Share

Oct 20, 2020

சக்ரவாகமா? சரஸாங்கியா?

 சக்ரவாகம் 16வது மேளகர்த்தா ராகம். 

ஹிந்துஸ்தானி ஆஹிர் பைரவ். 

வயலினில் எல். சுப்ரமணியம் இந்த ராகத்தை இழைத்து இழைத்து வாசித்திருப்பதை கேட்கலாம். 

'எதுலோ ப்ரோதுவோ 'என ஜான் ஹிக்கின்ஸ் பாடியிருப்பதை கேட்டு ஆனந்தப்படலாம். 


சரஸாங்கி 27 வது மேளகர்த்தா ராகம். 


இதனுடைய ஜன்ய ராகங்கள் தான் நளினா காந்தி, 

கமல மனோகரி. 


சரஸாங்கி ஹிந்துஸ்தானியில் நாட்பைரவ். 


' மெனு ஜூச்சி மோஸ போகவ மானஸா ' தியாகராஜ கீர்த்தனை சரஸாங்கி. 

Don't be deceived by looking at the body(of women) 

' பொம்பள ஒடம்ப பாத்து ஏமாந்து போயிடாத'


சினிமா பாடல்னா ' மீனம்மா மீனம்மா' ன்னு ரஜினி பாட்டு சரஸாங்கி ராகம். 


'சின்ன ராசாவே கட்டெறும்பு உன்ன.. '

 சரஸாங்கி தான். 


காலகாலமா சக்ரவாகம்னு இசையமைத்த விஸ்வநாதன் கூட சொல்லிக்கொண்டிருந்த பாடல் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உோறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா" 


"இந்த பாடல் சக்ரவாகம் அல்ல. சரஸாங்கி" என்று கர்நாடக சங்கீத பாடகர் டி. என். ஷேச கோபாலன்       பல வருடங்களுக்கு முன்பு சொன்னார்.

 அவரை விட பெரிய சங்கீத சமுத்திரம் தான் இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியும்.                                                      சங்கீத கலாநிதி சேஷகோபாலன். 


இங்கே கர்நாடக சங்கீதம் கேட்க ஆரம்பிப்பதற்கு முன்பே பலருக்கும் 'ராகத்தை எப்படி கண்டு பிடிக்கறது' ங்கற கவலை ஏன்? 


பலரும் சக்ரவாகம் என்று நம்புவதை சரஸாங்கி என்று இன்னொரு விற்பன்னர் கூறி விட்டார். 


சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நா பழக்கம். 

பழக, பழக வரும் இசை. 


கேட்க கேட்கத்தான் புரியும் ராகம். காதில் விழ, விழ ராகங்களின் ஜாடை, அடையாளம் தெரியும். 


சக்ரவாகத்தில் பிரபலமான  சில சினிமா பாடல்கள் உண்டு. 


'நீ பாதி, நான் பாதி கண்ணே' வஸந்த் பட பாடல். 


'தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு ' சக்ரவாகம். 


சங்கராபரணம் படத்தில் கர்நாடக சங்கீதம் தெரியாத எஸ். பி. பாலசுப்பிரமணியம் அட்சர சுத்தமாக பாடினார். 

சங்கராபரணத்திற்கு இசையமைத்தவர் 

கே. வி. மகாதேவன். 

மகாதேவன் மாமா அப்போது அடக்கத்துடன் சொன்ன விஷயம் பலரையும் அதிரச் செய்தது. 

அவர் அப்படி சொல்லாமல் மேட்டிமைத்தனத்துடன் பாராட்டுகளுக்கு பெருமிதப் புன்னகையையே

 பதிலாக தந்திருக்கலாம். 

ஆனால் அவர் கர்வமேயில்லாமல் 

வெள்ளந்தியாக சொன்னார் : "எனக்கு

 கர்நாடக சங்கீதத்தில் பதின் மூன்று ராகங்கள் தான் தெரியும்" 


சத்குரு. 


எந்தரோ மஹானுபாவலு, அந்தரிக்கி வந்தனமு.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.