Share

Sep 30, 2021

காதல் காதல் காதல்




17,18,19 வயதிலெல்லாம் என் வாழ்க்கை 

காதலில் ரொம்ப பிஸியாக கழிந்தது. 


அந்த பதினேழு வயது காதலில் 

கோவிலில் நிஜமாகவே 

திருமண சம்பிரதாயத்தை 

அந்த பெண்ணுடன் விளையாட்டாக

 செய்து பார்த்தேன். 

அதாவது கோவிலில் கல்யாணம் என்றால் 

என்ன செய்வார்களோ அந்த சடங்கை. 

எல்லோரும் வழிபாடு செய்துகொண்டிருக்கும் போது அந்த காரியத்தை தைரியமாக 

அவளிடம் செய்து விட்டேன். 

யாரும் கவனிக்கவில்லை .


அடுத்த அந்த பதினெட்டு வயது காதல் விஷயம் கொஞ்சம் பரபரப்பாகிவிட்டது. 

அமெரிக்கன் காலேஜ் சரித்திரத்தில் 

ஒரு காதல் விவகாரம் 

இந்த அளவுக்கு பகிரங்கமாக கேவலப்படவில்லை என்று சீனியர்கள் அபிப்ராயப்பட்டார்கள்.


அந்த பெண்  லேடி டோக் காலேஜ்.

அவள் அண்ணன் எங்கள் காதலை

 பெரிய காட்சியாக்கி 

முரட்டம்பத்திரி, கரிமேடு சல்லிகளுடன் வந்து கட்டை பஞ்சாயத் ஆக்கி

 அவள் தான் என்னை சினிமாவுக்கு கூப்பிட்டாள் என்பதை அவளே ஒத்துகொண்டவுடன்...

 அவளை அவமானப்படுத்தி... 

 நூற்றுக்கணக்கான பேர் பார்த்துகொண்டிருந்தார்கள். 

சினிமாவில் காட்டுவார்களே ...அப்படியே தான்.


அப்போது அந்த காட்சியை பார்த்துகொண்டிருந்தவர்களில் ஒ சீ பி எம் பள்ளி காம்பௌண்டில் இருந்து கவனித்த 

அந்த என் பத்தொன்பது வயது காதலியும் இருந்தாள். இவள் தான் என் அடுத்த வருட காதலி.


 லேடி டோக் பெண்ணுக்கு ஒரு கவிதை எழுதினேன். அதற்கு திருச்சி பள்ளியில் ஜேசு ராஜா (பின்னால் இவர் பாளை புனித யோவான் கல்லூரி ஆங்கில பேராசிரியர் ) எனக்கு சொல்லி தந்திருந்த ராகத்தில் பாடி

 கல்லூரியிலும் பின் அனைத்து கல்லூரி

 பாட்டு போட்டியிலும் பரிசு வாங்கினேன்.


"சிரிக்க வைத்தேன் அது தவறென்றால் உன்னை

அழுக வைத்தேன் அது சரிதானா?

நீயில்லை என்றால் காலமெல்லாம் உன்

நினைவு வந்து மொழி சொல்லுமே .


இருக்கின்ற நீ எனக்கு இல்லையென்றால்

 அந்த இல்லாத இறைவனும் இருக்கட்டுமே

உன் மனம் புண் பட இறைஞ்சுகிறேன் - என்

அகமே நெகிழ மறந்து விடு . "


இது தான் அந்த பாடல் .


அடுத்த வருடம் என்

 பத்தொன்பதாவது வயது காதலில்


"உன்னுடைய பாஷையில் சொன்னால்

கடவுள் சேர்த்து வைப்பார்!

என்னுடைய பாஷையில் சொன்னால்

கடவுள் இருந்தால் கட்டாயம் சேர்த்து வைப்பார்! "


O My Love!


If it is possible, pass from me


Nevertheless, Not as My will


But as thy God’s will.


நான் அப்போது எடிட் செய்து வெளி வந்த

 " மரத்தடி மகா ராஜாக்கள் " நூலில் "கூடுமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு விலகட்டும் " என்ற வசன கவிதையில் இடம் பெற்றிருந்த 

ஒரு சில வரிகள் மேற்கண்டவை.


இப்போது ஏன் நீங்கள் கவிதையெல்லாம் எழுதவில்லை என்று பலரும் கேட்கிறார்கள் . யோசித்தால் கல்லூரி வாழ்வோடு கவிதையை நிறுத்தியிருக்கிறேன். 

காரணம் ... கவிதை என்றாலே 

எனக்கு காதல் கவிதை தான் எழுத முடிந்தது. அதனால் தான் சலித்து போய் ச்சேன்னு

 நிறுத்தி விட்டேன்.


அதனால் தான் தெம்பாக இப்படி 

என்னால் எழுத முடிந்தது இப்போது. 


EXCESSIVE CREATIVITY - -


...Eureka! Eureka!!


Except R.P.Rajanayahem,all other Tamil men and women are writing poems.


Either poems or stories!


Out here almost everybody says'

"I am writing a novel" or " I have an idea to write a novel."


கவிதையை தான் விட்டேன். 

காதல் எல்லாம் அப்படியே இருக்கிறது. 

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். 

ஆரம்பம் பத்து வயது பிள்ளை காதல். 

கைகட்டு கால்கட்டோடு பாடையில் போகும்போது தான் காதலும் போகும்.


.....................


மீள் 2008

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.