Share

Oct 28, 2020

சிவகுமாருக்கு பாலு பாடல்கள்

 பாலுவின் முதல் பாடல் ஓட்டல் ரம்பா படத்தில். 

எல். ஆர். ஈஸ்வரியுடன் பாடிய "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு" பாடல்

 படம் ரிலீஸ் ஆகாததால் 

காணாமலே போய் விட்டது. 

எஸ். பி. பி. முயன்று தேடியும் 

கிடைக்காமல் போய் விட்டது. 


இப்போது நடிகர் சிவகுமார் இதை சொல்வதை 

ஒரு வீடீயோ பதிவில் பார்த்தேன். 


சாந்தி நிலையம் ' இயற்கை எனும் இளைய கன்னி'

முதலில் ரிக்கார்ட் செய்யப்பட்டு விட்டது. 


 பால் குடம் படம்  1969, ஜனவரி பொங்கலிலேயே வெளிவந்தது. 

அப்படி பார்த்தால் பாலுவுக்கு தமிழில் முதல் பாடல்

' மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் ' தான். 


 நானும் இப்படித்தான் சொல்லுவேன். 


ஆனால் அதே பொங்கலில் தான் ஜெமினியின் குழந்தையுள்ளமும் ரிலீஸ். "முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு" பாலு பாடல். 


சாந்தி நிலையமும், அடிமைப்பெண்ணும் 

 1969 மே மாதம் தான் ரிலீஸ் ஆகின.


அதே 1969ல் செப்டம்பரில் 'கன்னிப்பெண்' 

சூப்பர் ஹிட் பாடல் "பௌர்ணமி நிலவில், பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா?" சிவகுமாருக்கு இரண்டாவதாக எஸ். பி. பி. 


1970ல் நவக்கிரகம் படத்தில் "உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது" சுசிலா பாடலில்

 எஸ் பி பி பிரமாதமாக சிவகுமாருக்கு ஹம்மிங் கொடுத்தார். 


1971ல் கண்காட்சியில் 'அனங்கன் அங்கஜன் அன்பன்' அருமையான சந்தப்பாடல். 

இந்த பாடலை நான் ஏ. பி. என் தொகையறாவுடன்

"வெண்ணிலவை  குடை பிடித்து " துவங்கி உச்சரிப்புக்காக  நடிப்பு பயிற்சி மாணவர்களுக்கு சொல்லி தந்திருக்கிறேன். 


அதே வருடம் 'மூன்று தெய்வங்கள்' முள்ளில்லா ரோஜா பாடல். (ஆனால் இது தான் தனக்கு பாலு பாடிய முதல் பாடல் என்று அவர் சீரியஸாக இருக்கும் போது சிவகுமார் சொன்னார்) 

பாலு இறந்த பிறகு "மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்" தனக்கு முதல் பாடல் என்றார். 

இது தான் உண்மை. 


அதன் பிறகு சிவகுமாருக்கு எத்தனையோ பாடல்கள் பாலு பாடி விட்டார். 

"உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி "

குறிப்பிடத்தக்கது. 

ஒரு பெரிய பட்டியலாக பாடல்கள். 


நடிகர் சிவகுமார் எண்பத்தேழு நடிகைகளுக்கு ஜோடியாக நடித்தவர். 

அவருடைய திரையுலக வாழ்க்கை 

ஒரு வித்யாசமான 'சீர்த்தன்மை' கொண்டது. 


அனுபவங்கள் விசேஷமானவை. 

'இது ராஜபாட்டை அல்ல ' என்ற நூல் அவரை எழுத்தாளராக அடையாளம் காட்டுகிறது. 


 காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் ஓவியர். 

ஒரு ஹீரோவுக்கு இசைந்து வராத இயல்பு ஓவியம் வரைவது. அந்த வகையில் மற்ற கதாநாயக நடிகர்களிடமிருந்து வேறுபட்டவர். 


நல்ல வாசகர். 

நவீன தமிழ் இலக்கிய பரிச்சயமுள்ளவர். 

ஓவியர்களில் வாசக குணம் அபூர்வம். 

நடிகர்களிலும் வாசிப்பு என்பது அரிதான விஷயம். 


பேச்சாளர். 


இதெல்லாமே சிவகுமாரின் ஆளுமைக்கு

 சிறப்பான அந்தஸ்தைப் பெற்றுத் தருகின்றன. 


இரண்டு பிரபல நடிகர்களின் தந்தை. 

அவருடைய மருமகள் கூட பெருமைக்குரிய நடிகை. 


கொடுத்து வைத்தவர் என்று

 எல்லோரும் மலைக்கும்படியான வாழ்க்கை.


Fotos 


1. Sivakumar 


2, 3. S. P. Balasubramaniam


https://m.facebook.com/story.php?story_fbid=2808815829331865&id=100006104256328

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.