Share

Sep 8, 2008

என் கனவில் தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமனை நான் நேரில் பார்த்ததில்லை . ஆனால் இன்று கனவில் வந்தார் .இது வரை கனவில் கூட வந்ததே இல்லை .
அவரை பார்த்தவுடன் அழுகை வந்தது . என் வாழ்க்கையின் அதிர்ச்சிகள் சோகங்கள் எல்லாவற்றையும் சொல்லி அழுதேன் . காலம் கற்பித்த பாடத்தின் அடி தாள முடியாமல் தப்பித்து திருப்பூர் வந்ததை சொன்னேன் . கேளுமையா கதை கேளுமையா வாழ பிறந்தோர் நிலை பாருமையா என்றும் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் என்று திருப்பூர் வந்த கதையை சொல்லி தேம்பி தேம்பி அழுதேன் .
தொலைத்து விட்ட எல்லாவற்றையுமே அவரிடம் வரிசைப்படுத்தி சொன்னேன் .காயங்கள் ,அவமானங்கள் ,சிறுமை எல்லாவற்றையுமே சிறு குழந்தை போல விக்கி அழுதுகொண்டே .........அவருடைய ' சத்தியமா ' கதையில் வருகிற மாசில்லா சிறுவன் நான் தான் , அந்த' பரதேசி வந்தான் ' கதையில் வருகிற பரதேசி யும் நான் தான் என்றேன் .
அந்த காலத்தில் தெய்வ நம்பிக்கை இருந்த போது பூஜை அறையில் பிள்ளையார்,முருகன் ,லிங்கம் , விஷ்ணு , ஆண்டாள் இவற்றின் படங்களுடன் தி.ஜா படத்தையும் வைத்து கும்பிட்ட கதையை சொன்னேன் . இதை சொன்னவுடன் மட்டும் வேதனையுடன் முகம் சுழித்து " ஏன் அப்படி செய்தீர்கள் " என்று பதறி வருத்தப்பட்டார் .
கனவு எப்போது முடிந்தது .
தெரியவில்லை .
கனவுக்கு அர்த்தம் என்ன ? கடவுளை தூக்கிபோட்டு விட்ட என்னால் தி. ஜா படைப்புகளை புறம் தள்ள முடியவில்லை .தி.ஜா வும் என்னோடு இருக்கிறார் .
ஒரு நாள் என் கனவில் அந்த ரஷ்யனும் வருவான் . வெகு துயரங்களை அனுபவித்தவன் , கரமசாவ் சகோதரர்களை எழுதிய கலைஞன் . இது என் நம்பிக்கை . அவனிடமும் நான் தேம்பி தேம்பி அழுவேன் .

8 comments:

 1. மனதிற்கு பிடித்தவை/பிடித்தவர்கள் உருவம் பெற்று கனவாய் வரும்/வருவார்கள் - ப்ராய்ட்.

  அப்படி தான் கடவுள் உருவங்கள் ஆக்கப்பட்டன.

  மதுரை வீரன் சாட்சி. எல்லைசாமிகள் சாட்சி. பயம் தான் எல்லாம்!

  உங்கள் கனவு உங்கள் மன நிலையை கூறுகிறது. அவர் மாதிரி வர வேண்டும் என்பது ஆசையா?

  எனக்கு மோக முள் இன்னும் ஒட்டவில்லை!

  ReplyDelete
 2. Ram!
  I'm not a writer.
  I know the reasons of dreams and the psychological cause and explanation.
  Just I wanted to register this peculiar dream.
  And I have uncovered it here.
  more over dreams usually has no logic.

  I admit your comment on" Mogamul"
  Taste differs.

  ReplyDelete
 3. வணக்கம்,
  ஒரே மூச்சில் அனைத்து பதிவுகளையும் வாசித்து விட்டேன். எழுத்து நடையும், இயல்பான நடையூடாக எடுத்துச் சொல்லும் தகவல்களும் அப்பப்பா... மிகுந்த உற்சாகமாக இருக்கிறது.
  இன்னும் நிறைய தொடர்ந்து எழுதுங்கள்.

  நிறைய வாழ்த்துகள்.

  எக்கச்சக்கமான முத்தங்களுடன்,
  மதியழகன் சுப்பையா,
  மும்பை.

  ReplyDelete
 4. உணர்ந்து எழுதப் பட்ட ஒன்று. அனைத்துப் பதிவுகளுமே ரசிக்கத் தக்க வகையில் உள்ளன. சாரு தன் வலைத் தளத்தில் படித்ததில் பிடித்ததாக குறிப்ப்ட்டு உள்ளார்.


  வாழ்த்துகள்.

  அன்புடன்

  சூர்யா.

  ReplyDelete
 5. RP,
  I have completed all the posts written by you. I trying to understand the depth with which you are describing certain things, e.g, "Yen Kanavil Thi.Ja" & "Mu.Ka.Alagiri" ...There is a little that I could tell you,as I find you very learnt.

  Nice to know you. will keep visiting your blog.

  Thanks...

  ReplyDelete
 6. ஒரு சிறுகதைக்கான கரு இதில் இருக்கிறது.மற்றப்படி உங்கள் தனிப்பட்ட விருப்பு,வெறுப்புகள்
  கனவில் பிரதிபலிப்பதில் வியப்பில்லை.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.