Share

Oct 7, 2020

ஆஹா, பேஷ் பேஷ், சபாஷ், ஓஹோ

 ஒரு பாகவதர் மோகன ராகத்தில்

தியாகையரின் 'நன்னு பாலிம்ப்ப' 

விஸ்தாரமாக ஆலாபனையுடன் பாடும்போது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த 

ஒரு பிரகிருதியின் ஆகாகாரம், தலையாட்டல், கைத்தாளம், விரல் நீட்டி மடக்கி.. இப்படி. 

ஒரு மணி நேரம் பாகவதர் பிரமாதமாக 

பாடி முடித்த பின்

 அந்த ரசிக பிரகிருதி அவரைப் பார்த்து 

' சமிக்கணும். அடுத்து மோகன ராக கீர்த்தனை ஒன்னு பாடுங்கோ ' என்றதாம். 


 பிரபல நாதஸ்வர வித்வான் நடந்து கொண்டு 

' தாயே யசோதா ' 

வாசிக்கும் போது ஒருவன் கூடவே கைத்தாளம் போட்டு,  கண்ணை உருட்டி சிமிட்டி 

ரசித்துக் கொண்டு வந்தவன், 

வித்வான் வாசித்து முடித்ததும் சொல்லியிருக்கிறான் ' அடுத்து தோடி வாசிங்கோ '

ஒத்து ஊதுகிறவன் முதுகில் ஒரு சாத்து சாத்தி வித்வான் கோபத்தோடு சத்தமா சொன்னாராம். 'தோடி வாசிக்கிற நாதஸ்வரம் எங்கடா? 

வீட்டுல மறந்து வச்சுட்டு வந்திட்டியா?' 


வீணை தனம்மாள். 

தனம்மாள் தன்னுடைய வீணை வாசிப்புக்கு மிருதங்கத்தைப் பக்க வாத்தியமாக                     வைத்துக் கொள்ள மாட்டார்.

இவர் வீணை வாசிக்கிறார் என்றால், கச்சேரி கேட்க வந்திருப்பவர்களில் 'ஆகா, ஆகா' பரவசப்பட்டால், 'பேஷ், பேஷ்' என்று தலையாட்டினால்

 வீணை வாசிப்பதை தனம்மாள் உடனே               நிறுத்தி விடுவார். 

"இங்க இந்த கச்சேரிக்கு யாரோ 

ஒரு மகா ஞானஸ்தர் வந்திருக்கார்னு தெரியறது. இப்படி ஒருத்தர் முன்னாலே வீணை வாசிக்கிற யோக்யதை எனக்கு கிடையாது " என்று சொல்லி விடுவார். 


நாதசுர சக்கரவர்த்தி டி. என்.ராஜரத்தினம் அவர்கள் கச்சேரி சுதந்திரமாக 

செய்ய விரும்புவது வழக்கம்.

 மனோதர்மப்படி நாகஸ்வரம் அவர் விரும்பிய கீர்த்தனைகளை வெளிப்படுத்தும். 

கச்சேரியில் சீட்டு எழுதி அனுப்புவதை 

அவர் ரசிக்க மாட்டார். 

ராமேஸ்வரத்தில் ஒருமுறை ஒருவர் 

தோடி ராஜரத்னத்திடம் 

'மகுடி ' வாசிக்க சொல்லி அனத்தினார். 


வித்துவான் கொஞ்ச நேரம் 

சட்டை செய்யாமல் இருந்து பார்த்தார். 

 தான் விரும்பிய கீர்த்தனைகளை வாசித்துக்கொண்டிருந்தார்.


 ' மகுடி ' அனத்தல் அதிகமாகியது. 

உடனே நாகசுரத்தை 

மகுடி கேட்ட ரசிகரிடம் கொடுத்து 

அவரையே மகுடி வாசித்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டார்!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.