Share

Feb 27, 2018

மூன்று குழந்தைகள்


நேற்றும் இன்றும் ஒரு ஸ்கூலில் இருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் மூன்று குழந்தைகள் கூத்துப்பட்டறைக்கு வந்திருந்தார்கள்.

ந.முத்துசாமியின் ‘ பிரஹன்னளை’ நாடக ரிகர்சல் பார்ப்பது, மற்ற தியேட்டர் விஷயங்களை நேரடியாக தெரிந்து கொள்வது இவர்களுக்கு ப்ராஜெக்ட்.

இந்த பள்ளியில் முழுக்க கல்வி முறையே Activities தான். Text book என்பதே கிடையாது. 

யாத்ரா தனுஷ், சிம்பன் ஆறுமுகம், தருண் ஆகிய மூன்று குழந்தைகள்.
What you would like to become ? என்று நேற்று கேட்டேன். சிம்பன், தருண் இருவருமே “Foot ball player" என்று சொன்னார்கள். யாத்ரா பதில்: “ I have passion for football. But I would like to become an actor."
நான் Che sara, sara Whatever will be will be, The future is not ours to see பாடினேன்.
குழந்தைகள் சந்தோஷமாக கை தட்டினார்கள்.
KIt Kat சாக்லேட் கொடுத்தேன்.

Children bring freshness into the world. Children are new editions of consciousness. Children are fresh entries of divinity into life.
- Osho

இன்றும் வழக்கம் போல் அவர்களுடைய டீச்சர் ரேகா தான் அந்த மாணவர்களை அழைத்து வந்திருந்தார்.
Rehearsal Process ஐ ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ரேகா சொன்னார். யாத்ராவின் அப்பா தனுஷ். ரஜினியின் பேரன்.
யாத்ராவிடம் 'உனக்கு யார் பிடிக்கும்.'
"லதா பாட்டி. she is my favorite."
தாத்தா பாட்டிகளுக்கு எப்போதும் பேரக்குழந்தைகள் நண்பர்கள். அம்மா அப்பா ‘ நீங்கள் ரொம்ப செல்லம் கொடுக்கிறீர்கள்’ என்று குறைப்பட்டுக்கொள்வார்கள் - நான் சொன்னதும் யாத்ரா அதை ஆமோதித்தான். அம்மா ஐஸ்வர்யா எப்போதும் பாட்டி லதாவிடம் இப்படி வருத்தப்படுவதுண்டாம்.
இன்னொரு பையன் சிம்பன் ஆறுமுகம் மறைந்த முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி ரவி ஆறுமுகத்தின் பேரன். ஆல்பர்ட் தியேட்டர் அதிபர் மது குமரனின் மகன்.

ரவி ஆறுமுகத்தின் சகோதரர் டாக்டர் அருண கீதாயன் எனக்கு நல்ல அறிமுகம். என் நண்பன் மறைந்த முபாரக் மூலம் அறிமுகம்.
நாங்கள் மதுரையில் அழகர் கோவில், புல்லூத்து போன்ற இடங்களுக்கு பிக்னிக் போனதுண்டு.
அருண கீதாயனின் பாடல்கள் இன்னும் என் காதில் ஒலிக்கின்றன.
“ ஆஹா என் ரசிகைகளே! நான் உங்களை மறந்தது குற்றம் தான். அந்த குற்றத்திற்கு அற்புத தண்டனை முத்தம் தான்”
“ தனி மரம் நானோர் தனி மரம்.”
“ நீ வரவில்லையெல்லையெனில் ஆறுதல் ஏது?”
கவிஞர் கண்ணதாசன் “ இந்த வாரம் சந்தித்தேன்” என்று ஒரு தொடர் குமுதத்தில் எழுதிய போது கவிஞர் அருணகீதாயன் பற்றி ஒரு பத்தி எழுதியிருந்தார்.
அருண கீதாயனும் மறைந்து விட்டார்.

தருணுடைய அப்பா ஒரு பிசினஸ் மேன்.
மூன்று குழந்தைகளுக்கும் இன்று கடைசி தினம் என்பது ரசிக்கவில்லை.
பிரிய மனமில்லாமல் தான் விடை பெற்று சென்றார்கள்.

O mehabooba song - R.P.Rajanayahem

95 வயது பெரியவருக்கு ராஜநாயஹம் டப்பிங்

பாலு மகேந்திராவின் சீடர் வியாசன் என்ற M.D.பசுபதி.
தன்னுடைய குரு பற்றி இவர் ஃபேஸ்புக்கில் பிரமாதமான ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார்.

Breakdown என்று ஒரு குறும்படம் இயக்குகிறார். ஏற்காட்டில் ஷூட்டிங் முடித்து விட்டு வந்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துள்ள ஒரு 95 வயது பெரியவர் ஒருவருக்கு நான் குரல் கொடுத்துள்ளேன்.Feb 25, 2018

ஸ்ரீதேவி


ஒரு ஜோதிடர். சுப்ரமண்ய தேசிகர் என்று பெயர். இவர் பற்றி என் “ராஜாஜியின் ஸ்வர்ண ஆகர்ஷண மந்திரம்” பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இவர் தன்னை சங்கீத ஞானி எம்.எம்.தண்டபாணி தேசிகரின் கஸின் என்று சொல்லிக்கொண்டார். சுப்ரமண்ய தேசிகருக்கு அப்போது 80 வயது. நான்கு மனைவிகள் இவருக்கு என்று என்னிடம் சொன்னார்.
ஸ்ரீதேவி அப்போது அகில இந்திய நடிகை.
ஸ்ரீதேவி பிறந்த போது சுப்ரமண்ய தேசிகரிடம் வக்கீல் ஐயப்பன் வந்து ஜோதிடம் கேட்டாராம்.
( விருதுநகரில் 1967ல் காமராஜரை மட்டுமல்ல சிவகாசியில் 1989 ல் நடிகை ஸ்ரீதேவியின் அப்பா ஐயப்பனையும் சட்ட சபை தேர்தலில் தோற்கடித்தார் பெ.சீனிவாசன்!)
சுப்ரமண்ய தேசிகர் ஜாதகம் கணித்து சொன்னாராம்.
“இந்த குழந்தை இருபத்தைந்து வயதிற்குள் இருபத்தைந்து கோடி சம்பாதிக்கும்”
ஸ்ரீதேவி அப்பா சொன்னாராம் “நீங்கள் சொல்வதை நம்பமுடியவில்லை. ஒரு பெண்பிள்ளை எப்படி இருபத்து ஐந்து வயதிற்குள் இருபத்தைந்து கோடி சம்பாதிக்க முடியும்?”
இதை என்னிடம் சொன்ன போது இது உண்மையாகியிருந்த நிலை.
ஜோதிடர்கள் எப்போதும் இப்படி பல விஷயங்களை தங்கள் prediction படி நடந்ததாக மிகையும் பொய்யுமாக குறிப்பிடுவது அவர்கள் தொழில் வளர்ச்சிக்காக.

………………………..

மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், மீண்டும் கோகிலா வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை அன்று ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது.

’இன்றைய இளம் கன்றுகள் எங்கள் ஸ்ரீதேவி இழப்பு பற்றி புரிந்து கொள்ள சிரமப்படலாம். ஆனால் இன்னும் ஒரு நாற்பது வருடங்களில் நயன்தாரா இறக்கும்போது நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள்’ என்று ஒரு பெரியவர் நா தளுதளுக்க ( தழு தழுக்க?) சொன்னார்.
ஸ்ரீதேவிக்கு இப்ப இறக்கும்போது வயது 54!! தந்தி டிவி, நியூஸ் 7 சேனல் சொன்ன விஷயம்.
1976ல மூன்று முடிச்சு படம் வந்தப்ப 12 வயசா? சரி 13 வயசுன்னு வச்சிக்கிட்டாலும் பாலச்சந்தர் ஒரு சிறுமியைத் தான் கதாநாயகியாக நடிக்க வச்சாரா? 1977ல பாரதிராஜா 14 வயசு சிறுமியை மயிலாக காட்டினாரா? என்ன விவரமில்லாத உலகம் இது. When she was cold in blood and green in judgement.
நாளைக்கு நியூஸ்பேப்பர்களிலாவது வயது 54 என்பதை 55 (!) என்றாவது குறிப்பிட்டு நெஞ்சில் பால் வார்த்தால் நல்லது.

தமிழ் திரை குழந்தை நட்சத்திரங்களில் கமல் ஹாசனும், ஸ்ரீதேவியும் பின்னால் அகில இந்திய அளவில் சாதித்த நட்சத்திரங்களானார்கள்.
ஸ்ரீதேவியை ’நான் தான் ’துணைவன்’ படத்தில் குழந்தையாக அறிமுகப்படுத்தினேன்’ என்று சாண்டோ சின்னப்பா தேவர் சொல்வதுண்டு.
தமிழ் படங்கள் என்று மட்டும் இல்லை. மொத்தமாகவே சொன்னாலும் இருவரைப்பற்றியுமே சொல்ல வேண்டுமானால்
ஸ்ரீதேவி - கமல்ஹாசன் ஜோடி தான் பொருத்தமானது.
வி.ஜி.பி கோல்டன் பீச்சில் என்.டி.ராமாராவ் மெரூன் கலர் கோட், ஒயிட் வெஸ்ட் கோட், பச்சை கூலிங்க்ளாஸ், ஒயிட் ஷூ போட்டுக்கொண்டு ஸ்ரீதேவியுடன் டூயட் பாடும் ஷூட்டிங் ஒன்று நான் பார்த்திருக்கிறேன்.
எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராகாதிருந்தால் ஸ்ரீதேவி நிச்சயமாக எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்திருந்திருப்பார்.
தமிழில், தெலுங்கில் கொடி கட்டிய ஸ்ரீதேவிக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத விஷயமல்ல. சுலபமாக பாலிவுட் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது.
பாலிவுட் உலகம் எப்போதும் பெண் நடிகைகளை போஷிக்கும். இங்கிருந்து போன வஹிதா ரஹ்மான், வைஜயந்திமாலா, ஹேமா மாலினி, ரேகாவை தொடர்ந்து ஸ்ரீதேவிக்கும் நல்ல அந்தஸ்து வழங்க தயங்கவில்லை.
எங்கள் காலத்தில் அமலாவையும் பாலிவுட் கொண்டு சென்று விடுமோ என்ற கவலையில் “அமலாவை இந்தி திரையுலகிற்கு செல்லாமல் தடுப்பது எப்படி?” என்று தமிழ் வாணன் ஏதாவது புத்தகம் எழுதி வைத்து விட்டு செத்திருக்கிறாரா இல்லையா என்று கூட விசாரணை செய்ததுண்டு.
தமிழில் இருந்த அழகான குடமிளகா மூக்கு ஸ்ரீதேவி இந்தியில் காணாமல் போனார். பிளாஸ்டிக் சர்ஜரி உபயம்.
வெண்ணிற ஆடை நிர்மலாவை இன்று டி.வியில் பார்த்த போது அவருக்கு மிகவும் ஜூனியரான ஸ்ரீதேவி பற்றி தோன்றியது - இவ்வளவு சீக்கிரம் கிழவியான நடிகை ஸ்ரீதேவியாகத் தான் இருக்கும்.
இப்படி அகாலமரணமும் தேவையில்லை.

.............................................

Gango and A Hen Thief ----- R.P.Rajanayahem

Feb 23, 2018

கிரக பீடைகள்


திருதராஷ்ட்ரன் குருஷேத்ர யுத்தம் முடிந்த பின் தன் தம்பியும் ஞானியுமாகிய விதுரனிடம் புலம்புகிறான்: “ இது என்னடா விபரீதம். மகாராஜா நான். கபோதியாய் பிறந்தேன். காந்தாரி மூலம் எனக்கு பிறந்த நூறு பிள்ளைகள். ஒரு பெண். யுயுத்சு எனக்கு வப்பாட்டி மகன் தான. அவன் பாண்டவர்களோட சேந்துட்டான். 18 நாள் யுத்தத்துல நூறு மகன்களையும் பறி கொடுத்துட்டேன். ஜயத்ரதன் செத்துட்டதால என் ஒரே மகள் துச்சலை விதவையாயிட்டா.
புத்ர சோகம் எவ்வளவு கொடுமை. ஒரு பிள்ளைய பறி கொடுத்தாலே தாங்க முடியாதேடா. கபோதியா பொறந்து நான் பெத்த பிள்ளைகள கண்ணால பாக்க கூட கொடுத்து வக்கலயேடா”
நீதிமான் விதுரன் பதில் : அண்ணே, மனுசன் அவன் அம்மா வயித்தில கருவா ஜனிச்சி, பத்து மாசத்தில யோனித்துவாரம் வழியா வெளிய வந்து விழுந்த அந்த வினாடி முதல் ’நாய்கள் மாமிசத்த துரத்துவது போல’ கிரக பீடைகள் அவனை துரத்த ஆரம்பித்து விடுகின்றன.”
’கிரக பீடைகள்’ என்கிறான் விதுரன்.
இத புரிஞ்சிக்கிட்டா ஜாதகமே பாக்க மாட்டோம்.
கோச்சாரத்தில் முக்கிய கிரகங்கள் சனியும் குருவும்.
பன்னிரண்டு ராசியையும் சுற்றி வர சனி முப்பது வருடம் எடுக்கிறான். குரு பன்னிரண்டு வருடங்கள்.
குரு ஒரு ராசியிலிருந்து இரண்டாமிடம், ஐந்தாமிடம், ஏழாமிடம், ஒன்பதாமிடம், பதினொன்றாமிடம் வரும் போது மட்டும் நன்மை செய்கிறான்.
ஜென்மராசியிலோ, மூன்றாமிடத்திலோ, நான்காமிடத்திலோ,
ஆறாமிடத்திலோ, எட்டாமிடத்திலோ, பத்தாமிடத்திலோ, பன்னிரண்டாம் இடத்திலோ மனுசனை படாத பாடு படுத்தி எடுத்துடுறான்.
மற்றபடி ஜென்மத்தில் ராமர் சீதையை வனத்தில் சிறை வைத்ததும் அதாவது ஜென்மராசியில் குரு இருக்கும்போது இதற்கீடான துயர்.
மூன்றாமிடத்தில் குரு இருந்த போது தான் துரியோதனன் படையோடு மாண்டான். எவ்வளவு சப்போர்ட் இருந்தது அவனுக்கு. பீஷ்மர், கர்ணன், துரோணர், அஷ்வத்தாமா என எப்பேர்ப்பட்ட டைனாமிக் பெர்சன்ஸ். அவர்கள் எல்லாம் துணையிருந்த போதும் துரியோதனனின் ராசிக்கு மூன்றில் குரு நின்ற போது தான் அவனுக்கு சர்வ நாசம் நிகழ்ந்தது.
தர்மபுத்திரர் நாலில் வனவாசம் போனதும். குரு நான்கில் நிற்கும்போது சக்ரவர்த்தி தர்மனே வனவாசம் ஏகிய சூழல்.
சத்திய மாமுனி கைகால்களில் தளை பூண்டது ஆறில் குரு நிற்கும்போது.
நல்லவன போலீஸ் அரஸ்ட் செய்வது குரு ஆறில் நிற்கும்போது தான்.
சண்டை செய்யும்போது வாலிக்கு எதிராளி பலம் பாதி கிடைத்து விடும். எப்பேர்ப்பட்ட வலிமை இது. அப்படிப்பட்ட வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றது வாலி ராசிக்கு எட்டில் குரு நின்ற போது தான். ’இன்மையெட்டினில் வாலி பட்டமிழந்ததும்.’
பத்தில் குரு ‘ குரு பத்தில்- ஈசனார் திருவோட்டில் இரந்து உண்டதும்’
பத்தில குரு ஸ்தான சலனம். கௌரவ பங்கம்.
பரமேஸ்வரனே ‘பிச்சாண்டி பாத்திரத்தில் பிச்சையிடுங்கள்’ என்று பிச்சையெடுத்து சாப்பிட்டாராம்.
பன்னிரண்டில் குரு இருக்கும்போது தான் ராவணன் முடி துறந்த நிலை. ஈஸ்வர பட்டம் பெற்ற ராவணனே ராமனிடம் தோற்று “மண் மகள் முகம் கண்டேன், மனம் கலங்கிடும் நிலை ஏன் கொடுத்தாய்” என்று புலம்பியழுது உயிர் விட்ட போது ராவணன் ராசிக்கு பன்னிரண்டில் குரு நின்றிருந்தான்.
சனி ஒரு ராசியில் ரெண்டரை வருடம் நிற்பான். மூன்றாமிடம், ஆறாமிடம், பதினொன்றாமிடம் வரும் போது மட்டும் ஒரு மனுசனுக்கு நிம்மதியை கொடுப்பான். அதாவது முப்பது வருடத்தில் ஏழரை வருடம் மட்டும் சுகம்.
ராசிக்கு பன்னிரண்டாமிடம், ஒன்று, இரண்டாமிடம் வரும்போது ஏழரைச் சனி.
நான்காமிடம் வரும் போது மரணச்சனி. உயிரை எடுப்பதிலேயே குறியாயிருப்பான். தாயார்க்கு ஆகாது. வீடு, நில புலன்களை வில்லங்கப்படுத்துவான்.
ராசிக்கு ஐந்தாமிடம் சனி வரும்போத பூர்வ புண்ணிய யோகத்தையெல்லாம் Freeze பண்ணிடுவான். முன்னோர் செய்த புண்ணியங்கள் கூட பலிக்காது. அந்த ரெண்டரை வருடம் புத்திரர்களுக்கும் தீமை செய்யும்.
ஏழாமிடம் வரும்போது குடும்பத்தில் சிக்கல், பிரச்னை. தாரம் உடல் ஆரோக்கியம் சரியா இருக்காது. மனைவி வகையில் பல மாதிரியான கவலைகள். வீட்டில் நிம்மதி சுத்தமாய் இராது.
எட்டாமிடம் சனி. அஷ்டமத்து சனி. அஷ்டமத்து சனி பிட்டத்து துணிய புடுங்கிடும். கோமணத்தையே உருவி விட்டுறும்னா எப்படி கொடுமை? ஏழரை சனியில ஏழரை வருஷத்தில அனுபவிக்கிற கொடுமைய இந்த ரெண்டரை வருஷத்தில அனுபவிக்கணும். முழுக்க பொருள் விரையங்கள அவசர அவசரமா சனி செய்வானாம். சொத்து, நகை, பணமெல்லாம் கொள்ளையடிப்பான் சனின்னு ஐதீகம்.
ஒன்பதில சனி தகப்பனுக்கு கண்டம். பாக்யங்கள பூரா முடக்கிடுவான்.
பத்தில சனி வரும் போது தொழில்ல பல சரிவு, சிக்கல், வேலை போயிடும்.
சனி மூணு, ஆறு. பதினொன்னு இருக்கும்போது எப்படியும் குரு ஒரு வருடம் ஜென்மத்தில, மூணுல, நாலில, ஆறில, எட்டில, பத்தில, பன்னிரண்டுல நின்னு அதிலும் கெடுப்பான்.
முப்பது வருட வாழ்க்கையில ஒரு மூன்று வருடம் நிம்மதின்னு சொல்லலாம்.
அப்படியும் சொல்ல முடியுமா. ராகு கேது பெயர்ச்சி மூணு, ஆறு, பதினொன்னு தவிர மத்த இடங்கள்ள நின்னா சிலுவையில அறஞ்சிடுவானுங்க.
சரி கோச்சாரம் சரியா இருந்தா தசா புக்தி கெடுக்கும். ஆறாம் வீட்டுக்காரன் தசை, எட்டாம் வீட்டுக்காரன் தசை, மாரகாதிபதி தசை, பன்னிரண்டாம் வீட்டுக்காரன் தசை இப்படி வந்திச்சின்னா லைஃபே ஸ்பாயில் ஆயிடும்.
ஜோசியன் கோச்சாரம் சரியாயிருந்தா தசாபுக்தி சரியாயில்லம்பான். தசாபுக்தி சரியாயிருந்தா கோச்சாரம் கெடுக்குத்துன்னுடுவான்.
பரிகாரம் சொல்லி காசை புடுங்க ஜோஷியம் எவ்வளவு வசதியாருக்கு!
ஒருவன் நல்லாயிருப்பதாக தெரிந்தால் ஜோதிடம் பிரமாதமா சொல்வார்கள். கஷ்டப்படுகிறான் என்றால் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஏன் பலிக்கவில்லை என்பதற்கு பல சால்ஜாப்பு சொல்ல முடியும்.
’கிரக அடைவுகள், அவயோக ஜாதகம், ராகு கேதுகளுக்கிடையில் எல்லா கிரகமும் சிக்கி யோக பலன்களை கெடுத்து விட்டதே… ஒன்பதாம் வீட்டுக்காரன் நீசமாகி அவனுக்கு நீசபங்கம் ஏற்படல, லக்னாதிபதி கெட்டுப்போயிட்டான், பத்தில பாவியாவது நிக்கணும், ஒரு கிரகம் கூட இல்ல,
பிறந்த நேரத்தில் குரு என்ற பிரஹஸ்பதிக்கு ஆறு எட்டு பன்னிரண்டில் சந்திரன் சகட யோகம். வாழ்க்கையே சக்கரம் போல…. ஒன்பதாம் வீட்டுக்காரன் எட்டில போய் பத்தாம் வீட்டுக்காரன் பதினொன்னுல போய் நின்னுட்டான். இப்பேர்ப்பட்ட கிரக அடைவுக்கு எந்த யோகமுமே பலிக்காது…’ இப்படி உச்சு கொட்டி, உச்சு கொட்டி ஜோதிடன் பரிதாபப்படுவான்.
தலை சுத்த வைக்கும் ஜோதிடம்.
இதை தான் விதுரன் “ பிரசவத்தில யோனித்துவாரத்தில் இருந்து வெளிய வந்து இந்த பூமியில் விழுந்த அந்த வினாடி முதல் கிரக பீடைகள்
‘நாய்கள் மாமிசத்தை துரத்துவது போல’ மனிதனை துரத்த ஆரம்பிக்கின்றன’ என்கிறான். எது வரை? Until his death.

ஸோர்பா தி கிரீக் ரொம்ப விஷேசமான மூவி. ஸோர்பாவாக வரும் ஆண்டனி குயின் : life is trouble, Only death is not. To be alive is to undo your belt and look for trouble.
கிரேக்க தத்துவஞானி சோலன். மனிதன் எப்போது சந்தோசமாயிருக்கிறான்? என்ற கேள்விக்கு சமாதியில் தான் என்று சொன்னான். பரமபதம் அடைந்து விட்டார் என்று சொல்வது போல ஒருவர் மரணத்தின் போது இந்த Vocabulary. “ He has attained Solan’s Happiness”
ஜோதிடம் பார்க்காமல் இருப்பவன் தான் உண்மையிலேயே யோக ஜாதகக்காரன்.
ஸ்ரீ ஜாதகபலன்கள் பற்றி சொல்ல வேண்டும். ஒருவன் ஜாதகத்தில் ஐந்தாமிடம் புத்ரஸ்தானம். பெண்புத்திரம் பிறப்பதே புத்திர தோஷம் என்று தான் கிரந்தங்கள் சொல்கின்றன.
பெண் ஜாதகத்தில் எந்த இடத்தில் கிரகம் நின்றாலும் பலன் திடுக்கிடும்படியாக இருக்கும். ஏழு எட்டாமிடம் சுத்தமாக கிரகமில்லாமல் இருக்க வேண்டும். கிரகமிருந்தால் பெண் ஜாதகம் அவயோக ஜாதகம். கிரகங்கள் கூடியிருப்பது, கிரகங்கள் நீசமாயிருப்பது, கிரகங்கள் பார்வை எல்லாமே பெரும்பாலும் பெண்ணுக்கு துர்பலன்கள் தான்.
பெண்ணின் ஜாதகத்தை ஜோதிடனிடம் காட்டாமலிருப்பதே நல்லது.
நான் 1989ல் புதுவை பல்கலை கழகத்தில் தி.ஜானகிராமன் கருத்தரங்கத்தில் பேசிய போது நளபாகம் நாவல் பற்றி பேசும்போது பெண் ஜாதகம் பற்றி, ஆண் களத்திர ஸ்தானம் பற்றிய வக்கிர குறிப்புகள் பற்றி ஜாதக பலன்கள் கூறுவது பற்றி கோடிட்டு காட்டினேன்.

’ஜோதிடம் தனை இகழ்’ 
- புதிய ஆத்திச்சூடியில் பாரதி
…………………..

http://rprajanayahem.blogspot.in/2018/01/blog-post_31.html

http://rprajanayahem.blogspot.in/2016/12/blog-post_4.html


Feb 19, 2018

நீரவ் மோடியும் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும்


திருப்பதி திருச்சானூர் உரையாடல்
வெங்கடேஷ் : நம்ம அருள் கிடைச்சவங்களை பூலோகத்தில வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ, போலீஸ் படுத்துற பாட்டை நினைச்சா ரொம்ப சங்கடமா இருக்கு. என் வேலய கொறை சொல்ற மாதிரியில்ல இருக்கு. என்ன நான் சொல்றது?
பத்மா : நீங்க ’காக்கும் தொழில்’ செய்ய வேண்டியிருக்கிறதால நல்ல வேளை மல்லயாவ லண்டனுக்கும் நீரவ் மோடிய நியூயார்க்குக்கும் அனுப்பிட்டீங்க.
வெங்கடேஷ் : சிஸ்டம் சரியில்ல.
நானும் பேங்க்கு மூலமா தான அருள் பாலிக்க வேண்டியிருக்கு. அத இப்படி கரிச்சி கொட்டுறாங்கே..
பத்மாவதி : லட்சுமி கடாட்சம் என்பத கிரிமினல் வேலங்கறானுங்க. கிலோ கணக்குல தங்கம், வைரம், லட்சக்கணக்கில பணம்னு உண்டியல்ல போடறவங்க நம்ப அருள் கிடைச்சவங்க தான..பதிலுக்கு அவங்களுக்கு நாமளும் நாலு செய்யணும்னு நெனக்கிறதே தப்பா அர்த்தமாயிடுச்சே...
........................

பெற்றோர் திருப்பதிக்கு குழந்தையை அழைத்துக் கொண்டு போய் மொட்டை போட்டு சாமி வெங்கடேசப்பெருமாள் தரிசனத்திற்காக கூண்டில் அடைபட்டு, அடைபட்டு சாமி கும்பிட்டு விட்டு உண்டியலில் ஒரு முழு ஐம்பது ரூபாய் போட்டார்கள். முன்னதாக அந்த ரூபாய் நோட்டில் “அனுஸ்ரீக்கு சளி, மூக்கடைப்பு நல்லா போகனும். வெங்கடேசாய நம” என்று சீனிவாசப்பெருமாளுக்கு விவரம் எழுதி போடுகிறார்கள்.

வெங்கடேசப்பெருமாள் அனுஸ்ரீயின் ஏட்டை எடுக்கிறார். சளி, மூக்கடைப்பு நிவர்த்தி விஷயமாக மஹாலட்சுமியிடம் என்ன செய்யலாம் என கேட்கிறார்.
பத்மாவதி தாயாரின் reply: 'ஐம்பது ரூபாய் தானே.. இப்போதைக்கு சளியை மட்டும் நிவர்த்தி செய்வோம். ஒரு நூறு ரூபாயில் அல்லது இருநூறு ரூபாய் நோட்டில் விபரம் எழுதியிருந்தாலாவது மூக்கடைப்பையும் சரி செய்திருக்கலாம். தமிழ் நாட்டில் இருந்து திருப்பதி வருகிறார்கள். ஆகிற செலவோடு உண்டியலிலும் நல்ல தொகை போடுவதற்கென்ன? இதில எதுக்கு கஞ்சத்தனம்.'
The temple bell stops?
திருப்பதி உண்டியலில் போட்ட ஐம்பது ரூபாய் எங்கெங்கோ சுற்றி, ஆந்திராவை விட்டு கிளம்பி, தமிழ் நாட்டின் தலை நகரத்திற்கு வந்திருக்கிறது.
உலகம் ரொம்ப சின்னது தானே?
ஆற்காட் ரோட்டில் நான் நூற்றைம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு இருநூறு ரூபாய் நோட்டை நீட்டிய போது எனக்கு மீதியாக வந்த நோட்டு அதே ஐம்பது ரூபாய்.
இன்று மெட்ப்ளஸ் மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்குவதற்கு அந்த நோட்டைத் தான் கொடுத்தேன்.

...............

அடுத்த கதாநாயகன் பராக் பராக்
நீரவ் மோடி!

இந்தியாவில 85வது பணக்காரன்.
உலகத்தில 1234வது துட்டுக்காரன்.
பஞ்சாப் நேஷனல் பேங்க் - 11000 கோடி
மல்லையா லண்டன்லயா?
நீரவ் மோடி நியூயார்க்ல!
நீரவ் மோடி மாமா கையில குடுமி. மாமாவையாவது பிடிக்க முடியுமா?
சக்சி- சிங்வி- கீதாஞ்சலி ஜெம்ஸ் - வைரங்கள்
பஞ்சாப் நேஷனல் பேங்க்ல யாரோ ஒரு டெபுடி மானேஜரை கைது செய்து பெருஞ்சாதனை செய்து விட்டார்கள்.
மீடியாக்களுக்கு நல்ல வேட்டை.
டேய்! Breaking news குடுத்துக்கிட்டே இருங்கடா..இப்படி ஒரு Addiction வந்துடுச்சே... கை விரல்லாம் நடுங்குதே...

....................

Feb 12, 2018

குறும் படமொன்றில்


சில மாதங்களுக்கு முன் அடையாறு ஃபில்ம் இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்கள் செய்த ப்ராஜெக்ட் ஷார்ட் ஃபில்ம் ஒன்றில் நான் நடித்தேன்.
அபீஸ்குமார் இயக்கிய ’இடம் சேர்’ குறும்படம்.
நான் நடித்த காட்சிகளின் Clippings. 
குரல் என்னுடையதல்ல. டப்பிங். கூத்துப்பட்டறை வேலை காரணமாக டப்பிங்கிற்கு என்னால் போக முடியவில்லை.

புத்திரசோகத்திற்காளான கதா பாத்திரமாக நடித்தேன்.

https://www.facebook.com/rprajanayahem/videos/2131653567048098/

......
புத்திர சோகம் பற்றி நான் எழுதியிருக்கிறேன்.
ஜே.எம் கூட்ஸியின் மாஸ்டர் ஆஃப் பீட்டர்ஸ்பர்க் நாவல் தாஸ்தயேவ்ஸ்கியை நாயகனாகக் கொண்டது.
“Stiff shoulders humped over the writing-table, and the ache of a heart slow to move. A tortoise heart.”
இறந்து விட்ட தன் மகன்(step son) வாழ்ந்த அதே இடம், அதே அறையில் தாஸ்தயேவ்ஸ்கி வந்து தங்குகிறார்.
Hanging over the novel is a scene from Coetzee's own life: the death of his son at 23 in a mysterious falling accident.
கூட்சீ இதை எழுதியதற்கு காரணம் கூட்சீ யின் மகன் 23 வயதில் ஒரு விபத்தில் இறந்ததால் தன்னுடைய புத்திர சோகத்தையே எழுதினார் .
மார்ட்டின் ஷீன் நடித்த “The way”. யாத்திரைக்கு சென்ற மகன் புயலில் சிக்கி கொல்லப்படுகிறான். அப்பா மார்ட்டின் ஷீன் மகன் முடிக்காமல் விட நேர்ந்த அந்த யாத்திரையை அதே பாதையில் இவர் தொடங்குகிறார்.
Tom: [Having been handed the box with his son's ashes] I'm going to walk the Camino de Santiago.
Captain Henri: But you haven't trained for this walk, and no disrespect, you are more than 60 years old.
Tom: [shrugs] So it'll take me a bit longer than most.
Captain Henri: You'll be lucky if you finish in two months.
Tom: Well, then I'd better get started. We're leaving in the morning.
Captain Henri: [Looking a bit confused] "We"?
Tom: [Holding up the box with his son's ashes] Both of us.
மகனுடைய சாம்பலுடன் trekking போகிற தகப்பன்.
Tom: I'm sorry about your baby.
Sarah: I'm sorry about yours.
Tom: Mine was almost 40.
Sarah: Yeah, but he'll always be your baby.
......
புத்திரனைப் பறி கொடுக்கும் தகப்பனாக ” The Way” படத்திலும்
‘The Master of Petersberg’ நாவலிலும் நாயகர்கள் அந்தத் துயரத்தை இப்படி எதிர் கொண்டு தவிக்கிறார்கள்.
............................
புத்திர சோகத்திற்கு ஆளானவர்கள் தசரத சக்ரவர்த்தி, ராவணன், துரோணர், திருதராஷ்ட்ரன் என்று ஆண்களையே குறிக்கிறார்கள்.
ராவணனின் புத்திர சோகம்:
”எழும்;இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்றுஅழும்; அரற்றும்;அயர்க்கும்;
வியர்க்கும், போய்விழும்; விழிக்கும்;முகிழ்க்கும்;தன் மேனியால்,உழும் நிலத்தை; உருளும்;புரளுமால்.”
- கம்பன்
.............

Feb 9, 2018

ஊசிக்கு ஊசி


கண்ணுச்சாமி சண்டியர் மற்றும் அரசியல்வாதி.
தங்காத்து கூத்துல வேஷம் போடுறவர்.
‘கண்ணால் கண்டதை சொல்லாவிட்டால் கத்தியால் வெட்டுவான் பாதர்வெள்ள.’
தங்கப்பல் முன் வரிசையில் ஒரு நாலு. அதனால் தங்கப்பல்லு தங்காத்து. சண்டியர் தான். மட்டன் கடை வச்சிருக்கார்.
சொலவடை ஒன்று சல்லிகள் தங்களுக்குள் யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால் “ மாப்ள…உனக்கென்னடா… தங்கப்பல்லு தங்காத்து..”
கண்ணுச்சாமி சைக்கிளில் வரும்போது தங்கப்பல் தங்காத்து கறிக்கடையை பார்க்கிறார். கறிக்கடையில் தங்காத்து இல்லை.
சைக்கிள விட்டு எறங்கி “ டேய் தங்காத்து.. நீயெல்லாம் எனக்கு ஆளாடா? நானெல்லாம் ஆளையும் ஓத்து நிழலையும் ஓத்துட்டுப்போறவன்டா டேய்..” இப்படி சவுண்டு விடும்போதே கறிக்கடையின் முன் அரிவாளால் ஒரு வட்டம் போடுகிறார்.
“ எங்கடா அவன்” கறிக்கடையில் உள்ள சுள்ளானை மிரட்டுகிறார்.
சைக்கிளில் ஏறி சவுண்டு விட்டு கொண்டே போகிறார்.
தங்காத்து சைக்கிளில் சாவகாசமாக வருகிறார். கடையின் முன்னால் ஒரு வட்டம் வரையப்பட்டிருப்பதை பார்க்கிறார். பையன் வட்டம் போட்டது கண்ணுச்சாமி என்பதை வெளிப்படுத்துகிறான். ”டேய், போய் அவன் வீட்டில இருக்கானான்னு பாத்துட்டு வாடா”
சுள்ளான் நடந்து போய் பார்த்துவிட்டு வந்து கண்ணுச்சாமி வீட்டில் இல்லையென்பதை சொல்கிறான்.
தங்காத்து “ எடுறா அந்த அரிவாள,” என்று வாங்கிக்கொண்டு கண்ணுச்சாமி வீட்டுக்கு கிளம்பி விடுகிறார்.
”டே கண்ணுச்சாமி, ஒனக்கு அழிவு காலம்டா… எங்கிட்ட மோதுறவன் காணாம போயிடுவான்டா..ங்கொம்மாலோக்க..” இப்படி சொல்லும்போதே கறிக்கடையில் கண்ணுச்சாமி போட்ட வட்டத்தை விட பெரிய வட்டமாக கவனமாக அரிவாளால் போடுகிறார்.
சவுண்டு விட்டுக்கொண்டே போய் விடுகிறார்.

இந்த மாதிரி ’தீட்னி’யில் முக்கிய நோக்கம்  ஏரியா மக்களை மிரட்டுவது.

கண்ணுசாமி வீட்டுக்கு வருகிறார். வீட்டின் முன் இருக்கிற வட்டத்தை பார்க்கிறார். அவர் பெஞ்சாதி விவரம் சொல்கிறார். பக்கத்தில் உள்ள சுள்ளான் ஒருவனை கறிக்கடையில் தங்காத்து இருக்காப்பிலியான்னு பார்த்து வர ஏவுகிறார்.
அங்கே கறிக்கடையில் தங்காத்து இல்லைன்னு தெரிந்தவுடன் அரிவாளோடு கிளம்பி விடுகிறார். கறிக்கடையின் முன் வீட்டின் முன் இருந்த வட்டத்தை விட பெரிய வட்டம் வரைகிறார். வரையும் போதே “ டே தங்காத்து….ங்கோத்தாட்ட குடிச்ச செனப்பால நான் கக்க வச்சுறவன்டா.. எனக்கெல்லாம் எந்திரிச்சிச்சின்னு வச்சுக்க.. அப்பறம் மடக்க ஆளே இல்லடா…நீயெல்லாம் என் சுன்னி மசுருடா டேய்” என்ற வீரவசனம் உச்சரிக்கும் போதே வேட்டிக்குள் கைவிட்டு நான்கைந்து மயிரை பிய்த்து எடுத்து நீட்டுகிறார்.

கடையில் உள்ள சுள்ளானப்பார்த்து கர்ஜனை- “டேய் இப்ப உன்ன வகுந்து ஆட்டோட கறிக்கடையில தொங்க விட்டுட்டு போறேன்டா…”
சுள்ளான் மிரண்டு “அண்ணே..வேண்டாண்ணே..” என்று சொல்லிக்கொண்டே கடையை விட்டு தாற்காலிக எஸ்கேப்.
தங்காத்து கடைக்கு வந்து கடையின் முன் இருந்த பெரிய வட்டத்தை பார்க்கிறார்.
சுள்ளான் “பயமாருக்குண்ணே..”
’அவன் வீட்டில இருக்கானா பாத்துட்டு வாடா’
இல்லையென்பது தெரிந்ததும் தங்காத்து அரிவாளுடன் போய் கண்ணுச்சாமி தெருவை அடைத்து ஒரு மிகப்பெரிய வட்டம்…..
எவ்வளவு நாள் இப்படி கண்ணாமூச்சி ஆடமுடியும்?
ஜெயில் ரோட்டில் எதிரும்புதிருமாக நேருக்கு நேர் சைக்கிள்ள மோதி கீழே விழுந்து..
வேறு வழியே இல்லாம கைகலக்க வேண்டிய நிர்ப்பந்தம்..
கண்ணுச்சாமி….’லொள்’
தங்கப்பல்லு தங்காத்து ’லொள் லொள்..’
கண்ணுச்சாமி ’வள்’
தங்காத்து  ‘வள் வள்’
வாய்த்தீட்னி நீண்டும்படி இருவரும் பார்த்துக்கொண்டார்கள். அதற்குள் யாராவது விலக்கி விட வர வேண்டும்.
சொரிக்காம்பட்டி பால்ராசு கஞ்சா சரக்கு ரொம்ப நல்லாயிருக்கும். போலீஸ் அடித்த அடியில் வாயில் முன் வரிசைப்பற்கள் மேலும் கீழும் ஐந்து இருக்காது.
அந்த சொரிக்கான் பட்டியான் ஓடி வந்து “ டே ஏண்டா எனத்தானுங்களுக்குள்ள மோதிக்கிறீங்க.. ஆங்.. டே நம்ம நாலு பேருக்கு பஞ்சாயத்து வக்கணுன்டா.. நம்ம நாலு பயல அப்பணும்டா ஏலேய்… அம்ம பயலுகளுக்குள்ள மோதுனா நல்லாவாடா இருக்கு… ம்.. மாமு.. கண்ணுசாமி போய்யா.. டே பங்காளி.. தங்காத்து நீ சைக்கிள எடுத்துக்கிட்டு கெளம்புடா.. எனத்துக்குள்ள எதுக்குடா சலம்பல்..”
ரெண்டு பேரையும் ஜெயமணியும் கூட பிரிச்சி விட்டு அனுப்புகிறான்.
இதில் உள்ள நுண்ணரசியல்.
மதுரையில இவங்க ஒரே எனத்துக்குள்ள பெரிசா அடிதடி, அரிவா வெட்டுல்லாம் அபூர்வம். மத்த ஜாதிக்காரனா இருந்தா சவுண்டு விடும்போதே அவனுக்கு அடி விழுந்துடும். அரிவா வெட்டு விழும். அதுவும் கூட்டமா வந்து தான் இந்த செய்கையெல்லாம்.
ஊசிக்கு ஊசி பாயுமா?
அதனால கண்ணாமூச்சி.Feb 7, 2018

கூத்துப்பட்டறையில் நான் பேசிக்கொண்டிருக்கும் போது


06-02-2018 அன்று கூத்துப்பட்டறையில் நான் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் எடுக்கப்பட்ட மொபைல் வீடியோ இது. 

ரெண்டு மதுரை சல்லிகள் இடையே நடந்த சவடால் சண்டை பற்றி நடித்துக் காண்பித்தே விளக்குகிறேன். வீடியோ எடுக்கப்பட்ட விஷயம் எனக்கு அப்போது  தெரியாது.

https://www.facebook.com/rprajanayahem/videos/2129012673978854/


...........................................................................
கண்ணுசாமி மேடை பேச்சு
வருடம் 1975 ஆகஸ்ட் மாதம்.
திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில்(1973) எம்ஜியார் கட்சி மகத்தான வெற்றி பெற்று இரண்டு வருடத்திற்கு மேல் ஆகி விட்ட பின்னால்!
மதுரை கம்மாக்கரை கண்ணுசாமி தேவர் திமுக வின் கம்மாக்கரை அவைத்தலைவர். மேடையில் கண்ணுசாமி தேவர் பேசுகிற அழகு பிரத்யேகமானது. நல்ல போதையில் தான் மீட்டிங் மேடையில் ஏறுவார். பொன்னாடையை ஒச்சு தான் வந்து போர்த்துவான். ஒச்சு, பொன்னாடை இரண்டுமே இவர் ஏற்பாடு தான்.
எடுத்த எடுப்பிலே எம்ஜியாரை வம்புக்கிழுப்பார்.
" நீ என்னா சண்டை போடுறே. நம்பியாரும் அசோகனும் சொத்தைப்பயலுக.
நீ ஆம்பிளையின்னா ஒண்டிக்கு ஒண்டி இந்த கண்ணுசாமி கூட வா. ஒங்காத்தா கிட்ட குடிச்ச சினைப்பால கக்க வைக்கலே நான் ஒன் கெண்ட காலு மசுரு ன்னு வச்சிக்க.எங்க முக முத்து நடிக்க வரவும் மார்கெட் போயிடுமேன்னு பயந்துபோய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்க வெண்ணை ..நீயெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்னா நான் ஐக்கிய நாட்டு காரியதரிசிடா டே .. கலைஞர் கிட்ட மோதினா காணாம போயிருவ.
டே நிக்சன் !நிக்சன் ! ஒன்னை நான் பாராட்டுறேன். நீ வாட்டர் கேட் பண்ணே . ஆனா உடனே பீல் பண்ணி ராஜினாமா பண்ணே. ஒன்னை நான் பாராட்டுரண்டா.
ஆனா ..... ( இந்த இடத்தில் நாக்கை கடிக்கிறார் ) இந்திரா காந்தி .. நீ மொத்தம் ஒவ்வலே .... மரியாதியா திருந்திடு ... நடக்கிறது எங்க ஆட்சி ..எமர்ஜென்சிகேல்லாம் கண்ணுசாமி பயப்பட மாட்டான்.மரியாதையா திருந்து ..இல்லன்னா மதுரை பக்கம் வந்துகிடாதே ..வீணா அழிஞ்சுபோவே. கலைஞரை பகைச்சேன்னு வச்சுக்க உனக்கு கண்ணுசாமி தான் எமன்.
டே எதிர்க்கட்சி காவாளிகளா... ( கண்ணுசாமி தேவர் தம்பி சின்ன சாமி தேவர், தங்கச்சி மாப்பிள்ளை கருத்தகண்ணு இருவரும் அண்ணா திமுக ) நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு முழச்ச காளான் எல்லாம் நெஞ்ச நிமித்துராங்கடா !அழிஞ்சே போவீங்கடா ..மரியாதையா கலைஞர் கால்லே வந்து விளுந்துடுங்கடா ... அது தான் பொழைக்கிற வழி.
டே தங்கபல்லு தங்காத்த்து உனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு.. (இது தனிப்பட்ட பகை -கொடுக்கல் வாங்கல் விவகாரம் .கண்ணுசாமி கடன் வாங்கியிருக்கிறார்.தங்காத்த்து திருப்பி கேட்கிறார். அதற்காக மேடையில் சவால் ) சும்மா நடக்கும் போதே எனக்கு வேட்டிக்கு வெளியே நீட்டிகிட்டுதாண்டா இருக்கும்! டே... எனக்கெல்லாம் எந்திரிச்சிடுச்சின்னு வச்சிக்க, அப்புறம் மடக்கறதுக்கு இந்தியாவிலேயே ஆளு இல்லடா டே .. .....
யாருடா அவன் ...நான் பேசும்போது அடிச்சி பார்க்கிறவன் .. அவனை தூக்குங்கடா ..... அந்த மண்டை மூக்கனை தாண்டா ..
டே ஒத்த காதா ( இவனுக்கு ஒரு காது கிடையாது ) அவனை தூக்குடாங்கரேன் ...காதோட சேர்த்து அப்பி தூக்குடாங்கரேன்.. என்னடா.... அவன் முழியே அப்படி தானா ..அந்த முழியை தாண்டா நோண்டணும். பேசும்போது அடிச்சி பார்க்கிராண்டாங்கிரேன் ...."
.......................................

Feb 6, 2018

சுபகுண ராஜன்


பெயரே மங்களகரமாக சுபகுண ராஜன்.
விகடன் விருது விழாவிற்கு போயிருந்த போது சுபகுணாவை பதின்மூன்று வருடங்களுக்குப் பின் சந்தித்தேன்.
நான் சென்னை வந்து ரெண்டரை வருடம் ஆகிவிட்டது. இப்போது தான் சந்திக்க வாய்த்தது.
’காட்சிப்பிழை’யில் என்னுடைய கட்டுரை முதன் முதலாக பிரசுரமான போது ராஜன்குறை கேட்டாராம் “ ராஜநாயஹத்தை எப்பிடி புடிச்சீங்க?”
சுபகுணராஜன் பதில்: ”உங்களுக்கெல்லாம் ராஜநாயஹத்தை தெரியும். எனக்கு கேபின்னு ஒரு முரடனத்தான் தெரியும்.”
என்னிடமே கேட்டிருக்கிறார் : ”உண்மைய சொல்லுங்க. கேபிய என்ன பண்ணீங்க.. கொலை பண்ணிட்டீங்களா..”


அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர்கள் சுபகுண ராஜனும் நானும். இன்று இலக்கிய உலகில் உள்ளவர்கள் அறியுமுன்னரே என்னை அறிந்தவர் சுபகுண ராஜன்.
அமெரிக்கன் கல்லூரியின் வாஸ்பர்ன் ஹாஸ்டலில் தங்கியிருந்தார்.
நான் டே ஸ்காலர்.

சினிமாவில் சுபகுணராஜன் அஸிஸ்டண்ட் டைரக்டராக ஜெகனாதனிடமும், நான் அஸிஸ்டண்ட் டைரக்டராக பி.ஆர் சோமுவிடமும் பணி புரிந்திருக்கிறோம். அப்போது கதீட்ரல் ரோட்டில் American college Alumni functionல்
நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதுண்டு.

கம்ஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் டிபார்ட்மெண்டில் இருந்து அவருக்கு இண்டர்வியூ வந்திருந்த போது என் அப்பாவிடம் கைடன்ஸ் கேட்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.

கம்ஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் டிபார்ட்மெண்டில் இருந்து அவருக்கு இண்டர்வியூ வந்திருந்த போது என் அப்பாவிடம் கைடன்ஸ் கேட்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.
கஸ்டம்ஸில் என் அப்பா, என் சகோதரன் இருவருடனும் சுபகுணா பணியாற்றியிருக்கிறார்.

பாண்டிச்சேரியில் ஒரு நாடகக் கருத்தரங்கில் 1990ல் மீண்டும் சந்தித்தோம்.
முன்னாள் கல்வி அமைச்சர் பொன்முடியின் சம்பந்தி. இவருடைய மகளை அவருடைய மூத்தமகன் திருமணம் செய்திருக்கிறார்.
சுபகுணாவின் திருமதி மதுரையில் பிரபலமான டாக்டர்.
தூத்துக்குடிக்கு நான் என் ஆஃபிஸ் வேலையாக போய் இருந்த போது அங்கே கஸ்டம்ஸ் சூப்ரிண்ட் ஆக இருந்த சுபகுணா என்னை சந்திக்க ஆசைப்பட்டு தகவல் சொன்ன போது அவரை போய் பார்த்தேன். அப்போது அளவலாவிக்கொண்டிருந்த போது ஒரு ஃபோன் கால். ‘கஸ்தூரி மான்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு. ஜெயமோகன் லைனில்.
என்னிடம் பேசுவது யார் என்பதை சொன்ன சுபகுணா “ ஓ.. உங்களுக்கும் ஜெயமோகனுக்கும் ஆகாதுல்ல…”
கஸ்தூரி மானில் மாட்டுக்கன்னையனாக நடித்தார்.
இலக்கிய உலகில் ‘காட்சிப்பிழை’ பத்திரிக்கையாசிரியராக, பதிப்பாளராக, எழுத்தாளராக.
 டிவி கலந்துரையாடல் நிகழ்வுகளில் கூட தென்படுகிறார்.

சில வருடங்களுக்கு முன்  ’ஆசை முகங்கள்’ என்ற தலைப்பில் அவருடைய கயல் கவின் புக்ஸ் பதிப்பாக பழைய திரை நடிகைகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். அதில் நான் எழுதிய ’விஜயகுமாரி’ பதிவை சேர்த்தார். அப்போது அவர் என்னிடம் மொபைலில் பேசிய போது சொன்னார்
 “ உங்கள கேக்காம நான் ஒரு வேலை செஞ்சிருக்கேன்..சுய நலம் தான்.என்னன்னா, உங்க விஜயகுமாரி பதிவை ஆசைமுகங்கள் நூலில் சேத்திருக்கேன்.”

மதுரையில் சுபகுண ராஜனுக்கு சாரு நிவேதிதாவுடன் ஏற்பட்ட மோதல்.
‘என்னடா Anti-culture?’
ஊட்டியில் தளையசிங்கம் கருத்தரங்கில் எனக்கு ஜெயமோகனோடு நிகழ்ந்த மோதல்.

தமிழ் இலக்கிய உலகம் என்றும் மறக்க முடியாத சர்ச்சை நிகழ்வுகள்.

ஜெயமோகனுக்கு சுபகுண ராஜன் நண்பர்.
சாரு நிவேதிதாவுக்கு ராஜநாயஹம் நண்பர்.

We are in a world made by rules created by an ‘Intelligence’ and not by ‘Chance’!

…………………………….

https://rprajanayahem.blogspot.in/2016/04/blog-post_19.html