Share

Sep 11, 2008

லோகல் பாலிடிக்ஸ் ....அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்

மதுரை கம்மாக்கரை கண்ணுசாமி தேவர் திமுக வின் கம்மாக்கரை அவைத்தலைவர் . மேடையில் கண்ணுசாமி தேவர் பேசுகிற அழகு பிரத்யேகமானது . நல்ல போதையில் தான் மீட்டிங் மேடையில் ஏறுவார் . பொன்னாடையை ஒச்சு தான் வந்து போர்த்துவான் . ஒச்சு, பொன்னாடை இரண்டுமே இவர் ஏற்பாடு தான் .

எடுத்த எடுப்பிலே எம்ஜியாரை வம்புக்கிழுப்பார் ." நீ என்ன சண்டை போடுறே . நீ ஆம்பிளையின்னா ஒண்டிக்கு ஒண்டி இந்த கண்ணுசாமி கூட வா . ஒங்காத்தா கிட்ட குடிச்ச சினைப்பால கக்க வைக்கலே நான் ஒன் கெண்ட காலு மசுரு ன்னு வச்சிக்க .எங்க முக முத்து நடிக்க வரவும் மார்கெட் போயிடுமேன்னு பயந்துபோய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்க வெண்ணை ..நீயெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்னா நான் ஐக்கிய நாட்டு காரியதரிசிடா டே .. கலைஞர் கிட்ட மோதினா காணாம போயிருவ .

டே நிக்ஸ்ன் நீ அமெரிக்காவுக்கு ஜனாதிபதி . ஆனா கண்ணுசாமி கம்மாக்கரை ஜனாதிபதி . ஒன்னை நான் பாராட்டுறேன் . நீ வாட்டர் கேட் பண்ணே . ஆனா உடனே பீல் பண்ணி ராஜினாமா பண்ணே . ஒன்னை நான் பாராட்டுரண்டா . ஆனா ..... ( இந்த இடத்தில் நாக்கை கடிக்கிறார் ) இந்திரா காந்தி .. நீ மொத்தம் ஒவ்வலே .... மரியாதியா திருந்திடு ... நடக்கிறது எங்க ஆட்சி ..எமர்ஜென்சிகேல்லாம் கண்ணுசாமி பயப்பட மாட்டான் .மரியாதையா திருந்து ..இல்லன்னா மதுரை பக்கம் வந்துகிடாதே ..வீணா அழிஞ்சுபோவே . கலைஞரை பகைச்சேன்னு வச்சுக்க உனக்கு கண்ணுசாமி தான் எமன் .

டே எதிர்க்கட்சி காவாளிகளா ( கண்ணுசாமி தேவர் தம்பி சின்ன சாமி தேவர், தங்கச்சி மாப்பிள்ளை கருத்தகன்னு இருவரும் அண்ணா திமுக ) நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு முழச்ச காளான் எல்லாம் நெஞ்ச நிமித்துராங்கடா !அழிஞ்சே போவீங்கடா ..மரியாதையா கலைஞர் கால்லே வந்து விளுந்துடுங்கடா ... அது தான் பொழைக்கிற வழி .

டே தங்கபல்லு தங்காத்த்து உனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு.. (இது தனிப்பட்ட பகை -கொடுக்கல் வாங்கல் விவகாரம் .கண்ணுசாமி கடன் வாங்கியிருக்கிறார் .தங்காத்த்து திருப்பி கேட்கிறார் . அதற்காக மேடையில் சவால் ) சும்மா நடக்கும் போதே எனக்கு வேட்டிக்கு வெளியே நீட்டிகிட்டுதாண்டா இருக்கும் . டே... எனக்கல்லாம் ஏந்திரிச்சிடுசின்னு வச்சிக்க அப்புறம் மடக்கரதுக்கு இந்தியாவிலேயே ஆளு இல்லடா டே .. .....

யாருடா அவன் ...நான் பேசும்போது அடிச்சி பார்க்கிறவன் .. அவனை தூக்குங்கடா ..... அந்த மண்டை மூக்கனை தாண்டா .. டே ஒத்த காதா ( இவனுக்கு ஒரு காது கிடையாது ) அவனை தூக்குடாங்கரேன் ...காதோட சேர்த்து அப்பி தூக்குடாங்கரேன் என்னடா.... அவன் முழியே அப்படி தானா ..அந்த முழியை தாண்டா நோண்டணும் பேசும்போது அடிச்சி பார்க்கிராண்டாங்கிரேன் ....

அடுத்த வாரம் சின்னசாமி தலைமையில் அண்ணா திமுக கூட்டம் ....................................................................................................சின்ன சாமி தேவரின் வீர வசனங்கள் ......................

6 comments:

 1. Reminded me of my childhood in Madurai.There used to be a guy called Theepori Arumugam , who was more famous for his lurid speeches.
  krishna

  ReplyDelete
 2. That Theepori Arumugam is a silent member of ADMK now.He was the star orator in DMK and very popular around Tamilnadu . Irony!ADMK's silent member now

  This Kannuchaamy is no more now.
  Kannuchamy was murdered by his tenant 25years back.

  ReplyDelete
 3. இந்தப் பதிவின் மூலம், தங்கள் வாழ்வு பரந்த, விஸ்தீரணமான தளங்களின் அனுபவத்தைப் பெற்று இருப்பதை உணர முடிகிறது. நானும் கிராமத்தில் இருந்து வந்தவன் ஆதலால் இந்த மாதிரி அரசியல் உலகின் 'காமெடிகளை' ரசித்து இருக்கிறேன். என்ன வெற்றி கொண்டான், வண்ணை ஸ்டெல்லா, தீப் பொறி ஆறுமுகம், தீப் பொறி முருகேசன், நெல்லை பாலாஜி போன்றவர்கள் மாநில ‘'ஸ்டார்கள்' என்றால் இவர்கள் ‘லோக்கல் ஸ்டார்கள்'.

  அன்புடன்

  சூர்யா.

  ReplyDelete
 4. வயித்துல வலி வந்துடுச்சு சார். ஹா.... ஹா.... இன்னிக்குப் பூரா சிரிச்சு சிரிச்சே ... ஹீ.....ஹீ....

  செம கலக்கல் பதிவு.........

  ReplyDelete
 5. Credit goes to Thangavel manicka thevar!
  Thangavel created this blog and encouraged me to type in it.

  ReplyDelete
 6. இந்த மாதிரி சிரிச்சு ரொம்பநாள் ஆச்சுண்ணே.அடுத்து அதிமுககாரரா?சூப்பர்.எடுத்த எடுப்புலேயே டேய் கலைஞா ன்னு தானே ஆரம்பிப்பாய்ங்க.சீக்கிரம் போடுங்க.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.