Share

Oct 26, 2020

கே. ராணி என்ற சிறுமியும் சுப்பராமன் என்ற இளைஞனும்

 கே. ராணி பல திரைப்படங்களில்

 பின்னணி பாடகி. 

நாகூர் அனிஃபாவுடன் இவர் பாடிய 

இஸ்லாமிய பாடல்கள் பிரபலமானவை. 


தேவதாஸ் படத்தில்

 'எல்லாம் மாயை தானா?

 பேதை எண்ணம் யாவும் வீணா? 

ஏழை எந்தன் வாழ்வில் 

இனி இன்பம் காண்பேனா?' 

காதல் தோல்வி பாடல். 

இதை பாடியவர் கே. ராணி என்ற பாடகி என்பது தெரியும். 

ஆனால் இந்த பாடலை பாடிய போது அந்த ராணிக்கு ஒன்பது வயது தான் என்பது

 இந்த மாதம் தான் தெரிய வந்தது.

 பால்யத்தில் இப்படி உருக்கம், பாவம் பூரணமாக ஒரு குழந்தையால் பாடமுடிந்திருக்கிறது. 

எட்டு வயதிலேயே பாட ஆரம்பித்திருக்கிறது  

இந்த குழந்தை. 

Child prodigy. 


வடநாட்டுப் பெண். பூர்வீகம் கான்பூர். 

2018ல் ஹைதராபாத்தில்

 கே. ராணி இறந்திருக்கிறார். 


இன்னொரு விஷயம். 


சி. ஆர். சுப்பராமன். தேவதாஸ் படத்தின் இசையமைப்பாளர். 

எம். எஸ். விஸ்வநாதன் இவரிடம் பணி புரிந்தவர். 

ராமமூர்த்தியும் தான். 

இசையமைப்பாளர் சங்கர் (கணேஷ்) சுப்பராமனின் சகோதரர். 

இதெல்லாம் தெரிந்த விஷயம் தான். 


ஆனால் சி. ஆர். சுப்பராமன் 

மிகவும் இளைய இசையமைப்பாளர். 

'லவங்கி' படத்திற்கு இசையமைக்கும் போது இருபத்திரண்டு வயது. 

அதற்கு முன்னமே திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்றும் சொல்கிறார்கள். 

இவரும் Child prodigy தான். 


அவ்வளவு பிரபலம் அடைந்தவருக்கு 

வாழ்க்கை முப்பது வருடங்களுக்கு கூட 

வாழ லபிக்கவில்லை. 

இருபத்தெட்டு, இருபத்தொன்பது வயதில் இறந்திருக்கிறார். 

தேவதாஸ் படமே இவர் இறந்த மறுவருடம் தான்           வெளி வந்திருந்திருக்கிறது. 


இந்த விஷயமும் இப்போது தான் 

எனக்கு தெரிய வந்தது. 

இவ்வளவு காலம் தெரியாமல் இருந்திருக்கிறேன்.

'சி. ஆர் சுப்பராமன் ஆர்மோனியப்பெட்டி மீது விஸ்கி பாட்டிலும் சிகரெட் பாக்கெட்டும் இருக்குமாம்.' இளையராஜா இப்படி சொல்லியிருப்பதை            இன்று படித்தேன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.