Share

Sep 29, 2008

எஜமான் பெற்ற செல்வமே

இங்கே இரண்டு வருடம் முன் திருப்பூர் ஷண்முகானந்தா சபாவில் ராஜேஷ் வைத்யாவின் வீணை கச்சேரி ஏற்பாடு செய்திருந்தது .ஜய்வாபாய் பள்ளியில் .
கச்சேரியில் கடைசியாக நேயர் விருப்பம் ! சீட்டு குவிந்து விட்டது .சினிமா பாடல் கூட வாசிக்க ஆரம்பித்தார் . 'மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு 'வீணையில் வாசித்து விட்டு 'மளிகை கடை லிஸ்ட் போல நிறைய வந்திருக்கிறது . இதை எல்லாம் வாசித்தால் விடிந்து விடும் ' என்றார் .
நான் அதன் பின் ஒரு பாடல் பற்றி சீட்டு அனுப்பினேன் . அவர் வீணை வாசித்து கொண்டே அந்த சீட்டை பார்த்தார் .
G .ராமநாதன் இந்த ராஜேஷ் வைத்யா வுக்கு சொந்த பெரியப்பா . அவர்பெரிய இசையமைப்பாளர்.
பின்னணி பாடலும் பாடியிருக்கிறார் . மற்றொரு இசையமைப்பாளர் இசையில் .
படம் 'அல்லி பெற்ற பிள்ளை'
பாடல் உருக்கம் நிறைந்தது . G .ராமநாதன் குரலில் ஒரு தேம்பல் இருக்கும் .

"எஜமான் பெற்ற செல்வமே . என் சின்ன எசமானே ! பசும் பொன்னே என் கண்ணே அழாதே அழாதே ."- அழுதுகொண்டே குதிரை பாடும் இந்த பாடலை "R.P.ராஜநாயஹம் கேட்ட பாடல்" என்று குறிப்பிட்டு அந்த பாடலை வாசிக்க ஆரம்பித்த ராஜேஷ் சரணம் வீணையில் வாசிக்கும் போது கண்ணை துடைக்க ஆரம்பித்தார் .
'தங்கமே உனக்கு தந்தை இல்லை .
தொண்டன் எனக்கு தலைவன் இல்லை .
அன்புள்ள அன்னைக்கு தீராத தொல்லை .......'
வீணை வாசிப்பதை சற்று நிறுத்தி துணியால் கண்ணை துடைத்துகொண்டே இருந்தார் .
நல்ல கூட்டம் .நான் பின்னால் இருந்தேன் . கண்ணில் எதோ தூசி விழுந்து விட்டது என்றே நினைத்தேன் . சிரமப்பட்டு தொடர்ந்தார் .
கச்சேரி முடிந்தவுடன் டூ வீலர் எடுக்க வரும்போது ஒருவர் ' என்ன சார் ! நீங்க கேட்ட பாடலை வாசிக்கும் போது வீணை வித்வான் அழ ஆரம்பித்து விட்டார் .'
தொடர்ந்து மூன்று பேர் அப்படி சொன்னார்கள் . தலைமை தபால் ஆபிஸ் பக்கம் டூ வீலரில் என்னை ஓவர் டேக் செய்து மீண்டும் ஒருவர் 'என்ன சார் , ராஜேஷ் அழுது விட்டார் . இப்படி செய்து விட்டீர்கள் ' என்று சொல்லி விட்டு போனார் .

கீர்த்தியின் தம்பி அஷ்வத்

என் மனைவி இரண்டாம் முறை கருவுற்ற போது அதனை ஏற்க மறுத்து நமக்கு கீர்த்தி ஒரு குழந்தை போதுமே என்று சொல்லி அதனை அபோர்சன் செய்ய முயன்றேன் . டாக்டரம்மா இந்த குழந்தையை பெற்று கொள்ள வற்புறுத்தினார் . துணைவியாருக்கு விருப்பம் . நான் வேண்டாம் என்று பிடிவாதம் செய்தேன் .
அபார்சன் செய்ய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றேன். இருபத்தைந்து பேருக்கு அபார்சன் செய்த பின் என் மனைவியை பார்த்த மூன்று லேடி டாக்டர்ஸ் என்னை கூப்பிட்டார்கள் . மூத்தவனுக்கு ஐந்து வயது . அதனால் இந்த குழந்தையை கருகலைப்பு செய்ய வேண்டாம் . பெண்ணும் பலகீனமாக இருக்கிறாள் . அவளுக்கு குழந்தை வேண்டும் என்கிறாள் . - இப்படி சொல்லி அபார்சன் வேண்டாம் - தீர்மானமாக கூறி விட்டார்கள் .
கொலைகளத்துக்கு போய் தப்பித்தவன் ஆகையால் சிரஞ்சிவி என்பதாலும் என் தந்தை பாசத்திற்கு பிராயசித்தமாகவும் துரோணர் மகன் பெயரை அஷ்வத்தாமா சுருக்கி பெயர் -அஷ்வத் !
அஷ்வத் ஒரு நாள் நான்கு வயதில் மொட்டை மாடியில் இரவில் வானத்து நட்சத்திரங்களை பார்த்து விட்டு சொன்னான் .
" அப்பா! கடவுளோட வீடு ரொம்ப பெரிசு . எத்தனை லைட் பாரு !! கடவுளோட வீடு ரொம்ப பெரிசு . நிறைய லைட் இருக்கு !!

நான்காம் வகுப்பு படிக்கும் போது அவனுடைய பள்ளிக்கு ஜாதி சான்றிதல் தர சொல்லி கேட்டார்கள் . இல்லத்து பிள்ளைமார் .(B . C .) அதற்கான ஆயத்த வேளையில் இருந்த போது இவன் பள்ளியிலிருந்து வந்து காலாண்டு பரீட்சை எழுத விடவில்லை . ஜாதி சான்றிதழ் இருந்தால் தான் எழுத விடுவோம் என்கிறார்கள் என்றான் . வருடம் ஒரு பெரிய தொகை , மாதம் ஒரு தொகை என்று பெரிய வசூல் பண்ணிய பள்ளி . நான் போய் கோபத்தோடு சத்தம் போட்டு ஒரு காட்சி நடத்தவேண்டி வந்தது . அதன் பின் பரீட்சை எழுத விட்டார்கள் .அதன் பின் ஜாதி சான்றிதல் பெரும்பாடு பட்டு வாங்கி கொடுத்து விட்டேன் . ஆனால் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் சமாதானம் ஆகாமல் அஷ்வத்தை அவமானப்படுத்தியிருக்கிறார்கள் . தமிழ் மிஸ் ' ஏண்டா ! ஏதாவது ஒண்ணுன்னா உங்கப்பா கிட்ட சொல்லுவே . அவர் வந்து எங்க கிட்ட தகராறு பண்ணுவாரு !' என்று ஒரு நாளைக்கு பத்து தடவை அவனை சீன்டியிருக்கிறாள் .
அடுத்து வந்த பரிட்சையில் இவன் ஒரு காரியம் செய்து விட்டான் . அவன் பள்ளி நிர்வாகி இத்தனைக்கும் 'குழந்தைகள் டாக்டர் ' அந்த டாக்டர் ' பள்ளியின் மானமே போய் விட்டது . எட்டு வயதில் இப்படி செய்பவன் நாளைக்கு நக்சலைட் ஆகி நாட்டையே நாசம் பண்ணி விடுவான் . இவனை பள்ளியில் இருந்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்கிறோம் ' - இப்படி சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்கு என்று ஆடினான் . ' அன்னைக்கு வந்து கத்துனே . இப்ப என்ன சொல்லுறே ?பிள்ளையா பெத்துருக்கிரே ' என்று அர்த்தம் . டிஸ்மிஸ் செய்தால் பீஸ் கட் ஆகி வருமானம் போய் விடுமே . அதனால் தான் சஸ்பெண்ட் செய்தான் .
வீட்டுக்கு அழைத்து வந்து அஷ்வத்திடம் விவரம் கேட்ட போது ' தமிழ் மிஸ் எப்பவும் திட்டிகிட்டே தலையில் கொட்டியதால் தமிழ் பரிட்சையில் கேள் விக்கு பதில் திருவள்ளுவர் என்று தெரிந்தும் அப்படி எழுதினேன் என ரவ்த்ரமாக சொன்னான் .
தமிழ் பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்வி
திருக்குறளை எழுதியவர் யார் ?
அஷ்வத் எழுதிய பதில்
எவனுக்கு தெரியும் ?

பின்னூட்டங்களுக்கு என் பதில் .

ஞாநி அவர்களுக்கு ,

உடனே என் ஜான் ஆப்ரகாம் பதிவை திருத்தி விட்டேன் . தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன் . உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்தையும் உன்னிப்பாய் கவனித்து வருபவன் நான் . பதினெட்டு வருடங்களுக்கு முன் புதுவையில் ஒரு நாடக பட்டறையில் உங்களை சந்தித்து அறிமுகம் செய்துகொண்டவன் நான் .

................

என் மூத்த மகன் R.Karan Kirti பற்றிய என் பதிவு

வாசக நண்பர்களுக்கு

எனக்கு நல்ல மனைவி , அருமையான இரண்டு மகன்கள் . குடும்ப சந்தோசம் நான் செய்த பாக்யம் . என்னளவு அருமையான குடும்பம் அமைந்தவர்கள் அபூர்வம் .

கீர்த்தி யும் நானும் இப்போது ஒரே நிறுவனத்தில் தான் பணிசெய்கிறோம் .

அவர் படிப்பை தொடர முயன்ற முயற்சிகள் வெற்றி பெறவில்லை . ஆங்கில இலக்கியம் பட்ட படிப்பை தொடர முடியாமல் வேலைப்பளு காரணமாக நிறுத்தி விட்டார் . படிப்பு விஷயத்தில் இப்போது ஆர்வமும் அவருக்கு இல்லாத படி அவருடைய வாழ்வனுபவங்கள் மாற்றிவிட்டது . ஞாயிற்று கிழமைகள் கூட வேலை சுமை .சாப்பாடு , தூக்கம் இரண்டும் சரியான நேரத்தில் கீர்த்திக்கு கிடைக்காத சூழல் தான் .

தொடர்ந்து மிக மோசமான பொருள் இழப்பு களுக்கு ஆளானவன் நான் . மிக அதிகமான தொகை , துணைவியாரின் நகை , சொத்து அனைத்தையும் இழந்து விட்டு திருப்பூர் வந்தோம் . நிலைமை இன்னும் சீரடையவில்லை . திருப்பூர் வந்த பின் கூட இரண்டு வருடம் முன் என் சொத்து ஒன்று அபகரிக்கப்பட்ட அதிர்ச்சியான செய்தியை கேட்கும் துர்பாக்ய நிலை .

உடனே எம்ஜியார் போல (' இதோ நான் இருக்கிறேன் ' )என்னை காப்பாற்ற யாரும் கிளம்பி விட வேண்டாம் . வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்க பழகி விட்டேன் . தயவு செய்து வாழ வழி , புத்திமதி , தீர்ப்பு எதுவும் யாரும் செய்ய வேண்டாம் .

சுரேஷ் கண்ணன் சொல்வது போல "எல்லாம் கடந்து போகும் "

கமல் ஹாசன் சில நேரம் குழப்பாமல் சரியாக பேசுவார் . நான் ரசித்த ஒன்று .

' என்னுடைய வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து பார்த்தால் தான் உங்களுக்கு என் தவறுகளின் நியாயங்கள் புரியும் .'

இதை எங்கிருந்து சுட்டிருப்பார் ?!

ஞாநி விளக்கம்

வணக்கம்.

நான் ஜான் ஆபிரஹாமை ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். அது நீங்கள் குறிப்பிடுவது போல திரைப்பட விழாவிலும் அல்ல; ஓடோடிப் போயும் அல்ல. சங்கீத நாடக அகாதமியின் நாடக விழா எர்ணாகுளத்தில் நடந்தபோது, கூத்துப்பட்டறையின் நாடகமும் இடம் பெற்றது. அதற்கு வந்திருந்த தமிழக நாடகக்காரர்கள் சிலர் அப்போது அம்மெ அறியன் படத்துக்கு மக்களிடம் நிதி திரட்டும் பணியை தொடங்க இருந்த ஜானை சந்திக்கச் சென்றோம். ஜானும் அவர் குழுவினரும் கையால் எழுதிய சுவரொட்டிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.கொச்சி கோட்டை சுவரில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று ஜான் பேசி உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவதைத் தொடங்கி வைத்தார். அதை நான் எடுத்த புகைப்படமும், அன்றே படகுத்துறையில் ஜானையும் ஒரு குழந்தையையும் நான் எடுத்த புகைப்படமும் ஆர்.ஆர்.சீனிவாசன் வெளியிட்ட ஜான் பற்றிய நூலில் பின்னர் பிரசுரிக்கப்பட்டன. சுவரொட்டி எழுதும் இடத்தில் ஜானிடம் என்னை ஞாநி என்று அறிமுகம் செய்தபோதுதான், ஜான் சிரித்தபடி தான் அஞ்ஞானி என்று சொன்னார்.பின்னர் அன்று முழுவதும் நாங்கள் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தோம். பின்னர் எப்போதும் நான் ஜானை எங்கேயும் சந்திக்கவில்லை. ஜான் படங்களில் அ.கவும் அ.அ.வும் எனக்குப் பிடித்த முயற்சிகள். செரியச்சனோட குரூர நிருத்யங்களில் சில காட்சிகள் நன்ராக அமைந்திருக்கும். ஜான் உருவாக்கிய அக்ரஹாரத்தில் கழுதையில் நடித்த இசை மேதை எம்.பி.சீனிவாசன் என் மதிப்புக்குரிய நண்பர். ஜானுடன் ஒடெசா திரைப் பட இயக்கத்தில் பங்கேற்ற பிரகாஷ் மேனனும் என் நண்பரே. பிரகாஷ் மேனன் இன்றும் சென்னையில் மலையாள டி.வி தொடர் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்போது தொடர்பு இலை. ஜான் பற்றிய ஜெயமோகனின் ஒரு குறிப்பு முற்றிலும் உடன்பட முடியாதபோதும் நம் பரிசீலனைக்குரியது. அக்ரஹாரத்தில் கழுதை திரைக்கதை வசன நூலை அடிப்படையாகக் கொண்டு பரீக்‌ஷாவின் மேடை நாடகமாக்கலாம் என்று ஒரு முறை நினைத்தோம். அது கைகூடவில்லை.

அன்புடன்
ஞாநி


உங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இட்டால் அது செல்லவிலை. எனவே மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன். ----------------

Sep 27, 2008

Child is the Father of the Man


எல்கேஜி வகுப்பில் சேர்க்கும் போது என் மகன் கீர்த்தி யை பள்ளிக்கு முதல் நாள் அழைத்து சென்றிருந்த போது அங்கே மற்ற பிள்ளைகள் அனைத்தும் கதறி அழுது கொண்டிருந்தன . பெற்றோர் பிள்ளைகளை விட்டு விட்டு கிளம்ப முடியவில்லை . அந்த அளவுக்கு ஏதோ கொலைகளத்துக்கு கொண்டுவரப்பட்டு விட்டது போல குழந்தைகள் கதறி அழுது கொண்டிருந்தன . அந்த பள்ளி மிஸ் நான்கு பேர் தவித்துகொண்டிருந்தார்கள் . பெற்றோரை கிளம்ப சொல்லிகொண்டிருந்தார்கள் .


கீர்த்தியை வகுப்பு வாசலில் நிறுத்தினேன் . அவனுடைய ஸ்கூல் பாக் தோள் மீது . என்னை பார்த்தான் ' நீ போப்பா ' என்றான் . அழுது கொண்டிருக்கும் குழந்தைகளை ஒரு பார்வை பார்த்தான் . நான் நின்று கொண்டிருந்தேன் . மிஸ் ஒருவர் வந்தார் . பையன் பெயர் கேட்டார் . சொன்னேன் . உடனே ' நீ வீட்டுக்கு போப்பா 'என்றான் . மிஸ் ஆச்சரியப்பட்டார் . அழாமல் ஒரு குழந்தை . வகுப்பிற்குள் நுழையும்போது திரும்ப என்னை பார்த்து ' போப்பா ' மறுபடியும் !
வகுப்பிற்குள் சென்று மிஸ் சொன்ன இடத்தில் உட்கார்ந்த பின் அழுகின்ற அவனுடைய வகுப்பு தோழர்களை பார்த்தான் . வெளியே ஆர்வத்துடன் நிற்கும் என்னை பார்த்து பார்வையால் 'ஏன் இன்னும் நிற்கிறாய் ?' வினவி, தலையால் 'போப்பா நீ ' சைகை . மிஸ் நான்கு பேரும் வியந்து நின்றார்கள் .
...........................................


நான் முதலில் இங்கே திருப்பூர் வந்து வேலைக்கு சேர்ந்த பதினைந்தாம் நாள் திருச்சி போய் கீர்த்தியை ( பதினேழு வயது ) இங்கே வேலை பார்க்க அழைத்து வந்தேன் . அப்போது குடும்பம் இன்னும் திருச்சியில் .
நான் வேலை பார்த்த இடத்திலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தூரத்தில் கீர்த்தி வேலைக்கு சேர வேண்டிய நிறுவனம் . மூன்று பஸ் மாறி செல்ல வேண்டியிருக்கிறது . 'பச்சை பாலகனை வேலைக்கு விட வேண்டியிருக்கிறதே' . நான் வேலை பார்த்த நிறுவனத்தின் மேனேஜர் முதல் வாட்ச்மேன் வரை தலையில் அடித்துகொன்டார்கள் .
பஸ்ஸில் வரும்போது குமுறி அழுகிறேன் . கண்ணீர் வடிய குமுறி அழுகிறேன் .


கோடை விடுமுறை நேரம் . பையன்கள் ஆங்காங்கே கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் . திருச்சியில் விடுமுறை தினங்களில் சிறுவர்கள் ,இவன் தோழர்கள் இவனை தேடி கிரிக்கெட் விளையாட கூப்பிட வந்து விடுவார்கள் .
'அங்கிள் ! இவன் தான் எங்க டீமுக்கு டெண்டுல்கர் ! விளையாட அனுப்புங்க அங்கிள் ! '
திருச்சியில் அந்த நேரத்தில் செஸ் விளையாட்டிலும் Under 18 district champion!
இப்போது வேலை பார்க்க திருப்பூரில்.
கீர்த்தி அப்போது பஸ்ஸில் ஜன்னல் ஓரமிருந்து என்னிடம் பேசிய ஒரே வார்த்தை ' கிரிக்கெட் வெளையாடுறாங்கப்பா '
என் நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது . வாயில் கர்சிப்ப்பை வைத்து அழுத்திக்கொண்டு அழுகிறேன் .
பைபிள் பழைய ஏற்பாட்டில் ஒரு காட்சி . கடவுள் கேட்டார். அதனால் மகன் ஐசக்கை கொன்று பலி கொடுக்க வேண்டி அழைத்து கொண்டு மலையேறும் ஆப்ரகாம் .
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறங்கி ஒரு முக்கால் கிலோ மீட்டர் நடை . வாய் விட்டு அழுகிறேன் . கீர்த்தி இறுக்கமாக ' அழாதப்பா '


பனியன் கம்பனியில் அவனை ஒப்படைக்கிறேன் . அவனை இருவர் புரடக்சன் பகுதிக்கு அழைத்து செல்கிறார்கள் . அவர்கள் அவனிடம் வேலை என்ன என்று விளக்குவதை அலுவலக கண்ணாடி மூலம் பார்க்க முடிகிறது . அவன் கவனமாக கேட்டுக்கொண்டு தலையாட்டி கொண்டு இயல்பாக உடனே பனியன்களை கணக்கிட ஆரம்பிக்கும் போது அங்கிருந்தே என்னை பார்க்கிறான் . தலையை ஆட்டி என்னை பார்த்து உதடு அசைத்து சொல்வது எனக்கு பார்க்க கிடைக்கிறது .
'நீ போப்பா '

பாரதி மணி

காதல்,காதல்,காதல்

பாரதி மணி said...
எனக்கு வயது எழுபது முடிந்துவிட்டது. நான் ஏன் இன்னும் ஒரு கவிதை கூட எழுதவில்லை?உங்கள் வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறேன்.

பாராட்டுக்கள் .

பாரதி மணி
September 26, 2008 9:54

என் பதில் :

பாரதி மணி சார் !

உங்களுக்கு என் வலைதளத்தில் எத்தனை வாசகர்கள் தெரியுமா !

உங்களுக்கென்ன சார் ராஜா மாதிரி வாழ்க்கையை கொண்டாடிய மனிதர் !

கவிதை எழுத மனதில் கவலை வேண்டுமே . சலிப்பு வேண்டுமே .

உங்கள் வாழ்க்கையில் கவலை சலிப்பு இவற்றிற்கெல்லாம் இடம் ஏது சொல்லுங்கள் .

எழுபது தானே இப்போது . மாமியை பற்றி' மழை ' நாடக நினைவுகளை கவிதைகளாக எழுதி அசத்தபோகிறீர்கள் பாருங்கள் !

இன்னும் ஐம்பது வருடம் இருக்கிறது .Your Whole future is before you!

ஜான் ஆப்ரகாம் பற்றி நாகார்ஜுனன்

நாகார்ஜுனன் said...
ராஜநாயஹம்,

சொந்த அனுபவங்கள் தாண்டி ஜானின் சினிமாவைப் பார்க்க வேண்டிவரும் போது ஆச்சர்யமாக இருக்கும் என்பது சரிதான்.

உங்கள் அனுபவமும் அப்படித்தானிருக்கிறது..ஜானின் 21-ஆம் நினைவு நாளை ஒட்டி நான் எழுதிய நம் அக்ரஹாரத்தில் ஒரு கழுதை என்ற மூன்று பதிவுகள் இதோ

:http://nagarjunan.blogspot.com/2008/06/1.htmlhttp://nagarjunan.blogspot.com/2008/06/2.htmlhttp://nagarjunan.blogspot.com/2008/06/3.html
September 27, 2008 12:03 AM

Sep 26, 2008

காதல் காதல் காதல்

17,18,19வயதிலெல்லாம் என் வாழ்க்கை காதலில் ரொம்ப பிஸி யாக கழிந்தது . அந்த பதினேழு வயது காதலில் கோவிலில் நிஜமாகவே திருமண சம்பிரதாயத்தை அந்த பெண்ணுடன் விளையாட்ட்டாக செய்து பார்த்தேன் . அதாவது கோவிலில் கல்யாணம் என்றால் என்ன செய்வார்களோ அந்த சடங்கை . எல்லோரும் வழிபாடு செய்துகொண்டிருக்கும் போது அந்த காரியத்தை தைரியமாக அவளிடம் செய்து விட்டேன். யாரும் கவனிக்கவில்லை .


அடுத்த அந்த பதினெட்டு வயது காதல் விஷயம் கொஞ்சம் பரபரப்பாகிவிட்டது . அமெரிக்கன் காலேஜ் சரித்திரத்தில் ஒரு காதல் விவகாரம் இந்த அளவுக்கு பகிரங்கமாக கேவலபடவில்லை என்று சீனியர்கள் அபிப்ராய பட்டார்கள் .அந்த பெண்  லேடி டோக் காலேஜ்.அவள் அண்ணன் எங்கள் காதலை பெரிய காட்சியாக்கி முரட்டம்பத்திரி,கரிமேடு சல்லிகளுடன் வந்து கட்டை பஞ்சாயத் ஆக்கி அவள் தான் என்னை சினிமாவுக்கு கூப்பிட்டாள் என்பதை அவளே ஒத்துகொண்டவுடன்... அவளை அவமானப்படுத்தி...  நூற்றுக்கணக்கான பேர் பார்த்துகொண்டிருந்தார்கள் . சினிமாவில் காட்டுவார்களே ...அப்படியே தான்.
அப்போது அந்த காட்சியை பார்த்துகொண்டிருந்தவர்களில் ஒ சீ பி எம் பள்ளி காம்பௌண்டில் இருந்து கவனித்த அந்த என் பத்தொன்பது வயது காதலி யும் இருந்தாள். இவள் தான் என் அடுத்த வருட காதலி.

 லேடி டோக் பெண்ணுக்கு ஒரு கவிதை எழுதினேன். அதற்கு திருச்சி பள்ளியில் ஜேசு ராஜா (பின்னால் இவர் பாளை புனித யோவான் கல்லூரி ஆங்கில பேராசிரியர் ) எனக்கு சொல்லி தந்திருந்த ராகத்தில் பாடி கல்லூரியிலும் பின் அனைத்துகல்லூரி பாட்டு போட்டியிலும் பரிசு வாங்கினேன்.

"சிரிக்க வைத்தேன் அது தவறென்றால் உன்னை
அழுக வைத்தேன் அது சரிதானா ?
நீயில்லை என்றால் காலமெல்லாம் உன்
நினைவு வந்து மொழி சொல்லுமே .

இருக்கின்ற நீ எனக்கு இல்லையென்றால் அந்த
இல்லாத இறைவனும் இருக்கட்டுமே
உன் மனம் புண் பட இறைஞ்சுகிறேன் - என்
அகமே நெகிழ மறந்து விடு . "

இது தான் அந்த பாடல் .

அடுத்த வருடம் என் பத்தொன்பதாவது வயது காதலில்

"உன்னுடைய பாஷையில் சொன்னால்
கடவுள் சேர்த்து வைப்பார் !
என்னுடைய பாஷையில் சொன்னால்
கடவுள் இருந்தால் கட்டாயம் சேர்த்து வைப்பார் ! "

O My Love!

If it is possible, pass from me

Nevertheless,Not as My will

But as thy God’s will.


நான் அப்போது எடிட் செய்து வெளி வந்த " மரத்தடி மகா ராஜாக்கள் " நூலில் "கூடுமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு விலகட்டும் " என்ற வசன கவிதையில் இடம் பெற்றிருந்த ஒரு சில வரிகள் மேற்கண்டவை .

இப்போது ஏன் நீங்கள் கவிதையெல்லாம் எழுதவில்லை என்று பலரும் கேட்கிறார்கள் . யோசித்தால் கல்லூரி வாழ்வோடு கவிதையை நிறுத்தியிருக்கிறேன் . காரணம் ... கவிதை என்றாலே எனக்கு காதல் கவிதை தான் எழுத முடிந்தது . அதனால் தான் சலித்து போய் ச்சே ன்னு நிறுத்தி விட்டேன் .

அதனால் தான் தெம்பாக இப்படி என்னால் எழுத முடிந்தது இப்போது .

EXCESSIVE CREATIVITY - -

...Eureka! Eureka!!

Except R.P.Rajanayahem,all other Tamil men and women are writing poems.

Either poems or stories!

Out here almost everybody says'
"I am writing a novel" or " I have an idea to write a novel."



கவிதை யை தான் விட்டேன் . காதல் எல்லாம் அப்படியே இருக்கிறது . தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் . ஆரம்பம் பத்து வயது பிள்ளை காதல் . கைகட்டு கால்கட்டோடு பாடையில் போகும்போது தான் காதலும் போகும் .

....................................................




கேத்தி ஆக்கர்

கேத்தி ஆக்கர் எழுதிய Blood and Guts in Highschool நாவலில் பத்து வயது சிறுமி ஜேனி ஸ்மித் அவள் தகப்பனிடம் கொள்ளும் உறவு Father Image பாதிப்பு தான் . அவளுக்கு அவள் தகப்பன் உறவு எல்லாமாக நண்பனாகவும் அதோடு Incest வகையினதாகவும் அமைந்திருக்கிறது . இந்த நாவலில் புனித ஜெனே என சார்த்தர் புகழ்ந்துரைத்த ழான் ஜெனேயை ஒரு கதாபாத்திரமாகவே கேத்தி ஆக்கர் கொண்டுவருகிறார் . ஒரு பிரபலமான பிரஞ்சு எழுத்தாளன் ஜெனே ஒரு அமெரிக்க நாவலில் கதாபாத்திரம் . இப்படி தமிழில் ஜானகிராமனின் மோக முள்ளில் , M . V . வெங்கட் ராம் (நித்யகன்னி , வேள்வித்தீ ,காதுகள் ஆகிய நாவல்களின் ஆசிரியர் ) ஒரு கதாபாத்திரமாகவே வருவார் .
'கருச்சிதைவுகள் என்பது இந்த உலகை பொறுத்தவரை உடல் உறவின் வெளி பிம்பமாக ,குறியீடாக உள்ளது .வலி, பயம் ... என்னுடைய கருச்சிதைவுகளை விவரிப்பதன் மூலமாகவே வலி , பயம் என்ற உணர்வுகளை யதார்த்தமாக உங்களுக்கு நான் கூற முடியும் '-Blood and Guts in Highschool நாவலில் கேத்தி ஆக்கர் சொல்வது .
கேத்தி ஆக்கர் சகஜமாக டிக்கென்சின் நாவல் Great expectationsதலைப்பை தன்னுடைய நாவல் ஒன்றிற்கு எடுத்துள்ளவர் . அது போல செர்வாண்டஸ் உடைய பிரபலமான Don quixote யையும் தன்னுடைய மற்றொரு நாவல் தலைப்பாக்கியிருக்கிறார் . இத்தாலிய இயக்குனர் பசோலினி ( 120 years of Sodam என்ற SADE நாவலை படமாக்கியவர் ) பற்றிய நாவலில் ஹாம்லெட் கதாபத்திரங்கள் போலோநியஸ் , மகள் ஒபிலியா இருவரும் உரையாடும் காட்சி இப்படி
போலோநியஸ் பேசுவதை நம்பியார் பேசுவது போல் நினைத்துபாருங்கள் .
போலோநியஸ் : நீ அந்த ஹாம்லெட் பயலை விரட்டிக்கிட்டு திரியறே .உங்களுக்குள்ளே ஏதோ இருக்கு . நான் விட மாட்டேன் . ஒனக்கு நான் தான் பாதுகாப்பு . வீடு , சாப்பாடு எல்லாம் தாரேன் .
ஒபிலியா : Why don’t you fuck your wife, instead of me?
போலோநியஸ் : அசிங்கமா பேசுறே . ஒன்னோட வாயை சோப் போட்டு நான் கழுவ போறேன் .
இந்த போலோநியஸ் பாத்திரம் ஷேக்ஸ்பியர் பாத்திரங்களில் விஷேசமானது .
எங்களுக்குஅமெரிக்கன் கல்லூரியில் ஷேக்ஸ்பியர் " ஹேம்லெட் " பாடம் வசந்தன் நடத்தினார் . ஹேம்லெட் என்றால் வசந்தன் ஞாபகம் தான் இப்போதும் வரும் . இரண்டாம் ஆண்டு இதே நாடகத்தைD .யேசுதாஸ் என்ற புரொபெசர் நடத்த வந்தார் . அப்போது போலோநியஸ் காரக்டர் (நம்பியார் பாணி அல்ல )ஆகவே அவர் மாறி விடுவார் .இப்போதும் போலோநியஸ் பாத்திரம் அவரை(DY )நினைவு படுத்தும் .

Sep 25, 2008

Carnal thoughts-4

தற்பெருமை !
கட்டுடைப்பு செய்து பார்த்தால் அது உண்மையில் ஏக்கம் , நிறைவேறாத ஆசை பற்றிய தவிப்பாக , தாபமாக இருக்கலாம் .
ஒரு சினிமா ஸ்டில் போடோக்ராபர் சொன்ன விஷயம் இது .
அவர் அப்போது அந்த பழம் பெரும் நடிகையுடைய குடும்ப நண்பர் . அவரிடம் அந்த நடிகை பெருமையாக தன்னுடைய தனித்துவம் பற்றி குறிப்பிடுவாராம் .
மறைந்து விட்ட நடிகை தேவிகா . அந்த காலத்து குஷ்பு . இவரை திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் கைதட்டுவார்கள் .
ஆனந்த ஜோதி என்ற ஒரே படத்தில் இவர் எம்ஜியாருடன் நடித்தார் . சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்தவர் . ஒரு குறிப்பிட்ட சமயம் பதின்மூன்று படங்களில் சிவாஜியுடன் ஒரே நேரத்தில் நடித்து கொண்டிருந்தார் . அதற்கு முன்னும் பின்னும் வேறெந்த நடிகைக்கும் அப்படி வாய்ப்பு கிடைத்ததில்லை .
இவர் மிகவும் பெருமையோடு தன்னை பற்றி புளகாங்கிதம் அடைந்து சொல்லும் அந்த சிறப்பு மிக்க செய்தி --
"எம்ஜியாரோடு நடித்து அவரால் தொட முடியாமல்அவரிடமிருந்து தப்பித்து விட்ட
நடிகை நான் மட்டும் தான் ."
Derrida’s deconstruction!
ஏக்கம் ! ஏக்கம் !!Carnal thoughts!

Sep 24, 2008

ஜான் ஆப்ரகாம்



அக்ரகாரத்தில் கழுதை படத்திற்கு வெங்கட் சாமிநாதன் வசனம் எழுதியிருந்தார்.
சுந்தர ராம சாமி அதன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஆசைபட்டிருந்தார். ஆனால் நடக்கவில்லை.
 எம்பி சீனிவாசன் நடித்தார்.
விருது வாங்கிய படம்.அதன் இயக்குனர் ஜான் ஆபிரஹாம்.
ஜான் ஆபிரகாமை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது விருது பட இயக்குனர் என அவர் ஏ வி எம் ஸ்டுடியோவில் பிரபலம். ’அம்மே அறியான்’ பட எடிட்டிங் வேலை என்று நினைக்கிறேன். எடிட்டிங் காக ஏவிஎம் மிற்கு வருவார்.
நான் அவரை நான்கைந்து முறை பார்த்த போதும் ஒரே சம்பவம் தான்அல்லது ஒரே மாதிரி சம்பவம் நடந்தது.
நீட்ஷேயின் “The eternal recurrence of the same event”

ஆட்டோ வந்து நிற்கும். ஜான் ஆபிரஹாம் சீட்டில் உட்கார மாட்டார். கால் வைக்கிற இடத்தில் வெளிக்கி இருப்பது போல் குந்தி இருப்பார். அவர் கூட வருபவர் இறங்க சொல்லி கெஞ்சுவார். ஆபிரஹாம் ரொம்ப அழுக்காக ஆடை யுடன் எப்போதுமே குளிக்காதவர் என்று பார்த்தவுடன் தெரியும்படி உடலும் ரொம்பவே அழுக்காக இருப்பார். ஆட்டோவில் சிரித்துகொண்டே குந்திய நிலையில் இறங்க மறுப்பார். ஆட்டோகாரன் கத்துவான். இவர் இறங்க மாட்டார். எடிட்டிங் ரூமிலிருந்து இவருடைய எடிட்டரும் வந்து மலையாளத்தில் இறங்கும்படி கெஞ்சுவார் . இவர் சிரித்துகொண்டே மறுப்பார். வெகு பிரயாசைக்கு பின் இவரை சிலர் ஒன்று சேர்ந்து வலுக்கட்டாயமாக ஆட்டோ விலிருந்து இறக்குவார்கள்.

அடுத்த முறையும் அதற்கடுத்த முறையும் அதற்கடுத்த முறையும்
ஆட்டோ வந்து நிற்கும் .நான் காண நேர்வது அதே காட்சி தான். “The eternal recurrence of the same event!”

நான் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த படத்தின் இயக்குனர் ' ராஜநாயஹம் ! அவார்டு வாங்கனும்னு ஆசைப்பட்டா கடைசியில் இப்படி தான். தரைக்கு இறங்கி வா. நீயும் வித்தியாசமா படம் பண்ணனும்னு நினைக்கிறியா ? பார்த்துக்க.உனக்கும் இது தான் கதி ' என எல்லோரும் அங்கே ஜான் ஆபிரகாமை வேடிக்கை பார்க்க கூடியிருக்கும் போது என்னை பார்த்து உற்சாகமாக சத்தம் போட்டு சொல்வார். வெராண்டாவில் உள்ளவர்கள் சிரிப்பார்கள் .

'மோகமுள் நாவலை படமாக்கனும். கோபல்ல கிராமத்தை படமாக்கனும், தந்திர பூமி சினிமாவாக எடுக்க முடியுமா,புளியமரத்தின் கதை கட்டாயம் நான் தான் இயக்கி வெளிவரணும், வண்ணநிலவனின் ’கடல்புரத்தில்’நாவலை படமாக்கனும் ' இப்படி கனவு கண்டு கொண்டிருந்த என்னுள் ஜான் ஆப்ரகாம் நிலை இடி போல் உரத்து இறங்கியது.
வேதனையை சொல்லி முடியாது. ஜான் ஆப்ரகாமின் கால் தூசு பெறாத சினிமாக்காரன் எல்லாம் இப்படி அவரை ஏளனமாக பார்த்தான்.


ஒரு சம்பவம்

கொச்சிகோட்டையில் பரிக்ஷா ஞாநியை அறிமுகம் செய்தபோது ஜான் சிரித்தபடி சொன்ன பதில் ' நான் அஞ்ஞானி! '

டெய்லி பேப்பர் படிக்கனுங்க

முதல் இரண்டு செய்திகள் சந்தோஷமானவை . மூன்றாவது செய்தி துக்கமான கெட்ட செய்தி . திடுக்கிட வைக்கக்கூடியது .அதிர்ச்சி தருவது . தயவு செய்து திட மனதில்லாதவர்களும் பலகீனமானவர்களும் படிக்கவே கூடாது .

1.திருப்பதி வெங்கடேசபெருமாள் கருவறை முழுவதும் தங்கத்தால் இழைக்க தேவஸ்தானம் முடிவு செய்து தங்கம் காணிக்கை செலுத்தி புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டி பக்தர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கி விட்டார் திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைவர் ஆதிகேசவலு .
புண்ணியம் குறைவாய் உள்ளவர்களுக்கு இனி குறையொன்றுமில்லை .தங்கத்தை அள்ளிக்கொண்டு திருப்பதிக்கு கிளம்பலாம் .

2. ஸ்டாலினுக்கு இலக்கிய தங்கபதக்கம்! திமுக வழங்குகிறது . சும்மா ஒன்றும் கொடுக்கவில்லை . பேச்சு போட்டி ,கட்டுரைபோட்டிக்காக ஸ்டாலின் பல லட்சங்களை வழங்கியிருப்பதற்காக . ஸ்டாலின் காட்டில் விருது மழை தான் . அதிர்ஷ்டசாலி . இதுவும் அண்ணாதுரை நூற்றாண்டு விருது தானாம் . "கலைஞர் விருது ஸ்டாலினுக்கு அறிவிக்கப்பட்ட போது அண்ணாதுரை நூற்றாண்டு பிற பரிசுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கட்சி அறிவித்திருந்தது நினைவிருக்கலாம் . அதில் முதல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுவிட்டது .

3." முதல் அமைச்சராகும் ஆசை எனக்கு இல்லை . அதற்கான அறிவும் ஆற்றலும் இருந்தாலும் கூட " என்று நடிகர் கார்த்திக் அறிவித்திருக்கிறார் .

அடடடடடா ... ச்சே ......A very promising future is cut short!

Sep 23, 2008

CARNAL THOUGHTS -3

என் தோழி என் தோளில் தலை சாய்த்துதன் துக்கங்களை சொல்லி தேம்பினாள் .
அவள் சொன்ன ஒரு விஷயம் ...
அவள் வயதுக்கு வந்த காலம் தொட்டு தன் சித்தப்பா - அப்பாவின் உடன் பிறந்த சகோதரர் இவளை பலாத்காரம் செய்ய முயன்று வருகிறார் . இவள் சம்மதிக்கவில்லை . அவர் எப்போதும் தொடர் முயற்சியில் தான் இருக்கிறார் .
இப்போது அவருக்கு வயது அறுபது . ஒரு முறை இவளை தொடநெருங்கிய போது சித்தப்பாவை இவள் முழு பலத்துடன் பிடித்து தள்ளியதில் கட்டில் முனை பட்டு அந்த பெரிய மனுஷனின் மண்டை உடைந்தது .
அவர் எப்போதும் இவளை பார்த்து வருத்தத்தோடு சொல்லும் வார்த்தை .
"நீ என் அக்கா மகளாக பிறந்திருக்க வேண்டியவள் . தப்பிபோய் என்னுடைய அண்ணன் மகளாய் பிறந்து தொலைந்து விட்டாய் . விதி ."


In nature’s infinite book of secrecy, A little I can read.
-Shakespeare


in ‘Antony and Cleopatra'

.........................................

http://rprajanayahem.blogspot.in/…/09/carnal-thoughts-3.html



கோழி களவானி

மதுரை பி சிக்ஸ் போலிஸ் ஸ்டேஷன் . ஜென்டில் மேன் காங்கோ அங்கே ஸ்டேஷன் எஸ் ஐ இடம் விளக்குகிறார் .
" ஒண்ணுமில்லை சார் . இந்த கார்பரேசன் பார்க் இல்லை . அங்க We used to smoke grass I mean Kanja. அப்போ திஸ் Fellow அப்ப to and fro வா வாக் பண்ணிக்கிட்டிருந்தான்அங்கே பார்க் ஒட்டி வேலி Fenceபக்கமா ஒரு Hut குடிசை இல்ல. அதுக்குள்ளே போனான் .திரும்ப வரும் போது அவன் STOMACH கொஞ்சம் BULKY யா இருந்திச்சி . என்னடா உள்ள போனான் . இப்போ BULKY STOMACH !வெளியே போறானே . நினைச்சேன் . ஆனா அப்ப மரிஜுவானா smoke பண்ணி கிட்டிருந்ததாலே We didn’t pay heed
திரும்ப இவன் ஒரு சாக்கு .. Big bagஎடுத்துட்டு வந்தான் . நாலு HEN யை தூக்கி சாக்குக்குள்ளே போட்டான் . ஆஹா ! THIS FELLOW SEEMS TO BE A HEN THIEF!
டே இடியட் . Hen Thief! இங்க வாடா என்னடா What the hell is going on here.
டே இதெல்லாம் Actually theft ஆச்சேடா கெட்ட பழக்கம் bad habitஇல்லையா ?
’ஒரு HEN யை தூக்கி இங்க எங்க கிட்ட போடுறா’ன்னு சொன்னா Mummy Motherன்னு Abusive
 language use பண்ண ஆரம்பிச்சிட்டான் சார் . நாங்க நாலஞ்சு Heavy blows கொடுத்து இவனைகட்டியேத்தி கொண்டு வந்திருக்கோம் சார் ."
எஸ் ஐ : டே 305 இவனை முதல்ல தூக்கி உள்ள போடுடா . அப்புறமா கோழி களவானியை கவனிப்போம் .

Sep 22, 2008

பச்சை குழந்தையின் பார்வை


பத்து வயதிலேயே காதல். Love and Romance! பெண்கள் என் வாழ்வில்.


ஒரு குறிப்பிட்ட என்னுடைய காதலி யை நானே தேடி கண்டு பிடித்துவிட்டேன்.
கால் நூற்றாண்டுக்கு பின் . ஆமாம். 25 வருடங்களுக்கு பின்.

My winsome angel! தனிமரமாக ...
அவளிடம் முதலில் தொலைபேசியில் பேசினேன். உடனே போய் பார்க்க வில்லை. தினமும் இரண்டு முறை தொலைபேசியில்.மூன்று மாதம் ஒரு முப்பது கடிதம் ஒவ்வொன்றும் இருபதுபக்க கடிதம் எழுதினேன்.
அப்புறம் போய் பார்த்தேன்.

என் தேவதையின் பார்வையில் ரொமான்ஸ் இல்லவே இல்லை. அதிசயம். ஆனால் பச்சை குழந்தை பார்ப்பது போலவே இருந்தது அவள் பார்வை. குழந்தையின் பார்வை!


”நான் பழுத்திருக்கும்போது வராமல்
உளுத்துப் போனபின்
புழு கொத்த வரும் மனம் கொத்தி நீ!”
இது கல்யாண்ஜியின் கவிதை. அபிதா!

இதழ்களின் லேசான குமிழில் ‘அ’, இதழ்களின் சந்திப்பில் ’பி’, உதடுகளின் தெறிப்பில் ’தா’. லா.ச.ராவின் அபிதா.
ஹைமவதி, ஹிமவான் புத்ரி, பர்வத ராஜகுமாரி!

என் கண்ணீர் வற்றி விட்டது.
...............................................................
ஒரு முழு இரவுவிடியும் வரை நானும் அவளும் தனி அறையில் தனிமையில்.
ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை .ஆனால் ......
No Physical Love!
............................................................

சோரம் போவது அவ்வளவு சுலபம் இல்லை என்று அசோகமித்திரன் சொல்வார்!
ஒரு முறை அசோக மித்திரன் புதுவை வந்திருந்தபோது இலக்கிய விவாதத்தில் சற்று வேகமாகவே என்னிடம் சொன்னார் 'சோரம் போவது அவ்வளவு சுலபம் இல்லை.'
அப்போது புரிந்து கொள்ள குழப்பமாகத்தான் தோன்றியது.



...........................

My winsome angel!
So long! Farewell!!
இன்று நாம் மீண்டும் பிரிந்து விட்டோம் . என் காலம் உள்ளவரை உன் நினைவு என் கண்ணில் கசிந்து கொண்டிருக்கும்.




"If I should meet you after a long time
How should I greet thee?
With silence and tears."
-Byron



........................

http://rprajanayahem.blogspot.in/…/09/carnal-thoughts-3.html



Sep 20, 2008

கடும்கோபம்

மட்டன் ஸ்டால் பாய் வயதானவர் . எண்பதை வயதாக கொண்டவர்.மதுரையை எழுபது வருடமாக நுகர்பவர் .

சுருட்டு பத்த வைக்கிற தீப்பெட்டி அவருக்கு உயிர் மாதிரி .

நம்ம குருவிமண்டையன் ,மொட்டையன் , ஆட்டு மூக்கன் (நிஜமாகவே இவன் மூக்கு ஆட்டுக்கு இருக்கிற மாதிரியே இருக்கும் ) தொல்லை (இவனால் பல தொல்லைகள் விளைந்ததால் இவனுக்கு தொல்லை என்றே பெயர் .)ஒத்த காதன் ஆகிய இவர்கள் கஞ்சாவுக்கு காசு பார்த்து விட்டார்கள் .வாங்கி விட்டார்கள் .சிகரெட்டும் பிரட்டி விட்டார்கள் .(சிகரெட்டுக்கு உருண்டை விழியன் இன்று சிக்கினான் . அப்புறம் முனகிகிட்டே தான் போனான் .) தீப்பெட்டி தான் பிரச்னை .பிறகு பார்க்குக்குள் போய் விட்டால் சிவ போதை தான். ராஜ போதை தான் .

தொல்லை தான் பாயிடம் கேட்டான் .வாயில் பீடி .

'பாய் !பீடிக்கு கொஞ்சம் Fire service பண்ணுங்க பாய் . '

பாய் எச்செரிக்கை யானவர் . அப்போது தான் பற்ற வைத்திருந்த சுருட்டை நீட்டினார் .

'பாய் சுருட்டு வாடை பிடிக்காது பாய் . பீடி அப்புறம் சுருட்டு வாடை அடிக்கும் தீப்பெட்டி கொடுங்க '

பாய்க்கு மனசே இல்லை . தீபெட்டியை கொடுக்கிறார் .

தீபெட்டியை திறந்து ஒரு குச்சி தீப்பெட்டி ஓரத்தில் அடித்து பத்த வைக்கிறான் .

டே . ஒரு நாலு குச்சி எடுத்துக்கடா . நம்ம பாய் டா ' இது ஒத்த காதன் .

தொல்லை பத்து குச்சி எடுக்கிறான் .

டே தொல்லை ! தீப்பெட்டி ஓரத்து மருந்து பட்டையை லேசா கிழிச்சிக்கடா .பார்க் லே மருந்து (கஞ்சா ) சிகரெட்ட குச்சியாலே பத்த வைக்க . நம்ம பாய் தாண்டா '- இது மொட்டையன் .

ஒரு ஓரத்து பட்டையை முழுதும் தொல்லை கிழித்து எடுத்துகொண்டான் .

சிதைக்கப்பட்ட தீப்பெட்டியை திரும்ப பாய் கையில் வைக்கிறான் .

பாய் கண்ணெதிரே அவருடைய கண்ணான தீப்பெட்டி கற்பழிக்கபட்டு விட்டது ! பாய்க்கு கோபத்தில் கண் சிவந்து விட்டது .

கிளம்ப இருந்த கஞ்சா மன்னர்களை பார்த்து பாய் ' டே கொஞ்சம் நில்லுங்கடா .'

'என்ன பாய் '

பாய் ' கொஞ்சம் நான் வேட்டியை தூக்கிகிட்டு குனிஞ்சிகிரேன் . வருசையா நின்னு ஒவ்வொருத்தனும் தள்ளிக்கிங்கடா '

பாய் கோபத்தை வெளிப்படுத்தும் விதம் இப்படி தான் .

சரியா மட்டன் வியாபாரம் ஆகலேயேன்னு ஒரு நாள் ரொம்ப கவலையில் பாய் இருக்கும்போது தொல்லை ' பாய் என் புது வாட்சை பாருங்க ' ன்னான் . கையை ஆட்டிஆட்டி புது வாட்சை காட்டினான் .பாய் கொந்தளித்து Spontaneous ஆ 'என் சுன்னியிலே கட்டு ' என்றார் .

தூங்கி கொண்டிருந்த பாய் மூக்கில் மற்றொரு நாள் தொல்லை மூக்கு பொடியை போட்டு விட்டான் .எல்லாரும் சிரிக்கிராங்கே . பாய் தும்மு தும்முன்னு தும்மி முடித்தவுடன் தொல்லையை கூப்பிட்டார் . பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு தொல்லை இவர் அருகில் வந்து 'என்ன பாய்'

பாய் ' ங்கோத்தா புண்டையிலே போயி போடணும் '

மற்றவர்களை ஒரு பார்வை பார்த்து ' என்ன நான் சொல்றது '

பிரதான ஜால்ரா கோவை வாழ் அறுபது வயது காஞ்ச காட்டான்

பாவம் ...அந்த ஜெகம் பிராடு ஜெயமோகனின் பிரதான ஜால்ரா,கோவை வாழ் அறுபது வயதான 'காஞ்ச காட்டான் .' அவன் பேர் என்ன . விளங்காம இளிச்சிட்டே இருப்பானே .ம்ம் நாஞ்சில் நாடான் !

இரண்டு வருடம் முன் இங்கே ஒரு ஆங்கில பேராசிரியர் கோவையிலிருந்து ஒரு கூட்ட நிகழ்வுக்கு வந்தவர் இங்கே உள்ள எழுத்தாளரிடம் ' இப்ப , இங்கே R.P.ராஜநாயஹம் வருவாரா ? R.P.ராஜநாயஹம் வருவாரா ?' இப்படி கேட்டுகொண்டே இருந்தாராம் .
இந்த எழுத்தாளர் ' R.P.ராஜநாயஹம் இங்கெல்லாம் வரமாட்டார் . ஏன் ? ஆர்வமா கேட்கேறீங்க ?'

ஆங்கில பேராசிரியர் : எப்பவும் அந்த ( பிரதான ஜால்ரா அறுபது வயது காஞ்ச காட்டான் ) நாஞ்சில் நாடான் இவரையே திட்டிகிட்டே இருப்பதனாலேஅந்த R.P.ராஜநாயஹம் யாரு அவரை பாக்கணும் நு தோனுது .திருப்பூரில் தானே அவர் இருக்கார் .அதனால் தான் வருவாரான்னு கேட்டேன் .

இதிலே பிரதான ஜால்ரா ' வேட்டியிலே புல் அழுக்கு படாம நடக்க முடியலேயே 'ன்னு ஒப்பாரி வேற வைக்கிறானே !


அறியப்படும் நீதி :

திருட்டுபயலை கையும் களவுமா பிடிக்கவே பிடிக்காதீங்க .அப்பறம் கறுவிக்கிட்டே தான் இருப்பான் .
அயோக்கிய பயலை கண்டுக்காம போனீங்கன்னா தான் ஒங்களை திட்டவே மாட்டான் .

G .நாகராஜன்

நாங்கள் பார்க்க முடியாமல் போன இறந்து போன மனிதரை பற்றிய எங்கள் தேடல் அன்று ...
G .நாகராஜன் மதுரை திண்டுக்கல் ரோட்டில் மேலமாசி வீதியை ஒட்டி குடியிருந்த பல வீடுகள் கொண்ட ஒட்டுகுடித்தன வீட்டுக்கு
 நானும் என் நண்பர் M .சரவணனும் போயிருந்தோம்.
அப்போது G .நாகராஜன் மறைந்து ஒரு மூன்று வருடம் இருக்கும்.
கொஞ்சம் தெரியாத மாதிரி ' இங்கே G.நாகராஜன்னு ஒரு புரபஸர் இருக்கிறாரல்லவா.’
அங்கிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
ஒரு வயதான பிராமண பாட்டி உடனே சொளவை கீழே வைத்து விட்டு உடனே எங்களை கூர்ந்து பார்த்தார். எழுந்து வந்தார்.

'யார் நீங்க ?'

'அவரோட மாணவர்கள் '.(' சும்மா..Harmless lie )

'பாடமெல்லாம் நன்னா நடத்துவான். இறந்துட்டானே.தெரியாதோ?'

'அப்படியா பாட்டி? '

'வருஷம் ஆறது.. 'ம்ம் .. பாப்பார கள்ளன்.. துஷ்டன்.. '

எனக்கு ' மனுஷன் மகத்தான சல்லிபயல் ' என்று G.நாக ராஜன் சொன்னது ஞாபகம் வந்தது.
பாட்டி ' இனி பேசி என்ன ... '

அப்புறம் மீனாக்ஷி நிலையம் செல்லப்பன் ' இந்த கடைக்குள்ள கால் வைக்க கூடாது இனிமே ' என்று கடுமையாக G.நாக ராஜனை எச்சரித்ததை பற்றி எங்களிடம் சொன்னார்.

தெற்கு மாசி வீதி 'விழிகள் ' அலுவலகம் சென்றோம். அங்கே இப்போது சினிமாவில் நடிக்கும் நாடக  மு. ராமசாமி இல்லை. அவர் தான் 'விழிகள் ' ஆசிரியர்.
அங்கேயிருந்த கூத்து ராமசாமி அவரை பற்றி சொன்னார். எல்லாம் இப்ப சுந்தர ராமசாமி 'நினைவோடை'யில் எழுதியுள்ள மாதிரி சமாச்சாரங்கள் . '
 நெல்லை S.வேலாயுதம் அவர்களை சந்திக்க சொன்னார்.
எழுத்தாளர் டைலர் கர்ணனை பார்க்க சொன்னார். கர்ணனை தேடினோம் .பார்க்க முடியவில்லை.
ஆனால் வேலாயுதம் சோம சுந்தரம் காலனியில் இருந்தார். அப்போது படிக்க கிடைக்காத "நாளை மற்றுமொரு நாளே " நாவல் அவர் தான் படிக்க கொடுத்தார்.
நண்பர்கள், மனைவி, அப்போது ஒரிசாவில் இருந்த சகோதரன் எல்லோரும் அவரை மறுதலித்த துயர கதைகளை சொன்னார்.
நெல்லை வேலாயுதம் மகன் தன் மூலமாக புத்தகங்களை நாகராஜன் இவருக்கு தெரியாமலே புத்திசாலிதனமாக கடத்திய கதை சொன்னார்.

என் நண்பன் சரவணன் இறுக்கமானவர்.உணர்வுகளை, அதிர்ச்சியை வெளிக்காட்ட மாட்டார். நான் தான் நிலையிழந்து புலம்பி தீர்த்தேன்.

மதுரை டவுன் ஹால் ரோடு .ஒரு பேராசிரியர்  'விழிகள் ' மு.ராமசாமியுடன் பேசிகொண்டிருக்கிறார். ஒரு அழுக்கான நலிந்த மனிதர் ' ராம சாமி ' என்று இவரை அருகில் வந்து விளிக்கிறார்.
ராம சாமி அவரை உடனே கண்ட படி திட்ட ஆரம்பிக்கிறார். உடனே அவர் அங்கிருந்து அகன்று நடக்க ஆரம்பிக்கிறார். இந்த பேராசிரியர் சிவக்கண்ணன் 'அவர் யாருங்க . " வினவுகிறார்.
'G.நாக ராஜன் '
சிவக்கண்ணன் பதறி விடுகிறார். 'என்ன சொல்றீங்க .... நாக ராஜனா ... அவரையா இப்படி திட்டினீர்கள்? அவரா இப்படி பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறார்? '

இந்த நாடக ராம சாமி .இப்போது சினிமா ராம சாமி ( பல ராம சாமிகள் . இவரை விழிகள் ராமசாமி என்ற பெயரால் அப்போது அறிந்திருந்தோம். புதுவையில் எதிர்வு நிகழ்வில் நான் சந்தித்திருக்கிறேன் ).

இவர் தான் நாக ராஜனின் கடைசி காலத்தில் அவரை கவனித்து போஷித்தவர். அவருடைய கடைசி கிரியைகளுக்கும் செலவு செய்தவர் என்று ’கூத்து’ ராமசாமி சொன்னார். நெல்லை எஸ்.வேலாயுதமும் அப்படித்தான் சொன்னார்.

கி.ரா சொன்ன ஒரு விஷயம் . ' G.நாகராஜன் குளிக்க மாட்டார். ஆனால் அவர் மேல் துர்நாற்றம் வீசி நான் பார்த்ததேயில்லே.'

எல்லோரோரையும் சித்திரவதை செய்த நாகராஜன் ஒருவரிடம் வாலாட்டினதில்லை. ஜெய காந்தன்!அவரிடம் காசு கூட கேட்க மாட்டாராம். Trouble Makerஎன்று பிரபலமானவர் எந்த தொந்தரவும் இவரிடம் செய்ததில்லை.

சந்தேக கேசில் பிடிபட்டு தப்பிக்க முயன்று அனுபவித்த வியாகுலத்தை
'ஓடிய கால்கள் ' என்ற சிறுகதையாக நாக ராஜன் எழுதினார்.
மறுதலிப்பு !Rejection!
மனித வாழ்வின் மகத்தான துயரம்.
.
ஒரு நாவல், ஒரு குறுநாவல்,ஒரு சிறுகதை தொகுப்பு.
இவை மூன்றுமே நல்ல உயர்ந்த இலக்கிய அந்தஸ்து பெற்றுவிட்டன எனும் போது நாகராஜனின் சாதனை மலைக்க வைக்கிறது. அவருடைய கட்டுரைகளும் தான்.

"தீவிரமான தேடலில் அந்நியமாகிப்போன வாழ்வுக்கு முன்னுதாரணமாக காலத்திற்கு முன்னே பிறந்து காலத்திற்கு முன்னே செத்து போவான் சிரஞ்சீவி கலைஞன் ஜி . நாகராஜன் !"
- விக்கிரமாதித்தன்

Sep 19, 2008

R.P.ராஜநாயஹம் பற்றி

ராஜநாயஹம் பற்றி

மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்

கி.ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் கடையை கட்ட வேண்டியது தான்.


அசோகமித்திரன் : நீங்கள் என்னை மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.



டாக்டர். கி. வேங்கடசுப்ரமணியம்: அன்புமிக்க அறிஞர் ராஜநாயஹத்திற்கு ! அறிந்தவர் அறிஞர். நீங்கள் நன்கு அறிந்தவர். எனவே இப்பட்டத்தைப் பெற தகுதியானவர். சரி துணைவேந்தரைத் தவிர வேறு யார் பட்டம் கொடுக்க முடியும் ?


சாரு நிவேதிதா : ராஜநாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம் தான் கேட்பது வழக்கம். ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் அறிந்தவர். ஹாலிவுட் சினிமா பற்றி அவர் ஒரு புத்தகமே எழுதலாம். அறிவினால் வியக்க வைத்தவர் RP ராஜநாயஹம். எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர் , இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் வீழ்ந்தாலும் லியர்மன்னன் மன்னன் தானே என்று எழுதினேன். சங்கீதத்திலும் கரை கடந்தவர் ராஜநாயஹம்.

காலமும் நேரமும் மரணமும்

சில்வியா பிளாத் எழுதிய அற்புத நாவல் The Bell Jar. இந்த நாவலை அவள் பெயரை தன் புனை பெயராக்கி சில்வியா வாக அறியப்பட்ட எம். டி . முத்து குமார சுவாமி இந்த நாவலை தமிழ் படுத்தினால் பலரும் படிக்கலாமே . சில்வியா பிளாத் பற்றி விரிவாக அவர் ஏதேனும் எழுதியிருக்கிறாரா தெரிய வில்லை .
'பிறந்த நாள் பரிசு ' கவிதையில் அவள் ' இந்த வருடம் என் பிறந்த நாளுக்கு பெரிதாய் பரிசு எதுவும் வேண்டாம் . ஏன்னா , நான் உயிரோடு இருப்பதே விபத்து மாதிரி தற்செயல் தான் ' என்று சலித்து போய் சொல்கிறாள் .
தாய்மை உணர்வை மரணத்தின் போதும் காட்டியவள் . தூங்கும் குழந்தைகள் பாதுகாப்புக்கு உறுதி செய்து விட்டு , குழந்தைகளை நனைந்த துணிகளாலும் , ஈரமான துண்டுகளாலும் நன்கு மூடி விட்டு அடுத்த அறையில் எரிவாயு திறந்து விட்டு அதன் பின்னரே அடுப்பில் தலை யை விட்டாள் சில்வியா பிளாத்.
அவள் நாவல் நாயகி எஸ்தர் கூட தற்கொலைக்கு முயல்பவள் தான் . அவள் தன்னிடம் திட்டங்கள் எதுவும் இல்லை . தனக்கு எதுவும் தெரியாது என உணர்கிறாள் . அமேசான் ஓட்டல் கூரையில் ஏறி தன் ஆடை யை துண்டு துண்டாக கிழித்து வீசுகிறாள் .
தற்கொலை செய்து கொள்ளும் மன நிலை !
ஏன் ?
ஆத்மாநாம் !

விபத்துக்கள் ஏன் ?

ஆதவன் அப்படி நிஜமாகவே கால வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது ஏன் ?
ஆதவன் நீரில் மூழ்கி விபத்தில் மறையாமல் உயிரோடு இப்போது இருந்தால் .. அந்த காகித மலர்கள் , என் பெயர் ராம சேஷன் , அந்த அற்புதமான சிறுகதைகள் . ..
இன்னும் என்னவெல்லாம் சாதித்திருப்பார் . என்னை அதிகம் பாதித்த விஷயங்களில் ஆதவன் மரணமும் ஒன்று . இருபத்தொரு வருஷமாகி விட்டது இன்று .
ஆதவனே போய்விட்டார் .
ஜெய காந்தன் இப்படி இவர் மாதிரி நாற்பதுகளில் போயிருந்தால் அவருக்கு எவ்வளவோ நல்ல பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கும் .பாரதிக்கு கிடைத்த மரியாதை .
A useless life is an early death -கதே சொன்னான்.
46 வயதுக்கு மேல் சாதிக்க நிறைய ஆதவனுக்கு இருந்தது. ஆனால் அப்படி ஜெயகாந்தனுக்கு என்ன இருந்தது?எதுவுமே இல்லை என்பதை காலம் காட்டிவிட்டது .எழுத்தை பொறுத்த வரை இலக்கிய உலகின் அசுர குழந்தைக்கு பால்ய யோகம் தான் . ஜெயகாந்தனுடைய வாழ்வின் விருத்தாப்பியம் ,பின்பகுதி நிறமிழந்த ஒன்று . அபத்தமானதும் கூட .அந்திம காலம் அசிங்கமாவது பெரிய சோகம் .

பலர் தாமதமாகவும் சிலர் வெகு சீக்கிரமாகவும் மரணமடைகிறார்கள். சித்தாத்தங்கள்வித்தியாசமாகஒலிக்கின்றன.’சரியான சமயத்தில் செத்துப் போ!’
One should die proudly when it is no longer possible to live proudly.
- Nietzsche


ஆனால் ஒன்று நிச்சயம்.ஜெயகாந்தன் கொடியவர் அல்ல, அயோக்கியன்,பித்தலாட்டகாரன் அல்ல ஜெயமோகன் போல. அவருடைய நேர்மைக்கு,உண்மைக்கு, அந்தக்கால பராக்கிரமத்துக்கு, வீரத்துக்கு ஜெயமோகன் கால் தூசு பெறக்கூடிய ஆள் அல்ல. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் . Hyperion To A Satyr!

 ஸ்தாபன காங்கிரஸ் கூட்டத்தில் பேச ஜெயகாந்தன் வருகிறார்.
கூட்டத்தில் ஜெயகாந்தனின் பேச்சு பிரமிக்க அடிக்கிறது. ‘ஏண்டா நீங்க திறந்து விட்டா நாங்க குடிக்கனும். நீங்க திடீர்னு மூடிட்டா உடனே நாங்க காந்தியாயிடனுமா?’ என்று கருணாநிதி அரசை எதிர்த்து முழங்கினார். சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் அது. மேடையில் மகாத்மா காந்தி, காமராஜர் படங்களுக்கு நடுவே சிவாஜி கணேசனின் படத்தை வைத்திருந்தார்கள்.

‘இது யாரு? தேசப் பிதா. அது யாரு ? கர்ம வீரர் காலா காந்தி நடுவிலே யாருடா இது? திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு சைத்தானை வளர்த்தார்கள். அது சில குட்டிச் சாத்தான்களை சேர்த்துக் கொண்டு வெளியே வந்து அண்ணா தி.மு.க. என்று ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டது. ஸ்தாபன காங்கிரஸிலும் நீங்கள் ஒரு சைத்தானை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று துணிச்சலுடன் பகிரஙகமாக ஜெயகாந்தன் சிங்கம்போல கர்ஜித்தார்.

Sep 18, 2008

SADISM

ஆலமரத்தானும் ,ஒச்சு , குருவிமண்டையன், ஒத்தகாதன் நாலு பேரும் கலக்கு முட்டி ( வார்னிஷ் ) அடிச்சிட்டு நல்ல போதை .

ஆலமரத்தான் : டே .. நம்மையெல்லாம் இன்பத்தில் ஆழ்த்தி இமையத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற கொன்னவாய் ராசுவை ரைடு பண்ணி கைய ஏத்தி கட்டி கொண்டு போயட்டேங்கே ... கொஞ்ச நாள் நமக்கு கலக்கு முட்டி காய்ச்ச பாடு தான் இனிமே ..

ஒச்சு : மாமா ... நேத்து ஆத்துக்குள்ளே தத்தனேரி சினிமா பாத்துட்டு வந்திட்டு இருக்கேன் . ஒரு முடை தாழன் சிக்குனான் . சாமானை தூக்கி அவன் வாயிலே வச்சா உறிஞ்சு தள்ளிட்டான் . எனக்குன்னா கடுப்பு . சிகரெட்ட பத்தவச்சேன் .

தூக்குடா பொச்சை காட்டு ன்னேன் . சந்தோசமா பொச்சை தூக்கி காமிச்சான் . எச்சை துப்பி குண்டிகுள்ளே தடவிகிட்டான் நல்ல இன்னும் தூக்குடா னேன் . இன்னும் தூக்கி நல்லா காமிச்சான் . சிகரெட்ட குண்டிகுள்ளே சொருகிட்டேன் . மாமா அந்த ராவுலே முடை தாழன் அய்யோயோ ன்னு அலறி கத்தி கதறி கிட்டே ஓடுனான் பாக்கணும் . நான் இரண்டு கல்லை எடுத்து அவன் மேலே வீசி ஓடுரா ஓடுறான்னு விரட்டினா ...

ஆலமரத்தான் : மாப்பிள்ளை , அப்படி போடு , சபாசு . முடைதாழன் சிக்குனா ஜோலி யை முடிச்சவுடனே மாத்து செம்மையா குடுத்துடணும் . நான் எப்பவுமே ஜப்தியடிச்சி அவிங்க கிட்ட சிக்குற சில்லறை, பலப் (மோதிரம் ) இதெல்லாத்தையும் ஆட்டையை போட்டுருவண்டா ..

வன வாசம்

நல்ல கஞ்சா இழுவை . ஆலமரத்தானும் ஒச்சுவும் நல்ல போதை .

ஒச்சு : மாமா , நேத்து சோலையோட வன வாசம் தொடரும்படியாயிடுச்சி. வீட்டிலே சின்ன செய்கை பண்ணி அவன் அப்பத்தாவோட மூக்குத்தியையும் பித்தளை குடத்தையும் வித்து தின்னுட்டான் . பாவம் பஞ்சந்தாங்கி உருண்டையை பெட்டிகடையிலேவாங்கி தின்னுட்டு தண்ணி குடிச்சிகிட்டிருக்கான் . நேத்து டீ கடையுள்ளே சோகமா இருந்தான் . அவங்க அப்பு போனாரு . " டே மாப்பிள்ளே .. அவருட்ட சோலை கோவிச்சுகிட்டு டீ கடைக்குள்ளே உட்கார்ந்திருக்கான்னு சொல்லுடா ..பசி காதை அடைக்கிதுடா ரெண்டு தட்டு தட்டி வீட்டுக்கு இழுத்துட்டு போய்டுவாரு " ன்னு பாதி உசிரா கெஞ்சுனான்.

நானும் இதை சொன்னா அவன் அய்யா ' அட பாவி வாடா வீட்டுக்கு உங்கோத்தா தேடறா 'ன்னு ரெண்டு தட்டு தட்டி கூட்டிட்டு போவாருன்னு நினைச்சி ' மாமா இங்க பாருங்க . சோலை கோவிச்சிட்டு வீட்டுக்கு போகாம டீகடை குள்ள தான் ஒளிஞ்சிகிட்டிருக்கான்'ன்னு சொன்னவுடனே உடனே அவுங்க அய்யா கொந்தளிச்சு " வர சொல்லு , வர சொல்லு ...வீட்டுலே சுன்னியை தட்டி சூப்பு போட்டு வச்சிருக்கு .புண்டையை பொரிச்சி பொரியல்பண்ணி வச்சிருக்கு ' ன்னுட்டே ங்கோத்தா ங்கொம்மா 'ன்னு அவனை வஞ்சிகிட்டே போறாரு

இவனுக்கு வன வாசம் இப்போதைக்கு முடியாது போலருக்கு

சோலையின் வாழ்வில் மீண்டும் தென்றலும் வீசாதோ ?

குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (15)- சாரு நிவேதிதா

குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (15)


"Open my grave when I am dead, and thou shalt see a cloud of smoke rising out from it; then shalt thou know that the fire still burns in my dead heart -- yea, it has set my very winding-sheet alight."
ஹஃபீஸின் இந்த கஸலில் " yea, it has set my very winding-sheet alight" என்ற வாக்கியத்திற்கு பெருமாளுக்கு அர்த்தம் விளங்கவில்லை. winding-sheet என்றால் சவத்தின் மீது போர்த்தப் படும் போர்வை என்று புரிந்தாலும் அர்த்தம் பூரணமாகவில்லை. தமிழின் பிரபலமான மொழி பெயர்ப்பாளர்கள் என்றால் "அந்த நெருப்பில் என் போர்வை கருகாது" என்று கொலை செய்து இருப்பார்கள். ராஜநாயஹத்தை போனில் அழைத்தான் பெருமாள். அவர் , இவன் முடிக்கும் முன்பே "நானே அழைக்கிறேன்" என்று கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார். பொதுவாக அவனுடைய நண்பர்கள் அனைவருமே அவனுக்குச் செய்யும் உதவி அது. அவனுடைய தொலைபேசி செலவைக் குறைக்கிறார்களாம். பெருமாளுக்கோ அவருக்கு செலவு வைக்கக் கூடாது என்று எண்ணம். அதனால் அவர் அழைப்பை இவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அழைக்கும்போது எடுக்காமல் , மணி அடித்து ஓய்ந்ததும் இவன் அழைப்பான். அவர் எடுக்க மாட்டார். அவரும் இவனைப் போலவே நினைத்திருக்கிறார். சொன்னால் யாருமே நம்ப மாட்டீர்கள். சரியாக மூன்று மணி நேரம் நடந்தது இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம். ஒரு கட்டத்தில் பெருமாளுக்கும் பிடிவாதம் வந்து விட்டது. ' இவரோடு இன்று நாம்தான் பேச வேண்டும் ' என்று தீர்மானம் செய்து விட்டான். அவருக்கோ அப்படியெல்லாம் எதுவும் தீர்மானமோ பிடிவாதமோ எதுவும் இல்லை. பெருமாளின் தொலைபேசியில் சிக்னல் இல்லை என்று நினைத்துக் கொண்டு , விடாமல் பொறுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தார். முப்பது , நாற்பது அழைப்புகள் இரண்டு பக்கத்திலிருந்தும். நேரம் செல்லச் செல்ல பெருமாளுக்கு ஒரு வீம்பே வந்து விட்டது.
இதற்கிடையில் ஒரே ஒரு முறை பெருமாளிடம் சிக்கினார் ராஜநாயஹம். "என்ன ராஜநாயஹம்...இப்படி ஆகிக் கொண்டிருக்கிறது ?" என்று ஆரம்பித்தான் பெருமாள். அவர் அதற்குள் குறுக்கிட்டு "நானே கூப்பிடுகிறேன் பெருமாள்" என்றார்.
" ராஜநாயஹம்...ராஜநாயஹம்...ப்ளீஸ்...கேளுங்கள்...எனக்கு ஒரே ஒரு வார்த்தைக்குத்தான் அர்த்தம் தெரிய வேண்டும். ஒரே ஒரு வார்த்தை...நீங்கள் கூப்பிட வேண்டாம்.
போனை வைத்து விடாதீர்கள்" என்று கதறி விட்டு கவிதையின் முதல் வரியிலிருந்து ஆரம்பித்தான். அப்போதுதானே முழுமையாகப் புரியும் ? ஆனால் அவரோ "சரி சொல்லுங்கள் , எழுதிக் கொள்கிறேன்" என்றார்.
" அடடா , ஒரே ஒரு வார்த்தைக்காக முழுக் கவிதையையும் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே ராஜநாயஹம் ?"
" இருங்கள் பெருமாள். நான் ஆபீஸ் போய் விடுகிறேன். அங்கிருந்து சாவகாசமாகப் பேசலாம்..."
" ஐயோ ராஜநாயஹம்...ஒரே ஒரு வார்த்தைக்காக நீங்கள் ஆபீஸ் போக வேண்டுமா ?"
" ஆபீஸ் என் வீட்டிலிருந்து இரண்டே இரண்டு கிலோ மீட்டர்தான் இருக்கிறது ; ஒரு சிரமமும் இல்லை..."
" ஐயோ ராஜநாயஹம்...ஒரே ஒரு வார்த்தைதான். இந்த ஒரே ஒரு வார்த்தைக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் போக வேண்டுமா ? யோசித்துப் பாருங்கள்... நாம் இவ்வளவு பேசியதற்குள் நீங்கள் சொல்லியிருக்கலாம்..."
அதற்குள் அவர் போனில் சிக்னல் பிரச்சினை. போனை வைத்து விட்டு ' இப்படி ஒரே ஒரு வார்த்தைக்காக இந்த நல்ல மனிதரைப் போட்டு இப்படிப் படுத்த வேண்டுமா என்று நினைத்து விஷாலுக்கு போன் போட்டான் பெருமாள். அவனோ "என் வீட்டுக்கு அக்கா கணவர் வந்திருக்கிறார் ; ஓடிக் கொண்டிருக்கிறேன்" என்றான் பதற்றத்துடன். "அடப் பாவி , நேற்றுதானே அக்கா வந்திருக்கிறார் ; ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாய் ?" என்று கேட்டேன்.
" ஆமாம் ; நேற்று அக்கா , இன்று அக்காவின் கணவர்."
கிட்டத்தட்ட ' ஆத்தீமூக்கா ' காரர்கள் ' அம்மா ' வுக்குப் பயப்படுவது போல் அல்லவா பயந்து சாகிறான் என்று கடுப்புடன் நினைத்துக் கொண்டு , " சரி சரி...ஓடு. அதற்கு முன் இதற்கு அர்த்ததைச் சொல்லி விட்டு ஓடு" என்றான்.
" ஐயோ , நான் இப்போது பைக் அல்லவா ஓட்டிக் கொண்டிருக்கிறேன் ?"
" அடப்பாவி , உனக்கு எத்தனை தடவை சொல்வது , பைக் ஓட்டும் போது போனை எடுக்காதே என்று ?"
" சரி சரி சொல்...நான் பைக்கை ஓரம் கட்டி விட்டேன்."
சொன்னான்.
" அடடா , அற்புதம்...இதற்கெல்லாம் ஒரு குவார்ட்டர் போட்டால்தானே சரியாக இருக்கும் ? ம்ம்ம்....உயிரின் சுடர் என்று போடு" என்று சொல்லி விட்டு அக்கா கணவரைப் பார்க்க ஓடி விட்டான் விஷால்.
இதற்கிடையில் ராஜநாயஹத்தை மீராவின் தொலைபேசியை வைத்துத் தந்திரமாக அமுக்கிய பெருமாள் , " என்ன ராஜநாயஹம்... ஒரே ஒரு வார்த்தைக்கு மூன்று மணி நேரமாக ஒரு அபத்த நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இது தேவையா ?" என்று கேட்டான்.
" ஆமாம் பெருமாள் , நினைத்தால் மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் ஆபீஸ்க்கு போய் பேசுகிறேன் என்று. நீங்கள விடமாட்டேன் என்கிறீர்கள். சரி போனை வையுங்கள். நான் கூப்பிடுகிறேன்”.
“அய்யோ ராஜ நாயகம்... நீங்கள் கூப்பிட்டால் நான் எடுக்கமாட்டேன். அது சரி, இந்த அபத்த நாடகத்தை ஏன் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறீர்கள் ? நிறுத்தி விட வேண்டியதுதானே ? என்னுடைய அழைப்பை ஒரு முறையாவது எடுத்திருக்கலாம் அல்லவா “ என்று கேட்டு விட்டு , கவிதையை முழுமையாகச் சொல்லி கடைசி வரியின் அர்த்தத்தைக் கேட்டான். அதற்குள் மீண்டும் சிக்னல் பிரச்சினை.
ஆனால் ஒரே நிமிடத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
" உயிரின் சுடர்."
***
1.6.2008.
8.40 p.m.

Sep 17, 2008

சங்கு,கண்ணப்பன், லச்சம்

தி ஜானகி ராமனின் மோகமுள் நாவலில் வரும் 'சங்கு ' கதாபாத்திரம் , க நா சு வின் குறுநாவல் ஆட்கொல்லி யில் வரும் 'கண்ணப்பன்' , சுந்தர ராமசாமியின் 'குழந்தைகள் , பெண்கள், ஆண்கள்நாவலில் வரும் ' லச்சம் ' இவர்கள் மூவர் பற்றி .....

சங்கு , கண்ணப்பன் , லச்சம் மூவரும் ரத்தமும் சதையுமான , வாழ்க்கை தாகம் கொண்ட ,உற்சாகமானவர்கள் . ஆனால் வாழ்க்கையால் நிராகரிக்கபட்ட , தோற்றுப்போன துரதிர்ஷ்டசாலிகள் .

நீங்கள் இந்த கதாபாத்திரங்களை இணைத்து பாருங்கள் . அர்த்தம் புரியும் . இன்றைய சூழலில் இந்த மூவரையும் இணைத்து ஒரு நாவல் எழுதிப்பார்க்கலாம் . 'இணைத்து' என நான் குறிப்பதை 'ஒப்பிட்டு' என்று அர்த்தபடுத்திகொன்டீர்கள் ஆகில் ஒரு மோசமான பல்கலைக்கழக ஆய்வு கட்டுரை நூலாகிவிடும் .அல்லது செக்குமாட்டு விமர்சனமாகிவிடும் ஆமாம் . அப்படி இணைத்து எழுதப்படும் நாவல் ' நிந்தனை ' , மான பங்கம் , மானுட அவலம் குறித்த விசாரணையாக அமையலாம் . மனதிலேயே கூட எழுதிப்பாருங்கள் .தப்பில்லை . நான் எழுதிப்பார்த்து விட்டேன் மனதில் .

எழுதிப்பார்ப்பதற்கு ஆதர்சமாக ஒரு நூல் வேண்டுமா ? ஆல்பெர் காம்யு(Albert Camus) வின் ' The Out sider' மற்றும் ' The Fall ' இரண்டு நாவல்களையும் எடுத்துகொள்ளலாம் .இந்த இரண்டு காம்யுவின் நாவல்களையும் தத்துவ விசாரணைக்காக பயன் படுத்தி இப்போது இந்த எளிய கதாபாத்திரங்களை கையாளலாம் ....
நாவலை அச்சில் கொண்டு வர வேண்டும் என்று விபரீத ஆசையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் ...அப்புறம் குப்பையாகி விடும் !


)

வறுமையுடன் கல்விப்பணி

சாந்தி ராமு சொன்ன தகவல் .நிஜமாய் நடந்த சம்பவம் இது .

ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு வகுப்பு . இளம் விரிவுரையாளர் ஒருவர் வகுப்பு எடுத்துகொண்டிருக்கிறார் . லெக்சர் கொடுத்து கொண்டிருந்தவர் திடீரென்று மயங்கி விழுகிறார் . அவரை தெளிவித்து முதல் உதவி செய்த பின் அவரை விசாரித்து பார்க்கும்போது தெரிய வரும் தகவல் மகத்தான சோகம் . ' சாப்பிடாததால் மயங்கி விழுந்திருக்கிறார் . தற்செயல் அல்ல . சாப்பிடாததற்கு காரணம் நேரமின்மை அல்ல . அவசரமாய் கல்லூரி கிளம்பியதால் அல்ல . சாப்பிடுவதற்கு அவரிடம் பணம் இல்லை .

பல்கலைக்கழகத்தில் வேலை பெறுவதற்காக கடன் வாங்கி பத்து லட்சம் நிர்வாகத்திடம் கொடுத்து விட்டு, வாங்குகின்ற மாத சம்பளத்தை முதலுக்கும் வட்டிக்கும் கொடுத்துகொண்டிருக்கும் போராட்டத்தில் .. வறுமை காரணமாக சாப்பிட முடியாமல் மயங்கி விழுந்தவர் . வெறும் வயிறு .

பற்றியெரியும் இந்த வயிற்றுக்கு யார் பதில் சொல்ல போகிறார்கள்?

என்ன ? இருக்குன்னு சொல்ல பசியாவது இருக்கேன்னு சந்தோஷ படனும்னு சொல்றீங்களா ?

காசு கொடுத்து வேலை வாங்கியதால் வறுமையை சந்திக்கும் புலமை .

காசு கொடுத்து வேலை வாங்கியபின்னும் வறுமை !

அடிப்படை சௌகரியங்களை கூட வேலை பிடுங்கி கொள்ளுமா ?

பிச்சை புகினும் கற்கை நன்று என்று சொன்ன செல்வி அவ்வை பசியோடு கல்வி புகட்டுவதை பற்றி நினைத்து பார்த்திருக்க மாட்டார் .

சரி சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்றாலும் இவ்வளவு பணத்தை இறைத்து வறுமையை வாங்க வேண்டுமா ?

பணம் இவ்வளவு இல்லை என்றால் வாத்தியார் வேலை கிடையாது என்றால் உண்மையான தகுதி உள்ளவர்களின் நிலை .( இந்த வரியில் பிரச்சார வாடை தெரிகிறதோ ?)

பசியில் மயங்கி விழுந்த வாத்தியாரிடம் “Lecturer, First of all , you learn to survive well , or not to teach at all” என்று நாம் சொன்னால் அவர் பதில் இப்படித்தானே இருக்கும் “The only thing that interferes with my learning to live is my EDUCATION”

ஒரு சிறப்பு அதிகாரி தன் வேலைக்காக அந்த பல்கலை கழகத்துக்கு கொடுத்த தொகை பதின்மூன்று லட்சத்து அறுபதினாயிரம் .இவர் எப்போதும் ஏதோ பறிகொடுத்தது போல இருப்பாராம் .

சாந்தி ராமு இந்த சிறப்பு அதிகாரி முகத்தில் சந்தோசத்தை பார்த்ததேஇல்லை . சந்தோசம் என்ன முகத்தில் ஒரு தெளிர்ச்சியே இல்லை . சாந்தியின் நண்பர் சுப்பு இவரிடம் சொல்கிறார் .

"எப்படி முகம் சோபிக்கும் .இழந்தது பல லட்சங்கள் சாந்தி .. பல லட்சங்கள் ...."

பல்கலைக்கழக நிர்வாகம் என்ன சொல்லும் "வியாபாரத்திலே இதெல்லாம் சகஜமப்பா "

Education is a progressive discovery of our own ignorance! - Dryden

Sep 16, 2008

ஒரு ரகசிய காதல் கடிதம்

நான் மேட்டூரில் கிருஷ்ணா லாட்ஜில் நடிகர் கல்யாண்குமார் அவர்களிடம் ஆன்மிகம் பற்றி பேசிய விஷயங்கள் பிரமிக்க வைத்ததாக அந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர்(இவர் அப்போது ஒரு பேங்க் ஆபிசர் . நல்ல சம்பளம் ஆனாலும் கலைத்தாகம் . சாதாரணமாக என் பேச்சு , பாட்டு,உடை எல்லாவற்றிற்குமே ரொம்ப லயித்து போவார் )மற்றொரு நடிகையிடம் சொல்லிவிட்டார் . அவர் எனக்கு அடுத்த அறையில் தான் தன் தாயாருடன் இருந்தார் . நான் என் அறைக்குள் நுழைய போன போது என்னை அவர் அறையிலிருந்து 'சார் சார் ' - கூப்பிட்டார் .
இந்த நடிகை எப்போதுமே சாதாரணமாக என்னிடம் இலக்கியம் தான் பேசுவார் . என்னைப்பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிந்தது .

தி. ஜா வின் கமலம் குறுநாவலை பற்றி என்னிடம் ' என்னமா எழுதுறார் சார் உங்க ஜானகி ராமன் '

'இது என்ன புஸ்தகம் சார் ஒங்க கையிலே .
நான் ' தார்கொவ்ஷ்கி பற்றிய புத்தகம் '
'நீங்க ஒருத்தர் தான் சார் இங்க வித்தியாசமான ஆள் . '

'சார் உங்களை பத்தி ஒன்னு கேள்விப்பட்டேன் . ஆன்மிகம் பற்றி பின்னி எடுத்துட்டீங்கலாமே . எனக்கு ஒரு குருநாதர் இங்கே ஈரோடு பக்கம் உண்டு சார் . அந்த ஆஷ்ரமத்துடைய பத்திரிகை இது படிச்சி பாருங்களேன் .'

அடடா நம்மை பண்டார சன்னதி களோடு சேர்த்து நினைக்கிறாரே . சாதாரண உரையாடல் சிலருக்கு எப்படியெல்லாம் அர்த்தமாகிவிடுகிறது ...இருந்தாலும் அவர் கொடுத்த அந்த பத்திரிகை யை கையில் வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்து படுக்கையில் அமர்ந்து புரட்ட ஆரம்பித்தேன் . அதிலிருந்து ஒரு காகிதம்
கீழே விழுந்தது .
அது ஒரு கடிதம் . இந்த நடிகை எழுதியிருக்கிறார் . இவர் அறிமுகமான படத்து இயக்குனருக்கு . அவர் மிக பெரிய இயக்குனர் . ஏற்கனவே திருமணமாகி குடும்பம் இருந்த நிலையில் பல வருடம் முன் ஒரு நல்ல நடிகையை திருமணம் செய்து அவர் தற்கொலை செய்து கொண்டு அதனால் பல சிரமங்களுக்கு உள்ளானவர் .
அவரை இவர் பெயர் சொல்லி ஒருமையில் எழுதியிருந்தார் . காதல் கடிதம் தான் .
"அன்று ஷூட்டிங் முடிந்து சேலம் ரயில் நிலையத்தில் கிளம்ப காத்திருந்த போது , உனக்கு நினைவிருக்கிறதா . நான் ரயில் நிலையத்தில் தலைக்கு பூ வாங்கி வைத்து கொண்ட போது நீ என்னருகில் வந்து பூவை முகர்ந்து பார்த்தாயே ."

எனக்கு அப்போது மறைந்த அந்த நடிகை பற்றியும் , இப்போது இந்த நடிகை அதே இயக்குனரிடம் காதல் கொண்டிருப்பது பற்றியும் எண்ணம் எந்த வகையில் என சொல்ல முடியாமல் பல சிந்தனை .
கடிதத்தை எடுத்து கொண்டு அவர் அறைக்குள் நுழைந்து ' நீங்க கொடுத்த பத்திரிக்கையில் இருந்தது ' என்று கொடுத்தேன் .

அவர் அம்மா மகளை ஒரு பார்வை பார்த்தார் .
பொதுவாக சினிமாஉலகில் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் பெரிய ரகசியமெல்லாம் கிடையாது . ஒருவேளை அந்த அம்மாவே கூட அந்த இயக்குனருக்கு எழுதப்பட்ட கடிதத்தை மகளுக்கு Dictate செய்திருக்கலாம் . அதனால் என்ன இப்படி கவனக்குறைவாய் இருக்கிறாய் என்ற பார்வை தான் பார்த்தார் .

அந்த நடிகை நன்றியோடு என்னை பார்த்தார் .'தாங்க்ஸ் சார் ...ரொம்ப தாங்க்ஸ் சார் ...'
அவருக்கு தெரியும் . என்னை தவிர வேறு யார் கைக்காவது போயிருந்தால் ரகசியம் அம்பலமாகியிருக்கும் . கிசுகிசு பத்திரிகை செய்தியாக கூட வந்திருக்கும் .
அந்த நடிகை சின்னத்திரை ரேவதி என பின்னால் பிரபலமானார்
இப்போது இரண்டு மூன்று வருடம் முன் பாலு மகேந்திரா என் கணவர் தான் என்று பேட்டி கொடுத்த மௌனிகா தான் .பாலு மகேந்திராவும் அவரை தன் இரண்டாவது மனைவி என்றே சொல்லிவிட்டார் .
இப்போது இந்த விஷயத்தை நான் எழுதுவதில் தவறில்லை தானே .

ஜம்பம்

ஒரு திருமணம் . பெண் , மாப்பிள்ளை இருவருக்குமே இரண்டாவது திருமணம் . இருவருமே ஏற்கனவே விவாக ரத்து பெற்றவர்கள் . பெண் தான் எனக்கு உறவு . அதே ஊரில் பெரிய திருமண மண்டபத்தில் அவளுடைய முதல் திருமணம் ஐந்து வருடம் முன் தடபுடலாக நடந்திருந்தது.இந்த இரண்டாவது திருமணம் அவள் பெற்றோருக்கு மட்டுமல்ல உறவினர் எல்லோருக்கும் ஆசுவாசத்தை தந்திருந்தது .

திடீரென்று பெண்ணின் தகப்பனாரும் மற்றவர்களும் என்னை வாழ்த்தி பேச சொன்னார்கள் . ஏற்கனவே பெண்ணின் தாத்தா , தாய் மாமன் பேசியிருந்தார்கள் .

நான் பேசினேன் " இது வழக்கமான கல்யாணம் அல்ல . ஒரு மீட்சி . Second Marriage is a grand success after a miserable experience.... a resurrection from the worst sorrow "

தொடர்ந்து பையனின் பெற்றோர் , பெண்ணின் பெற்றோர் இவர்களுக்கு மன ரீதியாக ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து , பெண்,பையன் இருவரின் கடந்த கால கசப்பு , மன உளைச்சலுக்கும் இந்த மணவாழ்க்கை ஒரு விடுதலை என்பதையும் கூறி மணமக்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தேன் .

பெண்ணின் அம்மா ,சித்திமார்களுக்கு முகம் விளங்கவில்லை . 'இதையேன் பேசணும் '

மாப்பிள்ளை வீட்டில் அவருடைய அக்கா இந்த பேச்சுக்கு பின்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம் . "இது என்ன இப்படி பேசிவிட்டார் . நாங்க பெண்ணுக்கு இது இரண்டாம் கல்யாணம் என்பதை எங்க தாய் மாமா குடும்பத்திற்கே தெரியப்படுத்தவில்லை . நாங்க பத்திரிகை கொடுக்கும் போது எங்கள் சொந்தக்காரர்கள் யாருக்குமே பெண் ஏற்கனவே திருமணமாகி விவாக ரத்து பெற்றவர் என்பதை மறைத்து தான் அழைத்திருந்தோம் . எங்க தம்பிக்கு புதுசா ஒரு பெண் தான் என்று எங்க உறவெல்லாம் நம்பியிருந்தவங்க இனிமே 'பெண்ணும் உன் தம்பி மாதிரி ஏற்கனவே கல்யாணம் ஆனவள் தானாமே' என்று எங்களை குத்தி குத்தி கேட்பாங்களே . எங்க கௌரவமே போச்சே .எங்களுக்கு கேவலமாயிடுச்சு .ஏன் இவர் இப்படி பேசினார் ? யார் இவரு ?எப்படி இப்படியெல்லாம் பேசலாம்.... " பையனின் அக்கா சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்குன்னு ஆடிய கதையாய் பெண் வீட்டாரிடம் ஆடி தீர்த்து விட்டடாராம் . மாப்பிள்ளையின் பிராமண நண்பரின் மனைவி என்னிடம் வந்து

" என்ன இப்படி .. உங்க பேச்சு அவாளை ரொம்ப கோப படுத்திடுச்சு "

மாப்பிள்ளை வீட்டாருக்கு கோபம்... அதனால் பெண் வீட்டாருக்கும் ரொம்ப கோபமும் வருத்தமும் ..

ஊர் வந்து சேர்ந்த பின் பெண்ணின் அப்பா போனில் தன் மனஸ்தாபத்தை வெளியிட்டார் .

Sep 15, 2008

காலா காந்தியின் கோட்சே !


இந்த விஷயம் முதல் முறையாக தி.மு.க ஆட்சிக்கு வந்த போது நடந்த விஷயம் .

சிட்டி தான் என்னிடம் சொன்னார். சிட்டியும் அண்ணாத்துரையும் பச்சையப்பன் கல்லூரியில் வகுப்புத்தோழர்கள.

பலவருடங்களுக்கு பின் சிட்டியை அண்ணாதுரை முதல்வராக சந்தித்தவுடன் ஆனந்த கண்ணீர் வடித்தாராம். அப்போது சிட்டி அகில இந்திய வானொலி யில் உயர் அதிகாரி . அகில இந்திய வானொலிக்காக அண்ணாவை பேட்டி எடுத்து விட்ட பின், அன்றைக்கு பரபரப்புக்கு காரணமாக இருந்த
விருதுநகர் பெ. சீனிவாசனை பேட்டியெடுக்க நினைத்து அதையும் சிட்டி செயல் படுத்தினார் .

உடனே கருணாநிதி சிட்டியிடம் வந்து ' என்ன சார் .இப்படி செய்திட்டீங்க . அண்ணாவை பேட்டி எடுத்துட்டு அடுத்ததா பெ .சீனிவாசனை பேட்டி எடுக்கிறீங்க .இவன் ஒரு பொறுக்கி சார். இவனுக்கு என்ன யோக்யதை இருக்குன்னு இவனையெல்லாம் பெரிய ஆளாக்கிறீங்க . காமராஜரை அவமானப்படுத்த இவனை அவரை எதிர்த்து தேர்தல்லே நிறுத்தினோம் . ஜெயிச்சிட்டான் . ஜெயிச்சதுக்கு காரணம் இவனா சார் . சும்மா குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை. தமிழகத்திலே எங்க கட்சிக்கு ஆதரவா எழுந்த அலையிலே சும்மா குருட்டு அதிர்ஷ்டத்திலே ஜெயிச்சவன் . "

கருணாநிதியின் முன் ஜாக்கிரதையை இந்த சம்பவம் சுட்டுகிறது .தீர்க்க தரிசனத்தையும் கூட .
ஐம்பெரும் தலைவர்களில் அண்ணா தவிர பிறரை படிப்படியாக பின்னகர்த்தி, அடுத்த இரண்டே வருடத்தில் அண்ணா மறைந்த போது கட்சியையும் ,முதல்வர் பதவியையும் கைப்பற்றிய மிக பெரிய புத்திசாலியின் பதற்றம்!
பெ.சீனிவாசனும் பின்னர் கருணாநிதி சொன்னது சரிதான் என்பதை தன் நடத்தைகளால் நிரூபித்தார் . இப்போது பல இடம் தாவி விட்டு அண்ணா தி.மு.க.வில் இருக்கிறார்.. அல்லது அங்கிருந்தும் விரட்டப்பட்டு விட்டாரா?
சீனிவாசன் , கோவை செழியன் ,ஜி .விசுவநாதன் மூவரும் நாங்கள் தான் உண்மையான அண்ணா தி.மு.க என்று பிரகடனம் செய்து எம்ஜியாருக்கு எதிராக அவர் முதல் முதலாக ஆட்சிக்கு வந்த கட்டத்தில் அடித்த கூத்து ! அதன் பின் சிதறு தேங்கா போல மூவரும் பிரிந்து தனி தனி கட்சி யில் இணைந்தது இதெல்லாம் நினைத்து பார்க்க வேடிக்கையான அரசியல் காட்சிகள்.

பாவம் பெ . சீனிவாசன்! காலா காந்தியை தேர்தலில் தோற்கடித்ததால் தமிழ் நாட்டை பொறுத்தவரை ஏதோ கோட்சே போல் ஆகி மக்களாலும் அரசியல்வாதிகளாலும் கூட வெறுத்து ஒதுக்கப்பட்டவர் .
சினிமா நடிகை 'தேன் நிலவு' வசந்தியை திருமணம் செய்து......அப்புறம் ஒரு வேடிக்கை . சிவகாசி யில் 1989 ல் நடிகை ஸ்ரீதேவியின் அப்பா ஐயப்பனையும் சட்ட சபை தேர்தலில் தோற்கடித்தார் .
நல்ல பேச்சாளர் ! பத்து ஆண்டு முன் என்று நினைக்கிறேன்.. ஒரு முறை தேர்தலில் போட்டியிட்ட நிலையில் ஸ்ரீவில்லி புத்தூரில் முச்சந்தியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த போது தன் திருமணத்திற்காக காமராஜரை அழைக்க போய் பத்திரிகை கொடுத்ததையும் அந்த எளிமையான அருந்தலைவர் பெருந்தன்மையுடன் இவர் திருமணத்திற்கு வந்ததையும் அழகாக விவரித்து பேசினார் பெ . சீனிவாசன்.
" திருமண மேடையில் நான் அமர்ந்திருக்கிறேன் . படிக்காத மேதை , ஏழைபங்காளன், பெருந்தலைவர் அந்த திருமண அரங்கினுள் நுழைந்தார் . நீண்ட நெடிய கொடிமரம் மெல்ல அசைந்து அசைந்து வருவதை போலிருந்த காட்சி இன்றும் என் கண்ணுக்குள் விரிகிறது ."

.................................................
 

Sep 14, 2008

ஜெயகாந்தனின் பயம்!

ஜெயகாந்தன் பாவம் ஒரு விஷயத்திற்காக ரொம்ப பயந்திருக்கிறார் . தசாவதாரம் பார்த்து விட்டு கமல் ஹாசனிடம் தன்னுடைய கலக்கத்தை வெளியிட்டிருக்கிறார் .
" படம் ஓடுமா ? ஏன்னா எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு . அதனால் தான் பயமா இருக்கு . ஏன்னா எனக்கு பிடிச்ச படம் ஓடாது ."
ஜெயகாந்தன் கவலை, பயம் எல்லாம் இப்ப இப்படி தானே ? காஞ்சி சங்கர மட கௌரவத்தை காப்பாத்த " ஹர ஹர சங்கர '' எழுதி தவிச்சவர் ....
சமீபத்தில் கருணாநிதி முன் கூழை கும்பிடு , ஏழை சிரிப்பு , கோழை பவ்யம் எல்லாம் காட்டி இவர் நிற்கும் காட்சியை செய்தித்தாளில் பார்க்க முடிந்தது .
நீர்த்து போனது கூட பரவாயில்லை . மத்திய வயதிலேயே இவருடைய எழுத்து குருவி முட்டையை தான் போட்டது .
ஆனால் இப்படி தசாவதாரம் வசூல் பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கும்படி ஆகிவிட்டதே !
கமல் அதற்கு பதிலாக 'சித்தாள் எல்லாம் பாக்க வர்றாங்க . எம்ஜியார் படத்துக்கு கூட்டம் வர்ற மாதிரி வர்றாங்க' என்று சொல்லி ஜெயகாந்தனை தேற்றி ஆறுதல் சொல்லியிருக்கிறார் .
ஜெயகாந்தனும் எம்ஜியார் பட ரசனை உள்ளவர் தான் , எம்ஜியார் ரசிகனின் தரத்தை சேர்ந்தவர் என்பதை தெளிவாக சொல்லி ஜெய காந்தன் 'சினிமாவுக்கு போன சித்தாளு ' குறுநாவலை எந்த காரணத்திற்கு எழுதினார் என்பதையே பகடி செய்து விட்டார் கமல்.
எம்ஜியார் படங்கள் எப்படி கலாச்சார சீரழிவுக்கு வழி வகுத்தன என்பதை பேசிய நாவல் '. சினிமாவுக்கு போன சித்தாளு '. தமிழ் வர்த்தக சினிமாவையும் எம்ஜியாரையும் கடுமையாக விமர்சித்த நாவல் .
வரலாற்றின் குரங்குத்தனம் !

There is no salvation in becoming adapted to a world which is crazy.
--Henry Miller.


Sep 13, 2008

எம் ஆர் ராதா

எம்.ஆர் .ராதா தன் சந்தேகம் ஒன்றை பெரியாரிடம் கேட்டாராம் .
"அய்யா ஒரு சந்தேகம் "
பெரியார் குறுநகையுடன் தலையை ஆட்டினாராம்.இவன் ஏதோ விவகாரமாக தான் பேச ஆரம்பிக்கிறான் என்பதை புரிந்து கொண்டு தான் அப்படி குறு நகையுடன் தலையை ஆட்டி காதை கொடுத்திருக்கிறார்.

" இந்த இங்கிலீஷ்லே ஏதோ சொல்லி அதுக்கு தமிழ்லே அர்த்தம் சொல்றான். அது புரியுது. தெரியாத பாஷையிலே உள்ளதை தமிழ்லே சொல்றது நியாயம் ...சம்ஷ்க்ரிதத்திலே ஸ்லோகன் சொல்லி தமிழ்லே அர்த்தம் சொல்றான்.சரி ... நியாயம் ...
தமிழ்லேயே ஸ்லோகன் சொல்லி அதுக்கு ... தமிழ்லேயே அர்த்தம் சொல்றானே .. இது என்ன .. எனக்கு புரியலெயே ..."
பெரியாருக்கு சிரிப்பை அடக்க முடியலையாம்.
பண்டிதத்தை ,புலமையை இதை விட அழகாக நையாண்டி செய்ய முடியுமா ? Snobbery க்கு சரியான சூடு! செத்து உறைந்து போன தமிழ்!

கோர்ட்டில் இரண்டு பேருடைய வக்கீல்களும் சீரியஸ் ஆ வாதாடிகொண்டிருந்த போது ' பாவம் இவங்க என்னனதையோ போட்டு குழப்பிக்கிட்டு தவிக்கிறாங்க. ஆனா உண்மை என்னன்னு எனக்கும் எம்ஜியாருக்கும் தான் தெரியும். என்ன ராமச்சந்திரா !'- இப்படி கோர்ட்டிலேயே எம்ஜியாரை பார்த்து படு ஜாலியாக கேட்டவர் ராதா.
நீதிபதி,வக்கீல்கள் எல்லோரும் இவருடைய இயல்பை கண்டு அசந்து போனார்கள்.

ராதா ஷூட்டிங்கிற்காக அதிகாலை காரில் வந்து ஸ்டுடியோவில் இறங்குகிறார். செட்டிற்கு வெளியே அஞ்சலி தேவி அசத்தலாக உட்கார்ந்திருந்தாராம். இவர் இறங்கியவுடன் உடைகளை கழட்ட ஆரம்பித்திருக்கிறார். அஞ்சலி தேவிக்கு கொஞ்சம் தர்ம சங்கடம்.
அண்டர் வேருடன் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

அஞ்சலி தேவி ' அண்ணே என்னன்னே இது '
ராதா ' என்ன '
'பொம்பிளை நான் இங்கே இருக்கிறேன். நீங்க பாட்டுக்கு உடுப்பை பூரா கழட்டிட்டு இப்படி அண்டர் வேரோட இப்படி.. '
ராதா ' நீ இருக்கிறியேன்னு தான் அவசர அவசரமா டிரஸ்ஸ கழட்டிட்டு நிக்கிறேன்.'

எம் ஆர் ராதாவும் கண்ணதாசனும் அந்த காலத்தில் நடிகைகளை பற்றி செய்துள்ள கிண்டலும் நையாண்டியும் கடுமையானது.

இந்த காலத்தில் இந்த வைரமுத்து கொஞ்சம் வருடம் முன் நடிகைகளை தரக்குறைவாக என்னவோ ஏதோ சொல்லி விட்டார்.அல்லது எழுதி விட்டார்.
நடிகர் சங்கத்தில் வைத்து அவ்வளவு முன்னணி நடிகைகளும் (இதில் எம் ஆர் ராதிகாவும் அடக்கம் ) கூந்தலை விரித்து போட்டு சிலம்பை உடைச்சி ஒத்த முலையை பிச்சி போட்டு ... பத்திகிட்டு எரிஞ்சிச்சு ..
வைர முத்து உடனே தோப்புகரணம் போட்டு உடனே கால்லே விழுந்து ...உடனே மாப்பு கேட்டு ..
அப்புறம் இந்த தங்கர் பச்சானும் தான் மாட்டிக்கொண்டு பாவம் ..

பக்தி பிரவாகம்

சிவில் சப்ப்லைஸ் லைசென்ஸ் வாங்க அந்த நேரத்தில் தாலுகா ஆபீஸ் போயிருந்தேன் . அதற்கு பணம் கட்டுவதற்கு ஹெட் ஆப் த அக்கௌன்ட் நம்பர் தெரிந்தால் தான் பணம் கட்ட முடியும் . ஹெட் கிளார்க் இடம் கேட்டேன் . சமையல் எண்ணெய் வியாபாரம் அந்த ஊரில் துவங்குவதற்காக .

"திண்டுக்கல் போய் வாங்கி கொள்ளுங்கள் "

'உங்களுக்கு தெரியாதா ?'

"ஆமாம் சார் தெரியாது "

பியூன் வந்தான் .

'சார் ...ஹெட் கிளார்க்குக்கு பணம் கொடுத்தா ஹெட் ஆப் த அக்கௌன்ட் தருவார்'

அவன் சொன்ன தொகையை தருவதாக சொல்லி முடிக்கவும் வெராண்டாவிலிருந்து சிக்னல் கொடுத்தான் . உடனே சிரித்த முகத்துடன் ஹெட் கிளார்க் இருக்கையிலிருந்து எழுந்து கையை நீட்டியபடி கிட்டத்தட்ட ஓடியே என்னிடம் வந்தார் . பணத்தை அவர் கையில் எப்போது வைத்தேன் அதை எப்படி பாக்கெட்டில் வைத்தார் . நான் அறியேன் .

அவரே செல்லானை நிறைவு செய்தார் . பணத்தை கட்ட கிளம்பினேன் .

"சார் ஒரு நிமிஷம் சார் "- அவர்

'என்னங்க' -நான்

"நான் பெரிய ஆன்மீக வாதி சார் . வியாக்யானங்கள் எல்லாம் செய்வேன் . பக்தி தான் என் உயிர் மூச்சு . ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று எல்லா வெள்ளிகிழமையும் பெருமாள் கோவிலில் ராமாயணம் மகா பாரதம் எல்லாம் அழகா விரிவா பிரசங்கம் செய்வேன் . நான் உருக்கமா வியாக்யானம் செய்யும் போது பார்த்தீங்கன்னா பல பக்தர்கள் , பெண்கள் கண்ணீர் விட்டு அழுவாங்க சார் .பக்தி இல்லாம நாடு வீணா போகுது சார் . வர்ற வெள்ளிக்கிழமை என் பிரசங்கம் கேட்க வர்றீங்களா சார் ."- ஹெட் கிளார்க் இப்படி பேசும்போதே தனக்கு தானே சொக்கி போய் விட்டார் ! அவர் தலையை சுற்றி ஒரு ஜோதி !!

Sep 12, 2008

சந்திர பாபு

பெங்களுர் ராஜா பாலஸில் ஒரு பாடல் சூட்டிங் . இந்த ரெண்டு நாள் ஷூட்டிங் வீண் தான் .இதெல்லாம் Development Hell. இப்படி பல மாற்றங்கள் நடக்கும் . ஏனென்றால் அந்த பாடல் பின்னர் வீ ஜி பி கோல்டன் பீச்சில் வேறு நடிகர் நடிகை நடிக்க படமாக்கப்பட்டு திரையில் வந்தது. நான் உதவி இயக்குனர் .
இந்த பாட்டு ரெகார்டிங் ஆன போது நடந்த விஷயம் இன்னும் சுவாரசியம் .
பாட்டு ஷூட்டிங் போது டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் சொன்ன விஷயம் எல்லோரையும் ஆச்சரிய பட வைத்தது .சுந்தரம் மாஸ்டர் தான் பின்னால் பிரபலமாக போகும் பிரபு தேவாவின் அப்பா .
"சந்திர பாபு வுக்கு நடனம் ஆட தெரியாது . நடனம் பற்றி எந்த அடிப்படை அறிவும் கிடையாது ." --
"சும்மா எல்லாம் பாவ்லா தான் செஞ்சான் . ஆனா ஜனங்க அதை அந்த காலத்தில் டான்ஸ் நு நம்பினாங்க . ப்பெரிய டான்சர் சந்திர பாபு ன்னு இன்னைக்கும் எல்லாரும் நினைக்கிறாங்க . அவன் சும்மா டான்ஸ் ஆடுற மாதிரி பாவ்லா தான் பண்ணான் ".
இதில் அபத்தம் என்ன வென்றால் சுந்தரம் மாஸ்டர் நடிகர் நடிகைகளுக்கு டான்ஸ் ஆட பயிற்சி தரும்போது அவர் ஆடுவதை காண சகிக்காது . ஒவ்வொரு வரிக்கும் அவர் முதலில் ஆடிக்காட்டுவார் . கொஞ்சம் கூட டான்சில் GRACE இருக்காது . மூவ்மென்ட் ஆரம்பிக்கும் போது செயற்கையாக வினோதமாக இருக்கும் .
'இவன் ஆடி பார்க்கவா' . டைரக்டர் அவர் காதில் விழாதவாறு கமெண்ட் அடிப்பார் . எல்லோரும் கண்ணை மூடிகொள்வோம் .
சந்திர பாபுக்கு என்ன தான் தெரியும் . தமிழே எழுத படிக்க தெரியாதவர் . ஆனால் AMERICAN ACCENT ல் இங்கிலீஷ் பேசுவார். நடிப்பு பாட்டு டான்ஸ் இசை,இயக்கம் .. ஆல் ரௌண்டர் ..
கேலி கூத்து இப்பவும் ஒரு ஆல் ரௌண்டர் ..டண்டனக்கா ... ஏ டண்டனக்கா குரங்கு பயல் எல்லாம் க்கொடி கட்டி 'தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி' - அபத்தம் . வீராச்சாமி !
சந்திர பாபு ஜெயிக்க முடியவில்லை .
சந்திர பாபு ஆடியது டான்ஸ் இல்லைஎன்றால் அது போல ஆடாமல் சுந்தரம் மாஸ்டர் ஆடுவதா டான்ஸ் ? பிரபு தேவா கூட சந்திர பாபுவை காப்பியடிக்கவில்லையா ? பாபுவை இமிட்டேட் செய்து தானே ஆடினார் .
ஒரு நாள் வீட்டில் டிவி யில் ஒரு சேனல் லில் 'கண்ணே பாப்பா ' ஓடி கொண்டிருந்தது . ஒரு நிமிஷம் பார்த்தேன் .சந்திர பாபு நடிக்கும் போது கேசுவலா ஒரு சின்ன ஹம்மிங் செய்கிறார் .
ஹிந்துஸ்தானி ! ஹிந்துஸ்தானி க்ளாசிகல் !
பண்டிட் ஜஸ்ராஜ் ஜோக் ராக ஆலாபனை ஆரம்பிப்பது போலிருந்தது .
MEHDI HAASAN உடைய கஜல் பாடல் “ZINDAGI MERE SAFI PYAARU KIYAA KARUTHEGU..”என்ன ஒரு சௌஜென்யம் . என்ன ஒரு அற்புத குரல் .
இந்த பாடலை கேட்கும்போது ஏனோ எப்போதும் சந்திரபாபு ஞாபகம் வரும் .
சரியான சூழல் மட்டும் இருந்திருந்தால் பாபு பெரிய கஜல் பாடகர் ஆகி இருப்பார் .
அசோகமித்திரன் என்னிடம் ஒரு முறை சொன்னார் . "சந்திர பாபுவுக்கு ஆன்மீக தேடல் இருந்தது . அதற்கான வழி காட்ட, அவரை நெறிப்படுத்த சரியான குருநாதர் கிடைக்கவில்லை "

Sep 11, 2008

லோகல் பாலிடிக்ஸ் ....அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்

மதுரை கம்மாக்கரை கண்ணுசாமி தேவர் திமுக வின் கம்மாக்கரை அவைத்தலைவர் . மேடையில் கண்ணுசாமி தேவர் பேசுகிற அழகு பிரத்யேகமானது . நல்ல போதையில் தான் மீட்டிங் மேடையில் ஏறுவார் . பொன்னாடையை ஒச்சு தான் வந்து போர்த்துவான் . ஒச்சு, பொன்னாடை இரண்டுமே இவர் ஏற்பாடு தான் .

எடுத்த எடுப்பிலே எம்ஜியாரை வம்புக்கிழுப்பார் ." நீ என்ன சண்டை போடுறே . நீ ஆம்பிளையின்னா ஒண்டிக்கு ஒண்டி இந்த கண்ணுசாமி கூட வா . ஒங்காத்தா கிட்ட குடிச்ச சினைப்பால கக்க வைக்கலே நான் ஒன் கெண்ட காலு மசுரு ன்னு வச்சிக்க .எங்க முக முத்து நடிக்க வரவும் மார்கெட் போயிடுமேன்னு பயந்துபோய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்க வெண்ணை ..நீயெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்னா நான் ஐக்கிய நாட்டு காரியதரிசிடா டே .. கலைஞர் கிட்ட மோதினா காணாம போயிருவ .

டே நிக்ஸ்ன் நீ அமெரிக்காவுக்கு ஜனாதிபதி . ஆனா கண்ணுசாமி கம்மாக்கரை ஜனாதிபதி . ஒன்னை நான் பாராட்டுறேன் . நீ வாட்டர் கேட் பண்ணே . ஆனா உடனே பீல் பண்ணி ராஜினாமா பண்ணே . ஒன்னை நான் பாராட்டுரண்டா . ஆனா ..... ( இந்த இடத்தில் நாக்கை கடிக்கிறார் ) இந்திரா காந்தி .. நீ மொத்தம் ஒவ்வலே .... மரியாதியா திருந்திடு ... நடக்கிறது எங்க ஆட்சி ..எமர்ஜென்சிகேல்லாம் கண்ணுசாமி பயப்பட மாட்டான் .மரியாதையா திருந்து ..இல்லன்னா மதுரை பக்கம் வந்துகிடாதே ..வீணா அழிஞ்சுபோவே . கலைஞரை பகைச்சேன்னு வச்சுக்க உனக்கு கண்ணுசாமி தான் எமன் .

டே எதிர்க்கட்சி காவாளிகளா ( கண்ணுசாமி தேவர் தம்பி சின்ன சாமி தேவர், தங்கச்சி மாப்பிள்ளை கருத்தகன்னு இருவரும் அண்ணா திமுக ) நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு முழச்ச காளான் எல்லாம் நெஞ்ச நிமித்துராங்கடா !அழிஞ்சே போவீங்கடா ..மரியாதையா கலைஞர் கால்லே வந்து விளுந்துடுங்கடா ... அது தான் பொழைக்கிற வழி .

டே தங்கபல்லு தங்காத்த்து உனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு.. (இது தனிப்பட்ட பகை -கொடுக்கல் வாங்கல் விவகாரம் .கண்ணுசாமி கடன் வாங்கியிருக்கிறார் .தங்காத்த்து திருப்பி கேட்கிறார் . அதற்காக மேடையில் சவால் ) சும்மா நடக்கும் போதே எனக்கு வேட்டிக்கு வெளியே நீட்டிகிட்டுதாண்டா இருக்கும் . டே... எனக்கல்லாம் ஏந்திரிச்சிடுசின்னு வச்சிக்க அப்புறம் மடக்கரதுக்கு இந்தியாவிலேயே ஆளு இல்லடா டே .. .....

யாருடா அவன் ...நான் பேசும்போது அடிச்சி பார்க்கிறவன் .. அவனை தூக்குங்கடா ..... அந்த மண்டை மூக்கனை தாண்டா .. டே ஒத்த காதா ( இவனுக்கு ஒரு காது கிடையாது ) அவனை தூக்குடாங்கரேன் ...காதோட சேர்த்து அப்பி தூக்குடாங்கரேன் என்னடா.... அவன் முழியே அப்படி தானா ..அந்த முழியை தாண்டா நோண்டணும் பேசும்போது அடிச்சி பார்க்கிராண்டாங்கிரேன் ....

அடுத்த வாரம் சின்னசாமி தலைமையில் அண்ணா திமுக கூட்டம் ....................................................................................................சின்ன சாமி தேவரின் வீர வசனங்கள் ......................

Sep 10, 2008

இப்பவும் நான் வீட்டுக்கு போனா ......

பிராந்தி கடை சாதாரண மனிதர்கள் விசித்திர கோலம் கொண்டு வெளியேறும் மாயா ஜால உலகம் . நிஜமாகவே தினம் ஒரு ஆளாவது அடி வாங்காமல் வெளியேற மாட்டான் . ஒரு தடவை பொங்கல் போதைக்காக மேலே பார் வசதி உண்டு என்பதால் மாடி ஏறியவன் இறங்கியவுடன் கரும்பை கடையின் கண்ணாடி அலமாரி மீது வீசி விட்டான் . கடையிலிருந்த ஆட்கள் அவனை ரணகளமாக்கி விட்டார்கள் . இது மாதிரி அடித்தால் மட்டுமே அடங்குவார்கள் என்பதால் நிறைய சம்பவங்கள் .

ஒருவன் குடித்து விட்டு இறங்கி வந்து என்னை பார்த்து ' உங்களை மாதிரி டிரஸ் பண்ண ஸ்ரீவில்லி புத்தூரிலேயே ஆள் கிடையாது . உங்க டிரஸ் சை பாக்கனும்னே நான் தினமும் தேவகி ஓட்டல் கிட்ட காலையில் நிற்பேன் சார் . நான் குடிச்சிட்டு பேசறேன்னு தயவு செய்து நினைக்காதிங்க சார் . போதையில் பேசறேன்னு தயவுசெய்து நினைக்காதீங்க ..இப்பவும் நான் வீட்டுக்கு போனா சோறு தான் திம்பேன் சார் . பீய திங்க மாட்டேன் . நம்புங்க ' என்று ஆரம்பித்தவன் நம்புனா நம்புங்க . ' இப்பவும் நான் வீட்டுக்கு போனா சோத்தை தான் திம்பேன் . பீய திங்கவே மாட்டேன் ' என்ற வாக்கியத்தை நிஜமாக உத்தேசமா நூறு தடவை சொல்லிகொண்டே கடை முன்னே நிற்க ஆரம்பித்தான் .

எவ்வளவு சொல்லியும் நகர மறுத்து உரக்க அந்த வார்த்தையை திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்து விட்டான் . வேறு வழியே இல்லாமல் நானே அவன் கன்னத்தில் பொறி கலங்க அடித்து காலால் ஓங்கி இடுப்பில் ஒரு எத்து எத்திய அடுத்த நொடி கீழே விழுந்து எழுந்து அதற்கடுத்த நொடியில் சிட்டாக பறந்து விட்டான் . ஓடியே போனான் .

முதல் தடவை பிராந்தி குடிக்க வருபவன் கிட்டத்தட்ட சாந்தி முகூர்த்தத்துக்கு வருகிற பெண் போலவே வருவான் . இறங்கி போகும்போது தோரணையே வேறு .

பக்கத்து கிராமங்களிலிருந்து திருவண்ணாமலை திருவிழாவுக்கு வருகிறவர்களில் ஒரு குழு பிராந்தி கடைக்குள் வரும் .

' ஏலே ஒன்கிட்ட காசு இல்லன்னா கீழே இரு . நாங்க சாப்பிட்டு வாரோம் . ' ஒருத்தனை கீழே விட்டுவிட்டு மூணு பேரு மேலே போன பின்

கீழ உள்ளவன் ' ஏலே எப்படிலே இருக்கு .

' சும்மா கிடயம்லே . இப்ப தான ஆரம்பிச்சிருக்கோம் .'

ஏலே நல்லாருக்காலே '

படியிலிருந்து ஜன்க்னு குதிச்சி ஒருவன் ' ஏலே ஒன்னும் இல்லேலே . சாராயம் மாதிரி தாம்லே இருக்கு .சாராயம் எரிக்கும் . பிராந்தி எரிக்கல . நெஞ்ச இது எரிக்கல .அவ்வளவு தாம்லே .'

ஒரு ரௌண்டு இறங்கின வுடனே கர்ணன் ஆகிடுவான் .' மாபிள்ளே உனக்கு என்னலே வேணும் . ஏங்கிட்ட கேளு ' என்று பணத்தை எடுத்து வீச ஆரம்பித்து விடுவான் .

ஒருத்தன் ' தம்பி , ஒழுக்கம் தாண்டா முக்கியம் . வார்த்தை சுத்தம் வேணும்டா டே ' -- இவன் தான் தர்மர் .

இன்னொருத்தன் குடிச்ச போதையில் பார்த்தவன் காலிலெல்லாம் விழுந்து ' தெய்வமே ' என சரண்டர் ஆவான் .விபீசணன் !

இப்படி தொன்ம பிம்பங்கள் நிறைய ...

மு.க. அழகிரி

என்னுடைய மாமனாரின் பிராந்தி கடையில் நானும் அப்போது பங்கு தாரர் . என் திருமணம் நிச்சயிக்கப்படும் முன்னரே அதற்கான பங்குதொகையை அந்த பிராந்தி கடையில் போட்டு விட்டேன் ( சபாஷ் என்கிறீர்கள் )நானே செய்துங்க நல்லூர் சாராயகடை ராஜநாயஹம் பிள்ளையின் பேரன் தான் . ஆனால் என்னிடம் குடி பழக்கம் கிடையாது .சிகரெட்டே கிடையாது என்பதனால் தான் எனக்கு என் மாமனார் பெண் கொடுத்தார் . ( 'என்னைய மாதிரி பயலுக்கு பொண்ணு கொடுக்ககூடாது மாப்பிள்ளை' -என் மாமனார் எனக்கு பெண் கொடுப்பதற்கு சொன்ன காரணம் இது ! )
ஒரு நாள் பிராந்தி கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்து கொண்டிருக்கிறேன் . வருடம் 1985 . ஒரு கார் கடை முன் நின்றது . காரிலிருந்து இறங்கியவருடன் அவருடைய நண்பர்கள் சிலர் . கடைக்கு வந்து இவர் என்னிடம் 'கோல்கொண்டா Full இரண்டு பாட்டில் கொடுங்க சார் .' கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த இருவரையும் கொடுக்க சொன்னேன் . கடையில் உள்ள ஆள் அதை எடுக்கும் போதே , இவருடன் வந்தவர் ' அப்படியே அஞ்சு கல்யாணி பீர் ' என்றார் . குற்றாலம் போகிறார்கள் . அதை இன்னொரு ஆள் எடுத்துக்கொண்டிருந்த போது நான் இவரிடம் ' மதுரையிலேயே செட்டில் ஆகிட்டீங்க போலிருக்கே சார் ' என்றேன் .
லேசாக திடுக்கிட்டு அவர் ' என்னை எப்படி கண்டு பிடிச்சீங்க !'
'என்ன சார் முன்னாள் முதல்வர் மகனை கண்டு பிடிப்பது என்ன சிரமமான காரியமா ?'
மு.க .அழகிரி ! அப்போதெல்லாம் அழகிரி - ‘The less-discussed son of Karunanithi’ . மு.க. முத்து வும் , மு .க . ஸ்டாலின் ஆகிய பிள்ளைகள் தான் பாபுலர் . 1985 எனும்போது அதற்கு பத்து பன்னிரண்டு வருடம் முன் முத்து ,ஸ்டாலின் போல கனிமொழி கூட அப்போது சிறுமியாயிருக்கும் போதே பிரபலம் !
( சட்டசபையில் கேள்வி - கனிமொழி யார் ? ' கருணாநிதி பதில் ' என் மனைவி தர்மா சம்வர்த்தினி யின் மகள்' . -'தர்மாசம்வர்த்தினி யார் ? ' 'என் மகள் கனிமொழியின் தாயார் ')
இப்போது தான் கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள் என அழைக்க படுகிறார் .
கருணாநிதியின் மகன் என நான் சொன்னது தான் தாமதம் .கடையில் வேலை பார்த்த இருவரும் திமுக காரர்கள் . வாயை பிளந்தது மூடவே இல்லை . யார் யார் . இவர் தான் மு .க . அழகிரி .
அழகிரி என்னைப்பார்த்து ' உங்கள் முகம் ரொம்ப Familiar ஆ இருக்கு சார் ' என்றார் சிந்தனையுடன் .
நான் உடனே ' I am a nameless face .. or a faceless name.. ' சிரித்துகொண்டே ' என்னை நீங்க எங்க பார்த்திருக்க போறீங்க ' என்றேன் .
அழகிரி ' இல்ல சார் . உங்க முகம் எனக்கு ரொம்ப தெரிஞ்ச முகம் மாதிரியே இருக்கு '
சந்தோசமாக எனக்கு கை கொடுத்து விட்டு விடை பெற்றவர் கடையிலிருந்து காரில் ஏறுவதற்காக நடக்கும் போதும் அவருடைய நண்பர்களிடம் ' இவரை பார்த்தா.. எனக்கு இவர் முகம் ரொம்ப Familiar ஆ தெரியுது ' என்று மீண்டும் சொன்னார் .
காரில் ஏறியதும் சந்தோசமாக கை காட்டி விடை பெற்றார் .
அடுத்து சில நாளில் மதுரை போன போது தற்செயல் ஆ நான் கண்ட காட்சி . அவருக்கு இதில் ஒன்றும் இழுக்கு இல்லை . மதுரையில் சாதாரணமாக யாருக்கும் நடக்க கூடியது தான் . இன்று இவர் அஞ்சா நெஞ்சனாக எட்டு கண்ணும் விட்டெரிய வாழ்கிறார் எனும்போது இதை யாரும் நம்ப மாட்டார்கள் .
மதுரை பஸ் ஸ்டாண்ட் விட்டு நான் வெளியே வரும் போது அழகிரி அங்கு அவசரமாக ஆட்டோ திருநகருக்கு விசாரித்து கொண்டிருந்தார் . ஆட்டோகாரன் அடாவடியாக வாடகை கேட்பதை கண்டு விலகி நடக்க ஆரம்பித்தார் . ஆனால் மதுரை ஆட்டோ காரன் கோபமாகி 'டே கண்ணாடி என்ன நீ பாட்டுக்கு பதில் சொல்லாம போரே .. பதில் கூட சொல்லாம ' என்று சத்தமாய் கேட்டான் . இவர் சட்டை செய்யவில்லை . நானும் அவரிடம் பேச நினைத்து நெருங்கினேன் .சூழல் சரியில்லை . அவரும் என்னையும் கவனித்து விட்டு தான் வேகமாக நடந்து அந்த இடத்தை விட்டு அகன்றார் . அந்த ஆட்டோ காரன் திமுக காரனாக கூட இருந்திருப்பான் . இவர் யார் என்று தெரிந்திருந்தால் காலில் விழுந்திருப்பான் . சும்மாவே திருநகர் கொண்டுபோய் விட்டிருப்பான் . அவனுக்கு தெரியவில்லை .
மதுரையில் சவாரி படியவில்லை என்றால் இன்று கூட யாரையும் அவமான படுத்த ஆட்டோ காரர்கள் தயங்குவதில்லை . டிராப் செய்யும்போது கூட தகராறு செய்கிறார்கள் .
கருணாநிதியின் வாரிசுகளில் அழகிரி தான் வெள்ளந்தியானவர் என்று சாரு நிவேதிதா சமீபத்தில் ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டிருந்தார் .

Sep 9, 2008

இரண்டு பொன்மன செம்மல்கள்

தங்க நகை கடை பஜார் .

ஒரு நகை கடை . உள்ளே நுழைகிறேன் . நான் தந்த பெருந்தொகை க்கு பல மாதங்களாக அந்த நகைகடை முதலாளி வட்டி தரவே இல்லை . முதலும் திரும்பி வரவில்லை .ஏன் ?

" மைனர் வாங்க உட்காருங்க . ஐயோ மைனர் . காபி ,கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டேனு பிடிவாதமா இருக்கீங்களே . திருச்சி வயலூர் முருகனை போய் கும்பிட்டேன் . அப்பிடியே சமயபுரம் ஆத்தாளுக்கும் ஒரு அர்ச்சனை பண்ணிட்டேன் . கேரளாவிலே ஒரு விஷேசமான கோவில்னு சொன்னாங்க . அங்கேயும் போய் என்ன எழவு செய்யனுமோ செஞ்சிட்டு வந்துட்டேன் பாத்துக்கங்க . ஐயோ மைனர் ! திருச்செந்தூர் முருகனுக்கு என் முடி , என் பிள்ளைகள் முடி எல்லாத்தையும் காணிக்கையா கொடுத்துட்டேன் போங்க .முந்தா நாள் தின தந்தியிலே ஒரு விளம்பரம் . ஒரு தாயத்து..ரொம்ப விஷேசமான தாயத்தாம் . அதை கையில வச்சிகிட்டா அஷ்ட லக்ஷ்மியும் கிடைக்குமாம் . அதற்கும் மணி ஆர்டர் நூறு ரூபா அனுப்பிட்டேன் . நான் என்ன செய்யட்டும் நீங்களே சொல்லுங்க ."




இன்னொரு நகைகடை . முதலும் வட்டியும் இதே மாதிரி வராத நிலை . அந்த கடையில் நுழைகிறேன் . என் அசலை கொடுங்கள் .வட்டி போனாலும் பரவாயில்லை .
அப்போது நகைகடையில் ' தலைக்கு மேலே வெள்ளம் போனால் சான் என்ன ? முழம் என்ன ' பாட்டு சரணம் உச்ச ஸ்தாயியில் ."இது சத்தியம் !இது சத்தியம் !!" பழைய சினிமா பாட்டு. டிஎம் எஸ் பாடுகிறார்

அந்த நகைகடைகாரன் எனக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பிக்கிறான் .
" துரை ! இந்த பாட்டை கேளுங்க துரை . தைரியம் தான் துரை மனுஷனுக்கு முக்கியம் . மனசை மட்டும் விட்டுடாதீங்க துரை . இந்த பாட்டு தான் துரை எனக்கு இப்போ மருந்து . என்னமா பாடியிருக்கான் பாருங்க .இதை கேட்டுகிட்டு தான் நான் உசிரோடே இருக்கேன் . இல்லைன்னா எப்போவோ நான் போயிருப்பேன் . உங்களுக்கும் இந்த பாட்டு தான் துரை . நீங்களும் கேளுங்க . டே .... துரை பாட்டுன்னா ரொம்ப ரசிப்பாருடா . அந்த பாட்டை இன்னொரு தடவை போடுறா ..... டே "

Betrayal does that….betrays the betrayer- Erica Jong

சாரு நிவேதிதா

நேற்று திடீரென்று என் Blog இல் Hitsஅதிகமானதற்கு காரணம் சாரு நிவேதிதா . அவர் தான் படித்ததில் பிடித்தது ஆக என் இணைய விலாசத்தை நேற்று அவருடைய இணையத்தில் குறிப்பிட்டு இருந்தார் . சாரு பற்றி இப்போது நான் எழுதினால் ஏதோ பரஸ்பரம் சொரிந்து கொடுத்த மாதிரி ஆகி விடும் . அவருடைய முதல் நாவலை நான் தான் தமிழ் நாட்டிலே ( இன்றைக்கு அவருடைய சாதனை உலகலாவியது . அதனால் அவர் படைப்பை ' உலகத்திலேயே ' ) முதல் முதலாக விமர்சனம்1990ல்"மேலும் "பத்திரிகை மே மாத இதழில் செய்தவன் . இதற்காக ரொம்ப பெருமைபட்டிருக்கிறேன். இது மாதிரி சந்தோசங்கள் சில எனக்கு உண்டு . அதில் சமீபத்தில் பாவ்லோ கொய்லோ எனக்கு அனுப்பிய இரண்டு மெயில் கூட அடக்கம் . எல்லோருக்குமே சில சின்னசின்ன சந்தோசங்கள் தேவைபடுகின்றென. அவை உண்மையிலேயே பெரிய பாக்யங்கள் என்பது தான் நிதரிசனம் .
சாரு-பாவ்லோ கொய்லோ
சாருவுக்கும் எனக்கும் நிறைய கருத்து வேறுபாடு உண்டு . ஆனால் அவருடைய மென்மையான , மேன்மையான விஷேசத்வம் பற்றி சொல்ல வேண்டுமானால் கருத்து வேற்றுமை க்காக அவர் யாரையும் வெறுத்ததே இல்லை.
அவருடைய" உன்னத சங்கீதம் "கதையில் தன்னையே சிலுவையில் அறைந்து கொண்ட உன்னத கலைஞன் .
இப்போது நான் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய நிலை . என்றாலும் கூட ஒரே ஒரு வார்த்தை ...
The noblest of all writers!

Sep 8, 2008

என் கனவில் தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமனை நான் நேரில் பார்த்ததில்லை . ஆனால் இன்று கனவில் வந்தார் .இது வரை கனவில் கூட வந்ததே இல்லை .
அவரை பார்த்தவுடன் அழுகை வந்தது . என் வாழ்க்கையின் அதிர்ச்சிகள் சோகங்கள் எல்லாவற்றையும் சொல்லி அழுதேன் . காலம் கற்பித்த பாடத்தின் அடி தாள முடியாமல் தப்பித்து திருப்பூர் வந்ததை சொன்னேன் . கேளுமையா கதை கேளுமையா வாழ பிறந்தோர் நிலை பாருமையா என்றும் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் என்று திருப்பூர் வந்த கதையை சொல்லி தேம்பி தேம்பி அழுதேன் .
தொலைத்து விட்ட எல்லாவற்றையுமே அவரிடம் வரிசைப்படுத்தி சொன்னேன் .காயங்கள் ,அவமானங்கள் ,சிறுமை எல்லாவற்றையுமே சிறு குழந்தை போல விக்கி அழுதுகொண்டே .........அவருடைய ' சத்தியமா ' கதையில் வருகிற மாசில்லா சிறுவன் நான் தான் , அந்த' பரதேசி வந்தான் ' கதையில் வருகிற பரதேசி யும் நான் தான் என்றேன் .
அந்த காலத்தில் தெய்வ நம்பிக்கை இருந்த போது பூஜை அறையில் பிள்ளையார்,முருகன் ,லிங்கம் , விஷ்ணு , ஆண்டாள் இவற்றின் படங்களுடன் தி.ஜா படத்தையும் வைத்து கும்பிட்ட கதையை சொன்னேன் . இதை சொன்னவுடன் மட்டும் வேதனையுடன் முகம் சுழித்து " ஏன் அப்படி செய்தீர்கள் " என்று பதறி வருத்தப்பட்டார் .
கனவு எப்போது முடிந்தது .
தெரியவில்லை .
கனவுக்கு அர்த்தம் என்ன ? கடவுளை தூக்கிபோட்டு விட்ட என்னால் தி. ஜா படைப்புகளை புறம் தள்ள முடியவில்லை .தி.ஜா வும் என்னோடு இருக்கிறார் .
ஒரு நாள் என் கனவில் அந்த ரஷ்யனும் வருவான் . வெகு துயரங்களை அனுபவித்தவன் , கரமசாவ் சகோதரர்களை எழுதிய கலைஞன் . இது என் நம்பிக்கை . அவனிடமும் நான் தேம்பி தேம்பி அழுவேன் .

Sep 7, 2008

R.நெடுமாறன் - சாலமன் பாப்பையா

அமெரிக்கன் கல்லூரி ஒபெர்லின் ஹால் முன் எனக்கும் மற்றொரு மாணவனுக்கும் வாய் தகராறு முற்றி கைகலப்பு என்று ஆகிவிட்டது . என் மீது எந்த தவறும் கிடையாது . மதுரையில் அடிக்கடி பார்க்க கூடியது "கஞ்சா குடித்து மெண்டல் ஆவது. " அப்படி ஆனவன் . என் மீது ஒரு எப்படியோ ஒரு பகையை மனத்தில் உருவாக்கி கொண்டான் . Paranoid delusion. ஏற்கனவே பேராசிரியர்களின் ஓய்வறைக்கு சென்று பிரச்சினை செய்திருக்கிறான் . இப்போது என்னிடம் .
இன்று வரை மன நிலை பாதித்தவர்களுக்கும் எனக்கும் ஒத்து போவதே இல்லை .என்னுடைய ராசி அப்படி .
திடீரென்று அவன் கத்தியை எடுத்து விட்டான் . மதுரையில் கத்தியை சண்டையில் ஒருவன் எடுத்து விட்டால் மற்றவர்கள் ஒதுங்கி விடுவார்கள் . விலக்கி விட மாட்டார்கள் . அவன் கத்தியால் குத்த பலமுறை கடுமையாக முயற்சிக்கிறான் . ஆனால் நான் பயப்படாமல் அவனை அடிக்கிறேன் . லாவகமாக கத்தி குத்திலிருந்து தப்பித்து கொண்டே அவனை தாக்குகிறேன் .
விலக்கி விட மாணவர்கள் எல்லோரும் பயப்பட்ட அந்த சூழலில்தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்னை பின் பக்கமாக வயிற்றோடு பிடித்து தூக்கி அந்த இடத்தை விட்டு வெளியேறி நடக்கும் போதே எங்கள் ஆங்கில பேராசிரியர் R.நெடு மாறன் அந்த கத்தி வைத்திருந்த மாணவனை இறுக்கமாக பிடித்து கொள்கிறார் .அவன் வேகம் தணியும் வரை அவர் பிடி தளரவே இல்லை .
கத்திகுத்து விழுந்து உயிரையே இழந்திருக்க வேண்டிய என்னை அன்று காப்பாற்றியவர்கள் பேராசிரியர்கள் சாலமன் பாப்பையாவும் ,நெடுமாறனும் தான் .
என் கல்லூரி காலத்தில் பாப்பையா எனக்கு பக்கத்து தெருக்காரர் கூட . அதனால் கல்லூரியில் பார்த்து கொள்வதோடு , ஏரியா வில் லீவு நாளையிலும் ஏ.ஏ . ரோடில் எப்போதும் அவருடன் உரையாடிகொள்ள முடியும் .
பெரியகுளத்தில் தபால் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது பாப்பையா ,தமிழ்குடிமகன் எல்லாம் ஒரு வழக்காடு மன்றம் நடத்த வந்தார்கள் . பாப்பையா நடுவர் . உற்சாகமாக கூட்டத்தில் பெசிகொண்டிருந்தவர் முன் நான் போய் நின்றேன் . அவ்வளவு கூட்டத்திலும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேச்சை கொஞ்சம் நிறுத்தி என்னை பார்த்து " என்னய்யா இங்கே ?" என்றார் . "இங்கே தபால் துறையில் வேலை செய்றேன் அய்யா ." என்று நான் சொன்னேன் . "அப்படியா . ரொம்ப சந்தோசம் யா "- பதிலுக்கு அவர் சொல்லிவிட்டுஅதன் பின் தான் பட்டிமன்ற பணியை தொடர்ந்தார் .
எங்கள் ஆங்கிலத்துறை பேராசிரியர் R. நெடுமாறன் இப்போது வெற்றிகரமாக “Speak to achieve course” சென்னையில் நடத்தி கலக்கி கொண்டிருக்கிறார் . "மார்க் ஆண்டனி "என்று தான இவரை பற்றி சொல்வேன் .இரண்டு திரை படங்களிலும் தலையை காட்டி இருக்கிறார் .
நெடுமாறன் ஆங்கிலத்தில் பேசி கேட்டால் இவருக்கு தமிழ் தெரியும் என்று யாரும் நம்ப மாட்டார்கள் . அமெரிக்க ஆங்கிலம்! தமிழில் முழங்கும் போது இவருக்கு ஆங்கிலம் தெரியும் என்று நினைத்தே பார்க்க முடியாது .உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருக்கும்

பொய்த்தேவு

சென்ற வருடம் என் துணைவிக்கு பல் டாக்டரை பார்க்க அழைத்து சென்றிருந்தேன் . டாக்டரம்மா என் மனைவியை செக் செய்து ட்ரீட்மென்ட் கொடுத்துக்கொண்டிருந்த போது வெளியே பொழுது போகாமல் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன் . ஒரு அம்மாள் அங்கே ஒவ்வொருவரிடமும் ஏதோ சொல்லி ஒரு நகல் பிரதி ஒரு பக்கம் உள்ளதை நோட்டீஸ் போல கொடுத்துகொண்டிருந்தவர் என்னை பார்த்தவுடன் நான் வேலைவெட்டி இல்லாமல் அங்கே நிற்பதை புரிந்து கொண்டு உடனே என்னிடம் வந்து விட்டார் .

" சார் , நான் இங்கே ஆசிரமத்தை சேர்ந்தவள் . எங்க சாமி பெயரை தான் என் பெயருடன் வைத்திருக்கிறேன் பாருங்கள் . " அவர் கொடுத்த நோட்டீஸ் பார்த்தேன் .ஆமாம் . தன் பெயருடன் அந்த ஆசிரமத்தின் சாமியார் பெயரைத்தான் வைத்திருந்தார் ." என் கணவர் இங்கே பாங்கில் வேலை பார்க்கிறார் . எனக்கு இரண்டு பிள்ளைகள் கல்லூரியில் படிக்கிறார்கள் . ஆனால் என் கணவர் பெயரை என் பெயருடன் சேர்க்காமல் எங்க சாமியார் பெயரை தான் சேர்த்திருக்கிறேன் பார்த்தீர்களா ?"

நான் மையமான புன்னகையுடன் "ம்ம்ம் சொல்லுங்க " என்றேன் .

"சுவாமி சொல்லிட்டாங்க சார் . இனி இந்த சுனாமி பிரச்சினை கிடையாது . நான் பார்த்துகொள்கிறேன்ன்னு . கவலையே படவேண்டாம் சார் . எங்க ஸ்வாமி தான் சார் உலகத்தை காப்பாற்றியவர் . சுனாமி அழிவிலிருந்து உலகை காப்பாற்றியவர் . இதில் ஒரு பிரார்த்தனை இருக்கு பாருங்க .இதை சொன்னால் போதும் . எங்க சாமியார் உங்களுக்கு நீங்க கேட்டதெல்லாம் தருவார் . எப்போ சார் நீங்க எங்க ஆசிரமத்துக்கு வர்றீங்க "

என்னை பெருமையாக பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தார் ."இவ்வளவு சொல்றேனே . நான் யார் என்று நீங்க யோசிக்கிறீங்க . சொல்றேன் சார் . நான் வேறு யாருமில்லை சார் . ஸ்வாமி விவேகானந்தா இல்ல . சாட்சாத் விவேகானந்தாவோட மறு பிறப்பு சார் நான் . இந்த பிறவியிலே பெண்ணா பிறந்துருக்கேன் சார் ."

எனக்கு வேதனையாயிருந்தது . விவேகானந்தர் பெண்ணா பிறந்துட்டாரே என்பதற்காக இல்லை . இந்த பிறவியில் அவர் இன்னொரு சாமியாருக்கு இப்படி அடியாராக இருக்கிறாரே .....இப்படி நினைக்கும்போதே என் தவறை உணர்ந்து உடனே,உடனே திருந்திவிட்டேன் .யார் கண்டது . அந்த ஆசிரம சாமியார் தான் பரம ஹம்சரின் மறு பிறவியோ என்னவோ .

சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது . திருச்சியில் அந்த காலத்தில் பிரேமானந்தாவின் சிஷ்யர்களும்" எங்க சுவாமி வேறு யாருமில்லே . சுவாமி விவேகானந்தா வின் மறு பிறவி தான் ."என்று தான் பயமுருத்திகொண்டிருந்தார்கள் .

நாம் எப்போதும் நல்ல படியே நினைப்போம் . ஒருவேளை இப்படியும் இருக்கும் . விஷ்ணு ஒரே நேரத்தில் பரசுராமன் , பல ராமன் , ஸ்ரீகிருஷ்ணன் -இப்படி மூன்று அவதாரங்கள் எடுக்க வில்லையா . அது போல விவேகானந்தர் இப்போது பிரேமானந்தாவாகவும் இந்த திருப்பூரம்மா வாகவும் மறு பிறப்பு எடுத்திருப்ப்பார் .

Sep 6, 2008

எழுத்து - புரிதல்

“Only one man ever understood me…And he didn’t understand me”

ஹெகல் இப்படி சொன்னான் . புரிதலை பற்றி இதை விட சொல்ல வேறு என்ன இருக்கிறது .

The eternal mystery of the world is its comprehensibility. - Kant

கான்ட் சொன்னதை புரிந்து கொள்ள சந்திர பாபு வின் பாடல் ஒன்று போதும் .

"ஒன்னுமே புரியலே உலகத்திலே ..

என்னவோ நடக்குது .. மர்மமா இருக்குது "

என்னடா இது கான்ட் சொன்னதை அப்படியே காப்பியடிச்சி எழுதிட்டாங்களே ன்னு புரியும் .

ஆசிரியனுக்கு ஆயுதம் "வார்த்தைகள்" தான் . எழுத்தாளனின் உபகரணம் "வார்த்தைகள் ". சரி வார்த்தைகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை .

ஜோசப் கான்ராட் இதற்கு பதில் சொல்கிறான் .

"வார்த்தைகள் என்பது யதார்த்தத்தின் மிகப்பெரிய எதிரிகள் "

எழுத்தாளன் என்பவன் யார் ? இதற்கு ஒரு பதில் Thomas Mannசொல்கிறான்.

எழுதுவது என்பது மற்றவர்களை விட யாருக்கு மிக கடினமோ அவன் தான் எழுத்தாளன் .

ரோலன் பார்த் Pleasure of the text பற்றி சிலாகிப்பதற்கு எட்டு வருடம் முன்பே தீர்மானித்து முடிவு செய்த தியரி - The death of author .

பூக்கோ தன் பங்குக்கு சுத்தமாக எழுத்தாளனை பற்றிய பிரமைகளை உடைத்தெறிந்து விட்டான் .

“What is an Author?
Not a creator of , but a label on a group of statements”

தெரிதாவுக்கு வார்த்தைகள் மீது சந்தேகம் வர காரணமாயிருந்தவன் கான்ராட் தான் என எனக்கு எப்போதும் தோன்றும் . கான்ராட் தானே அதை Words are the greatest foes of reality என முன்னறிவித்தவன் . எழுதப்பட்டவற்றை பிரதி ( Text )என பெயரிட்டு ,கட்டுடைப்பு செய்ய வேண்டும் என்றான் தெரிதா .

ழாக் லக்கான் "பிரதி" அச்சில் வருவதையே அருவருப்பாக எண்ணினான் . அச்சில் வரும் எழுத்தை "குப்பை " என கேலி பேசினான் .

Sep 5, 2008

சந்திர ஹாசன்

திருச்சியில் நான் குடியிருந்த வயலூர் ரோடு பகுதியில் குமரன் நகரில் சந்திர ஹாசனின் வீடு . சந்திர ஹாசன் எப்போதும் நடந்து போவதை அங்குள்ள எல்லோரும் பார்க்க முடியும் . கமல் ஹாசனின் இரண்டாவது அண்ணன் .சின்ன அண்ணா .எப்போதும் இவர் நடந்து போவதை தான் பார்த்திருக்கிறேன் .காரில் போகும்போது பார்த்ததே இல்லை .நடை ..நடை ...நடை ....

நான் அவருக்கு ஒரு நமஸ்காரம் சொல்லி எப்போதுமே ஒரு நான்கு வார்த்தை பேசுவேன் .சிரித்த முகமாக என் பேச்சை கேட்கும் போது கொஞ்சம் சீரியஸாக அவ்வப்போது மாறும் . பின் புன்னகைத்து விட்டு மீண்டும் நடக்க ஆரம்பிப்பார் .

முதல் முறை நான் நமஸ்காரம் சொல்லிவிட்டு அவர் அந்த காலத்தில் நடித்த "கிராமத்து அத்தியாயம் "படம் பற்றி தொட்டு விட்டு பின் அவர் கதா நாயகனாக சுமலதாவுடன் நடிக்க ஆரம்பித்து நின்று போன "ராஜா என்னை மன்னித்து விடு " படத்தை குறிப்பிட்டேன் . அவருக்கு ரொம்ப ஆச்சரியம் .நின்று போன படத்தை பற்றி கூட குறிப்பிட்டேன் என்பது ." ராஜபார்வை "யில் கூட கமலுக்கு அப்பா ரோலில் தலையை காட்டியிருக்கிறார் .

அடுத்த முறை அவர் நடந்து வரும்போது அவரிடம் பேசிய விஷயம் என்னிடம் ஜெமினி கணேசன் சொன்னது . "கண்களின் வார்த்தைகள் புரியாதோ ." பாடல் சூட்டிங்கில் தான் கமலை தூக்கிண்டு அவனோட அண்ணா சந்திர ஹாசன் வந்தான் . நான் தூக்கி கொஞ்சினேன் .சாவித்திரி தூக்கி கொஞ்சினா . ஏவிஎம் செட்டியார் பார்த்தார் . ஹீரோ ,ஹீரோயின் ரெண்டு பேருக்குமே பிடித்து விட்டது .இந்த பையனையே பிள்ளையா நடிக்க போட்டுடலாம் னுட்டார் "

"ஹே ராம் " ரிலீசின் போது அந்த படம் எடுத்ததற்காக அவருக்கு என் பாராட்டை தெரிவித்தேன் .அவரும் அந்த படத்தின் தயாரிப்பாளர் . படத்திலும் கமலுக்கு மகனாக நடித்திருப்பார் .

சுருதியின் அம்மா சரிகா மாடியில் அனுஹாசனுடன் பேசிகொண்டிருக்கும் போது தான் கை நழுவிய செல்போனை பிடிக்க குனிந்து நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்து விட்டார் . அது பற்றி அப்போது அவரிடம் கேட்டேன் .

'பிழைத்தது தெய்வாதீனம் '-

கொஞ்ச நாள் கழித்து

சரிகா -கமல் பிரிவு விஷயம் அல்லோலகல்லோலபட்டபோது அது பற்றி அவரிடம் கேட்டதே இல்லை

"எப்போதும் நடந்தே போகிறீர்களே ?"-ஒரு நாள் கேட்டு விட்டேன் .முகம் சீரியசாகி பின் " நான் சாமானியன் தான் "-இது அவர் பதில் .

நான் சொன்னேன் " அப்படி சொன்னால் நான் நம்ப மாட்டேன் .' எனக்கு சந்திர ஹாசன் அண்ணா தான் ஆதர்சம் ' என்று கமலே ரொம்ப வருஷம் முன்னாலே ஒரு பேட்டியில் குருப்பிட்டிருக்கிறார் . '

மீண்டும் அவர் சீரியஸாக 'நான் சாமானியன் தான்' என்றார் . இதற்கு நான் சொன்ன பதில் அவர் முகத்தை பிரகாசமாக்கியது .

" ஹாசன் குடும்பம் கபூர் குடும்பம் மாதிரி . இந்த குடும்பத்தில் யாருமே சாமானியர்கள் கிடையாது . எல்லோரும் தனித்துவம் உள்ளவர்கள் தான் ."

நான் சொன்னதில் மிகை கிடையாது . அனுஹாசனும் கூட இப்போது தனி பாணியில் பிரபலம் தானே ! இந்த சுஹாசினி மகன் நந்தா ! இப்ப கோவையில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலக்கியிருக்கிறான் . இந்த வயசில தனக்குன்னு தனிப்பாதை வகுத்துகிட்டான். அந்த முத்திரையை குத்துறான் !

சாரு ,சுஹாசினி இருவரும் கமல் போல தேசிய விருது வாங்கிவிட்டார்கள் .

திருச்சியை விட்டு திருப்பூர் கிளம்பியதற்கு முதல் நாள் மாலை பிஷப் ஹீபர் கல்லூரி வாயிலருகில் நடந்து வந்துகொண்டிருந்த சந்திர ஹாசனை எதிர்கொண்டேன் . நமஸ்காரம் சொன்னேன் .புன்னகையுடன் நமஸ்காரம் என்றார் . ஊரை விட்டே கிளம்புகிறேன் என்பதை ஏனோ சொல்லவேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை . மனசு லேசாக கனத்தது .இனி இவரை எங்கே பார்க்க போகிறேன் .திருப்பூரில் செக்கு மாடாக போகிறேன் . தொடர்ந்து நான் மேலே நடந்தேன் .அவரும் எதிர் திசையில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் .

Walking!
Walk!!

Angels whisper to a man when he goes for a walk.!!