Errand boy படத்தில்
ஜெர்ரி லூயிஸ் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா வாசிப்பை உன்னிப்பாக கவனித்து கேட்பார்.
பிறகு திரும்பி வந்து வாயாலேயே வாசிப்பார்.
ரசமான காட்சி. ஜெர்ரி லூயிஸ் நடிப்பில் முத்திரையான பகுதி. A special actor.
Rear Window, Vertigo ஹட்ச்காக்கின் பிரமாதமான படங்கள். ஜேம்ஸ் ஸ்டீவர்ட் நடித்தார்.
சரியான த்ரில் மூவிஸ்.
Cinema is the most beautiful fraud என்பதை நேர்த்தியாக நிரூபித்தவர் ஹிட்ச்காக்.
அதில் நூற்றுக்கணக்கான தடவை இயல்பாக ஜேம்ஸ் ஸ்டீவர்ட் பார்ப்பார். அவர் எதையெல்லாம் எப்போது பார்க்கிறார் என்பதை
இயக்குநர் மாற்றிக் காட்டும் போது திரை ரசிகர்கள் கிளர்ச்சியடைகிறார்கள்.
ஜேம்ஸ் ஸ்டீவர்ட் பெர்ஃபாமன்ஸ் சூப்பர்
என்கிறார்கள்.
ந. முத்துசாமி பயிற்சி நடிகர்களிடம் கூத்துப்பட்டறையில் கேட்பார்
" கதையை நடத்திக்கிட்டுப் போற பாத்திரமா இருக்கப் போறீங்களா? இல்ல ஒரு
ஸ்பெஷல் ஆக்டரா இருக்கப் போறீங்களா?
சினிமாக்காரனுக்கு கதையை நடத்திக்கிட்டுப் போறதுக்கு ஆக்டர் போதும்."
முத்துசாமி இன்னொன்னு சொல்வார்
"உங்க ஸ்டைல் என்னன்னு சின்ன வயசிலயே கண்டு பிடிச்சுடணும் "
17வது வயதில 'ரத்த பாசம்' ன்னு ஒரு படத்துக்கு ஸ்ரீதர் வசனம் எழுதினார்.
பின் 22 வயதில் 'கல்யாண பரிசு'ன்னு இயக்குநராக தனிப் பாதை போட்டவர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.