'எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ'
வாணி ஜெயராமின் இந்த பாடல் ஹம்மிங்கில் ஆரம்பிக்கும் போதே சிவாஜி முகம் குளோஸ் அப்.
உடனே, உடனே கொணஷ்டையை காட்டி விடுவார்.
நடை கூட சரியாய் இராது. தொடர்ந்து அந்த பாடல் முழுவதும் தேவையில்லாத போஸ் கொடுத்துக்கொண்டு, நாடகபாணி தற்பெருமை புன்னகை செய்து, செயற்கையாக நடித்து
பாட்டை கொன்று வென்றிருப்பார்.
எம். ஜி.ஆர் பாடல் காட்சிகளில் கோமாளி மாதிரி வேடிக்கையாக வினோத உடை அலங்காரத்தில் நடித்திருக்கிறார் என்று நாக்குல பல்லு போட்டு கிண்டல் பண்ணுவார்கள்.
அவர்கள் திரிசூலம் படத்தில் எஸ். பி. பி பாடிய 'என் ராஜாத்தி வாருங்கடி,
புதிய ராஜாவைப் பாருங்கடி' க்கு சிவாஜி கணேசன் ஆடை அலங்காரத்தை பார்க்க வேண்டும். சிவப்பு கழுதை காலர் சட்டை, குஞ்சம் வைத்த கோட்டு, பெல் பாட்டம் பேண்ட்டில் கேஸனோவா நெனப்போட, பெருமிதமாக
ஆடிப் பாடுவது பற்றி
மதுர சல்லி கமெண்ட்
'ஐயய்ய.. மொத்தம் ஒவ்வாம, ஒட்டவே ஒட்டாம..
தாழன் சைஸ் சரியில்ல'
'ரத்த பாசம்' படத்தில்
பப்பள பள பள ஆடையில்
எம். ஜி.ஆருக்கு சவால் விடும்
இளம் வாலி'பபப'ராக
'பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ?
தேன் மணக்கும் மேனியெல்லாம் தேவ காவியமோ?' ஆட்ட பாட்டம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.