Share

Oct 31, 2020

கனமான இரங்கல்

 இரங்கல் எத்தனையோ கேட்டதுண்டு. 

2013ல் அப்பா இறந்த  சில நாட்களுக்குப் பின் அம்மா சொன்ன கனமான இரங்கல். 

' கோவில் யானை எறந்து போனா 

அந்த எடம் முழுக்க எப்படி வெற்றிடமா இருக்குமோ,                     அது போல '


அடுத்த வருடமே அம்மாவும் போய் விட்டாள்.


“Life asked death, ‘Why do people love me but hate you?’

 Death responded, ‘Because you are a beautiful lie               and I am a painful truth.'” 

-  Unknown Author 


http://rprajanayahem.blogspot.com/2020/05/blog-post_6.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2020/03/freezer-box.html?m=0

எழுத்து பற்றி பியரெத் ஃப்லூசியோ

 க்ரியா வெளியிட்ட வெ.ஸ்ரீராம் ஃப்ரஞ்ச் மொழிபெயர்ப்பு “சின்ன சின்ன வாக்கியங்கள்”  பியரெத் ஃப்லூசியோ என்ற 

பெண் எழுத்தாளரின் நாவல் 


"எழுத்து " பற்றி பியரெத் ஃப்லூசியோ 


" எழுத்தில் மிக எளிமையான, மிக நேரடியான 

பாதையைக் கண்டு பிடிக்க விரும்புகிறேன். 

ஆனால் பாதை உடனேயே காற்றில் கரைந்து விடுகிறது. 


எதையோ தோண்டுவதைப் போல, ஒரு கிணற்றில் இறங்குவதைப் போல நான் உணர்கிறேன். 


என்னைப் பொறுத்தவரை எழுத்து என்பது கிணறு அல்ல, மாறாக அது ஒரு பரந்த வெளி, 

ஆனந்த நடனம், தேடல்.. 


தான் சொல்ல வந்த விஷயத்துக்குள் நுழைவதற்கு 

வாக்கியங்களை ஒரு எழுத்தாளர்

 எப்படி நெளித்து வளைத்திருக்கிறார்."


http://rprajanayahem.blogspot.com/2019/11/woollen-elephant.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2019/01/blog-post_31.html?m=0

பட்ட மரம்

 


"இள இளவென்று இலையும் தளிரும் மலருமாகப்                           பூத்து நின்ற மரமில்லை அது இப்போது. 

இலை, தளிர், மலர் எல்லாம் மறைந்து விட்டன. 

இடி விழுந்த மரம் போல் உள்ளம் கூடோடி விட்டது. 

புறத்தையும்  துயர கறையான் சாரி வைத்துத் 

 தின்று கொண்டிருக்கிறது. 

பலமாக ஒரு காற்று வீசினால் போதும். 

மள மளவென்று மரம் சாய்ந்து விடும்."


- தி. ஜானகிராமன்  'வெயில்' சிறுகதையில் 


.......... 


"அந்த பட்ட மரம் தனிப்பட்டு, 

தலைவிரி கோலத்தில் நின்று

மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது.. 


ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்

  கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா? விரிக்கப்பட்ட சாமரம் போன்று

ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது?...

அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது? எதற்காக?"


--- மௌனி

' அழியாச்சுடர் ' கதையில்


..........


"காம்பு இற்றுப்போச்சு ...

நான் பூக்க மாட்டேன்.

காய்க்க மாட்டேன்

பழம் தர மாட்டேன்.

குயிலுக்கும் கிளிக்கும் 

என்னிடம் வேலையில்லை.

மரம் கொத்திப்பறவை வந்து

ஏணி மீது ஏறுவது போல்

 படிப்படியாக ஏறி

இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.

நான் ஓய்ந்து விட்டேன். 

ஒடுங்கி விட்டேன். 

காய்ந்து விட்டேன்."


--- ந . பிச்சமூர்த்தி

'அடுப்புக்கு எதிரில் ' கதையில்

Oct 29, 2020

இந்த வார ஆனந்த விகடனில் சுகுணா திவாகர்

 இந்த வார ஆனந்த விகடனில் 

சுகுணா திவாகர் 


"திருமணத்திற்கு முன்பான உறவில் ஈடுபட நேர்ந்தால் பெண்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க இருக்க வேண்டும் " என்று குஷ்பு தெரிவித்த கருத்தை 'ஒட்டு மொத்தமாகத் தமிழ்ப் பெண்களை இழிவு படுத்தி விட்டார்' என்று போராட்டங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள், வழக்குகள் தொடுக்கப்பட்டன. அப்போது விடுதலைச் சிறுத்தைகள் குஷ்புவுக்கு எதிராக இருந்தார்கள். 


இப்போது மனுஸ்மிருதியில் உள்ள ஆணாதிக்கம் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துகளை, 

"ஒட்டு மொத்தமாக இந்துப் பெண்களைத் திருமாவளவன் இழிவு படுத்தி விட்டார் " என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் இந்துத்துவ வாதிகள். 

இப்போது குஷ்பு எதிர்த்தரப்பில் நின்று திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். 


கருத்துச் சுதந்திரம் என்பது வசதிக்கேற்ப 'பயன்படுத்தப் படுவதற்கு' இது ஒரு சமீபத்திய, சரியான உதாரணம்.



Oct 28, 2020

சிவகுமாருக்கு பாலு பாடல்கள்

 பாலுவின் முதல் பாடல் ஓட்டல் ரம்பா படத்தில். 

எல். ஆர். ஈஸ்வரியுடன் பாடிய "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு" பாடல்

 படம் ரிலீஸ் ஆகாததால் 

காணாமலே போய் விட்டது. 

எஸ். பி. பி. முயன்று தேடியும் 

கிடைக்காமல் போய் விட்டது. 


இப்போது நடிகர் சிவகுமார் இதை சொல்வதை 

ஒரு வீடீயோ பதிவில் பார்த்தேன். 


சாந்தி நிலையம் ' இயற்கை எனும் இளைய கன்னி'

முதலில் ரிக்கார்ட் செய்யப்பட்டு விட்டது. 


 பால் குடம் படம்  1969, ஜனவரி பொங்கலிலேயே வெளிவந்தது. 

அப்படி பார்த்தால் பாலுவுக்கு தமிழில் முதல் பாடல்

' மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் ' தான். 


 நானும் இப்படித்தான் சொல்லுவேன். 


ஆனால் அதே பொங்கலில் தான் ஜெமினியின் குழந்தையுள்ளமும் ரிலீஸ். "முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு" பாலு பாடல். 


சாந்தி நிலையமும், அடிமைப்பெண்ணும் 

 1969 மே மாதம் தான் ரிலீஸ் ஆகின.


அதே 1969ல் செப்டம்பரில் 'கன்னிப்பெண்' 

சூப்பர் ஹிட் பாடல் "பௌர்ணமி நிலவில், பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா?" சிவகுமாருக்கு இரண்டாவதாக எஸ். பி. பி. 


1970ல் நவக்கிரகம் படத்தில் "உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது" சுசிலா பாடலில்

 எஸ் பி பி பிரமாதமாக சிவகுமாருக்கு ஹம்மிங் கொடுத்தார். 


1971ல் கண்காட்சியில் 'அனங்கன் அங்கஜன் அன்பன்' அருமையான சந்தப்பாடல். 

இந்த பாடலை நான் ஏ. பி. என் தொகையறாவுடன்

"வெண்ணிலவை  குடை பிடித்து " துவங்கி உச்சரிப்புக்காக  நடிப்பு பயிற்சி மாணவர்களுக்கு சொல்லி தந்திருக்கிறேன். 


அதே வருடம் 'மூன்று தெய்வங்கள்' முள்ளில்லா ரோஜா பாடல். (ஆனால் இது தான் தனக்கு பாலு பாடிய முதல் பாடல் என்று அவர் சீரியஸாக இருக்கும் போது சிவகுமார் சொன்னார்) 

பாலு இறந்த பிறகு "மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்" தனக்கு முதல் பாடல் என்றார். 

இது தான் உண்மை. 


அதன் பிறகு சிவகுமாருக்கு எத்தனையோ பாடல்கள் பாலு பாடி விட்டார். 

"உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி "

குறிப்பிடத்தக்கது. 

ஒரு பெரிய பட்டியலாக பாடல்கள். 


நடிகர் சிவகுமார் எண்பத்தேழு நடிகைகளுக்கு ஜோடியாக நடித்தவர். 

அவருடைய திரையுலக வாழ்க்கை 

ஒரு வித்யாசமான 'சீர்த்தன்மை' கொண்டது. 


அனுபவங்கள் விசேஷமானவை. 

'இது ராஜபாட்டை அல்ல ' என்ற நூல் அவரை எழுத்தாளராக அடையாளம் காட்டுகிறது. 


 காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் ஓவியர். 

ஒரு ஹீரோவுக்கு இசைந்து வராத இயல்பு ஓவியம் வரைவது. அந்த வகையில் மற்ற கதாநாயக நடிகர்களிடமிருந்து வேறுபட்டவர். 


நல்ல வாசகர். 

நவீன தமிழ் இலக்கிய பரிச்சயமுள்ளவர். 

ஓவியர்களில் வாசக குணம் அபூர்வம். 

நடிகர்களிலும் வாசிப்பு என்பது அரிதான விஷயம். 


பேச்சாளர். 


இதெல்லாமே சிவகுமாரின் ஆளுமைக்கு

 சிறப்பான அந்தஸ்தைப் பெற்றுத் தருகின்றன. 


இரண்டு பிரபல நடிகர்களின் தந்தை. 

அவருடைய மருமகள் கூட பெருமைக்குரிய நடிகை. 


கொடுத்து வைத்தவர் என்று

 எல்லோரும் மலைக்கும்படியான வாழ்க்கை.


Fotos 


1. Sivakumar 


2, 3. S. P. Balasubramaniam


https://m.facebook.com/story.php?story_fbid=2808815829331865&id=100006104256328

Oct 27, 2020

அந்திம காலம்



எழுத்தாளர் சுஜாதா தான் மறைவதற்கு சில வருடங்களுக்கு முன் தன் அந்திம காலம் பற்றிய துக்கத்தை வெளிப்படுத்தினார் :

" நீண்ட வாழ்வின் இறுதியில் உள்ள சோகங்கள் சற்றே துருத்தி நிற்கின்றன.

வானவில் கனவுகள் 

நிறமிழந்து விட்டது தெரிகிறது."


'To view with hollow eye and wrinkled brow

An age of poverty.'

- Shakespeare - The Merchant of Venice 


" மீனோட்டம் " சிறுகதை தொகுப்பு முன்னுரையில் லா.ச.ரா வாழ்க்கையின் மாலையில் தான் இருப்பதாக குறிப்பிட்டு விட்டு ' மாலை என்ன ..அந்தியே வந்தாச்சு " என்பார். 

இப்படி சொன்னது 

லா.ச.ரா இறப்பதற்கு

 கால் நூற்றாண்டுக்கு முன்னரே. 


"Age, with his stealing steps,

Hath clawed me in his clutch." 

- Hamlet


இளமையில் உலகின்பக்கேணியில் மூழ்கி முக்களித்த பின் அந்திம காலம் தரும் துயரம். 

' அந்தி ' என்ற தலைப்பில் ஆதவன்

 ஒரு அருமையான கதை எழுதியிருக்கிறார். 


முதுமை மரணம் பற்றி ' கழுகு ' என்ற கதை தி .ஜானகிராமன் எழுதியிருக்கிறார். 


முதுமையின் வக்கிரம் பற்றி 'பாயசம் ' என்ற கதை, 'அவலும் உமியும்' குறுநாவல் எழுதியிருக்கிறார்.


"And as with age his body uglier grows,

So his mind cankers."

- The Tempest


 முதுமையின் அவலம் " விளையாட்டு பொம்மை '' என்ற திஜாவின் அபூர்வமான சிறுகதை.

பிராயமான காலத்தில் பிரகாசிக்கும் கூர்ந்த ஊடுருவும் புத்தி சக்தி 

கடைசியில் எப்படியெல்லாம் மழுங்கி விடுகிறது. 


" Sir, I am too old to learn."

- King Lear 


இந்திரா பார்த்தசாரதியின் 'வெய்யில் 'மறுபக்கம் ' என்று திரைப்படமானது .


பல எழுத்தாளர்கள் கடைசியில் வயதான காலத்தில் குருவிமுட்டைகளை போடடுத்தளளுவார்கள். மழுங்கிய எழுத்து.

"When the age is in, the wit is out"

- The Merchant of Venice 


கடைசி காலம் தன் தோல்விகள் பற்றி 

அசை போடும்போது தான் காணாத

 வெற்றிகளை தன் புத்திரன் காணவேண்டும்

 என மனித மனம் ஏங்கும். 

ஒருவர் தன்னை மற்றவர் ஜெயிக்கவேண்டும் என்று விரும்புவது தன் மகன் விஷயத்தில் தான். 

 " புத்ராத் இச்சேத் பராஜயம் "


ஆர்தர் ரைம்போ நல்ல இளமையில் இருக்கும்போதே முதுமை பற்றி கவிதை எழுதிவிட்டான் - நாகார்ஜுனன் மொழிபெயர்ப்பு :

புறப்பாடு

"போதும்

பார்த்தாகி விட்டது. 

எல்லாவிதமும்

சந்தித்தாகி விட்டது

பார்வையதை. 

போதும். 

நகரங்களின்

மாலையின்

கதிரவனின்

சந்தடி போதும் எப்போதுமாக. 

போதும்

அறிந்தாகிவிட்டது

வாழ்க்கையின் நிறுத்தம் பல

ஓசை பல

பார்வையும்


இனி புறப்பாடு."


இக்கட்டான சோகமான நிலையை,

பரிதவிப்பான நிலையை

Moment of Calvary என சொல்வார்கள்.                    முதுமைக்கால மன நிலையே,

மரணத்தை மட்டுமே எதிர்கொள்ளும் நிலையே Moment of Calvary தானே.

.. 

Oct 26, 2020

Classic as fuck

 Classic as fuck என்று ஒரு idiom  உண்டு. 

Something that is extremely timeless and 

will never get old. 


Poetry is classic as fuck. 


" All poets write bad poetry. 

Bad poets publish them. 

Good poets burn them "

- Umberto Eco


"எப்போதும் எனக்குக் கவிதை குறித்து 

சந்தேகம் உண்டு. 

கவிதையைப் புனித வாக்கு என்கிறார்கள்.                               கொஞ்சம் முயற்சி எடுத்தால் 

யார் வேண்டுமானாலும் 

அந்தப் புனித வாக்கை 

எழுதி விட முடியும்." 

- அசோகமித்திரன்


கே. ராணி என்ற சிறுமியும் சுப்பராமன் என்ற இளைஞனும்

 கே. ராணி பல திரைப்படங்களில்

 பின்னணி பாடகி. 

நாகூர் அனிஃபாவுடன் இவர் பாடிய 

இஸ்லாமிய பாடல்கள் பிரபலமானவை. 


தேவதாஸ் படத்தில்

 'எல்லாம் மாயை தானா?

 பேதை எண்ணம் யாவும் வீணா? 

ஏழை எந்தன் வாழ்வில் 

இனி இன்பம் காண்பேனா?' 

காதல் தோல்வி பாடல். 

இதை பாடியவர் கே. ராணி என்ற பாடகி என்பது தெரியும். 

ஆனால் இந்த பாடலை பாடிய போது அந்த ராணிக்கு ஒன்பது வயது தான் என்பது

 இந்த மாதம் தான் தெரிய வந்தது.

 பால்யத்தில் இப்படி உருக்கம், பாவம் பூரணமாக ஒரு குழந்தையால் பாடமுடிந்திருக்கிறது. 

எட்டு வயதிலேயே பாட ஆரம்பித்திருக்கிறது  

இந்த குழந்தை. 

Child prodigy. 


வடநாட்டுப் பெண். பூர்வீகம் கான்பூர். 

2018ல் ஹைதராபாத்தில்

 கே. ராணி இறந்திருக்கிறார். 


இன்னொரு விஷயம். 


சி. ஆர். சுப்பராமன். தேவதாஸ் படத்தின் இசையமைப்பாளர். 

எம். எஸ். விஸ்வநாதன் இவரிடம் பணி புரிந்தவர். 

ராமமூர்த்தியும் தான். 

இசையமைப்பாளர் சங்கர் (கணேஷ்) சுப்பராமனின் சகோதரர். 

இதெல்லாம் தெரிந்த விஷயம் தான். 


ஆனால் சி. ஆர். சுப்பராமன் 

மிகவும் இளைய இசையமைப்பாளர். 

'லவங்கி' படத்திற்கு இசையமைக்கும் போது இருபத்திரண்டு வயது. 

அதற்கு முன்னமே திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்றும் சொல்கிறார்கள். 

இவரும் Child prodigy தான். 


அவ்வளவு பிரபலம் அடைந்தவருக்கு 

வாழ்க்கை முப்பது வருடங்களுக்கு கூட 

வாழ லபிக்கவில்லை. 

இருபத்தெட்டு, இருபத்தொன்பது வயதில் இறந்திருக்கிறார். 

தேவதாஸ் படமே இவர் இறந்த மறுவருடம் தான்           வெளி வந்திருந்திருக்கிறது. 


இந்த விஷயமும் இப்போது தான் 

எனக்கு தெரிய வந்தது. 

இவ்வளவு காலம் தெரியாமல் இருந்திருக்கிறேன்.

'சி. ஆர் சுப்பராமன் ஆர்மோனியப்பெட்டி மீது விஸ்கி பாட்டிலும் சிகரெட் பாக்கெட்டும் இருக்குமாம்.' இளையராஜா இப்படி சொல்லியிருப்பதை            இன்று படித்தேன்.

Oct 24, 2020

மனம் ஒரு குரங்கு

 சுக துக்கங்களில் பெரும்பான்மை வேண்டாதவை தான். 


பல வருடங்களுக்கு முன்பு கேள்விப்பட்ட விஷயங்கள் நினைவுக்கு வருகிறது. 

அண்ணா பல்கலைக்கழக விடுதியில் சிவில் என்ஜினீயரிங் முதலாமாண்டு மாணவி. 

படிக்க முடியாததால் துப்பட்டாவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள். விவசாயக் கூலி தொழிலாளியின் மகள். 

அவள் பெயர் தைரிய லட்சுமி. 


அண்ணா பல்கலை என்றவுடன் அண்ணா சொன்ன ஒன்று நினைவுக்கு வருகிறது. 

" நான் சென்னையில் இருந்து செட்டி நாட்டுக்குச் செல்கிறேன். சென்னையில் வீடுகள் இல்லா மனிதர்கள். செட்டி நாட்டிலே மனிதர்கள்"

 இல்லாத வீடுகள். 


இப்போது ஆரோக்கியமான நாகரீக அரசியல் பார்க்க முடிகிறது. 

எடப்பாடி அம்மா இறப்புக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். 

இரண்டு வருடங்களுக்கு முன்பு இதெல்லாம்

நடக்காத விஷயம். 


மேற்கு வங்க மாநிலம் பற்றி கேள்விப்பட்ட விஷயம். 

மார்க்சிஸ்ட் கட்சியினருடன் திருமண உறவு கூடாது. அவர்களின் உறவினர்களைக் கூட திருமணம் செய்யக் கூடாது என்று தொண்டர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் உத்தரவிட்டிருந்ததாம். 

திரிணாமுல் தொண்டர்கள் மார்க்சிஸ்ட் தொண்டர்களுடன் சேரக்கூடாது. அருகில் அமரக்கூடாது. டீக்கடைகளில் அவர்கள் சந்திக்க நேர்ந்தால் கூட அவர்களுடன் பேசக்கூடாது என்று கட்சி கட்டுப்பாடு இருந்திருக்கிறது. 

இன்று அநேகமாக பி. ஜே. பி குறித்தும் 

ஒரு வேளை மம்தா இப்படியே உத்தரவிட்டிருக்கலாம். 


இன்னொரு அபத்தம் ஒன்று சம்பந்தமேயில்லாமல் நினைவுக்கு வருகிறது. 

ச்சே மனம் ஒரு குரங்கு. 


கோவை துடியலூர் ஒட்டி பூச்சியூர்  நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே குறிப்பிட்ட சமுதாய குல தெய்வங்கள். தொண்டம்மாள், மகாலட்சுமி, வேட்டக்கார சாமின்னு.. 

சிவராத்திரியில் விடிய விடிய திருவிழா நடக்கும். கோவில் பூசாரி முள் செருப்பு அணிந்து நடந்து வருவார். பெண் பக்தர்கள் தரையில் படுத்துக் கொள்வார்கள். அவர்கள் மீது பூசாரி முள் செருப்புடன் நடிப்பாராமே. 


மக்கள் பிரார்த்தனை என்பது begging தான் என்பார் பெர்னாண்டஸ் ஷா. 

அதை விட மோசம். 


Enough Sorrow.

Bigg Boss 4 and C-A-M-U-S

 Bigg Boss 4

1st day. 


அனிதா சம்பத்திடம் பிக்பாஸ் முடித்து

 வீட்டுக்குப்

போன பின் 

புத்தகம் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 

ஆல்பர் காம்யுவின் ( C-A-M-U-S spelling எல்லாம் சொன்னார் ) 

'Pandemic ' படிக்க வேண்டிய நாவல் என்று குறிப்பிட்டார். 

The essence of snobbery. 

Great fodder for comedy. 


அந்த நாவல்' The Plague.' 

சரி Plague கூட Pandemic தான். 

ஆனால் நாவல் பெயரை தப்பாக சொல்லக்கூடாது.


காம்யு 'The Plague' நாவலை கமல் படிக்கவில்லை.


Hypocrite reader - my fellow - my brother!

- Charles Baudelaire 


https://m.facebook.com/story.php?story_fbid=2840755346137913&id=100006104256328


http://rprajanayahem.blogspot.com/2018/09/blog-post_5.html?m=0

Oct 21, 2020

Bigg Boss 4 - Mask and Social distance

 Bigg Boss 4 


முதல் நாள் கொஞ்ச நேரம் பாத்தது. 

அப்பறம் இன்னக்கி சில காட்சிகள பாத்ததுல 

தோணுச்சி. 


"என்ன தான் வெளியே கரோனா செக் அப் ஃபார்மாலிட்டீஸ்லாம் முடிச்சுட்டு பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்திருந்தாலும் 

Mask, Social distancingலாம் தேவையில்லயா? 

மீன் மார்க்கெட் மாதிரி ஒரே கச்ச கச்ச. கரோனாவுக்கும் இவங்களுக்கும்

 சம்பந்தமில்லயா? கோவிட் பயம் வேண்டியதில்ல                                    போல தெரியுது."


Nobody is capable of really thinking about anyone,                             even in the worst calamity. 


- Albert Camus in 'The Plague' 


.... 


https://m.facebook.com/story.php?story_fbid=2852218358324945&id=100006104256328

Oct 20, 2020

சக்ரவாகமா? சரஸாங்கியா?

 சக்ரவாகம் 16வது மேளகர்த்தா ராகம். 

ஹிந்துஸ்தானி ஆஹிர் பைரவ். 

வயலினில் எல். சுப்ரமணியம் இந்த ராகத்தை இழைத்து இழைத்து வாசித்திருப்பதை கேட்கலாம். 

'எதுலோ ப்ரோதுவோ 'என ஜான் ஹிக்கின்ஸ் பாடியிருப்பதை கேட்டு ஆனந்தப்படலாம். 


சரஸாங்கி 27 வது மேளகர்த்தா ராகம். 


இதனுடைய ஜன்ய ராகங்கள் தான் நளினா காந்தி, 

கமல மனோகரி. 


சரஸாங்கி ஹிந்துஸ்தானியில் நாட்பைரவ். 


' மெனு ஜூச்சி மோஸ போகவ மானஸா ' தியாகராஜ கீர்த்தனை சரஸாங்கி. 

Don't be deceived by looking at the body(of women) 

' பொம்பள ஒடம்ப பாத்து ஏமாந்து போயிடாத'


சினிமா பாடல்னா ' மீனம்மா மீனம்மா' ன்னு ரஜினி பாட்டு சரஸாங்கி ராகம். 


'சின்ன ராசாவே கட்டெறும்பு உன்ன.. '

 சரஸாங்கி தான். 


காலகாலமா சக்ரவாகம்னு இசையமைத்த விஸ்வநாதன் கூட சொல்லிக்கொண்டிருந்த பாடல் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உோறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா" 


"இந்த பாடல் சக்ரவாகம் அல்ல. சரஸாங்கி" என்று கர்நாடக சங்கீத பாடகர் டி. என். ஷேச கோபாலன்       பல வருடங்களுக்கு முன்பு சொன்னார்.

 அவரை விட பெரிய சங்கீத சமுத்திரம் தான் இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியும்.                                                      சங்கீத கலாநிதி சேஷகோபாலன். 


இங்கே கர்நாடக சங்கீதம் கேட்க ஆரம்பிப்பதற்கு முன்பே பலருக்கும் 'ராகத்தை எப்படி கண்டு பிடிக்கறது' ங்கற கவலை ஏன்? 


பலரும் சக்ரவாகம் என்று நம்புவதை சரஸாங்கி என்று இன்னொரு விற்பன்னர் கூறி விட்டார். 


சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நா பழக்கம். 

பழக, பழக வரும் இசை. 


கேட்க கேட்கத்தான் புரியும் ராகம். காதில் விழ, விழ ராகங்களின் ஜாடை, அடையாளம் தெரியும். 


சக்ரவாகத்தில் பிரபலமான  சில சினிமா பாடல்கள் உண்டு. 


'நீ பாதி, நான் பாதி கண்ணே' வஸந்த் பட பாடல். 


'தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு ' சக்ரவாகம். 


சங்கராபரணம் படத்தில் கர்நாடக சங்கீதம் தெரியாத எஸ். பி. பாலசுப்பிரமணியம் அட்சர சுத்தமாக பாடினார். 

சங்கராபரணத்திற்கு இசையமைத்தவர் 

கே. வி. மகாதேவன். 

மகாதேவன் மாமா அப்போது அடக்கத்துடன் சொன்ன விஷயம் பலரையும் அதிரச் செய்தது. 

அவர் அப்படி சொல்லாமல் மேட்டிமைத்தனத்துடன் பாராட்டுகளுக்கு பெருமிதப் புன்னகையையே

 பதிலாக தந்திருக்கலாம். 

ஆனால் அவர் கர்வமேயில்லாமல் 

வெள்ளந்தியாக சொன்னார் : "எனக்கு

 கர்நாடக சங்கீதத்தில் பதின் மூன்று ராகங்கள் தான் தெரியும்" 


சத்குரு. 


எந்தரோ மஹானுபாவலு, அந்தரிக்கி வந்தனமு.

காலத்தின் அசுர உருவம்

 "பீக் அவர் என்ற உருவில் காலம் நாலு வண்டி ஆட்களை ஒரு வண்டியில் அடைத்து நசுக்கிப் பிழிகிறது" 


1954ல் 'சிவப்பு ரிக் ஷா' கதையில் இதை சொல்லியிருக்கிறார் தி. ஜானகிராமன். 


கரோனா கண்விரித்து பார்த்து

 இந்த நீண்ட அராஜகத்திற்கு 

ஒரு பிரேக் போட்டிருக்கிறது. 


சிட்டி பஸ் ஸ்டாண்டில், அடுத்தடுத்த பஸ் ஸ்டாப்களில் மாலை மறைகிற நேரங்களில் பஸ்சுக்கு நிற்கிற வயதானவர்கள் , நடுத்தர வயதினர், இரு பால் இளையவர்கள் முகங்கள் திகில் பூசி, எப்போதுமே இருந்ததை மறக்க முடியாது. 


தி. ஜானகிராமன் " வீட்டின் அமைதியை நோக்கிப் பறக்கும் மனித வர்க்கத்தின் முக வாட்டத்தையும் அலுப்பையும் வியர்வையையும் பார்க்கும் போது, காலத்தின் இந்த அசுர உருவந்தான் கண் முன் நிற்கிறது." 


'காலத்தின் அசுர உருவம்' - 

அறுபத்தாறு வருடங்களுக்கு முன்பு 

எழுதிய வார்த்தை. 


பீக் அவரில் டவுன் பஸ் ஏறிய பின் துன்பக்கேணியிலே இறங்கி விட்டது போன்ற நிரந்தர அதிர்ச்சி. 


மொஃபசல் பஸ், எக்ஸ்பிரஸ் பஸ் வெளியூர் பயணங்களில் இடையில் நிற்கிற ஊர்களில் இயற்கை அவஸ்தை தீர்க்க, சிறு நீர் கழிப்பிட சூழல், துர்நாற்ற அருவருப்பு.

 மலம் கண்ணில் காணாமல், 

வெளி வந்து மீண்டும் பஸ்ஸுக்குள் நுழைய முடிந்திருக்கிறதா? 


எலக்ட்ரிக் ட்ரெயின் ஏறுகிற, இறங்குகிற பதற்றத்துடன் கூட்ட நெரிசல் துக்கம். 


............. 


"Young man will do it if they come to it "


ஹேம்லெட்டில் ஒஃபீலியா சொல்கிறாள். 

உடலுறவை சொல்கிறாள். 

Young men have sex when opportunity offers. 


'மங்கள விலாசம்' என்ற வார்த்தை

 ஜானகிராமன் கதை 'அன்பு வைத்த பிள்ளை' யில் 


மங்கள விலாசம் - உடலுறவு. 


" அவனுக்கு எப்போது பார்த்தாலும் - கால தேசப் பிரக்ஞையில்லாமல் - மங்கள விலாசத்தில் இருக்க வேண்டும். "


..

Oct 19, 2020

ந. முத்துசாமியும் தி. ஜா. மரப்பசுவும்

 தி. ஜா மரப்பசு நாவலுக்கு 

சினிமாவுக்காக 

ந. முத்துசாமி முழுமையாக ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார். 

மரப்பசு நாவலை படமாக்க ஸ்ரீதர் ராஜன் 

செய்த முயற்சிக்காக 

முத்துசாமி இதை செய்திருக்கிறார். 

எண்ணம் ஈடேறவில்லை. 


"மரப்பசு ஸ்கிரிப்ட் எங்கே சார்? "


முத்துசாமிக்கு சொல்ல முடியவில்லை. 

" இங்கே தான் வீட்டில எங்கேயோ இருக்கணும். "


அவருடைய பிறந்த ஊர் புஞ்சைக்கு 

மனம் தாவி விடும். 

" புஞ்சயில தீட்டான பெண்கள் அதிகாலை                                   குளத்துக்குப் போய் குளிச்சிட்டு வந்து 

கொஞ்சம் பச்சரிசியுடன்

 ரெண்டு உப்பு சேத்து சாப்பிடுவாங்க"


" நேட்டால் ஆர். கே நாயுடு தென்னாப்பிரிக்காவில் இருந்தார். புஞ்சக்காரர். அங்க இருக்கும் போது இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை                  கிண்டல் செய்திருக்கிறார். பிரச்சினையாகிடுச்சு. அதனால தென்னாப்பிரிக்காவில் இருந்து கிளம்பி இங்க புஞ்சைக்கு வந்துட்டார். நேட்டால் நாயுடு எங்கப்பாவோட நல்ல சிநேகிதர். நான் சின்னப்பையனா இருக்கச்ச 

அந்த நேட்டால் நாயுடு வீட்ல சாப்பிட்டிருக்கேன். 

எனக்கு ஏழு வயசு இருக்கச்ச 

எங்கப்பா செத்துப்போயிட்டார் "


முத்துசாமி மனம் புண்படும்படி

 பிறர் நடந்து கொள்ளும் போது 

வேதனையோடு சொல்வார்

 " அற்ப சுபாவங்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை "


" விழாக்கள், அதி்ல் நடக்கும் சடங்குகள் மரபு சார்ந்த விஷயங்கள். சடங்குகள் அவசியம். ஒருவருடைய இழப்புக்கு சடங்குகள் தான் முற்றுப்புள்ளி வைக்கின்றன" என்பார்.


... 

Rembrandt 's DANAE

 Rembrandt - the greatest visual artist 

His popular painting 
"DANAE "

இந்த கிரேக்க நாயகியின் ஓவியம் வரைவதற்கு மாடல் ஆக 
ஒத்துழைப்பு அவரது மனைவி தான். 

ஆனால் மனைவியின் முகத்தை மாற்றி விட்டு 
தன் அபிமான தாரத்தின் முகத்தை 
மனைவியின் உடலில் வரைந்தான்.
ஓவியத்தின் உடல் பகுதி ஒரு பெண்ணுடையது. 
ஓவிய முகம் இன்னொருத்தியுடையது.

Oct 17, 2020

கெட்ட ஆவிகளும் குடியானப்பயல்களும்

 கெட்ட ஆவிகளும் குடியானப்பயல்களும்

- R.P. ராஜநாயஹம்


மதுரை மேலச்சித்திரை வீதியில் ஒரு ரெடிமேட் ஷோ ரூம் இருந்தது. அந்த கடைக்குப்போயிருந்தேன். அந்த முஸ்லீம் சகோதரர்கள் என் நண்பர்கள் தான்.


நான் போன நேரத்தில் ஒரு அஜரத் அங்கு வந்தார். அவர் துவா செய்து விட்டு அகமதைப் பார்த்து சொன்னார்.” இங்க நெறைய கெட்ட ஆவிகள்.” மீனாட்சியம்மன் கோவிலைக்காட்டி சொன்னார். ”நம்மவங்க கடைகள் இதனால் பாதிக்கப்படக்கூடாது.இதுக்காக நாங்க தினமும் பள்ளிவாசலில் துவா பண்ணுறோம்.”


அவர் என்னையும் முஸ்லீம் என்றே நினைத்து பேச ஆரம்பித்தார். நான் திருநீறு குங்குமம் பூசாமல் இருந்ததால் என்னையும் பாய் என்று நினைத்து விட்டார். 

அருவருப்பாக மீண்டும் கோபுரத்தை பார்த்து விட்டு ”குடியானப்பயல்கள்’’ என்றார்.


 காஃபிர் என்றே இந்துக்களைப்பற்றி குறிப்பிட்டுப் பேசுவார்கள் என்பது தெரிந்ததே. 

குடியானப்பயல் என்ற வார்த்தையும் இந்துக்களை குறிக்கும் என்பது தான் தெரியாததே!


அகமது,முகமது,இஸ்மாயில் எல்லோருக்கும் தர்மசங்கடம். 

அஜரத் அவர்களைப் பார்த்து கேட்டார்.” நம்ம மாதிரி அசல் மொசல்மானுக்கும் இந்த குடியானப்பயல்களுக்கும் என்ன வித்தியாசம்?”


அவர்கள் என் இருப்பு காரணமாக பதில் சொல்லத்தயங்க, 

அஜரத் திரும்பி என்னைப் பார்த்து

 ‘’ சொல்லுங்கத்தா. நீங்க சொல்லுங்க. நம்ம மாதிரி அசல் முசல்மானுக்கும் இந்த குடியானப்பயல்களுக்கும் என்னத்தா வித்தியாசம்?”


ஒரு வழியா  சிரமப்பட்டுஅகமது’அஜரத்து,அஜரத்து’ என்று வாய் விட்டுக் கூப்பிட்டு ஜாடை செய்து 

நான் ஒரு குடியானப்பயல் என்பதை 

விளக்கும் படியானது. 


அஜரத் முகம் வெளிறி பின் சற்று இறுகி, அவர்களை கோபமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு(‘சீ  நீங்கள்ளாம் முசல்மான் தானா? குடியானப்பயலோடெல்லாம் பழகும் பச்சைத்துரோகிகள்.’) வெளியேறினார்.


இஸ்மாயில் என்னைப் பார்த்து நெளிந்து சிரித்தான்.

முகமது ‘மனசுல வச்சுக்காதீங்க’ என்றான்.


இந்த சம்பவம் 35 வருடங்களுக்கு முன்பு நடந்தது. 


முன்னர் ஒரு தடவை ஒரு முஸ்லீம் பார்பர் அவர்களுக்கு மாடியில்முடி வெட்டும்போது  ’எனக்கும் முடி வெட்டிக்கொள்ளட்டுமா’என

 நான் சகஜமாய்  கேட்டபோது

‘ இவர் முசல்மானுக்கு மட்டும் தான் முடிவெட்டி சேவ் பண்ணுவார்’’ என்று அகமது சொன்னது ஞாபகம் வந்தது. ரொம்ப ஆச்சாரமாய் நாவித தொழில் பார்க்கும் அந்த பார்பரை ஆச்சரியமாய் பார்த்தேன். 


‘கூன் பிறையை போற்றிடுவோம்

குர் ஆனை ஓதிடுவோம்

மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம்


நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா

பிறர் நலனை விரும்பி நானும் வேண்டவா

யாரும் வருவார் யாரும் தொழுவார்

நாகூர் ஆண்டவன் சன்னிதியில்

நானும் உண்டு நீயும் உண்டு

நபிகள் நாயஹம் முன்னிலையில்’


’அணையா விளக்கு’ படத்தில் மு.க.முத்து சொந்தக்குரலில் பாடிய இந்தப் பாடலை

 நான் என் முஸ்லிம் நண்பர்களை சந்திக்கும்போது பலமுறை பாடியிருக்கிறேன்.

‘ ராஜநாயஹம், நீங்க எங்க மார்க்கத்தில் பிறந்திருக்க வேண்டிய ஆள். ’ என்று நெகிழ்வார்கள்.


  உறவினர்கள் போலவே முசல்மான்கள் நட்புடன், உண்மை அன்புடன் மற்ற மதத்தவர்களுடன் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள். 


மதவெறியர்கள் எல்லா மதத்திலும் உண்டு. அவர்கள் தான் மற்ற மதத்தினரை 

தங்கள் Convictions காரணமாக அவமானப் படுத்துவார்கள். 


Convictions are more dangerous than lies. 


........................


https://m.youtube.com/watch?feature=youtu.be&v=_gHYH7y4d40

Oct 16, 2020

உங்க பேர் என்ன? பெரிய பாக்கெட்டா?

 பள்ளிக்கூடத்தில் "சின்ன பாக்கெட்" என்று  தன்னை அழைக்கும் சிறுமிகளிடம் 

ஒரு குழந்தை கேட்கிறாள் "உங்க பேர் என்ன?                                          பெரிய பாக்கெட்டா?" 


கல்லூரியில் சீனியர்களிடம் கற்றுக் கொள்ள

 ஒரு விஷயம் உண்டு. 

ஜூனியர் அறிவை ஒளித்து வைத்து வெள்ளந்தியாக இருக்க வேண்டும். 


கல்லூரியில் புதிதாக சேரும் ஜூனியர்களிடம் 

கேட்கப் படும் கேள்விகள் 


1.என்சைக்ளோப்பிடியா? 


சரின்னு தலய ஆட்டி உடனே, உடனே சீனியரின் சைக்கிளைப்பிடித்துக்கொள்கிற 

ஜுனியர் பாராட்டப் படுவான். 


2.சைக்ளோட்ரான்? 


கல்லூரிக்குள் சைக்கிளோட்டிக்கொண்டு 

வருகிற ஒருவனை சுட்டிக்காட்டி விடவேண்டும். 


சீனியர்கள் கை கொடுப்பார்கள். 


சீரியஸாக அறிவை வெளிப்படுத்தி

 விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் அவ்வளவு தான். 

ராகிங் அதிகமாகி விடும்.



Oct 14, 2020

மு. நடேஷ்

 தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் பக்கமா     தாண்டி போக வேண்டியிருந்த போது 

ஒரு Associate memory 


மு. நடேஷ் சொன்ன விஷயம். 

கே. சி மணவேந்த்ர நாத் பற்றியது 

கிறிஸ்டியன் காலேஜ்ல ஒரு நாடகம். 

கே. சி நடிக்கும் போது நாய் ஒன்று நுழைந்து அவனை பார்க்கிறது. உடனே கலைஞன் கே. சி 

அந்த நாயிடம் பேசுகிறான். அதனிடம் டயலாக்.

 அது ஏதோ புரிந்து விட்டது போல கவனமாக கேட்டு விட்டு அந்த இடத்தை விட்டு போய் விடுகிறது.                  நாடகம் தொடர்ந்து நடக்கிறது 


நடேஷ் : சாதாரண விஜயங்கள்ள, வார்த்தைகள்ள மாட்டிக்கிட்டு இருக்கிறே. அதிலிருந்து வெளியே வந்தா தான் அனுபவம் கெடைக்கும்.


ஆசைய கையால பிடிக்க முடியுமா? 


Dynamic meditation. 


Inception படத்துல 

மனைவி போயிட்டா. ரொம்ப அறிவானவ. அவள மெமரிக்குள்ள போய் பாக்குறான். Dynamic meditation. 


போதை 

உயிரோட இருக்கிறதே ஒரு போதை. 


போதை 

ஒரு விஷயத்துக்குள்ள போய்

 அதுக்குள்ள இருக்கிறது தான் போதை. 


Body - mind ரெண்டும் சேர்ந்து தான் வேலை செய்யுது 


நடேஷ் பேசியதெல்லாம் இப்பவும் கேட்கிறது. 

சற்றும் அயர்ச்சி தராத, 

ஒவ்வொரு தடவையும் 

புதியதாக இருக்கும் நடேஷ் வார்த்தைகள். 


பயிற்சி மாணவர்களுக்கு நடேஷ் சொன்னது


பேச்ச சினிமாவும் சீரியலும் ஒழிச்சி கட்டியிருக்கு. 

கதையம்சம் விவரணையா கொண்டு வா. 

Sub Text ஆ படி. அப்ப வந்துடும் பேச்சு. Do it freely. 

சொல்லின் உள்ளர்த்தம் தொனியிலே ஏறனும். 


வெள்ளையும் கருப்பும் நெறமில்ல. இந்த ரெண்டு நெறத்தில எழுதிய வரிகளுக்கு உயிர் உண்டு. 


ஆலந்தூர் வருகிறது. 

அப்போது எனக்கு 

ந. முத்துசாமி நினைவு வருகிறது. 


அன்று ஆலந்தூரில இருந்த காலை 

தினமும்  குஞ்சலி மாமி ஆஃபிஸ் போன பின்

 இளைஞன் முத்துசாமி 

எழுதிக்கொண்டே தான் இருப்பார். 

'எமக்கு தொழில் எழுத்து, இமைப்பொழுதும் சோராதிருத்தல்'

Oct 12, 2020

Covid Virus and the president

 

Very Funny and Wacky character. 


Trump has all the mischievous quality 

of a school boy. 


White house physician Dr Conley did not say 

the president is now virus free. 


Donald Trump :"It looks like I'm immune for, 

I don't know, may be a long time 

and may be a short time,

 it could be a life time, 

nobody really knows, but I'm immune.

You have a president who is immune."


Mr Donald is convinced that his White house rival Joe Biden could himself be sick. 

"If you look at Joe, he was coughing horribly and grabbing his mask as he is coughing..

I don't know what that was all about."


Courtesy : The Hindu

.. 

Oct 11, 2020

'அதி மதுர' மதுர தங்கம் தியேட்டர்

 'அதிமதுர' மதுர சினிமா தியேட்டர்கள் ஏராளமாக. 

அவை அனைத்திலும் தங்கம் தியேட்டருக்கு முக்கிய அந்தஸ்து உண்டு. 


மதுரக்காரன் பெருமை பொங்க "ஆசியாவிலேயே பெரிய சினிமா தியேட்டர் 'தங்கம்' தான்டா" ன்னு பீத்துவான். 


சிந்தாமணி இதை விட பழைய தியேட்டர். 

நியு சினிமா, சென்ட்ரல், மீனாட்சி, அலங்கார், தேவி, கல்பனா, சினிப்ரியா, மினிப்ரியா, சக்தி 

இதிலெல்லாம் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும்.


பின்னால தான் ஆரப்பாளையம் குரு, 

நாட்டியா, நடனா, ஷா, சுந்தரம், மதி,

 மாப்பிள்ளை விநாயகர், இப்படி சில தியேட்டர்கள். 


 இங்கயிருந்து படத்த தூக்குனா சந்திரா, தினமணி, கணேஷ், இம்பீரியல், அரசரடி வெள்ளக்கண்ணு, மிட்லண்ட், பழங்காநத்தம் ஜெகதா, செல்லூர் போத்திராஜான்னு, கிருஷ்ணாபுரம் விஜயலட்சுமின்னு, நரிமேடு மூவிலண்ட்ன்னெல்லாம் சில தியேட்டருங்க. 

பழைய கறுப்பு வெள்ளை படங்கள். 

மதுர பழைய பட ரசிகர்கள் ரொம்ப பேரு. 


ரீகல், பரமேஸ்வரி பெரும்பாலும் 

இங்கிலீஷ் படங்கள். 


இந்திப்படங்கள் எல்லா முக்கியமான தியேட்டரிலும் -  தங்கம், சென்ட்ரல், மீனாட்சி, பரமேஸ்வரி, விஜயலட்சுமி, மினிப்ரியா, 


தங்கம் தியேட்டர்ல சிவாஜி பராசக்தி தான் 

முதல் படமா ஓடுச்சின்னு அந்தக்கால பெருசுக சொல்வாங்க. 

எம். ஜி.ஆர் 'கணவன்' ரிலீஸ் அப்ப 

டிக்கெட் கவுன்ட்டர் நெரிசல்ல 

ஒரு பொம்பள செத்து போச்சிம்பாங்கெ. 


அந்த காலத்துல மதுர சனத்துக்கு 

இந்த தியேட்டருங்க தான் வடிகால். 

பீச் பாத்தாங்களா, 

டி. வி. உண்டா? 


தியேட்டர் ஓனர்கள்ள அன்னைக்கி மதுர முழுக்க பிரபலம் சென்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம், மீனாட்சி தியேட்டர் சௌந்தர்ராஜன் ஆகிய இருவரும் தான். 

( காவல் தெய்வம் படத்தில் அந்த கௌரவ ரோலுக்கு சென்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரத்தைத் தான் சிவாஜி இமிடேட் செய்திருந்தார். 'சிவாஜி கணேசன்'  பதிவில் இதை குறிப்பிட்டிருக்கிறேன்.) 

நின்னு கவனிச்சி மலப்பாங்கெ. 

"டேய் சென்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரன்டா" ,

 "அப்பு, மீனாட்சி தியேட்டர் சௌந்தர்ராஜன்டா " 


தங்கம் தியேட்டர் மூடி விட்ட பிறகு, நான் 'ஹோட்டல் டைம்ஸ்' ல தங்கும் போது அறையின் பின் பக்க பால்கனியில் இருந்து பார்த்தால் பக்கவாட்டில் தங்கம் தியேட்டர் மாடி பால்கனி, கீழ் பகுதியெல்லாம் உட்கார்ந்து படம் பார்த்த இடமெல்லாம் பார்க்க கிடைத்தது. 

மனசு பழைய நினைவுகளில், அங்கே ஒவ்வொரு படமும் எந்த இடத்தில் உட்கார்ந்து பார்த்த அந்த ஞாபகங்கள் மேலெழும்பி.. Nostalgia. 


சென்ற வருடம் ஏப்ரலில் மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் பங்கேற்க 

வழக்கறிஞர் அசோக் அழைப்பின் பேரில் 

 உயர்நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்களுடன் கலந்து கொள்ள 

மதுரை சென்றிருந்த போது இப்போது சென்னை சில்க்ஸ் ஆகி விட்ட

 அந்த மறைந்த தங்கம் தியேட்டர்

 எதிரேயிருந்த ஹோட்டலில் தான் 

நான் தங்குவதற்கு அசோக் ஏற்பாடு செய்திருந்தார். 


அங்கே பார்த்த ஒவ்வொரு படமும் 

நினைவில் வந்தது. 


தங்கம் தியேட்டரில் 

யாரோடெல்லாம் படம் பார்த்திருக்கிறேன். என்னவெல்லாம் அப்போது நடந்திருக்கிறது.                        மாட்னி ஷோ, ஃ பர்ஸ்ட் ஷோ, 

எத்தனை செகண்ட் ஷோ...!

படம் பார்க்க வராத நாட்களிலும் 

தியேட்டர் முகப்பில் நின்று போஸ்டர்கள் பார்த்தது எல்லாம் வரிசை கட்டி மன நிழல்களாக..

கரு. பழனியப்பன் 'தமிழா தமிழா'

 கரு. பழனியப்பன் தமிழா, தமிழா 

ஒவ்வொரு ஞாயிறும் Zee தமிழ் 

பகல் 12 மணி சுவாரசியம். 


கரு. பழனியப்பன் நல்ல விறுவிறுப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார். 


27.09.2020  தமிழா தமிழா நிகழ்ச்சி 

பார்த்துட்டு இருந்த போது

இளமை நினைவொன்றை கிளர்த்தியது. 


அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது 

சாலையில் அழகான அம்மா மகளை 

இணைந்து நடந்து வருவதை 

காண நேரும் போதெல்லாம்

 நான் 

சொல்வது : "தாயும் சேயும் நலம்" 

உடன் இருவரின் 

Mental Salute கிடைக்கும். 

என்னுடைய இந்த' தாயும் சேயும் நலம் ' கமெண்ட் கோரிப்பாளையம், ஆரப்பாளையம் பகுதியில் மாணவர்கள் மத்தியில் என்னால் அப்ப பிரபலம்.


04.10.2020 தமிழா தமிழா பார்த்திட்டு இருக்கும் போதே

சம்பந்தமேயில்லாத 

 ஒரு  associate memory 


நான் மதுரை அமெரிக்கன் காலேஜ்ல படிக்கறப்ப லேடி டோக், மீனாட்சி காலேஜ், மற்றும் மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்கள்ள ஜீன்ஸ் பேண்ட் போட்ட நாரீமணிங்கள மட்டும் தான் "மாப்ள" ன்னு 

கனிவா கூப்புடுவேன்.


"மாப்ள, ஜீன்ஸ் அட்டகாசமா இருக்கே. எங்க எடுத்தீக? Smart and style. 

What is your name?"


ஜீன்ஸ் கேர்ள் ’சீறிய’ பதில் : "Idiot.."


உடன் எதிர்வினையாக என் இன்னொரு ’சீரிய’ கேள்வி "What is your Initial?!"


இன்னைக்கும் இப்பவும்

 ட்ரென்டியான கமெண்ட்ஸ் தான?

.. 

Oct 9, 2020

Disgrace and Discomfort

 Lady Macbeth : "It is the eye 

of the childhood

 that fears a painted devil" 


A ruffian says "You fear, there fore I am" 


கவி ஒரு குழந்தை. 


'கனவின் மனிதன்' தலைப்பிடப்பட்ட இந்த கவிதை 

குழம்பிய ஞானக்கூத்தன் 


"ஒருவனைக் கனவில் கண்டேன் 

உதடுகள் பற்கள் கண்கள் 

தலைமயிர் நகங்கள் கை கால் 

அனைத்துமே மனிதன் போல 

இருந்திடும் அவனைக் கண்டேன் 

கனவிலும் மனிதன் போலத்

தோன்றினால் மனிதன் தானா? "


வைத்தீஸ்வரன் கவிதையில் கடவுளின் விசாரம் 

' மரங்களை நம்பி 

பறவைகளைப் படைத்தேன்... 

அப்போது மனிதர்களை யோசிக்கவில்லை!'


Why be a  man when you can be a success? 

என்று திகைக்க வைக்கும்

 பெர்டோல்ட் ப்ரெக்ட் கேள்வி. 

தோற்பவன் தான் மனிதன்? 

அல்லது ஜெயிக்க முடிகிற போது

 மனிதத்தையும் கைவிடாமல்

இருக்க வேண்டியதன் அவசியம். 


மனிதன் பற்றி ப்ரெக்ட். 

" மனிதன் ரொம்ப உபயோகமானவன். 

அவனால் பறக்க முடியும் 

கொலை செய்யக்கூடியவன் 

ஆனால் அவன் ஒரு குறையுள்ளவன். 

அவனால் சிந்திக்க முடியும்."


திரும்பவும் ஷேக்ஸ்பியர் " There is no art to find 

the mind's construction in the face" 


Looks can be deceiving. 

மூடருக்கும் மனிதர் போல முகமிருக்குதடா 

- கண்ணதாசன் ஆதங்கம். 


குறள் - மக்களே போல்வர் கயவர் 


What power shapes a human's way. 

Disgrace and Discomfort.


சங்கீத கலாநிதி புல்லாங்குழல் ரமணி

 இன்று சங்கீத கலாநிதி புல்லாங்குழல் ரமணியின் நினைவு நாள். 

மாலியின் சீடர். 


தியாக பிரும்மத்தின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் எவ்வளவோ ஜாம்பவான்கள், இசைப்பேரரசிகள்,                   இளம் பாடகர்கள் பாடி எத்தனை ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன். 

ரமணியின் புல்லாங்குழலில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை கேட்பது விசேஷ தனி அனுபவம். 


2001ம் ஆண்டு தியாக பிரும்ம ஆராதனை திருச்சி மகாத்மா காந்தி வித்யாலயாவில் ஆலத்தூர் சுப்பையரின் மகன் ஆலத்தூர் தியாகராஜன் நடத்திய போது ரமணியின் கச்சேரி அன்று மாலை நடந்தது. 


இந்த புகைப்படம் 

காலையில் நடந்த பல 

இளம் பாடகர்கள் ஆளுக்கொரு கீர்த்தனை பாடினர் 

ஒரு பெண் ரஞ்சனி ராக துர்மார்கசரா பாடிய போது எடுக்கப்பட்டது என்பது துல்லியமாக நினைவில். 


ரமணி கேட்டு ரசித்து இளம் கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். உண்மையில்  தாங்கள் பாடுவதை ரமணி கேட்கிறார் என்பதே அவர்களை பரவசப்படுத்தியது. 


ரமணியின் அருகில் நான் சராக் தீன் டீ-சர்ட்டில். எனக்கு இடப்புறம் ஆலத்தூர் தியாகராஜனின் சகோதரர் வெங்கட்ராமன்.


மாலையில் ரமணியின் புல்லாங்குழல் இசைத்த 

பூர்ணசந்திரிகா ராக 'தெலிசி ராமா' 

இப்போது கூட காதில் பூவாய் வருடுகிறது.

.. 

Oct 8, 2020

வார்த்தைகள் விரைந்து செல்லும் எறும்புகள்

 'நினைவுப்பாதை' 

நாவலில் நகுலன் சொல்வார் 

"காகிதத்தின் மீது 

விரைந்து செல்லும் எறும்புகள் தானே வார்த்தைகள்" 


இப்போது லேப்டாப், மொபைலில் வாசிக்க காணும் வலைத்தள எழுத்தும் கூட நகுலன் சொல்வது போல 

" கொசுக்கள் பந்து போல் திரளாக 'நொய்' என்று சப்திப்பது போல் வார்த்தைகள் சப்திக்கின்றன. விரைந்து செல்லும் எறும்புகள். 

வலைத்தள தட்டச்சில் பிறந்து கணினியில் சலிக்கும் உருவங்கள்."

.. 


இருக்கிறபடி பார்த்த புரிதல்படி 

அப்படியெல்லாம் கூப்பிடக்கூடாது என்று

 இங்கே கொஞ்ச காலம் 

அரசியல் மிதப்பில் சொக்கிக்கொண்டிருந்த 

ஜெ. தீபா சொல்லிச்சு. 

" என்னுடைய டிரைவர் ராஜாவை

 டிரைவர் என்று யாரும் சொல்லக்கூடாது "


இல் பொருள் உவமை அணி. 


தீபாவின் பேரவை கட்சி முக்கிய பதவி கூட 

அந்த டிரைவருக்கு கிடைத்தது. 

தீபா கணவரிடம் அந்த டிரைவர் சீற்றத்துடன் 

" நகைய தூக்கிட்டுப் போன

 திருடன் தானடா நீ"ன்னு 

சண்டை போட்டதை

 டிவி செய்தியில் காட்டினார்கள். 

இல் வாழ்க்கை 

பிறன் பழிப்பதில்லாயின் நன்று. 


பாசம் படத்துல தன்னைச் சுற்றியுள்ள மூன்று அனுகூல சத்ருக்களைப் பார்த்து எம். ஆர். ராதா சொல்வார் : 'நீங்கள்ளாம் எதிரி இல்ல. திரி.' 


திரி டிரைவரா? கணவரா? 


மன நிலை பொறுத்து 

ஒரு நேரம் திரி, மறு நேரம் எதிரி. 


கொஞ்ச காலம் தான் என்றாலும் 

மறக்க முடியாத Funny Politician தீபா. 


.. 


எப்போதும் இருக்கும் யதார்த்த பழமொழி 

 இந்த கோவிட் 19 காலத்தில் 

முழு அர்த்தம் கொள்கிறது. 

ஜீவிதம், ஜீவனம் இரண்டுமே 

கடுமையான சவாலாகியுள்ளது. 

'மனுஷ்ய ஜீவிதம் அநித்யம். 

மனுஷ்ய ஜீவனம் அசத்யம்'


குறள் - சாதலின் இன்னாததில்லை 


There is a cure for everything except death. 


ஃப்ரான்சிஸ் கிருபா கவிதை 


'படைச்சி படைச்சி 

சலிச்சி போச்சி என்றான் 

கடவுள் 


அழிச்சி அழிச்சி 

சடைஞ்சி போச்சி என்றான் 

சாத்தான்


வாழ்ந்து வாழ்ந்து 

புளிச்சிப் போச்சி என்றான் 

ஒரு மனிதன் '

Oct 7, 2020

ஆஹா, பேஷ் பேஷ், சபாஷ், ஓஹோ

 ஒரு பாகவதர் மோகன ராகத்தில்

தியாகையரின் 'நன்னு பாலிம்ப்ப' 

விஸ்தாரமாக ஆலாபனையுடன் பாடும்போது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த 

ஒரு பிரகிருதியின் ஆகாகாரம், தலையாட்டல், கைத்தாளம், விரல் நீட்டி மடக்கி.. இப்படி. 

ஒரு மணி நேரம் பாகவதர் பிரமாதமாக 

பாடி முடித்த பின்

 அந்த ரசிக பிரகிருதி அவரைப் பார்த்து 

' சமிக்கணும். அடுத்து மோகன ராக கீர்த்தனை ஒன்னு பாடுங்கோ ' என்றதாம். 


 பிரபல நாதஸ்வர வித்வான் நடந்து கொண்டு 

' தாயே யசோதா ' 

வாசிக்கும் போது ஒருவன் கூடவே கைத்தாளம் போட்டு,  கண்ணை உருட்டி சிமிட்டி 

ரசித்துக் கொண்டு வந்தவன், 

வித்வான் வாசித்து முடித்ததும் சொல்லியிருக்கிறான் ' அடுத்து தோடி வாசிங்கோ '

ஒத்து ஊதுகிறவன் முதுகில் ஒரு சாத்து சாத்தி வித்வான் கோபத்தோடு சத்தமா சொன்னாராம். 'தோடி வாசிக்கிற நாதஸ்வரம் எங்கடா? 

வீட்டுல மறந்து வச்சுட்டு வந்திட்டியா?' 


வீணை தனம்மாள். 

தனம்மாள் தன்னுடைய வீணை வாசிப்புக்கு மிருதங்கத்தைப் பக்க வாத்தியமாக                     வைத்துக் கொள்ள மாட்டார்.

இவர் வீணை வாசிக்கிறார் என்றால், கச்சேரி கேட்க வந்திருப்பவர்களில் 'ஆகா, ஆகா' பரவசப்பட்டால், 'பேஷ், பேஷ்' என்று தலையாட்டினால்

 வீணை வாசிப்பதை தனம்மாள் உடனே               நிறுத்தி விடுவார். 

"இங்க இந்த கச்சேரிக்கு யாரோ 

ஒரு மகா ஞானஸ்தர் வந்திருக்கார்னு தெரியறது. இப்படி ஒருத்தர் முன்னாலே வீணை வாசிக்கிற யோக்யதை எனக்கு கிடையாது " என்று சொல்லி விடுவார். 


நாதசுர சக்கரவர்த்தி டி. என்.ராஜரத்தினம் அவர்கள் கச்சேரி சுதந்திரமாக 

செய்ய விரும்புவது வழக்கம்.

 மனோதர்மப்படி நாகஸ்வரம் அவர் விரும்பிய கீர்த்தனைகளை வெளிப்படுத்தும். 

கச்சேரியில் சீட்டு எழுதி அனுப்புவதை 

அவர் ரசிக்க மாட்டார். 

ராமேஸ்வரத்தில் ஒருமுறை ஒருவர் 

தோடி ராஜரத்னத்திடம் 

'மகுடி ' வாசிக்க சொல்லி அனத்தினார். 


வித்துவான் கொஞ்ச நேரம் 

சட்டை செய்யாமல் இருந்து பார்த்தார். 

 தான் விரும்பிய கீர்த்தனைகளை வாசித்துக்கொண்டிருந்தார்.


 ' மகுடி ' அனத்தல் அதிகமாகியது. 

உடனே நாகசுரத்தை 

மகுடி கேட்ட ரசிகரிடம் கொடுத்து 

அவரையே மகுடி வாசித்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டார்!

காலத்தை எதிர்த்து நீச்சு போடும் தி. ஜா

 தி. ஜானகிராமன் பற்றி ஆதவன் 

"புராதன இலக்கியக் கலை வடிவங்களுக்கும் நவீன இலக்கியக் கோட்பாடுகளுக்குமிடையே ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்க முயலும் நுட்பமான பரிசோதனைகளாக அவருடைய படைப்புகளில் பல எனக்குத் தோன்றுகின்றன. 

அதாவது இன்றையத் தேவைகளுக்கேற்ற 

ஓர் இந்திய இலக்கிய பாரம்பரியத் தொடர்ச்சியை இனம் கண்டு நிறுவும் முயற்சிகளாக. "


தி. ஜா இறந்த போது 'கணையாழி'யில் 

இப்படி ஆதவன் எழுதியிருந்தார். 


இதை 1989ல் ஜானகிராமனுக்கு நான் வெளியிட்டிருந்த நினைவு மதிப்பீட்டு மடலில் இணைத்திருந்தேன். 


ஆதவன் அப்போது இல்லை.

 1987ல் யதார்த்தமாகவே அவரை 

காலவெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது. 


அந்த கணையாழி இரங்கலில்

 இன்னும் சில வார்த்தைகள் கூட சொல்லியிருந்தார். 

பசுமரத்தாணி போல பதிந்து விட்ட ஒரு வரி :

" ஜானகிராமன் என்ற மனிதர் பற்றியும் பேசத் தோன்றுகிறது. ஆனால் இந்த ரசனையற்ற உலகில் பவித்ரமான நினைவுகளை அரங்கேற்றுவானேன் என்றும் தோன்றுகிறது. "


க. நா. சு 'கொட்டு மேளம்' தி. ஜானகிராமன் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டதையும் நினைவு மதிப்பீட்டு மடலில் சேர்த்திருந்தேன். 

" காலத்தை எதிர்த்து நீச்சுப் போடுவதென்பது சிரமமான காரியம். அதை இலக்கியப் பூர்வமாகவும், ஒரு அலட்சிய பாவத்துடனும் செய்திருக்கிறார் ஜானகிராமன். " 


க. நா. சு 1950களில் சொன்ன வார்த்தைகள். 

காலத்தை எதிர்த்து எப்போதும் நீந்திக் கொண்டே இருக்கும் படைப்புகளை தந்துவிட்டுப் போயிருக்கிறார். தி. ஜா. 


இதே தி. ஜா நினைவு மதிப்பீட்டு மடலில் வண்ணதாசன் எழுதிய வரிகள் ஒரு கடிதத்தில் எழுதப்பட்டதாகும். 


வண்ணதாசனுக்கும், வண்ணநிலவனுக்கும் வாலிபக்காலத்தில் உற்சாகமாக கடிதம் எழுதியிருக்கிறேன். இருவரிடமும் இருந்து 

பதிலே வரவில்லை. 

வண்ணதாசன் அப்பா தி. க. சி 

அடிக்கடி கடிதம் எழுதுவார். 


பழனியில் நான் அக்கவுண்ட் வைத்திருந்த பேங்க் மேனேஜர் ஒருவர் ஆர்வமாக கவிதை எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கு அன்னம் 

நவ கவிதை வரிசையில் 

கல்யாண்ஜியின் 'புலரி' 

நம்பிராஜன் 'ஆகாசம் நீலநிறம்' 

வண்ண நிலவன் 'மெய்ப்பொருள்' 

மூன்றும் கொடுத்து படிக்கச் சொன்னேன். 


அப்புறம் நவ கவிதை வரிசையில் வராத         கலாப்ரியா 'மற்றாங்கே' 


படித்து விட்டு கவிதை வேறு மாதிரி என்று பேங்க்கர் புரிந்து கொண்டார். 


அப்புறம் அவர் எழுதிய கவிதையொன்றை மா. அரங்கநாதனின் 'முன்றில்' பத்திரிக்கை விலாசம் கொடுத்து அனுப்ப சொன்னேன். 

முன்றிலில் பிரசுரமானது. 


வண்ண தாசன் பேங்க் ஆஃபிசர். அம்பாசமுத்திரத்தில் வேலை பார்க்கிறார் என்று நான் சொன்னேன். உடனே பழனி பேங்க் மேனேஜர் அவருக்கு கடிதம் போட்டார். எனக்கு பதில் எழுதாத வண்ணதாசன் இவருக்கு உடனே பதில் எழுதினார். ஒரே மனவாடு. இவரும் பேங்க்க்கு. அவரும் பேங்க்க்க்க்கு. ஸ்டேட்டஸ். .?! 

நானோ பேக்கு. 


வண்ணதாசன் அந்த பழனி அமெச்சூர் கவிஞருக்கு எழுதிய பதிலில் எழுதியிருந்ததையும் 

தி. ஜானகிராமன் மதிப்பீட்டு மடலில் சேர்த்தேன். 


அந்த கடித வரிகள் " புதுமைப்பித்தனும் 

தி. ஜானகிராமனுமான மனமும் வாழ்வும் நமக்கு அமைந்தால் போதும். இரண்டு பேரின் அக்கறையையும் வீச்சையும் தாண்டி, நம் வாழ்வோ அல்லது இலக்கியமோ ஒரு அங்குலம் கூட அப்புறம் நகர்ந்து விடப்போவதில்லை."

Oct 5, 2020

We shall overcome

 கடல் புழுக்கம், மலை வெக்கையில் இருக்கும் போது                ஒரு irritation ஏற்படும். 

கோவிட் -19 அப்படி ஒரு மன நிலையை ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. 

எதிர்கால திட்டங்கள்  மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். 


தி. ஜா 'இக்கரை பச்சை' கதையில் திட்டம் பற்றி 

" பாம்பு வாயில் தவளை, தவளை வாயில் வண்டு, அந்த வண்டு எதிரேயிருந்த சிலந்தி வலையில் சிக்கின ஒரு பூவைக் கண்டு தேன் குடிக்கத் திட்டம் போட்ட சந்தோஷம் ஒன்று அவனுக்கு ஏற்பட்டது. "


People can do strange things when under pressure. 


பூனைகள் புழங்கும் இடத்தில் தான் 

எலி தன்னுடைய பேரன் பேத்தியெல்லாம் பார்க்கிறது என்று கலாப்ரியா

 ஒரு சொலவடையை கவனத்திற்கு 

கொண்டு வந்தார். 


 Survival of the fittest. 


Don't settle for nothing less than what you deserve. 


நான் அடிக்கடி பாடும் பிரபல பாடல். 

ஜோன் பெய்ஸ பாடிய இந்த பாடல். 


We shall overcome, 

We shall overcome, 

We shall overcome some day, 

Deep in my heart I do believe 

We shall overcome some day. 


..

இந்து தமிழ் திசை புரட்டு

 சச்சிக்கு எழுதிய tribute ல் 

அவருடைய வீட்டில் கலைஞர் குடியிருந்தார் என்பதை குறிப்பிட்டிருந்தேன். 

உதய சூரியன் சின்னம் பற்றி சச்சி சொன்னதையும் பதிந்திருந்தேன். 


நான் இதை 2016லேயே என் Facebook, Blog இரண்டிலும் எழுதியிருக்கிறேன். 


 சச்சியை அவ்வமயம் கூத்துப்பட்டறைக்கு

 லோர்க்கா  நாடகம் 'Play without a title' மொழிபெயர்ப்பு செய்து தரச்சொல்லி சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது நான் எழுதியிருந்த அந்த பதிவின் மூன்று பிரிண்ட் - அவுட் காப்பி அவருக்கு கொடுத்தேன். 

அதை சச்சி உடனடியாக படிக்கவும் செய்தார். அதில் நான் எழுதியுள்ளதை மறுக்கவேயில்லை. 


இந்த விஷயத்தை சச்சி தான் முத்துசாமி உள்ளிட்ட அவருடைய நண்பர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் சொன்னவர். 


உதய சூரியன் சின்னம் பற்றி

 திராவிட முன்னேற்றக் கழகம்  வேறு வரலாற்றுக்குறிப்பு வைத்திருக்கலாம். 


நானே அதனால் தான் 

'Don’t be too surprised by what you hear.

One can’t be sure about anything these days. 

Just giving it to you as I hear it.'

என்று சொல்லியிருக்கிறேன். 


ஆனால் சச்சியின் கோபாலபுரம் வீட்டில் கலைஞர் கருணாநிதி குடியிருந்ததை கேள்விக்குள்ளாக்க முடியாது. அந்த மாடி போர்ஷன் கட்சி சார்பாக பிடிக்கப்பட்டதாய் கூட இருந்திருக்கலாம். 


இன்று இந்து தமிழ் திசையில் 

"திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன் முதலில் வாடகைக்கு இருந்த இல்லம் இவருடையது "

என்று எழுதப்பட்டுள்ளது. 


ஒரு வேளை முரசொலி மாறன் வாடகைக்குப் பிடித்த வீட்டில் அவருடைய மாமா வந்து குடியிருந்தாரா? 

கலைஞர் வசித்தார் என்று தானே எல்லோரிடமும் சொன்னார். 

 என் பதிவில் தகவல் பிழை இருப்பதை படித்தவுடன் அன்று

 தெளிவுபடுத்தியிருப்பார் தானே.


மாமா வசித்த வாடகை வீட்டில் மருமகன் தங்கியிருந்திருக்கலாம். ஏன் மு. க. முத்து கூட அப்பாவுடன் அங்கு இருந்திருக்கலாம். அதுவா முக்கியம்? 

அது கலைஞர் வாழ்ந்த வீடு. 

இந்து தமிழ் திசை

 சச்சி வீட்டு மாடியில் 

கலைஞர் வசித்தார் என்பதை 

முழுக்க மறைக்க வேண்டிய அவசியம் என்ன? 


https://m.facebook.com/story.php?story_fbid=2849832728563508&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2851095851770529&id=100006104256328

கி. அ. சச்சிதானந்தம் மறைவு

 கி.அ.சச்சிதானந்தம் என்றாலே 

மணிக்கொடி எழுத்தாளர் மௌனி ஞாபகம்                                    யாருக்கும் வராமலிருக்காது. 

மௌனியைப் பிரபலப்படுத்தியதில் 

இவருடைய பங்கு பெரியது.


மறைந்து விட்டார். (04. 10. 2010)


 சச்சிதானந்தத்தின் இமயமலை Trekking மறக்கமுடியாது. 

இமயமலை நடைப்பயணத்திற்கான ஆயத்தத்திற்காக 

எவ்வளவோ காலம் 

 கோபாலபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு 

தினமும் நடந்து போய்விட்டு 

திரும்பி வந்திருக்கிறார்.


சிறந்த மொழி பெயர்ப்பாளர்.

 பெக்கட் எழுதிய ”Waiting for Godat"  நாடகத்தை 

( கோடாவுக்காக காத்திருத்தல்) அழகாக மொழிபெயர்த்தவர்.


ந.முத்துசாமியின் ஐம்பதாண்டு கால நண்பர்.


 ஓவியர் மு. நடேஷ் இவரைப்பார்த்ததும் உற்சாகமாகி 

“நடமாடும் சிறுகதை” என்பார். 

பேராசிரியர் டாக்டர் செ.ரவீந்திரனின் 

உற்ற தோழர் சச்சிதானந்தம்.


இங்கே நான் சொல்ல வருவது 

தமிழக அரசியல் சம்பந்தப்பட்டது.


Don’t be too surprised by what you hear.

 One can’t be sure about anything these days. 

Just giving it to you as I hear it.


மு.கருணாநிதி ஒரு காலத்தில் 

சச்சிதானந்தத்தின் வீட்டில், 

மாடியில் வாடகைக்கு குடியிருந்திருக்கிறார்.


ஒரு முறை சி.என்.அண்ணாத்துரை அந்த வீட்டிற்கு கருணாநிதியைப் பார்க்க வந்திருக்கிறார்.


வீட்டின் ’கேட்’ இவர் கையினால் திறக்கப்படுகிறது.


 மாடியேறிப் போய் 

கலைஞர் கருணாநிதியை பார்த்து விட்டு 

கீழே இறங்கியவர் 

வீட்டு முகப்பில் உதய சூரியன் வடிவமைக்கப்பட்டிருப்பதை 

நின்று உற்று கவனிக்கிறார்.


There is a silver lining out there, 

if we just step back and take a fresh look. 


ஒரு தீர்மானத்திற்கு வந்தவர் போல 

மீண்டும் மாடியேறி 

மூக்குப்பொடியை உறிஞ்சியவாறு 

கலைஞரை பார்த்து 

அண்ணா சொல்லியிருக்கிறார்.

”நம் கட்சி திமுகவுக்கு 

சின்னம் உறுதி செய்து விட்டேன்.

உதய சூரியன்”

Bigg Boss 4

 Bigg Boss 4


அனிதா சம்பத்திடம் பிக்பாஸ் முடித்து

 வீட்டுக்குப்

போன பின் 

புத்தகம் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 

ஆல்பர் காம்யுவின்( C-A-M-U-S spelling எல்லாம் சொன்னார்) 

'Pandemic ' படிக்க வேண்டிய நாவல் என்று குறிப்பிட்டார். 

அந்த நாவல்' The Plague.' 

சரி Plague கூட Pandemic தான். 

ஆனால் நாவல் பெயரை தப்பாக சொல்லக்கூடாது.

காம்யுவின்  'The Plague' நாவலை                                               கமல் படிக்கவில்லை.

Oct 4, 2020

கவிஞர் சி. மணி எனும் கவி

 இளமைக் காலத்தில் பார்த்து பழகியவுடன் சி.மணி உலக அளவில் பிரபலமாகி நிச்சயம் நோபல் பரிசு வாங்குவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாக முத்துசாமி கூறுவார்.

மணியின் சட்டை ஒன்றை கேட்டு வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருந்தாராம். 

 அவருக்கு தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவேயில்லையே.

... 

புள்ளமங்கை பூத கணங்கள்

 தியோடர் பாஸ்கரன் 'அவசியம் நீங்கள் கும்பகோணம் அருகே யுள்ள புள்ளமங்கை பூதகணங்கள் பார்க்க வேண்டும்' என்று 

ந. முத்துசாமியிடம் சொல்லியிருக்கிறார். 

அகன்ற விழிகளுடன், விஷமப் புன்னகை பூக்கும்           குள்ள பூதங்கள். 


ந. முத்துசாமி (சிட்டி) சிவபாத சுந்தரத்தின் மருமகன் ராஜீவுடன் போய் அந்த புள்ளமங்கை பூதகணங்களை பார்த்திருக்கிறார். 


இதை என்னிடம் சொல்லி விட்டு 

அவர் சொன்ன அடுத்த வார்த்தை 

'கூத்துப்பட்டறை செலவில்'


இது தான் முத்துசாமி முத்திரை. 

இதை சொல்லத்தேவையில்லை.

 ஆனால் முத்துசாமி இப்படியெல்லாம் 

ஏதேனும் சொல்வார்.

"நம்ம ஒரு தடவை அங்க போய் 

பாத்துட்டு வருவோம்" 

மீசையை விரலால் தடவிக்கொண்டே ஆர்வமாக             என்னைப் பார்த்து சொன்னார். 

அப்படி வாய்க்கவில்லை. 

திருவாவடுதுறை ஆதீனம்


ந.முத்துசாமியுடன் பேசும் போது என்னிடம் அவர் சொன்ன விஷயங்கள் எல்லாமே அபூர்வ முத்துக்கள்.


Loose words are gold coins. 


ஒரு நாள் அவர் சிந்தையில் திருவாவடுதுறை ஆதீனம் பற்றிய நினைவுகள்.


முத்து சாமி நினைவில் பால்யத்தில் பதிந்த முதல் மரம் பாதாம் மரம். ஆதீன வளாகத்தில் தான் பார்த்திருக்கிறார்.


 ஆதீன வளாக தோட்டத்தில் ஒரு மாமரத்தில் மாம்பழம் ரொம்ப ருசியாக இருக்கும். பாதிரிப்பழம். தோல் சுருங்கிக் கொண்டே இருக்கும். அதன் சுவை அற்புதம்.


திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆஸ்தான வித்வானாக மீனாட்சி சுந்தரம்பிள்ளை இருந்தார்.


உ.வே.சுவாமிநாதய்யரின் குருநாதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பது தெரிந்ததே. ஸ்தலபுராணம் பற்றிய விஷயம் தான் பலருக்கும் தெரியாததே.


ஸ்தல புராணம் இல்லாத பல பழம்பெரும் கோயில்கள் இருந்திருக்கிறது. அந்தக்கோவில்கள் உள்ள ஊர்களிலிருந்து முக்யஸ்தர்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களை வந்து சந்தித்து விண்ணப்பம் செய்வார்கள் -’எங்க ஊர் கோவிலுக்கு ஸ்தல புராணம் இல்லை. நீங்கள் தான் எழுதித் தரவேண்டும்’

இப்படி எவ்வளவோ பல கோவில்களுக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தன் பாண்டித்ய திறமையால் தன் சொந்தக் கற்பனையில் ஸ்தல புராணம் எழுதிக்கொடுத்திருக்கிறார். 


உ.வே.சுவாமிநாதய்யரின் “ என் சரித்திரம்” நூலில் திருவாவடுதுறை ஆதீனம் பற்றி தகவல்கள் சொல்லியிருக்கிறார்.


மதுரை ஆதீனத்தை விட திருவாவடுதுறை ஆதீனமும், தர்மபுர ஆதீனமும் பெரியவை.


கோயில் கட்டளைகளை நிர்வகிப்பவர் கட்டளை தம்பிரான்.

ஒரு ஆதீனத்தில் பல கட்டளை தம்பிரான்கள் இருப்பார்கள்.


ஆதீனத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு கட்டளை தம்பிரான் இருப்பார்.

இந்த கட்டளை தம்பிரான்களில் ஒருவர் தான் அடுத்த ஆதீனகர்த்தாவாக வர வாய்ப்பு உள்ளவர்.


கட்டளை தம்பிரான் கை மேலே காவித்துணி. ஆதீன மஹா சன்னிதானம் அதில் கை வைத்துக்கொண்டு வருவார்.

இது தான் ’கைலாகு’


மாயூர நாத சுவாமி கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆளுகை. அதிலேயே குமார கட்டளையாகிய முருகன் சன்னதி தர்ம புர ஆதீனத்திற்கு பாத்தியப்பட்டது.


கோயில் விசேஷ பண்டிகை நாட்களில் இரு ஆதீன சார்பிலும் போட்டி போட்டுக்கொண்டு நாதசுரக்கச்சேரி நடக்கும்.


ஆதீனத்திற்கு பள்ளிக்கூடங்கள் உண்டு. 

அந்த பள்ளிக்கூடங்களில் வேலை பார்க்கும் ஆசிரியைகளுடன் மஹா சன்னிதானம் ’சரீர இச்சை’யை பூர்த்தி செய்து கொள்வதெல்லாம் உண்டு தான். 

அந்தக்காலத்தில் ஒரு ஆசிரியையின் முலையை கடித்த பண்டார சன்னதி உண்டும்.உண்டும்.


கட்டளை தம்பிரானாக இருக்கிற பிரகிருதி, உச்ச பதவியை கைப்பற்றும் முயற்சியில், கொட்டைப்பாக்கை பண்டார சன்னதியின் தொண்டைக்குழியில் வைத்து அழுத்தி ஆதினகர்த்தாவை கொன்று விடுவதும் நடந்திருக்கிறது.


..................


Oct 2, 2020

யார் வாழ்வு தான் சதம்?


'எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது 

அது எந்த தேவதையின் குரலோ' 


வாணி ஜெயராமின் இந்த பாடல் ஹம்மிங்கில் ஆரம்பிக்கும் போதே சிவாஜி முகம் குளோஸ் அப். 

உடனே, உடனே கொணஷ்டையை காட்டி விடுவார்.

 நடை கூட சரியாய் இராது. தொடர்ந்து அந்த பாடல் முழுவதும் தேவையில்லாத போஸ் கொடுத்துக்கொண்டு, நாடகபாணி தற்பெருமை புன்னகை செய்து, செயற்கையாக நடித்து

 பாட்டை கொன்று வென்றிருப்பார். 


எம். ஜி.ஆர் பாடல் காட்சிகளில் கோமாளி மாதிரி வேடிக்கையாக  வினோத உடை அலங்காரத்தில் நடித்திருக்கிறார் என்று நாக்குல பல்லு போட்டு கிண்டல் பண்ணுவார்கள். 

அவர்கள் திரிசூலம் படத்தில் எஸ். பி. பி பாடிய 'என் ராஜாத்தி வாருங்கடி, 

புதிய ராஜாவைப் பாருங்கடி' க்கு சிவாஜி கணேசன் ஆடை அலங்காரத்தை பார்க்க வேண்டும். சிவப்பு கழுதை காலர் சட்டை, குஞ்சம் வைத்த கோட்டு, பெல் பாட்டம் பேண்ட்டில் கேஸனோவா நெனப்போட, பெருமிதமாக 

ஆடிப் பாடுவது பற்றி 

மதுர சல்லி கமெண்ட்

 'ஐயய்ய.. மொத்தம் ஒவ்வாம, ஒட்டவே ஒட்டாம..

தாழன் சைஸ் சரியில்ல' 


'ரத்த பாசம்' படத்தில்

  பப்பள பள பள ஆடையில் 

எம். ஜி.ஆருக்கு சவால் விடும் 

இளம் வாலி'பபப'ராக 

 'பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ? 

தேன் மணக்கும் மேனியெல்லாம் தேவ காவியமோ?' ஆட்ட பாட்டம்



Jerry Louis - Hitchcock

 Errand boy படத்தில் 

ஜெர்ரி லூயிஸ்  ஒரு ஆர்க்கெஸ்ட்ரா வாசிப்பை உன்னிப்பாக கவனித்து கேட்பார். 

பிறகு திரும்பி வந்து வாயாலேயே வாசிப்பார். 

ரசமான காட்சி. ஜெர்ரி லூயிஸ் நடிப்பில்                                                 முத்திரையான பகுதி. A special actor. 


Rear Window,  Vertigo ஹட்ச்காக்கின் பிரமாதமான படங்கள். ஜேம்ஸ் ஸ்டீவர்ட் நடித்தார். 

சரியான த்ரில் மூவிஸ். 

Cinema is the most beautiful fraud என்பதை நேர்த்தியாக நிரூபித்தவர் ஹிட்ச்காக். 

அதில் நூற்றுக்கணக்கான தடவை  இயல்பாக ஜேம்ஸ் ஸ்டீவர்ட் பார்ப்பார். அவர் எதையெல்லாம் எப்போது பார்க்கிறார் என்பதை 

இயக்குநர் மாற்றிக் காட்டும் போது திரை ரசிகர்கள் கிளர்ச்சியடைகிறார்கள். 

ஜேம்ஸ் ஸ்டீவர்ட் பெர்ஃபாமன்ஸ் சூப்பர் 

என்கிறார்கள். 


ந. முத்துசாமி பயிற்சி நடிகர்களிடம்              கூத்துப்பட்டறையில் கேட்பார்

 " கதையை நடத்திக்கிட்டுப் போற பாத்திரமா இருக்கப் போறீங்களா? இல்ல ஒரு 

ஸ்பெஷல் ஆக்டரா இருக்கப் போறீங்களா? 

சினிமாக்காரனுக்கு கதையை நடத்திக்கிட்டுப் போறதுக்கு ஆக்டர் போதும்." 


முத்துசாமி இன்னொன்னு சொல்வார் 

"உங்க ஸ்டைல் என்னன்னு சின்ன வயசிலயே கண்டு பிடிச்சுடணும் "


17வது வயதில 'ரத்த பாசம்' ன்னு ஒரு படத்துக்கு ஸ்ரீதர் வசனம் எழுதினார்.

பின் 22 வயதில் 'கல்யாண பரிசு'ன்னு இயக்குநராக தனிப் பாதை போட்டவர்.



Oct 1, 2020

அதிஷா வினோத்

 சமீபத்திய சந்தோஷம். அதிஷா வினோத்

 செல் பேசியில் பேசினார். 


என்னுடைய 'சினிமா எனும் பூதம்' நூலை படித்து            அது பற்றி மிக உயர்வாக பேசினார். 

ராஜநாயஹம் எழுத்து அவருக்கு மருந்து போல இருப்பதாக, உற்சாகமடைய வைத்ததாக அபிப்ராயப் பட்டார். 


இதே போல வாசுகி பாஸ்கர் முன்பு 

' மன ரீதியாக தொந்தரவுக்கு உள்ளாகி எதைதையோ சிந்தித்துக் கொண்டிருந்த போது புத்தகம் கைக்கு கிடைத்தது. முற்றிலும் புதியவொரு அனுபவத்துக்காக படிக்கத் தொடங்கினேன், Rejuvenate என்று சொல்வார்களே, அது போல பேரனுபவம்' என்று 

ராஜநாயஹம் எழுத்து பற்றி எழுதியிருக்கிறார். 


அதிஷா 'சினிமா எனும் பூதம் படிக்கும் போது சுலபமாக ஒவ்வொரு பகுதியையும் சுலபமாக கடந்து செல்ல முடியவில்லை. நிறைய refer செய்ய வேண்டியிருக்கிறது. நிறைய கவனம் தேவைப்படும் நூல்' என்று சொன்ன போது, 

ஒரு தலை சிறந்த பத்திரிக்கையாளரின் 

பாராட்டு மழையில் நனைந்த அனுபவம்

 சிலிர்ப்பாக இருந்தது. 


அதிஷா தகப்பனார் இல்லாமல் வளர்ந்த பிள்ளை. 

என்னை அப்பா போல உன்னத மதிப்பு கொடுத்து கௌரவிப்பதாக அவர் மனம் திறந்து 

சொன்னதை குறித்து 

மிகுந்த மன உருக்கம் கொள்கிறேன்.


https://m.facebook.com/story.php?story_fbid=2771611203052328&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2771611203052328&id=100006104256328

தான் தோன்றி சரித்திரம்

 1989ல புதுவை பல்கலைக் கழகத்தில் தி.ஜானகிராமன் கருத்தரங்கத்தில் சொன்னேன் 

" இந்த கிருஷ்ண பரமாத்மா எத்தனையோ சிசுபாலர்களால் அவமானப் படுத்தப்பட்டவர். 

ஏகலைவர்களாலே கூட 

உதாசீனப் படுத்தப்பட்ட துரோணர். 

சிகண்டிகளால் அம்புத்துளை பட்ட பீஷ்மர். "


இன்னமும் தி. ஜானகிராமனுக்கு இழிவு, சிறுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 


'ஜனங்கள் நாலு, எட்டு, பதினாறு

 என்று பெருகினால், 

உணவுப் பொருள் நாலு, ஆறு, எட்டு

 என்று தான் பெருகுமாம்' 

தி. ஜானகிராமன் இப்படி 'அடுத்த'  சிறுகதையில் சொல்கிறார். 


Means are limited. Wants are unlimited. 


மத்திய அரசு விவசாய மசோதா

 கடும் சர்ச்சைக்குரிய விஷயம். 


'விவசாயியும் கார்ப்பரேட்களும்'என்று  

கலாப்ரியா கவிதை ஒன்றுக்கு தலைப்பு கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. 

ஒத்துக்குவாரோ, மாட்டாரோ? 

அந்த கவிதை 

'கற்கள் பொறுக்கிப்

போட்டது 

காகம் 

கழுகு வந்து 

நீரருந்திப் போயிற்று'


பிரமிள் கவிதை - 'தன் போக்கில் போகிறது 

தான் தோன்றி சரித்திரம்' 


'வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை ' 


இந்த பாடல் வரிகளை மேற்கோள் காட்டும் போதே 

' அவள் அப்படித்தான் ' படத்தில் காட்சிப் படுத்திய விதம் பற்றி -  ஆற்றைக் காட்டாமல் 

கடல் காட்சியாக வரும். Visual error. 


நாடகத்தில தெருவுக்கு நடுவே சாக்கடைய 

எப்படி காட்சிப் படுத்த முடியும்? 

சினிமால அப்படியில்லையே. 

ஆற்றில் நீரோட்டம் இல்லையென்றால்

 தண்ணீர் இல்லாத, வற்றிப் போன 

   மணல் மிஞ்சிய ஆற்றை காட்ட வேண்டும். 


அஸ்வ மேத யாகம் தெரிந்தது தான். 

' புருஷ மேத யாகம்' விபரம் என்னவென்றால் 

நரபலியாமே?


டி. வி. முன்னால் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கும் போது ஓடிக்கொண்டிருக்கிற ஒரு சேனலில் 

எம். ஜி.ஆர் உருக்கமாக பேசும் வசனம் 

" அடுத்தவங்களுக்கு நிழல் கொடுக்கணும்னா 

மரம் வெய்யில்ல காஞ்சி தான் ஆகணும் "

வாத்யார். எவ்வளவு எளிமையா ரசிகனுக்கு போதிக்கிறார். வசனம்லாம் டயலாக்கா பேசுறார். 


இன்னொரு சேனலில் 


வெண்ணிற ஆடை மூர்த்தி 

" என்னடா உத்துப்பாக்கற"

" இந்த எலும்புக் கூடு ஆம்பளயா பொம்பளயான்னு பாக்குறேன் "

வெண்ணிற ஆடை மூர்த்தி எலும்புக்கூடை 

பார்த்த பின்

" கண் கூடா எதுவுமே தெரியலயேடா "


அடுத்த சேனலில் சந்தானம் அட்வைஸ் 

" லூஸ் மோஷன் மாதிரி பின்னால போக ஆசைப்படாதடா, யூரின் மாதிரி முன்னால போக ஆசைப்படு "