்லவா? எனவே மேற்கோள்களிலும் வார்த்தைகளிலும் பின்னியெடுக்கிறார். இதுவே ஒரு தனியான ருசியைத் தருகிறது. 

இலக்கியம்,  இலக்கியப் பூசல்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள் போன்ற ஆளுமைகள், தத்துவம், சினிமா என்று ஒரு வசீகரமான கலவையில் சுவாரசியமான பத்தி எழுத்தாக இந்தக் கட்டுரைகள் மலர்ந்திருக்கின்றன. 

குஷ்வந்த் சிங் என்கிற ரகளையான எழுத்தாளரைப் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அவருடைய மனைவியான
  Kawal Malik பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அவருக்கு இருந்த காதல்களும், அதனால் குஷ்வந்த் சிங்கிற்கு இருந்த மனக்கசப்புகள் பற்றி?!

இப்படி பலரும் அறியாத தகவல்களை விதம் விதமான கோணங்களில் சுவாரசியமான எழுத்தில் கட்டுரைகளாக எழுதியிருக்கும் இந்த இரண்டு நூல்களும் வாசிக்கத் தவறாதவை என்றே சொல்லுவேன். 

*

(பின்குறிப்பு: சந்தையில் நன்றாக விற்பனையாகும் சரக்குகளை பதிப்பித்தோமா, லைப்ரரி ஆர்டர் எடுத்து கல்லா கட்டினோமா என்றெல்லாம் இல்லாமல், காலத்தில் மறைந்து போன சிறந்த எழுத்தாளர்களை, நூல்களை மெனக்கெட்டு தேடி புதிய வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிரத்தையுடன் பதிப்பிக்கும் நண்பர் அசோக்கை 'பிழைக்கத் தெரியாதவர்' என்றே சொல்லுவேன். ;) அவருடைய பணி தொடர வேண்டுமானால் ஜெய்ரிகி பதிப்பகத்தின் நூல்களை வாங்கி ஆதரவளியுங்கள்)

Nov 30, 2023

105, 106 Episodes

105 and 106 Episodes 

28.11.2023
செவ்வாய் கிழமை
காலை 

கலைஞர் டிவியில் ஷூட்டிங்

R.P. ராஜநாயஹம்
சினிமா எனும் பூதம் தொடர்

105, 106 வது நிகழ்ச்சிகள் படப்பிடிப்பு 

நடிகர்கள் 

V. நாகய்யா

V. கோபாலகிருஷ்ணன்

......

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

Yet Another Copy Cat


Yet Another Copy Cat

2008லிருந்து 2023 வரை 200 பேர்
 R.P. ராஜநாயஹம் பதிவுகளை 
ஈயடிச்சான் காப்பியடித்து இறும்பூதெய்தியிருக்கிறார்கள்.

இப்போது அண்ணாதுரை துரைசாமி 201வது Copy Cat. 

https://m.facebook.com/story.php?story_fbid=3182360588574336&id=100004012778271&mibextid=Nif5oz

மேற்கண்ட அண்ணாதுரை துரைசாமி பதிவு 
R.P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' நூலில் இருந்து ஈயடிச்சான் காப்பி.
Copy cat.

https://m.facebook.com/story.php?story_fbid=3441648239381951&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3166153370264774&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3166296983583746&id=100006104256328&mibextid=Nif5oz

Nov 25, 2023

Vyashni Toyland - Pookkutti Travels

பூக்குட்டி
 இன்றைய சின்னஞ்சிறு புது உலகம்
Viyashini in Toyland❣❣


ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக புதுப்புது விளையாட்டு கண்டு பிடித்து விளையாடுவாள். தாத்தாவுக்கு விளையாட்டில் என்ன பங்கு என்பதையும், தாத்தா என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அவளே தீர்மானித்து அதிகாரமாக instructions கொடுப்பாள். அவள் சொன்னபடி கேட்க வேண்டும்.


Pookkutti travels.